தொகுப்பு

Posts Tagged ‘Hospital’

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

செப்ரெம்பர் 22, 2014 பின்னூட்டமொன்றை இடுக

ஏலக்காய்cardamom என்பது நம் அடுக்களையில் இனிப்பு காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின் மூலம் அதன் மகத்தான மருத்துவ குணங்களையும் நாம் தெரிந்து கொள்வோம். 

ஏலக்காய் ஒரு அகட்டு வாய்வு அகற்றி ஆகும். வாந்தியை மற்றும் குமட்டலைப் போக்கக் கூடியது. பசியைத் தூண்ட கூடியது. அல்லது அதிகரிக்கச் செய்வது. பிடிப்பைப் போக்கக் கூடியது. அல்லது கடுப்பைக் கண்டிக்கக் கூடியது. நுண்கிருமிகளைஅழிக்க வல்லது. மூச்சிரைப்பைத் தணிக்க கூடியது.

வயிற்றுக் கோளாறுகளைப் போக்க கூடியது. ஏலக்காயினின்று பெறப்படும் எண்ணெய் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க வல்லது. மேலும் கிருமி நாசினியாக விளங்கக் கூடியது. கால் பிளாடர் என்னும் பித்தப் பையைத் தூண்டி பித்தத்தைச் சுரக்கச் செய்வது.

ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து, புரோட்டீன் எனப்படும் புரதச் சத்து பைபர் எனப்படும் நார்சத்து விட்டமின் சத்துக்களான விட்டமின் சி, நியாசின், பெரிடாக்ஸின், ரிபோபிளேவின், மற்றும் தயாமின் ஆகியன உள்ளன. தாது உப்புக்களான பாஸ்பரஸ், செம்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியன மலிந்துள்ளன.

ஏலக்காயை உணவில் சேர்ப்பதற்கான காரணம் அதன் மணந்தரும் தன்மைக்காக மட்டுமல்ல அது வாயுவை வெளியேற்றக் கூடியது. செரிமானத்தை துரிதப்படுத்தக் கூடியது. குடலின் சளிப் படலத்தை குளிர்விக்கச் செய்வது, இதனால் சீரண உறுப்புகள் செம்மையாகச் செயல்பட ஏதுவாகின்றது.

ஆயுள் வேத நூல்களின் படி ஏலக்காய் குடலிலுள்ள வாயுச் சத்தையும் நீர்ச்சத்தையும், கட்டுக்குள் வைத்து உண்ட உணவை விரைவிலும் முற்றிலுமாகவும் சீரணிக்க உதவுகின்றது என்பது தெரிய வருகின்றது ஏலக்காயில் நுண்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் நறுமணம் தருவதாகவும் இருக்கிறது.

வாய் துர்நாற்றத்துக்கு முக்கியமான காரணங்களான போதிய செரிமானமின்மை மற்றும் குடற்புண்களைச் சரி செய்யும் வல்லமை ஏலக்காய்க்கு உள்ளது. வாய் துர்நாற்றத்துக்கான வேறு எக்காரணம் ஆனாலும் அவற்றைக் கண்டிக்க கூடியதும் ஏலக்காய் மட்டும் ஆகும். குடல்புண் (அல்சர்) என்பது மிகச் சாதாரணமாக இன்று எல்லோராலும் சொல்லப்படுவதாக உள்ளது.

இது மிகத் துன்பம் தருவது மட்டுமின்றி பல அறுவைச் சிகிச்சைக்கும் நம்மை ஆளாக்குகிறது. ஏலக்காயில் உள்ள எண்ணெய்ச் சத்துக்கள் வயிற்றின் உட்சுவர் பகுதிகளுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் வாயினுள் ஊறும் எச்சிலை அதிகமாக சுரக்கச் செய்வதால் அமிலத்தன்மை குறைக்கப்படுகிறது.

ஏலக்காயில் உள்ள எண்ணெய் சத்து ஒருவகை குளிர்ந்த தன்மையை உண்டு பண்ணி வயிற்றெரிச்சலைத் தணிக்கும் தன்மை வாய்ந்தது. ஏலக்காய் நுரையீரலின் ரத்த ஓட்டத்தை தூண்டிச் செம்மைபடுத்த வல்லது. இதனால் நுரையீரலைச் சரியாக இயக்கி சுவாச நாளங்களையும் ஒழுங்குபடுத்துகிறது.

ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, சளி, இருமல் ஆகியவற்றினின்று நிவாரணம் தருகின்றது. நெஞ்சுச் சளியைக் கரைத்து வெளித்தள்ளவும் ஏலக்காய் உதவுகின்றது. ஏலக்காயில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருப்பதால் உடலுக்கு சக்தியைத் தரும் ஒரு புதையலாகக் கருதப்படுகிறது.

உடலிலுள்ள ரத்தம், நீர்மம் திசுக்கள் ஆகியவற்றுக்கு முக்கியமான பொட்டாசியம் ஆகும். ஏலக்காயில் மிகுந்துள்ள இச்சத்து இதயத்துடிப்பை சீராக்கி ரத்த ஓட்டத்தை (பி.பி) சமப்படுத்த உதவுகின்றது. ஏலக்காயில் உள்ள செம்புச் சத்து, இரும்புச் சத்து, ரிமோபிளேவின், விட்டமின் சி, நியாஸின் ஆகியவை சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு முக்கியமானவை.

சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையிலிருந்து விடுதலை தருகிறது. ஏலக்காயில் நல்ல ஊட்டச்சத்தும் (டானிக்) தூண்டும் சத்து இருப்பதால் உடலுக்கு பலம் தருவதோடு உடல் உறவுக் குறைபாடுகளை போக்கக் கூடியது. விந்து முந்துதல் மற்றும் இயலாமை ஆகிய குறைபாடுகளைப் போக்கும் மருந்தாகக் கூடியது, உடல் உறவில் வன்மையும் நீண்ட நேரத்தையும் தரக் கூடியது.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காய்களைப் பொடித்து எடுத்துக் கொண்டு அத்துடன் சிறுதுண்டு இஞ்சி, நான்னைகந்து இலவங்கப்பூ (கிராம்பு) சிறிது தனியா (கொத்துமல்லி விதை) ஆகியவற்றை சேர்த்து அரைத்து வெந்நீருடன் உள்ளுக்குச் சாப்பிடுவதால் செரிமான மின்மைக்கும் வயிற்றை நிரப்பிய வாயு வெளியேறுவதற்கும் உதவும்.

ஏலக்காய் டீ தலைவலியையும் போக்கும். ஒரு கப் தேனீர் எனில் வழக்கமான தேயிலை தூளைச் சற்று குறைத்து பதிலாக இரண்டு ஏலக்காய் பொடித்து சேர்த்து தேனீர் வைத்துக் குடிக்க சீரணமின்மையால் வரும் தலைவலியோடு சாதாரணமாக வரும் மன அழுத்தம் தணியும்.

நான்கைந்து ஏலக்காயும் சிறிது புதினா இலைகளும் சேர்த்து அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டிப் போதிய சுவை சேர்த்து மிதமான சூட்டோடு குடிப்பதில் விக்கல் உடனே நிற்கும்.

வெறும் ஏலக்காயை மட்டும் நான்கு போட்டு கொதிக்க வைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து குடிக்க தலை கிறுகிறுப்பு, வெயிலில் அலைந்ததால் வந்த மயக்கம் போகும்.

அடிக்கடி வாயு வெளியேறுவது எனக்கு அவமானமாக இருக்கிறது என்னால் அலுவலகத்துக்குப் போகவே வெட்கமாக இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏலக்காய் இருக்க ஏன் அஞ்சுவது, ஏலக்காயை நன்கு காய வைத்து பொடித்து வைத்துக் கொண்டு வேண்டும்போது அரை தேக்கரண்டி பொடியை எடுத்து 150 மி.கி நீரிலிட்டு கொதிக்க வைத்து உணவு உண்ணும் முன் இதைப் பருகி வர வாயுத்தொல்லை வேறோடு வெட்டி எடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு செரிமானமின்மையாலோ வேறு காரணங்களாலோ வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடித்து அதைத் தேனில் குழைத்து தினம் இரண்டு அல்லது மூன்று வேளை நாவில் தடவி வர உடனே வாந்தி ஆவது நிற்கும்.

நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பிலிட்டுப் புகைக்கச் செய்து அப்புகையை நுகரச் செய்வதால் குழந்தைகளின் ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும். ஏலரிசி, சுக்கு, லவங்கம், சீரகம் இவை நான்கையும் ஓரெடையாய்க் கொண்டு பொடித்து தூளாக்கி வேளைக்கு 17கிராம் வீதம் கொடுத்து வர வயிற்று வலி குன்மம் இவை நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று ஏலக்காயைப் பொடித்து அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பாலோடு காய்ச்சி போதிய சுவை சேர்த்து இரவு படுக்குமுன் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி சோகையும் நீங்கும்.

நன்றி:- மாலை மலர்

பிரிவுகள்:ஏலக்காயின் மருத்துவ குணங்கள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்

செப்ரெம்பர் 18, 2014 பின்னூட்டமொன்றை இடுக

 

நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.zதூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும்.பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மழைக்காலத்தில் ஒ1486901_812454452109716_6686413115477420806_nரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.

துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும்.

அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.

தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

பிரிவுகள்:சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள், மருத்துவம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

ஆஸ்பத்திரிக்குப் போறீங்களா?

பிப்ரவரி 17, 2013 2 பின்னூட்டங்கள்

 பார்வை நேரம் ஒன்றே போதுமே!

‘பார்வையாளர் நேரம்’ என்று குறிப்பிட்டு உள்ள நேரத்தில் மட்டுமே நோயாளியைப் பார்க்கச் செல்லுங்கள். உங்களைப் பார்க்க அவர் விருப்பப்படுகிறாரா இல்லையா என்பதை முடிந்தமட்டும் புரிந்துகொள்ளுங்கள். பார்வையாளர் நேரத்திலும் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக அறிந்தாலும் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

 பூக்களைத்தான் கொடுக்காதீங்க!

நோயாளிக்குப் பூங்கொத்துக் கொடுத்து, ‘விரைவில் நலம்பெற வாழ்த்துகள்’ என்று சொல்பவர்கள் இப்போது அதிகம். சிலருக்குப் பூக்களின் மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். எனவே, பூக்களுக்குப் பதிலாகப் புத்தகங்களையோ, தேவையான  பழங்களையோ கொடுக்கலாம். நோயாளிக்கு ஒப்புக்கொள்ளாத உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்.

 செல்லுங்கள்… பாருங்கள்… புறப்படுங்கள்!

பார்த்தோமா, நலம் விசாரித்தோமா, புறப்பட்டோமா என்றுதான் உங்கள் விஜயம் இருக்க வேண்டுமே தவிர, மணிக்கணக்கில் அங்கே அமர்ந்துவிடாதீர்கள். நோயாளி தூங்கவோ அல்லது அமைதியாக இருக்கவோ விரும்புவார். அதைக் கெடுக்க வேண்டாம். ‘நீங்கள் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தேவலாம்’ என நோயாளி சொன்னால் மட்டுமே, நேரம் ஒதுக்குங்கள்.

 ஆலோசனை வேண்டாம்… ஆறுதல் போதும்!

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது தயவுசெய்து உங்களுக்குத் தெரிந்த அனுபவக் குறிப்புகளைச் சொல்லாதீர்கள். ‘இந்த டாக்டரைப் பார்க்க ஏன் வந்தீங்க? இவரைவிட அவர் ரொம்ப கெட்டிக்காரர் ஆச்சே!’ என ஒருபோதும் கருத்துச் சொல்லாதீர்கள். சிகிச்சைமுறை குறித்தும் உங்களுக்குத் தெரிந்த மருத்துவ ஞானத்தை அள்ளிவிடாதீர்கள். மருத்துவம் பார்ப்பதை டாக்டரின் கைகளில் விட்டுவிட்டு, ஆறுதல் வார்த்தைகள் சொல்வதை மட்டுமே நீங்கள் செய்தால் போதும்.

 சொல்லாதே யாரும் கேட்டால்…

கண்களை மூடியபடி நோயாளி இருந்தால், தூங்குகிறார் என்று அர்த்தம் அல்ல. ‘பார்க்கச் சகிக்கலை’ என்றோ, ‘ஆண்டவன் ஏன்தான் இந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனைகளைக் கொடுக்கிறார்?‘ என்றோ பக்கத்தில் இருப்பவர்களிடம் ‘உச்சு’க்கொட்டாதீர்கள். நோயாளி கேட்டுவிட்டுக் கிலேசம் அடையக்கூடும்.

 இங்கே அரசியல் பேசாதீர்!

”போன மாசம் இதே நேரம் என்னோட ஃப்ரெண்டுக்கும் பைக் ஆக்ஸிடென்ட் ஆகி, கையில் மல்டிபிள் ஃப்ராக்ச்சர் ஆயிருச்சு!’ என்பன போன்ற உதாரணக் கதைகள் நோயாளியைக் கலவரப்படுத்தவே செய்யும். தயவுசெய்து தவிர்க்கலாமே!

 வாசம் வேண்டாம்… பாசம் போதும்!

தூக்கலான மேக்கப், வாசனைத் திரவியங்களைத் தவிர்க்கலாம். நோயாளி இருக்கும் சூழ்நிலைக்கு அவை பொருத்தம் அற்றவையாக இருக்கும். எளிமையான ஆடை அலங்காரங்கள் போதும். ஆறுதல் வார்த்தைகளே அருமருந்து.

 இது மருத்துவமனை!

நோயாளிக்கு அருகில் அமர்ந்து பேசும்போது செல்போனின் அலுவலக அழைப்புகளுக்குச் செவிகொடுக்க வேண்டாம். தவிர்க்கமுடியாத அழைப்பாக இருந்தால், வெளியே சென்று பேசுங்கள். நோயாளியுடன் பேசும்போது அங்கிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐக்கியமாகவோ, புத்தகங்களைப் புரட்டவோ செய்யாதீர்கள். நோயாளியைப் புறக்கணிப்பதைப் போன்ற செயல் அது.

 உற்சாகம் ஊட்டுங்கள்!

நோயாளிக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயங்களைப் பேசுங்கள். மறந்தும்கூட உணர்ச்சிவசத்தையோ, கோபதாபங்களையோ அவரிடம் கொட்டாதீர்கள். குணமாவதற்குப் பதில் நோய் முற்றிவிடக்கூடும். நோயாளியின் படுக்கையில் அமருவதைத் தவிருங்கள்.

 வேண்டாம்… வேண்டாம்!

நோயாளியைப் பார்க்கக் குழந்தைகளையோ, முதியவர்களையோ அழைத்துச் செல்லாதீர்கள். அதேபோல இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்று இருந்தால், மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்க்கப் போக வேண்டாம்.

– லதானந்த்

நன்றி:- டாக்டர் விகடன்.

Sadaqat-Ul-Jariyah


بسم الله الرحمن الرحيم

IN THE NAME OF “ALLAH”

Assalamu Alaikum Warahmatu Allah Wabarkatu,

Sadaqat-ul-Jariyah

The Actions Which Outlive You!
الأعمال التي تبقى بعد زوالك

Give A Copy Of Quraan To Someone And Each Time They Read From It, You Will Gain Hasanaat.

– اعطاء نسخة من القرآن لآي شخص ,, وكل ما يقرأ هو ,انت ,تكسب حسنآت

Donate A Wheel ChairTo A Hospital And Time A Sick Person Uses It, You Will Gain Hasanaat.
اتبرع بالكراسي الخاصة للمعاقين في المستشفيات,,وكلما استخدمت من الأشخاص المعاقين,,يكون لك اجرShare Constructive Reading Material With Someone.

شارك باستنتاجك واقتراحات في اي مشروع يحتاج ذلك

Help In Education A Child.
اتبرع و ساعد في تدريس الأطفال

Teach Someone To Recite A Dua. With Each Recitation, You Will Gain Hasanaat.

لقن او درس كيفية الدعاء (لغير الناطقين للعربية)

Share A Dua Or Quraan CD.

شاركهم بالدعاء او في شراء او بناء اقراص سي دي للقرآن
Participate In The Building of A Masjid

اتبرع للمشاركة في تكاليف بناء المساجد
Place A Water Cooler In A Public Place .

وضع ثلاجة مائية في مكان عام مزدحم بالمارين
Plant A Tree. Each Time Any Person Or An Animal Sits Under Its Shade Or Eats From The Tree, You Will Gain Hasanaat.

.. قم بزراعة الأشجار لأن اي شخص او حيوان ياكل او يستريح تحتها يكون لك اجر فيها

Share This Mail With Someone. If One Person Applies Any Of The Above You Will Receive Your Hasanaat Until The Day Of Judgment.
ارسل هذا الأيميل لغيرك ,,اذا اي شخص قام بعمل اي من هذة الصدقات الجارية الموجودة هنا فانت بهذا العمل سوف تكسب الحسنات الى يوم القيامة
باذن الله

பிரிவுகள்:இஸ்லாம், Sadaqa, Sadaqat-Ul-Jariyah குறிச்சொற்கள்:, , , , , , ,