தொகுப்பு

Archive for ஏப்ரல் 9, 2010

IPL 20,000 கோடி – வா.கார்த்திகேயன்


இன்று ஐ.பி.எல். பற்றி பேசுகிறவர்கள் முதலில் சுபாஷ் சந்திராவுக்கும் (ஜீ.டிவி.) கபில்தேவுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். அன்று அவர்கள் ஐ.சி.எல். என்று ஒன்றை ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் இன்று ஐ.பி.எல். என்கிற உலகத் திருவிழா பிறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். இன்டர்நேஷனல் போட்டிகளில் விளையாடாத கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முகம் தெரியாத உள்ளூர் வீரர்களைக் கொண்டு அணி அமைத்தது மூலம் ஐ.சி.எல். உருவாக்கிய ஃபார்முலா வெற்றி பெறாமல் போனது. ஆனால் அவர்கள் செய்த தவறிலிருந்து சரியான பாடத்தைக் கற்றுக் கொண்டார் லலித் மோடி. மேலும் கிரிக்கெட்டுக்கான அதிகாரபூர்வ அமைப்பான பி.சி.சி.ஐ. லிருந்து உருவானதால் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களை மட்டுமே கொண்ட புதிய அணிகளை உருவாக்க முடிந்தது. அதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இந்தியாவின் உச்சபட்ச கிரிக்கெட் திருவிழாவாக மாற்றினார். குறுகிய காலத்தில் ஐ.பி.எல்-ஐ இவ்வளவு பெரிய சக்ஸஸ்ஃபுல் பிராண்ட்-ஆக மாற்றி காட்டியதன் மூலம் கில்லாடி என்கிற பெயரையும் பெற்றுவிட்டார் லலித் மோடி.

பிஸினஸில் மில்லியன், பில்லியன் டாலர் என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. ஆனால் ஐ.பி.எல்.லில் மில்லியன், பில்லியன் டாலர் என்பது அற்ப விஷயமாகிவிட்டது. இங்கு புழங்கும் நம்பர்களை கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறது. நான்காவது ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட புதிதாக இரண்டு அணிகளுக்கு ஏலம் விடப்பட்டது. இந்த இரண்டு அணிகளை மொத்தம் 3,235 கோடி ரூபாய்க்கு சஹாரா நிறுவனமும் ரென்டிவு (Rendezvous) நிறுவனமும் ஏலம் எடுத்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். ஆரம்பிக்கும் போது 8 அணிகளுக்கும் மொத்த மாகச் சேர்த்தே 2,853 கோடிதான் ஏலம் எடுக்கப்பட்டது. சுமார் 750 நாட்களில் ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் மூன்று முதல் நான்கு மடங்குக்கு மேல் எகிறியிருக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 300 கோடி ரூபாய்க்கு ஏலமெடுத்த நெஸ்வாடியாவும் ப்ரீத்தி ஜிந்தாவும் இப்போது 300 மில்லியன் டாலருக்கு, அதாவது 1,300 கோடி ரூபாய்க்கு விலை பேசுகிறார்கள். (இப்போதுகூட என்ன விலை கொடுத்தாவது ஒரு அணியை வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது வீடியோகான் நிறுவனம்!)

கடந்த வருடம் 2.01 பில்லியன் டாலராக இருந்த ஐ.பி.எல். பிராண்டின் மதிப்பு இந்த வருடம் 4.13 பில்லியன் டாலராக (சுமாராக 18,600 கோடி) உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது பெங்களூரைச் சேர்ந்த பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம். இதில் முக்கியமான விஷயம், புதிதாக ஏலம் எடுத்துள்ள இரண்டு அணிகள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதுதான். இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஐ.பி.எல். மதிப்பு 20,000 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறது.

ஐரோப்பாவில் பிரபலமானது இங்கிலீஷ் பிரீமியர் லீக். 1992-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் தற்போதைய பிராண்ட் மதிப்பு 12 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முடிந்த ஐ.பி.எல்.லின் மதிப்பு 4.13 பில்லியன் டாலர் என்கிறது பிராண்ட் ஃபைனான்ஸ். விளம்பரங்கள், ஸ்பான்ஸர்கள், உலக அளவில் எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து மதிப்பீடு செய்துள்ளது பிராண்ட் ஃபைனான்ஸ். ஐ.பி.எல். என்று பெயர் வைத்துவிட்டு இந்தியாவில் நடத்தாமல் ஆப்பிரிக்காவில் நடத்தும்போதே 2.01 பில்லியன் டாலருக்கு மதிப்பு இருக்கும்போது, இந்த ஆண்டு 4.13 பில்லியன் டாலர்கள் இருப்பதில் எந்த ஆச்சயர்மும் இல்லை.

அமெரிக்க நாட்டு பத்திரிகையான ஃபாஸ்ட் கம்பெனி (FastCompany) ஒருபடி மேலே போய், ஐ.பி.எல்.-ஐ புதுமை படைத்த இந்திய கம்பெனி ((IPL most innovative Indian company) என்று ஐ.பி.எல்-ஐ ஒரு நிறுவனமாகவே மாற்றிவிட்டது. ஐ.பி.எல்-லுக்கு உலக அளவில் 22-வது இடம் கொடுத்துள்ளது. வி.என்.எல்.

என்ற இந்திய நிறுவனத்துக்கு 39-வது இடம் கொடுத்துள்ளது. மற்ற எந்த இந்திய நிறுவனமும் முதல் 50 இடங்களுக்குள் இல்லை. அடுத்த பத்தாண்டுகளில் ஐ.பி.எல். 2 பில்லியன் டாலர் (சுமார் 9,000 கோடி) வருவாய் கொண்ட நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

”இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல்-ன் வருமானம் தேக்கநிலை அடையும்” – ஐ.பி.எல்-ன் பிராண்ட் இமேஜ் பற்றிய அத்தனை புள்ளிவிவரங்களையும் சொன்ன ‘பிராண்ட் ஃபைனான்ஸ்’ நிறுவனம்தான் இப்படிச் சொல்லி இருக்கிறது. ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என அந்த நிறுவனத்தின் எம்.டி. உன்னி கிருஷ்ணனிடம் கேட்டோம்.

”ஐ.பி.எல்-ன் வருமானம் நிலையானது. உதாரணத்துக்கு, டி.வி. உள்ளிட்ட சில உரிமைகளை 10 ஆண்டுகளுக்குப் பேசியிருக்கிறார்கள். இப்போது ஃப்ரான்ச்சைஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது கிடைக்கும் வருமானத்தை பகிர்ந்தளிக்கவேண்டும். அதனால் இந்த வருமானம் தேக்கநிலை அடையும் என்று சொல்கிறோம். தவிர, இந்த பிஸினஸ் மாடல் கொஞ்சம் வித்தியாசமானது. இதில் கண்ணுக்குத் தெரியக்கூடிய சொத்து குறைவு. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சொத்துதான் அதிகம். பிராண்ட் மதிப்பையும் பங்குதாரர்களின் நம்பிகையையும் வைத்து மட்டுமே ஐ.பி.எல். இயங்குகிறது. அதனால்தான் இந்த பிஸினஸ் மாடல் வித்தியாசமானது” என்றார்.

‘இங்கிலீஷ் பிரிமியர் லீக் 800 மில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது. ஆனால் ஐ.பி.எல். லாபத்தில் உள்ளது. அதனால் ஐ.பி.எல். ஐ.பி.ஓ. வரவேண்டிய அவசியமில்லை’ என்று சொல்லி இருக்கிறார் லலித் மோடி. ஐ.பி.எல். ஐ.பி.ஓ. வராவிட்டாலும் அதில் இடம்பெற்றிருக்கும் அணிகள் ஐ.பி.ஓ. வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று உன்னிகிருஷ்ணனிடம் கேட்டபோது, ”வெளிநாடுகளில் நிறைய கால் பந்தாட்ட கிளப்கள் பங்குச் சந்தையில் பட்டியலி டப்பட்டுள்ளன. அதேபோல ஐ.பி.எல். அணிகள் ஐ.பி.ஓ. வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் அது எப்போது ஐ.பி.ஓ. வரும் என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும்” என்றார்.

இப்போது இருக்கும் அணிகளிலேயே மிகவும் காஸ்ட்லியானது சஹாரா நிறுவனம் வைத்திருக்கும் புனே அணிதான். இது எப்போது பிரேக் ஈவனை அடையும்?’ என்ற கேள்விக்கு, ”சஹாரா நிறுவனம் மூன்று அணிகளை (நாக்பூர், அஹமதாபாத் மற்றும் புனே அணிகள்) 370 மில்லியன் டாலர் ஏலத்துக்கு கேட்டிருந்தது. மூன்று இடங்களிலேயும் சஹாராவே அதிகத் தொகைக்கு கேட்டிருப்பதால் ஐ.பி.எல் நிர்வாகம் சஹாராவையே முடிவெடுக்கச் சொன்னது. சஹாரா தேர்ந்தெடுத்தது புனேவை. காரணம், இங்கிருந்து மிக அருகில்தான் சஹாராவின் அம்பே வேலி சிட்டி (Aamby Valley City்) உள்ளது. இதன் காரணமாக சஹாரா புனேவை தேர்ந்தெடுத்து. வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம் தன் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது சஹாரா. ஆனால் எப்படி பிரேக் ஈவன் அடையப் போகிறது என்பது வரும் ஆண்டுகளில்தான் தெரியும்” என்றார் உன்னி கிருஷ்ணன்.

‘இப்போது இந்தியாவின் உச்சபட்ச திருவிழாவாக இருக்கும் ஐ.பி.எல். போட்டிகள் என்றைக்கும் அதே மவுசோடு இருக்குமா? ஐ..பி.எல். நீண்ட நாளைக்கு நீடிக்காது என்ற யூகங்கள் வருகிறதே!’ என்று லலித் மோடியிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான்…

”ஐ.பி.எல். பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எங்களிடம் போதுமான நம்பர்கள் உள்ளது. எங்களிடம் விளையாட்டு உள்ளது. இன்னும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்றும் எங்களுக்குத் தெரியும்!”

ஆனால் பிராண்ட் ஃபைனான்ஸ் சொல்வதையும் மறுக்க முடியாது. ஐ.பி.எல்-லிடம் கண்ணுக்குத் தெரிந்த சொத்துக்களைவிட கண்ணுக்குத் தெரியாத சொத்துக்களே அதிகம். தவிர, ஐ.பி.எல்-ஐ போல மற்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகள் ஏதேனும், இது போன்ற போட்டியை ஆரம்பிக்கும் பட்சத்தில் ஐ.பி.எல்-ன் மதிப்பு குறையக்கூடும்.

பார்த்துக் கொள்ளுங்கள் மோடி, வெறுங்கையால் நீண்ட நாளைக்கு முழம் போட முடியாது.

சென்னைக்கு என்னாச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அரையிறுதிக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றம்தான். அந்த வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஹெய்டனையும் ரெய்னாவையும் மட்டுமே நம்பியதுதான் இதற்குக் காரணம். ஃபிளின்டாப், ஓரம் ஆகியோர் இந்தமுறை காயம் காரணமாக ஆட்டத்துக்கே வரவில்லை. ஹசி ஏப்ரலில் தான் வருவார். டோனி போன்ற விக்கெட் கீப்பர்- பேட்ஸ்மேன் இருக்கும்போது எதற்காக பர்தீவ் பட்டேல் விளையாடும் அணியில் இருந்தார் என்பது டோனிக்கும் அணி நிர்வாகத்துக்கும்தான் வெளிச்சம். கடந்த ஆண்டு நன்றாக விளையாடியதால் பிராண்ட் மதிப்பில் சென்னை முதலிடம் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு விளையாடுவதைப் பார்த்தால் அதன் பிராண்ட் இமேஜ் கடுமையாகச் சரிந்துவிடும் போலிருக்கிறது. இந்த ஆண்டுடன் டோனியின் ஒப்பந்தம் முடிவடைகிறது. டோனி தொடர்ந்து இதே அணியில் இருப்பாரா, இல்லையா என்பது பில்லியன் டாலர் கேள்வி. புனே அணியை வாங்கியுள்ள சஹாராவின் சுப்ரதா ராயின் வலையில் எந்த திமிங்கலம் மாட்டப்போகிறதோ?.

யாருக்கு எவ்வளவு?

ஒரு போட்டியில் கிடைக்கும் வருமானத்தில் 80 சதவிகிதம் ஃப்ரான்ச்சைஸ் எடுத்த அணிகளுக்கும் 20 சதவிகிதம் ஐ.பி.எல்-க்கும் (பி.சி.சி.ஐ.) கிடைக்கும். தற்போது நடக்கும் ஐ.பி.எல்-ல் ஒரு போட்டிக்கு சுமார் 13.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்றால் 60 போட்டிகளுக்கு சுமார் 810 கோடி கிடைக்கும். இதில் 80 சதவிகிதம், அதாவது சுமார் 650 கோடிரூபாய் அணிகளுக்கு கிடைக்கும். அதாவது தோராயமாக ஒவ்வொரு அணிக்கும் சுமார் 81 கோடி கிடைக்கும். இதுபோக இதர வருமானங்கள் தனி!

தற்போதைய நிலையில் ஒவ்வொரு அணியும் ஏலமெடுத்த தொகையில் 10 சதவிகிதத் தொகையை ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எல். அமைப்புக்குச் செலுத்த வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல், வீரர்களுக்குத் தரவேண்டிய பணம் மற்றும் இதரச் செலவுகள் என்று பெரிய செலவுக் கணக்கே இருக்கிறது. புனே அணியை எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் 225 கோடி ரூபாய் தேவைப்படும். அடுத்த ஆண்டு ஒரு போட்டிக்கு சுமார் 25 கோடி வருமானம் வரும் என்று கணித்திருக்கிறார் லலித் மோடி. 90 போட்டிகள் நடந்தால்கூட ஒவ்வொரு அணிக்கும் சுமாராக 185 கோடிதான் வருமானம் கிடைக்கும். அதனால் இதர வருமானத்தை வைத்துக் கொண்டுதான் புனே அணியும் கொச்சி அணியும் சமாளிக்க வேண்டிவரும்

 

படம்: வி.செந்தில்குமார்

நன்றி:-வா.கார்த்திகேயன்

நன்றி:- நாணயம் விகடன்

_________________________________________

பணவீக்கத்தை தாண்டி வருமானத்துக்கு வழிகள்..


”சம்பளம் 10 சதவிகிதம்தான் உயர்ந்திருக்கு… ஆனா, உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 16 சதவிகிதமா இருக்கு. இந்த நிலைமையில எப்படி முதலீடு செஞ்சா தாக்குப் பிடிக்க முடியும் சார்?” என்று அண்மைக் காலத்தில் ஏராளமான தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், இமெயில்கள்..!

சிறிது திட்டமிட்டால் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்துவிடலாம். முதலில், உங்களைச் சுற்றி செலவைக் குறைக்கும் வழிகள் என்னென்ன இருக்கின்றன எனக் கவனியுங்கள்.

பர்ஸ் கனக்கும்!

ஒரு சிறிய உதாரணம்… ஒருவர் சென்னையிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவிலுள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் வேலை பார்க்கிறார் எனில் தினமும் 90 கி.மீ. பயணம் செய்கிறார். அவருக்கு சென்னை மயிலாப்பூரில் சொந்த வீடு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டால் 20,000 ரூபாய் கிடைக்கும். இதே அளவு வசதி உள்ள வீடு மஹிந்திரா வேர்ல்ட் சிட்டிக்கருகில் 10,000 ரூபாய்க்கு கிடைக்கும்போது, அவர் அலுவலகம் அருகே வீட்டை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதனால் பர்ஸ¨ம் கனக்கும். முதுகுத் தண்டும் தப்பிக்கும்! இதன் மூலம் போக்குவரத்தையும் சேர்த்து மாதம் 12,000 மிச்சப்படுத்தலாம். இப்போது புறநகர்களில் நல்ல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் இருப்பதால் அங்கே வீட்டை மாற்றிக் கொள்வதில் பாதிப்பு எதுவும் வராது.

இதுவே அலுவலகம் நகரத்துக்குள் இருந்து, சொந்த வீடு புறநகரில் இருந்தால், உடல் நலன் கருதி அலுவலகம் அருகே வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. உதாரணமாக, ஆவடியில் சொந்த வீடு உள்ளவர் சுமார் 30 கி.மீ. தள்ளியுள்ள அண்ணா சாலையிலுள்ள அலுவலகத்துக்கு வந்து செல்லும் செலவையும் உடற்சோர்வையும் ஆரோக்கியக் குறைவையும் கணக்கிட்டால் சொந்த வீட்டை ஆறாயிரத்துக்கு வாடகைக்கு விட்டுவிட்டு நுங்கம்பாக்கத்திலோ, ராயப்பேட்டையிலோ, திருவல்லிக்கேணியிலோ 10,000 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தால்கூட (பயணச் செலவு மாதம் 2,500 ரூபாய் மற்றும் ஆரோக்கியம்) நஷ்டமில்லை. பொதுவாக, வீடு, அலுவலகம், பள்ளிக்கூடம், ஷாப்பிங் கடைகள் என அன்றாடம் செல்லும் இடங்கள் எல்லாம் அருகருகே அமைந்திருந்தால்தான் நிறையச் செலவைக் குறைக்கமுடியும்.

வாங்கிக் குவிக்காதீர்கள்!

மேலும், விருப்பப்பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள். தேவைக்கு மட்டும் வாங்குங்கள். வாரத்துக்கு ஒருமுறை ஓட்டலுக்குப் போய் சாப்பிடுகிறவர்கள், சினிமாவுக்கு போகிறவர்கள் அதனை 15 நாளைக்கு ஒருமுறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை என்று குறைத்துக் கொள்ளலாம். வருமானம் பெரிய அளவில் உயராதபட்சத்தில் செலவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நீங்களும் உங்கள் வீட்டினரும் புரிந்துகொண்டால் இந்த ஆலோசனையை முகம் சுளிக்காமலேயே செயல்படுத்துவீர்கள். 100 ரூபாய் செலவைக் குறைப்பது 1,000 ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம்.

பத்து நிமிடமாவது ஒதுக்குங்கள்!

விலை அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். அதே நேரத்தில், மலிவாகக் கிடைக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்தி, மற்ற பொருட்களின் செலவைக் குறையுங்கள். கல்வி, ஆரோக்கியம், உணவு இந்த மூன்றுக்கான செலவைத் தவிர எதிலெல்லாம் செலவைக் குறைக்க முடியுமோ, குறையுங்கள்.

உலக அளவில் அதிகமாக சேமிப்பவர்களில் இந்தியர்கள் முக்கிய இடத்தில் இருக்கிறார்கள். நாட்டின் ஜி.டி.பி.-ல் சுமார் 37% மக்களின் சேமிப்பாக இருக்கிறது. ஆனால், இதனை புத்திசாலிதனமாக அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்து லாபமீட்டுகிறார்களா என்றால் இல்லை. தினசரி 8-10 மணி நேரம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய நாம் பத்து நிமிட நேரம்கூட ஒதுக்குவதில்லை. இந்தப் போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

காலை வாரும் கவர்ச்சித் திட்டங்கள்

சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் பணத்தை அவசரத் தேவையில்லாதபோது அவற்றை குறுகிய கால டெபாசிட்டுக்கு மாற்றி சில சதவிகிதம் கூடுதல் வருமானத்தைப் பெற முயற்சி செய்யலாம். பல நேரங்களில் பாதுகாப்பான முதலீடு என்று நினைத்து மிக்ஸி, கிரைண்டர் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு, கவர்ச்சிகரமான திட்டங்களில் முதலீடு செய்து உள்ளதையும் இழக்கிறார்கள் நம் மக்கள். அதே நேரத்தில், ஒளிவு மறைவற்ற, ரிஸ்க் உள்ள அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.

வரிச் சுமையை குறையுங்கள்…

// //

முதலீட்டின் நோக்கம் அதிக வருமானம்தான் என்றாலும், வருமான வரிச் சுமையை குறைப்பதற்கான வழிகளை முதலில் கடைப்பிடிக்கவேண்டும். உச்சபட்ச வருமான வரி வரம்பில் இருக்கும்போது 100 ரூபாய்க்கு சுமார் 30 ரூபாய் வரி கட்ட வேண்டிவரும். இந்தத் தொகையை வரிச்சலுகைக்கான திட்டங்களில் முதலீடு செய்தால் வரியை மிச்சப்படுத்துவதோடு, வருமானத்துக்கும் வழியைத் தேடியது போலாகும்.

சம்பளத்திலே பிடிக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீட்டை அப்படியே தொடரலாம். அது ஓய்வுக் காலத்துக்கான முதலீடு என்பதால் அதில் ரிஸ்க் எடுக்கவேண்டாம். முடிந்தால் கொஞ்சம் அதிகமாகவே சேமிக்கலாம். அடுத்து வரிச்சலுகை என்கிறபோது தனக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ், தனி நபர் விபத்து பாலிசி, மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பங்கு சந்தை சேமிப்பு திட்டமான இ.எல்.எல்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம்.

சொந்த வீடு…

சொந்த வீடு வாங்க மூன்று விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும். ஒன்று, கடனில் வாங்குங்கள் (கையில் பணமிருந்தாலும்); இரண்டு, வீட்டை வாடகைக்கு விடுங்கள், கடன் முடியும் வரை நீங்கள் அதில் வசிக்காதீர்கள். மூன்று, தம்பதிகள் இருவரும் பணிபுரிவதாக இருந்தால் வீடு மற்றும் கடனை இருவர் பெயரிலும் கூட்டாக வாங்குங்கள். இப்படிச் செய்தால் இருவருக்குமே இரு வரிச் சேமிப்பு வருமான வரிச் சட்டத்தின் 80சி-ன் கீழ் நபர் ஒருவருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வரையில் திரும்பக் கட்டிய அசல் தொகை மற்றும் முழு வட்டியை (வருமானவரி சட்டம் 24-ன் கீழ்) வரிவிலக்காகப் பெற்று அதிகமாக வரியை மிச்சப்படுத்த முடியும்.

பங்குச்சந்தை

வரிச்சலுகைக்கு போதுமான அளவு முதலீடு செய்துவிட்டீர்கள் என்றால், பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் வேண்டும் என்கிறவர்கள் பங்குச் சந்தை பக்கம் வரலாம். இந்தியாவைப் பொறுத்தவரையில் நீண்ட காலத்தில் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் சுமார் 5 முதல் 6 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 20 சதவிகிதத்திலிருந்து 16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அந்த வகையில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடு பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் அளிப்பதாக இருக்கும். குறுகிய காலத்தில் கரெக்ஷன் வரும்போது நல்ல பங்குகள் மற்றும் ஃபண்ட்களில் முதலீடு செய்யுங்கள். பங்குச் சந்தை, ஃபண்ட் முதலீடு ரிஸ்க்கானதுதான். ஆனால், அவை அதிக வருமானத்தைக் கொடுக்கிறது என்பதை அறிந்து, வயதுக்கு ஏற்ப அதில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த நோக்கில் நீங்கள் பணவீக்கத்தை பந்தாடி ஜெயிக்கலாம்.

அதிக வருமானம்…!

வருமான வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தது போக, மீதியுள்ள தொகையை ரிஸ்க் உள்ள அதே நேரத்தில் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

1 பங்குச் சந்தை முதலீடு

இதில் ரிஸ்க் இருக்கும் அளவுக்கு வருமானமும் இருக்கிறது. நல்ல நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வந்தால் நிச்சயம் சிறப்பான வருமானத்தைப் பெறலாம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பங்குச் சந்தை ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கொடுத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் பணவீக்க விகிதம் சுமார் 10 சதவிகிதம்தான். எனவே 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தையே பங்குச் சந்தை தந்திருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி, நிஃப்டி ஜூனியர் குறியீடுகளில் இடம் பிடித்துள்ள பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ஓரளவு பாதுகாப்பாகவும் அதேசமயம் அதிக வருமானத்தையும் பெறமுடியும். கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் 82%, நிஃப்டி புள்ளிகள் 77% அதிகரித்திருப்பதே இதற்கு சிறந்த ஆதாரம்.

2. மியூச்சுவல் ஃபண்ட்

வரி சேமிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், மூன்றாண்டுகள் ‘லாக் இன் பிரீயட்’ கொண்ட இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிக வருமானம் பெற மூன்றாண்டுகள் கழித்து வேறு தீவிரமான ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். அல்லது மீண்டும் வரிச்சலுகை பெற இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களில் மறுமுதலீடு செய்யலாம். இந்த வரி சேமிப்பு ஃபண்டில் டிவிடெண்ட் மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை என்பது கூடுதல் லாபம். கடந்த மூன்றாண்டு காலத்தில், முதல் 10 இடங்களில் உள்ள இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் 15 முதல் 25% வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

வரி சேமிப்பைத் தாண்டி முதலீடு செய்பவர்கள், முற்றிலும் பங்கு சார்ந்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் அதிக வருமானத்தைப் பெறலாம். மார்ச் 25-ம் தேதியுடன் முடிந்த ஓராண்டு காலத்தில் முதல் பத்து இடங்களில் உள்ள டாப் மியூச்சுவல் ஃபண்ட்கள் 145-165% வருமானத்தை அள்ளித் தந்திருக்கின்றன. ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யும்போது எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்வது நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

3. தங்கம் – இ.டி.எஃப்.

இதை காகிதத் தங்கம் எனலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். ஆபரணத் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதாரம் இதில் இல்லை என்பதால் கூடுதல் லாபம். அதேபோல விற்கும் போதும் இது போன்ற கழிவுகள் கிடையாது என்பதால் லாபம் முழுவதும் உங்களுக்கே (தரகருக்கு கொடுக்கும் சிறு கமிஷன் போக). தங்க முதலீட்டோடு ஒப்பிடும்போது இதற்கான வருமானவரி குறைவுதான். இப்போது இந்த கோல்ட் இ.டி.எஃப். மிகவும் பாப்புலராகி வருகிறது.

பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட் இ.டி.எஃப். முதலீட்டில் நீங்கள் எந்த விலையில் வாங்குகிறீர்கள் என்பது மிக முக்கியம். எப்போதும் கரெக்ஷன் காலத்துக்காக காத்திருந்து முதலீடு செய்வது மூலம்தான் அதிக லாபம் பெறமுடியும். மேலும், மொத்தமாக முதலீட்டைச் செய்ய வேண்டாம். எப்போதும் எஸ்..ஐ.பி. முறையை பின்பற்றி முதலீடு செய்து வாருங்கள்.

மேலே கண்ட மூன்று முதலீட்டு முறைகளிலும் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் வந்ததும் விற்று பணமாக்கி விட்டு, மீண்டும் குறையும் போது முதலீடு செய்யுங்கள். இவ்விதம் செய்தால் பண வீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

4. ரியல் எஸ்டேட்

இதிலுள்ள பெரிய பிரச்னை முதலீடு செய்ய நிறைய பணம் வேண்டும். தவிர, தேவைப்படும்போது விற்கவும் முடியாது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி பல மடங்கு வருமானம் தரும் முதலீட்டில் ரியல் எஸ்டேட் முக்கிய இடத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. முதலில் சொந்த வீடு கடனில் வாங்கி ஏற்கனவே சொன்னது போல் வருமான வரியை மிச்சப்படுத்துங்கள். அது முடிந்த பிறகு அல்லது அதையும் தாண்டி பணமிருந்தால் புறநகர்களில் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் மனைகளில் முதலீடு செய்யலாம். மாதத் தவணை திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, உங்கள் பிளாட்டை விற்பவர் நம்பகமான புரமோட்டார்தானா என்பதே. அகலமான சாலை, கார்னர் மனை, தண்ணீர் வசதி, அருகிலுள்ள நகரங்களில் தொழில் வளர்ச்சி போன்ற அம்சங்களைக் கவனித்து முதலீடு செய்தால்தான் முதலீடு மதிப்பு வேகமாகக் கூடும். ரியல் எஸ்டேட் முதலீட்டில் கணிசமான லாபம் பார்க்க குறைந்தது 5-10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

5 உத்தரவாத வருமானத் திட்டங்கள்

முழுப் பணத்தையும் ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அந்த வகையில், பொது பிராவிடன்ட் ஃபண்ட் மற்றும் கடன் சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். இது அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து இருக்கிறது.

தொகுப்பு: சி.சரவணன்

நன்றி:- நா.வி

——————————————————

Sadaqat-Ul-Jariyah


بسم الله الرحمن الرحيم

IN THE NAME OF “ALLAH”

Assalamu Alaikum Warahmatu Allah Wabarkatu,

Sadaqat-ul-Jariyah

The Actions Which Outlive You!
الأعمال التي تبقى بعد زوالك

Give A Copy Of Quraan To Someone And Each Time They Read From It, You Will Gain Hasanaat.

– اعطاء نسخة من القرآن لآي شخص ,, وكل ما يقرأ هو ,انت ,تكسب حسنآت

Donate A Wheel ChairTo A Hospital And Time A Sick Person Uses It, You Will Gain Hasanaat.
اتبرع بالكراسي الخاصة للمعاقين في المستشفيات,,وكلما استخدمت من الأشخاص المعاقين,,يكون لك اجرShare Constructive Reading Material With Someone.

شارك باستنتاجك واقتراحات في اي مشروع يحتاج ذلك

Help In Education A Child.
اتبرع و ساعد في تدريس الأطفال

Teach Someone To Recite A Dua. With Each Recitation, You Will Gain Hasanaat.

لقن او درس كيفية الدعاء (لغير الناطقين للعربية)

Share A Dua Or Quraan CD.

شاركهم بالدعاء او في شراء او بناء اقراص سي دي للقرآن
Participate In The Building of A Masjid

اتبرع للمشاركة في تكاليف بناء المساجد
Place A Water Cooler In A Public Place .

وضع ثلاجة مائية في مكان عام مزدحم بالمارين
Plant A Tree. Each Time Any Person Or An Animal Sits Under Its Shade Or Eats From The Tree, You Will Gain Hasanaat.

.. قم بزراعة الأشجار لأن اي شخص او حيوان ياكل او يستريح تحتها يكون لك اجر فيها

Share This Mail With Someone. If One Person Applies Any Of The Above You Will Receive Your Hasanaat Until The Day Of Judgment.
ارسل هذا الأيميل لغيرك ,,اذا اي شخص قام بعمل اي من هذة الصدقات الجارية الموجودة هنا فانت بهذا العمل سوف تكسب الحسنات الى يوم القيامة
باذن الله

பிரிவுகள்:இஸ்லாம், Sadaqa, Sadaqat-Ul-Jariyah குறிச்சொற்கள்:, , , , , , ,