தொகுப்பு

Archive for ஏப்ரல் 7, 2010

செலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்!


+2 படித்து முடித்த மாணவர்கள் இராணுவத்தில் MBBS, BE/B.Tech (டாக்டர், எஞ்சினியர் ) இலவசமாக படிக்கலாம். நுழைவு தேர்வில் தேர்சி பெற்றால் போதும், நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் மருத்துவம் பொறியியல் படிக்கலாம். அரசே முழு செலவையும் ஏற்க்கும், ஆனால் இராணுவத்தில் மட்டுமே வேலை பார்க்க முடியும்.

இராணுவத்தில் மருத்துவர்களுக்கு (டாக்டர்) , பொறியாளருக்கு , இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வேலைகளுக்கு இந்திய அரசு இலவசமாக படிக்க வைத்து வேலையும் கொடுக்கின்றது. நல்ல சம்பளமும் கிடைக்கின்றது. அதற்க்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 மட்டுமே. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி தேதி 19/04/10 ஆகும்.

தகுதி : 12-ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். 1992-க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.
தேர்வை பற்றிய முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விளக்கதிற்க்கு இந்த http://www.upsc.gov.in/ இணைய தளத்திற்க்கு செல்லுங்கள்.

இது பற்றிய முழு விபரம் அறிய Click Here

———————————————————————————————————–

நன்றி:-S.சித்தீக்.M.Tech.

நன்றி:-திருமங்கலக்குடி இணையதளம்

—————————————————————————

கடியோ கடி(மொக்கை)


தத்துவம் என்: 1001

வாழ்க்கை என்பது பனமரம் போல ஏறினா நுங்கு! விழுந்தா சங்கு!

தத்துவம் என்: 1002

லைப்ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும்

எடுத்துகாட்டு : நமீதா எவ்ளோ பெரிய நடிகை ஆனா அவங்க பாபுலர் ஆக

சின்ன சின்ன டிரஸ் தான் காரணம். நினைவில் கொள்க…

தத்துவம் என்: 1003

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்…

அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க!

தத்துவம் என்: 1004

வகுப்பறை என்பது ரயில் மாதிரி

முதல் இரண்டு பெஞ்ச் வீ ஐ பீ (VIP)

நடுவில் இரண்டு பெஞ்ச் பொது (General)

கடைசி இரண்டு துங்கும் பெஞ்ச் (Sleeper)

நல்லா ஓடுது…

தத்துவம் என்: 1005

ஆண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!

பெண்கள் நிறைய கேள்வி கேட்காமல் இருந்தால்…

தத்துவம் என்: 1006

வெற்றியை தேடி அலைந்த போது “வீண் முயற்சி” என்றவர்கள்.

வெற்றி கிடைத்ததும் “விடா முயற்சி” என்றார்கள்.

இதுதான் உலகம்.

தத்துவம் என்: 1007

நீ செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்

அதை நீ ஒப்பு கொள்ளும் போது…

————————————————————————————–

கவிதை என் : 2001

அருகில் இருந்தும் பேச முடியவில்லை

உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை – எக்ஸாம் ஹால்லில்…

என்ன கொடுமை சார்…

கவிதை என் : 2002

பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய!

எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்னை காக்க!

மலரிடம் சொன்னது முள்…

கவிதை என் : 2003

ஆசை படுவதை மறந்து விடு!

ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே!

கவிதை என் : 2004

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல

உன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டுமே

என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார்.

கவிதை என் : 2005

வேர்கள் மண்ணுக்குள் இருக்கும் வரை தான் பூக்கள் பூக்கும்.

நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை தான் அன்பு நீடிக்கும்.

கவிதை என் : 2006

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல…

மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை…

கவிதை என் : 2007

கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்

நீ என்னை அணைக்கும் வரை…

இப்படிக்கு மெழுகுவர்த்தி.

கவிதை என் : 2008

நீ உன் நண்பர்களிடம் பேசும்போது என்னை மறந்து விடுகிறாய்

இப்படிக்கு கவலைகள்.

கவிதை என் : 2009

நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்

காதலி மீது கோபம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன் புரிந்து கொள்வான்

காதலி புரியாமல் கொள்வாள்.

கவிதை என் : 2010

நெஞ்சை தொட்ட கவிதை

தூசி பட்ட கண்களும்

காதல் பட்ட இதயமும்

எப்போதும் கலங்கி கொண்டே இருக்கும்…

கவிதை என் : 2011

காற்றில் கூட நீ இருக்கிறாய் என்பதை உணர்தேன்

நீ தூசியை வந்து என் கண்ணை கலங்க வைத்த போது

———————————————————————————————

மொக்கை என்: 3001

3 G A P A 6 = ? யோஷிங்க

எடிசன்க்கு போட்டியா யோசிப்பீன்களே!

இது கூட தெரியாத?

விடை: முஞ்சிய பாரு…

மொக்கை என்: 3002

வாடிக்கையாளர் : இந்த டிவி வேலை என்ன?

விற்பனையாளர் : 1,00,000 ரூபாய்.

வாடி : அப்படி என்ன ஸ்பெஷல்?

விற்ப : டிவில விஜய் படம் வந்தா அதுவா தானா வேற சேனல் மாறிடும்…

அதான் இவ்ளோ…

மொக்கை என்: 3003

ஒரு ஊர்ல நிறைய படிச்சவர் ஒருத்தர் இருந்தாரு, அவர் ஒரு நாள் வேற ஊருக்கு போனாரு. அங்க எல்லாரும் அவருக்கு ஜெலுசில் (Gelusil)

கொடுத்தாங்க. இன்னொரு நாள் இன்னொரு ஊருக்கு போனாரு அங்க எல்லாரும் அவருக்கு பெனட்ர்ய்ல் (Benadryl) கொடுத்தாங்க ஏன்? கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு (Syrupu).

மொக்கை என்: 3004

லைப்ல வெற்றினா என்னனு தெரியுமா? அடை மழை பேயும் பொது உன் வீட்டு மரம் ஈரமாக இருக்குமே அது தான் WET TREE!

மொக்கை என்: 3005

தினந்தோறும் எனது பிரார்த்தனை…

எனக்கு என்று எதுவும் வேண்டாம் கடவுளே!

என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் Figure மருமகளா வரணும்

அது போதும் எனக்கு…

மொக்கை என்: 3006

ஒரு பாம்பு வந்து உங்கள கடிச்சா என்ன பண்ணுவீங்க?

ஒழுங்கு மரியாதைய சாரி கேளுன்னு சொல்லுவேன்

மொக்கை என்: 3007

எப்படி “ANGRY” இனிப்பாக மாற்றுவது?

“J” சேர்த்துக்கொள்ளுங்கள் JANGRY கிடைக்கும்

——————————————————————————

நன்றி செதுக்கிய அண்ணன் வணங்காமுடி

________________________________________________________

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா? – மஸ்தான் ஒலி


அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.

நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.

அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.

District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.

அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். 🙂

————————————————————————————–

நன்றி:-மஸ்தான் ஒலி

_____________________________________

கவலையின் போது ஓதும் துஆ


اَللّهُمَّ إِنِّيْ عَبْدُكَ ، وَابْنُ عَبْدِكَ ، وَابْنُ أَمَتِكَ ، نَاصِيَتِيْ بِيَدِكَ ، مَاضٍ فِيَّ حُكْمُكَ ،

.

عَدْلٌ فِيَّ قَ ضَاؤُكَ، أَسْأْلُكَ بِكُلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ

.

أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ ،  أَوْ اِسْتَاْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ،

.

أَنْ تَجْعَلَ الْقُرْآنَ الْعَظِيْمَ رَبِيْعَ قَلْبِيْ ، وَنُوْرَ صَدْرِيْ ،

.

وَجَلاَءَ حُزْنِيْ ، وَذِهَابَ هَمِّيْ وَغَمِّيْ

(அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்திக, வப்னு அமதிக, நாஸியத்தீ பி எதிக, மாழின் ஃபிய்ய ஹுக்முக, அதுலுன் ஃபிய்ய கலாவுக, அஸ்அலுக பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, ஸம்மைத்த பிஹீ நஃப்ஸக, அவ் அன்ஸல்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவிஸ்தஃதர்த்த பிஹீ ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அளீம ரபீஅ கல்பீ, வ நூர சதுரீ, வஜலாஹ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ)

பொருள்:

யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண், ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையிலே இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதிமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும்

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

கவலையின் போது ஓதும் துஆ

தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

ஆயத்துல் குர்ஸி

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது

பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்! – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்


மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா
மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய்

இறைவா உன்னருள் வேண்டும்
இனிதாய் நலம் வேண்டும்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

பாவமென்னும் கடலில் வீழ்ந்து
பல தீங்குகள் எம்மை சூழ்ந்து
கலங்கும் நிலை ஆய்ந்து
கனிவாய் உன்னருள் ஈந்து
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன்
அருள் தேடிடும் பாதையை மறந்தேன்
இருளைத் துணைக்கொண்டேன்
இழிவின் வழி சென்றேன்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

மண்ணும் பொன் பொருள் யாவும் என்னை – உன்னை
மறந்திடச் செய்தது உண்மை
உணர்ந்தேன் உள்ளம் தெளிந்தேன்
உயிராய் உனைத் தொழுதேன்
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

அருளாளனே அன்புடையோனே
அடியார்களின் பிழைப் பொறுப்போனே
கருணை தயாநிதியே
காக்கும் அருட்சுடரே
வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே…

*************

நன்றி:- ஏ.ஆர்.தாஹா  காயல்பட்டணம்

நன்றி:- இஸ்லாமிய தமிழ் தஃவா குழு

_____________________________________

தொழுவோம் வாரீர் – ஏ.ஆர்.தாஹா காயல்பட்டணம்


தொழுதால் தீரும்
தொல்லைகள் யாவும்

தினம் ஐவேளை
தொழுதிட வேணும்
மறந்தால் நாசம்
மறுமையில் மோசம்

மஹ்ஷர் வெளியில்
மருகிட நேரும்
படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்
பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்

கருவில் உருவாகி நாமிருந்தபோது
கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்
அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்
பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே

மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று
மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று
மண்ணின் மாயைகள் நமைச்சூழு முன்னே
மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு
மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு
முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி
முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்
இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்
குப்ரின் தீங்கான செயலின்றி வாழ
கப்ரின் வேதனையில் வீழாது மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி
கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி
மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்
மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில்
உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்

உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

*******************************************************

நன்றி:- ஏ.ஆர்.தாஹா  காயல்பட்டணம்

நன்றி:- இஸ்லாமிய தமிழ் தஃவா குழு

_____________________________________