தொகுப்பு

Archive for the ‘இரக்கம்’ Category

இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

ஜனவரி 10, 2012 1 மறுமொழி

ஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல்வதறிந்த குறைஷி காபிர்கள் அவரைப் பிடித்து இழுத்து வந்து தண்டிக்க ஓடினர். ஸுஹைபைச் சுற்றி வளைத்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய ஸுஹைப்(ரலி) அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து, “”என் அருகில் நெருங்கினால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் குறி வைத்து அம்பெய்தி கொன்றுவிடுவேன். அம்புகள் தீர்ந்ததும் எஞ்சியவரை என் வாள் வஞ்சம் தீர்க்கும்” என்றார்.

சுற்றி வளைத்த சூழ்ச்சிக்காரர்களான எதிரிகள், “”உங்கள் செல்வத்தை மக்காவில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் ஓடி விடுகிறோம்”என்றனர்.

அல்லாஹ்வின் அருள் தேடி அவன் தூதர் இருக்கும் மதினாவிற்குச் செல்லும் ஸுஹைப் (ரலி) அவர்கள் பொருள் இருக்கும் இடத்தைப் புலப்படுத்தியதும் பிறர் பொருள் கவரும் கொள்ளையர்களான புல்லர் கூட்டம் புறமுதுகிட்டு மக்காவிற்குத் திரும்பி ஓடியது.

ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா சென்று சேருவதற்கு முன்னால், “”அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி தம்மையே விற்றவரும் மனிதர்களில் உண்டு. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக்க இரக்கம் காட்டுகிறவன்” (2-207) என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கியது.

ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா வந்ததும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,””அபூயஹ்யாவே! உங்களின் வியாபாரம் லாபம் அளித்துவிட்டது” என்று கூறி மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

இவ்வாறு நபித்தோழர்கள் பலர் இஸ்லாத்திற்காக எதையும் இழப்போம், எதுவரினும் ஈமானை இழந்திடோம் என்று உறுதியாக வாழ்ந்தனர்.

இன்னும் இறையச்சத்தோடு, இஸ்லாமிய கொள்கைகளை உலக இன்பத்திற்காகவும் உலக சுகத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் விட்டுக் கொடுக்காது, கொள்கைப் பிடிப்போடு வாழ்வோர் இம்மை மறுமை வாழ்வில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி 23 Sep 2011

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!