தொகுப்பு

Archive for the ‘ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??’ Category

ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??


ஆர்ப்பரித்த கடலே-நீ

ஆள்பறித்த கடலானாய்

கடவுளின் கட்டளையால்

“சுனாமி”யானாய்

கடவுளின் கட்டளை மறந்து

சாத்தானின்

“பினாமி”யானோம்

கடவுளுக்கு பயந்த நீ அப்பாவி;

கடவுளை மறந்த நாங்கள் பாவிகள்

மோசஸின் தடிக்கு

பிளந்ததும்;

மோசமான எங்களை அளந்ததும்

கடவுளின் கட்டளைதான் கடலே

உடலை ஆட்டுவது உயிர்தானே

“கரையிலும் கடலிலும் பாவமிகுதியால்

இறையின் தண்டனை உண்டு”

அபாயச் சங்கு வேதம் முழங்கியும்

அபாய அறிவிப்பின்றி வந்தாய் என்று

உபாயம் தேடி உளறுகின்றோம்;

நியாயம் தேட மறுக்கின்றோம்

“கடல்மீது அனு

தாபங்களுடன்”

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/