தொகுப்பு

Archive for the ‘கணினி’ Category

டிஸ்க் கிளினர் Disk Cleaner – வேலன்


வீடாகட்டும் – அலுவலகமாகட்டும் தேவையில்லாதவைகளை அகற்றிவிட்டு சுத்தமாக வைத்திருந்தால நன்றாக இருக்கும்.. அதுபோல நாம் நமது கம்யூட்டரிலும் தேவையில்லாதவைகளை நீக்கி விட்டு சுத்தமாக வைத்திருந்தால் கம்யூட்டரின் வேகம் கூடுவதுடன் அதன் உபயோகிக்ககும் ஆயூளும் அதிகரிக்கும். 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதில் உங்களுடைய கம்யூட்டரில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். தேவையான டிரைவை தேர்வு செய்து Start Searching கொடுக்கவும்.

உங்கள் கம்யூட்டரில் உள்ள பைல்களின் வகைகளையும்அது எடுத்துக்கொண்டுள்ள அளவினையும் இதில் காணலாம்.உதாரணத்திற்கு நீங்கள் புகைப்பட பைல்கள் – வீடியோ பைல்கள்-டாக்குமெண்டுகள் -பாடல்கள் என எதுவைத்திருந்தாலும் இதில் காண்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் உள்ள Junk பைல்களும் நமக்கு காண்பிக்கும். தேவையற்றவைகளை நாம் சுலபமாக நீக்கி விடலாம்.

பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி:- வேலன்

நன்றி:-http://www.velang.blogspot.com/2011/12/disk-cleaner.html

கணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?


கணனி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணனி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk  , சரி Format செய்தவுடன் கணனி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.

Sound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open  பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open  செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள் பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.

இப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.
இதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.

முதல் பக்கம் தோன்றும். பின்னர் உங்கள் கணனியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis  செய்து அதன் பட்டியல் தரும்.

அதில் தேவையான Drivers அல்லது Select All  தெரிவு செய்யமுடியும்
click next
கிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.

click next

பின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup  செய்ய சிறிது நேரம் எடுக்கும்

backup  எடுதவுடன் Save  செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.

backup  செய்த Driver  தொகுப்பை உங்கள் Pen Drive  இல் அல்லது DVD இல்  எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.

Download

நன்றி:- simplexstec

Microsoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி!

பிப்ரவரி 5, 2011 1 மறுமொழி

Microsoft word தொகுப்பில் “Latha” தமிழ் எழுத்துருவை அனைவரும் முயற்சி செய்து பார்த்திருப்போம்.. பலரும் தோற்றிருப்போம்.. மைக்ரோசாப்ட் இயங்குதளத்தை  பொருத்தமட்டில், தமிழில் உள்ளீடு செய்வதற்கு  எ-கலப்பை, குறள், அழகி, NHM Writer போன்ற பல கருவிகள் இருந்தாலும், (NHM -இல் வேர்டு தொகுப்பில் முயன்ற பொழுது லதா எழுத்துரு ஒரு சில சமயங்களில் பெட்டி பெட்டியாகத்தான் வந்தது) ஒருங்குறி (யுனிகோட்) முறையில் வேர்டு தொகுப்பில் “லதா” எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச  Microsoft Indic Language Input Tool மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Microsoft Indic Language Input Tool தரவிறக்க

மடிக்கணினி (லேப்டாப்) வாங்கப் போறீங்களா?

ஜனவரி 11, 2011 1 மறுமொழி


கீழ்கண்ட பொருட்களில்
நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள்?

ஃப்ளாட் டிவி
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

லேட்டஸ்ட் மாடல் செல்போன்

லேப்டாப் கம்ப்யூட்டர்

இப்படி ஒரு கேள்வியை ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்டு சர்வே செய்தது ஒரு ஏஜென்ஸி. இந்த சர்வேயில் பலரும் ‘டிக்’ அடித்து தேர்வு செய்தது லேப்டாப் கம்ப்யூட்டரைத்தான். மடியில் குழந்தை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக லேப்டாப் இருந்தாக வேண்டும் என்று நினைக்கிற நிலை இன்றைக்கு!நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அலுவலக வேலையைச் செய்து கொள்ளும் வசதி; மெயில்கள், மார்க்கெட்டின் லேட்டஸ்ட் ஏற்றயிறக்கங்கள், ரயில், விமானம் போன்றவை குறித்த தகவல்கள் என உங்களிடம் ஒரு லேப்டாப் இருந்தால் விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் செய்து முடித்துவிடலாம். இதனால்தான் எல்லோரும் அதை வாங்கத் துடிக்கிறார்கள்.

ஆனால், லேப்டாப் வாங்கும்போது என்னென்ன விஷயங்கள் பார்க்க வேண்டும், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் என்கிற பல விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதை சொல்லத்தான் இதோ இந்தக் கட்டுரை.

இரண்டுவித லேப்டாப்!

லெனோவா, ஹெச்.பி., ஏசர், டெல் போன்ற முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் லேப்டாப்களை தயாரிக்கின்றன. முதலில் எந்த நிறுவனத்தின் லேப்டாப் வாங்கப் போகிறீர்கள்? அதற்கான பட்ஜெட் எவ்வளவு? உங்களுக்கு என்னென்ன அப்ளிகேஷன்கள் தேவை? என்பதை முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.

இரண்டு வகையான லேப்டாப் கள் இருக்கிறது. ஒன்று, கமர்ஷியல் லேப்டாப்; இன்னொன்று, கன்ஸ்யூமர் லேப்டாப். அதிக பயன்பாடுகள் வேண்டும் என்பவர்கள் கமர்ஷியல் லேப்டாப் வாங்குவது நல்லது. குறைந்த பயன்பாடுகள், தவிர குறைந்த நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த நினைப்பவர்கள் கன்ஸ்யூமர் லேப்டாப் வாங்கலாம்.

கன்ஸ்யூமர் லேப்டாப்பில் இன்ஸ்பிரேஷன், ஸ்டூடியோ, வெப் கேமிரா போன்ற அம்சங்கள் இருக்கிறது. நான்கு மணி நேரத்திற்கு இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஃபேன்ஸியாகவும் இருக்கும். இல்லத்தரசிகள், படிக்கும் குழந்தைகள், வீட்டிலிருந்தபடி பங்குச் சந்தை முதலீடு செய்பவர்கள் போன்றோர்களுக்கு கன்ஸ்யூமர் லேப்டாப் மிகச் சரியானது.

கமர்ஷியல் லேப்டாப்களை பத்து மணி நேரம் வரை பயன்படுத்தலாம். அதிகம் சூடாகாது. மிக வேகமாகவும், அதே நேரத்தில் நாம் அதில் பதிந்து வைக்கும் டேட்டாக்கள் பாதுகாப்பாகவும் இருக்கும். அதிக ஸ்டோரேஜ், 4 ஜி.பி. ராம் என பல வசதிகள் இருக்கிற இந்த லேப்டாப் கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் செய்ய, பிஸினஸ்மேன்கள் அதிக சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்யப் பயன்படும். அதிக வசதிகள் கொண்ட இது கன்ஸ்யூமர் லேப்டாப்பைவிட வெறும் 3,000 ரூபாய் அதிகமாகும்.

ஸ்கிரீன்!

மாணவர்கள், பிஸினஸ்மேன்கள் 14.1 இஞ்ச் ஸ்கிரீன் அளவு கொண்டதை வாங்கலாம். இதன் எடை குறைவாக அதாவது 1.9 கிலோதான் இருக்கும். வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் 15.6 இஞ்ச் ஸ்கிரீன் வாங்கலாம். இதன் எடை 2.25 கிலோ. ஆனால் இரண்டின் விலையும் ஒன்றுதான்.

பேட்டரி!

பேட்டரியைப் பொறுத்தவரை ‘நயன்செல்’ பேட்டரி கேட்டு வாங்கணும். இந்த பேட்டரியை பயன்படுத்தினால் ஆறு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இதுவே  ‘சிக்ஸல்’ பேட்டரி எனில் நான்கு மணி நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பேட்டரியே உங்கள் லேப்டாப்புக்குத் தேவை.

வாரன்டி காலம்!

அனைத்து நிறுவனங்களும் லேப்டாப்களுக்கு ஒரு வருட வாரன்டி காலம் கொடுக்கின்றன. கமர்ஷியல் லேப்டாப் எனில் மூன்று வருடம் வரைகூட வாரன்டி கொடுக்கிறார்கள். அதற்கு மேலும் கூடுதலாக வாரன்டி தேவைப்பட்டால் அந்த நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம். டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தக் கூடுதல் வாரன்டியை நீங்கள்  ஆன்லைன் மூலமாகத்தான் பெற முடியும். இதற்கு 5,000 கட்ட வேண்டியது இருக்குமாம். லெனோவா, ஹெச்.பி. போன்ற நிறுவனங்களில் பணமாகக் கொடுத்தால் பத்து நாட்களில் கூடுதல் வாரன்டி கிடைக்கும்.

சர்வீஸ்!

லேப்டாப்களைப் பொறுத்தவரை ‘ஆன்சைட் வாரன்டி’ மற்றும் ‘கேரியிங் வாரன்டி’ என இரண்டு விதமான சர்வீஸ்கள் உண்டு. ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போல் அல்லாமல் லேப்டாப் என்பது கையில் தூக்கிக் கொண்டு செல்லக் கூடிய பொருள் என்பதால்தான் இப்படி இரண்டு விதமான சர்வீஸ்கள். ‘ஆன்சைட்’ என்பது சர்வீஸ் ஆட்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் சரி செய்வார்கள். ‘கேரியிங்’ என்பது நாம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அங்கு ரிப்பேரை சரி செய்து கொள்வது.

‘கேரியிங் வாரன்டி’க்கு சுமார் 4,000 ரூபாயும், ‘ஆன்சைட் வாரன்டி’க்கு 6,000 ரூபாயும் கட்டணம் சொல்கிறார்கள். உங்கள் சௌகரியத்துக்கு ஏற்ற மாதிரி வாங்கலாம்.

விலை!

‑  நோட் புக் மாடல் – இதை ஹேண்ட்பேக்கில்கூட வைத்துக் கொண்டு போகலாம். இன்டர்நெட், எம்.எஸ்.ஆபீஸ். போன்ற சில வசதிகள் மட்டும் கிடைக்கும் இந்த பேஸிக் மாடலின் விலை 16,500. பயணத்தின் போது பயன்படுத்த இது மிகச் சிறந்தது.

கேம்ஸ் ஆப்ஷன், கிராஃபிக் ஆப்ஷன், வெப் கேமிரா போன்ற வசதிகளுடன் இருக்கும் மாடல் வீட்டில் இருப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றது. இதன் விலை 35,000 முதல் 40,000 வரை கிடைக்கிறது.

மல்டி மீடியா ஐ5, ஐ7 போன்ற வசதிகளுடன் வீடியோ எடிட்டிங் செய்யும் தொழில்நுட்பம் வரை இருக்கும் இதன் செயல்பாடு மிக வேகமாகயிருக்கும். இதன் விலை 41,000 முதல் 60,000 வரை.

உதிரிப் பாகங்கள்!

பொதுவாக லேப்டாப் வாங்கும்போது பேக், சார்ஜர், பேட்டரி போன்றவைகளை கண்டிப்பாகக் கொடுப்பார்கள். இது போக கூடுதல் உதிரிப் பாகங்கள் தேவைப்பட்டால் அதை நாம்தான் வாங்கிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்தும்போது அதிகமான வெப்பம் வெளியேறும். இது உடலுக்கு நல்லதல்ல. இதனைத் தவிர்க்க ‘கூலிங் பேட்’ வாங்கிக் கொள்வது நல்லது. இதன் விலை சுமார் 1,550.

உங்களின் லேப்டாப் இன்டர்னல் செக்யூரிட்டிக்காக ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பொறுத்திக் கொள்வது நல்லது. மெக்காஃபே, கேஸ்பர்ஸ்கை, நார்டன் போன்ற ஆன்டிவைரஸ் விலை 500. இது ஒரு வருடத்திற்கானது. வயர்லெஸ் மவுஸ் 850 முதல் 1,000 வரை கிடைக்கிறது. பவர்பாயின்ட் 2,800.

இன்றைய காலகட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டு பல வேலைகளைச் செய்ய லேப்டாப் அவசியம். அதை வாங்கும் போது மேற்சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், பிற்பாடு வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.


இத்துடன் ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்குவது சாலச் சிறந்தது. ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே கூடுதலாக செலவாகும் (ஹோம் பேசிக் ). மற்றபடி, ஒரிஜினல் ஓ எஸ் பயன்படுத்துவதன் மூலம், தேவையில்லாத வைரஸ் தாக்குதல், டேட்டா லாஸ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்
.

நன்றி: பானுமதி அருணாசலம்

நன்றி:- நா.வி

கணினிக் கலைச்சொற்கள்-அருண் HK Arun (Computer Terms in Tamil)


கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளாக பார்ப்போர் உளர்; ஆனால் அவ்வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு கலையாகவே பழந்தமிழர் வகைப்படுத்தினர். அந்தவரிசையில் தற்போதைய தொழில்நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. இதில் கணினித் தமிழ் ஆர்வலர்கள், இணையத் தமிழ் சமூக குழுமங்கள், ஊடகத் துறையினர், எழுத்தாளர்கள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி பயனர்கள் என பலரதும் பங்கு உள்ளது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் அட்டவணையாக இட்டுள்ளேன்.

ஆங்கிலக் கணினிச் சொற்களின் உச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோருக்கான ஒலிதக் கோப்பினை கீழே சொடுக்கி பயிற்சி பெறலாம். (விரைவில் இணைக்கப்படும்)

No: English Terms கலைச்சொல்லாக்கம்
1. Access அணுக்கம்
2. Accuracy துல்லியம்
3. Action செயல்
4. Activate இயக்கு
5. Active cell இயங்கு கலன்
6. Active file நடப்புக் கோப்பு
7. Activity செயல்பாடு
8. Adapter card பொருத்து அட்டை
9. Adaptor பொருத்தி
10. Address முகவரி
11. Address bus முகவரி பாட்டை
12. Address modification முகவரி மாற்றம்
13. Addressing முகவரியிடல்
14. Administrator நிர்வாகி
15. Album தொகுப்பு
16. Algorithm language நெறிப்பாட்டு மொழி
17. Algorithm நெறிமுறை
18. Alignment இசைவு
19. Allocation ஒதுக்கீடு
20. Alpha testing முதற்கட்ட சோதனை
21. Alphabet அகரவரிசை/நெடுங்கணக்கு
22. Alphabetical அகர வரிசைப்படி
23. Alphanumeric எண்ணெழுத்து
24. Ambiguation கவர்படுநிலை
25. Amplified பெருக்கப்பட்ட
26. Analog representation ஒப்புமை மீள்வடிவாக்கம்
27. Analog ஒப்புமை
28. Analytical Engine பகுப்பாய்வு பொறி
29. Animation அசைவூட்டம்
30. Anonymous அநாமதேய
31. Anti-virus நச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
32. Appearance தோற்றம்
33. Append பின்சேர்
34. Applet குறுநிரல்
35. Application level பயன்பாட்டு நிலை
36. Application programmer பயன்பாட்டு நிரலாளர்
37. Application programming பயன்பாட்டு நிரலாக்கம்
38. Application programs பயன்பாட்டு நிரல்கள்
39. Application service provider பயன்பாட்டுச் சேவை வழங்குனர்
40. Application software பயன்பாட்டு மென்பொருள்
41. Application செயலி
42. Architecture கட்டமைப்பு
43. Archive file காப்பகக் கோப்பு
44. Archive gateway காப்பக நுழைவாயில்
45. Archive காப்பகம்
46. Archiving காப்பகப்படுத்தல்
47. Area search பரப்பில் தேடல்
48. Arithmetic எண் கணிதம்
49. Array processor அணிச் செயலி
50. Array அணி
51. Arrow key திசை விசை/திசை குறி
52. Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
53. Assembler பொறிமொழியாக்கி
54. Assembly Language பொறி மொழி
55. Audio blog ஒலிதப்பதிவு
56. Audio ஒலிதம்
57. Auto block தானியங்கித் தடை
58. Auto restart தானியக்க மீள்தொடக்கம்
59. Automated data processing தன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
60. Automatic தன்னியக்க
61. Auxiliary equipments துணைக்கருவிகள்
62. Auxiliary function துணைச்செயற்கூறு
63. Auxiliary memory துணை நினைவகம்
64. Auxiliary operation துணை செயல்பாடு
65. Auxiliary storage துணை தேக்கம்
66. Availability கிடைத்தல்
67. Axes அச்சுகள்
68. Back up காப்புநகல்/காப்புநகலெடு
69. Background பின்னணி
70. Backspace பின்நகர்வு
71. Bar chart பட்டை வரைப்படம்
72. Bar code பட்டைக்குறிமுறை
73. Bar code scanner பட்டைக்குறிமுறை வருடி
74. Bar printer பட்டை அச்சுப்பொறி
75. Basic அடிப்படை
76. Batch processing தொகுதிச்செயலாக்கம்
77. Beta அறிமுகப் பதிப்பு
78. Binary Code இரும குறிமுறை
79. Binary device இருமக் கருவி
80. Binary digit இரும இலக்கம்
81. Binary number இரும எண்
82. Binary operation இரும செயற்பாடு
83. Binary system இரும கட்டகம்
84. Bit map display நுண் படக் காட்சி
85. Bit map scanning நுண் பட வருடி
86. Bit mapped screen நுண் பட திரை
87. Bit values நுண்மியின் மதிப்புகள்
88. Bit நுண்மி
89. Bitmap நுண் படம்
90. Bit-mapped font நுண் பட எழுத்துரு
91. Blank character வெற்றுரு
92. Blank page வெற்றுப்பக்கம்
93. Blanking வெறுமைப்படுத்தல்
94. Block தடை
95. Blog வலைப்பதிவு
96. Blog info வலைப்பதிவு தகவல்கள்
97. Blog tools வலைப்பதிவுக் கருவிகள்
98. Blogger வலைப்பதிவர்
99. Blogger circle வலைப்பதிவர் வட்டம்
100. Blogging வலைப்பதிதல்
101. Bookmark புத்தகக் குறி
102. Boot தொடக்கு
103. Border கரைகள்
104. Branching கிளைப்பிரிதல்
105. Bridge இணைவி
106. Broadband அகலப்பட்டை
107. Browser உலாவி
108. Browsing உலாவுதல்
109. Buddy நண்பர்
110. Bug வழு
111. Bug report வழு அறிக்கை
112. Bus பாட்டை
113. Cache தேக்கம்
114. Calculating கணக்கிடல்
115. Calculation கணக்கீடு
116. Calculator mode கணிப்பான் நிலை
117. Calculator கணிப்பான்
118. Cancel தவிர்
119. Capacity கொள்திறன்
120. Carriage return ஏந்தி மீளல்
121. Catalog விவரப்பட்டியல்
122. Category பக்கவகை
123. CD burning குறுவட்டு எரித்தல்
124. CD player இறுவட்டு இயக்கி
125. Center மையம்/நடுவம்
126. Central processing unit (CPU) மையச் செயலகம்
127. Central processor மையச் செயலி
128. Chain printer தொடர்ப்பதிப்பான்
129. Change மாற்றல்/மாற்று
130. Channel தடம்
131. Character வரியுரு
132. Character code வரியுருக் குறி
133. Character map வரியுரு வரைப்படம்
134. Character recognition வரியுரு அறிதல்
135. Character set வரியுருக்கணம்
136. Character string வரியுருச்சரம்
137. Chart வரைப்படம்
138. chat அரட்டை
139. Checkbox தேர்வுப்பெட்டி
140. Chips சில்லுகள்
141. Clear துடை
142. Click சொடுக்கு
143. Clipboard மறைப்பலகை
144. Close மூடு
145. Closed file மூடப்பட்ட கோப்பு
146. Cloud computing முகிலக் கணிப்பு
147. Collection திரட்டல்
148. Color coding வண்ணக் குறிமுறை
149. Color graphics வண்ன வரைகலை
150. Color வண்ணம்/நிறம்
151. Column split நெடுவரிசைப் பிரிப்பு
152. Column நெடுவரிசை
153. Command key கட்டளை விசை
154. Command கட்டளை/ஆணை
155. Comment கருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
156. Comments moderation கருத்துரை மட்டுறுத்தல்
157. Common storage பொதுத்தேக்கம்
158. Common பொது
159. Communication link தொடர்பு இணைப்பு
160. Communication processor தொடர்பு செயலகம்
161. Communication satellite தொடர்பு செயற்கைக்கோள்
162. Communication software தொடர்பு மென்பொருள்
163. Communication protocols தொடர்பு நெறிமுறைகள்
164. Community portal சமுதாய வலைவாசல்
165. Compact disc (CD) குறுவட்டு/இறுவட்டு
166. Comparative operator ஒப்பீட்டு இயக்கி
167. Compare ஒப்பிடு
168. Comparison ஒப்பிடுதல்
169. Compilation தொகுப்பு
170. Compiler தொகுப்பி
171. Complier language தொகுப்பு மொழி
172. Component உறுப்புக்கூறு
173. Compress அழுத்து/அமுக்கு
174. Computer engineer கணிப் பொறியாளர்
175. Computer game கணினி விளையாட்டு
176. Computer graphic கணினி வரைகலை
177. Computer language கணினி (நிரல்) மொழி
178. Computer motherboard கணினி தாய்பலகை
179. Computer network கணினி வலையமைப்பு
180. Computer operation கணினிச் செயல்பாடுகள்
181. Computer program கணனி நிரல்
182. Computer resources கணினி வளங்கள்
183. Computer user கணினி பயனர்
184. Computer utility கணனி பயனமைப்பு
185. Computer கணினி
186. Computerization கணினிமயமாக்கல்
187. Computerized data base கணினிமய தரவு தளம்
188. Computerized data processing கணினிமய தரவு செயலாக்கம்
189. Computing கணினிப்பணி
190. Condition நிபந்தனை/நிலை
191. Configuration அமைவடிமம்
192. Connectors இணைப்பான்கள்
193. Console முனையம்
194. Constants மாறிலிகள்
195. Content policy உள்ளடக்கக் கொள்கை
196. Contributions பங்களிப்புகள்
197. Contributor பங்களிப்பாளர்/பங்களிப்போர்
198. Control key கட்டுப்பாட்டு விசை
199. Control panel கட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
200. Control program கட்டுப்பாட்டு நிரல்
201. Control statement கட்டுப்பாட்டுக்கூற்று
202. Control structure கட்டுப்பாட்டு உருவம்
203. Control system கட்டுப்பாட்டு கட்டகம்
204. Control unit கட்டுப்பாட்டு பிரிவு
205. Conversion மாற்றம்
206. Convert மாற்று
207. Cookie நினைவி
208. Copy protection நகல் காப்பு
209. Copy பிரதி/நகல்
210. Copyright status பதிப்புரிமை நிலை
211. Copyright பதிப்புரிமை
212. Core storage வளையத் தேக்கம்
213. Cost analysis விலைப் பகுப்பாய்வு
214. Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு
215. Cost effectiveness விலை பயன் திறன்
216. Create உருவாக்கு
217. Crop செதுக்கு
218. Current events நடப்பு நிகழ்வுகள்
219. Cursor சுட்டி
220. Curve fitting வளைக்கோட்டுப் பொருத்தம்
221. Custom software தனிப்பயன் மென்பொருள்
222. Customize விருப்பமை/தனிப்பயனாக்கு
223. Cut வெட்டு
224. Cyber மின்வெளி
225. Dashboard கட்டுப்பாட்டகம்
226. Data தரவு
227. Data catalog தரவு விவரப்பட்டியல்
228. Data flow தரவுப் பொழிவு
229. Data processing தரவுச் செயலாக்கம்
230. Database தரவுத்தளம்
231. Decimal digit பதின்ம இலக்கம்
232. Decimal number பதின்ம எண்
233. Decimal point பதின்ம புள்ளி
234. Decimal பதின்மம்
235. Decode குறிமுறை நீக்கு/நீக்கி
236. Decompress விரிவாக்கு
237. Default முன்னிருப்பு/இயல்பிருப்பு
238. Definite திட்டமிட்ட/தெளிவான
239. Delete அழி
240. Deletion அழித்தல்
241. Description விவரணம்/விளக்கம்
242. Design வடிவமைப்பு
243. Desktop computer மேசை கணினி
244. Desktop முகத்திரை
245. Destination அடையுமிடம்
246. Developer மேம்படுத்துனர்
247. Device கருவி
248. Diagram விளக்கப்படம்
249. Digital எண்மின்
250. Disambiguated தெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
251. Disambiguation தெளிவாக்கம்/தெளிவாக்கல்
252. Discovery கண்டறி/கண்டறிதல்
253. Discuss கலந்தாலோசி
254. Disk drive வட்டு இயக்கி
255. Display name தோற்றப்பெயர்
256. Distribute வினியோகி/வினியோகப்படுத்து
257. DNS கொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
258. Document ஆவணம்
259. Documentation ஆவணமாக்கம்
260. Domain கொற்றம்/ஆள்களமையம்
261. Domain Name System கொற்றப் பெயர்க் கட்டகம்
262. Double click இரட்டைச் சொடுக்கு
263. Download பதிவிறக்கம்
264. Drag இழு
265. Driver இயக்கி
266. Drum plotter உருளை வரைவு
267. Drum printer உருளை அச்சுப்பொறி
268. Drum scanner உருளை வருடி
269. E-book மென்நூல்
270. Edit தொகு/மாற்று
271. Edit profile சுயவிபரத்தை மாற்று
272. Editor தொகுப்பாளர்
273. Educational software அறிவியல் மென்பொருள்
274. Effective பயன்விளையத்தக்க
275. Effects விளைவுகள்
276. E-governance மின்-அரசாண்மை
277. Electrical signal மின் சமிக்ஞை
278. Electronic மின்னணு
279. E-mail மின்னஞ்சல்
280. Embedded பொதிந்துள்ள
281. Emulation போலச்செய்தல்
282. Encoding குறியாக்கம்
283. Encyclopedia கலைக்களஞ்சியம்
284. End முடிவு
285. Equation சமன்பாடு
286. Erase அழி
287. Eraser அழிப்பான்
288. Expansion slots விரிவாக்க செருகுவாய்கள்
289. Expiry கெடுமுடிவு/காலாவதி
290. Extended info விரிவாக்கப்பட்ட தகவல்
291. External links வெளி இணைப்புகள்
292. External search engine வெளித்தேடுபொறி
293. FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
294. Features அம்சங்கள்
295. Field புலம்
296. File கோப்பு
297. File management கோப்பு மேலாண்மை
298. File share கோப்பு பகிர்வான்
299. File sharing கோப்பு பகிர்தல்
300. Find கண்டறி/தேடு
301. Firewall தீயரண்
302. Firmware நிலைப்பொருள்
303. Flat monitor தட்டை திரையகம்
304. Floppy drive நெகிழ் வட்டு
305. Flow chart நெறிமுறை விளக்கப்படம்
306. Folder கோப்புறை
307. Font எழுத்துரு
308. Font and word processor எழுத்துருவும் சொல் செயலாக்கியும்
309. Font name எழுத்துரு பெயர்
310. Footer அடிப்பாகம்
311. Formal language வடிவ மொழி
312. Format வடிவம்/வடிவூட்டம்
313. Formatting வடிவமைத்தல்
314. Formula சூத்திரம்
315. Free software இலவச மென்பொருள்
316. Function செயற்கூறு/செயற்பாடு
317. Gallery காட்சியகம்
318. Gateway நுழைவாயில்
319. Global dashboard கோளக் கட்டுப்பாட்டகம்
320. Global Positioning system கோள இருப்பிடக் கட்டகம்
321. Grammar checker இலக்கணத் திருத்தி
322. Graphic வரையியல்/வரைகலை
323. Group குழுமம்
324. Guest விருந்தினர்
325. Hand held devices கையடக்கக் கருவிகள்
326. Hand held Scanner கையடக்க வருடுபொறி
327. Handwriting recognition கையெழுத்து அறிதல்
328. Hard disc வன்வட்டு
329. Hardware வன்பொருள்
330. Header தலைப்பு
331. Help center உதவி மையம்
332. Help group உதவி குழுமம்
333. High speed computer அதிவேகக் கணினி
334. Higher level language உயர்நிலை மொழி
335. Home முகப்பு
336. Homepage முகப்புப்பக்கம்
337. Horizontal line கிடைக்கோடு
338. Host computer புரவலர் கணினி
339. Hyphenation சொல் பிரித்தல்
340. Icon உருச்சின்னம்/படவுரு
341. Identity அடையாளம்
342. iDNS வலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
343. iDomain வலைக்கொற்றம்
344. Ignore புறக்கணி
345. Image படிமம்
346. Import இறக்கம்
347. Incompatible முரண்பாடு
348. Indefinite திட்டமிடாத
349. Index சுட்டெண்
350. Index variable சுட்டுமாறி
351. Information தகவல்
352. Information data தகவல் தரவு
353. Information super highways தகவல் மீப் பெருவழிகள்
354. Information technology தகவல் தொழில்நுட்பம்
355. Input unit உள்ளீட்டுப் பகுதி
356. Insert உள்ளிடு/செருகு
357. Install நிறுவு
358. Installation நிறுவுதல்
359. Integrated chips சுற்றமைப்புச் சில்லுகள்
360. Integrated circuit chips ஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
361. Inter language மொழியிடை
362. Interactive sites ஊடாட்ட தளங்கள்
363. Interests ஆர்வங்கள்
364. Interface இடைமுகம்/இடைமுகப்பு
365. Internal உள்ளக
366. Internal error உள்ளகத் தவறு
367. International பன்னாட்டு
368. International (DNS) பன்னாட்டுக் (கொப்பெகம்)
369. Internet இணையம்
370. Internet protocol address இணைய நெறிமுறை முகவரி
371. Internet protocol (IP) இணைய நெறிமுறை
372. Internet service provider (ISP) இணையச் சேவை வழங்குனர்
373. Interpreter வரிமொழிமாற்றி/இடைமாற்று
374. Invalid செல்லாத/செல்லுபடியாகாத
375. Invention கண்டுப்பிடிப்பு
376. Italic text சாய்வெழுத்து
377. Iteration பன்முறைச் செய்தல்
378. Java script ஜாவா ஆணைத்தொகுதி
379. Key விசை
380. Keyboard விசைப்பலகை/தட்டச்சுப்பலகை
381. Keypad விசைத்தளம்
382. Keyword குறிப்புச்சொல்
383. Landscape அகலவாக்கி
384. Laptop computer மடிக்கணினி
385. Layout தளவமைப்பு
386. LCD Monitor (Liquid Crystal Display) திரவ பளிங்குத் திரையகம்
387. Left click இடதுச் சொடுக்கு
388. Lexing error தொகுத்தல் தவறு
389. License உரிமம்
390. Light pen எழுதுகோல்
391. Line கோடு/வரி
392. Link இணைப்பு/தொடுப்பு
393. List பட்டியல்
394. Live நேரடி
395. Log in புகுபதி/உற்புகு
396. Log out விடுபதி/வெளியேறு
397. Machine language பொறிமொழி
398. Machine translation எந்திர மொழிபெயர்ப்பு
399. Magnetic disk காந்த வட்டு
400. Magnetic tape காந்தா நாடா
401. Main Page முகப்புப்பக்கம்/முதற்பக்கம்
402. Maintenance page மேலாண்மைப் பக்கம்
403. Management ஆளுமை/முகாமைத்துவம்
404. Mechanical calculator எந்திர கணிப்பான்
405. Media ஊடகம்
406. Media player ஊடக இயக்கி
407. Memory unit நினைவகப் பகுதி
408. Memory நினைவகம்
409. Menu பட்டியல்
410. Metadata தரவு விவரம்
411. Micro processor நுண் செயலி
412. Microphone ஒலிவாங்கி
413. Modem இணக்கி
414. Moderation மட்டுறுத்தல்
415. Moderator மட்டுறுத்துனர்
416. Monetize மதிப்புடைச்செய்
417. Monitor கணித்திரை/திரையகம்
418. More features கூடுதல் அம்சங்கள்
419. Motherboard தாய்ப்பலகை
420. Mouse சொடுக்கி
421. Multimedia பல்லூடகம்
422. Multitasking பல்பணியாக்கம்
423. My account எனது கணக்கு
424. Natural language இயற்கை மொழி
425. Navigation வழிசெலுத்தல்
426. Negative எதிர்வு
427. Network பிணையம்/வலையமைப்பு
428. Networking வலைப்பின்னல்
429. Neutral point of view நடுநிலைநோக்கு
430. New post புதிய இடுகை
431. Non-terminals முடியா முனையங்கள்
432. Notation குறிமானம்
433. Note குறிப்பு
434. Number எண்
435. Numeral எண் முறை
436. Object பொருள்
437. Offline இணைப்பறு/இணைப்பின் வெளியே
438. Online இணைப்பில்
439. Operating system இயங்குக் கட்டகம்
440. Option தேர்வு
441. Orphaned pages உறவிலிப் பக்கங்கள்
442. Other languages பிறமொழிகள்/ஏனைய மொழிகள்
443. Outsourcing அயலாக்கம்
444. Package பொதி
445. Packets பொட்டலங்கள/பொதிகள்
446. Page layout பக்க வடிவமைப்பு
447. Page views பக்கப் பார்வைகள்
448. Page பக்கம்
449. Panel பலகை
450. Paperless office தாளில்லா அலுவலகம்
451. Paragraph பந்தி
452. Parallel processing computers இணைச் செயலாக்க கணினிகள்
453. Parent category முதன்மை பக்கவகை
454. Password கடவுச்சொல்
455. Paste ஒட்டு
456. Patch பொருத்து
457. Peripherals உபகரணங்கள்
458. Permission அனுமதி
459. Personal Computer தனி கணினி
460. Photograph புகைப்படம்
461. Picture படம்
462. Piracy களவுநகலாக்கம்
463. Plug in சொருகு/சொருகி
464. Pointer சுட்டு
465. Portable Printer கையடக்க அச்சுப்பொறி
466. Portal வலைவாசல்
467. Post இடுகை
468. Posting இடுகையிடல்
469. Posts இடுகைகள்
470. Preferences விருப்புத்தேர்வுகள்
471. Presentation அளிக்கை
472. Press அமுக்கு
473. Preview முன்தோற்றம்
474. Principals கோட்பாடு
475. Print அச்சிடு
476. Printer அச்சுப்பொறி
477. Privacy தனிக்காப்பு/தனிமறைவு
478. Problem சிக்கல்/பிரச்சினை
479. Processor செயலி
480. Program நிரல்
481. Programmers நிரலர்கள்
482. Programming language நிரலாக்க மொழி
483. Prompt தூண்டி
484. Protect காப்புச்செய்
485. Protection log தடைப்பதிகை
486. Protocols நெறிமுறைகள்
487. Proxy Server பதில் சேவையகம்
488. Public domain பொதுக்கொற்றம்/பொதுக்களம்
489. Publications வெளியீடுகள்
490. Publish பதிவிடு/வெளியிடு
491. Publisher பதிப்பாளர்
492. Publishing பதிப்பிடல்
493. Query வினா/வினவல்
494. RAM (Random access memory) நினைவகம்
495. Random Page ஒழுங்கிலாப் பக்கம்
496. Recent changes அண்மைய மாற்றங்கள்
497. Recovery tool மீட்சி கருவி
498. Redirects வழிமாற்றிகள்
499. Redo செய்தது தவிர்/திரும்பச்செய்
500. Reference desk எடுகோள் மேடை
501. Reference எடுகோள்
502. Refresh புதுப்பி
503. Reinstall மீள்நிறுவு
504. Release வெளியீடு
505. Remember me என்னை நினைவில் வை
506. Removal அகற்றல்
507. Remove அகற்று
508. Replace மீள்வை
509. Reprogramming மறுநிரலாக்கம்
510. Required வேண்டப்பட்ட/தேவைப்பட்ட
511. Reset மீட்டமை
512. Restore மீள வை/ மீள்வி
513. Result விளைவு
514. Review மீளாய்வு
515. Revision புதிபித்தல்/திருத்தம்
516. Right click வலச்சொடுக்கு
517. Root மூலம்
518. Root directory மூல அடைவு
519. Router வழிச்செயலி
520. Row குறுக்கு வரிசை/நிரை
521. Rule விதி/விதிமுறை
522. Save சேமி
523. Save as என சேமி
524. Scanner வருடுபொறி
525. Screensaver திரைக்காப்பு
526. Search தேடு/தேடல்
527. Search engine தேடு பொறி
528. Search query தேடல் வினா
529. Search தேடல்/தேடு
530. Section பகுதி
531. See also இவற்றையும் பார்
532. Select தேர்வுசெய்
533. Sensor உணரி
534. Server வழங்கி
535. Sessions அமர்வுகள்
536. Setting அமைப்புகள்
537. Share my profile எனது சுயவிவரத்தை பகிர்
538. Shared files பகிரப்பட்ட கோப்புகள்
539. Shareware பகிர்மானம்
540. Shortcut குறுவழி/குறுக்குவழி
541. Show all எல்லாம் காண்பி
542. Shutdown அணை/மூடு
543. Sign in புகுபதிகை/புகுபதிவு
544. Sign off விடுபதிகை/விடுபதி
545. Sign out வெளியேறு
546. Single click தனிச் சொடுக்கு
547. Sister Projects பிற திட்டங்கள்
548. Site feed தள ஓடை
549. Socket பொருத்துவாய்
550. Software மென்பொருள்
551. Software package மென்பொருள் பொதி
552. Sorting algorithms தீர்வு நெறிகள்
553. Sorting and searching வரிசையாக்கமும் தேடலும்
554. Sound Card ஒலிக்கிரமி
555. Source code மூலவரைவு
556. Source மூலம்
557. Space வெளி/இடைவெளி
558. Spacing இடைவெளியிடல்
559. Spam எரிதம்
560. Speaker ஒலிப்பெருக்கி
561. Special pages சிறப்பு பக்கங்கள்
562. Specification விவர வரையறை
563. Spell checker சொற்பிழை திருத்தி
564. Split பிரிப்பு
565. Spooler சுருளி
566. Spreadsheet விரித்தாள்
567. Standard நியமம்/தரப்பாடு
568. Standardisation தரப்படுத்துதல்
569. Stats புள்ளிவிவரங்கள்
570. String literals சர மதிப்புருக்கள்
571. Structured programming கட்டுரு நிரலாக்கம்
572. Stub குறுங்கட்டுரை
573. Subtitle துணையுரை
574. Suffix பின்னொட்டு
575. Super Computer மிகுவேகக் கணினி/மீக்கணினி
576. Support உதவி
577. Syntax error தொடரமைப்புத் தவறு
578. Sysop முறைமைச் செயற்படுத்துனர்
579. System operator கட்டக இயக்குநர்
580. System programmer கட்டக நிரலாளர்
581. System கட்டகம்
582. Tab தத்தல்
583. Technology தொழில் நுட்பம்
584. Template வார்ப்புரு
585. Terminal முனையம்
586. Terms of service சேவை விதிமுறைகள்
587. Text formatting உரை வடிவம்
588. Text to speech உரையை பேச்சாக்குதல்
589. Text to voice உரையைக் குரலாக்குதல்
590. Theme தோற்றக்கரு
591. Theory தேற்றை
592. Thesis தேற்று
593. Time zone நேரவலையம்
594. Title தலைப்பு
595. Toolbar கருவிப்பட்டை
596. Top level domain உயர் மட்டக் கொற்றம்
597. Transistor திரிதடையம்
598. Trash குப்பை
599. Uncategorized வகைப்படுத்தப்படாதவை
600. Undo செய்தவிர்/செய்ததைத் தவிர்
601. Unit பிரிவு
602. Update இற்றைப்படுத்து
603. Upgrade மேம்படுத்து/மேம்படுத்தல்
604. Upload பதிவேற்று
605. URL (இணைய) முகவரி
606. User பயனர்
607. User account பயனர் கணக்கு
608. User’s guide பயனர் வழிக்காட்டி
609. Utility பயனமைப்பு
610. Vandalism நாசவேலை
611. Variable மாறி/மாறுப்படுகிற
612. Version பதிப்பு
613. Video blog ஒளிதப் பதிவு
614. Video ஒளிதம்/காணொளி
615. View profile சுயவிவரம் காண்பி
616. View பார்வை
617. Viewer பார்வையாளர்
618. Virtual server மெய்நிகர்ச் சேவையகம்
619. Virus நச்சுநிரல்
620. Visitor வருகையாளர்
621. Voice mail குரலஞ்சல்
622. Voice recognition குரலறிதல்/குரல் இணங்காண்பி
623. Volume ஒலியளவு
624. Watch list கவனிப்புப் பட்டியல்
625. Watch கவனி
626. Website இணையத்தளம்
627. Window சாளரம்
628. Wireless கம்பியில்லா
629. Wish list விருப்பப்பட்டியல்
630. Wizard வழிகாட்டி
631. Word processor சொற் செயலி
632. Working environment பணிச்சூழல்
633. Worksheet பணித்தாள்
634. Workstation பணிநிலையம்
635. World Wide Web (WWW) வைய விரிவு வலை


மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.

நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:

Application = விண்ணப்பம்
architecture = கட்டடக்கலை
Home = வீடு

கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:

Application = செயலி
architecture = கட்டமைப்பு
Home = முகப்பு

நிலைக்கும் கலைச்சொற்கள்

ஏனையத் துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. அதேவேளை ஒரே பொருள் கொண்ட இரண்டு மூன்று சொற்கள் பயனரின் விருப்பிற்கமைய பயன்படுத்தப்படுபவையும் உள்ளன.

“Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு” போன்ற கலைச்சொற்களில் தற்போதும் பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் “வலைப்பதிவு” மட்டுமே ஆகும்.

“Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்” என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் “கருத்துரை, பின்னூட்டம்” போன்றவைகள் மட்டும் தான்.

இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இல்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகக் கொள்ளலாம். அது எம் தமிழின் சொல்வளத்தை மேலும் பெருக்கிக்கொள்ள உதவும்.

ஒலிப்பெயர்ப்பு சொற்கள்

ஆங்கிலத்திலிருந்து கலைச்சொற்களாக மாற்றக்கூடாத, மொழிப்பெயர்க்கக் கூடாத சொற்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள “மகாராஜா நிறுவனம்” எனும் பெயரில் உள்ள “மகாராஜா” என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை “The great King என்றோ, Emperor” என்றோ ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுதல் முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயராகும்; அதனாலேயே மகாராஜா என்பதனை ஆங்கிலத்தில் எழுதினாலும் அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டு “Maharaja” என்று எழுதப்படுகின்றது. அவ்வாறே கணினித் துறையிலும் இணையத்திலும் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்களை எம்மொழியில் எழுதினாலும், அவற்றை ஒலிப்பெயர்த்து பயன்படுத்துதலே சரியானதாகும்.

Google = கூகிள்
Yahoo = யாஹு
மகாராஜா = Maharaja (Organization Limited)

கலைச்சொல் உருவாக்குனர்கள்

இந்த அட்டவணையில் காணப்படும் தமிழ் கணினிக் கலைச்சொற்களில் அதிகமானவை இணையத்தில் பரவலாக பயன்படும் சொற்களின் தொகுப்பே ஆகும். என்னால் உருவாக்கப்பட்டவை “Branching = கிளைப்பிரிதல், Customize = விருப்பமை (தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்தல்)” போன்ற ஒரு சில சொற்கள் மட்டுமே ஆகும். கணிசமானவை விக்சனரி குழுமத்தினரால் கலந்தாய்வு செய்து பெறப்படும் சொற்களில் பொருத்தமானவைகளாக நான் கருதும் சொற்கள், குறிப்பாக இராம.கி ஐயாவினால் அறிமுகப்படுத்தும் அருமையான கலைச்சொற்கள் இவ்வட்டணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

Moderation = மட்டுறுத்தல்
Post = இடுகை
Comment = பின்னூட்டம்/முன்னிகை
System = கட்டகம்
Domain = கொற்றம்

தமிழ் மொழிக்கும், தமிழ் கலைச்சொல்லாக்கத்திலும் இராம.கி ஐயாவின் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கவை. இவரது வலைப்பதிவை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும். கலைச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் இவரது இடுகைகள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.

இராம்.கி ஐயாவின் வலைப்பதிவு: http://valavu.blogspot.com/
அண்ணா பல்கலைக்கழகத்தின்: கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி பதிவிறக்கம்

குறிப்பு: கணினி கலைச்சொற்களை தொகுத்து வழங்குவதன் நோக்கம், இன்றைய கணினி உலகில் பயன்படும் ஆங்கில கணினிச்சொற்களுக்கு இணையான கலைச்சொற்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். இத்தொகுப்பு மின்னஞ்சல் ஊடாக கோரப்படும் பலரது வேண்டுகோளுக்கு இணங்கவே இடப்பட்டுள்ளது. அதேவேளை இவை மேலும் தமிழ் கணினி உலகில் பலருக்கும், குறிப்பாக புதிதாக கணினி உலகிற்குள் நுழையும் இளையோருக்கும் பயன்படக் கூடியதாகவும் அமையும். chnical Computer Terms, கணினி சொல்லடைவுகள்
ணினி அருஞ்சொற்கள், Tamil Computing Words

விண்டோஸ்(XP) அப்டேட் சிக்கல்கள்

செப்ரெம்பர் 22, 2010 பின்னூட்டமொன்றை இடுக

எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்தும் பலர், தங்கள் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்துவிட்டதாகவும், விண்டோஸ் எக்ஸ்பியை மீண்டும் இன்ஸ்டால் செய்தபின் எப்படி அதனை அப்டேட் செய்வது என்றும் கேட்டுள்ளனர். விண்டோஸ் வழக்கமாக தானாக அப்டேட் செய்து கொள்கிறது. இத்துடன் நாம் அப்டேட் பைல்களைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு பின் ஒரு நாளில் பயன்படுத்த வசதி உள்ளதா? இல்லை எனில் எப்படி முழுமையாக அப்டேட் செய்வது எனக் கேட்டுள்ளனர். சில மாதங்களாகவே, விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப்பவர்கள், அடிக்கடி ரீபார்மட் செய்வது நமக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே இதற்கான தீர்வினைப் பார்க்கலாம்.

விண்டோஸ் அப்டேட்ஸ் என்பது மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மைக் காலத்தில் வெளியிட்ட விண்டோஸ் துணை சாதன வசதிகள், சரி செய்யப்பட்ட முக்கிய பிரச்னைகள்  (Hot fixes)பாதுகாப்பு வழிகள் (Security Fixes),  மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் (விண்டோஸ் மீடியா பிளேயர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்றவை) ஆகியவற்றை அளிக்கும் சேவை ஆகும். இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தீர்வுகள் நம்மை, அவ்வப்போது தாக்கும் புதிய வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறனை அளிக்கின்றன.
பொதுவாக, அப்டேட்ஸ் எனப்படும் மேம்படுத்தப்படும் செயல்பாட்டினை, இணைய இணைப்பில் இருக்கையில், விண்டோஸ் அப்டேட் சர்வீஸ் (Windows Updates)  என்பதன் மூலம்,  மைக்ரோசாப்ட் தானாகவே மேற்கொள்கிறது. ஆனால், இந்த மேம்படுத்தப்படுத்தலுக்கான கோப்புகளை, கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, பின்னர் நாம் விரும்பும் நாளில், இணைய இணைப்பு இல்லாத போதும் பயன்படுத்திக் கொள்ள நாம் விரும்பலாம். அல்லது இணைய இணைப்பு கிடைக்காத இடங்களில் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவற்றைப் பதியலாம். இத்தகைய சூழ்நிலைகள் பல நேரங்களில் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்த பின்னர், இந்த பைல்களை இயக்கி, விண்டோஸ் சிஸ்டத்தினை முழுமையாக நவீனமாக அமைத்துக் கொள்ளலாம்.  இந்த பைல்களை சிடியில் பதிந்து வைத்துக் கொள்வதற்கான  வழிகளை இங்கு காண்போம்.
1. முதலில் விண்டோஸ் அப்டேட் டவுண்லோடர்(Security Fixes), என்னும் பைலை http://wud.jcarle.com/ ProgramFiles.aspx  து என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளவும். இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும்.
2. அடுத்து http://wud.jcarle. com/ UpdateLists.aspx என்ற முகவரி யில் உள்ள தளம் சென்று, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதற்கான அப்டேட் பட்டியலை டவுண்லோட் செய்திடவும்.  உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சரியான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இங்கு தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் அப்டேட்டிங் சரியாக நடைபெறாது.
3. அப்டேட்ஸ் பட்டியலை இறக்கி, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்த பின்னர் நீங்கள் உங்கள் நோக்கத்திற்கான வேலையை மேற்கொள்ள தயாராகிவிட்டீர்கள். அடுத்து விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் பைலை இயக்கவும்.
இதற்கான விண்டோ கிடைத்தவுடன் ஓகே கிளிக் செய்து தொடரவும்.
4. இனி அப்டேட்ஸ் பட்டியல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது   “Compressed UL file installed என்றபடி ஒரு மெசேஜ் விண்டோ கிடைக்கும். ஓகே கிளிக் செய்து தொடரவும்.
இந்த நேரத்தில் சிலருக்கு  “Warning, .NET framework component is not installed”    என்ற எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.  .NET framework  என்ற இந்த வசதி கம்ப்யூட்டரில் இருக்க வேண்டும் என்பதால் இந்த செய்தி தரப்படுகிறது. எனவே தயங்காமல், இடையே இதனையும் இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.microsoft.com /downloads/details.a spx?FamilyID=0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f5
5.  UL பைல் கிளிக் செய்தவுடன், விண்டோஸ் அப்டேட்ஸ் டவுண்லோடர் விண்டோவிற்கு மீண்டும் வருவீர்கள். அங்கு விண்டோஸ் அப்டேட்ஸ் செய்வதற்கான சில அடிப்படை வசதிகள் பட்டியலிட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
6. உங்களுக்கு எந்த வசதிகள் எல்லாம் அப்டேட் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவை எல்லாவற்றையும் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கவும். அனைத்தையும் தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் இதுவரை வந்தமைக்கான சர்வீஸ் பேக், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பல மோசமான பிழைகளைச் சரி செய்திட்ட புரோகிராம்கள், விண்டோஸ் மீடியா பிளேயர், டாட் நெட் பிரேம்வொர்க் போன்றவையும் இருக்கும்.
7. இனி, Change” பட்டனில் கிளிக் செய்து,இந்த பைல்கள் அனைத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு போல்டரில் சேமித்து வைக்கவும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள ட்ரைவில் இவற்றை வைக்க வேண்டாம். வேறு ஒரு ட்ரைவில், போல்டரில் வைத்திடவும்.
8. இப்போது எல்லாம் தயாராக உள்ளது. இனி Change”  பட்டனில் கிளிக் செய்திடவும். அனைத்து அப்டேட் பைல்களும், நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் பதியப்படும். பைல்களின் அளவு சற்று அதிகமாகவே இருப்பதால், சற்று கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.  அப்ளிகேஷன் விண்டோ வினையோ, இணைய இணைப்பையோ இந்த வேளையில் மூடக் கூடாது.
9. டவுண்லோட் முடிந்தவுடன், குறிப்பிட்ட போல்டரைத் திறந்து பார்த்தால், அப்டேட் செய்வதற்கான அனைத்து பைல்களும் இருப்பதனைப் பார்க்கலாம்.
10. இதில் உள்ளவற்றை, கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட, குறிப்பிட்ட அப்ளிகேஷன் பைலை டபுள் கிளிக் செய்தால் போதும். கம்ப்யூட்டரில் அவை அப்டேட் செய்யப்படும்.
11. இந்த பைல்களை ஒரு டிவிடியில் பதிந்து எடுத்துச் சென்று, வேறு எந்த கம்ப்யூட்டரிலும் அப்டேட்டிங் பணியை மேற்கொள்ளலாம்
.

நன்றி:-தி.ம


ஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க – வேலன்

செப்ரெம்பர் 18, 2010 2 பின்னூட்டங்கள்

சமீபத்தில் நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவருக்கு பி.இ.படிக்கும் ஒரு மகன் -+ 2 மற்றும் 10th  படிக்கும் இரண்டு மகள்கள்.இணையம் பற்றி பேசும்போது தேவையில்லாமல் அடல்ஸ்ஒன்லி படங்கள் தோற்றுவதாகவும் அதை நிறுத்த ஏதாவது செய்யமுடியுமா என்றும் கேட்டார். அவருக்கான பதிவு இது.தேவையில்லாமல் வரும் படங்களை தடைசெய்வதோடு அல்லாமல் கம்யுட்டரில் அதிக நேரம் Games விளையாடுவதையும் Chat செய்து பொழுதினை கழிப்பதையும் தடுக்கலாம்.சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இதுவும் 4 எம்.பி. கொள்ளளவு தான். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இந்த சாப்ட்வேருக்கான பாஸ்வேர்ட் இது. நீங்கள் கொடுக்கும் பாஸ்வேர்டை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளவும. பின்னர் நீங்கள் இந்த சாபட்வேரை ஓப்பன் செய்யும் சமயம் அந்த பாஸ்வேர்டை கொடுத்தால்தான் ஓப்பன் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மைதான் யாரும் கவனிக்கவி்ல்லையே – நாம் தவறு செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் இறைவன் அதை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றான். அதுபோல இந்த சாப்ட்வேரை நிறுவிய பின டாக்ஸ்பாரில் ஒற்றைகண்ணுடன் கழுகு உங்கள் கம்யுட்டரின் நடவடிக்கைகளை கவனித்துகொண்டு இருக்கும்.அது ஆபாச தளங்கள் வந்தால் அதை தடை செய்துவிடும்.குழந்தைகள் என்ன செய்கிறார்களோ என்கின்ற பதட்டம் அடையாமல் நாம் மற்ற வேலைகளை பார்த்துகொண்டுஇருக்கலாம். டாக்ஸ்பாரில் உள்ள ஒற்றை கண்ணை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ஏற்கனவே நீங்கள்கொடுத்த பாஸ்வேரட் கொடுத்து உள் நுழையவும்.
இப்போது மீண்டும் டாக்ஸ்பாரில் அந்த கண்ணை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் Settings and options கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் ஏதும் மாற்றாதீர்கள். இதுதான் ஆபாச படங்களை தடை செய்யும் செட்டிங்ஸ்.அடுத்துள்ள டேப்புகளில் தேவைப்பட்டால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இறுதியில் ஓ.கே. தாருங்கள்.
அடுத்துள்ளது சாட்…இதில் நீங்கள் உங்கள் குழந்தைகள் சாட் செய்யும் நேரத்தை சேட் செய்துகொள்ளலாம். அந்த நேரம் மட்டும் சாட் வேலை செய்யும்.
இதைப்போலவே விளையாட்டை யும் தேவையான நேரம் கொடுத்து மற்ற நேரங்களை தடை செய்துவிடுங்கள்.
நீங்கள் வேலைக்கு செல்பவராக இருக்கலாம். வெளியில் செல்ல நேரலாம். அவ்வாறான நேரங்களில் குழந்தைகள் கம்யுட்டரில்  அமரும் நேர்த்தை செட் செய்துவிடலாம். அந்த நேரம் கடந்துவிட்டால் கம்யுட்டர் வேலை செய்யாது.
குழந்தைகளும் சரி – நாமும் சரி..தொடரந்து மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தால் கண் என்ன ஆவது. அதற்கும் இதில் கண்ணை காப்பதற்கான வழி வைத்துள்ளார்கள். எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை கம்யுட்டர் ஆப் ஆகி பின்னர் எவ்வளவு நேரத்திற்கு பின் ஆன் ஆக வேண்டும் என செட் செய்துவிட்டால் நாம் மறந்துவிட்டாலும் கீழ்கண்ட விண்டோ தோன்றி கம்யுட்டர் ஆப் ஆகிவிடும்.
இவ்வளவு தடைகளும் தேவையானல் வைத்துக்கொள்ளலாம் தேவையில்லையென்றால் எடுத்துவிடலாம்.

ஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்

ஜூலை 29, 2010 1 மறுமொழி


கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் போக்குவரத்தினைக் கையாளும் ரௌட்டர்களில் தான் ஏற்படுத்தப்படும் என்று இந்த ஆய்வை வழி நடத்தும் வின்சென்ட் சான் கூறியுள்ளார்.

ரௌட்டர்களில் உள்ளே அமையும் மின் அலைகளை, அதிவேக ஆப்டிகல் அலைகளாக மாற்றினால் இந்த வேகம் கிடைக்கும் என்று சொல்கிறார்.100 மடங்கு வேகத்தில் செயல்படுகையில், தற்போது 100 எம்பி பைல் அனுப்பும் நேரத்தில், 10 ஜிபி பைல் ஒன்றை அனுப்ப முடியும்.

கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் உருவாகி வருகின்றன. நாம் உருவாக்கும் பைல்களின் (முப்பரி மாண காட்சிகள், ஆன்லை னில் விளையாட்டுக்கள், அதிவேக நிதி பரிமாற்றங்கள் என) அளவும் அதிகமாகி வருகிறது.

இதனால் பைல்களை அனுப்புவதிலும், பெறுவதிலும் மக்கள் வேகத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த வளர்ச்சி ஏற்படுகையில், இன்டர்நெட் வேகமாகச் செயல்பட வில்லை என்றால், பல இடங்களில் இது முடங்கி நிற்கும் நிலை ஏற்படும். எனவே இதற்கான தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டும். தீர்வு ஆப்டிகல் பைபர்களில் தான் அடங்கியுள்ளது என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.

இப்போதும் இன்டர்நெட் போக்குவரத்தில் ஆப்டிகல் பைபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அதிக தொலைவு உள்ள தூரங்களில், கண்டம் விட்டு கண்டம் செல்லும் இடங்களில் கூட, பயன்படுத்தப் படுகின்றன. இவை எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் தகவல்களைக் கையாளும் விதத்தைக் காட்டிலும், அதிகத் திறனுடன் கையாள்கின்றன.

ஆனால் ஆப்டிகல் சிக்னல்களைக் கையாள்வது சற்று சிக்கலான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஒரு ரௌட்டர் தனக்கு வெவ்வேறு திசைகளிலிருந்து ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்றுக் கையாள்கையில், சிக்கல்களைப் பெறுகிறது. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இன்டர்நெட்டில் உள்ள ரௌட்டர்கள், ஆப்டிகல் சிக்னல்களைப் பெற்று, அவற்றை எலக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன.

இதன் மூலம் அவற்றைக் கையாளும் நேரம் வரும்வரை, அந்த சிக்னல்கள் மெமரியில் பத்திரமாக வைக்கப் படுகின்றன. பின்னர் அனுப்பபடும் நிலை வருகையில், இந்த எலக்ட்ரிக்கல் சிக்னல்கள் மீண்டும் ஆப்டிகல் சிக்னல்களாக மாற்றி அனுப்பப்படுகின்றன.

இந்த செயல்பாட்டில் நேரமும் திறனும் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. வின்சென்ட் சான் தலைமையில் இயங்கும் ஆராய்ச்சியாளர் குழு இந்த மாறுதலுக்கான தேவையை நீக்கும் தீர்வைக் கண்டறிந்துள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழு “flow switching” என்ற வழிமுறையை இதற்கென உருவாக்கி உள்ளனர்.
இதன் மூலம் நெட்வொர்க்குகளுக்கிடையே அதிக அளவில் டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகையில், எடுத்துக்காட்டாக மதுரையில் உள்ள ஒரு சர்வர் அமெரிக்காவில் உள்ள ஒரு சர்வருக்குப் பெரிய அளவில் டேட்டாவினை அனுப்புகையில், இதற்கு மட்டும் எனச் சில வழி செயல்முறைகளை அமைத்துக் கொள்கிறது.

இந்த வழிமுறைகளில் செயல்படுகையில், ஒரு வழியில் கிடைக்கும் சிக்னல்களை மட்டுமே ரௌட்டர்கள் பெற்று, இன்னொரு குறிப்பிட்ட வழியில் மட்டுமே அனுப்புகிறது. பல்வேறு திசை களிலிருந்து ஆப்டிகல் சிக்னல்கள் வரும் வாய்ப்பு இல்லை என்பதால், இவற்றை எலக்ட்ரிக்கல் சிக்னல்களாக மாற்றி மெமரியில் வைத்திடும் கட்டாயத் தேவை இங்கு ஏற்படாது.

இதனால் இன்டர்நெட் போக்குவரத்து வேகம் 100 மடங்கு பெருகும். அந்நிலை ஏற்படுகையில் இன்டர் நெட் பயன்பாடு பல திசைகளில் வெகு வேகமாக விரிவடையும். இது மனித வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு முன் இந்த ஆராய்ச்சியில் பல நிலைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது.

நன்றி:- தெரிந்து கொள்ளலாம்

FUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்


கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்

த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.

இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.

F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.

F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.

F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.

F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள

F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.

F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-

F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.

F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.

F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.

F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள் .

நன்றி:- இனைய நன்பர்கள்

இண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100


இண்டர்நெட் எனும் மாயவலை பாதுகாப்பாக கையாள… பக்குவமாக கற்றுக்கொள்ள…

சூப்பர் டிப்ஸ் 100

1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!

மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.

கற்றுக் கொள்ளுங்கள்… கையாளுங்கள்… இன்டர்நெட்டையும் வாழக்கையையும் அழகாக!

சாஃப்ட்வேர்… சிறு அறிமுகமும் சில தகவல்களும்!

கணினியின் இதயம்… சாஃப்ட்வேர்! அந்தளவுக்கு கணினியின் இயக்கத்துக்கு முதற் காரணமாக இருக்கும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பற்றிய அடிப்படை விவரங்கள் அறிவோமா..?

1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.

2. அசல் மென்பொருட்களைவிட, அவற்றின் போலி பாதிப்புகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ‘களையெடுப்பு’ நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.

3. கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால், நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும். எனவே, கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் ‘பேக்-அப்’ எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காகவே இலவச மென்பொருட்கள் இணையத்தில் உலவுகின்றன.

4. நம் கணினியில் நீண்ட காலம் பயன்படுத்தாத மென்பொருள் தொகுப்புகளைத் தயங்காமல் அகற்றிவிட வேண்டும். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்வதோடு, வைரஸ்களின் தாக்குதலுக்கும் அவை எளிதில் ஆளாகக் கூடும்.

5. தேவையில்லாத மென்பொருட்களை நிரந்தரமாக அகற்றுவதற்கு, கன்ட்ரோல் பேனல் (Control panel) சென்று, சேர்த்தல் அல்லது நீக்கல் (Add or remove programs) செய்வதற்கான ஐகானை கிளிக் செய்து, ஒவ்வொரு மென்பொருளாக தேர்வு செய்து அகற்றலாம்.

இணையுங்கள் இணையத்தின் தேடுதல் (Search Engine) வேட்டையில்!

இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…

6. இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ‘1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

7. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.

8. ஸர்ச் இன்ஜின்களில் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், துல்லியமான தகவல்களைப் பெறலாம்.

9. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால், சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + realestate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.

10. பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

11. உதாரணமாக, சூப்பர் ஸ்டார் என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் ரஜினிகாந்த் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், சூப்பர்ஸ்டார் – ரஜினிகாந்த் (Superstar – Rajinikanth) என்று தேடுங்கள்.

12. ‘நான் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம்’ என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள். உதாரணமாக, “அவள் விகடன்” (“Aval Vikatan”).

13. குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு ”~”’ என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ”அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர் (“Aval vikatan ~ Women Welfare”).

14. ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, டிஃபைன்:பெலிசியேஷன் (“define: felicitation”).

விரைவான தகவல் தொடர்புக்கு கை கொடுக்கும் மெயில்… இ-மெயில்!

சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…

15. முன்பெல்லாம் மின்னஞ்சல்களின் கொள்ளளவு மிகச் சிறியதாக இருந்ததால் பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. இப்போது போட்டி காரணமாக, மின்னஞ்சல் சேவை அளிக்கும் ஒவ்வொரு இணையதளமும் 1 ஜி.பி. மற்றும் அதற்கு மேல் கொள்ளளவுள்ள வசதியைத் தருகின்றன.

16. ஜி-மெயில் மின்னஞ்சலில் 20 எம்.பி. அளவு வரை கோப்புகளை இணைப்பாக அனுப்பலாம். இதுவே அதிகபட்ச இணைப்பு அளவாக இருந்தது. ஆனால், யாஹ” இப்போது அதிரடியாக 100 எம்.பி. வரை இணைப்பாக கோப்புகளை அனுப்பும் வசதியை தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது.

17. மின்னஞ்சல் அனுப்பும்போது மிகுந்த கவனம் தேவை. அனுப்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீங்கள் டைப் செய்தவற்றை முழுதாக படித்துவிடுங்கள். அவசரப்பட்டு send பட்டனை அழுத்திவிட்டால் அவ்வளவுதான்… மின்னல் வேகத்தில் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மின்னஞ்சல் சென்று விடும்.

18. ‘அவுட்லுக்’ மற்றும் ‘அவுட்லுக் எக்ஸ்பிரஸ்’, சொந்தமாக வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற மின்னஞ்சல் புரோகிராம்கள். இதில் இணைய இணைப்பு இல்லாமலும் மின்னஞ்சல்களைப் படிக்கலாம். ஜி-மெயில், யாஹ” என எந்த மின்னஞ்சல்களையும் இவை பதிவிறக்கித் தரும்.

19. ‘அவுட்லுக்’ மூலம் மின்னஞ்சல் அனுப்பும்போது, முதலில் ‘அவுட்பாக்ஸ்’ (Outbox) பகுதியில் உங்கள் மின்னஞ்சல் நிறுத்தப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அனுப்பப்படும். எனவே, தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பினால்கூட, ‘அவுட்பாக்ஸ்’ சென்று அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.

20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

21. உங்கள் மின்னஞ்சலில் ‘தானியங்கி பதில் செய்தி அனுப்பும் வசதி’யை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோருக்கு உடனடியாக, ‘உங்கள் மெயில் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்’ என்பது போன்ற செய்திகள் சென்று சேரும்.

குப்பை மெயில் (Spam) தெரியுமா..?

நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘ஸ்பேம்’ எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே…

22. உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.

23. ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை ‘ஸ்பாமர்கள்’ எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.

24. இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.

25. அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.

26. தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.

27. குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.

28. உங்கள் மின்னஞ்சல் கணக்கின் ‘ஸ்பேம்’ பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.

29. தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு ‘என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்’ என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

வைரஸை (Virus) விரட்டுவோம்!

நம் கணினியின் இயக்கத்தை தாமதப்படுத்தும், ஸ்தம்பிக்க வைக்கும், ஒரு கட்டத்தில் செயலிழக்க வைக்கும் வில்லன்கள்தான் வைரஸ்கள்! அந்த வில்லன்களிடமிருந்து நம் கணினி கன்னுக்குட்டியைக் காப்பாற்றுவதற்கு பிடியுங்கள் இந்த டிப்ஸ்களை!

30. வைரஸ்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். சில வைரஸ்கள் சிறிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை சாதாரண ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருட்களை வைத்து அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து மொத்தத்தையும் காலியாக்காமல் விடாது.

31. ஸ்பைவேர், ஆட்வேர், ட்ரோஜான், மால்வேர் என பல்வேறு வடிவங்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றுள் ட்ரோஜன் மிக மோசமானது.

32. இணையத்திலிருந்து ஏதேனும் மென்பொருள் அல்லது புரோகிராமை பதிவிறக்கும்போது, அவற்றுடன் ட்ரோஜனும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். அதன் பின் நம் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு அபகரிக்கப்படும்.

33. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.

34. கம்ப்யூட்டரில் அவ்வப்போது ‘ஆட்டோமேடிக் அப்டேட் செய்து கொள்ளுங்கள்’ என்ற செய்தி தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் விண்டோஸ், இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், மைக்ரோசாஃப்ட் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

35. இணையத்தில் உலவும்போது குட்டித் திரைகளில் தோன்றும் விளம்பரங்களில் பெரும்பாலானவை வைரஸ்களின் தூரத்துச் சொந்தங்களாக இருக்கும். எனவே, டோன்ட் டச் இட்!

36. இணையத்திலிருந்து முன் பின் தெரியாத புரோகிராம்கள், விளையாட்டுக்களை பதிவிறக்குவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அவை வைரஸ் விருந்தாளிகளாக இருக்கலாம்.

37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.

38. இணையத்திலிருந்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை (ஆன்டி வைரஸ்) இலவசமாக பதிவிறக்கும்போது கவனம். சில நேரங்களில் இந்த இலவசங்களுடன் சேர்த்து வைரஸ்களும் இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே முறையான, நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

39. முன் பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக, இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.

நண்பர்கள், உறவுகளை, புதியவர்களை இணையத்தில் இணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் (Social networking sites)!

தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைய பயனாளர்கள் அனைவரையும் ஆட்டிப் படைப்பது சமூக வலையமைப்பு எனும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்தான். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் இணைய உலகில் உள்ளன. அவை பற்றி கொஞ்சம்… கொறிக்க!

40. இந்தியாவில் ஃபேஸ்புக், ஆர்குட் ஆகிய தளங்கள் புகழ்பெற்றவை. ஆர்குட் என்பது கூகுளின் சேவை. மிக அதிகமான பயனாளர்களைக் கொண்ட இந்த சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டது ஃபேஸ்புக்.

41. சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பெண்களில் இளவயதினர் அதிகளவிலும், ஆண்களில் நடுத்தர வயதினர் அதிகளவிலும் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

42. இந்தியாவில் ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்தான் அதிகளவில் பயனாளர்கள் இருப்பதால், இந்த இரண்டு சேவைகளும் போட்டி போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகின்றன.

43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.

ஹேக்கிங் (Hacking)… கவனம்!

நமக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துக்களை, அதாவது ஆன்லைன் சொத்துக்களை நம் கண் முன்னாலேயே அழகாக அபகரித்துச் செல்வதே ஹேக்கிங். அதைப் பற்றி சில துளி தகவல்கள் இங்கே…

44. ஹேக்கிங் என்பது இன்று நேற்று முளைத்த சொல் இல்லை. 1900-ம் ஆண்டுகளிலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஹேக்கிங்கின் தொடக்கம் என்று கூறுகின்றனர்.

45. ஹேக்கிங் என்ற முறைகேட்டை எல்லோராலும் செய்து விட முடியாது. உலகின் மிகச்சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 100 பேரைத் தேர்வு செய்தால், அவர்களுள் 80 பேர் ஹேக்கர்களாக இருப்பர்.

46. அதிக தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் என பல சிறப்புகளைப் பெற்றிருப்பவர்தான் முழுமையான ஹேக்கராக முடியும்.

47. இணைய இணைப்புதான் ஹேக்கிங் மன்னர்களுக்கு முதுகெலும்பு. இணையத்தில் நாம் உலவுவதை கண்காணித்து, நம்மைக் குறிவைத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களுக்குள் நாம் ஹேக்கிங் வளையத்துக்குள் சிக்கிவிடுவோம்.

48. சிலருக்கு ‘பாப் – அப்’ திரைகள் மூலம் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகள் தோன்றும். சிலருக்கு, ‘உங்கள் கம்ப்யூட்டர் ஆபத்தில் உள்ளது’ என்பது போன்ற எச்சரிக்கைச் செய்திகள் தோன்றும். இதுபோன்ற செய்திகளை கிளிக் செய்துவிட்டால் முடிந்தது கதை.

49. பொதுவாக இந்த ஹேக்கர்கள், ஏதாவது ஒரு சிறிய ஓட்டை வழியாக தண்ணீரைப் போல ஊடுருவி, நம்மை மூழ்கடித்து, நம் அறிவுசார் சொத்துக்கள், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் சேவைத் துறை என்று நாம் பயன்படுத்தும் பலவற்றையும் தங்கள் வசம் வளைத்துக் கொள்வார்கள்.

50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.

51. வொயிட் ஹேட், க்ரே ஹேட், ஸ்கிரிப்ட் கிட்டி, பிளாக் ஹேட் என ஹேக்கிங்கில் பலவகை உண்டு. இவற்றுள் பிளாக் ஹேட் மிக மோசமானது. நம் வங்கிக் கணக்குகளை மொத்தமாக முடக்கி பணத்தை அபகரிக்கும் ஹேக்கிங் இது.

52. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் சந்தேகப்படும்படியான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் அளிக்கும்போது கவனமாக இருந்தால், ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்கலாம்.

ஆக்டிவ்வாக இருங்கள் ஆன்லைனில்!

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…

பயன்படுத்துங்கள் ஆன்லைன் பேங்க்கிங் (Online Banking)!

53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.

54. ஆன்லைன் வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.

55. இப்போது ‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!

56. இதுபோன்ற தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்… அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.

57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.

58. சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.

59 ஆன்லைன் பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.

60. சொந்த கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.

நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (Online ticket booking)!

61. ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.

62. பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.

63. ஆன்லைனில் 21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.

64. இப்போது தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக p://www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்றும் கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது).

65. சாதாரண தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!

66. ஷாப்பிங் என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.

67. ஆன்லைன் ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

68. முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!

69. நம்பத் தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.

70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

71. சற்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

72. இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.

73. ஒவ்வொரு முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

74. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.

75 உதாரணமாக, indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்!

5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.

76. இணையத்தில் தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

77. முன்பெல்லாம், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.

78 யூ-டியூப் (www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.

79 திரைப்படங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.

80 பாடல்களைக் கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.

81. ஆன்லைனில் பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.

82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.

83. சீரியஸாக ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, ‘இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?’ என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.

84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.

‘ஜி-டாக் (Google Talk)’-ல் பேசுங்கள்… ‘சாட்’டுங்கள்!

85 நண்பர்களுடன் அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். ‘யாஹ” மெசெஞ்சரை’ கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது ‘ஜி-டாக்’.

86. ஜி-மெயில் சேவையின் அங்கம்தான் ‘ஜி-டாக்’ என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

நம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)!

கடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்தகங்களும், மின் பத்திரிகைகளும்!

87. இணையத்தில் தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.

88. இணைய தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.

89. புத்தகங்கள் பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.

90 பல தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.

91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.

92. உதாரணமாக, அவள் விகடன் உள்ளிட்ட விகடன் பதிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென ஆண்டுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை