தொகுப்பு

Archive for மே 5, 2010

விட்டுக்கொடு வெற்றி பெறு!


திருமண உறவு முறிவது ஏன்? மணமுறிவு கேட்டு நீதிமன்றம் போவதன் பின்னுள்ள காரணங்கள் என்னென்ன?

டாக்டர் செந்தில்வேலன்  மனநல ஆலோசகர்:

”கணவன் – மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்சகட்டம்தான் விவாகரத்து. மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது. விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு. நம் ஊரில் கணவனுக்கும் மனைவிக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம். ஒருவர் 17 வயது முதல் காதலித்து 37-வது வயதில் திருமணம் செய்கிறார் என்றாலும், அவர்களுக்குள் இரண்டே மாதங்களில் தகராறு வந்துவிடும். ஏனெனில், திருமணத்துக்குப் பிறகு, நிறைய மாற்றங்கள் வருகின்றன. அதைச் செய்தாக வேண்டிய கட்டாயம் வருகிறது. ஆனால், அதை இரண்டு பேராலும் செய்ய முடிவது இல்லை. அதுமட்டுமல்லாமல்; திருமணத்துக்குப் பிறகு பொருள் கிடைத்துவிடுவதால், அதன் சுவை குறைந்துவிடுகிறது.

யதார்த்தம் இல்லாத, நடைமுறைச் சாத்தியம் இல்லாத எதிர்பார்ப்புகள் இருவரிடமும் இருக்கும். சுற்றியுள்ள சிறந்த விஷயங்கள் எல்லாம் நம் கணவன்/ மனைவியிடம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல் உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக் கும்’ என நினைத்து ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் முடிந்தால், பெரிய அளவில் பிரச்னைகள் வராது. குழந்தை வரும்போது ஏகப்பட்ட மாற்றங்களைச் சந்திக்க வேண்டி வருகிறது. குழந்தைக்காக மனைவி அதிக நேரம் செலவிடும்போது, கணவன் தப்பிக்கிறார். அதனால், மனைவிக்கு ஆத்திரம் வரும். யாராவது ஒருவர் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளின் விவாகரத்துக்கு பிரதான காரணமே இந்தக் குழந்தை வளர்ப்புதான். நுகர்வு வெறிகொண்ட இன்றைய நவீன கலாசாரத்தில் பொருட்களை வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கிறோம். அதுவும் எதுவாக இருந்தாலும், உடனே வாங்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால், தன் துணை மீது வெறுப்பும் கோபமும் வருகிறது. அது பிரச்னையாக மாறுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. ஆண்டுக்கு 20 சதவிகித வழக்குகள் அதிகரிக்கின்றன. முதலில் திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை!”

நன்றி:- டாக்டர் செந்தில்வேலன்  மனநல ஆலோசகர்

நன்றி:- -பா.பிரவீன்குமார்

நன்றி:- தி.வி

சிந்தனை மேடை-01 நேற்று தெல்கி… இன்று கேத்தன் சேசாய்


நம்மைச் சுற்றி நடக்கிற சில விஷயங்களைப் பார்த்தால் விநோதமாகத்தான் இருக்கிறது. அதிலும் இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாயிடமிருந்து கைப்பற்றிய பணத்தின் அளவைப் பார்த்தால் மருத்துவம் என்கிற பெயரில் இங்கே ஒரு பெரிய மாஃபியா கும்பல் பல மோசடிகளை செய்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குஜராத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்த கேத்தன் தேசாய்க்கு இன்று அகமதாபாத்தில் பெரும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டின் முன்பு எப்போதும் ஒரு பழைய ஸ்கூட்டர் நிற்குமாம். ‘நான் கடந்து வந்த பாதையை மறக்க விரும்பவில்லை’ என்பாராம் கேத்தான் தேசாய் அந்த ஸ்கூட்டரைப் பார்த்து! இப்போது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டு, சி.பி.ஐ. அவர் வீட்டை சோதனை செய்தபோதுதான் 1,800 கோடி ரூபாய் பணம் ‘ஹாட் கேஷாக’ சிக்கி இருக்கிறது. பலரின் வயிற்றெரிச்சலைக் கிளப்புகிற மாதிரி 1,500 கிலோ தங்கமும் கிடைத்திருக்கிறது. ஒரு சாதாரண ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு அந்த மலை முழுங்கி மகாதேவன் எத்தனை அமைதியாக இருந்திருக்கிறார் என்று இப்போதுதான் தெரிகிறது.

எப்படி அவரால் இத்தனை கோடி ரூபாயை சுருட்ட முடிந்தது? காரணம், நம் ஆட்சி அமைப்பில் இருக்கும் ஓட்டைகள்தான். கல்வித் துறையை என்றைக்கு தனியாருக்குத் திறந்துவிட்டோமோ, அன்றைக்கே அது பிஸினஸ் மயமாகிவிட்டது. இன்றைய தேதியில் கல்வி நிறுவனங்கள், அதிலும் குறிப்பாக மருத்துவக் கல்வி நிறுவனங்கள் காசு ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவிட்டன. ”மருத்துவம் படிக்க ஒரு சீட் வேண்டும்” என்று எந்த மருத்துவக் கல்லூரியையாவது அணுகிப் பாருங்கள். 10 முதல் 25 லட்ச ரூபாய் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்பதை எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் சொல்கிறார்கள். எல்லோருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கொடுக்கவேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால் அரசே தன்னுடைய சமூகப் பொறுப்புகளை கைகழுவி தனியாருக்கு தாரைவார்த்து நெறிமுறையற்ற ஒரு புதிய வியாபாரத்தை நடத்த உடந்தையாக இருப்பதுபோல் உள்ளது.

பல லட்சங்களை கட்டாய நன்கொடையாகக் கொடுத்து மருத்துவம் படிக்கும் ஒரு மாணவன், படித்து முடித்தபிறகு எப்படி குறைந்த பணத்தை மக்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வைத்தியம் செய்வான்? எங்கோ கொடுத்த பணத்தை யாரிடமிருந்தோ வசூல் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவன், வேறு வழியில்லாமல் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகிறான். மருத்துவத்துக்கு அதிகப்படியாக செலவழித்த பணத்தை மக்கள் வேறு வழியில் சம்பாதிக்க நினைக்க, ஆக மொத்தத்தில் ஒட்டு மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது.

இந்தத் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பாலூட்டி வளர்த்த கள்ளப்பூனைதான் இந்த கேத்தன் தேசாய். ”இந்த கோர்ஸ் ஆரம்பிக்கிறீங்களா? இவ்வளவு கோடி கொடுங்க. இவ்வளவு சீட்டை அதிகப்படுத்துறீங்களா? இத்தனை கோடி கொடுங்க” என்று கல்வியை கடைச்சரக்கு மாதிரி வியாபாரம் செய்திருக்கிறார். இவரது நடவடிக்கை சரியில்லை என்பதால்தான் டெல்லி உயர்நீதிமன்றம் இவரை பதவி விலக உத்தரவிட்டது. 2001-ல் பதவி விலகியவர் 2007-ல் மீண்டும் அதே பதவிக்கு வந்தார். எப்படி? பல தகிடுதத்தங்களை செய்துதான்.

இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு பெரிய பதவியில் இரண்டு முறை வகித்ததற்குக் காரணம் இந்தியா முழுக்க உள்ள மருத்துவர்கள்தான். மருத்துவ கவுன்சில் தலைவராக யார் வரவேண்டும் என்கிற தேர்தலில் பல மருத்துவர்கள் ஓட்டே போடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சமூகப் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்பதை பல மருத்துவர்கள் உணர்ந்த மாதிரித் தெரியவில்லை. கிடைக்கிற சில ஓட்டுக்களை வைத்து மருத்துவ கவுன்சில் தலைவர் பதவியை எளிதாகப் பிடித்தார் கேத்தன் தேசாய். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோடி கோடியாகக் குவித்தார்.

ஆனால் ஒரு தனிமனிதன் மட்டுமே இவ்வளவு பெரிய மோசடியைச் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவருக்குப் பின் பல ‘பெரிய’ மனிதர்கள் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியே வராமல் இருட்டடிப்பு செய்யப்படுவது ஏன்? இந்தியாவை உலுக்குகிற மாதிரியான இந்த மோசடி சந்திக்கு வந்தும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதை பேசாமல் விட்டது ஏன்? தலைவர்கள் போன்கால்கள் ஒட்டு கேட்ட விஷயம் முக்கியமான பிரச்னைதான். ஆனால் இதுவும் ஒன்றும் சாதாரண விஷயமல்லவே!

சில ஆண்டுகளுக்கு முன்பு போலிப் பத்திரங்களை அச்சடித்து வெளியிட்டதாக தெல்கி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடப்பதாக செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. ஆனால் இன்று அவர் என்னவானார்? அவர் மீதான விசாரணை எந்த நிலைமையில் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதே போல கேத்தன் தேசாயையும் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் மறந்துவிடுவார்கள். மீண்டும் இன்னொரு கொள்ளைக்காரன் அகப்படுவான். அவனைப் பற்றியும் நான்கு நாளைக்கு பேசிவிட்டு மறந்துவிடுவோம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி கொள்ளைக்காரர்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருப்பார்களோ!

நன்றி:- நா.வி

முல்லாவில் அறிவாற்றல், முல்லா அனைத்த நெருப்பு – முல்லா கதைகள்

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ


اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் :

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5742

அல்லது

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி அத்ஹிபில் ப(B)ஃஸ இஷ்பி(F)ஹி வஅன்தஷ் ஷாபீ(F) லாஷிபா(F)அ இல்லா ஷிபா(F)வு(க்)க ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

ஆதாரம்: புகாரி 5743

அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து

بِسْمِ اللَّه

பி(B)ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر

அவூது பி(B)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் :

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்ம் 4082

அல்லது

لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ

லா ப(B)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் :

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்

எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி 3616

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

கவலையின் போது ஓதும் துஆ

தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

ஆயத்துல் குர்ஸி

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது

இறந்தவருக்காகச் செய்யும் துஆ


இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ……………. இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ —- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

அல்லாஹும்மக்பி(F)ர் ………………. வர்ப(F)ஃ தரஜ(த்)தஹு பி(F)ல் மஹ்திய்யீன வஃக்லுப்(F) ஹு பீ(F) அகிபி(B)ஹி பி(F)ல் காபிரீன் வக்பி(F)ர் லனா வலஹு யாரப்ப(B)ல் ஆலமீன் வப்(F)ஸஹ் லஹு பீ(F) கப்(B)ரிஹி வநவ்விர் லஹு பீ(F)ஹி.

இதன் பொருள் :

இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 1528

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

கவலையின் போது ஓதும் துஆ

தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

ஆயத்துல் குர்ஸி

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது