தொகுப்பு

Archive for the ‘நாமே வழங்குவோம்’ Category

நாமே வழங்குவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


இறைத்தூதர் தாவூது நபி பாலஸ்தீன அரசர். அவருக்கு பல கைத்தொழில்களும் உருக்குச்சட்டை செய்யும் உற்பத்தி முறையும் தெரியும். அரசரான தாவூது நபி அவர்கள் கைகளால் செய்த பொருட்களை விற்று வாழ்க்கையை நடத்தினார்கள்.  


இவ்வரலாற்று நிகழ்ச்சியை முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “”தாவூது நபி அவர்கள் தம் கைகளால் உழைத்து சாப்பிட்டார்கள்”(புகாரி) என்று எடுத்துச் சொல்லி தோழர்களை உழைத்து வாழ உற்சாகம் ஊட்டினார்கள்.


 அண்ணல் நபியின் அறிவுரையை ஏற்று நடந்த அரேபியாவின் முதல் கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், இறக்கும் நாளில், கலீபாவாக இருந்த காலத்தில் அவர்களுக்குத் தரப்பட்ட ஊதியத்தை கலீபா ஆவதற்கு முன் தொழிலில் ஈட்டிய பணத்தில் வாங்கிய நிலத்தை விற்று திருப்பிக்கொடுத்துவிட்டார்கள்.  


அவர்களின் குழந்தைகளை கவனித்த வேலையாள், நீர் சுமந்துவரும் ஒரு ஒட்டகம், ஒரு போர்வை ஆகியவற்றையும் அடுத்த கலீபா உமர்(ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.  


“‘நாம் பொறுப்பில் அமர்த்திய ஒருவர் நம்மிடமிருந்து ஒரு ஊசியையோ அதனினும் சிறிய அற்ப பொருளையோ மறைத்தாலும் அதை அவர் அபகரித்துக்கொண்டதாக ஆகும். மறுமையில் அவர் அப்பொருளைச் சுமந்து வருவார்” என்று நபிகள் நாயகம் நவின்றதை முஸ்லிம் நூல் தெரிவிக்கின்றது.  


இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஸல்மானுல் பார்ஸி (ரலி) அவர்கள் மதாயின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஸல்மான் பார்ஸி அவர்கள் அரசு ஊதியம் பெறவில்லை. பேரீச்சை மர ஓலைகளால் கூடைகளும் பைகளும் பின்னி விற்று குடும்பத்தைக் காப்பாற்றினார்.  


தெருவில் எளிய ஆடை அணிந்து செல்லும் ஸல்மான் பார்ஸி (ரலி)யை கூலியாள் என்றெண்ணி ஷாம் நாட்டு வியாபாரிகள் சுமையைக் கொடுத்து தலையில் சுமந்து வர பணித்தனர். அவ்வாறு ஒரு நாள் சுமை தூக்கிச் செல்லும்பொழுது மதாயின் வாசிகள் அமீர் என்றழத்து சலாம் சொன்னார்கள். அவர் ஆளுநர் என்றறிந்து பதறிய ஷாம் வியாபாரிகள் ஸல்மான் பார்ஸி(ரலி) தலை சுமையை இறக்க முயன்றனர்.  

ஆனால் ஸல்மான் பார்ஸி (ரலி) வணிகர்கள் எங்கு தங்கச் சென்றார்களோ அவ்விடம் வரை சுமையைச் சுமந்து சென்று இறக்கி வைத்தார்கள்.  


“”நாம் யாரைப் பதவியில் அமர்த்துகிறோமோ அவருக்குரிய தேவைகளை நாமே வழங்குவோம். அதை விட அதிகமாக எடுப்பவர் மோசடிக்காரர்” என்ற அல்லாஹ்வின் அறிவிப்பை நபிகள் நாயகம் நவின்றார்கள்.  


இதையே திருவள்ளுவரும் செங்கோண்மை அதிகாரத்தில்,

“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை  

முறைகாக்கும் முட்டாச் செயின்” என்கிறார்.


நன்றி:- தினமணி –  வெள்ளிமணி  27  Jan 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

பிரிவுகள்:நாமே வழங்குவோம், நாமே வழங்குவோம்! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,