தொகுப்பு

Archive for the ‘ஸுன்னத் வல் ஜமாஅத்’ Category

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!

மார்ச் 21, 2010 பின்னூட்டம் நிறுத்து

மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 

*ஜனனம்* 

எமது ஆத்மீக கடல், ஞானதீபம், மெய்நிலை கண்ட ஞானி, காதிரியா தரிக்காவின் ஸ்தாபகர், மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள், ஹிஜ்ரி 470 ரமலான் மாதம் திங்கட்கிழமை இரவு ஸஹர் நேரத்தில் ஈராக் நாட்டின் ஜீலான் என்னும் நகரை ஒட்டிய நீப் என்னும் கிராமத்தில் பிறந்தார்கள். 

*ஜனனத்தின் மகத்துவம்* 

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 

*கல்வி* 

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 

*ஷைக்கின் சகவாசம்* 

எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 

*துறவு நிலை* 

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 

*காதிரியா தரீக்காவின் உருவாக்கம்* 

ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள். 

*முஹியித்தீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை* 

ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 

*அல்லாஹ்வின் கட்டளையை வெளிப்படுத்தல்* 

கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 

*குடும்ப வாழ்க்கை* 

மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 

*மறைவு* 

40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!! 

(R.P.M. கனி அவர்கள் எழுதிய “மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் ஆண்டகை” எனும் நூலி இருந்து இந்த கட்டுரை தொகுக்கப்பட்டது) 

நன்றி:- மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி 

ஸுன்னத் வல் ஜமாஅத் என்பவர்கள் யார்?


“இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு கூட்டங்களாக பிரிந்தார்கள். எனக்குப் பின் என்னுடைய உம்மத்துகள் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். அதில் ஒரு கூட்டத்தார் மாத்திரம் சுவர்க்கவாசிகள். மற்றைய எழுபத்திரண்டு கூட்டத்தினரும் வழி தவறியவர்களாவார்கள்.” என நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அருளிய போது, அண்மையில் இருந்த சஹாபாக்கள், ” யா ரசூலல்லாஹ் !! அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்பதை எங்களுக்கு தெரிவியுங்கள்.” எனக் கேட்க, நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், ” நானும் என்னுடைய சஹாபாக்களும் நடக்கின்ற வழியை பின்பற்றி நடப்பவர்கள்தான் அந்தக் கூட்டத்தினர்” எனக் கூறினார்கள். இந்தக் கூட்டத்தினரையே நாம் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரோடு அழைக்கின்றோம்.

இவர்களின் உறுதியான கொள்கைகளாவன: நபிகள் பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் சொல், செயல், பழக்கவழக்கங்களை பின்பற்றியும், அவர்கள் சமூகத்தில் தங்களது அதிகமான காலத்தை கழித்த அவர்களின் தோழர்களான நான்கு கலிபாக்கள், சுவனபதியை கொண்டு நன்மாராயம் பெற்ற அஷ்ரத்துல் முபஷ்ஷிரீன்கள், சஹாபாக்கள், தீனுக்காக உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்கள், இன்னும் பன்னிரண்டு இமாம்கள் அவர்கள்: இமாம் அலி, இமாம் ஹசன், இமாம் ஹுசைன், இமாம் ஸெய்னுல் ஆப்தீன், இமாம் முஹம்மத் பாகிர், இமாம் ஜஃபர் ஸாதிக், இமாம் மூஸல் காஸிம், இமாம் மூஸர் ரிளா , இமாம் ஜவாதுத்தகிய்யி, இமாம் நஸியி, இமாம் அஸ்கரியி, இமாம் மஹ்தி (ரலியல்லாஹு அன்ஹுமா) இந்த பன்னிருவரை மட்டும் ஷியாக்கள் கொண்டாடுகின்றனர்.

மத்ஹபுக்குரிய இமாம்கள் அவர்கள்: இமாம் ஹனபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி.

இமாம் மாலிகி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மாணவராக இருந்தார்கள். அது போலவே இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் ஷாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி பயின்று இருக்கிறார்கள்.

“அஇம்மத்துல் முஜ்தஹதீன்” எனப்படுவோர் நான்கு இமாம்களும், அவர்களுக்கு அடுத்து வந்த சுயமாகச் சட்டம் இயற்றும் மார்க்க நிபுணர்களான கல்விக் கடல், இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் இமாம்களை போன்ற மேதைகள், அடுத்து விலாயத் பெற்ற கெளது, குதுபு, வலிமார்கள் இவர்கள் போன்று பெண் வலிமார்கள், இன்னும் இறையருள் பெற்ற ஞானவான்கள், உலமாக்கள், ஸித்தீக்கீன்கள், ஸாலிஹீன்கள், ஆரிபுகள், முதலானோர்ர்களும், அவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றியும், அவர்களின் போதனைகளுக்கு உட்பட்டு, குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகிய இந்த நான்கு நியமனங்களை ஏற்றும் நேர்மையாக நடப்பவர்களே ஸுன்னத் வல் ஜமாஅத் எனப்படுபவர்கள்.

அல்லாஹ் நம்மை மகத்துவமிக்க இந்த சத்தியப் பாதையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலேயே இறுதி வரை இருக்கும் நஸீபை தந்தருவானாக! ஆமீன்!!

நன்றி:- மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி

வலிமார்கள் என்பவர்கள் யார்?


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா இந்த உலகத்தை படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளை படைத்து, அந்த அத்தனை ஜீவராசிகளிலும் மனிதனை ஒரு உயர்ந்த, கண்ணியம் வாய்ந்த படைப்பாக படைத்தான். இந்த மனிதர்களிலேயே அதி கண்ணியம் வாய்ந்த மனிதராக எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை படைத்தான். அன்னவர்களுக்கு பின் மனிதர்களில் சிறந்த படைப்பாக ஏனைய ரசூல்மார்களை படைத்தான். இந்த ரசூல்மார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஏனைய நபிமார்களை படைத்தான். நபிமார்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக ஸஹாபாக்கள் இருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பாக தாபியீன்களும், தபஅத்தாபியீன்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு அதற்கு பின்னால் வந்த அனைத்து இஸ்லாமிய இறைநேசர்களும், இமாம்களும் ஆவார்கள். இவர்களுக்கு பின் மனிதர்களில் கண்ணியம் வாய்ந்த படைப்பு ஏனைய ஸாலிஹான முஸ்லிம்களாவார்கள்.

அப்படியென்றால் வலிமார்கள் என்றால் யார்? இவர்களுக்கு இஸ்லாத்திலுள்ள அந்தஸ்தும், கண்ணியமும் என்ன? இவற்றை நாங்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவர்களை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் கட்டளையும், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் ஸுன்னத்துகளையும் ஒன்று விடாமல் பின்பற்றி, இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் முறையாக நடந்து ஷரீஅத், தரீகத், ஹகீகத் என்ற மன்ஸில்களை அதாவது படித்தரங்களை கடந்து இறுதியில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.

அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். அதாவது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு உரியவர்கள். அல்லாஹ்வால் நேசிக்கப்படுபவர்கள் என்று அர்த்தமாகும். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும் நாம் வலிமார்கள் என்று கூறினால் அதில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள் ஏனைய அவ்லியாக்கள் அனைவரும் அடங்குவார்கள். என்றாலும் பொதுவாக மக்கள் பேசும்பொழுது, ஸஹாபாக்களை அவர்களது சிறப்பான அந்தஸ்தை கூறியே, அதாவது ஸஹாபாக்கள் என்று கூறியே அழைக்கிறார்கள். ஏனைய தாபியீன்கள், தபஅத்தாபியீன்கள், இமாம்கள், இஸ்லாமிய பெரியார்கள் இவர்களைத்தான் பொதுவாக அவ்லியாக்கள் என்று கூறுகிறார்கள்.

ஏனென்றால் உலகத்திலுள்ள எல்லா அவ்லியாக்களை விடவும் அதி கண்ணியமும், சிறப்பும், அந்தஸ்தும் மிக்கவர்கல்தான் ஸஹாபாக்கள். எனவே நாம் எந்த ஒரு அவ்லியாவையும் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள் என்று கூறக்கூடாது. அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. அதேபோல் உலகத்திலுள்ள எந்தவொரு அவ்லியாவையும் எங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து எங்களைப்போன்ற சாதாரண மனிதர்கள்தான் என்று கூறக்கூடாது. இன்னும் அப்படி நினைத்தும் பார்க்கக்கூடாது. இதுதான் எங்களுடைய ஸுன்னத் – வல் – ஜமாஅத்துடைய அகீதா.

ஏனென்றால் அல்லாஹுதஆலா எங்களைவிட வலிமார்களுக்கு பல அந்தஸ்துகளை வழங்கி சிறப்பாக்கி வைத்திருக்கிறான். அவர்களுக்கு பல கராமத்துக்களை அதாவது பல அற்புத சக்திகளை வழங்கி அதன்மூலம் அல்லாஹ் அவர்களைக்கொண்டு பல மக்களை சீர்த்திருத்தியும், வழித்தவறியவர்களை நேரான வழியில் கொண்டுவரவும் செய்துள்ளான்.

இந்த அவ்லியாக்களைப்பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல் புனித அல்குர்ஆனில் கூறும்போது: ” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை. எந்த கவலையும் இல்லை” என்று கூறுகிறான். அவர்கள் விரும்பாத ஒன்று நடந்து விட்டதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் விரும்பாத ஒன்று எதிர்க்காலத்தில் நடக்குமோ என்று பயப்படவும் மாட்டார்கள். இதுதான் இதன் பொருள். ஆனால் கியாமத்து நாளைப்பற்றிய கவலை மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அதேபோன்று அல்லாஹ்வுடைய அச்சம், பயம் மற்றவர்களைவிட இந்த அவ்லியாக்களுக்குத்தான் மிக அதிகமாக இருக்கும். அதேநேரம் இந்த உலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் எந்த கவலையும், பயமும் அடையமாட்டார்கள்.

இதே போன்று அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக எங்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் திருவுளமானார்கள்:
” எனது அடியான் நஃபிலான வணக்கங்களை விருப்பத்துடன் செய்து, என்னுடைய நெருக்கத்தைபெற விரும்பி, என்னை நெருங்கினால் நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான். நான் அவனை நேசித்து விட்டால், அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன்.” இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலை அவ்லியாக்களுக்கு உள்ளதால்தான் மற்றவர்களால் செய்ய முடியாத விஷயங்களை எல்லாம் அவர்கள் செய்கிறார்கள். அந்த அற்புத சக்தியை அதாவது கராமத்துகளை அல்லாஹுதஆலா அவர்களுக்கு கொடுக்கிறான். இதை அல்லாஹுதஆலா சில சம்பவங்களின் மூலமாக எமக்கு சொல்லிக்காட்டுகிறான்.

பத்ர் யுத்தம் தொடங்குவதற்கு முன் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் ஒரு பிடி மண்ணை எடுத்து எதிரிகள் உள்ள இடத்தை நோக்கி வீசினார்கள். எதிரிகளுடைய பார்வை திசை திரும்பியது அதனால் அந்த யுத்தத்தில் வெற்றிப்பெற்றார்கள். இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் சொல்லும்போது, ” நாயகமே! நீங்கள் அந்த மண்ணை எறியவில்லை. அந்த மண்ணை அல்லாஹ் தான் எறிந்தான்” என்று கூறி காட்டுகிறான். இது நமது கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவை அல்லாஹ்வின் அவ்லியாக்களாக யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது சொந்தமானது.

அதே பத்ர் யுத்தத்தில் எதிரிகளை ஸஹாபாக்கள் கொன்றபோது, அல்லாஹ் அஸ்ஸவஜல் அல்குர்ஆனில் கூறினான்: ” நீங்கள் எதிரிகளை கொல்லவில்லை, அல்லாஹுத்தஆலாவே கொன்றான்” என்பதாக. இந்த வசனத்திற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ் சொல்கிறானே நான் ஒருவரை நேசிக்கும்போது அவன் கேட்கும் காதாகவும், பார்க்கும் கண்ணாகவும், பிடிக்கும் கையாகவும், நடக்கும் காலாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று. இதுதான் இதற்கு அர்த்தமாகும்.

எனவே அல்லாஹ் அஸ்ஸவஜல் தனக்கு சொந்தமான சில பதவிகளை அவ்லியாக்களுக்கு வழங்கி, அவர்களை இந்த உலக மக்களுக்கு தன் பிரதிநிதியாக அதாவது கலீஃபாவாக ஆக்கி வைத்திருக்கிறான். எப்படி எங்கள் இனிய தூதர் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் உலகத்துக்கே ரஹ்மத்துலில் ஆலமீனாக இருக்கிறார்களோ அப்படியே அவ்லியாக்களை அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த உலக மக்களுக்கு கிருஃபையுள்ளவர்களாக ஆக்கிவைத்துள்ளான்.

மேலும், அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் ஸூரதுன்னிஸா 59ம் வசனத்தில் கூறும்போது, ” மூஃமின்களே! அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். இன்னும் அவனது ரஸூலுக்கும் வழிப்படுங்கள். மேலும் உங்களில் தீனை பரப்பக்கூடிய உலமாக்களுக்கும், அவ்லியாக்களுக்கும் வழிப்படுங்கள்.” என்று கூறியுள்ளான். (ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான், தப்ஸீர் கபீர்)
ஆகவே அல்லாஹ் அஸ்ஸவஜல் அந்தக்காலத்தில் நபிமார்களைக்கொண்டு நடத்தியதை இன்று அவ்லியாக்களைக்கொண்டு நடத்துகிறான். அவர்களாலேயே உலகம் நிலைபெற்றிருக்கிறது.

ஒரு முறை பூமி கூறியது, ” அல்லாஹ்வே! என் மீது நபிமார்கள் நடந்தார்கள். அவர்களுக்கு பிறகு கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களை சந்தோசத்துடன் சுமந்தேன். அன்னவர்களும் சென்றுவிட்டார்கள். இப்போது நான் தனித்துவிட்டேன்! என் மீது எந்த நபியும் இல்லையே!” என்று அழுது முறையிட்டது. அதற்கு அல்லாஹ் அஸ்ஸவஜல் ” நான் சில அவ்லியாக்களை அனுப்புவேன். அவர்களது இதயங்கள் நபிமார்களின் இதயங்களை போல் இருக்கும். அவர்கள் கியாமத்து நாள் வரை உன் மீது நடப்பார்கள்” என்று பூமிக்கு அறிவித்தான்.

மேலும் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள். ” எனது உம்மத்துக்களில் 40 மனிதர்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய இதயத்தைப் போன்ற உள்ளம் படைத்தவர்களாக உலகத்தில் இருந்தே வருவார்கள். அல்லாஹுதஆலா அந்த நபர்களைக்கொண்டு இவ்வுலகத்தில் வாழ்பவர்களின் நோய்களை தீர்த்து வைப்பான். அவர்களுக்காக மழையை பொழிய வைப்பான். அவர்களைக்கொண்டுதான் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரியப்படும்” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் தபரானியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகத்தில் அவ்லியாக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகத்தில் அவ்லியாக்கள் 440 பேர் இருப்பார்கள். அதில் நுஜபாக்கள் 300 பேர், நுகபாக்கள் 70 பேர், அப்தால்கள் 40 பேர், அகியார்கள் 10 பேர், உறபாக்கள் 7 பேர், அன்வார்கள் 5 பேர், அவ்தாத்கள் 4 பேர், முக்தார்கள் 3 பேர், குதுபு ஒருவர். இவர்களில் குதுபே அனைவருக்கும் தலைவராவார். இவரை கௌஸு என்றும் சொல்வார்கள்.

இப்படி குதுபுகளாக ஒவ்வொரு காலத்திலும் இருந்தவர்கள்தான் காதிரியா தரீக்காவை உருவாக்கிய குத்புல் அக்தாப் கௌஸு அஃலம் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மாதுல்லாஹி அலைஹி) அவர்கள், ரிஃபாயி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், ஷாதுலி தரீக்காவை உருவாக்கிய இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள், சிஷ்தி தரீக்காவை உருவாக்கிய ஸுல்தானுல் அவ்லியா அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் மற்றும் நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஆவார்கள்.

இதேபோல் உலகத்தில் பல குதுபுமார்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் கியாமத்து நாள் வரை வாழ்வார்கள். படைப்புகள் மீது அவர்கள் ஆட்சி செய்யக்கூடியவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு “கௌஸு” என்றும் பெயர். இவர்களுக்காகவே அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். உலக மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும், குதுபுக்கு கொடுத்த ரஹ்மத்துகளை ஒருத்தட்டிலும் வைத்தால் குதுபுவின் தட்டே பாரமாக இருக்கும். அல்லாஹுதஆலா நபிமார்களுக்கு தனது செய்தியை வஹீ மூலம் அறிவித்தான். அதுபோல் அவ்லியாக்களுக்கு ” இல்ஹாம்” என்ற ஞான உதிப்பு மூலம் தெரியப்படுத்துகிறான்.

அவ்லியாக்கள் நபிமார்களுடைய வாரிசுகளாகும், பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இதை கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறும்போது, ” அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள் ” என்று கூறினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, ” என்னுடைய உம்மத்துக்களிலுள்ள அறிஞர்கள், பனீஇஸ்ராயீல்களிலுள்ள நபிமார்களை போன்றவர்களாவார்கள். ” என்று கூறினார்கள்.

அவ்லியாக்கள் உலக மக்களின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் அறிவார்கள் என்று தாஜுல் அவ்லியா, குதுபுல் அக்தாப் ஸைய்யதுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறினார்கள்.

வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. இதை அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறும்போது, ” அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்” என்று கூறுகிறான்.

அவர்களின் தொழுகைக்கும் எங்களது தொழுகைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. நாங்கள் தொழுகையில் நின்றால் கிப்லாவை நோக்கியே நிற்போம். ஆனால் வலிமார்களோ தொழுகையில் நின்றுவிட்டால் அல்லாஹ்வை நோக்கியே நிற்பார்கள். அவர்கள் தொழுகையில் தங்களது உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் இறைவனின் பக்கம் நோக்கியே நிற்பார்கள். இத்தகைய பக்குவத்தை அடைந்தவர்களே வலிமார்கள் என அழைக்கிறோம்.

அதுமட்டுமல்ல, நாமும் நோன்பு நோற்கிறோம், வலிமார்களும் நோன்பு நோற்கிறார்கள். எங்களது நோன்பிற்கும் அவர்களது நோன்பிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு. நாம் நோன்பு நோற்றால் உண்ணாமலும், குடிக்காமலும்தான் இருக்கிறோம். ஆனால் வலிமார்கள் நோற்கும் நோன்பு அப்படிப்பட்டதல்ல. அவர்கள் உண்ணாமலும், குடிக்காமலும் இருப்பதோடு மட்டுமல்ல, உடல் உறுப்புகளையும் நோன்பு நோற்க வைப்பார்கள். எப்படியென்றால் பார்க்க கூடாததை பார்க்காமல் கண்களை தடுத்தார்கள். கேட்க கூடாததை கேட்காமல் காதுகளை தடுத்தார்கள். பேச கூடாததை பேசாமல் நாவை தடுத்தார்கள். இதைப்போன்று முழு உடலையும் தீமையை விட்டும் தடுத்தார்கள். இவர்களே வலிமார்கள்.

அல்லாஹ் அஸ்ஸவஜல் அல் குர்ஆனில் கூறும்போது, ” அல்லாஹ்வின் இறைநேசர்கள் எப்போதும் திக்ரிலே அதாவது அல்லாஹ்வின் தியானத்திலே இருப்பார்கள்.” எப்படியென்றால் அவர்கள் நின்றுக்கொண்டு இருந்தாலும், உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும், தூங்கினாலும் அல்லாஹ்வின் திக்ரிலே நிலைத்து நிற்பார்கள். இறை தியானத்திலே மூழ்கியிருப்பார்கள். அல்லாஹ் அஸ்ஸவஜல் மேலும் கூறும்போது, ” நீங்கள் காலையிலும், மாலையிலும் திக்ர் செய்யும் நல்லடியார்களுடன் நட்புக்கொள்ளுங்கள்” என்று எம்மைப்பார்த்து கூறுகிறான்.

” அல்லாஹ்வுடைய அவ்லியாக்களை யார் முஹப்பத் வைக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வை முஹப்பத் வைக்கிறார்கள். எவர்கள் அல்லாஹ்வை நேசிக்கிறார்களோ, அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். இப்படித்தான் ஸாலிஹீன்களும் அவ்லியாக்களை நேசித்து அவர்களும் அவ்லியாக்கள் ஆனார்கள்” என்று குத்பு ஷஃறானி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் “தபகாத்துல் குப்ரா” என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.

ஆனால் இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் இந்த சிறப்பான வலிமார்களை அவமதித்து, அவர்களிடம் எந்த சக்தியும் இல்லை. அவர்களை ஸியாரத்து செய்யக்கூடாது. அவர்களின் பொருட்டால் வஸீலா கேட்கக்கூடாது. அவர்களுக்காக மௌலிது ஓதக்கூடாது. கந்தூரி கொடுக்கக்கூடாது என்று தப்புத்தவறாக சொல்லி, ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை வழிக்கெடுக்கிறார்கள். இவர்களின் பேச்சை நம்பி இந்த அப்பாவி மக்களும் அவர்களின் முன்னோர்கள் செய்த இந்த நல்ல விஷயங்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள். ஆனால் விஷயம் தெரிந்த மக்கள் இவர்களின் இந்த பொய் பேச்சுகளை எல்லாம் கேட்பதில்லை. அவர்கள் எமது முன்னோர்கள் செய்து வந்ததைப்போல், வலிமார்களை கண்ணியப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக மௌலிது ஓதுகிறார்கள். அவர்களின் பொருட்டால் வஸீலா தேடுகிறார்கள்.

இப்படி இந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் வலிமார்களை நேசிப்பவர்களைப் பார்த்து, இன்று சில வழிக்கெட்ட கூட்டத்தார்கள் “ஹுப்பு பாட்டி” என்றும், அவர்களின் துஆ பரக்கத்தை பெற அவர்களின் கப்ரு ஷரீஃபுக்கு செல்பவர்களை பார்த்து “கப்ரு வணங்கி ” என்றும் கூறி கேலி செய்து தப்புத் தவறாக பேசி பெரும் பாவத்தை செய்கிறார்கள்.

அல்லாஹ் அஸ்ஸவஜல் கூறியதாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்: ” எவன் ஒருவன் எனது வலிமார்களை நோவினை செய்வானோ, அவன் என்னுடன் யுத்தம் செய்ய தயாராக இருந்துக்கொள்ளட்டும்” என்ற இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்திருப்பதால் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வலிமார்களை தவறாகபேசினால் பெரும் பாவத்தை சம்பாதிக்கவேண்டிவரும். அல்லாஹ்வுடன் யுத்தம் செய்ய வேண்டி வரும்.

இறைநேச செல்வர்களான அவ்லியாக்கள் செய்த கடும் தவம் என்ன? இபாதத்துகள் என்ன? அவர்களைக்கொண்டு இந்த பூமி அடைந்திருக்கும் அதிர்ஷ்டங்கள் என்ன? நல்ல நசீபுகள் என்ன? இவர்களால் தான் மழையையே பொழியவைக்கிறான் என்றால் இவர்களின் சிறப்புதான் என்ன? இவ்வளவு பெரும் மதிப்பு பெற்ற அவ்லியாக்களை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான் என்றால் நாங்கள் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். இதை நினைத்து நெஞ்சுருகி மனமார அல்லாஹ்வுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அவர்களை கேலி செய்வதால் எவ்வளவு பெரிய பாவங்களை சம்பாதிக்கிறோம்? கிருபையுள்ள அல்லாஹ் நம் அனைவரையும் இந்த வழிக்கெட்ட கூட்டங்களில் சேர்க்காமல், உண்மையான, உறுதியான, வெற்றிப்பெற்ற ஸுன்னத் – வல் – ஜமாஅத்தில் நிலைப்பெற வைப்பானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

நன்றி:- மேலப்பாளையம் சுன்னத் ஜமாஅத் மாணவரணி

ஜும்ஆவின் சிறப்பு


ஜும்ஆவுக்கு நேரத்தோடு பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மையை அறிந்தால் அதற்காக திட்டமிட்டு மற்ற வேலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்வார்கள்.

”பெருந்துடக்கிற்காக குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.

நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.

ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

ஜும்ஆ நாளில் நேரத்தோடு செல்ல வேண்டும். குர்ஆன் ஓதுதல் சுன்னத்தான தொழுகையை தொழுதல், இறைவனை நினைவு கூர்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

”ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3211)
ஜும்ஆவுக்காக பள்ளிக்கு வருவோருக்கு பரிசுகள் வழங்குவதற்காக வருகைப்பதிவேட்டில் வானவர்கள் பதிவு செய்கிறார்கள். இமாம் மிம்பருக்கு வருவதற்கு முன்பே நாம் பள்ளிக்கு வருகை தந்துவிட வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வரமுடியாமல் இமாம் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது தாமதமாக வந்தால் என்ன செய்வது?

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்..” (நூல்: புகாரி 930)

தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை பற்றிய நபிமொழிகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்ஃபானி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”நீர் (இங்கு) வருமுன் இரண்டு ரக்அத்கள் தொழுதீரா?” என்று கேட்க, அவர் ”இல்லை” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அப்படியாயின் நீர் இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுது கொள்வீராக” என்றார்கள் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னுமாஜா 1114)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்: ”உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்”. (நூல்: புகாரி.)

மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் அமர்ந்திருக்கும் போது நான் பள்ளிக்குள் நுழைந்து உட்கார்ந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள்.

”நீ உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க எது தடையாக அமைந்தது” என்று கேட்டார்கள். அதற்கு, ”நான் அல்லஹ்வின் தூதரே! நீங்கள் உட்கார்ந்து இருப்பதைக் கண்டேன். மக்களும் உட்கார்ந்து இருக்கிறார்கள். (அதனால் நான் உட்கார்ந்து விட்டேன்)” என்று பதில் சொன்னேன்.
குறைக்கப்பட்டு ”உங்களில் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்ததும் இரண்டு ரக்அத்துகள் தொழாமல் இருக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்”. (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ)

எனவே எந்தப்பள்ளி வாயிலுக்குள் நுழைந்தாலும் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்காருவது கூடாது.

வெள்ளிக்கிழமை இமாம் குத்பா ஓதிக்கொண்டிருந்தாலும் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழுகை தொழுதுவிட்டுத்தான் உட்காரவேண்டும்

புனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்


லப்பைக்க அல்லாஹ{ம்ம லலப்பைக்க
லப்பைக்க லாஷரீ கலக்க லப்பைக்க
இன்னல் ஹம்த வன்னிஃமத்த
லகவமுல்க லாஷரீகலக்க

தல்பியா

வந்துவிட்டேன் இறiவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

உம்ரா நிய்யத்:

அல்லாஹ{ம்ம லப்பைக்க உம்ரத்தன்
இறiவா உம்ராவை நாடி நான்
இஹ்ராமைக்கட்டியுள்ளேன்.  இதை எனக்கு
இலேசாக்கித் தந்து ஏற்றுக் கொள்வாயாக.

உம்ரா

உம்ராவுடைய பர்ளு
1.  நிய்யத்    2. இஹ்ராம் ஆடை    3. தவாபு    4.  சயீ
5.  முடி சிரைத்தல்

ஹஜ் நிய்யத்
அல்லாஹ{ம்ம லப்பைக்க ஹஜ்ஜன்

இறiவா ஹஜ்ஜை நாடி நான் இஹ்ராமைக
கட்டியுள்ளேன்.  அதை இலேசாக்கிதந்து
ஏற்றுக் கொள்வாயாக.

ஹஜ்ஜுடைய பர்ளு

1.  நிய்யத்    2. இஹ்ராம்    3. தவாப்ஜியாரத்    4. சயீசெய்தல்
5.  அரபாத்தில் தங்குதல்

பிரயாண துஆ

சுப்ஹானல்லதி ஸஹ்ஹரலனா ஹாதா
வமாகுன்னா லஹ{ முக்ரினீன்
வஇன்னா இல ரப்பினா லமுன்கலிப+ன் ஜித்தாவிலிரந்து மக்கா 76 கி;.மீ தூரம் 55 வது கி.மீட்டரில் ஹரம் எல்லை ஆரம்பம்.

அங்கு ஒத வேண்டிய து.ஆ இறiவா இந்த இடம் நிச்சயமாக உன்னுடையதும்.  உன் திருத்தூதருடையதுமான புனிதமான இடமாகும்.  உன்னுடைய அடியார்களை எழுப்பும் அந்த நாளில் எனக்கு உனது வேதனையிலிருந்து அபயம் அளிப்பாயாக மக்கா நகரம் நுழையும் போது ஓதும் துஆ.

இறைவா திருமக்காவில் இருக்கும் வரை என் மனதிற்கு அiதியைத் தந்து அருள்வாயாக ஹரம் ஷரீபான கஅபாவில் சபா மர்வாகுபதியில் (புயவந ழே.24)

பாபுஸ்ஸலாம் வாசல் வழியாக நுழையும் போது ஓத வேண்டிய துஆ.

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்! அல்லாஹ{ம்ம அன்தஸ்ஸலாம் வமின் கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜிஉஸ்ஸலாம் ஹய்யினா…

யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது.  எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக! ஆதன் பின் ஸலவாத் ஓத வேண்டும்.

முதன் முதலாக கஅபாவைப் பார்த்தவுடன் ஓதவேண்டிய துஆ:

யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வேண்டும்.

துவாபை ஆரம்பிக்கும் முன்பு ஓதவேண்டிய துஆ:

புனிதம் மிக்க உனது திரு வீட்டை ஏழு சுற்று நாடி உம்ராவின் தவாபை உக்காகச் செய்கிறேன்.  அதை இலேசாக்கித் தந்து, என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தவாப் ஆரம்பிக்கும் முன்பு “ஹஜ்ருல் அஸ்வத்” முன்பாக ஓதவேண்டிய துஆ.

இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன்.  பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர்.  தவாப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம் பின்னால் 2 ரக அத் தொழுதபிறகு ஜம்ஜம் கிணறுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு ஓத வேண்டிய துஆ:

“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.

ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ

“பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும்.  அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!” பிறகு சயீ செய்யச் செல்ல வேண்டும்.  பனீ மக்ஜும் வழியாக (கஃபா மஸ்ஜித் ஹராமை விட்டு வெளியாக வேண்டும்.

சுபா குன்றில் நின்று கஅபாவை முன்னோக்கி இரு கரங்களையும் வானத்தை நோக்கி ஏந்தி ஓதவேண்டிய துஆ:

“யா அல்லாஹ்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள் மீதும் ஸலாவாத்தும் பரக்கத்தும் அருள் புரிவாயாக.” அல்லாஹ{ அக்பர் (3 தடவை) அல்ஹம்து லில்லாஹ் நான்காம் கலிமாவை ஓதிக கொண்டே சயி செய்யலாம்.  மற்ற தெரிந்த, உலமாக்கள் கற்பிக்கும் துஆக்களையும் ஓதலாம் மைலனீல் அக்ளரைன் (பச்சை விளக்கு அடையாளமுள்ள இடம்) வரும் போது, “யா அல்லாஹ்! நீ அறிந்த பாவங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! என்று சொல்லி கஅபாவைப் பார்த்தவாறு ஆண்கள் மட்டும் ஓடவேண்டும்.  பெண்கள் மெதுவாக நடந்து செல்ல வேண்டும்.  இவ்வாறு 7 தடவை தபா மர்வாபவில் சுற்றி மர்வாவுக்கு வெளியே உள்ள சலூனில் சுன்னத்தான முறையில் அவசியம் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும்.  பெண்கள் தலைமுடியின் முனையை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.  இதோடு உம்ரா முடிந்துவிட்டது.  வீட்டிற்குச் சென்று இஹ்ராம் களைந்து குளித்து சாதாரண ஆடைகளை அணியலாம் தவாபு செய்யும் போது முறிந்தால் ஒளு செய்துவிட்டுத் தான் தொடர வேண்டும்.  பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் தவாபை நிறுத்தி வெளியாகிவிட வேண்டும்.  ஆனால் சயீ செய்யும் போது ஓளு முறிந்தாலும் மாதவிடாய் வந்தாலும் சயீ தொடரலாம்.  பெருமானார் (ஸல்) அவர்கள் மொத்தம் மூன்று உம்ராக்களையும் ஒரு ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரி 7ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நபி வழியில் ஹஜ் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
அரபாவிலுள்ள குன்று ஜபலுர்ரஹ்மத் (மலை) 30 மீட்டர் உயரம்.  மதீனாவில் மஸ்ஜித் நபவியில்மிம்பருக்கு அருகில் தூண்கள் உள்ள இடத்திற்கு, “றவ்ளத்துஷ் ஷரீபா” (சுவனப் ப+ங்கா) என்று பெயர்.

மதீனா

மதீனா நகரம் ஜித்தவிலிருந்து 425கி.மீட்டரும், மக்காவிலிருந்து 497 கி.மீட்டரும் உள்ளது.  கடல் மட்டத்தை விட 597 மீட்டர் உயரத்தில் இருப்பதால் குளிர் காலத்தில் குளிர் அதிகமாகவும், கோடை காலத்தில் வெப்பம் அதிகமாகவும் இருக்கும்.  அதற்குத் தகுந்தாற் போல் ஆடைகள் எடுத்துச் செல்ல வேண்டும்.  குளிர் காலத்தில் செல்லும் போது காலுறை (சாக்ஸ்) எடுத்துச் செல்வது நல்லது.  மஸ்ஜித் நபவி ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளதால் உள்ளே காலை இரவு நேரங்களில் சாக்ஸ் அணிந்து குளிரைத் தடுக்கலாம்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் போது குறைந்தது ஆயிரம் ஸலவாத் ஓத வேண்டும்.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) மதீனா வாழ்க்கை பற்றிய வரலாறும் படிக்கலாம்.

ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் கட்டிசோறு சேண்ட்விச், எலுமிச்சை சாதம், தயிர்சாதம் போன்றவற்றைப் பழங்கள், மருந்துகளுடன் எடுத்துச் சென்றால், மக்கா-மதீனா வழிப்பாதையில் உணவுக்காக நிறுத்தும் இடத்தில் ஹோட்டல் உணவைவிட, நாம் தயாரித்து எடுத்துச் சென்ற உணவை அந்த உணவு விடுதிலேயே வைத்து உண்ண வசதியாக இருக்கும்.  கூடிய வரை டின்களில் விற்கப்படும் பழச்சாறு பருகாமல், பழங்களையோ அல்லது புதிதாக தயார் செய்து தரும் பழச்சாறு பருகுவது நல்லது.  பாலில்லாமல் தேநீர் அருந்துவதும் உடல் நலத்துக்கு நல்லது.  பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அத்தர், வெண்மையான ஆடைகள் விருப்பமானது என்பதால் நாமும் வெள்ளைநிற ஆடைகள், மதீனாவில் உடுத்தி, அத்தர் அதிகமாக உபயோகிக்க வேண்டும்.  பேரீச்சம் பழம் தஸ்பீஹ் மணிகள், அத்தர் ஆகியவைகளை மதீனாவில் தான் வாங்க வேண்டும்.  மஸ்ஜித் நபவியில் ஒவ்வொரு முறை தொழுதுவிட்டு வரும் போதும் மறக்காமல் ரவ்ளா ஷரீப் சென்று பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்), அபுபக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி) ஆகியோருக்கு ஸலாம் சொல்லி வரவேண்டும்.
பாபுஸ்ஸாம் வழியாக மஸ்ஜித் நபவி சென்று மிக்க உள்ளச்சத்துடனும், மன அமைதியுடனும், கம்பீரத்துடனும் 70 முறை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கப்ருமபாரக்கின் அருகாமையில் ஓதுவதே சாலச் சிறந்ததாகும்.  “சுவன ப+ங்கா” எனப்படும் இடத்திலும் தஹஜ்ஜுத் மேடையிலும் சுன்னத், நபில் தொழுவது சிறப்பு.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மஸ்ஜித் நபவியில் குர்ஆன் ஓதவேண்டும்.  தினமும் காலையில் பஜ்ரு தொழுதபிறகு மஸ்ஜித் நபவி அருகிலேயே உள்ள ஜன்னத்துல் பகீஃ சென்று அங்கு அடக்கமாகி இருக்கும் பெருமானார் (ஸல்) குடும்பத்தினர், சஹபாக்களையும் ஜியாரத் செய்து விட்டு வரவேண்டும்.  மதீனாவில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்.

உஹத்மலை

வியாழக்கிழமை சென்று அங்கு ஷஹீதான ஹம்ஜா(ரலி), அப்துல்லா இப்னு ஜஹ்ஷ்(ரலி), ஸஹ்லுப்னு கைஸ் (ரலி) போன்ற சஹாபிகளுக்கு ஜியாரத் செய்யவேண்டும். அங்கு மொத்தம் 64 அன்சாரி சஹாபிகளுக்கும், 6 முஹாஜிரீன்களும் அடக்கப் பட்டு;ள்ளார்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு பல் ஷஹீதான இடத்தையும் தெரிந்து கொண்டு அங்கும் சென்று வரலாம். தனியாக ஒரு நாள் அங்கு சென்று வந்தால் பொறுமையுடன் பார்த்து வரலாம்.

மஸ்ஜித் குபா

சனிக்கிழமை செல்வது சிறப்பாகும்.  “மஸ்ஜித் குபாவில்” தொழுவது உம்ரா செய்ததின் நன்மை ஆகும்.          – ஹதீஸ்

மஸ்ஜித் ஙமாமா

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு சுல்தான் ஹஸன் இப்னு முகம்முது சாலிஹ{வும் ஹிஜ்ரி 14ஆம் ஆண்டு துரக்கி சுல்தான் அப்துல் ஹமீத்கானும் புதுப்பித்தார்கள்.

மஸ்ஜித் கிப்லதைன்

பைதுல் முகத்தஸை நோக்கித் தொழுத முஸ்லீம்களை கஅபா திசை நோக்கித் தொழச் சொல்லி வஹீ வந்த பள்ளிவாசல்

கந்தக் அஹ்ஸாப் (அகழ்ப்போர்) நடந்த
இடத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள்

ஹிஜ்ரி 5ம் ஆண்டு துல்க அதாபிறை 8ல் அகழ்வெட்டும் வேலை ஆரம்பமாகியது.  20 நாட்களில் வேலை முடிந்தது.  கடுங்குளிர், பட்டினி, ஓய்வு இல்லாமை காரணமாக பெருமானார் (ஸல்) அவர்களுக்குச் சில நேரத் தொழுகைகள் களாவானது.
“கந்தக்” என்றால் அகழி என்று பொருள்.  “அஹ்லாப்” என்றால் “படைகள்” என்று பொருள் காபிர்கள் ஒன்றுபட்டு படைகளுடன் வந்தால் அஹ்ஸாப் போர் எனப் பெயர் வந்தது” இந்த போரில் முஸ்லிம்கள் ஆயிரம் பேரும், எதிர்ப்படையினர் பத்தாயிரம் பேர்களும் கலந்து கொண்டனர்.  சல்மான் பார்ஸி(ரலி) அவர்கள் சொன்ன யோசனையின் பேரில் அகழி வெட்டப்பட்டது.

மஸ்ஜித் அப+பக்கர் (ரலி) மஸ்ஜித்
அலி (ரலி) 7 கிணறுகள்
பெருமானார் (ஸல்)
அவர்களுக்கு சலாம் சொல்லும் முறை

“அஸ்ஸாத்து அஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹ்” என்று 70 முறை சொல்லவேண்டும்.  70 முறை ஓதப்பட வேண்டுவது தனிச்சிறப்பு யாதெனில் இந்த எண்ணிக்கையில் ஏற்றுக் கொள்ளப்படுதலின் விசேஷ சிறப்பு இருக்கிறது.  என்பதால் தான் திருக்குர்ஆனிலும் முனாபிக்குகள் பற்றிஅ ண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “நபியே! தாங்கள் அந்த முனாபிகளுக்காக 70 முறை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான்.
(சூரேதௌபா ஆயத்) 8: தாயகத்திலிருந்து புறப்படும் முன் உறவினர்கள், நண்பர்கள் பெருமானார், (ஸல்) அவர்களக்கு ஸலாம் சொல்லுமாறு வேண்டிக்கொண்டிருந்தால் அப்பெயர்களைச் சொல்லி ஸலாம் சொல்ல வேண்டும்.  பெயர்கள் நினைவில்லாவிட்டால். “அஸ்ஸலாது வஸ்ஸலாமு அலைக்க யாரசூலல்லாஹி” மிம்மன் அவ்ஸான வஸ்தவ்ஸானா பிஸ்மில்லாஹி அலைக்க

இதன் பொருள்
அல்லாஹ்வின் அருமைத் தூதரே!
சலாம்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்ட அனைவரின் பெயர்களையும் தாங்கள் அறிவீர்கள்.  ஆவர்களைப் பற்றிய விபரங்களைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள்! ஆவைகளை இப்போது ஒப்படைத்து விட்டோம்.  அன்பு கூர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்வீர்களாக!’ என்று அரபி தெரியாதவர்கள் தமிழிலேயே சொல்லலாம்.  பாபுஸ்ஸலாம் வழியாகச் சென்று, நபிகள் நாயகம் (ஸல்), அப+பக்கர் சித்தீக் (ரலி), உமர் (ரலி), ஆகியோருக்கு, சலாம் சொல்லியபின் கிப்லா திசை நோக்கி துஆ செய்த பிறகு பாபுஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஸலாம் சொல்லும் வகைகள்
1.
அஸ்ஸலாத்து அஸ்ஸலாமு அகை;க யாரசூலுல்லாஹ்
2.
அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யுவரஹ்…
3.
அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ்
4.
ஸல்லல்லாஹ{ அலைக்க யாரசூலுல்லாஹ். (ஏதாவது ஒன்றை 70 தடவைகள் சொல்ல வேண்டும்.
5.
அஸ்ஸலாமு அலைக்க யாரசூலுல்லாஹ், யாஹபீபுல்லாஹ் யாகைர கல்கில்லாஹ், யாசஃப் வதுலலலாஹ், யாஸய்யிதல் முர்சலீன், யாஇமாமல் முத்தகீன், யாஷபீஅல்முத்னிபீன் யாகாதமன் நபிய்யீன், அஸ்ஸலாமு அலைக்க வஅலா ஆலிக்க வஅஹ்லி பைத்திக வஅஸ்ஹாபிக அஜ்மஈன்.
தமிழில் “நபியே! உங்கள் மீதும், உங்களது கிளையார் குடும்பத்தார் மீதும், உங்களின் அருமை ஸஹபாக்கள் மீதும், அனைவர் மீதும் எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் ஸலாம் உரித்தாக்குக! யா அல்லாஹ்! எங்கள் பெருமானார் அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும், தந்தருள்வாயாக! மேலும் நீ பெருமானார் (ஸல்) அவர்களுக்கு வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தின் பால் மறுமையில் அனுப்புவாயாக!”

ஹஜ்
பிறை 8 (முதல் நாள்)

அதிகாலையில் குளித்து இஹ்ராம் துணி அணிந்து கஅபாவில் ஹஜ்ரே இஸ்மாயில் என்கிற (ஹதீம்) இடத்திலோ அல்லது கஅபாவில் ஏதாவது ஒரு இடத்திலோ, அங்கு இடம் கிடைக்காவி;ட்டால், தங்கி இருக்கும் இடத்திலோ, இரண்டு ரகஅத் தொழுது “ஹஜ்ஜை நாடி இஹ்ராம் கட்டியுள்ளேன்” அதற்குரிய செயல்களை எனக்கு இலேசாக்கித் தந்து, அவற்றை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நிய்யத் செய்த பின் ‘லப்பைக்க…’ என்ற தல்பியாவை மூன்று முறை சொல்ல வேண்டும்.
மக்காவிலேயே பஜ்ர் தொழுதபிறகு பேரூந்தில் மக்காவிலிருந்து புறப்பட்டு மினா சென்று, நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்க வேண்டும்.  மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா நாம் தங்கி இருக்கும் இடத்திலேயே ஜமாஅத்துடன் தொழ வேண்டும்.  அங்கேயே ஹஜ் தொடர்பான நூல்களையும் படிக்கச் சொல்லிக் கேட்பது, திக்ரு, செய்வது உலமாப் பெருமக்கள், பெரியோர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகிய அமல்களில் ஈடுபடவேண்டும்,

பிறை 9 (2 ஆம் நாள்)

மினாவில் பஜ்ர் தொழுதபின் (முஜ்தலிபா வழியாக முஜ்தலிபாவில் நிற்காமல்) அரபாத் செல்ல வேண்டும்.
“ஹஜ் என்றால் என்ன?” என்று நஜ்திலிருந்து வந்த ஒரு ஜமாஅத் பெருமானார் (ஸல்) அவர்களைக் கேட்ட போது” அரபாத்தில் தங்குவது தான் ஹஜ்” என்றார்கள்.  துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹ{வுக்கு முன்னதாக அரபாவுக்கு வந்து விடுபவர்களின் ஹஜ் நிறைவேறி விடும், என்று அறிவிப்பு கொடுக்கச் செய்தார்கள்.  அரபாவில் மஃரிபு நேரம் வரை இருந்து உம்மத்தின் மஃபிரத்துக்காக துஆ செய்தார்கள்.  அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும்.. “(இன்றைய நாளில்) உங்களுக்காக உங்கள் மீது என்னுடைய அருட்கொடைகளை (இன்று) முபமையாக்கித் தந்து விட்டேன்.”
-குர்ஆன் 5:4

என்ற புனித வசனம் அரபா நாளில் ஜும்ஆ நாள் மாலை அஸர் வேளைக்குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகையில் அமர்ந்திருந்த போது அருளப்பட்டது.  வஹீயின் சுமையைத் தாங்க முடியாமல் ஒட்டகம் நிற்க முடியாமல் உட்கார்ந்துவிட்டது.

தீனின் கடமைகள் முழுமையுடைய ஹஜ் காரணமாக அமைந்துவிட்டது. லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளை அரபாவில் நம்முடன் தங்கி இருக்கும் பெரியோர்களைப் பின்பற்றி ஜமாஅத்தாகத் தொழவேண்டும்.  அரபாவில் இருக்கும் போது ஆண்கள் குளிப்பது விரும்பத்தக்க செயலாகும்.

அங்கு ஓதவேண்டிய துஆக்கள்:
அரபாவில் ஓத வேண்டியவை.
1.    “குல்ஹ{வல்லாஹ{…” சூரா     1000 தடவை
2.    யாஹய்யு யாகைய+ம்         1000 தடவை
3.    லாஇலாஹ இல்லா அன்தகசுப்ஹானக இன்னி குன்து மினல்லாலிமீன்            1000 தடவை
4.    மூன்றாம் கலிமா        1000 தடவை
5.    4ம் கலிமா            1000 தடவை
செய்யுமாறும அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.  ஹனபி மத்ஹபின்பழ ஹாஜிகள் முஜ்தலிபாவில் அதிகாலை (ஸ{புஹ{ல் ஸாதிக்) கிழக்கு வெளுத்ததிலிருந்து கதிரவன் உதிக்கும் வரை தங்கி இருப்பது வாஜிபு கடமையாகும்.  புpறை 9ல் தங்குவது லைலத்துல் கத்ர் இரவு போன்று மிகச் சிறப்பானது.  பிறை 11,12,13 ஆகிய நாட்களில் மூன்று ஷைத்தான்களுக்கும் கற்கள் எறிய 63 கற்களும், பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் எரிய 7 கற்களும் ஆக மொத்தம் 70 கற்களை முஜ்தலிபாவில் எடுத்துக்கொள்ள வேண்டும் “முஜ்தலிபா” என்பதற்குப் பொருள் “இணைதல்” பாவா ஆதம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வா (அலை) அவர்களும் அறபாத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து, முஜ்தலிபாவில் தான் ஒன்று கூடினார்கள் என்று வரலாறு கூறுகிறது.

பிறை 10-3ம் நாள்
முஜ்தலிபாவில் பஜ்ர் தொழுதபிறகு தான் மினா செல்ல வேண்டும் மினாவந்தபிறகு

1.    “ஜம்ரதுல் அகபா என்ற பெரிய ஷைத்தானுக்கு 7 கற்கள் எறிய வேண்டும்.
2.    குர்பானி கொடுக்க வேண்டும்.
3.    தலைமுடி எடுத்து இஹ்ராம் களைய வேண்டும்.
4.    மக்காவிற்குச் சென்று தவாபுஜியாரத் செய்ய வேண்டும்.

பிறை 10ல் பெரிய ஷைத்தானுக்கு, இஷ்ராக் தொழுகைக்குப் பிறகு
“பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர்”, என்று சொல்லி முதல் கல் வீசிய பிறகு, தல்பியா ஓதுவதை நிறுத்திவிட வேண்டும்.

ஷைத்தானுக்குக் கல் எறியும் போது ஓதும் துஆ
“ஷைத்தானை விரட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், அவனின் திருநாமம் கொண்டு கல் எறிகிறேன். யா அல்லாஹ் எனது ஹஜ்ஜை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாயும், எனது பாவங்களை மன்னிக்கப்பட்டதாகவும் ஆக்குவாயாக! ஆமீன்!” நீண்ட துஆ ஓத முடியாது போனால் “பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறினால் போதும்.

ஷைத்தான்களின் பெயர்கள்

1.    ஐம்ரதுல் ஊலா
2.    ஐம்ரதுல் உஸ்தா
3.    ஐம்ரதுல் அகபாஹ்

பிறை 11-(4ம் நாள்)

1.    கதிரவன் நடு உச்சியைத் தாண்டிய பிறகு (ஜலால்) முதல் ஷைத்தானில் கல் எறிய ஆரம்பித்து வரிசையாகச் செல்ல வேண்டும்.  முதலில் பெரிய ஷைத்தானுக்கு எறிந்தால் தண்டம் கொடுக்க வேண்டும்.  திரும்பவும் எறிய வேண்டும்.

துல்ஹாஜ் 12 – (5 ம் நாள்)

பிறை 11ல் எறிந்தது போல வரிசையாக மூன்று ஷைத்தான்களுக்கும் கல் எறிய வேண்டும்.  பெரும்பாலோர் பிறை 12ல் கல் எறிந்த பிறகு கதிரவன் மறையுமுன் மக்காவிற்குச் சென்று விடுவார்கள்.  ஆனால் அடுத்த நாள் பிறை 13ல் தங்கிச் செல்வதே சுன்னத்தான நடைமுறை.

பிறை 13 – (6 ம் நாள்)

முஅல்லிமிடம் ஒரு குழுவாகச் சென்று “பிறை 13ல் தங்கிச் செல்ல விரும்புகிறோம்” என்று சொன்னால் சில கூடாரங்களைப் பிரிக்காமல், அங்கு தங்க ஏற்பாடு செய்வார்.  இல்லாவிட்டால் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மினா பள்ளிவாசலில் வசதியாகத் தங்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறை 11,12,13ல் ஜவால் நேரத்திற்குப் பிறகு தான் கல்லெறிந்தார்கள் அவர்கள் மினாவில் தங்கி இருந்த போது தான்.

“இதாஹாஅ நஸ்ருல்லாஹி” குர்ஆன் சூரா அருளப்பட்டது.
பிறை 13ல் மினாவில் தங்கி ஜவால் நேரத்துக்குபின் கல்லெறிந்த பிறகு தான் மக்கா புறப்பட்டார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணத்தில் குர்பானி கொடுத்தபின் மொட்டை அடித்துக் கொண்டது போல நாமும் செய்து, அவர்களைப் போலவே நாமும் 70 கற்களை ஷைத்தான்களுக்கு வீசி, அவர்கள் கேட்டதுபோல நாமும் துஆக்கள் தொழுகைகள், அமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட பரிப+ரண ஹஜ்ஜை நிறைவேற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்! ஹஜ்முபாரக்!

மதீனா

நபிகள் நாயகம் (ஸல்) மஸ்ஜித் நபவியில் பகல் நேரத் தொழுகையான லுஹர் தொழுகையைத்தான் முதன் முதலில் தொழுதார்கள்.

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் பெருநாள் தொழுகை நடந்தது.

“மதீனா” என்றால் “பட்டணம்” என்று பொருள். “மதீனத்துந்நபி” என்றால் நபியின் பட்டணம்.

“வெள்ளரியின் களிம்பை உலை அகற்றுவது போல மதீனா, நிச்சயமாக மனிதர்களின் பாவத்தை அகற்றிவிடும்”

மதீனாவின் தூசி தொழுநோய் முதலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது.  “நபிமொழி
கைபர் போருக்குப் பிறகே மஸ்ஜித் நபவியில் மிம்பர் அமைக்கப்பட்டது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு
வருகைதந்தது        கி.பி. 622
பத்ர் போர்        கி.பி. 624
உஹத் போர்        கி.பி. 625

கி.பி.1926ம் ஆண்டு மதீனாவின் மக்கட் தொகை 50,000

1978ல்            ஒரு லட்சம்,
1988ல்            ஏழு லட்சம்

மதீனாவில் தங்கி மஸ்ஜித் நபவியில் 40 வேளைத் தொழுகைகளை நிறைவேற்றுவது சிறப்பானது.

அரபாத்திலுள்ள பள்ளிவாசலின் பெயர்: மஸ்ஜித் நமிறா, அரபாத்திலுள்ள குன்றின் பெயர்: ஜபலுர்ரஹ்மத். முஜதலிபாவில் உள்ள பள்ளிவாசல் பெயர் : மஷ் அருல்ஹராம் மினாவில் உள்ள பள்ளிவாசலின் பெயர் : மஸ்ஜித் கைப் மக்காவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் மு அல்லா. மதீனாவிலுள்ள அடக்கஸ்தலத்தின் பெயர் : ஜன்னத்துல் பகீஃ

ஹிஜ்ரத் பயணத்தில் பெருமானார் (ஸல்) அவர்களும் அப+பக்கர் சித்திக் (ரலி) அவர்களும் தங்கிய இடம் தௌர் குகை. “ஓதுவீராக” என்ற முதல் இறைவசனம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இடம்: ஹீராமலைக்குகை.

ஹஜ்

ஒருவர் ஒரு தடைவ ஹஜ் செய்தால் அவர் இறைவனுக்கு செலுத்த வேண்டிய கடனைச் செய்தவராகிறார்.  இரண்டு தடவை ஹஜ் நிறைவேற்றினால் இறைவனை தமக்கு கடனாளியாக்குகிறார்.  மூன்று தடவை ஹஜ் முடித்தால் நகர நெருப்பிலிருந்து தம்மை விடுதலையாக்குகிறார்.

ஹஜ்ஜும், உம்ராவும் அதிகமாக நிறைவேற்றுவது ஏழ்மையைத் தடுத்து விடுகிறது.

ஹஜ் செய்யுங்கள் செல்வந்தராவீர்கள்.  பிரயாணம் செய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்;;: நபிகள் நாயகம் (ஸல்)

நயவஞ்சகர்கள் ஜம்ஜம் நீரை வயிறு நிரம்பக் குடிக்கமாட்டார்கள். நபிமொழி.

மருத்துவக் குறிப்புகள்

1.    ஹஜ் பயணத்தில் மூக்கில் இரத்தம் வந்தால் இரண்டு சொட்டு எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டால், அல்லாஹ் அருளால் உடனே இரத்தம் நின்றுவிடும்.
2.    பாலில்லாத தேநீர் பருகி வந்தால் குளிர், வெப்பத்தைத் தாக்கிப் பிடிக்கவும், வயிற்றுக் கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.  அரபிகள் அப்பழத்தான் பருகுவார்கள்.
3.    பழச்சாறு, (தேன்) ஐம் ஐம் அடிக்கடி பருகவேண்டும்.
4.    வெப்பமாக இருந்தால் எலுமிச்சைப்பழச் சாரில் உப்பு சேர்த்துப் பருகலாம்.
5.    ஜலதோஷம் (சளி) பிடிக்காமலிருக்க ஏர்கண்டிஷன் உள்ள இடங்களில் காலுறை (சாக்ஸ்) அணிவது நல்லது.
6.    சைவ வணவு, காரம், எண்ணெய் இல்லாத உணவு, வணக்கங்களில் ஈடுபட வசதியாக இருக்கும்.
7.    இரவில் விரைவில் தூங்கினால் தான் தஹஜ்ஜுத் குறித்த நேரத்தல் தவறாது தொழலாம்.
8.    வெப்பத்தாக்கு (சன்ஸ்டிரோக்) குளிர்காலத்தில் இருக்காது என்றாலும் பகல் 11 லிருந்து 2 மணி வரை வெயிலில் வெளியில் சுற்றாமல் இருப்பது நல்லது.  அவசியம் ஏற்பட்டால் தலையில் வெள்ளைநிற ஹஜ் துண்டு போட்டு வெள்ளை நிறக் குடை பிடித்துச் செல்ல வேண்டும்.  தேவையான ஓய்வு, உறக்கம் அவசியம்.

எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள்

1.    2½மீட்டர் இஹ்ராம் துணி.
2.    முஸல்லா, மிஸ்வாக், தஸ்பீஹ்
3.    மருந்துப் பொருள்கள்
4.    உணவுத்தட்டு 2, கிண்ணம் 2, குவளை 2
5.    டைரி
6.    சின்ன அலாரம் (கடிகாரம்
7.    பெட்ஷீட், போர்வை, காலுறை ஏர்பில்லோ, ஹவாய் செருப்பு
8.    மதீனாவில் உபயோகிக்க வெள்ளைநிறத் துணிகள்
9.    அங்குள்ள அன்பர்களுக்கு அன்பளிப்பு பொருள்கள்.

மற்ற குறிப்புகள்

மக்காவில் துஆ ஒப்புக் கொள்ளப்படும் இடங்கள்.
1.    தவாபிலும், தவாப் சுற்றும் இடத்திலும்
2.    முல்தஜிம்
3.    மீஜாபுர் ரஹ்மத்
4.    கஅபாவின் உள்ளே
5.    ஜம்ஜம் கிணற்றருகே ஜம்ஜம் அருந்தியபின்
6.    மகாமே இப்ராஹீமிற்கு அருகே
7.    ஸபா, மர்பாவில்
8.    ஸயீ செய்யுமிடங்களில்
9.    அரபாவில்
10.    முஜ்தலிபாவில்
11.    மினாவில் இரண்டு ஷைத்தான்களுக்குக் கல் எறிந்த பிறகு ஜம்ரதுல் அகபா நீங்கலாக.
12.    முதன் முதலாக கஅபாவைக் காணும் போது
13.    (ஹத்தீம் ஹஜ்ரே) இஸ்மாயில் உள்ளே.
14.    ஹஜ்ருல் அஸ்வத் ருக்னுல் யமானிக்கிடையே

பெருமானார் ஹஜ் பயணத்தில்

ஹஜ் பயணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபாவிலிருந்து முத்தலிபாவுக்கு ஒட்டகத்தில் பயணம் செய்த போது உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களின் பின்னால் ஒட்டகத்தில் அமர்ந்திருந்தார்கள்.  முஜ்தலிபாவி விருந்து மினாவுக்குச் செல்லும் போது பெருமானாருக்குப் பின்னால் ஒட்டகத்தில் ஹஜ்ரத் பசல்இப்னு அப்பாஸ் (ரலி) உட்கார்ந்திருந்தார்கள்.

பிறை – 10 ல்

ஹஜ்ரத் மஃமர் (ரலி) அல்லது ஹஜ்ரத் கர்ராஷ் (ரலி) அவர்களை அழைத்துத் தலைமுடி சிரைத்துக் கொண்டார்கள்.

நுழைவு வாசலிலிருந்து
குறிப்பிடப்பட்டுள்ள
பேயர்களின் விபரங்கள்

1.    ஹஜ்ரத் அப்பாஸ் (ரலி).  ஈவர்கள் ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களுடைய சிறிய தந்தையாகும்.
2.    ஃபாத்திமாக நாயகி (ரலி).  இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களது மகளாகும்.
3.    ஹஸன் முஜ்தபா (ரலி) இவர்கள் ஹஜ்ரத் அலியின் புதல்வர்.
4.    ஜைனுல் ஆபிதீன் (ரலி)
5.    முஹம்மது பாகீர் (ரலி)
6.    ஜஃபர் சாதிக் (ரலி)
இம்மூவரும் இஸ்லாத்தின் நான்காம் ஜனாதிபதி ஹஜ்ரத் அலிய்யுப்ன அபீதாலிப் (ரலி) அவர்களது பேரர்களாகும்.
7.    உம்மூல் பனீன் (ரலி)
8.    ஆத்திகா (ரலி)
9.    ஸஃபிய்யா (ரலி) ஆகிய இம்மூவரும் நாயகம் (ஸல்) அவர்களுடைய மாமிகள் (தகப்பனாருடன் பிறந்த சகோதரிகள்)
10.    ஜைனப் (ரலி)
11.    உம்முகுல்ஸ{ம் (ரலி)
12.    ருக்யா (ரலி) இம்மூவரும் பெருமானார் (ஸல்) அவர்களது புதல்விகளாகும்.
13.    அப்துல்லாஹ் பின் ஜஃபர் தய்யார் (ரலி) அலிரலி அவர்களின் சகோதரர் மகன்
14.    அகீல் இப்னு அபீதாலிப் (ரலி) அலி-ரலி அவர்களின் சகோதரர்.
15.    மாலிக் (ரலி) பிரபல “ஹாதீஸ் அறிவிப்பாளர் மாலிக் இப்னு அவ்ஸ் என்பவராகும்.
16.    நாபீஃ (ரலி) இவர்களும் “ஹதீஸ் அறிவிப்பாளராகும்”.
17.    இப்ராஹ{ம், இவர்கள் நாயகம் (ஸல்) அவர்களுடைய புதல்வராகும்.  பிறந்து 15-வது மாதத்திலேயே வபாத்தாகிவிட்டார்கள்.
18.    உஹது ஸஹ{துகள்.  மதீனாவிலேயே உள்ள உஹது மலை அடிவாரத்தில் நடந்த யுத்தத்தில் உயிர் நீத்த தியாகிகளில் சிலர் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
19.    இஸ்மாயில்
20.    ஹலீமா சஃதிய்யா (ரலி) இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இரண்டாண்டுகள் தாய்ப்பாலூட்டிய செவிலித்தாயாகும்.
21.    ஃபாத்திமா பின்த்தி அஸது (ரலி)
22.    உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) இவர்கள் இஸ்லாத்தின் 3-ம் ஜனாதிபதியாகும் நபி (ஸல்) அவர்களது இருமகள்களை மணந்து துன்நூரைன் எனப் பெயர் பெற்றவர்கள்.
பின்வரும் ஒன்பது பெண்மணிககும் ரசூல் (ஸல்) அவர்களது மனைவிகளாகும்.  உம்மஹாத்துல் முஃமினீன் என அழைக்கப்படுவார்கள்.
23.    ஜுவைரிய்யா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
24.    ஸவ்தா (ரலி) பின்த்தி ஸம்ஆ
25.    ஆயிஷா (ரலி) பின்;த்தி அபீபக்ரு
26.    மைமூனா (ரலி) பின்த்தில் ஹாரிஸ்
27.    ஹஃப்பசா (ரலி) பின்த்தி உமர்
28.    உம்முஹபீபா (ரலி) பின்த்தி அபீஸீப்யான்
29.    உம்முஸலமா (ரலி)
30.    ஸஃபிய்யா (ரலி) பின்த்தி ஹ{யய்யி
31.    ஜைனப் (ரலி) பின்த்

தொகுப்பு:
நீடூர் அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்
வழக்கறிஞர்.

பெற்றோர்களுக்கு பணிவிடை


பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்

(رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ )
அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4628)

( الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ)
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்)

( عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا)
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

(ألك والدان؟ قلت : نعم قال الزمهما فإن الجنة تحت أرجلهما)
உனக்கு பெற்றோர்கள் இருக்கின்றார்களா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், ஆம் என்றார். அப்படியானால் அவர்கள் இருவருக்கும் முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவ்விருவரின் கால்களுக்கு கீழே உள்ளது என்று கூறியதாக தபரானீயின் அறிவிப்பவில் வந்துள்ளது.

( رِضَى الرَّبِّ فِي رِضَى الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ )
அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1821, ஹாகிம், இப்னுஹிப்பான்)

(دخلت الجنة فسمعت فيها قراءة فقلت من هذا؟ قالوا : حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر كذلكم البر )
சொர்க்கத்தில் நுழைந்த போது அங்கே (குர்ஆன்) ஓதும் சப்தத்தைக் கேட்ட நான், இவர் யார்? என வினவினேன். ஹாரிஸா இப்னு நுஃமான் என்று -மலக்குகள்- பதிலளித்தனர்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுடைய நல்லறங்களுக்கு இவ்வாறுதான் கூலி கிடைக்கும்! உங்களுடைய நல்லறங்களுக்கு இவ்வாறுதான் கூலி கிடைக்கும்! என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : ஹாகிம்)

( عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ الْبِرُّ كَذَلِكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ )
தூங்கிக் கொண்டிருந்த நான் -கனவில்- என்னை சொர்க்கத்தில் இருப்பதாகக் கண்டேன். அங்கு ஒருவர் ஓதிக் கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்ற நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஹாரிஸா இப்னு நுஃமான் என்று பதிலளித்தார்கள்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! தாயிக்குப் பணிவிடை செய்யும் மனிதர்களிலேயே அவர் மிகச் சிறந்த பணிவிடையாளராகத் திகழ்ந்தார் என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, அஹ்மத் : 24172)

அல்லாஹ்விடத்தில் தந்தைக்காக பிள்ளை பாவமன்னிப்புக் கோரவேண்டும்