இல்லம் > அபுல் அமீன் நாகூர், கவிதைகள், பத்தில் பத்து > பத்தில் பத்து – மு.அ. அபுல் அமீன் நாகூர்

பத்தில் பத்து – மு.அ. அபுல் அமீன் நாகூர்


ஆசிக்கான ஆசுரா நாளாம்
ஆண்டின் ஆரம்ப மாதம்
நேசிக்கும் முஹர்ரம் பத்தில்
நேர்ந்த நிகழ்ச்சிகள் பத்து

அழுதழுது ஆதிநபி ஆதம்
அந்தமும் ஆதியுமில்லா அல்லாஹ்வைத்
தொழுது கேட்ட பாவத்தைத்
தொய்வின்றி மன்னித்த நிகழ்ச்சி

இனியநபி இத்ரீஸ் இறைவனை
இறைஞ்சி கேட்ட வாறு
கனிந்து வானில் உயர்த்திய
கருணை பெற்ற நிகழ்ச்சி

சுழன்ற சூறா வளியில்
சுற்றிய நூஹ்நபியின் கப்பல்
சுழலாத ஜூதி மலையில்
சுகமாய் நின்ற நிகழ்ச்சி

இறையை மறுத்த நம்ரூது
இறைத்தோழர் இப்ராஹீம் நபியை
நிறைந்த நெருப்பிலிட நெருப்பும்
நிழலான நீங்கா நிகழ்ச்சி

தாவூத்நபி தவறான தீர்ப்புக்கு
தாளாது தளராது கேட்ட
பாவமன்னிப்பு கிட்டிய
பங்கமிலா பாங்கான நிகழ்ச்சி

தந்திர சைத்தான் மந்திரத்தில்
தவறவிட்ட கணையாழி கிடைத்து
சுந்தர சுலைமான்நபி ஆட்சியைச்
சுகமாய் மீட்ட நிகழ்ச்சி

தாங்கொணா வேதனை தந்து
தளர வைத்த நோய்கள்
நீங்கி யோடி அய்யூப்நபி
நிம்மதியாய் சுகம்பெற்ற நிகழ்ச்சி

மூசா நபியும் படையும்
முந்தி செல்ல வழிவிட்டு
கூசா பிர்அவ்னை நைல்நதி
கூவி விழுங்கிய நிகழ்ச்சி

மீனின் வயிற்றில் நுழைந்து
மீளா இருட்டில் தவித்த
யூனூஸ் நபியும் வெளியில்
விழுந்த விழுமிய நிகழ்ச்சி

நேசக்கரம் நீட்டி நேரிய
ஈசாநபியைக் கொல்ல முயன்ற
மோசடியை முறியடித்து அல்லாஹ்
விண்ணேற்றிய வியத்தகு நிகழ்ச்சி

பத்து நிகழ்ச்சிகள் நடந்த
முத்தான முஹர்ரம் பத்தில்
சித்தம் தெளிந்து சித்திபெற
சிரத்தையாய்க் கேட்போம் துஆவை

நன்றி : புனித பயணம்/ ஜனவரி 2010

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

Advertisements
  1. 3:59 பிப இல் ஓகஸ்ட் 23, 2013

    I really like what you guys tend to be up too.
    This sort of clever work and reporting! Keep up the excellent works guys I’ve incorporated you guys to our blogroll.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: