இல்லம் > இஸ்லாம், துஆ, நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது > நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ


اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் :

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5742

அல்லது

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி அத்ஹிபில் ப(B)ஃஸ இஷ்பி(F)ஹி வஅன்தஷ் ஷாபீ(F) லாஷிபா(F)அ இல்லா ஷிபா(F)வு(க்)க ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி 5743

அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து

بِسْمِ اللَّه

பி(B)ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر

அவூது பி(B)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் :

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்ம் 4082

அல்லது

لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ

லா ப(B)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் :

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்

எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி 3616

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

கவலையின் போது ஓதும் துஆ

தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

ஆயத்துல் குர்ஸி

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது

  1. முகம்மது யாசீத்
    11:48 பிப இல் ஜனவரி 16, 2021

    இது போல இன்னும் பல துஆக்களை எதிர் பார்க்கிறேன்.பொருளாறிந்து மனனமிட மிக இலகுவாகவும் தெளிவாகவும் இருந்ததமைக்கு جزاك اللهُ‎ جزاك اللهُ‎

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக