தொகுப்பு

Archive for மே 8, 2010

பாலையில் நீ – யாசர் அரஃபாத்


மணம் வீசும்

மண வாழ்வில்

மணாளனாய் நீ எனக்கு;

வெட்கம் தீர்வதற்கு முன்னமே

தீர்ந்துவிட்டது உன் விடுப்பு;

சுற்றம் சூழ

தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்

பாலைக்கு!

வீங்கிய இமைகளும்

தூங்க மறுக்க;

சாயம் போகா மருதாணியும்

புதுப்பெண் என்ற பட்டமும் இன்னும் எனக்கு!!

மருந்தாய் உன் குரல் மட்டும்;

விருந்தாய் உனக்கொரு செய்தி;

சிக்கிய எச்சிலோடும்

சிணுங்கிய கண்களோடும்

இல்லாத வார்த்தைகளால்

சொல்லாமல் நான் தவிக்க;

வருட வேண்டிய நீயோ

வருத்தெடுத்துவிட்டாய் வார்த்தைகளால்;

யோசித்துவிட்டு அழைப்புக் கொடு என்று!!

புன்னகையைக் கூட

பூக்கிறேன் என்றதுக்கு பின்தான்

புரிந்துக்கொள்ளும் தூரத்தில்

நீயும் நானும்!!

கேட்டது கிடைக்கும் மசக்கையில்

என்று யாரோ சொல்ல;

கேட்டேன் உன்னை ஒரு முறை வா என்று!!

இதோ இதோ என்று

இன்னொரு வருடமும் ஒடிவிட்டது;

என் மனமும் ஒடிந்துவிட்டது!!

எங்களை வாழ வைப்பதாக எண்ணி

பாலையில் நீ;பாதியில் நம் உறவு;

நீயிருந்தும் முதிர்க்கன்னியாக நான்

காய்ந்துப் போன மனதுடன்

தீய்ந்துப் போன வயதுடன்

இறுதிவரை இருந்திருக்கலாம் மகளாக

என் பெற்றோருக்கு!!

நன்றி:–யாசர் அரஃபாத்

நிம்மதியே இல்லை! முல்லா கதை


ஒரு நாள் முல்லா வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் அமர்ந்திருந்தான். பார்வைக்கு ஒரு செல்வந்தனைப் போல் காட்சியளித்த அவன் மிகுந்த கவலையோடு காணப்பட்டான்.

முல்லா அந்த மனிதனின் அருகில் சென்று அமர்ந்தார். அந்த மனிதனை நோக்கி, ”ஐயா! தங்களைப் பார்த்தால் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. தாங்கள் கவலையோ, சங்கடமோ அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், தங்களைப் பார்த்தால் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்தவர் போல் தோன்றுகிறது.

தங்கள் கவலைக்குக் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று வினவினார். அந்த மனிதன் முல்லாவை நோக்கி, ”நண்பரே! நீர் நினைப்பது போல, நான் வசதிகள் நிறைந்த ஒரு செல்வக்குடிமகன்தான். எனக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. வீடு, நிலம் போன்ற சொத்துக்களும் நிறைய உண்டு. இவ்வளவு சுகபோக வசதிகள் இருந்தும் என்னால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

”எனக்கு இருக்கும் செல்வங்களை யாராவது வஞ்சனை செய்து பறித்துக் கொள்வரோ என்று எனக்கு எப்போதும் பெருங்கவலையாக இருக்கிறது.

இப்போது கூட இதோ என் கையிலிருக்கும் பைக்குள் ஆயிரம் பொற்காசுகள் இருக்கின்றன. நான் வீடு போய் சேர்வதற்குள் இந்த பணப்பைக்கு யாரால் என்ன ஆபத்து ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது,” என்று கூறினார்.

முல்லா அந்த செல்வந்தனின் கையில் இருந்த பணப்பையைத் திடீரெனப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.அதைக்கண்டு பதறிப்போன செல்வந்தன், ‘

‘ஐயோ என் பணம் போய்விட்டதே… என் பணம் போய்விட்டதே!” என்று அலறியவாறு முல்லாவை துரத்திக் கொண்டு ஓடினான்.

முல்லா எங்கெங்கோ ஓடி ஆட்டம் காண்பித்த பின்னர், செல்வந்த முதலில் சந்தித்த மரத்தடிக்கே வந்து சேர்ந்தார்.

பணப்பையை மரத்தடியில் வைத்துவிட்டு அருகிலிருந்த புதருக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார் முல்லா.மூச்சிரைக்க ஓடிவந்த செல்வந்தன்

தம்முடைய பணப்பை மரத்தடியில் கிடப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.’பணம் போய்விட்டதே என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தேன்.

கடவுள் அருளால் என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. இப்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான் செல்வந்தன்.புதருக்குப் பின்னால் இருந்து வெளிவந்த முல்லா செல்வனை நோக்கி, ”செல்வக் குடிமகனாரே! வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா?”கொஞ்ச நேரமாவது நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றுதான் பணப்பையை நான் தூக்கிக் கொண்டு ஓடினேன்.

பறிபோய்விட்டதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த பணப்பை திரும்பக் கிடைத்ததும் கொஞ்ச நேரம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அல்லவா? அது உங்களுக்கு ஒரு லாபம் தானே!” என்று கூறினார்.

அதைக்கேட்ட செல்வன், ”நீ கூறியது உண்மைதான். நீர்

சொன்னதுபோல் பறிபோன பணம் கிடைத்தவுடன் நான் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது,” என்று கூறினான்.

பிறகு செல்வந்தன் முல்லாவை நோக்கி, ”ஐயா! நீர் என்னைப் போல் ஒரு செல்வர் இல்லை போல் தோன்றுகிறது. சாமானிய நிலையில் உள்ள ஒரு மனிதராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு பொருளாதார வளத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள நீங்கள் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறீர்களே, இது எவ்வாறு சாத்தியப்படுகிறது?” என்று கேட்டார்.”அது ஒரு ரகசியம்!,” என்றார் முல்லா.

‘அந்த ரகிசயத்தை எனக்குச் சொல்லுங்களேன். நானும் அதைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியோடு இருக்க முடியுமல்லவா?” என்று செல்வன் கேட்டுக் கொண்டான்.

”அது மிகவும் சாதாரண விஷயம்தான்.

மனிதன் செல்வத்தின் மீது பேராசை கொண்டு அலையும் வரை மனிதனுக்கு மன நிம்மதியோ, மகிழ்ச்சியோசற்றும் இருக்காது. தமது அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பணத்தைச் சம்பாதிக்கும் மனிதனிடம் பேராசை இருக்காது. ஆகவே, அவனால் நிரந்தரமான மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

இதுதான் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம்!”முல்லா கூறியது ஒரு மகத்தான உண்மை என்ற உணர்வு செல்வந்தனுக்கு ஏற்பட அதை பற்றி அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினான்.

நன்றி:- இனைய நன்பர்

முல்லாவின்  மற்றய தொகுப்புக்கள்

முல்லாவில் அறிவாற்றல்

முல்லா அனைத்த நெருப்பு

மீன் பிடித்த முல்லா

சொன்ன சொல் மாறாதவர்

முல்லாவின் திருமண ஆசை

வேதந்த நூல்

யானைக்கு வந்த திருமன ஆசை

மலிவான பொருள்

கப்பலில் வேலை

செயற்கரிய சாதனை

சொல்லாதே!

எடுத்துச் செல்வதற்காக அல்ல

என்னவென்று யூகி?

முல்லா ஏன் அழுதார்?

மீன் – முல்லா கதை

தளபதியின் சமரசம்

கழுதையால்கிடைத்த பாடம்

சூரியனா? சந்திரனா?

நிம்மதியே இல்லை! முல்லா கதைகள்

தகவல் பெட்டி-04


தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் கிரஹாம் பெல் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன் அவர் செய்துகொண்டிருந்த வேலை என்ன தெரியுமா? காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஸ்பீச் டீச்சர் (Speech Teacher) வேலை.

போலோக்னா பல்கலைக்கழகம்

வெள்ளிவிழா, வைரவிழா, பொன்விழா போன்றவை கொண்டாடப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறிப்பிட்ட வருடங்கள் திருமண வாழ்வு நிறைவு பெற்றதும் அந்த தம்பதிக்கு அந்தந்த வருடங்களுக்கேற்ப மரம் (5 வருடங்கள்), டின் (10 வருடங்கள்) \ இவற்றாலான பொருட்களைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது. இதுதான் பொன்விழா, வைரவிழா கொண்டாட்டங்களுக்கு ஆரம்பம்!

சீனாவின் தேசிய சின்னம் \ டிராகன்.

பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், இத்தாலியன் மற்றும் ரோமானிய மொழிகள் லத்தீன் மொழியிலிருந்து தோன்றியவை. இவற்றை நானூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேசுகிறார்கள்.

உலக சிரிப்பு தினமாக கொண்டாடப்படுவது ஜனவரி 10-ம் தேதி.

அடிக்கடி பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் இரான், இராக் நாடுகளின் பழைய பெயர்கள் முறையே பெர்ஷியா, மெஸபடோமியா.

இருட்டைப் பார்த்து பயப்படுவதை டாக்டர்கள் ‘அக்ளூவோபோபியா’ (achluophobia) என்று குறிப்பிடுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சுயசரிதையின் பெயர் ‘தி இன்சைடர்’ (The Insider).

ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் போலோக்னா (Bologna).

ரஷ்ய விண்கலம் ஒன்றின் பெயர்: ஸ்புட்னிக் (Sputnik). இந்த வார்த்தைக்கு, சகபயணி என்று அர்த்தம்!

சிலவகை மூங்கில்களுக்கு வளர்ச்சி விகிதம் மிக அதிகம். ஒரு நாளைக்கு மூன்றடி \ அதாவது 90 செ.மீ. உயரம் வளரும். வளர்ந்து முடிந்ததும் இவற்றின் உயரம் நாற்பது மீட்டர்கூட இருக்கும்.

பிரபஞ்சம் நிலையாக இல்லாமல் விரிந்துகொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டுபிடித்து சொன்னவர் எட்வின் ஹப்பிள் (Edwin hubble). சொன்ன வருடம் 1929.

-273C! இதைவிட குறைவானகுளிர்நிலையை உருவாக்க முடியாது.

இயற்பியலின் மிக முக்கியமான மூன்று விதிகள் – புவிஈர்ப்பு விதிகள். இவற்றைக் கண்டுபிடித்தவரான ஐஸக் நியூட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கற்பித்தது கணிதம்!

புதன் (mercury) கிரகத்துக்குச் சென்ற விண்கலத்தின் பெயர் மரைனர் – 10 (Mariner-10).


ஹெர்குலிஸ்

சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய ஆங்கில நாவல் விக்ரம் சேத் எழுதிய ‘A Suitable Boy’. இதன் மொத்த பக்கங்கள் 1349!

1988-ல் முதன்முதலில் விண்வெளியில் 365 நாட்கள், 59 நிமிடங்கள் இருந்து சாதனை படைத்தவர்கள் மானரோவ் (Manarov), டிடோவ் (Titov) என்ற இரு ரஷ்யர்கள்.

தோகூருக்குப் பிறகு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் வி.எஸ்.நைபால் (V.S.Naipaul).

கிேரேக்க புராணப்படி மாபெரும் பலசாலியான ஹெர்குலிஸின் வேலையாட்கள் பன்னிரண்டு பேர்.

உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனம் \ ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’.

நன்றி:- சு.வி