தொகுப்பு

Archive for the ‘சிரிக்க’ Category

முல்லாவின் உடைவாள் – முல்லா கதைகள்


முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு.

முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா ? என்று கேட்டார்.

“கள்வன் என்னை என்ன செய்வான் ? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ? “ என்றார் முல்லா.“கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும் ? “ என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.“நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது ? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே ? “ எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

“கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் “ என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

“கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் “ என்று திருடர்கள் கேட்டனர்.“என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.“அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் “ என்ற கள்வர்கள் மிரட்டினர்.

“கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா ? “ என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.“ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

“என்ன யோசனை ? “ என்று கள்வர்கள் கேட்டனர்.“என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா ? “ என்றார் முல்லா.கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர்.

பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று “பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.“எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

“வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா ? “ என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.“அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் “ என்றார் முல்லா.

“உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் “ என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.“உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா ? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் “ என்றார் அண்டை வீட்டுக்காரர்.“உடைவாள் என்னிடம் ஏது ? “ அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. “கள்வனிடம் கொடுத்து விட்டீரா ?

அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நன்றி:- இனைய நன்பர்

பதிலுக்குப் பதில் – முல்லா கதைகள்


ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.

பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார்.

அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார்.

உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார்.

கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.

நன்றி:- இனைய நன்பர்

தலைவா என்னை மன்னித்து விடுங்கள் – முல்லா கதைகள்


ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?”
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய
சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன்

அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில்

முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது

தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.


“ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?”

“இல்லை” என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று “தலைவா என்னை மன்னித்து விடுங்கள்”

என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

நன்றி:- இனைய நன்பர்

குழப்பவாதிகள் – முல்லா கதைகள்


முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக  குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார்.  பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா,
அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிரூபித்தால் ஆச்சுது என்று நினைத்து “அரசே என்னால் நிறுபிக்க முடியும்”  என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், ” அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன்.  அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன? ” என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா,  ” அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள். யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா? இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார்.  அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

நன்றி:- இனைய நன்பர்

சந்தேகப்பிராணி – முல்லா கதைகள்



வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்குத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது.

அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.

சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.

அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார்.

அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள்.

காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் சந்தேகப் பிராணி.

முல்லா சிரித்துக் கொண்டே நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் என்றார்.

சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார்.

ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. ஏன் காலில் இருந்த துணியைக் காணோமே என்று கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் என்று சத்தம் போட்டான்.

அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார்.

சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.

பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.

நன்றி:- இனைய நன்பர்

எதிர்கால வாழ்க்கை – முல்லா நஸ்ருதீன் கதை

மார்ச் 24, 2011 1 மறுமொழி

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார்.

முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.

பையன் கேட்பதாக இல்லை.

நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.

அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார்.

அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன்.

பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா நஸ்ருதீன் கதை

மார்ச் 20, 2011 1 மறுமொழி

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.

அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.

முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.

அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர்.

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர்.

இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே. இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார்.

வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர்.

உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர்.

உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர்.

அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர்.

உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர்.

பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர்.

அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர்.

முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார்.

வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு ? என்று கேட்டனர்.

முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.

 

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

நம்பிக்கை மோசம் – முல்லா கதைகள்


ஊரெல்லாம் கடன் வாங்கி அதைத் திருப்பித்தராது ஏமாற்றிக்கொண்டிருந்தான் ஒரு டம்பப் பேர்வழி. அவன் முல்லாவிடம் ஒரு பெருந்தொகையை வாங்கி அவரையும் ஏமாற்றத் திட்டமிட்டான். நிச்சையமாக முல்லாவை ஏமாற்றி ஒரு பெருந்தொகையினை கடனாக வாங்கி வருவதாக பலரிடம் மார்தட்டிக்கொண்ட அவன். முல்லாவிடம் சாமத்தியமாக செயற்படத் திட்டமிட்டான்.

முல்லா தன்னை நம்பி பெருந்தொகையினைக் கொடுக்க மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால் தன்மீது நம்பிக்கை ஏற்படுவதற்காக ஒரு நாடகம் நடிக்க எண்ணினான். ஒருநாள் அவன் முல்லாவிடம்ட சென்றான் “முல்லா அவர்களே எனக்கு ஒரே ஒரு காசு கடனாகத் தர முடியுமா?” என்று கேட்டான். “நம்பிக்கை மோசம் செய்யாத யாருக்கும் நான் எவ்வளவு தொகைவேண்டுமானாலும் கடனாகத் தருவதற்குத் தயங்கமாட்டேன்.

நீ ஒரு காசுதானே கேடகிறாய் இதிலே நீ நம்பிக்கை மோசம் செய்யவில்லை என்றால் நான் உனக்கு பத்தாயிரம் காசுகள் கேட்டாலும் கொடுப்பேன்.” என்று கூறி டம்பனுக்கு ஒரு காசினைக் கடனாகக் கொடுத்தார் முல்லா. டம்பன் நாலு ஐந்து நாட்கள் கழித்து முல்லா கொடுத்த ஒரு காசினை எடுத்தக்கொண்டு முல்லாவிடம் வந்தான். “முல்லா அவர்களே தாங்கள் கொடுத்தது அற்ப பொருள்தான் என்றாலும் மிகுந்த நாணயத்துடன் அதைத் திருப்பித்தருவது என்று வந்திருக்கிறேன். பணவிடயத்தில் நான் மிகவும் நேர்மையானவன்

என்பதை தாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்” என்று கூறியவாறு டம்பன் அந்த ஒரு காசினை முல்லாவிடம் கொடுத்தான்.

முகத்தில் மலர்ச்சி இல்லாமல் ஏதோ உபத்தைப்படுபவர் போல் அதனை வாங்கிக்கொண்டார் முல்லா. டம்பன் அந்த இடத்தை விட்டு அகலாமல் தலையினைச் சொறிந்துகொண்டு நின்றான். “என்ன சமாச்சாரம்…?” என்று கேட்டார் முல்லா. “ஒன்றுமில்லை ஒரு ஐயாயிரம் பொற்காசுகள் தேவைப்படுகின்றது கொடுத்தீர்கள் என்றால் இதைத் திருப்பிக் கொடுத்தது போல் அதனையும் நாணயமாகத் திருப்பித்தருவேன்.” என்றான் டம்பன்.

உனக்கு இனி நான் ஒரு காசுகூடக் கடனாகக் கொடுக்க முடியாது” என்று கோபமாகக் சொன்னார் முல்லா.

“முதலில் நான் வாங்கிய ஒரகாசைத்தான் திருப்பித் தந்துவிட்டேனே” என்று ஒன்றும் விளங்காமல் கேட்டான் டம்டபன். “நீ ஒரு காசு வாங்கிய விடையத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்” என்றார் முல்லா. டம்பன் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தவனாய் ” முல்லா அவர்களே நான் வாங்கிய தொகையினைத் திருப்பிக்கொடுத்திருக்கின்ற போது எவ்வாறு நான் நம்பிக்கைத் துரோகம் செய்ததாகக் கூறுகின்றீர்கள்” என்றான்.

” நம்பிக்ககைத் துரோகம் தான் செய்துவிட்டாய் நான் கொடுத்த ஒருகாசை நீ திருப்பிக்கொடுக்கமாட்டாய் எனக நம்பினேன். நீயோ திருப்பிக் கொடுத்துவிட்டாய். ஆகவே நீ நம்பிக்கைத் துரோகம் தான் செய்து விட்டாய். உனக்கு ஒருகாசும் இனித் தர முடியாது” என்று கூறியவாறே முல்லா எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். டம்பன் அதிர்ச்சியுடன் வெளியேறினான்.

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

முல்லாவில் அறிவாற்றல்

முல்லா அனைத்த நெருப்பு

மீன் பிடித்த முல்லா

சொன்ன சொல் மாறாதவர்

முல்லாவின் திருமண ஆசை

வேதந்த நூல்

யானைக்கு வந்த திருமன ஆசை

மலிவான பொருள்

கப்பலில் வேலை

செயற்கரிய சாதனை

சொல்லாதே!

எடுத்துச் செல்வதற்காக அல்ல

என்னவென்று யூகி?

முல்லா ஏன் அழுதார்?

மீன் – முல்லா கதை

தளபதியின் சமரசம்

கழுதையால்கிடைத்த பாடம்

சூரியனா? சந்திரனா?

நிம்மதியே இல்லை! முல்லா கதைகள்

நம்பிக்கை மோசம் – முல்லா கதைகள்

நிம்மதியே இல்லை! முல்லா கதை


ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.

தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

”எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.

இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,” என்று கூறினார்.

முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘

‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.

பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்

தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.

கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!” என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்

சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.

பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.

”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.

மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!”முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

முல்லாவில் அறிவாற்றல்

முல்லா அனைத்த நெருப்பு

மீன் பிடித்த முல்லா

சொன்ன சொல் மாறாதவர்

முல்லாவின் திருமண ஆசை

வேதந்த நூல்

யானைக்கு வந்த திருமன ஆசை

மலிவான பொருள்

கப்பலில் வேலை

செயற்கரிய சாதனை

சொல்லாதே!

எடுத்துச் செல்வதற்காக அல்ல

என்னவென்று யூகி?

முல்லா ஏன் அழுதார்?

மீன் – முல்லா கதை

தளபதியின் சமரசம்

கழுதையால்கிடைத்த பாடம்

சூரியனா? சந்திரனா?

நிம்மதியே இல்லை! முல்லா கதைகள்

கழுதையால்கிடைத்த பாடம், சூரியனா? சந்திரனா? – முல்லா கதைகள்