தொகுப்பு

Archive for the ‘ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு!’ Category

ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா

ஜனவரி 23, 2011 1 மறுமொழி


கிரெடிட் கார்டு வேண்டுமா என்று கேட்டாலே போதும், ஓடிப் போய் வாங்கிக்கொள்பவரா நீங்கள்? அல்லது எப்போதும் நாலைந்து கார்டுகளுடன் இருப்பவரா? அப்படி என்றால் இந்த சாதனம் உங்களுக்குதான் அவசியம் தேவை!

ஷேப் கார்டு!


கிரெடிட் கார்டு  கையில் இருந்தால் சூப்பர் பலம். அதுவே காணாமல் போய்விட்டால் அதுதான் சூப்பர் பயம்! காரணம் காணாமல் போன நம் கார்டு தவறான ஆள் கையில் கிடைத்தால் அவ்வளவுதான், சூறையாடிவிடுவார்கள்!

இந்த பிரச்னைகளை ஒழித்துக் கட்ட புதிய கிரெடிட் கார்டு ஒன்றை புழக்கத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது விஸா யூரோப் நிறுவனம். வழக்கமான சைஸில் இருக்கும் இந்த கிரெடிட் கார்டில் சின்னதாக ஒரு கீபேட் இருக்கும். கூடவே டிஜிட்டல் நம்பர் டிஸ்ப்ளேயும் இருக்கும்.

வழக்கமாக கிரெடிட் கார்டுகளில் செக்யூரிட்டி நம்பரை பதிந்து வைத்திருப்பார்கள். பின்நம்பரை மட்டும் ரகசியமாக வைத்திருப்போம். ஆனால், இந்த கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை, நமக்குத் தேவையான கிரெடிட் கார்டு நம்பரை நாமே தேர்வு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஒருமுறை பயன்படுத்திய நம்பரை அடுத்தமுறை விரும்பினால் தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். இதனால் நம் கார்டை அவ்வளவு சீக்கிரம் யாராலும் தவறாகப் பயன்படுத்திவிட முடியாது. இதுபோக இருக்கவே இருக்கிறது பின் நம்பர் எனும் கவசம். விஸா, யூரோப் நிறுவனம்தான் இத்தகைய வசதியை அளிக்கிறது.

ஆல் இன் ஓன் கிரெடிட் கார்டு

உங்களிடம் இருக்கும் அத்தனை கிரெடிட் கார்டுகளையும் ஒன்று சேர்த்து ஒரே கார்டாக ஆக்கி விட்டால்? இப்படிப்பட்ட யோசனையில் பிறந்ததுதான் இந்த சாதனம். இதுவும் கிட்டத்தட்ட ஒரு கார்டு மாதிரிதான் இருக்கும். ஒரு எலெக்ட்ரானிக் கார்டில் உங்கள் அனைத்து கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களையும் உள்ளீடு செய்து பயன்படுத்துவதுதான் இதன் அடிப்படை. இதிலிருக்கும் மெமரி கார்டு மூலம் இந்தத் தகவல்கள் சேமிக்கப்படுகிறது. மறுமுனையில் இருக்கும் ‘நாப்’ மூலம் அப்போதைக்கான கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த எலெக்ட்ரானிக் கார்டின் டிஸ்ப்ளேயில் நீங்கள் தேர்வு செய்யும் கிரெடிட் கார்டு இடம் பெறுவதால் குழப்பத்திற்கு இடமில்லை. நீங்கள் செலவு செய்வதை திரையில் தற்காலிக பில்-ஆக பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

வழக்கமான கார்டு எக்ஸ்பயரி பிரச்னை இந்த எலெக்ட்ரானிக் மல்டி கார்டில் இல்லை. உபகரணம் பழுதுபட்டால், மெமரி கார்டை புதிய எலெக்ட்ரானிக் கார்டில் பொருத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு காப்பி எடுத்து சேமித்தும்    கொள்ளலாம்.


‘செல்’ மூலம் கிரெடிட் பேமன்ட்!

வாடிக்கையாளர்கள் பொருள் வாங்கும்போது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்த வசதியாக ‘ஸ்வைப் மிஷின்’ இருக்கிறது. வாடிக்கையாளர்களின் இடத்துக்கே சென்று சில சேவைகளை செய்யும் போது கார்டு மூலம் பணம் பெற வழி இருக்காது. இந்த சிக்கலைத் தீர்க்க செல்போனையே ஸ்வைப்பிங் மிஷினாகப் பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது. ஸ்கொயர் என்ற அமெரிக்க கம்பெனி தரும் ஸ்டாம்ப் சைஸ் கார்டு ரீடரை மொபைலில் பொருத்திக்கொண்டால், எந்த கிரெடிட் கார்டிலிருந்தும் பணத்தை  எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இன்னும் என்னவெல்லாம்தான் வருமோ!


நன்றி:- நா.வி

நன்றி:- – ஜானவிகா