தொகுப்பு

Posts Tagged ‘கவி’

எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!

அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!

நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!

bf2
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

ஆடையில் அழகு! – மு.அ. அபுல் அமீன் நாகூர்


SK

உடை உடலை மறைத்து மானத்தைக் காக்கிறது. தோற்றத்தில் பொலிவைத் தருகிறது. விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. ஆடைகள் அணிவது பற்றி அருமறைக் குர்ஆன் கூறுவதையும் அதன்படி ஒழுகிய அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளையும் நாமும் பின்பற்றுவோம்.

“ஆதாமுடைய மக்களே! உங்களின் மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கிறோம்” என்று திருமறைக் குர்ஆனின் 7-26 வசனம் கூறுகிறது. ஆடைகள் ஆண்களின் ஆண்மையையும் பெண்களின் பெண்மைத் தன்மையையும் நன்னயமாய்க் காட்டும். அதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உடைகளை ஆண்கள் அணிவதையும் ஆண்களுக்குரிய ஆடைகளைப் பெண்கள் அணிவதையும் சபித்ததாக அபூஹீரைரா (ரலி) அவர்கள் சாற்றுவதை அபூதாவூதில் காணலாம்.

பகட்டும் படாடோபமும் பாவத்திற்கு அழைத்துச் செல்பவை. எளிமை என்ற பெயரில் ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது. அதனால் ஆடம்பரமான ஆடை அணிவதையும் மோசமான உடை உடுத்துவதையும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் உரைப்பது ரஜீனில் காணப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள் தலைப்பாகை கட்டினர். தலைப்பாகை அணிவதால் இரக்க இயல்பு அதிகமாகும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை அபுல் மலீஹ் (ரலி) அவர்கள் கூறியது அபூதாவூதில் குறிப்பிடப்படுகிறது.

whitesilkமணிக்கட்டுவரை நீண்ட கையுடைய சட்டையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அணிந்ததை அஸ்மா பின்து எஜீதுப்னுஸ் கைனி (ரலி) அவர்கள் அறிவிப்பது அபூதாவூத், திர்மிதீ நூல்களில் காணப்படுகிறது. இக்காலத்திலும் முழுக்கை சட்டை அணிவது மதிப்பிற்குரியதாய் உள்ளது.

கீழாடையை கணுக்கால் முட்டிகளுக்குக் கீழ் தொங்க விடக்கூடாது என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததை இப்னு உமர் (ரலி) அவர்கள் இயம்பியதும் அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தொங்க விடுவது தற்பெருமைக்குரியது. தரையைத் தொடும் ஆடைகள் தரையில் உள்ள குப்பை அசுத்தங்களில் தோய்ந்து நோய்க்குக் காரணமாகின்றன.

“பெண்கள் தங்களின் ஆடை அலங்காரங்களை அந்நிய ஆண்களின் கண்களில் படும்படி வெளிப்படுத்த வேண்டாம். பூமியில் கால்களைத் தட்டி நடக்க வேண்டாம்” என்று அல்குர்ஆன் 24-34வது வசனம் கூறுகிறது. தரையைத் தட்டி நடப்பது பிறரின் கவனத்தைக் கவரும். ஆடை, அலங்காரங்களும் பிறரின் கண்களுக்கு கவர்ச்சியாகும். கவர்ச்சி வீழ்ச்சியில் விழ வைக்கும்.

“முதுமையடைந்து நடமாட முடியாது உட்கார்ந்தே இருக்கும் கிழவிகள் மேலாடைகளைத் தளர்த்தி இருப்பது தவறில்லை; எனினும் தளர்த்தலைத் தவிர்ப்பது அவர்களுக்கும் நன்று” என்று நவில்கிறது குர்ஆனின் 24-60வது வசனம். இறைமறைக் குர்ஆன் இயம்பும் முறையில் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் ஆடை அணிந்து அல்லாஹ்வின் அருள் பெற்று வாழ்வோம்.

நன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

பிரிவுகள்:ஆடையின் அழகு, ஆடையில் அழகு, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்


divorce
இஸ்லாத்தில் விவாகரத்து தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டுமே பயன்படுத்தும் நிபந்தனைகள் நிறைந்த உரிமை. பொறுப்பைத் தட்டிக் கழித்துத் தப்பித்துப் பதுங்கிக் கொள்ள, ஒதுங்கிக்கொள்ள ஒத்துழைக்கும் சட்டமல்ல. சதி பதிகளைப் பிரிக்கும் சாதாரண சம்பிரதாய சட்டமல்ல. கட்டம் கட்டமாக பல படிகளைக் கடந்து கால அவகாசத்தோடு அவசரமின்றி பின்னுள்ள வாழ்வின் பிரயோசனத்தையும் கருத்தில்கொண்டு பிரயோகிக்கும், பிரிவினையைக் கடுமையாக்கும் கடுஞ்சட்டம்.

ஆணுக்கு மனைவியை விவாகரத்து (தலாக்) செய்ய எத்துணை உரிமை உள்ளதோ அத்துணை உரிமையும் கணவனை விவகாரத்து செய்ய பெண்ணுக்கும் உண்டு. பெண் பின்னுக்குத் தள்ளப்படவில்லை. எந்த ஒரு பெண்ணும் தன் கணவன் கடுமையாக இடையூறு செய்வான் என்றோ புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால் இருவரும் சம்மதித்து தங்களுக்குள் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்வது குற்றமல்ல என்று திருக்குர்ஆன் 4-128 வசனம் கூறுகிறது. மதீனாவில் அப்துல்லாஹ் பின் அபீ அவ்பாவின் மகள் ஜமீலா பேரழகி. இவரின் கணவர் தாபித் பின் கைஸ் அழகற்றவர். அவர் அழகிய மனைவியை உயிரினும் உயர்வாய் நேசித்தார். மனைவியோ கணவனிடம் கடுகளவும்

கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.divorce_spells3

தாபித், ஜமீலாவிற்குக் கொடுத்த ஈச்சந் தோட்டத்தைத் திருப்பிக் கேட்டார். ஜமீலாவும் மறுப்பேதுமின்றி திருப்பித் தந்த ஈச்சந் தோட்டத்தைப் பெற்றுக்கொண்ட தாபித் ஜமீலாவை விவாகரத்து செய்தார். இஸ்லாத்தில் நடந்த முதல் குலா இதுவே. எனினும் சிறு பூசல்களைக் காரணமாக்கி மனைவியர் இவ்வுரிமையைப் பயன்படுத்தி விவாகரத்து கோருவது விவேகமல்ல.”எத்தகைய குற்றமும் இன்றி கணவனிடம் குலா கோரும் பெண் மீது சொர்க்கத்தின் வாடை விலக்கப்பட்டுள்ளது” என்று எம்பெருமானார் எடுத்துரைத்தார்கள். இஸ்லாம், கைப்பிடித்த கணவன், மனைவி காலமெல்லாம் – ஞாலத்தில் வாழும் காலமெல்லாம் இணைந்து வாழ்வதே சாலச் சிறந்தது என்று சாற்றுகிறது.

நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அபுல் அமீன் நாகூர், இணைந்து வாழ்வதே சிறந்தது!, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அருள் தரும் விளைநிலம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்விற்காக நன்றான செயல்களை நாளும் செய்து நாடியோருக்கு நல்லுதவிகள் புரிந்து அல்லாஹ்வின் நல்லருளை அறுவடை செய்யும் விளைநிலம் என்று விவரிக்கிறது இஸ்லாம்.

arabsமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறுமையில் தீயோருக்கு ஏற்படும் தீவினைகள் பற்றி பேசியதைக் கேட்ட பெருமானாரின் தோழர்கள்  இதயங்கள் இளகி அழுதனர். அதன்பின் பத்து தோழர்கள் ஹழ்ரத் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டில் கூடி கருத்து பரிமாறி பொருத்தமில்லா முடிவை முன் வைத்தனர். அம்முடிவு “”அவர்கள் அனைவரும் இல்லறத்தை விடுத்து துறவறம் பூண வேண்டும். கம்பள உடைகளையே அணிய வேண்டும். பகல் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இரவில் விரிப்பில் படுத்து உறங்கக் கூடாது. விழித்திருந்து வணங்க வேண்டும். மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்ணக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. நமக்கென ஓரிடம் கூடாது. பூமியில் பரதேசிகளாய் சஞ்சரிக்க வேண்டும்” என்பதாகும்.

இம்முடிவைக் கேள்வியுற்ற மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் மள்ஊன் (ரலி) அவர்களின் வீட்டிற்கு விசாரிக்க சென்ற பொழுது அவர் வீட்டில் இல்லை.

பின்னர் பெருமான் நபி (ஸல்) அவர்கள் வந்து சென்றதை அறிந்த உஸ்மானும் பத்து தோழர்களும் நபிகள் (ஸல்) அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

எம்பெருமானார் அவர்கள் பத்து தோழர்களின் மொத்த முடிவைப் பற்றி விசாரித்த பொழுது அல்லாஹ்வின் அருளை நாடியே அவ்வாறு முடிவு செய்ததாக அவர்கள் அறிவித்தனர்.  அவ்வாறு வாழ அல்லாஹ் ஏவவில்லை என்று எடுத்துரைத்த ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் “”இல்லறத்தை நல்லறமாக்கி இனிய மக்களை ஈன்று வளர்த்து நானிலத்தில் நல்வாழ்வு வாழ்ந்து நாயகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும். காலமெல்லாம் நோன்பு நோற்றல் கூடாது. கடமையான நோன்பைக் கட்டாயம் மேற்கொள்ளுங்கள்.  வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்ப உபரி நோன்புகளை நோற்கலாம். உபரி நோன்புகளைத் தொடராக நோற்க வேண்டாம்.  இடைவெளி இருக்க வேண்டும். நானும் நபில் (உபரி) நோன்புகளை நோற்கிறேன். நோற்காத நாட்களும் உண்டு” என்றார்கள்.

“”இரவில் விழித்திருந்து வணங்குங்கள். அப்பால் தூங்குங்கள்.  இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டாம். நானும் இரவில் நின்று தொழுகிறேன். நித்திரை கொள்கிறேன். அனுமதிக்கப்பட்ட மாமிசம், கொழுப்பு பொருட்களை உண்கிறேன். நறுமணம் பூசுகிறேன். இல்லற வாழ்வையும் வாழ்கிறேன். இதுவே என் நடைமுறை. என்னைப் பின்பற்றுங்கள்” என்றும் அவர்களுக்கு அருளுரை புரிந்தார்கள்.

இல்லறத்திலிருந்து இறை கட்டளைகளை நிறைவேற்றி வரம்பு மீறாது வாழ வேண்டும் என்று திருக்குர்ஆனின்  5வது அத்தியாயத்தின் 87,88வது வசனங்கள் அறிவிக்கின்றன. “”விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்தவற்றில் மணமானவற்றை நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுகிறவர்களை நேசிக்கமாட்டான்”.

“”அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து  மணம் பொருந்திய ஆகுமானதைப் புசியுங்கள். மேலும் நீங்கள் எவனை விசுவாசங் கொண்டிருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்”.

நாமும் குர்ஆன் நவிலும் முறையில் நந்நபி வாழ்ந்து காட்டிய வழியில் உலகில் உரிமையானதை உதறித் தள்ளாது உரிய முறையில் துய்த்து உண்மையாய் வாழ்ந்து தூயோன் அல்லாஹ்வின் நேயமான அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பர்தா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்



burka

burga2

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


பற்றி எரிகிறது 

…..பாலஸ்தீன் காசாவில்

வெற்றிக் கிடைத்திடவே

…வேண்டும்தீன் நேசர்காள்!

 

காலமும் காணாக்

…காட்சித்தான் பின்ன 

பாலகர் செய்த

… பாவம்தான் என்ன?

 

கொடுமையிலும் கொடுமை

…கொலைசெயுமிவ் வன்மை

கடுமையுடன் தடுத்தால்

…களைந்துவிடும் தீமை

 

இறைவனின் கோபம்

….இஸ்ரவேலர் அடைவர்

விரைவுடன் தீர்ப்பு

…வந்திடவும்; மடிவர்

 

இறுதிநாள் வருகைக்கு

….இக்கொடுமை ஒருசான்றா?

உறுதியாய்க் கொடுமைக்கு

…உள்ளமெலாம் உருகாதா?

 

கொத்துக் கொலைகண்டு

…குழந்தைகள் நிலைகண்டு

கத்தும் கடல்கூட

…கதறுமே பழிதீர்க்க

 

தீர்ப்புநாள் வராதென்று

….தீதைச் செய்தாயோ?

யார்க்குமே அடங்காத

…யூத ஷைத்தானே!

 

அர்ஷில் எட்டும்

….அலறல் சத்தம்

குர்ஸி தட்டும்

…குழந்தை ரத்தம்

 

பாதிக்கப் பட்ட

…பாலஸ்தீன் மக்கள்

நீதிக்கு முன்பு

…நிற்கின்ற வேளை

 

கூட்டுச் சதியால்

..கூடிக் குலாவி

வேட்டு வெடித்தல்

..வேடிக் கையே!

 

பொய்நாக் கூட்டம்

…புரிய வில்லையா?

ஐநா சபையோர்

…அறிய வில்லையா?

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

அயலாரிடம் அன்பு! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


அண்டை வீட்டார் உறவினராக இருப்பினும் உறவில்லாதவராக இருப்பினும் முஸ்லிமாக இருப்பினும் முஸ்லிம் அல்லாதவராக இருப்பினும் அண்டை வீட்டாருடன் நல்லுறவும் நட்பும் சகோதரத்துவமும் பேணி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து உற்றுழி உதவ வேண்டும்” என்றுரைத்து, உரைத்தபடி உண்மையாய் வாழ்ந்து காட்டியவர்கள் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

சாதாரணமாக சில பெண்கள் சிறிய பொருட்களைக்கூட அண்டை அயலாருக்குக் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். அதனால்தான் நபிகள் நாயகம்,

“”பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாயினும் சரியே”

என்று பெண்களுக்கு போதித்த நீதி, புகாரி நூலில் உள்ளது. ஆட்டின் குளம்பு என்பது சிறியது; மதிப்பற்றது என்றாலும் அதனையும் அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உண்ண வேண்டும். “”அண்டை வீட்டார் பசித்திருக்க தாம் மட்டும் உண்பவர் உண்மையான முஸ்லிமல்ல” என்பதும் நாயக நன்மொழி.

இதனையொட்டியே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கும் பொழுது, முதலில் அண்டை வீட்டு யூதருக்கு அன்பளிப்பு செய்வார்கள்.

“”அல்லாஹ்வின் பார்வையில் தோழமையில் சிறந்தவர், தம் தோழர்களிடம் சிறந்து விளங்குபவர், சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே” என்ற நபிகளாரின் நன்மொழி திர்மிதி நூலில் காணப்படுகிறது.

“”அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்து நிம்மதியைக் கெடுப்பவன் சுவனம் புக மாட்டான்” என்ற நீதி முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளது.

இமாம் அபூஹனீபா(ரஹ்) இஸ்லாமிய சமய அறிஞர். அவருடைய மறுபக்க வீட்டில் வாழும் யூதரின் வீட்டில் கொட்டப்படும் நீர், இமாம் அவர்களின் வீட்டு வாயிலில் விழுந்து தேங்கி சேறும் சகதியுமாகி விடும்.

இமாம் அபூஹனீபா அவர்கள் இரவே கொட்டும் நீரைப் பாத்திரத்தில் பிடித்து அப்புறப்படுத்துவதை வழக்கமாக செய்தார். ஒரு நாளிரவு இதனைக் கண்ட யூதர் “”ஒரு வேலையாளை வைத்து கழிவு நீரை அகற்றாமல், வேலையாள் கூலியை மிச்சப்படுத்தி இவ்வேலையை நீங்களே செய்கிறீர்களா?” என்று கேலி செய்தார். இமாம் அவர்கள் எங்கிருந்து நீர் கொட்டுகிறது என்பதைக் கவனிக்குமாறு யூதரிடம் வேண்டினார்கள். அவரின் வீட்டிலிருந்து கழிவு நீர் கொட்டுவதையறிந்த யூதர் மனம் வருந்தி திருந்தி இமாம் பொருந்தும் மாணவராய் அவரின் மதரசாவில் சேர்ந்தார்.

وَاعْبُدُوا اللَّـهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّـهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
“”அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அந்நிய அண்மை வீட்டாருக்கும் அன்பும் நன்றியும் செய்யுங்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-36வது வசனப்படி நாமும் அண்டை அயலாரிடம் அன்பு பாராட்டி சுமுக உறவைப் பேணிக் காப்போம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உத்தம நபிகள் வாழ்ந்து காட்டிய சத்திய நெறியில் வாழ்ந்து மறுமையிலும் சுவனத்தல் சுக வாழ்வு வாழ்வோம்.

நன்றி:- தினமணி 04 Oct 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

பிரிவுகள்:அயலாரிடம் அன்பு, அயலாரிடம் அன்பு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மக்களாட்சியின் மாண்பு – மு.அ. அபுல்அமீன் நாகூர்


பொது வாழ்வில் தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் மறுத்து பிறர் நலம் பேணும் பேராண்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.

இறை வேதமாம் திருக்குர்ஆனை இவ்வுலகோருக்கு இயம்பிய இனிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னதை சொன்னபடி செயல்படுத்தி செம்மையாய் வாழ்ந்து வழிகாட்டினார்கள். ““நீங்கள் செய்யாதவற்றைப் பிறருக்குச் சொல்லாதீர்கள்” என்று குர் ஆனும் கூறுகிறது.

நன்மையை நாடிய நபியின் தோழர்களும் நபி வழியை நழுவாது பின்பற்றி வழுவாது வாழ்ந்தனர். அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்கு படிப்பினைகள். கிழிந்து தைத்த ஆடைகளை அணிந்து கொண்டிருந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களுக்கு எழுபதாயிரம் திர்ஹம் அன்பளிப்பு வந்தது. அந்த அன்பளிப்பில் ஒரு திர்ஹத்தை கூட தனக்காக எடுத்துக் கொள்ளாது அன்னை ஆயிஷா(ரலி) எழுபதாயிரம் திர்ஹம்களையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்ட நிகழ்ச்சியை உர்வா(ரலி) அறிவிக்கிறார்.

யமன் நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஹமீரி என்ற அரசர் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை தலையில் தரித்து மினுக்கும் ஜரிகை பட்டு ஆடைகள் அணிந்து இடுப்பிலே தங்கப்பட்டை பளபளக்க முதல் கலீபா அமீருல் முஃப்மினீன் அபூபக்கர்(ரலி) அவர்களை சந்தித்தார். கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் ஒரு கம்பளி ஆடையை உடுத்தி இன்னொரு கம்பளி போர்வையைப் போர்த்தியிருந்தார்.

இக்காட்சியைக் கண்டு வியந்த ஹமீரி ஆடம்பரத்தையும், படாடோபத்தையும் களைந்தார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் விடுத்து பொதுநலம் பேணிப் புகழ் பெற வேண்டும்.

“”மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து காரியம் ஆற்றுவது என் வழிமுறை” என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தபடி உமர்(ரலி) அவர்கள் தனிக்குழு, பொதுக்குழு என்று ஈரடுக்கு ஆலோசனை குழுக்களிடம் கலந்தாலோசித்து எந்த முடிவையும் மக்களுக்கு அறிவிப்பார்கள்.

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20 வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

 

இக்காட்சியைக் கண்டு வியந்த ஹமீரி ஆடம்பரத்தையும், படாடோபத்தையும் களைந்தார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்போர் தன்னலம் விடுத்து பொதுநலம் பேணிப் புகழ் பெற வேண்டும்.

 

“”மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து காரியம் ஆற்றுவது என் வழிமுறை” என்று ஏந்தல் நபி எடுத்துரைத்தபடி உமர்(ரலி) அவர்கள் தனிக்குழு, பொதுக்குழு என்று ஈரடுக்கு ஆலோசனை குழுக்களிடம் கலந்தாலோசித்து எந்த முடிவையும் மக்களுக்கு அறிவிப்பார்கள்.

 

திருமணம் புரிய விரும்பும் ஆண்கள் மணமகளுக்கு தரும் மஹர் தொகை அதிகரித்துக் கொண்டிருந்தது. அதனால் ஆண்களின் திருமணம் தடைபட்டது. உமர்(ரலி) அவர்கள் இப்பிரச்னையை ஈரடுக்கு குழுவில் விவாதித்து முடிவெடுத்து பொதுமக்களைப் பள்ளி வாசலில் கூட்டினார்கள். மேடையேறிய கலீபா, நபிகள் நாயகம் வழங்கிய மஹரை விட அதிக மஹரை யாரும் வழங்கக் கூடாது. இந்த ஆணையை மீறி வழங்கப்படும் மஹர் பறிமுதல் செய்யப்பட்டு பைத்துல்மால் பொதுநிதியில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். உடனே ஒரு மூதாட்டி, “”உமரே! நீர் மேடையிலிருந்து இறங்கிவிடும்” என்று கூறினார். கீழே இறங்கிய உமர் (ரலி) அவர்கள் அம்மூதாட்டி அருகே சென்று காரணம் கேட்டார்கள்.

 

அம்மூதாட்டி “”மனைவிக்கு நீங்கள் ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து நீங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்ற திருக்குர்ஆனின் 4-20வது வசனத்தை நினைவூட்டினார்கள்.

 

கலீபா அவர்களுக்கு நல்வழி காட்டியதாக அம்மூதாட்டியைப் பாராட்டினார். மூதாட்டி நினைவுபடுத்தியபடி அதிக மஹர் பெற மகளிருக்கு உரிமை உண்டு என்றும் பிரகடனப்படுத்தினார். மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

 

நன்றி:- தினமணி 07 Sep 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பிரிவுகள்:மக்களாட்சியின் மாண்பு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

முன் மாதிரியான ஆட்சி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்


இஸ்லாமிய ஆட்சியில் கலீபாவிற்கு அடுத்த பெரும் பொறுப்பு பிற பிரதேசங்களை ஆட்சி புரியும் ஆளுநர்களுக்கே உண்டு.

இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள் ஆளுநர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அறிக்கை தர உளவாளிகளை நியமித்தார்கள். உளவாளிகளின் அறிக்கையை ஆய்வு செய்யும் மேலாளர்களையும் அமர்த்தினார். “எகிப்து ஆளுநர் ஹலரத் அயால் இப்னு கனம்(ரலி) அவர்கள் பட்டு துணிகள் அணிகிறார். வாயில் காவலரை நியமித்து இருக்கிறார்’ என்ற தகவல் கிடைத்ததும், மேலாளர் ஹழ்ரத் முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) அவர்கள் மூலம் அறிக்கையை உறுதி செய்தார். ஆளுநர் அயால்(ரலி) அவர்களை வரவழைத்து பட்டாடையைக் களையச் செய்து கம்பளியைப் போர்த்திக் கொண்டு ஒரு ஆட்டு மந்தையை மேய்க்குமாறு கட்டளையிட்டார் கலீபா உமர்(ரலி)அவர்கள்.

கூஃபாவில் ஹழ்ரத் இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்கள் பலமான கதவுகளை உடைய பெரிய வீடு கட்டியதை அறிந்து, ஆளுநரைக் கண்டித்து மக்கள் எளிதில் அணுகும் வண்ணம் எளிய வீட்டில் வாழ உத்தரவிட்டார் உமர் (ரலி) அவர்கள்.

எகிப்தின் ஜாமியா பள்ளி வாசலில் ஹழ்ரத் அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அமர தனியாக உயர்ந்த மேடை கட்டியதைக் கண்டித்து ஆளுநர் மக்களோடு மக்களாக அமர ஆணையிட்டார் உமர் (ரலி) அவர்கள்.

ஹினானாவின் ஆளுநர் ஹழ்ரத் உத்பா இப்னு அபு சுயான் அவரின் சொந்தப் பணத்தில் வாணிபம் செய்து ஈட்டிய பொருளைப் பொது கருவூலத்தில் சேர்த்தார். 

சிரியா ஆளுநர் ஹழ்ரத் அபு உபைதா(ரலி) வசதிகளைப் பெருக்கி வாழ்வதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் ஆளுநரின் சம்பளத்தைக் குறைத்தார். ஒவ்வொரு ஆளுநரும் அவர் பதவி ஏற்கும் பொழுது அவரிடம் என்ன இருந்ததோ அதை விட அதிகமாக இருந்தவைகளை பொது நிதியில் சேர்த்தார்.

கலீபா உமர் (ரலி) அவர்கள் தானும் நல்வழி நடந்து தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளையும் அவ்வாறே நடக்கச் செய்து உலகிற்கே ஒரு முன் மாதிரியாக ஆட்சி புரிந்தார்.


நன்றி:- தினமணி 24 Aug 2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பிரிவுகள்:கட்டுரைகள், முன் மாதிரியான ஆட்சி!, முன்மாதிரி ஆட்சி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சென்றுவா ரமலானே! கொண்டுசேர் அமல்களை!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


புடமிடு  தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர  ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
 பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
 மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
 கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
 கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
 நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க்  கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட்  டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!

நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்