தொகுப்பு

Archive for மே 15, 2010

IPL கற்றுத் தரும் பாடங்கள்! – வா.கார்த்திகேயன்


ஐ.பி.எல். கற்றுத் தரும் பாடங்கள்!

நேற்று வரை மிகச் சிறந்த பிஸினஸ் மாடல் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட ஐ.பி.எல். இன்று எல்லோரின் வசவுக்கும் இலக்காகியிருக்கிறது. ஐ.பி.எல். என்பதே லலித் மோடியின் மூளையில் உதித்ததுதான் என்று அவரை புகழ்ந்து தள்ளியவர்கள், இன்று எல்லா தவறுகளுக்கும் அவரே காரணம் என்று கைகாட்டுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அமைப்பில் நடந்த பல்வேறு தவறுகளை அரசுத் துறை நிறுவனங்கள் விசாரிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஐ.பி.எல். நமக்குக் கற்றுத் தரும் பிஸினஸ் பாடங்கள் என்ன என்று பார்ப்போம்.

நேர்மையான தலைமை!

சின்ன நிறுவனமோ, பெரிய நிறுவனமோ அதன் தலைமைப் பதவியில் இருப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் இடை மற்றும் கடைநிலை ஊழியர்கள் நேர்மை தவறி, தவறு செய்யும்பட்சத்தில் அந்த நிறுவனத்தின் இமேஜ் பெரிதாகப் பாதிக்கப்படாது. ஆனால் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் சின்னத் தவறு செய்தாலும் அதனால் நிறுவனத்தின் இமேஜ் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஐ.பி.எல். அமைப்பின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டிவி நிறுவனத்துக்கு கொடுத்ததில் ஆரம்பித்து, விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தது வரை பல விஷயங்கள் நேர்மையாக நடந்த மாதிரி தெரியவில்லை. லலித் மோடி மீது மட்டுமே இத்தனை குற்றச்சாட்டுகள் குவிந்தால், அந்த அமைப்பில் வேறு எந்த விஷயம்தான் சரியாக நடந்திருக்க முடியும்?

வெளிப்படையான தன்மை!

எந்த ஒரு பிஸினஸூக்கும் வெளிப்படையான தன்மை அவசியம். ஐ.பி.எல். அமைப்பைப் பொறுத்த வரை அது கொஞ்சம்கூட இல்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. ஐ.பி.எல். அமைப்பில் எல்லாமே ஏலத்தின் பேரில் நடந்தாலும், அந்த ஏல முறையே மிகப் பெரிய ஏமாற்று என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. அஹமதாபாத் அணிக்காகப் போட்டியிட்ட அதானி மற்றும் வீடியோகானின் நிறுவனங்களில் ஏலப் பத்திரங்கள் மாயமாகியுள்ளன. லலித் மோடி சொல்லித்தான் அதானி நிறுவனம் ஏலம் கேட்டுள்ளது என்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆக மொத்தம் ஐ.பி.எல். அமைப்பில் நடந்த விஷயம் எதுவும் வெளிப்படையாக நடந்த மாதிரித் தெரியவில்லை. திரைமறைவில் நடக்கும் எந்த விஷயமும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வராமல் போகாது. வெளிப்படையான தன்மை கொண்ட நிறுவனமே சிக்கல்களில் சிக்காமல் சிறப்பாகச் செயல்படும்.

குவியும் அதிகார மையம்!

அத்தனை அதிகாரங்களையும் தன் ஒருவரிடமே வைத்திருந்தார் லலித் மோடி. அத்தனை வேலை களையும் அவரே செய்தார். அவரே விதிமுறைகளை உருவாக்கினார்; அது தனக்கு சரிவராத போது அவரே மாற்றினார். மீடியா ஒப்பந்தங்கள் போடுவது முதல் ஸ்பான்ஸர்களிடம் பேசுவது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என அத்தனை வேலைகளையும் (அதிகாரங்களையும்) அவரே செய்ததால், அவர் எல்லா வேலையையும் சரியாகத்தான் செய்கிறாரா என்பதை எல்லோருமே பார்க்கத் தவறிவிட்டனர். மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களான தோனி, சச்சினைவிட பத்திரிகைகளில் அதிகக் கவனம் பெற்றது இவர்தான். இந்த அதிகாரம் 2009-ம் ஆண்டில், நாடாளுமன்றத் தேர்தலையே கொஞ்சம் தள்ளிவையுங்கள் என்று பேச வைத்தது. நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஜனநாய கத்தின் அடிப்படைத் தேவை. ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக அதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பேச வைத்தது இந்த அளவுக்கதிகமான அதிகாரம் தான்.

கேள்வி கேட்க வேண்டும்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல துணை அமைப்புகள் உள்ளன. ஐ.பி.எல். அதில் ஓர் அமைப்பு மட்டுமே. ஆனால் இந்த அமைப்பு வந்தபிறகு இதுவே பிரதான அமைப்பு போல மாறியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கே லலித் மோடிதான் தலைவர் என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்கள் உள்பட யாரும் கேள்வி கேட்கவில்லை. ‘மூன்று ஆண்டுகளாக அணியின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்களை மோடி ஏன் வெளியிடவில்லை?’ என்று இப்போது கேட்கும் பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷாங் மனோகர், கடந்த மூன்று ஆண்டு காலம் இந்தக் கேள்வியை கேட்காமல் விட்டது ஏன்? அவர் மட்டுமல்ல, பி.சி.சி.ஐ. செயலாளராக இருக்கும் இந்தியா சிமென்ட் சீனிவாசன் உள்பட யாருமே கேட்கவில்லை. இதைவிடக் கொடுமை, ‘நாங்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும். ஆனால் ஏனோ கேட்கவில்லை’ என பட்டோடி விட்டேத்தியாகப் பேசியது. எந்த நிறுவனமாக இருந்தாலும் கேள்வி கேட்டால் மட்டுமே தவறுகள் தடுத்து நிறுத்தப்படும்.

தலைவர் நல்லவரா?

லலித் மோடியை தலைமைப் பதவிக்கு கொண்டு வரும் முன் அவரைப் பற்றி விசாரித்தார்களா என்று தெரியவில்லை. இன்று அவர் மீது பல ஊழல் குற்றச் சாட்டுகளை சொல்கிறவர்கள் அவரை ஐ.பி.எல்.லுக்கு எப்படித் தலைவராக்கினார்கள்? எல்லாவற்றையும்விட அவர் அமெரிக்காவில் படிக்கும்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானதாகவும் ஒரு செய்தி உண்டு. இதை எல்லாம் யாருமே ஏன் கவனிக்க வில்லை?

தெளிவான விதிமுறைகள் வேண்டும்

ஐ.பி.எல். அமைப்பைப் பொறுத்தவரை தெளிவான விதிமுறைகள் இல்லாதது பல தவறுகள் நடக்கக் காரணமாகிவிட்டது. லலித் மோடி ஐ.பி.எல். அமைப்பில் தலைவர். ஆனால் பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளில் அவரது உறவினர்களுக்குப் பங்கு இருக்கிறது. இந்தியா சிமென்ட் சீனிவாசன் பி.சி.சி.ஐ. செயலாளர். ஆனால் அதே நிறுவனம்தான் சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறது. ஒரே நபர் இரண்டு முக்கிய இடங்களில் இருந்தால் எப்படி நியாயமாக நடந்துகொள்ள முடியும்?

அசட்டுத் தைரியம்

என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் தலைமைக்கு வரக்கூடாது. அப்படி வருமெனில் அவர் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார். இது அரசியலுக்கும் பொருந்தும்; எந்த பிஸினஸூக்கும் பொருந்தும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த எண்ணமும் லலித் மோடிக்கு வந்தது. விளைவு, படிப்படியாக பல தவறுகளைச் செய்தார். வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப்புக்கும் மல்டி ஸ்கிரின் மீடியாவுக்கும் இடையே ஒப்பந்தம் பேசி முடிக்க ‘ஃபெசிலிட்டேஷன் பீஸ்’ என்கிற பெயரில் 80 மில்லியன் டாலர் பணம் கைமாறி இருக்கிறது. இது என்ன பீஸோ என்று குழம்ப வேண்டாம்; கமிஷன் என்பதன் அலங்காரமான இன்னொரு பெயர்தான் இது. எனவே எந்த நிறுவனத்தின் தலைமைக்கும் அசட்டுத் தைரியம் கூடவே கூடாது.

ஆக மொத்தத்தில் பரபரப்பான கிரிக்கெட் போட்டிகளை மட்டுமல்ல, மகத்தான பிஸினஸ் பாடங்களையும் தன்னால் கற்றுத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறது ஐ.பி.எல். அமைப்பு.


நன்றி:- நா.வி

உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்!


உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது?’ எனவினவ,  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

‘இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார்’ என்று கூறினார்கள்.” நூல்: முஸ்லீம் 4640.]

இன்று முஸ்லிம்களில் உறவுகளுக்கு மத்தியில் பிளவுகளுடன் வாழ்பவர்களை அதிகமானோரை பார்க்கிறோம். அற்பமான விஷயங்களுக்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல் இருக்கும் முஸ்லிம்களையும் காண்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் போய், ‘நீங்கள் உங்கள் உறவினரோடு சேர்ந்து வாழக்கூடாதா?’ என்று நாம் சொன்னால், ‘அட! போங்க!! அவன் வீட்லயா எனக்கு சாப்பாடு!’ என்று சாதாரணமாக உறவுகளை உதாசீனப்படுத்துவதை பார்க்கிறோம்.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டும் அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவராவார்.” (நூல்: புகாரி, எண் 6237)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்ககல்யாண வீட்டில் எனக்கு பந்தியில் எலும்பைத்தான் போட்டான்’ என்ற உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஆண்டுக்கணக்கில் பேசாமல், உறவினர்களை உதாசீனம் செய்பவர்கள் சிந்திக்கவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறும் உறவின் இலக்கணம்

உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது? என வினவ, அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸ்லீம் 4640.)

மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!

நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்! ”தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.” (நூல்: புகாரி, எண் 5985)


உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசு!

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு உடைய மனைவி ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.

நான் என் (கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, ‘அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்  சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது.

அப்போது எங்களிடையே பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார்.

உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.  (நூல்: புகாரி, எண் 1466)

இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!

இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.” (நூல்: அபூதாவூத்)

சொர்க்கத்தின் திறவுகோல் உறவு

உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும். ”ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ”சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள்” என வினவ, அதற்கு நபியவர்கள், *அல்லாஹ்வை வனங்கு. அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு. உறவினரை சேர்த்து வாழ்வீராக!” என்று கூறினார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; ”உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.” (நூல்: புகாரி, எண் 5984)

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது ‘உறவு’ பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!


நன்றி:- நீடுர் இன்போ