தொகுப்பு

Archive for the ‘சாட்சி’ Category

சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


நீதியை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் பொய்சாட்சி சொல்லக் கூடாது.””பொய் சாட்சி கூறுவது கொடிய குற்றம்” என்று நபிகள் நாயகம்(ஸல்) நவின்றதை ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லீம் நூல்களில் காணப்படுகிறது.

பொய்சாட்சி கூறுவதைப் போலவே பயந்தோ, பணிந்தோ துணிவின்றி சாட்சி கூற மறுப்பதும் கூடாத செயலே. இதனை கீழ்காணும் குர்ஆனின் 4-135வது வசனம் விளக்குகிறது. “”விசுவாசிகளே! நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாகவும், உங்களுக்கோ உங்களின் பெற்றோருக்கோ உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். நீங்கள் யாருக்கு விரோதமாக சாட்சி கூறுகிறீர்களோ அவர் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் அருகதை உடையவன் அல்லாஹ். ஆகையால் நீங்கள் பயந்தோ, இரக்கப்பட்டோ சாட்சியம் கூறுவதில் தவறிவிடாதீர்கள். நீங்கள் நீதி செய்வதில் மனோ இச்சைக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும் அல்லது சாட்சியம் கூறாமல் புறக்கணித்தாலும் உங்கள் செயலை அல்லாஹ் நன்கு அறிவான்”.

அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.

“”வழக்கமிருப்பின் வர்த்தகத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளுங்கள். சாட்சியை ஒரு பக்கம் சாதகமாக நடக்கும்படி வற்புறுத்தாதீர்கள். அச்செயலும் பாவம்”.

அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.

நாம் நல்ல காரியங்களில் சாட்சியம் சொல்லும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சாட்சி சொல்ல மறுக்காது, உண்மையை மறைக்காது இறைவன் தந்த மறை கூறும் அறவழியில் சாட்சி கூறி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  18-May-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!