தொகுப்பு

Archive for மே 6, 2010

கழுதையால்கிடைத்த பாடம், சூரியனா? சந்திரனா? – முல்லா கதைகள்


கழுதையால்கிடைத்த பாடம்


சூரியனா? சந்திரனா?

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

முல்லாவில் அறிவாற்றல்

முல்லா அனைத்த நெருப்பு

மீன் பிடித்த முல்லா

சொன்ன சொல் மாறாதவர்

முல்லாவின் திருமண ஆசை

வேதந்த நூல்

யானைக்கு வந்த திருமன ஆசை

மலிவான பொருள்

கப்பலில் வேலை

செயற்கரிய சாதனை

சொல்லாதே!

எடுத்துச் செல்வதற்காக அல்ல

என்னவென்று யூகி?

முல்லா ஏன் அழுதார்?

மீன் – முல்லா கதை

தளபதியின் சமரசம்

கழுதையால்கிடைத்த பாடம்

சூரியனா? சந்திரனா?

நாய் – விஞ்ஞானத் தகவல்கள்


முன்னோடியாக ஓநாயைக் கொண்டதாலோ என்னவோ… பல விஷயங்களில் நாய்கள் ஓநாயின் குணத்தையே கொண்டிருக்கின்றன.

ஓநாய்களைப் போலவே நாய்களும் சேர்ந்து வாழ்வதில் விருப்பமுள்ளவை. தங்கள் குழுத் தலைவர் சொன்னபடி கேட்கும். மனிதர்களுடன் வாழ்வதால், தன் எஜமானர் சொல்வதை அப்படியே செய்யும்!

நாய்கள் அசைவம்தான். ஆனால், மனிதர்களுடன் பழகிவிட்ட பிறகு சைவம், சமைத்த உணவு ஆகியவற்றையும் சாப்பிடப் பழகிவிட்டன.

ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன், டால்மேஷன், பிரிட்டிஷ் புல்டாக், பூடுல், டாபர்மேன், டாஷென்ட், லாப்ராடார், ப்ளிஸாரே Golden Retriever, போன்றவை நாய்களில் பிரபல மானவை.

நாய்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வது உடலசைவுகளின் மூலம். இரண்டு நாய்கள் சண்டை போடும்போது ஒன்று கீழே விழுந்து புரண்டால், ‘இனி சண்டை போட விருப்பமில்லை. உனக்குக் கட்டுப்படு கிறேன்!’ என்று அர்த்தம்.

நாய்களின் உடல் வெப்பம் மனிதர்களைவிட அதிகம். உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளவே அவை நாக்கைத் தொங்கப்போட்டு மூச்சு வாங்குகின்றன.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காக நாய்களைப் பழக்கப்படுத்தினார்கள். அப்போதைய நாய்கள் வேட்டைக்கு பார்வையைத்தான் அதிகம் பயன்படுத்தின. இப்போதைய வேட்டை நாய்களோ பார்வையைவிட மோப்ப சக்தியைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றன.

சிக்கன் போன்ற உணவுப் பொருட்கள் வாங்கி வரும் பிளாஸ்டிக் பைகளைக் குப்பைத்தொட்டியில் போடும் முன் சுத்தப்படுத்திவிட்டு போடுங்கள். இதை உண்ண வரும் நாய்கள் குடல் கிழிந்து சாவதைத் தடுக்கலாம்.

பார்வையற்றவர்களுக்கும் காது கேளாதவர்களுக்கும் வழிகாட்டிகளாவும், உதவியாளர்களாகவும்கூட நாய்கள் செயல்படுகின்றன.

நாய்கள் ஒரு பிரசவத்தில் இரண்டில் இருந்து ஆறு குட்டிகள் வரை போடும்.

நன்றிக்கும் விசுவாசத்துக்கும் பெயர் போன நாய்கள் விரும்புவது உணவு மட்டுமல்ல… அன்பையும் அக்கறையையும் சேர்த்துத்தான். அதை அளித்தால் நமக்கு நாய்களைவிடச் சிறந்த நண்பன் இருக்க முடியாது!

நாய்களின் மோப்ப சக்தி உலகப் பிரசித்தம் என்பதால் காவல்துறையில் மோப்ப நாய்களுக்குத் தனிப் பிரிவே உண்டு. இவை வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க, போதை மருந்துகளைக் கண்டு பிடிக்க, சில சமயம் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மனித உயிர்களைக் காப்பாற்றக்கூட உதவுகின் றன.

மேலைநாடுகளில் ஆட்டு மந்தைகளைக் கட்டிக் காக்கும் மேய்ப்பாளர்களாகவும் நாய்கள் பயன்படுகின்றன.

நன்றி:- சு.வி