தொகுப்பு

Archive for ஏப்ரல் 11, 2010

மாத சேமிப்பு… மெகா லாபம்! – நாகப்பன் புகழேந்தி

ஏப்ரல் 11, 2010 1 மறுமொழி

சிறு துளி பெரு வெள்ளம். அந்த அடிப்படையில் அமைந்ததுதான் திட்டமிட்ட சேமிப்பு முறை என்கிற முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் எனப்படும் எஸ்.ஐ.பி. (Systamatic Investment Plan). இது நடைமுறையில் உள்ள பரஸ்பர நிதிகளில் ஏதாவது ஒன்றில், திட்டமிட்டு முதலீடு செய்ய உதவும் வழி முறை. ரெகுலராகக சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டமிது.

முன்பெல்லாம், மாதா மாதம் சேமிக்கும் வகையில் அமைந்த ரெக்கரிங் டெபாசிட் தான், நடுத்தர வர்க்கத்தினரிடம் பாப்புலர். வட்டி விகிதம் குறைந்துவிட்டதால் ரெக்கரிங் டெபாசிட்கள் கவர்ச்சி இழந்துவிட்ட நிலையில், இப்போது திட்டமிட்ட சேமிப்பு முறைதான் சிறந்த வழி. மாதாமாதம், கொஞ்சம் கொஞ்சமாகச் சேமிக்கும்போது, ஒரு கட்டத்தில் நம்மை அறியாமலேயே பெரிய தொகை சேர்ந்துவிடும்.

முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த நிதி, அனைத்தும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதி, இரண்டும் கலந்த கதம்பம் என பலவித பரஸ்பர நிதித் திட்டங்கள் உள்ளன. இவற்றில் உங்கள் வயதிற்கும் வருவாய்க்கும் ஏற்ற திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் இள வயதினராகவோ, ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயார் என்றாலோ, முழுவதும் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைத் தேர்வு செய்யலாம். ஓய்வுபெற்றவராகவோ, அதிக வருவாயை விட முதலீட்டின் பாதுகாப்பிற்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பவராகவோ இருப்பின், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியைத் தேர்ந்தெடுக்கலாம். இரண்டும் கலந்த நிதியான பேலன்ஸ்டு ஃபண்ட் என்பது கபில்தேவ் போல ஆல்ரவுண்டர்!

அடுத்தகட்டமாக அதில் 5,000 ரூபாய் முதலீடு செய்து கணக்கைத் துவங்கலாம். பொதுவாக இந்தத் திட்டங்களில் ஆரம்ப முதலீடு ஐயாயிரம் ரூபாய். பின்னர் மாதம் ஐந்நூறு ரூபாய் கூட போடலாம். கணக்கைத் துவக்கும்போதே, ‘அந்த முதலீட்டின் மீது வரும் வருவாயை, அதே திட்டத்தில் மறுமுதலீடு செய்ய விருப்பமா, அல்லது லாபத்தைப் பிரித்து டிவிடெண்டாக வழங்க வேண்டுமா, அப்படி டிவிடெண்டாக வேண்டும் என்றால் வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டுமா, அல்லது செக், வாரண்டாக அனுப்ப வேண்டுமா?’ என்பது போன்ற கேள்விகளோடு, ‘திட்டமிட்ட முதலீட்டு முறையில் சேர விருப்பமா?’ என்பதையும் கேட்பார்கள். அதை டிக் செய்தால் போதும். திட்டத்தில் சேர்ந்தாச்சு!

எஸ்.ஐ.பி எப்படி வேலை செய்கிறது? மாதா மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒருமுறையோ குறிப்பிட்ட தொகையை இதில் முதலீடு செய்யலாம். நிதி நிறுவனங்களைப் பொறுத்து இக்கால கட்டம் மாறுபடுகிறது. அதற்கான காசோலையை முன்கூட்டியே அந்நிறுவனத்திடம் நாம் கொடுத்துவிட வேண்டும். அல்லது ஈ.சி.எஸ் (ECS – Electronic Clearing Service) மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து அத்தொகையை எடுத்துக் கொள்ளும் அனுமதியை வழங்கி விட்டால், நம் சேமிப்புக் கணக்கில் இருந்து நேரடியாகவே அப்பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.

இத்திட்டத்தின் முக்கிய அனுகூலம் என்ன? பங்குச் சந்தையைப் பற்றியோ, அதன் அதீத ஏற்ற இறக்கங்களைப் பற்றியோ அதிகம் தெரிந்திராதவர்கள்கூட தைரியமாக முதலீடு செய்யலாம். ஆங்கிலத்தில் ‘தியரி ஆஃப் ஆவரேஜிங்’ என்றும் ‘ருபி காஸ்ட் ஆவரேஜிங்’ (Rupee Cost Averaging) என்றும் சொல்வார்கள். நாம் முதலீடு செய்யும் பரஸ்பர முதலீட்டுத் திட்டத்தின் யூனிட் களின் நிகர சொத்து மதிப்பு (Net Asset Value), பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்குத் தக்க அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும். மற்ற முதலீடுகளும் அப்படித்தான். யூனிட்களின் மதிப்பு கூடலாம், அல்லது குறையலாம்.

உதாரணமாக, மாதாமாதம் 500 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். முதல் மாதம், யூனிட்களின் நிகர சொத்து மதிப்பு இருபது ரூபாயாக இருக்கிறது என வைத்துக் கொண்டால், நாம் கட்டும் 500 ரூபாய்க்கு, 25 யூனிட்கள் கிடைக்கும்.

இரண்டாம் மாதம், யூனிட்களின் விலை சற்றே அதிகரித்து 25 ரூபாயாக இருப்பின், அந்த மாதம் நாம் கட்டும் ஐந்நூறு ரூபாய்க்கு 20 யூனிட்களே கிடைக்கும்.

மூன்றாம் மாதம், யூனிட்களின் விலை முன்பை விட குறைந்து 15 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், அந்த மாதம் முதலீடு செய்யும் 500 ரூபாய்க்கு 33 யூனிட்கள் வாங்கலாம்!

நான்காம் மாதம் மீண்டும் யூனிட்களின் விலை அதிகரித்து 30 ரூபாயாக ஏறிவிட்ட நிலையில், 500 ரூபாய்க்கு 16 யூனிட்களே அலாட் செய்யப்படும்.இப்படியே ஒவ்வொரு மாதமும் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு, யூனிட்களின் விலையைப் பொறுத்து கூடுதலாகவோ, குறைவாகவோ யூனிட்கள் வழங்கப்படும். இந்த யூனிட்கள் யாவும் நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

இதில் ஒன்றைக் கவனித்தீர்களா? மாதாமாதம் நாம் முதலீடு செய்யும் தொகை அதே 500 ரூபாய்தான். ஆனால் வாங்கும் யூனிட்களின் எண்ணிக்கை மட்டும் மாறுகிறது. அதுவும் யூனிட்களின் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான எண்ணிக்கையிலும், விலை மலிவாக இருக்கும்போது அதிக எண்ணிக்கையிலும் யூனிட்களை வாங்குகிறோம். இதனால் வரும் பலனைப் பார்த்தால் பிரமித்துப் போவீர்கள்! குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பின், யூனிட்களின் சந்தை விலையை விடவும், யூனிட்களின் நிகர சொத்து மதிப்பை விடவும், நமது கொள்முதல் விலை குறைவாகவே இருக்கும். இதுதான் ‘ருபி காஸ்ட் ஆவரேஜிங்’! அமெரிக்காவில் இதை ‘டாலர் காஸ்ட் ஆவரேஜிங்’ என சொல்வார்கள்.

இந்த உதாரணத்தில் சொல்லப்பட்டு இருப்பது போல யூனிட்களின் விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதில்லை என்றாலும் சுலபமாகப் புரிய வைப்பதற்காக அதிக விலை வித்தியாசங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எப்போது முதலீடு செய்வது என்பது எல்லோருக்குமே குழப்பமான ஒன்று! டைமிங் தி மார்கெட்(Timing the Market ) என்பார்கள். குறைவான விலையில் வாங்கி உச்ச விலையில் விற்பது என்பது அனைவருக்கும் சாத்தியமான விஷயம் அல்ல. மிகக் குறைவான விலைக்கு வாங்கி உச்சபட்ச விலைக்கு விற்பது என்பது, பங்குச் சந்தையில் தினசரி குப்பைகொட்டிக் கொண்டு இருக்கும் பெரும் முதலீட்டாளர்களாலேயே முடியாத விஷயம். அனுபவமிக்க நிபுணர்களுக்கும், பங்குத் தரகர்களுக்குமே சவாலான விஷயம். ஆனால், அந்தக் கவலையைப் போக்குகிறது எஸ்.ஐ.பி.

யூனிட்களின் விலை அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களையே வாங்குவதால், விலை குறையும்போது நஷ்டமும் குறைவாக இருக்கும். அதேசமயம், விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களை வாங்குவதால், விலை ஏறும்போது லாபமும் கணிசமாக இருக்கும். அதாவது, நஷ்டம் வரும்போது குறைவாகவும், லாபம் கிடைக்கும்போது அதிகமாகவும் இருக்கும்.

இத்திட்டத்தில் மற்றொரு பலனும் உண்டு. வருடக் கடைசி வரை காத்திருந்து முதலீடு செய்யாமல் அவ்வப்போது திட்டமிட்டு முதலீடு செய்வதால், முதலில் செய்யும் முதலீடுகளுக்கு கூட்டு வட்டிபோல வருடக் கடைசியில் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் செய்யும் முதலீடு உடனடியாகவே வருவாய் ஈட்டத் தொடங்கி விடும். இந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதிகளில் மட்டும்தான் என்றில்லை. அரசின் கொள்கையைப் பொறுத்து வட்டி விகிதம் மாறும்போது, சந்தையில் புழக்கத்தில் இருக்கும் அரசு கடன் பத்திரங்களின் விலையும் மாறும்.

வட்டி விகிதங்கள் கூடினால், ஏற்கெனவே இருக்கும் கடன் பத்திரங்களின் விலைகள் மாறும். வட்டி விகிதம் குறைவதாக அறிவிக்கப் பட்டாலோ, அதிக வட்டி வழங்கும் பழைய கடன் பத்திரங்களின் விலையில் அது எதிரொலிக்கும். இந்த ஏற்ற இறக்கங்கள் அந்தந்த பரஸ்பர நிதித் திட்டங்களின் யூனிட்களிலும் பிரதிபலிக்கும்.

இப்போது நான்கு அல்லது ஐந்து பரஸ்பர நிதித் திட்டங்களை இணைத்து சூப்பர் எஸ்.ஐ.பி எனும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாதாமாதம் நம் கொடுக்கும் தொகையை, ஒரே ஒரு திட்டத்தில் மட்டும் என்றில்லாமல், பங்குச் சந்தை சார்ந்த நிதியில், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதியில், கலவை நிதியில் எனப் பிரித்து முதலீடு செய்கிறார்கள். இதன் தாக்கங்கள் எப்படியிருக்கும் எனப் போகப் போகத்தான் தெரியும். அந்தந்த பரஸ்பர நிதித் திட்டங்களுக்கு உண்டான வரிவிலக்கு அனைத்தும் இந்த எஸ்.ஐ.பி. முறையில் செய்யப்படும் முதலீட்டுக்கும் இந்த யூனிட்கள் ஈட்டும் வருவாய் மீதும் உண்டு.

பரஸ்பர நிதித் திட்டங்களில் செய்யும் முதலீட்டிற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. எனவே நல்ல பாரம்பரியமிக்க நிறுவனங்களின் திட்டங்களையே தேர்ந்தெடுங்கள்.

சாதாரணமாக பெரும்பாலான பரஸ்பர நிதித்திட்டங்களில் முதலீடு செய்யும்போது 2.5 % வரை நுழைவுக் கட்டணம் உண்டு. ஆனால் இதுவரை எஸ்.ஐ.பி திட்டத்தின் மூலமாக முதலீடு செய்யும்போது ‘என்ட்ரி லோடு’(Entry Load) எனப்படும் இந்த நுழைவு கட்டணம் கிடையாது. இப்போது சில நிறுவனங்கள் இதிலும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கத் துவங்கி இருக்கிறார்கள். ஆனால் எக்ஸிட் லோடு (Exit Load) இருக்கும். இதுவும் 2.5% வரை போகலாம் என்பதால் தீர விசாரித்து முடிவெடுங்கள்.

கடந்த பத்தாண்டுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட பரஸ்பர நிதித்திட்டங்களை ஆய்வு செய்ததில், ஒன்று தெளிவாகியுள்ளது. சாதாரணமாக பரஸ்பர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 13 சதவிகிதத்திற்குக் குறையாமல் வருவாய் வந்துள்ளது. அதே திட்டங்களில் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 20 சதவிகிதத்திற்குமேல் வருவாய் வந்துள்ளதாகக் கூறுகிறது இந்த ஆய்வு. ஒரு திட்டமிட்ட வகையில் தொடர்ந்து சேமித்ததால், மற்றவர்களைவிட கூடுதலாக இவர்களுக்கு வருவாய் கிடைத்துள்ளது!

மொத்தத்தில் நமக்கு டிசிப்லினை கற்றுத்தந்து, சேமிப்பையும் ஒரு ஒழுங்குமுறையோடு செய்ய சொல்லித்தருவது எஸ்.ஐ.பி. எனலாம்! சிறுகச் சேர்த்து பெருக வாழ்வோம்!

நன்றி:-நாகப்பன் புகழேந்தி
நன்றி:- நா.வி(16-12-05)

=======================================================

பணம் – பன்னாட்டு பொன்மொழிகள்


நன்றி:- நா.வி

=======================================================

நித்தம் 10 கோடி – மீரா சூர்யா


பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போனால் போதும்… கல்யாண சீர் வரிசையும் வாங்கி, அவர்கள் குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வந்துவிடலாம்… எல்லாம் ஒரே தெருவில்! குறுகிய தெரு தான்… ஆனால், குபீர் வியாபாரம் கொழிக்கிறது.

சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு! சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க வந்தது போல, எப்போது பார்த்தாலும் திருவிழாக் கூட்டம்தான்.

நகைக்கடைகள், துணிக்கடைகள், பாத்திரக் கடைகள் என்று பெரிய பெரிய கடைகள் ஒருபக்கம் என்றால், செல்போன் கவர், ஹேர் கிளிப், கர்ச்சீப், கீ செயின், பேனா, சாக்ஸ் என்று கைகளில் அடுக்கிக் கொண்டு கூவிக்கூவி விற்கும் தெருவோர கடைகள் இன்னொரு பக்கம்! குண்டூசி தொடங்கி ஏ.சி.மிஷின் வரை இங்கு இல்லாத பொருள்களே இல்லை.பாத்திரக்கடைகளுக்குப் பக்கத்திலேயே பெயர் பொறிக்கும் கடைகள், துணிக்கடைக்குப் பக்கத்திலேயே தையல்கடைகள் என்று உபதொழில் செய்பவர்கள் ஏராளம்.

இப்படி மக்களுக்குத் தேவையானவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகள் நிறைந்திருக்கும் இதே தெருவில், கரும்புச்சாறு, பழச்சாறுகள், குளிர்பானங்கள், சமோசா, பிஸ்கட் போன்ற பசியாற்றும் பொருட்களை விற்பவர்களும் இருக்கிறார்கள்.

இங்குமட்டும் மக்கள் குவிவதற்கு என்ன காரணம்..? மாம்பலம் ரயில் நிலையத்துக்கும், தி.நகர் பஸ் நிலையத்துக்கும் பக்கத்தில் இந்தத் தெரு இருப்பது தான்.

ரங்கநாதன் தெருவிலுள்ள மொத்தக் கடைகளின் எண்ணிக்கை 400

ரு நாளில் ரங்கநாதன் தெருவிற்கு வந்து போவோரின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் பேர். சனி, ஞாயிறு கிழமைகளில் கூட்டமும், வியாபாரமும் இரு மடங்காகவும், பண்டிகைக் காலங்களில் பத்து மடங்காகவும் இருக்கும்.

ஒரு நாளில் நடக்கும் குறைந்தபட்ச வியாபாரம் 10 கோடி ரூபாய்.

——————————————————————————–
படம்: உசேன்
நன்றி:- மீரா சூர்யா
நன்றி:- நா.வி
====================================================================

ஒளி கொண்டு வந்த உளி – பி. எம். கமால் கடையநல்லூர்


காற்றுக்கு வியர்த்தது
கரைந்து போய்இருந்தது
வரம் வேண்டித் தாவரங்கள்
கிளைக்கரம் ஏந்தி
ஒற்றை வேர்களில்
உபவாசம் இருந்தன

பாலைவனம் சூரியனின்
படுக்கையறை ஆனது
வாழ்கையின் உரமான
பெண்கள்

பூமிக்கு உரமாக
புதைக்கப்பட்டனர்
கற்கள் பயன்படுத்தப்பட்டன
கொல்லவும் வணங்கவும்

அது-

இறந்த காலம்

அன்று
ஏழை சிரிக்கவில்லை
அதனால்
இறைவனை ஒருவரும்
காண முடியவில்லை !

பணக்காரனிடத்தில்
கத்தி இருந்தது
பக்தி இல்லை

நீதியோ செத்து
நாறிக்கிடந்தது
சிலைகளின் கால்களில்

சிதறிக்கிடந்தன
மனிதத் தலைகள் !
உயிரோடு

இப்படியெல்லாம்
சீரழிந்து கொண்டிருந்த
செங்கடல் பாலையில்

இறைவனின் ஒளியின்
துளியொன்று கையில்
உளிகொண்டு வந்தது

பாசியும் தூசியும்
பாவத்தின் துருக்களும்
பற்றிப் பிடித்திருந்த
மனித மனங்களை
செதுக்குவதற்கும்
புதுக்குவதற்கும்

அந்த
ஒளி வந்த பிறகுதான்
ஆன்மாவின் இருட்டு
மூலைகளிலெல்லாம்
வெளிச்சத்தின் விலாசம்
எழுதப்பட்டன !

இப்போது
அது
இறந்த காலமல்ல !

உலகம்
மீண்டும் ஒருமுறை

உயிருடன் மீண்ட
நிகழ் காலமது !

இறந்த காலத்தில்
இருந்தவர்கள்

தங்களின்
நிகழ் காலத்தில் நம்மை
எதிர் காலமாகப் பார்த்தார்கள்

ஆனால் நாமோ
பிடிவாதமாக
இறந்த காலத்திற்குள்
நுழைவதற்காக
முண்டியடித்துக்
கொண்டிருக்கிறோம்

ஒளி கொண்டுவந்த
உளிகொண்டு நம்மை
எப்போது
செதுக்குவோம் ?

—————————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================

காட்டு மிராண்டிகள் – பி. எம். கமால் கடையநல்லூர்


நாங்கள்
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
அரபகத்துப் பாலையில்
அலைந்த  மிருகங்கள் !

இறைவன் எங்களின்
இதயத்தில் முத்திரையை
இட்டுவிட்ட  காரணத்தால்
உதயமே ஆகாமல்
அஸ்தமனச்  சகதியில்
ஆழ்ந்து போனவர்கள்
உள்ளத் தாக்குதல்
ஒன்றும் இல்லாமல்
பள்ளத் தாக்குகளில்
பரவிக் கிடந்தவர்கள் !

அண்ணல் நபிகளை
அறவே வெறுத்து  விட்டு
எண்ணங்கள் சிதைந்து
எருமைகளாய் வாழ்ந்தவர்கள்
எங்களுக்கு நீங்கள்
இட்ட பெயரோ
காட்டு மிராண்டிகள்
கவைக்குதவாதவர்கள் !

நாங்கள்-
முழு நிலவைத் தரையில்
முற்றாகக் கண்டவர்கள்!
கலிமாவைச் சொல்லாத
காரணத்தால் நாங்களெல்லாம்
காபிர்களாகிக்
கருங் கல்லாய் ஆகிவிட்டோம் !

வட்டியில்தான் எங்கள்
பெட்டிகள் நிறைந்தன
சட்டிகளில் சாராயச்
சலங்கை ஒலித்தன

பெருமானார் சொன்ன
வழிமுறை எல்லாம்
பெரிதாய் நாங்கள்
கைக்கொள்ளவில்லை !

நபியைச்
சாதாரண மானவர் என்று
கருதிய காரணத்தால்
சரித்திரம் எங்களைக்
காறித் துப்புகிறது !

புறக்  கண்ணால் மட்டுமே
பூமான் நபிகளை
புரிந்து கொண்டோம்
அகக் கண்ணால் ஒருபோதும்
அளந்து பார்க்கவில்லை!

அந்தக்
கர்த்தனின் தோட்டத்து
கருணை மலருக்குள்
அல்லாஹ்வின் அமுதத் தேன்
அடங்கிக் கிடந்ததை
அறியாமல் போனோம்

இஸ்லாத்தில் எங்களை
இணைக்காத காரணத்தால்
காபிராகவே கப்ருக்குள்
அடங்கிவிட்டோம் !

ஒளி இருந்தும் காண்பதற்கு
விழி இருந்தும் நாங்கள்
இருளுக்குள் மூழ்கியே
இருந்து விட்டோம் !

அட ! ஓ ! மனிதர்களே !
இப்போதும் நீங்கள்
எங்களைப் போல் தானே
இருக்கின்றீர்கள் !

வட்டி உங்கள்
வலக்கரம் என்றால்
வரதட்சணை உங்கள்
இடக்கரம் அல்லவா ?

இன்னும் நீங்கள்
திங்கள் நபியை
எங்களைப் போலே
சாதாரண மனிதர்
என்று தானே
சொல்லித் திரிகின்றீர் !

நாங்கள்
காடுகளில் பாலைகளில்
அலைந்த
காட்டு மிராண்டிகள் !

நீங்களோ
வீடுகளில் வாழ்ந்தாலும்
வேத  மறை மறந்துவிட்ட
புத்தியே இல்லாத
புதிய காட்டுமிராண்டிகளே !

—————————————————————————————————–

பி. எம். கமால் கடையநல்லூர்

================================================================

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்


>தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள…

‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?

தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைட் டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற ருசியான முப்பது வகை மசாலா – குருமாக்கள் செய்யும் விதத்தைக் கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். இவை எல்லாமே குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய ஐட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு! செய்து, பரிமாறுங்கள்! அப்புறம் பாருங்கள்… வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் அமோக பாராட்டை!

ணமணக்கும் மசாலா ஐட்டங்கள் தயாரிப்பில், கரம் மசாலா பொடி மற்றும் கறி மசாலா பொடி உதவிக்கரம் நீட்டுகின்றன. இந்த இணைப்பிதழில் அணிவகுக்கும் மசாலா செய்முறைகளில் இது பற்றிய குறிப்புகள் வரும். கரம் மசாலா பொடியும் கறி மசால் பொடியும் தயாரிப்பது எப்படி என்பது மட்டும் இங்கே…

பனீர் பட்டர் மசாலா! கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!

செய்முறை: லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்… இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை: காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 1 கப், தனியா – அரை கப், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 5. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!

தேவையானவை:

பனீர் – 200 கிராம், பெரிய வெங்காயம் -3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.

செய்முறை:

பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

செட்டி நாடு குருமா!தேவையானவை:

கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:

முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.

மட்டர் பனீர் மசாலா!தேவையானவை:

பட்டாணி -1 கப், பனீர் -200 கிராம், பெ. வெங்காயம்-3, தக்காளி – 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

வெஜிடபிள் குருமா!தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.

செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.

பீஸ் மசாலா!தேவையானவை:

பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, புளிக்காத தயிர் – கால் கப், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:

பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.

இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

புதினா குருமா!தேவையானவை:

பச்சை பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 2.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா – 1 கட்டு, தேங்காய்த்துருவல் – 1 கப், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 5, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 6, பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!

பெப்பர் பீஸ் மசாலா!தேவையானவை:

பட்டாணி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு – சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:

பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்… ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!

தக்காளி குருமா!தேவையானவை:

பெ. வெங்காயம் – 3, தக்காளி – 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், கசகசா – 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு.

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!

கோபி மசாலா!தேவையானவை:

காலிஃப்ளவர் – சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை – 1, சீரகம் – அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த் தூள், கசகசா – தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு – தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 8.

செய்முறை:

காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!

மசாலா குருமா!தேவையானவை:

விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது – 2 கப், வெங்காயம் – 3, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு. தாளிக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.

மசாலா, குருமா… இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.

ஆலு மசாலா!தேவையானவை: உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!

ஈஸி குருமா!தேவையானவை:

நீங்கள் விரும்புகிற காய்கறிகள் – 2 கப், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 4, சோம்பு – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, கசகசா – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 5 நிமிடம் வதக்கி, இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரையுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சொல்ல மட்டுமல்ல… செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா! குறிப்பு: இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.

தம் ஆலு!தேவையானவை:

உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெ. வெங்காயம் – 3, தக்காளி – 3, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 3, எண்ணெய், உப்பு – தேவைக்கு.

பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.

இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

உருளைக்கிழங்கு ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆகிவிடும் இந்த தம் ஆலு!

குறிப்பு: தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

பூண்டு இல்லாத குருமா!தேவையானவை:

நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், முந்திரிப்பருப்பு – 6, உப்பு – தேவைக்கு.

அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – ஒரு கைப்பிடி.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள்.

இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா இது!

சன்னா மசாலா!தேவையானவை:

சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.

இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!

சிம்பிள் ஆலு மசாலா!தேவையானவை:

உருளைக்கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 15 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள். இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள். இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள்.

பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, சுவையில் கில்லாடி இந்த ஆலு மசாலா!

சன்னா கிரேவி!தேவையானவை:

சன்னா – 1 கப், புளிக் கரைசல் – 1 டேபிள் ஸ்பூன், உ. கிழங்கு – 1, வெல்லத்தூள் – 2 டீஸ்பூன், ப. மிளகாய் – 2, பெ.வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை -1, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தக்காளி-3, உப்பு – தேவைக்கு.

அரைக்க: பெ.வெங்காயம் (சிறியதாக) – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை:

சன்னாவை 7 மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நடுத்தரமான துண்டுகளாக்குங்கள். ப. மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். தக்காளியை தனியே அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலை, ப.மிளகாய் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த தக்காளி, புளிக்கரைசல், வெல்லத் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த சன்னாவையும் உ.கிழங்கையும் சேர்த்து, 5 நிமிடம் கிளறி, இறக்குங்கள்.

இந்த சன்னா கிரேவி, குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கலர்ஃபுல் மசாலா!தேவையானவை:

காய்கறி கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், பனீர்… சிறு துண்டுகளாக நறுக்கியது) – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 4, மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக மீண்டும் வதக்குங்கள். கடைசியில், வேகவைத்த காய்கறி, தேங்காய்ப் பால் சேர்த்து, விடாமல் கிளறி, 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள் (கிளறாமல் இருந்தால், தேங்காய்ப் பால் திரிந்துவிடலாம்).

காய்கறி கலவையால் பார்க்கவும் அழகாக இருப்பதால்தான், இதற்கு பெயர் கலர்ஃபுல் மசாலா!

தக்காளி மசாலா!தேவையானவை:

பெ. வெங்காயம் – 4, தக்காளி – 8, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 15 பல், கறி மசாலா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல்-2 டேபிள் ஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன்.

செய்முறை:

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சோம்பு, வெங்காயம், பூண்டு, ம.தூள் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கி, தக்காளி கரைந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கறிவேப்பிலை தூவி, கெட்டியாகும்வரை கிளறுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, பரிமாறுங்கள். சுவையில் இந்த தக்காளி மசாலா, ‘டக்கரான’ மசாலாதா¡!

சுரைக்காய் மசாலா!தேவையானவை:

சுரைக்காய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பால் – அரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சுரைக்காயைத் தோல் சீவி, நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சீரகத்தைத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பாலையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறுங்கள். சுருண்டு, கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள்.

நாவுக்கு ‘சுள்ளென்று’ இருக்கும், இந்த சுரைக்காய் மசாலா!

தால் மக்கானி!தேவையானவை:

கறுப்பு முழு உளுந்து- 1கப், பெ.வெங்காயம்-1, தக்காளி-3, இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பட்டை – 1 துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

செய்முறை:

உளுந்தை நன்கு கழுவி, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைத்து இறக்குங்கள் (உளுந்து நன்கு குழையவில்லையெனில், மீண்டும் 2 விசில் வைத்து இறக்கலாம்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மீதம் உள்ள வெண்ணெயை மேலாக தூவினாற்போல் வைத்துப் பரிமாறுங்கள்.

மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.

டபுள் பீன்ஸ் மசாலா!தேவையானவை:

டபுள் பீன்ஸ் – அரை கிலோ, பட்டாணி – அரை கப், பெ.வெங்காயம் – 2, தக்காளி – 3, வெள்ளரி விதை (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 4.

தாளிக்க: எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

டபுள் பீன்ஸை தோல் உரித்து, பட்டாணியுடன் சேர்த்து, உப்புப் போட்டு வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்தெடுங்கள். வெள்ளரி விதையைத் தனியாக அரையுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து, வதக்குங்கள். நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளியையும் அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். இதனுடன், வெந்த டபுள் பீன்ஸ், மற்றும் பட்டாணியை அவற்றை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, தண்ணீர் வற்றி, சுருண்டு வரும் வரையில் கிளறி, வெள்ளரி விதை விழுதைச் சேர்த்து இறக்குங்கள்.

ராஜ்மா மசாலா!தேவையானவை:

ராஜ்மா பயறு – 1 கப், தக்காளி – 5, மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

அரைக்க: பெ. வெங்காயம் – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல்.

தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பட்டை – 1, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

ராஜ்மா பயறை, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து, குக்கரில் 5 முதல் 6 விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள். தக்காளியை நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, எண்ணெயைக் காயவைத்து, அதில் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, கூடவே அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறுங்கள். அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்குங்கள். கடைசியாக, அதனுடன் வேகவைத்த ராஜ்மா, சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கோஸ் குருமா!தேவையானவை:

முட்டைகோஸ் – கால் கிலோ, பெ. வெங்காயம்-1, தக்காளி-2, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, ஏலக்காய், லவங்கம் – தலா 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: பச்சை மிளகாய் – 4, சோம்பு – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பூண்டு – 1 பல்.

செய்முறை:

முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து விழுதாக்குங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், கோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தக்காளி தால்!தேவையானவை:

மசூர் தால் – 1 கப், தக்காளி – 4, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, மல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியாக, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.

முந்திரி மசாலா!தேவையானவை:

முந்திரிப் பருப்பு – 100 கிராம், பச்சைப் பட்டாணி – அரை கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, கரம் மசாலா தூள் -அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால்-ஒன்றரை கப், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல் (இதைத் தனியே அரையுங்கள்).

முந்திரிப்பருப்பு – 6, வெள்ளரி விதை – 2 டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன் (இதைத் தனியே அரையுங்கள்).

செய்முறை:

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயம், ப.பட்டாணியைப் போட்டு வதக்கி, முந்திரியையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் தக்காளி, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். அடுத்து, அதனுடன் அரைத்த முந்திரி விழுதையும் தேங்காய்ப் பாலையும் சேருங்கள். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை விடாமல் கிளறி, கொதிக்கவிடுங்கள். கடைசியில், கரம் மசாலா தூளைத் தூவி இறக்குங்கள்.

மொகலாய பாணி மசாலாவான இது விருந்துகளுக்கு ஏற்றது!

தால் பனீர் மசாலா!தேவையானவை:

பாசிப்பருப்பு – 1 கப், பனீர் – 200 கிராம், தக்காளி – 3, இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். பனீர், தக்காளியை சிறு துண்டுகளாக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க கூறியவற்றைத் தாளியுங்கள். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் பனீர், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள். மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.

பலாக்காய் சொதி!தேவையானவை:

பிஞ்சு பலாக்காய் – 1, பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 3, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, பூண்டு – 1 பல், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பலாக்காயை தோல் நீக்கி, உள்ளே இருக்கும் நடுப்பகுதி, பால் ஆகியவற்றை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.

பலாக்காயுடன் சிறிது உப்பும் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும் திறந்து, பலாக்காயைத் தண்ணீர் வடித்து, எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 2 நிமிடம் வதக்கி, ஆறவைத்து, நைஸாக அரைத்தெடுங்கள்.

அடுத்து, மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதையும் சேருங்கள். இதில், தேவையான தண்ணீர், வேகவைத்து எடுத்த பலாக்காய் துண்டுகள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

செட்டிநாட்டு ஸ்பெஷலான இது, டிபன் அயிட்டங்களுக்கு மட்டுமல்ல, சாதத்துக்கும் ஏற்றது!

பெப்பர் கோபி!தேவையானவை: காலிஃப்ளவர் – சிறியதாக 1, பெ.வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, உப்பு-தேவைக்கு, எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்.

வறுத்து பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இலை.

செய்முறை:

காலிஃப்ளவரை பக்குப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இதனுடன் மஞ்சள் தூள், காலிஃப்ளவர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வதக்குங்கள். இதனுடன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இதை மூடிவைத்து அவ்வப்போது திறந்து கிளறுங்கள். பச்சை வாசனை போய், காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், மூடியை எடுத்துவிட்டு, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறுங்கள். இதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி, கிளறி இறக்குங்கள்.

சுவையில் சூப்பராக இருக்கும் இந்த பெப்பர் கோபி!

கீரை சன்னா மசாலா!தேவையானவை:

சன்னா – 1 கப், சுக்காங்கீரை (மார்க்கெட்டில் கிடைக்கும்) – 1 கட்டு, தக்காளி-3, மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – 1, பூண்டு – 8 பல், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சன்னாவை சுமார் 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு, உப்பு சேர்த்து வேகவையுங்கள். அரை கப் தண்ணீர் அளவுக்கு சன்னாவுடன் வைத்துவிட்டு, மீதியை வடித்துவிடுங்கள். கீரையை அலசி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். தக்காளியை கொஞ்சம் பெரிதாகவே வெட்டுங்கள்.

அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கீரை, வேகவைத்த சன்னா (தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கொதிக்க விடுங்கள். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து, மசாலாவில் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள் (சுக்காங்கீரைக்குப் பதில் அரைக்கீரை, புளிச்ச கீரையையும் உபயோகிக்கலாம்). பிரெட், சப்பாத்திக்கு சத்தான சைட் டிஷ் இது!

————————————————

தொகுப்பு: பிரேமாநாராயணன்                               படங்கள்: பொன்.காசிராஜன்

_____________________________________________________

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:அட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா, சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அஹ்லுல் பைத்


* அஹ்லுல் பைத் என்றால் யார்?

இது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாரை குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவர்.

كل لا أسألكم عليه أجرا إلا لاماوث في لاقرب

என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை என்ற வசனம் இறங்கிய போது, யா ரசூலல்லாஹ்!! நாங்கள் அன்பு வைக்க கடமையாக்கப்பட்ட உங்களின் குடும்பத்தார்கள் யார்? என்று ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள், அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه என்று பதிலளித்தார்கள்.

ஒரு முறை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலி رضي الله عنه, பாத்திமா رضي الله عنه, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோர் இருந்தனர். அப்போது அவ்விருவரையும் தமது மடியில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி,
“நபியுடைய குடும்பத்தார்களே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.” 33: 33

இந்த ஆயத்தை ஓதிய பிறகு இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லுல் பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தபடுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

இதிலிருந்து நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தவர்களை அல்லாஹுதஆலா பரிசுத்தப்படுத்தியும், பாவம் என்பதே இன்னதென அறியாதபடியும் ஒரு குறைவும் இல்லாத படியும் செய்திருப்பது இந்த வசனங்களின் மூலம் நமக்கு தெளிவாகிறது

* அஹ்லுல் பைத்துகளின் மகத்துவம்

• ஃபாத்திமா رضي الله عنه அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.
(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)
• ஹஸன், ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும். (திர்மிதி, மிஷ்காத்)

* கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் உடல் அமைப்பை கொண்ட அருமை பேரர்கள்

ஸெய்யதுனா ஹஸன் رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். என்று இமாம் அலி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, மிஷ்காத்)

* அஹ்லுல் பைத்துகளை பின்பற்ற வேண்டும்

“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)

கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)

ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.

என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

* அஹ்லுல் பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

• முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)

• அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)

• உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
(தைலமி)

இப்போது கூறப்பட்ட நபிமொழிகளின் படி நாங்கள் அஹ்லுல் பைத்துகளிடம் அன்பாக நடந்துக்கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களை பற்றிப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல், செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும். என்றும் உணர்த்துகிறது.

* தொழுகையில் அஹ்லுல் பைத்துகள் மீது ஸலவாத் சொல்லாவிட்டால்……….

“நாயகமே! நாங்கள் எங்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது எவ்வாறு சொல்ல வேண்டும்?” என்று ஸஹாபா பெருமக்கள் கேட்க, அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஸலவாதே இப்ராஹிமாவை ஒதிகாட்டி தனது குடும்பத்தாரின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 405 வது ஹதீஸ் விளக்கம்)

ஒருவர் நிரப்பமான கூலியை பெறவேண்டும் என்று விரும்பினால் அவர், “இறைவா! நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மீதும், முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும், அவர்களின் பிச்சிளங்களின் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்துகளின் மீதும் ஸலவாத்து சொல்வாயாக. என்று கேட்க வேண்டும். (மிஷ்காத் 87) எனவே தொழுகையில் பெருமானார் மீது ஸலவாத்து சொல்லும்போது அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்ல வேண்டும். என்று ஏவப்பட்டுள்ளோம். இந்த கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, “ரசூலுல்லாஹ்வின் அஹ்லுல் பைத்துகளே! உங்களை நேசிப்பதே ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். என்று இறை வசனம் இறங்கி இருப்பதும் உங்கள் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்” என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள்.

* அஹ்லு பைத்துகள் சிறந்த வஸீலாவாகும்.

“பெருமானாரின் பரிசுத்த குடும்பத்தினர் தான் நான் இறைவனை சென்றடைவதற்குரிய வஸீலாவாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொருட்டால் மறுமை நாளையில் எனது பட்டோலை வலது கரத்தில் கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கின்றேன்” என்று இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

குர்ஆனையும் ஹதீஸ்களையும் நன்றாக ஆய்ந்து தெளிந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமக்கு மறுமையில் வெற்றி கிடைப்பதற்கு தமது வணக்கத்தையோ தாம் இஸ்லாத்திற்கு செய்த பெரும் சேவைகளையோ வஸீலா என்று கூறவில்லை. மாறாக அஹ்லு பைத்துகள் தான் எனக்கு வஸீலா என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் வணக்கங்களை வஸீலாவாக்குவதை விட அஹ்லு பைத்துகளை வஸீலாவாக்குவது மிக்க மேலானது என்று உணர முடிகின்றது.

* பெருமானாரின் குடும்பம் மீது அன்பு

என் ஆத்மா எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். பெருமானாரின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி)

*ஸாதாத்துமார்கள் என்றால் யாரை குறிக்கும்?

ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு கூறப்படும். அஸ்ஸய்யிதானி என்பது அலி رضي الله عنه அவர்களின் அருமைச் செல்வங்களான ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோரை குறிக்கும்.

பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார்கள்.

* ஸாதாத்துமார்களின் சிறப்பு

ஸாதாத்துமார்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்த இரத்தத்தில் இருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கின்றது. என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களின் மரியாதையை குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. எனவே ஸாதாத்துமார்களை பற்றி மாண்புகளை நாம் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பது மிக பெரிய கடமையாகும்.

* கியாமத்து நாள் வரை தொடர்ந்து வரும் சந்ததிகள்.

கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதத்தை நிலை நாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார்.
(மிஷ்காத்)

மஹ்தி அலைஹி ஸலாம் என் பிச்சிளத்தை சார்ந்தவர். ஃபாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர்.
(மிஷ்காத் – 470)

* பரிசுத்தமான பாரம்பரியம்

இவ்வுலகில் வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் எவரும் தமது பரம்பரைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து தமது பாரம்பரிய பட்டியலை பாதுக்காத்து வைத்திருப்பதில்லை. ஆகவே சிலருக்கு தன் தந்தையுடைய தந்தையின் பெயரே தெரியாது. ஆனால் இவ்வுலகின் பல திக்கிலும் பரவி இருக்கின்ற ஸாதாத்மார்கள் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் முதல் தாம் வரையுள்ள பாரம்பரியப்பட்டியலை ஆதாரத்துடன் அழகுற கூறுவதை காண முடியும். இதுவும் ஸாதாத்மார்களை இவ்வுலகில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கும் இடையில் எவ்வித கலப்படமும் இன்றி நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்தமான உதிரத்தில் உதித்திக் கொண்டு இருப்பவர்கள் என்பதற்கும் நல்ல சான்றாகும்.

* அஹ்ரார்கள்

அஹ்ரார்கள் என்பதற்கு சுதந்திரமானவர்கள் என்பது அகராதி பொருள். அதாவது நரகத்தில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்கள் என்பதாகும். அவர்கள் நரகில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு இரு காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று இவ்வுலகிலேயே இறைவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பது. இரண்டாவது பெருமானாரின் புனிதமிகுந்த சதைத் துண்டிலிருந்து உற்பத்தியானவர்களாக இருப்பது.

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தார்களை சகல அசுத்தங்களிலிருந்தும் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி விட்டதாக வல்ல ரஹ்மான் திரு மறையில் குறிப்பிட்டு காட்டுகின்றான். அஹ்ஸாப் – 33

இறைவனால் இவ்வுலகிலேயே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் எப்படி நரகம் செல்ல முடியும்? மேலும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரை பார்த்து நரகம் தீண்டாது என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கையில், நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சதைத்துண்டாக இருக்கின்ற பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளான ஸாதாத்துமார்களையும் நரகம் எப்படி தீண்டும்?

* வள்ளல் நபி صلى الله عليه وسلم அவர்கள் வம்சத்தின் வளாமார் விஷேசம்

இவ்வுலகில் உதித்த வலிமார்களில் பெரும்பான்மையானவர்கள் அஹ்லு பைத்தை சார்ந்தவர்களாக இருப்பது இந்த வம்சத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக் காட்டாகும். இலட்சக்கணக்கான இதயங்களில் ஈமானிய தீபத்தை ஏற்றி நானிலம் போற்றும் நாதாக்களாக இருக்கின்ற கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஏராளமான குதுபுமார்கள் அவர்களை தொடந்து வந்த மகான்களும் இப்புனிதம் நிறைந்த பாரம்பரியத்தில் பூத்த பெருமைக்குரிய மலர்களாகும்.

* ஸாதாத்துமார்களின் சேவை

ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸைய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்களின் பேரப்பிள்ளைகளான அஹ்லு பைத்துகள் பஸராவிலிருந்து இடம் பெயர்ந்து உலகின் நாளா பகுதிக்கும் சென்று தீன் பனி புரிந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் வியாபார நோக்கோடும் பல பாகங்களுக்கும் சென்று அதனூடே தீன் பணியை நிலைநாட்டினார்கள். கவாரிஜிகள் போன்ற கொள்கை கெட்ட கூட்டத்தாருடன் போராடி இஸ்லாமிய நேரிய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்ட கடும் பாடுபட்டார்கள். மேலும் நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். இதற்கு கர்பலா நிகழ்ச்சியோன்றே போதுமான ஆதாரமாகும். தங்களின் பாட்டனாரால் நட்டப்பட்ட இஸ்லாம் என்ற விருட்சத்தை பேணி பாதுகாத்து வளர்த்து வரும் விஷயத்தில் பேரர்களான அஹ்லுல் பைத்துகள் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் இருந்து வருகிறார்கள்.

* ஸாதாத்துமார்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?

ஸாதாத்துமார்களிடம் இருந்து தென்படுகின்ற பாவங்கள் வெளிப்படையில் பாவங்களைப் போன்று தெரிந்தாலும் அந்தரங்கத்தில் பாவங்கள் அல்ல. மாறாக இறை நியதிபடி நடக்கின்ற காரியங்கள் என்று நினைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களை பாவங்களை விட்டும் நீக்கி மிகவும் பரிசுத்தபடுத்தி விட்டதாக அல்லாஹ் கூறியிருக்கிறான். (அஹ்ஸாப் 33) எனவே அவர்கள் நமது பொருட்களை எடுத்துக்கொண்டு தரமருத்தால் கூட அவர்களை பிடித்து சிறையில் தடுத்து வைப்பதோ, அல்லது நீதிபதியிடம் அழைத்துச் செல்வதோ கூடாது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நபியவர்களின் சதைத்துண்டு. என்பதை மறந்து விடக்கூடாது என்று முஹியத்தீன் இப்னு அரபி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
(நூருல் அப்சார் 128)

* பெயர்களின் பொருள்கள்.

அவ்லாதுர் ரஸுல் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின்
பிள்ளைகள்.
கராபத்துர் ரஸுல் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சுற்றத்தார்கள்.
அஹ்லு பைத் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தினர்கள்.
தங்கள்மார்கள் என்றால் கண்ணியத்துக்குரியவர்கள் என்றும்
மௌலானா என்றால் தலைவர் என்றும்
அஷ்ராப்கள் என்றால் சிறப்புக்குரியவர்கள் என்றும் பொருளாகும்.
இவை அனைத்துமே ஸாதாத்துமார்களை அழைக்கும் சிறப்பான பெயர்கள்.

* ஸதாத்துமார்களைப் பற்றி வஹ்ஹாபிகள்…

ஸாதாத்துமார்கள் என்று இப்போது யாரும் கிடையாது. எல்லோரும் கர்பலாவிலேயே ஷஹீதாகி விட்டார்கள். ஆகவே ஸாதாத்துமார்களுக்கு கண்ணியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இன்றைய வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வரலாற்றுத் தெளிவின்மையும் ஒரு முக்கியமான காரணமாகும். ஏனெனில் அஹ்லுபைத்துகள் அனைவருமே கர்பலா போர்க்களத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்று சில சரித்திர ஆசிரியர்கள் மிகைப்புக்காக கூறுவதை எதார்த்தமென்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

உண்மை நிலை என்னவென்றால் ஸெய்யதுனா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் அருமை மகனார் இமாம் அலி ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் ஷஹீதாக்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க கர்பலாப் போர் நடந்த நேரத்தில் கடும் நோயால் பீடிக்கப்பட்டு இருந்ததால் போரில் கலந்து கொள்ளவே இல்லை என்பது தான் சரித்திரம் தரும் உண்மையாகும். மேலும் ஹஸன் رضي الله عنه அவர்களின் பிள்ளைகள் 15 பேரில் உம்மு வலத் என்ற அவர்களின் மனைவிக்கு பிறந்த அப்துல்லாஹ், காஸிம், உமர் என்ற மூவர் மாத்திரமே ஷஹீதாக்கப்பட்டார்கள். ஆண்மக்கள் 8 பேரில் மேற்கூறப்பட்ட மூவர் நீங்கலாக உம்மு பிஷ்ர் என்ற மனைவிக்குப் பிறந்த ஸைத் ஹவ்லா என்ற மனைவிக்கு பிறந்த ஹஸன் அல்முஸன்னா, உம்மு வலத் என்ற மனைவிக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான், உம்மு இஹ்ஹாக் என்ற மனைவிக்குப் பிறந்த ஹுஸைனுல் அஷ்ரம், தல்ஹா ஆகிய ஐவரும் ஹஸன் رضي الله عنه அவர்களின் பெண் மக்களான உம்முல் ஹஸன், உம்மு ஹுஸைன், பாத்திமா, உம்மு ஸல்மா, ருகைய்யா ஆகிய எழுவரும் இன்னும் சில அஹ்லு பைத்துகளும் ஷஹீதாக்கப்பட வில்லை.

மாறாக கைது செய்யப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்கள். மேற்கூறப்பட்ட ஆண்மக்கள் ஐவரில் ஸைது, ஹஸன் அல் முதன்னா ஆகிய இருவருக்கும் உரிய பிச்சளங்கள் பிரபல்யமானவர்களாகும்.
(நூருல் அப்ஸார் பக்கம் -137)

* ஸெய்யதுனா இமாம் ஹஸன் رضي الله عنه அவர்களின் வழித்தோன்றல்கள்

1. அஸ்ஸய்யித் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
2. அஸ்ஸய்யித் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)
3. அஸ்ஸய்யித் ஹஸன் அல் முதன்னா (ரலியல்லாஹு அன்ஹு)
4. அஸ்ஸய்யித் அப்துல்லாஹில் மஹ்ழு (ரலியல்லாஹு அன்ஹு)
5. அஸ்ஸய்யித் மூஸா அல் ஜவ்னி (ரலியல்லாஹு அன்ஹு)
6. அஸ்ஸய்யித் அப்துல்லாஹித் தாணி (ரலியல்லாஹு அன்ஹு)
7. அஸ்ஸய்யித் மூஸா ஸானி (ரலியல்லாஹு அன்ஹு)
8. அஸ்ஸய்யித் தாவூத் (ரலியல்லாஹு அன்ஹு)
9. அஸ்ஸய்யித் முஹம்மத் ஸாஹித் (ரலியல்லாஹு அன்ஹு)
10. அஸ்ஸய்யித் யஹ்யஸ் ஸாஹித் (ரலியல்லாஹு அன்ஹு)
11. அஸ்ஸய்யித் அப்துல்லாஹ் ஹந்தகூஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
12. அஸ்ஸய்யித் அபூ ஸாலிஹ் மூஸா ஜங்கி தோஸ்த் (ரலியல்லாஹு அன்ஹு)
13. ஷைகுனா குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)
14. அஸ்ஸய்யித் அப்துர் ரஸ்ஸாக் (ரலியல்லாஹு அன்ஹு)
15. அஸ்ஸய்யித் இமாமுத்தீன் ஸாலிஹ் நஸ்ர் (ரலியல்லாஹு அன்ஹு)
16. அஸ்ஸய்யித் அபூ நஸ்ர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)
17. அஸ்ஸய்யித் முஹம்மது லுஹூர் அஹ்மத் (ரலியல்லாஹு அன்ஹு)
18. அஸ்ஸய்யித் ஹஸனுல் பக்தாதி (ரலியல்லாஹு அன்ஹு)
19. அஸ்ஸய்யித் முஹம்மதுல் பக்தாதி (ரலியல்லாஹு அன்ஹு)
20. அஸ்ஸய்யித் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
21. அஸ்ஸய்யித் மூஸா (ரலியல்லாஹு அன்ஹு)
22. அஸ்ஸய்யித் ஹஸன் குத்ஸி (ரலியல்லாஹு அன்ஹு)
23. அஸ்ஸய்யித் ஷாஹுல் ஹமீதுந் நாஹூரி கஞ்ச ஸவாஇ காதிர் வலி ஆண்டகை (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

* ஸைய்யிதுனா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வழித்தோன்றல்கள்

உலகப்பிரசித்தி பெற்ற அரபி அகராதியான முன்ஜிதில் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வாரிசுகளைப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதுடன் அவர்களில் ஒவ்வொருவருடைய வழித்தோன்றலுக்கும் உரிய பெயர்களையும் அதில் கூறப்பட்டுள்ளது.

1. ஸைய்யிதுனா அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
2. அவர்கள் மகன் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)
3. அவர்கள் மகன் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு)
4. அவர்கள் மகன் முஹம்மதுல் பாகிர் (ரலியல்லாஹு அன்ஹு)
5. அவர்கள் மகன் ஜஃபர் ஸாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)
6. அவர்கள் மகன் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)
7. அவர்கள் மகன் அலீ ரிழா (ரலியல்லாஹு அன்ஹு)
8. அவர்கள் மகன் முஹம்மத் ஜவாத் (ரலியல்லாஹு அன்ஹு)
9. அவர்கள் மகன் அலி ஹாதி (ரலியல்லாஹு அன்ஹு)
10. அவர்கள் மகன் ஹஸன் அஸ்கரி (ரலியல்லாஹு அன்ஹு)
11. அவர்கள் மகன் முஹம்மத் மஹ்தி (ரலியல்லாஹு அன்ஹு)

அஹ்லுபைத்துகள் அனைவரும் ஹிஜ்ரி 61ல் நடை பெற்ற கர்பலாவில் ஷஹீதாகி இருந்தார்களானால் இந்தப்பாரம்பரிய பட்டியல் எப்படி வந்திருக்க முடியும்? மேலும் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 33ல் ஷஃபான் மாதம் 5-ம் நாள் வியாழக்கிழமை அன்று மதீனாவில் பிறந்தார்கள். (அதாவது அவர்களின் பாட்டனாரும் நான்காவது கலீபாவுமான ஸையிதுனா அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வபாத்தாக ஈராண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டார்கள்) 57 ஆண்டுகள் வாழ்ந்து 11 ஆண் மக்களையும் 4 பெண் மக்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து ஹிஜ்ரி 94ல் முஹர்ரம் 12 –ம் நாள் இவ்வுலகை விட்டும் மறைந்து ஜன்னதுல் பகீஇல் தனது பெரிய தகப்பனார் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது (நூருல் அப்ஸார் பக்கம் 115) சிந்தனைக்குரியதாகும். மேலும் இன்று உலகெங்கும் பரவி இருக்கின்ற ஹுஸைனி ஸாதாத்துமார்கள் அனைவரும் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலம் உண்டான பிச்சளங்களாகும். எனவே தான் அவர்களுக்கு அபுல் ஹுஸைனிய்யீன் (ஹுஸைன் ஸாதாத்துமார்களின் தந்தை) என்று பெயர் வந்தது என்று தபாகாதுஷ் ஷஃரானி பாகம் 01 பக்கம் 26, 31ல் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஹ்லுபைத்துகள் அனைவரும் கர்பலாக்களத்திலே ஷஹீதாகி இருந்தால் இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கொள்ளுப் பேரன் (பேரனின் மகன்) என்று எப்படி ஆகி இருக்க முடியும்? மேலும் அவர்கள் ஹிஜ்ரி 80ல் பிறந்து 150ல் மறைந்த இமாம் அபூ ஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஞானாசிரியராகத் திகழ்ந்தார்கள். என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையும் எப்படி வந்திருக்க முடியும்? (தபகாத் பாகம் 01 பக்கம் 32) மேலும் ஸாதாத்துமார்கள் எவரும் இப்போது இல்லை என்று வைத்துக் கொண்டால் எனது குடும்பத்தினர்களாகிய அஹ்லுபைத்துகள் இப்புவியிலுள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனது குடும்பத்தினர் போய் விட்டால் இந்தப் புவியும் அதிலுள்ளோரும் அழிந்து போய்விடுவார்கள். என்று நபியவர்கள் கூறியுள்ள கூற்றின் படி (மிஷ்காத் 573) இப்புவி எப்போதோ அழிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்குக் குர்ஆனையும் என் குடும்பத்தினரையும் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப்பிடித்து நடக்கின்றவரை வழி தவறமாட்டீர்கள் என்று அவர்கள் கூறிய ஹதீஸும் பொய் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நஊதுபில்லாஹ்!!

” நபியின் குடும்பத்தார்களே! உங்கள் மீது நான் அன்பு வைப்பதால் சிலர் என்னைப் பாவி என்கின்றனர். வேறு சிலர் காபிர் என்று கூட சொல்கின்றனர். ஆனால் எனக்கோ உங்களைத் தவிர வேறெவரும் உற்ற நண்பர்களும் இல்லை. (உங்களின்) சத்தியப் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையும் இல்லை ” என்று குமைத் என்ற பெரியார் தனது கவிதையில் குறிப்பிடுகிறார்கள். (லுக்கத்தூர் பக்கம் 102) மேலும் அஹ்லுபைத்துகள் பற்றியும் அவர்களின் மகத்துவம் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் நூருல் அப்ஸார் போன்ற கிரந்தங்களில் வந்துள்ளன.

ஆகவே நாம் யாவரும் ஸாதாத்துமார்களின் மகத்துவத்தை அறிந்து அவர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வோமாக! அவர்களின் பொருட்டால் ஈருலக வெற்றியையும் அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!!

———————————————————————–

நம்மை நாமே பார்ப்போம்! எஸ். வைஷ்ணவி


கேளுங்கள்! டாக்டரிடம்…

ற்குழி பிரச்னைக்காக சமீபத்தில் பல் டாக்டரிடம் போயிருந்தேன். பற்களைச் செப்பனிட்டு, பற்குழிகளை சிமெண்ட்டால் நிரப்பியவர், வாயில் ஏகப்பட்ட பஞ்சை வைத்து கடிக்கச் சொல்லிவிட்டு ‘அரைமணி நேரம் கழித்து பஞ்சை எடுத்துவிடுங்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டார். என்ன சாப்பிடலாம்… பல்லை வழக்கம் போல தேய்க்கலாமா, கூடாதா, எச்சில் துப்பலாமா என்று எந்த சந்தேகத்தையும் கேட்க முடியாமல், ‘எலும்புத் துண்டை கவ்விய நாய்’ போல பஞ்சைக் கவ்வியபடி வெளியேறினேன்.

இந்த அடிப்படை விவரங் களையெல்லாம் டாக்டர்களே சொல்லி அனுப்புவதுதான் நியாயம் என்றாலும் ஏனோ பெரும்பாலான டாக்டர்கள் இதில் அக்கறை காட்டுவதில்லை. சிகிச்சைக்கு முன்பே நாமாவது தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.

———————————————————————-

நம்மை நாமே பார்ப்போம்!

நெருங்கிய தோழி ஒருத்தி என்னை இப்படிக் கேட்டாள். ‘‘நடந்து செல்கையில், பேசும்போது, கல்யாணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்கிறபோது உங்கள் முகபாவம், ‘பாடி லாங்வேஜ்’ எப்படி இருக்கிறதென்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?’’

அவளது இந்தக் கேள்வி எனக்கு வித்தியாசமாகப் பட்டது. தொடர்ந்து அவளே சொன்னாள்: ‘‘நான் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளின் வீடியோ காஸெட்டை உறவினர்களிடம் வாங்கி வந்து வீட்டில் தவறாமல் போட்டுப் பார்ப்பது என் வழக்கம். அதில் என் நடை, முகபாவம் மற்றும் அங்க சேஷ்டைகளை மிக உன்னிப்பாகக் கவனிப்பேன். எங்கோ ‘பராக்’குப் பார்ப்பது, தோள் பட்டையை ஒரு பக்கமாய்ச் சாய்த்து நடப்பது, பிறர் கூறுவதை வாய் திறந்தபடி கேட்பது, ‘கெக்கே பிக்கே’ சிரிப்பு என பல தப்பான மானரிஸங்களுடன் இருந்த நான், அவற்றையெல்லாம் கனகச்சிதமாகத் திருத்திக்கொண்டு ‘பர்சனாலிட்டி’யை வசீகரமாக ஆக்கிக் கொண்டேன்!’’ என்றாள்.

அன்று முதல் ‘நம்மை நாமே’ பார்க்கும் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. நீங்களும் அப்படி உங்களைப் பாருங்கள். அவள் சொன்னது அற்புதமான யோசனைதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்.

நன்றி:-எஸ். வைஷ்ணவி

நன்றி:- அ.வி