தொகுப்பு

Archive for the ‘இஸ்லாம்’ Category

மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது. – அதிரை ஏ.எம்.ஃபாரூக்


 
கடந்த கட்டுரையில் இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் வாசகமாகிய ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், என்ற வாசகத்தை மொழிந்து விட்டு அதற்கடுத்து எதிராளியை மன்னித்து விடுவோம் என்ற நல்லமுடிவை மேற்கொண்டு விட்டு இறுதியாக அவருக்கு ஸலாம் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்ற மூன்று உயர் பண்புகளை பின் பற்றினால் அவரிடமிருந்தும் அவருடைய மேற்காணும் நற்செயல்கள் மூலம் எதிராளியிடமிருந்தும் கோபம் முற்றாக விலகி விடுவதுடன் ஷைத்தானின் தீய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு விடும் என்பதைப்  பார்த்தோம்.
 
அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளக் காரணத்தால் தான் எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிந்து சூழ்நிலைக்கொப்ப காரியங்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதற்காக அருள்மறைக் குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான்.
 
 
அவற்றில் ஒன்று தான் கோபம் ஏற்பட்டு இரு தரப்பார் சச்சரவில் ஈடுபடும்பொழுது காட்டுக் கூச்சல் இடுவதாகும். ( இதை இதற்கு முந்தைய நான்காவது தொடரில் சுட்டிக்காட்டினோம் அதன் சுருக்கம்.) …’அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே ஏன்?’ என்று கேட்டு விட்டு ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது” என்று கூறினார்கள்… புகாரி 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.
 
குரல் வளையிலிருந்து அதிகமான சப்தம் வெளிப்படுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது அதை அஞ்ஞானப் பழக்கம் என்று இடித்துரைக்கிறதென்றால் கோபத்தின் வாயிலாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையும் ஒருவருக்கொருவர் காறி உமிழ்ந்து கொள்வதையும் சட்டையைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கு நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்குமா ? சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனால் தான் கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்.
 
அருள்மறைக் குர்ஆனின் அழகிய உபதேசங்களைப் பின்பற்றி அருள்மறைக் குர்ஆனாகவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களிடத்தில் ஒருவர் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டபொழுது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வலியுருத்திக் கூறிய  சம்பவமும் உண்டு.
 
 
 
இதே தாய் தந்தை, மூத்த சகோதர, சகோதரி, மூத்த வயதையுடைய தூரத்து உறவினர்கள், மார்க்க அறிஞர்கள் நம்மிடம் கோபம் கொண்டால் அல்லது கோபம் எற்படுவது போன்று நடந்து கொண்டால் அவர்களின் விஷயத்தில் மன்னித்து விட்டேன் என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது அவர்களை நாம் மன்னிக்க முடியாது அவர்களே நம்மை மன்னிக்கத் தகுதியானவர்கள்.
 
இது போன்றத் தருணங்களில் நாமே நம்மை கட்டுப் படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் கோபத்தை மென்று விழுங்குவதுடன் இச்சம்பவத்திற்காக அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்களா ? இப்பிரச்சனை முடிந்து விடாதா ? என்ற எண்ணமே உதயமாக வேண்டும் இந்த நற்சிந்தனையே முன்னதை விட உயர்வானதாகும் அத்துடன் அங்கிருந்து இடம் பெயர்ந்து தனி இடத்தில் போய் சற்று அமர்ந்து விட வேண்டும்.
 
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு ஒரு செய்தியை சொல்லி விட்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்த அவர்களின் ஆருயிர் தோழர்கள் அதை சிறிதளவும் மாற்றமில்லாமல் பின்பற்றி வந்தார்கள். அவர்களின் கூற்று நடைமுறைக்கேற்றது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இம்மை, மறுமை நற்பேருகளை தேடிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.
 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய செய்தி அறிந்து அங்குக் குழுமி இருந்த மக்களிடம் அண்ணல் அவர்கள் இறக்க வில்லை என்றும் இறந்து விட்டதாகக் கூறியவர்களிடம் கடும் கோபம் கொண்டும் பேசிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறிய முதல் வார்த்தை நீங்கள் முதலில் உட்காருங்கள் என்பது தான் அதற்கு அவர்கள் மறுக்கவே மீண்டும், மீண்டும் உட்காருங்கள் என்றுக் கூறி விட்டே அண்ணல் அவர்கள் இறந்து விட்டார்களா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தெளிவுப் படுத்தினார்கள் இதில் கடும் கோபத்தில் இருந்த உமர் (ரலி) அவர்களும் தெளிவு பெற்றார்கள்.
 
(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூபக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர்(ரலி) ‘உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்” (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூபக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறிய உபதேசத்தை உள்ளத்தில் ஏற்றி வைத்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடாமல் அண்ணல் அவர்களின் உபதேசததைக் கூறி அமரச் சொல்லி விட்டு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறி உமர்(ரலி) அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு சிந்திக்கத் தூண்டினார்கள்.
 
 
 
 
அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

தராவீஹ் துஆ – TARAWEEH DUA


தராவீஹ் தொழுகைக்கு பிறகு ஓத வேண்டிய துஆ

tarawih_dua_Arabi.jpg

tarawih_dua_Tamil.jpg

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ  اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ 

 

வெந்தயம் – நபி மருத்துவம்


வெந்தயம்-01

வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக  ஹதீஸ்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

 வெந்தயம் ஒரு மாமருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள்.

 இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் ஒன்றாகும். பொதுவாக சமையல் பொருளாக அனைவரின் பழக்கத்திலிருக்கும் வெந்தயத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

 நம் நாட்டில் அனைத்துப் பாகங்களிலும் வெந்தயச் செடியைப் பயிரிடுவார்கள். இதன் இலைகளைக் கீரையாகக் சமையலில் பயன்படுத்துவார்கள்.மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தயச் செடியில் பூக்கள் பூத்தபிறகு சுமார் இரண்டு செண்டி மீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும். இதைத்தான் வெந்தய விதைகள் என்று கூறுவார்கள்.

மருத்துவ விஞ்ஞானிகள் வெந்தயத்தை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மீன் எண்ணெய்க்கு சமமாக எண்ணெய்ச் சத்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பாஸ்பேட், லெசித்தின் மற்றும் நியூக்லோ அல்பூமிக் ஆகியவைவெந்தயம் அதிகளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே ஊட்டச்சத்துக்காக மீன் எண்ணெய்க்கு மாற்றாக வெந்தயத்தைப் பயன்படுத்தலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நரம்புத் தளர்ச்சி, நாள்பட்ட வியாதிகளுக்குப் பிறகு ஏற்படும் பலவீனம், நரம்பு வலி, தொண்டை வலி, கழலைக் கட்டிகள், வீக்கங்கள், மார்புச் சளி, நிமோனியா ஆகியவற்றுக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தலாம்.

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு 3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம். வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும். 6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

ஹைதராபாத்தில் ராஷ்டிரிய போசன் அனுசந்தான் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகள் சர்க்கரை வியாதியைப் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இருதய நோயாளிகளுக்கும் தினசரி 20 கிராம் வெந்தயத்தை அரைத்து 10 நாட்கள் கொடுக்கப்பட்டது. இதன் பலனாக இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் குறைந்திருப்பதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படவில்லை என்றும், தினசரி 20 கிராம் முதல் 100 கிராம்வரை தேவைக்கேற்றபடி சாப்பிடலாம் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்க்கரை வியாதியைக் குணமாக்க சில யுனானி வைத்தியர்கள் வெந்தயத்தை மட்டும் தனியாகப் பயன்படுத்துவார்கள். பலர் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வெந்தயம் அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவார்கள். கிராமத்தில் சில யுனானி வைத்தியர்கள் பாகற்காய், நாகப்பழக் கொட்டை, வேப்பிலை, பிரிஞ்சி இலை, வெந்தயம் ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

டாக்டர் காலித் கஜனவி என்பவர் கருஞ்சீரகம் 12 கிராம், காசினி விதை 6 கிராம், வெந்தய விதை 6 கிராம் அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை தருகின்றார். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் அவர் கூறுகின்றார். நம் நாட்டில்; வெந்தயத்தை மூலப் பொருளாக கொண்ட பல யுனானி மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன.

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும் வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்துஇ 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோஃமோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள் அஜீரணம் போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

 வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில் வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும் பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில் வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால் சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும். மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு வயிற்றுப்புண் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

  1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
  2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
  3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
  4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
  5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
  6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
  7. வெந்தயம் கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
  8. வெந்தயம் கடுகு, பெருங்காயம் கறிமஞ்சள் சமமாக எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பாட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி  பொருமல்  ஈரல்  வீக்கம் குறையும்.
  9. வெந்தயம் வாதுமைப் பருப்பு கசகசா உடைத்த கோதுமை, நெய், பால் , சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும் வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
  10. வெந்தயத்தை சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டால் கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
  11. வெந்தயத்தையும் அரைத்து தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

12.பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

13.ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

14.வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல்  தணிந்து ஆறும்.

15.வெந்தையப்பொடியை ஒரு தேக்கரண்டியாக காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

16.வெந்தயத்துடன் சமன் சீமை அத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.

17.இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து  அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.

18.தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.

19.முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

20.முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

 வெந்தயக்கீரை.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும் உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஇ எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.

வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும் சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு ,கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

பிரிஸ்பன்: வெந்தயம் ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய் மிளகாய் பொடி மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம். சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு. வயிற்று புண். வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25 – 52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவு செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது.

வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள்இ ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு.

பிரிவுகள்:நபி மருத்துவம் - வெந்தயம், வெந்தயம் - நபி மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

காலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க


Hadith_Bismilla1

திடீர் சோதனைகள் அணுகாதிருக்க

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். யாரேனும் ஒருவர்

بِسْـمِ اللهِ الَّذِيْ لاَ يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْءٌ فِي الْأًرْضِ وَلاَ فِي السَّمـَاءِ وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ

பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்.

“யாருடைய பெயர் (கூறுவதால்) வானம், பூமியிலுள்ளவை எந்தப் பொருளும் இடையூறு இழைக்க முடியாதோ அந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன். அவன் யாவற்றையும் கேட்பவன், அறிபவன்.”

என்று மாலையில் மூன்று முறை கூறினால் அவரைக் காலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. இவ்வாறே காலையில் கூறினால் அவரை மாலை வரை திடீர் சோதனைகள் அணுகாது. நூல்:- அபூதாவூத் 5090

وعنْ عُثْمَانَ بْنِ عَفَانَ رضيَ اللَّه عنهُ قالَ : قالَ رَسولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « مَا مِنْ عَبْدٍ يَقُولُ في صَبَاحِ كلِّ يَوْمٍ ومَسَاءٍ كلِّ لَيْلَةٍ : بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَع اسْمِهِ شيء في الأرضِ ولا في السماءِ وَهُوَ السَّمِيعُ الْعلِيمُ ، ثلاثَ مَرَّاتٍ ، إِلاَّ لَمْ يَضُرَّهُ شَيءٌ » رواه أبو داود والتِّرمذي

தொழுகையின் சிறப்புக்கள்


இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும்.

Salat_Positions_and_Prayers

அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடை களுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும்.

இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும் நோயாளியாக இருக்கும் போதும் கூட தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.

தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள். முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு தொழுகைதான். தொழுகை மானக்கேடான, பாவமான காரியங்களை விட்டும் மனிதனைத் தடுக்கின்றது. ஒரு தொழுகை மற்றொரு தொழுகைக்கு மத்தியிலுள்ள சிறிய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. மறுமையில் தொழுகையைப் பற்றித்தான் முதலாவதாக விசாரிக்கப்படும். தொழுகையை பேணித் தொழுதவருக்கு அது மறுமையில் பிரகாசமாகவும் ஒளியாகவும் வரும். தொழுகையை பேணித் தொழாதவன் மறுமையில் அல்லாஹ்வின் எதிரிகளான ஃபிர்அவ்ன், ஹாமான், உபை பின் கலப் ஆகியோருடன் இருப்பான். தொழுகையை முறையாகப் பேணியவர்கள் நிச்சயமாக ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார்கள். மனஅமைதியை பெற்று விட்டார்கள்.

தொழுகையைப் பற்றி அல்குர்ஆன் மற்றும் ஹதீதுகளில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2,9

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி நடங்கள்   அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 6:72

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன் 7:170

‘நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:14
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை’. அல்குர்ஆன் 74:42,43

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக.இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக) நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. அல்குர்ஆன் 17:78

உங்கள் குழந்தைகள் ஏழு வயதை எய்திவிட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்) அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு. நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு, அம்ருஇப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) நூல் : அஹ்மத்

சிறந்த அமல்: அமல்களில் சிறந்தது எது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பாளர்: உம்முஃபர்வா (ரழியல்லாஹு அன்ஹு) நூல்கள் : திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்.

பஜ்ரு, அஸர் தொழுகையின் சிறப்புகள்: (பஜ்ரு தொழுகையை) சூரியன் உதிப்பதற்கு முன்பும் (அஸர் தொழுகையை) சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதவர் நிச்சயம் நரகில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

கூட்டுத் தொழுகையின் சிறப்பு: ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அல்லாஹு) நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்.’ (ஸஹீஹுல் புகாரி)

தொழுகையை விட்டவனின் நிலை: நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: புரைதா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்: திர்மிதி, அபுதாவூத், அஹமத், இப்னுமாஜா

இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன் மீது பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜமாஅத்தும், இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றனர். அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள்:புகாரி, முஅத்தா, அபூதாவூத், திர்மித், நஸயீ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும், உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார். அறிவிப்பாளர் : அபூ{ஹரைரா (ரழியல்லாஹு அல்லாஹு) நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், ‘இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!’ என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

‘எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.’ பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!’ என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: ‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!’ என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரை விட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தொடர்புடைய ஆக்கங்கள்

பிரிவுகள்:கட்டுரைகள், தொழுகை குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இரு பலிகளில் தப்பிய திருநபி – மு.அ. அபுல் அமீன் நாகூர்


இறுதி தூதராய் இறையருள் பெற்று இகத்தைத் திருத்திய திருநபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளே எங்கும் கொண்டாடப்படும் மீலாதுநபி.

சிறப்பிற்குரிய நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்கு முன் அவர்களின் பாரம்பரியத்தில் முன்னோர் இருவர் பலி இடப்படுவதிலிருந்து தப்பினர். இதனையே, “”நான் இரு பலிகளின் புதல்வன்” என்று புகன்றார்கள் பூமான் நபி (ஸல்) அவர்கள்.

இப்ராஹிம் நபி இறைவன் கட்டளைப்படி மகன் இஸ்மாயிலைப் பலியிட முயன்ற பொழுது அல்லாஹ் ஆட்டை அனுப்பி பலியிட செய்தார். இஸ்மாயில் நபி காப்பாற்றப்பட்டார். அந்த நபி வழி வாரிசான அப்துல் முத்தலிப் மக்காவில் வாழ்ந்த செல்வர். இவரே மக்காவில்  “ஜம்ஜம்’ கிணற்றைத் தோண்ட கனவு கண்டு கிணறு இருந்த இடத்தைத் திடமாய் அறிந்து கிணறு தோண்டியபொழுது வேண்டியபடி அவருக்குப் பத்துக்கு மேல் ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

அக்காலத்தில் பெண் குழந்தைகளை வெறுத்து ஆண் குழந்தைகளை அதிகம் பெற்ற அரபியர், ஆண் குழந்தைகள் வளர்ந்து வாலிபர்களாகியபின் அவர்களில் ஒருவரை அல்லது குறிப்பிட்ட ஒரு மகனை அவர்கள் வணங்கும் விக்கிரங்களுக்குப் பலியிடுவர். இவ்வழக்கப்படி அப்துல் முத்தலிபின் ஆண் மக்கள் வாலிபர்களான உடன் மக்களின் ஒப்புதலோடு பிள்ளைகளின் பெயர்களை எழுதி சீட்டு குலுக்கி எடுத்ததில் அப்துல்லாஹ் என்ற பெயர் வந்தது. அழகிய அப்துல்லாஹ்வைப் பலியிட குடும்பத்தினரும் விரும்பவில்லை. எதிர்ப்பு ஏற்பட்டது. பின்னர் அப்துல்லாஹ்விற்குப் பதில் ஒட்டகங்களைப் பலியிடுவது என்றும் ஏகோபித்து முடிவு செய்தனர். ஒட்டகங்களின் எண்ணிக்கையை ஒரு சீட்டிலும் அப்துல்லாஹ்வின் பெயரை மற்றோரு சீட்டிலும் எழுதி குலுக்கினர். ஒருநூறு ஒட்டகங்கள் என்ற சீட்டு எடுக்கப்பட்டது. ஒருநூறு ஒட்டகங்கள் பலியிடப்பட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பிழைத்தார். இப்படி இரு பலிகளிலிருந்து தப்பியவர்கள் திருநபி (ஸல்) அவர்கள்.

இறைமறை அருளப்பெற்று இறைதூதை எடுத்துரைத்தபொழுது ஏக இறை கொள்கையை ஏற்காத எதிரிகள் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் கொன்று பலியிட செய்த முயற்சிகள் முன்னோன் அல்லாஹ்வால் முறியடிக்கப்பட்டன.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தலையை கொய்து கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிப்பதாக அபூஜஹல் அறிவித்தான். முப்பத்தி மூன்று வயது முரட்டு மல்லன் உமர் வாளேந்தி வள்ளல் நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டி கொண்டு வர புறப்பட்டான். அவனின் தங்கை குர் ஆன் ஓதுவதைக் கேட்டு கேண்மை நபி (ஸல்) அவர்களின் தலையை வெட்டும் வேகம் நீங்கி விவேகத்துடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். ஏக இறைவன் அல்லாஹ் ஏந்தல் நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றினான்.

நபித்துவம் பெற்ற பதிமூன்றாம் ஆண்டு குறைஷி வாலிபர்கள் உருவிய வாளுடன் உறங்காது உத்தம நபி (ஸல்) அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு வெளியில் வரும் வள்ளல் நபி (ஸல்) அவர்களைக் கொல்ல ஆயத்தமாய் நின்றனர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் யாஸீன் அத்தியாயத்தின் முதல் ஒன்பது வசனங்களை ஓதி ஒரு பிடி மண்ணை எடுத்து வீசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களை அழைத்து கொண்டு மதீனா சென்று மாபெரும் இஸ்லாமிய அரசை நிறுவி உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

ஸப்வான் காட்டிய பொருளாசையில் மயங்கி மக்காவிலிருந்து நஞ்சு தோய்ந்த வாளுடன் முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொல்ல சென்ற உமைருப்னு வஹப் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன் நின்றான். ஸப்வான், உமைர் ஆகிய இருவரின் ரகசிய ஒப்பந்தத்தை ஒப்பற்ற நபி (ஸல்) அவர்கள் ஒப்பிப்பதைக் கேட்டதும் தப்பான எண்ணத்தைக் கைவிட்டு ஒப்பில்லா ஓரிறை கொள்கையை ஏற்றார் உமைருப்னு வஹப்.

சோதனைகளிலும் சாதனை படைத்த சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றி ஆற்று படுத்திய அறவழியில் முறையோடு நெறிபிறழாது நேர்மை தவறாது நிறை வாழ்வு வாழ்ந்து இறையருளைப் பெற இம்மீலாது நபி நந்நாளில் உறுதி பூணுவோம்.

நன்றி:- தினமணி 18 DEC 2015 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- நாகூர் கௌதிய்யா சங்கம் , மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

 

அலைபேசியின் அருமைகளும், அவலங்களும்.


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் ஐ போன் 6 , பிளாக் பெர்ரி (Blackberry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 31 ஆகிறது. 1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட்விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ. டி .சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக் காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது. மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால்இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4 ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்.

பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக்கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக்கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.

2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.

தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார் ? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ , முஸ்லிம்) எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது.
குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார் ?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப்படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!

3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.

கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில்
தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்துபவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்.

தொழுகையில் இறையச்சத்துடனும்  உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.

5. ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது.

எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு , மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும்
தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும். ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும். அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள், துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது , இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும்என்று பதிலளித்தார். எனவே , இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.

வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட் ’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும் , தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

7. எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை.

மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான , விரசமான செய்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக்கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும். ‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு ’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது.

பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. ‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே!
முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்! மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை
அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது , அபூதாவூத் , திர்மிதீ)

மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும். மொபைல் போன்களில் உள்ள வீடியோ,  போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரி செய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.

9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு
பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத்துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள்,  உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்.. ” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே , பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்றநிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.

“உண்ணுங்கள் பருகுங்கள் , வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம் , நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது , எனவே , வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆக , அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

 

மகனுக்கு புகன்ற நீதி – மு.அ. அபுல்அமீன் நாகூர்


justice

ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் என்ற பெரியாரிடம் அவரின் மகன் அன்உம், “ஒருவரும் பாராது, அறியாது, தெரியாது ரகசியமாகச் செய்யும் குற்றத்தை அல்லாஹ் எப்படி அறிவான்” என்று கேட்டார்.

லுக்மான் மகனுக்குப் புகன்ற நீதியை திருக்குர்ஆனில்

QURAN 31-16

31-16 ஆவது ஆயத்தில் காணலாம். “மகனே! நிச்சயமாக அது கடுகினும் சிறிதாயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

 கற்பாறைக்குள், வானத்தில், பூமியின் பாதாளத்தில் கடுகினும் சிறிய தவறைச் செய்தாலும் நுட்பமானதை அறியும் திட்பமுடை அல்லாஹ் அம்பலத்திற்குக் கொண்டு வந்துவிடுவான். இதயங்களில் உள்ள ரகசியங்களையும் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் அறியும் நுண்ணறிவுடையவன் அல்லாஹ் என்பதை உணர்ந்தால் மறைவாகக் குற்றம் செய்து இறைவனிடமிருந்து தப்பிக்கலாம் என்று எந்த மனிதனும் நினைக்க மாட்டான்; குற்றத்தில் திளைக்க மாட்டான்; குறையின்றி நிறைவாக வாழ்வான் என்று மகனுக்கு நல்லுரை புகன்றார் லுக்மான்.

நன்றி:-   தி இந்து  December 26, 2013 

the_hindu_tamil_logo

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- கௌதிய்யா சங்கம், மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்.

நவம்பர் 26, 2013 1 மறுமொழி

fajr2

அதிகாலை ஆண்கள்) அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை
இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்!எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக!”

(அபூதாவூத்)

அண்ணலார் (ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும்இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம்இருக்கின்றது.

ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்-தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்:

“அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப் படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)
ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!

படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை:

உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்:“இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை..” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா..?”
என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, பெருமானார் (ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்:

“நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.” (புகாரி,முஸ்லிம்)

ஆம். நபித்தோழர்களின் காலத்தில் இறை-நம்பிக்கை-யாளர்களை அளக்கும் அளவுகோலாக இந்த இருவேளைத் தொழுகைகள்தாம் இருந்தன. இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “ஸுபுஹ் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும்

யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவேஎண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

அண்ணலாரின் அமுத மொழிகள்:

மறுமையில் ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தில் இருளில் ஒளியின்றி நடப்பவர்களுக்கு நற்செய்தியாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்” (பைஹகீ)

“சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப் பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒரு நாளும் நுழைய மாட்டார்” (முஸ்லிம்)

யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்.” (தபரானி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உமாமா (ரலி) அறிவிக்கின்றார்: யார் ஒளு செய்தபின் பள்ளிவாசலுக்கு வந்து ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஃபஜ்ர் தொழுகையையும் தொழுகின்றாரோ அவர் நன்மக்களின் பட்டியலிலும்,அல்லாஹ்வின் தூதுக்குழுவினரின் பட்டியலிலும் எழுதப்படுகின்றார்.”

ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும் ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம்

அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்:
“எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்:“அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (திர்மிதி)

அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளாரின் பதில் இது: “அந்த மனிதரின் காதுகளில் ஷைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்”

யூதப் பெண் அமைச்சரின் பதில் :

நான் அரபுலகில் வசித்தபோது யூதப் பெண் அமைச்சர் ஒருவரின் நேர்காணலைப்பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. கோல்டா மேயர் என்ற அந்தப் பெண் அமைச்சரிடம் யூதப் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்கின்றனர். “கடைசி காலத்-தில் யூதர்களை முஸ்லிம்கள் கல்லால் அடித்துக் கொல்லும் ஒரு நேரம் வரும் என்று முஸ்லிம்களின் நபி கூறியுள்ளாராமே.. அதைக் குறித்துத் தாங்கள் என்ன கூறுகின்றீர்..?”

இதுதான் கேள்வி.

அதற்கு அந்தப் பெண் அமைச்சர் என்ன கூறினார் தெரியுமா..? “ஆம். நாம் அதனை நம்புகின்றோம்.

ஒருநாள் அவர்கள் நம்முடன் போர் புரிவார்கள்”. அப்படி என்றால் அந்த நாள் எப்போது வரும்?” என்று மீண்டும் அவர்கள் கேள்வி கேட்க, அப்பெண்மணி கூறினார் :

“ஜும்ஆ தொழுகைக்கு வருவதைப் போன்றுஎன்றைக்கு முஸ்லிம்கள் ஸுபுஹ் தொழுகைக்கு வருகின்றார்களோ அன்றுவேண்டுமென்றால் அது நடக்கலாம். அதுவரை நாம் அஞ்ச வேண்டியதில்லை.” அப்பெண்மணியின் மதி நுட்பத்தைப் பாருங்கள். இஸ்லாமியச் சமூகத்தை எவ்வாறுஎடை போட்டு வைத்துள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

‘யூதர்களால் நாங்கள் சுக்கப்படுகின்றோம்; எங்களைக் காப்பாற்று’ என்று நாம் இறைவனிடம் இருகைஏந்துகின்றோமே.. இறைவன் ஏன் நமது இறைஞ்சுதல்கள் மீது இரக்கம்காட்டுவதில்லை..? அவனது கட்டளையை நாம் நிராகரித்தோம்; அவன் நமதுவிண்ணப்பங்களை நிராகரிக்கின்றான் அவ்வளவுதான். காலை 7 மணி முதல் 10 மணி வரை சாலைகளில் போக்கு வரத்து நெரிசலைச் சற்றுகவனித்துப் பாருங்கள். கூட்டம் கூட்டமாக மக்கள். புற்றீசல்கள் போன்று எங்கிருந்து இவ்வளவு மக்களும் ஒரு சேரப் புறப்பட்டு வந்தனர் என்று தோன்றும். அதில் முஸ்லிம்களும் கணிசமாக இருப்பர்.

ஆச்சரியம் சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இம்முஸ்லிம்கள் எல்லாம் எங்கிருந்தனர்..? உயிருடனா அல்லதுஉயிரற்றவர்களாகவா..? உயிருடன்தான் இருந்தனர் என்றால் ஸுபுஹ் தொழுகைக்குப்பள்ளிவாசலுக்கு ஏன் வரவில்லை? யாரிடம் கேட்டால் இதற்கான பதில் கிடைக்குமோதெரியவில்லை.

அதிகாலைத் தொழுகையில் அரை வரிசையை வைத்துக்கொண்டு அமெரிக்காவை வெற்றி கொள்ள நாம் ஆசைப்படுகின்றோம். பள்ளிவாசலில் பாதி வரிசை கூட இல்லை;

பலஸ்தீன் எங்களுக்கே என்கிறோம். ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு
நடத்துகின்றோம். முஸ்லிம்களுக்கு நீதி வேண்டும் என்கிறோம். எப்படிக்
கிடைக்கும்?

அதிகாலைத் தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

மாற்றத்தின் நேரம் அதிகாலை உலகில் பெரும் மாற்றங்களை எல்லாம் அதிகாலை நேரத்திலேயேதான் அல்லாஹ்ஏற்படுத்தி உள்ளான். உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம்அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

ஹூத் (அலை) அவர்களின் ஆத் கூட்டத்தை அழித்ததைக் குறித்து
அல்லாஹ்கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள்வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (46:25)

ஸாலிஹ் நபி (அலை) அவர்களின் சமூத் கூட்டத்தைக் குறித்து
இறைவன்குறிப்பிடுகின்றான் : “திடுக்குறச்செய்கின்ற ஒரு நிலநடுக்கம்
அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற(உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (7:91) (இதே கருத்தை அத்தியாயம் ஹூத் வசனம் 94, அல்ஹிஜ்ர் வசனம் 83 ஆகியவற்றிலும் காணலாம்.)

லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து மிகத்தெளிவாகவே
அல்லாஹ்கூறுகின்றான்: “எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனைதிண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காகநிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமாஇருக்கிறது?” (11: 81)

ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான் :
“இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம்
வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்” (29:37)
இவ்வாறு ஒவ்வொன்றாக நாம் கூறிக்கொண்டே போகலாம். மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஆகவேதான், மக்கத்து சமூகமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செய்தியைஏற்றுக்கொள்ளாமல் ஏளனம் செய்தபோது அல்லாஹ்வின் எச்சரிக்கை
இவ்வாறுஇருந்தது: “என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக
அவசரப்படுகின்றார்களா? அதுஅவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின்,

எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாளின் அதிகாலை மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்” (37:176,177)
(இப்போது கூறப்பட்ட அத்தனை வசனங்களிலும் அதிகாலை என்பதற்கு ஸுபுஹ் எனும் அரபிச் சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

பண்டைய காலத்தில்தான் இவ்வாறு அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாகஇருந்தது என்று நாம் நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போதுஅல்லாஹ்வின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

2004-இல் ஏற்பட்ட சுனாமி அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.
துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன.

2009 -இல் ஆப்ரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பமும் அதிகாலை நேரத்தில்தான் ஏற்பட்டது.

ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும்
அநேகமாகஅதிகாலை 3 முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள்கூறுகின்றன.

இன்னும் இன்னும் ஏராளம் கூறலாம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதனை என்றோ எச்சரிக்கை என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

மரணம் என்பது அல்லாஹ்வின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த
ஐயமும்எவருக்கும் இருக்க முடியாதுதான். ஆனால், துர் மரணம் என்பது…?

அல்லாஹ்வின்தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர் மரணம்அல்லவா? அல்லாஹ் பாதுகாப்பானாக!

“யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின்
பாதுகாப்பில்இருக்கின்றார்” என்று நாம் மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?

நாம் செய்ய வேண்டியது என்ன?

1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் (இன்ஷா அல்லாஹ்)

என்றஉறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்
கொள்ளலாம் என்றல்ல!)

2) படுக்கும் முன் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.

3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக் கேளுங்கள்.

4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்

5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்

7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரண-மாக அமைந்துவிடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத்
தண்ணீர்தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள்
அதில்தான்அடங்கியுள்ளது.

களதொகுப்பு:- சகோதரன் பஷிர்அஹமது.

ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி? – அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.


halal

 

இப்படி எமக்கு மத்தியிலேயே சரியான புரிதலின்றிய ஒரு விடயத்தை மேடை போட்டுப் பேசி அடுத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி விட முடியுமா என்பது கேள்விக்குறியே!.

இன்று பெரும்பான்மையினருக்கு மத்தியிலும் ஹலால் என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தோற்றப்பாட்டை ஹலால் ஹராம் பற்றிய சரியான பார்வையைக் கொடுப்பதன் மூலமாக மாற்றியமைக்கலாம்.

அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள்.
இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும்.

• ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன?

இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம்.
அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. இது வெறுமனே உணவு பானங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று இந்த ஹலால் ஹராம் என்ற விடயம் வெறுமனே உணவு பானங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாகவே முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் அது தொடர்பான சந்தேகங்களும் சர்ச்சைகளும் நிலவுகின்றன.

halal1

• இந்த ஹலால் ஹராம் என்பன இஸ்லாத்தில் மாத்திரம் தானா காணப்படுகின்றது?

இல்லை உலகிலுள்ள சகல மதங்களிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. அதாவது அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத விடயங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பௌத்த மதத்தை எடுத்துக் கொண்டால் அந்த மதத்தின் போதனைகளின் படி மதுபானம் அருந்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்). அநீதி இழைத்தல் ஹராமாகும், அநியாயமாக கொலை செய்தல் ஹராமாகும். பௌத்த மதத்தலைவர்கள் சுமார் பத்து வகையான இறைச்சிகளை சாப்பிடுவது ஹராமாகும்.

அதே போன்று கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சாப்பிடுவது அவர்களுக்கு ஹராமாகும்.

இஸ்லாத்திலும் ஏனைய அனைத்து மதங்களையும் போலவே இவ்வாறாக ஹராமான விடயங்கள் காணப்படுகின்றன. அந்த விடயங்களை தவிர்ந்து வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.

• உணவு பானங்களில் மாத்திரம் தானா ஹலால் ஹராம் காணப்படுகின்றது?

நிச்சயமாக இல்லை. ஏற்கனவே மேலே கூறிக்காட்டியது போல வாழ்வின் சகல விவகாரங்களிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் அதாவது ஹலால் ஹராம் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக பார்வையில் கூட ஹலாலான பார்வை ஹராமான பார்வை என இரண்டு வகைகள் உள்ளன. ஹலாலான பார்வை என்பது ஒரு மனிதன் தனக்கு பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பார்ப்பதாகும்.

ஒரு மனிதன் பாதையில் நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், பாதையோரத்திலிருக்;கின்ற வீடுகளை எட்டிப் பார்ப்பது அவனுக்கு ஹராமாகும். பாதையில் நடந்து செல்கின்ற பெண்களைப் பார்ப்பது ஹராமாகும். மோசமான காட்சிகளைப் பார்ப்பது ஹராமாகும். இப்படி ஹராமான பார்வையை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.

Halal (1)

 

அதே நேரம் தடுக்கப்பட்ட பார்வைகள் சிலதைத் தவிர்த்து ஏனைய அனைத்து வகையான பார்வைகளும் ஹலால் ஆகும்.

அதே போன்றுதான் ஆடைகளிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. ஆனால் இங்கு ஷேர்ட் ஹலால் ட்றவுசர் ஹராம் என்று யாராலும் சொல்ல முடியாது. இங்கு ஹலால் ஹராமைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹலால் ஆகும். ஆந்த நிபந்தனைகளைப் புறக்கணித்து ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹராமாகும்.

அந்த நிபந்தனைகளில் முதலாவது மட்டும் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறானது. ஏனைய அனைத்து நிபந்தனைகளும் இருவருக்கும் பொதுவானது.

முதலாவது நிபந்தனை உடலில் கட்டாயம் மூட வேண்டிய பகுதிகளை மறைத்ததாக குறித்த ஆடை இருக்க வேண்டும். இதில் ஆண் கட்டாயம் மூட வேண்டிய பகுதி அவனது தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியாகும். ஒரு பெண் கட்டாயம் அவளது முகம் மற்றும் மணிக்கட்டின் கீழுள்ள கையின் பகுதி ஆகியன தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும்.

அதே போன்று ஆடை மெல்லியதாக இருக்கக் கூடாது

உடலமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமாக இருக்கக் கூடாது

ஆண் பெண்ணின் ஆடையையும் பெண் ஆணின் ஆடையையும் அணியக் கூடாது

ஏனைய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றுவதாக இருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுமிடத்து ஒருவன் அணியும் ஆடை எதுவாக இருப்பினும் அது ஹலாலானதாகும். இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனையாவது மீறப்பட்டால் அவன் அணியும் ஆடை ஹராமானதாகும்.

அதே போன்று ஆண் பெண் உறவில் ஹலால் ஹராம் இருக்கின்றது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தனித்திருப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட ஆண்கள் பெண்களும்; இருக்கின்றனர் தடுக்கப்பட்ட ஆண்கள் பெண்களும் இருக்கின்றனர்.

உதாரணமாக ஓர் ஆண் தனது தாயுடன் மகளுடன் சகோதரியுடன் பேசுவது பழகுவது பயணம் போவது ஹலாலாகும், அதே நேரம் வேறு யாரோ ஓர் அந்நியப் பெண்ணுடன் பயணிப்பது ஹராமாகும்.

ஒருவன் தனது உடல் இச்சையை திருமணத்தின் பின்னர் தனது மனைவியூடாகத் தீர்த்துக் கொள்வது ஹலாலாகும். அதையே திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ வேறு வகையில் விபச்சாரத்தினூடாக தீர்த்துக் கொள்வது ஹராமாகும்.

இப்படி வாழ்வின் சகல விடயங்களிலும் ஹலாலும் ஹராமும் காணப்படுகின்றன.

• அப்படியானால் ஏன் உணவுப் பண்டங்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது? ஏனைய எல்லா விடயங்களுக்கும் வழங்கலாம் தானே! அதுவும் நபியவர்கள் என்ன ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா?

நியாயமான கேள்விதான், ஆனால் நிதர்சனமான கேள்வியல்ல. ஒரு மனிதன் பாதையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனுக்கு ஹலாலான பார்வையை மாத்திரம் தான் அவன் பார்க்க வேண்டும். அவனது பார்வை தடுக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் அந்தப் பெண் ஹராம் என்று அர்த்தமில்லை. அவள் வேறு யாருக்கோ ஹலாலானவளாக இருப்பாள்.

அதே போன்று விபச்சாரம் செய்வது பிழையானது என்பது வெளிப்படையாகத் தெரியும். எனவே ஒருவன் திருமணம் செய்த பெண்ணுக்கு யாரும் ஹலால் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. திருமணம் முடித்த காரணத்தினாலேயே அவள் அவனுக்கும் அவன் அவளுக்கும் ஹலாலாகி விடுவர்.

அவ்வாறே ஆடைகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகினால் அந்த ஆடை ஹலால் இல்லாவிட்டால் அது ஹராம்.

இவற்றிலெல்லாம் யாருக்கும் பார்த்தவுடனே எது ஹலால் எது ஹராம் என்பது தெளிவாக விளங்கி விடும். எனவே அங்கெல்லாம் எது ஹலால் என்று பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகின்றது.

ஆனால்  உணவுப் பொருட்களைப் பொருத்தவரையில் அங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. தடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஹராம் என்பது தெளிவானது. உதாரணமாக பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் போய் யாரும் இறைச்சி வாங்க மாட்டார்கள். ஏனெனில் அது தெளிவானது.

ஆனால் நான் வாங்கும் யோகட்டில் பன்றிக் கொழுப்பு கலந்திருக்கின்றதா? என்பதைப் பார்க்கும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில் அதனைப் பரிசோதனை செய்வதற்கு இரசாயனக் கலவைகள் தேவைப்படுகின்றன, இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, விஷேட தகைமைகள் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியாது, அப்படி யாராவது செய்ய நினைத்தால் ஒரு பிஸ்கட் பக்கற் வாங்கக் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு ட்ரக் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு உள்ள இயந்திரங்கள் இரசாயனங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் தடுக்கப்பட்டவைகள் கலந்திருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். இது சாத்தியமே இல்லாத விடயமாகும்.

எனவே இதற்குப் பொறுப்பாக ஒரு குழுவினர் இருந்து இவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அவ்வாறு பரிசோதனை செய்த பின்னர் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நிலையில் காணப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இது தான் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதற்கும் ஏனையவற்றுக்கு வழங்கப்படாமலிருப்பதற்குமான காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா? என்ற கேள்வியும் நியாயமானது தான்.
ஆனால் அதுவும் கூட நிதர்சனமான கேள்வியல்ல. ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் சந்தையில் அனைத்துமே ஹலாலாகத் தான் இருந்தன. அங்கே ஹராமான எதனையும் விற்க யாருக்கும் அனுமதியிருக்கவில்லை. எனவே வாங்குவது ஹலாலா ஹராமா என்ற பிரச்சினையும் யாருக்கும் இருக்கவில்லை. எனவே ஹலால் மட்டுமே இருந்த இடத்தில் ஹலால் சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல எது ஹலால் எது ஹராம் என்பதை நுகர்வோரினால் பிரித்தறிய முடியாத நிலையே இன்றைய சந்தையில் காணப்படுகின்றது. எனவே இதுதான் ஹலால் என்பதை நுகர்வோருக்குக் காட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதன் காரணமாகத் தான் நபியவர்கள் காலத்தில் வழங்கப்படாத ஹலால் சான்றிதழ் இன்று வழங்கப்படுகின்றது.

• ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?

அல்லது ஏதாவது ஒரு நாட்டில் நீ விரும்பிய மாதிரி வாழ்ந்து விட்டுப் போ! உனது விருப்பம் தான் எமது வெற்றி, விரும்பினால் கற்பழி! விரும்பினால் களவெடு! விரும்பினால் கொலை செய்! என்று அனுமதியிருக்கின்றதா?

அல்லது ஏதாவது மதங்களில் ஒருவன் தான் விரும்பியது போல் வாழலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை காணப்படுகின்றதா?

நிச்சயமாக இல்லை, அங்கெல்லாம் சட்டங்கள் ஒழுங்குகள் வரையறைகள் செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றுதான் மனித வாழ்விலும் ஒழுங்குகள் வரையறைகள் காணப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற வாழ்வை மனித வாழ்வு என்று யாரும் சொல்வதில்லை. ஒழுங்கு விதிகளை வரையறைகளை மீறுகின்றவர்களை நாம் எப்படி ஏசுகின்றோம் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் அத்தகைய வாழ்வுக்கு என்ன சொல்லப்படுகின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

எனவே இப்படியாக மனிதர்களுக்கே சட்டங்களை வரையறைகளை வகுக்க முடியுமாக இருந்தால் மனிதர்களையெல்லாம் படைத்த இறைவனுக்கு வரையறைகளை வகுக்க முடியாதா?! ஆனால் சட்டங்கள் வரையறைகள் அனைத்திலும் பின்பற்றப்படுவதற்கு அதிகம் தகுதியானது இறைவன் வகுத்த சட்டங்களும் வரையறைகளுமே. நாங்கள் மனிதர்களை மதிக்கின்றோம், ஆனால் அதனை விட அதிகமாக மனிதர்களைப் படைத்த இறைவனையும் அவனது சட்டங்களையும் மதிpக்கின்றோம்.

• இப்படி எல்லாமே ஹராம் என்றால் எப்படி மனிதன் இந்த உலகில் வாழ்வது?

உங்களது ஆதங்கம் புரிகின்றது. ஆனால் ஹராத்தைத் தவிர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தானே வாழ்கின்றனர்.

ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும், ஹலாலானவற்றையும் ஹராமானவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஹராமானவைகள் ஹலாலானவற்றை விட மிகவும் சொற்பமானதே! அதே நேரம் வேறு எந்தக் கொள்கையிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இஸ்லாத்தின் ஹலால் ஹராம் நடைமுறையில் காணப்படுகின்றது.

இஸ்லாத்தில் ஏதாவது ஒன்று ஹராமாக்கப் பட்டிருக்குமாயின் அதற்கு ஈடாக வேறு ஒன்று நிச்சயமாக ஹலாலாக இருக்கும். உதாரணமாக விபச்சாரம் ஹராமாக்கப்பட்டுள்ளது திருமணம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே மனிதனின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட வழிமுறையொன்று ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

வட்டி ஹராமாக்கப்பட்டுள்ளது, வியாபாரம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே சம்பாதிக்க விரும்பும் எவரும் ஆகுமான வழியில் வியாபாரம் செய்து பொருளீட்டலாம்.

பன்றி இறைச்சி ஹராமாக்கப்பட்டுள்ளது இன்னும் பல வகையான இறைச்சிகள் ஹலாலாக்கப்பட்டுள்ளன. மாமிசம் உண்ண வேண்டும் என்ற மனிதனது ஆசைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல இந்த ஹலால் ஹராம் தொடர்பாக ஓர் அடிப்படையான விதியே இஸ்லாத்தில் காணப்படுகின்றது. ‘இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனையும் அனுமதிக்கப்பட்டதாகும் படைத்த இறைவனால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர’ என்பதே அந்த விதியாகும். இதன் மூலம் ஹலாலானவற்றின் எல்லை எந்தளவு விரிவானது என்பதையும் ஹராமானவற்றின் எல்லை எந்தளவு சுருங்கியது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அப்படி ஹலாலின் எல்லை விரிவானதாக இருந்தாலும் இன்று இருக்கின்ற கொஞ்சம் ஹராத்தை எல்லா ஹலால்களுடனும் கலக்கின்ற வேலையை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர். எனவே தான் ஹலால் ஹராம் போன்ற சொற்கள் முன்பில்லாத அளவு மக்களுக்கு மத்தியில் பரிச்சயமாகின்ற அளவுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

அத்தோடு இது யாரின் மீதும் எதனையும் திணிக்கின்ற செயற்பாடும் அல்ல. முஸ்லிம்கள் தமது பேணுதலுக்காக செய்கின்ற விடயமே இது. ஆனால் இது அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதையும் தாண்டி யாராவது இது தமக்குத் தேவையில்லை என்று கருதினால் அவர் தாராளமாக அவர் விரும்பியது போல் ‘சுதந்திரமாக’ வாழ்ந்து விட்டுப் போகலாம். அது அவருக்கும் அவரைப் படைத்தவனுக்கும் இடையில் உள்ள விவகாரம். ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடமைப்பாடு ஹலால் தேவையில்லை என்று சொல்கின்ற சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி எங்கள் மீது ஹலாலைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போன்று ஹலால் தேவையில்லை என்பதை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை எங்களுக்கும் இருக்கின்றது.

நன்றி:- அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம்.