தொகுப்பு

Archive for மே, 2010

கடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்

மே 29, 2010 பின்னூட்டம் நிறுத்து

கடன் நிறைவேற ஓதவேண்டிய துஆ

யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைச் கொண்டு உன்னல்லாதவரை விட்டும் என்னை தெவையற்றவனாக ஆக்குவாயாக! நூல்கள்: திர்மிதி5/560 ஸஹீஹ் திர்மிதி 3/180

யா அல்லாஹ்! தூக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கருமித்தனம், கோழைத்தனம், கடன் மிகைத்து விடுதல் ஆடவர்கள் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்: புகாரி 7/158

காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆ

யா அல்லாஹ்! நீ எதை இலகுவாக ஆக்குகின்றாயோ அதைத்தவிர இலகுவென்பது இல்லை; நீயோ கவலையை (கஷ்டத்தை)க் கூட நீ நாடினால் இலகுவாக ஆக்கிடுவாய். நூல்்: இப்னுஹிப்பான்

39

அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

கவலையின் போது ஓதும் துஆ

தூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை

கப்ருகளை ஜியாரத் செய்யும்போது

தலைசிறந்த பாவமன்னிப்பு – சையிதுல் இஸ்திஃபார்

ஆயத்துல் குர்ஸி

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

இரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது

வீட்டிருந்து வெளியே செல்லும் போது ஓத வேண்டியது

மணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது

மாலையில் ஓதவேண்டிய துஆக்கள்

கடன் நிறைவேற ஓதவேண்டிய துஆ

காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆ

தகவல் பெட்டி-05


உலகின் மிகப் பழமையான ஆயுள் காப்பீடுக் கழகம் இங்கிலாந்தில் உள்ளது. அதன் பெயர் Equitable Life Assurance Company.

உலகின் மிகச் சிறிய ரயில் நிலையத்தைக் கொண்ட நாடு வாடிகன்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் போடப்பட்ட முதல் அணுகுண்டு 4082 கிலோ எடை கொண்டது.

உலகில் மிக அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்தியுள்ள வங்கி ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’.

பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் உள்ள படிகளின் எண்ணிக்கை 294.

உலகில் மிக அதிகமாக விளை நிலங்களில் பயிரிடப்படுவது கோதுமைப் பயிர்.

முகமது அலி ஜின்னாவுக்கும், அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தவர்கள்.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் அச்சிடப்படுவது உங்களுக்குத் தெரியும். 1997 வரை அவரது பெயர் ரூபாய் நோட்டுகளில் M.K.Gandhi (Mohandas Karamchand Gandhi-யின் சுருக்கம்) என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் மகாத்மா காந்தி என்று மாற்றினார்கள்.

‘ஆஸ்திரேலியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் சர். எட்மண்ட் பார்டன் (Sir Edmund Barton).

இருட்டைப் பார்த்து பயப்படும் நோய்க்குப் பெயர் நாக்டிஃபோபியா (Noctiphobia).

எட்டி மெர்க்ஸ் (Eddy Merkx) என்பவர் பெல்ஜியம் நாட்டு சைக்கிள் வீரர். இவர் தன் வாழ்நாளில் 445 சைக்கிள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ‘டூர் டி பிரான்ஸ்’ (Tour de France) என்ற பிரான்ஸ் நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி வரும் போட்டியில் நான்கு முறை வென்றுள்ளார்.

அமேசான் நதியின் கிளை நதி ஒன்றும் பிரேஸிலின் பாகே நாட்டில் இருந்து வரும் நதியும், படகோனியாவில் ஓடும் நதி ஒன்றுமாகச் சேர்ந்து ஓடும் நதிதான் ‘நீக்ரோ நதி’

முதன் முதலில் ‘பல்சர்’களை (Pulsars) கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் ஜோஸேலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) பல்சர்கள் என்றால் என்ன தெரியுமா? இறந்து போன நட்சத்திரங்களில் மீதம். இவை ரேடியோ சிக்னல்களை அனுப்பும்.

ஒரு புலி தனது மொத்த எடையில் ஐந்தில் ஒரு பகுதி எடை உணவை ஒரே முறையில் உண்ணும். இதற்கு சமமாக ஒரு சராசரி மனிதன் உண்ண வேண்டுமானால் அவன் ஒருமுறைக்கு பதினைந்து கிலோ எடை உணவை உண்ண வேண்டும்.

சர். ராபர்ட் வால்போல் (Sir Robert Walpole) இங்கிலாந்தின் முதல் பிரதமர். ஆனால், அவரே அந்த பதவியில் தானிருப்பதை சொல்லிக்கொள்வதில்லை. முதலாம் ஜார்ஜ் மன்னரின் அரசவையில் ‘கஜானாவின் முதலதிகாரியாக’ மட்டுமே தன்னைக் குறிப்பிட்டுக்கொள்வார்!

ஒவ்வொரு வருடமும் பால்வழி மண்டலத்தில் பத்து நட்சத்திரங்கள் பிறக்கின்றன. பத்து நட்சத்திரங்கள் இறக்கின்றன.

தென் அமெரிக்காவில் காணப்படும் ‘ஸ்லோத்’ (Sloth) எனப்படும் உயிரினம் தனது பெரும்பாலான வாழ்வை தலைகீழாகத்தான் வாழும். உணவு தேடும்போதுகூட கிளைகளில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே உணவு தேடும்.

அமெரிக்காவில் தற்போது அதிவேக விமானம் ஒன்று தயாரிப்பில் உள்ளது. இதன் வேகம் மணிக்கு 8,047 கிலோ மீட்டர். ஒலியின் வேகத்தைவிட ஏழு மடங்கு அதிகம். இது பறக்கும்போதே காற்றில் இருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்திக்கொள்ளும்.

நீரில் வாழும் Giant Squid எனும் உயிரினத்தின் கண்கள் நாற்பது சென்டிமீட்டர் இருக்கும். ஆழ்கடலில் வாழும் இவை ஒன்பது மீட்டர் நீளம் வளரக்கூடியவை.

மிக அதிக மொழிகள் உள்ள நாடு பாப்புவா நியூ கினியா (Papua New Guinea). இதன் அரசு மொழி ஆங்கிலம். மற்ற மொழிகள் 715-க்கும் மேல் இருக்கும்.

தங்கக் கழுகால் 3.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முயலையும் எளிதில் பார்க்கமுடியும். பெரிக்ரின் பருந்து (peregeine falcon) பறவையால் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புறாவையும் பார்க்க முடியும்.

2015\ம் வருடம் செவ்வாய் கிரகத்துக்கு ஆறு பேர் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது ரஷ்யா. இதற்கு மொத்தம் 20 பில்லியன் டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நன்றி:- சு.வி

தவளை, தேரை அறிவியல் உண்மைகள்


வளை, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். தங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை முழுதும் நீரில் வாழும். வளர்ந்த பிறகு உடம்பை ஈரமாக்கிக் கொள்ள நீரில் இருக்கும்.

தவளைகளுக்கு பெரிய தலைகள், நீண்ட கால்கள். வால் கிடையாது.

தவளைகள் நன்கு நீந்தக்கூடியவை. நிலத்தில், நடப்பதைவிட குதித்துக் குதித்துச் செல்லும்.

ஈரப்பதம் உள்ள எல்லா இடத்திலும் தவளைகள் இருக்கும். இவற்றால் கடல் போன்ற உப்பு நீரில் வாழமுடியாது.

உலகில் மிகப்பெரிய தவளையின் பெயர் கோலியாத். இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எடை மூன்று கிலோ. நீளம் 80 சென்டி மீட்டர்.

உலகின் மிகச்சிறிய தவளை பிரேஸிலில் உள்ளது. இதன் நீளம் 8.5 மில்லிமீட்டர் மட்டும்தான்.

தவளைகளின் இயல்பே குதிப்பதுதான். தவளைகளில் அதிக உயரம் குதிப்பவை தென்ஆப்பிரிக்காவின் ஊசி மூக்குத் தவளைகள். வெறும் ஆறு சென்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்தத் தவளைகள் அநாயாசமாக 5.35 மீட்டர் உயரத்தை ஒரே தாவலில் குதிக்கும்.

தவளைகளும் தேரைகளும் சேர்ந்து 2600-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

தென் அமெரிக்காவின் விஷத்தவளைகளிடம் மிகுந்த விஷம் இருக்கும். இதன் விஷத்தை அம்புகளில் தடவி மிருங்களையும் எதிரிகளையும் கொல்ல உபயோகிப்பார்கள் அந்தப்பகுதி மக்கள். இவற்றின் பிரகாசமான நிறமே கொல்லவரும் மிருகங்களிடமிருந்து காப்பாற்றும்.

வட அமெரிக்காவின் சிறுத்தைத் தவளை, பெரும்பாலான தவளைகள் போல் இரவில்தான் சுறுசுறுப்பாக இருக்கும். எதிரி மிருகங்கள் துரத்தினால் ஒவ்வொரு குதிப்புக்கும் இடவலமாக மாறி மாறிச் சென்று மிருங்களைக் குழப்பும்.

பெரிய தவளைகள் எல்லாம் சின்னச் சின்ன மிருகங்களைக் கொன்று தின்னும். சில தவளைகள் தங்கள் நீளமான நாக்கை நீட்டிப் பூச்சிகளைப் பிடிக்கும். மற்றவை குதித்துப் பூச்சிகளைப் பிடிக்கும்.

இனவிருத்தி காலத்தில் ஆண் தவளைகளும், பெண் தவளைகளும் தகுதியான குளம், குட்டைகளுக்குப் போகும்.

பெண் தவளைகள் ஏகப்பட்ட முட்டைகள் போடும். இவை உடைந்து குட்டித் தவளைகள் வரும். குட்டித் தவளைகள் தங்களைத் தாங்களே பாத்துக்கொள்ள வேண்டும். சிறு தாவரங்களை உண்ண ஆரம்பித்து சில நாட்களில் சின்ன சின்ன நீர்வாழ் மிருகங்களை உண்ண ஆரம்பிக்கும்.

தவளைகள் சுவாசிக்க நுரையீரலை மட்டுமல்லாமல் தோலையும் பயன்படுத்தும். இதற்காக தோலில் சின்ன ஓட்டைகள் இருக்கும்.

ஆப்பிரிக்கா காட்டில் வாழும் புல்ஃப்ராக் வகைத் தவளைகள் கூர்மையான பற்களுடன் இருக்கும். குட்டிகளுக்கு யார் மூலமாவது ஆபத்து வந்தால் _ அது பாம்போ, மனிதனோ… உடனடியாக சண்டைக்குப் போய்விடும்.

ஒரு மில்லிமீட்டரில் இருந்து ஐந்து மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேலும் ஒன்றிரண்டு மில்லிமீட்டர் கூடிய அளவுகளில் முட்டையிடும். இவை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால் பிழைப்பது பத்தோ, இருபதோதான்.

பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பிற குட்டித் தவளைகள் போன்றவை தவளைகளின் உணவு.

தவளை, தேரை

தேரைகள் தவளைகளின் சகோதர இனம். இவை பார்ப்பதற்கும், இவற்றின் வாழ்வு முறையும் ஓரிரு வித்தியாசங்களைத் தவிர தவளைகள் போல்தான்.

தேரைகளின் தோல் தவளைகளின் தோலைவிட ஈரப்பதம் குறைந்திருக்கும். தேரைகளுக்குப் பற்கள் இல்லை. இரண்டிற்கும் விலா எலும்புகள் வேறுபட்டிருக்கும்.

தேரைகளில் பெரிய தேரையின் பெயர் Marine Taod. 24 சென்டிமீட்டர் நீளமும், 1.3 கிலோ எடையும் இருக்கும்.

தேரைகளின் ஆயுட்காலம் முப்பது வருடங்களும் அதற்கு மேலும் அமையலாம்.

தேரைகள் சுமார் மூவாயிரம் முட்டைகள் இடும்.

நன்றி:- சு.வி

கூச்சம் தவிர்


கூச்சம் தவிர்ப்பது எப்படி? ஆளுமை வள்ர்க்க தோழமை டிப்ஸ்
.

‘கூச்சம் தவிர்’, ‘சந்திப்பு தவறேல்’ ஆத்தி சூடியை ரீ-மிக்ஸினால் இப்படித்தான் எழுத வேண்டியிருக்கும். காரணம், இன்று இளைஞர்களை அதட்டி மிரட்டி உருட்டும் அசுரன்… கூச்சம்!

‘கூச்ச சுபாவமே எனது கேடயம்!’ என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல பதின்பருவத் தினரைக் கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்னைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?

பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாத வரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரிய மாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. ‘கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக்கொள்ளும் ஒரு குணம்’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர் கள். ‘மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்’ என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். பின்னா ளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்?

”ஒருமுறை என்னிடம் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் ஒருவனை அழைத்து வந்தார்கள். அவனைச் சோதித்தபோது, கடுமையான மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். ‘இவன் யாரிடமும் பேசுவதற்கு அவ்வளவு கூச்சப்படுவான். பக்கத்து வீட்டுக்காரர்களிடம்கூடப் பேச மாட்டான். ‘அமைதியான பையன்… தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கிறான்’ என்று நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேசுவதைக்கூடக் குறைத்துவிட்டான். இப்போது எங்களிடமும் பேசுவது இல்லை. அறைக்குள்ளேயே அடைந்துகிடக்கிறான். அறைக்குள் இருந்து தானாக முணுமுணுக்கும் சத்தம் மட்டும் கேட்கிறது’ என்று கண்கலங்கினார்கள்.

அவனைத் தனிமையில் விசாரித்தபோது,’எல்லோ ரிடமும் நல்ல பையன்னு பேர் எடுத்துவெச்சிருக்கேன். நான் ஏதாவது தப்பா பேசி, மத்தவங்க என்னைப் பத்தி தப்பா நினைச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு. அதனால, யார்கிட்டேயும் நான் பேசுறது இல்லை’ என்றான். நண்பர்களோ, பெற்றோர்களோ பேசும்போது தன்னைப்பற்றி ஏதாவது பேசுகிறார்களா என்று ஒட்டுக்கேட்பது என்று அவனது கூச்சம் தயக் கமாக மாறி, சந்தேகப் புத்தியாக உருவெடுத்து இருந் தது. ஒரு வருட தீவிரப் பயிற்சிக்குப் பின் அவனை இயல்பான, துடிதுடிப்பான பையனாக மாற்றினோம்” என்கிறார் மனநல மருத்துவர் சி.ஆர்.எஸ்.

சின்ன தயக்கம், நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். ‘சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை’ என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களின் அனுபவங்கள் இவை.

நடனம், மிமிக்ரி எனப் பல கலைகளில் அசத்துபவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன். தற்போது நேரலை நிகழ்ச்சிகளில்கூட டைமிங் காமெடிகளில் வெளுத்துக் கட்டுபவருக்கு, சின்ன வயதில் மைக்பிடித்தாலே கை நடுங்கும் என்றால் நம்புவீர்களா?

”மேடை, மைக்கைப் பார்த்தாலே தடதடன்னு கை, கால் உதற ஆரம்பிச்சிடும். அவ்வளவு ஏன்… சுத்தி 10 பேர் நின்னாலே பயந்துருவேன். நாலு பேர் கைதட்டுற மாதிரி வாழணும்னு கனவு மட்டும் இருந்தது. ஆனா, அதைவிட அதிகமா பயம் இருந்தது. எனக்கு நெருக்கமான, கிண்டல் பண்ணாத 10 நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, என் முன்னாடி உட்காரச் சொல்வேன். விதவிதமா டான்ஸ் ஆடி, மிமிக்ரி பண்ணிக் காட்டினேன். அவங்க கிண்டல் அடிக்காம சரியா விமர்சனம் பண்ணி என் தவறுகளைத் திருத்தினாங்க. நேரம் கிடைக்கும்போது எல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுத்தேன். கண்ணாடியில நம்ம கண்ணை நேருக்கு நேர் பார்த்துப் பேசும்போது, கூச்சம் இருக்கிற இடம் தெரியாமப் போயிரும். அந்தப் பயிற்சி கொடுத்த தைரியத்தில் 1,500 மாணவர்கள் கூடியிருந்த ஸ்டேஜில் டான்ஸ் ஆடினேன். பயங்கர அப்ளாஸ். கூச்சம் இருந்தா திறமையை மறந்திருங்க. திறமையை வெளிப்படுத்தணும்னா, கூச்சத்தை மறந்திருங்க!” என்று சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

தனிமையில் இருந்தபடி செல்போன் எஸ்.எம்.எஸ், ஆர்குட், ஃபேஸ்புக் என எலெக்ட்ரிக் சாதனங்கள் மூலமாகவே மற்றவர்களுடனான தொடர்புகளை முடித்துக் கொள்கிறார்கள். திடீரென்று நேரில் அவர்களைச் சந்திக்கும்போது, தனிமை தரும் சௌகர்யத்தை உணர முடியாமல் கூச்சத்தால் நெளிகிறார்கள் பலர். அந்தப் பழக்கம் நம் அடிமனதில் பதிந்துவிடக் கூடாது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

நல்ல நிலையில் இருக்கும் மனிதர்களையே கூச்சம் முடக்கிப் போட்டுவிடும். அப்படியென்றால் மாற்றுத் திறனாளிகளின் கதி?

‘கூச்சம் ஒரு வியாதி’ என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து வெற்றிக் கொடி நாட்டியவர் ரேடியோ மிர்ச்சி ஜாக்கி ‘சேட்டை’ சேது.

”17 வயசு வரைக்கும் எங்கேயும் தவழ்ந்துதான் போவேன், வருவேன். மத்தவங்க என்னைப் பரிதாபமா பார்த்துப் பார்த்தே எனக்குக் கூச்சமும், தயக்கமும் வந் திருச்சு. எவ்வளவு நாள்தான் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியும்? ஒரு சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குப் போயிருந்தேன். ‘உங்களால எப்படி இந்த வேலை பார்க்க முடியும்?’னு கேட்டாங்க. ‘சரி… நான் செய்ற மாதிரி வேலை எதுவும் காலி இருக்கா’ன்னு கேட்க நினைச்சு, கூச்சப்பட்டு கேட்காமலே வந்துட்டேன். மறு நாள் அதே கம்பெனி லிஃப்ட் ஆபரேட்டர் வேலைக்கு ஒரு மாற்றுத் திறனாளியைத் தேடிட்டு இருந்த விஷயமும், வேற ஒருத்தரை அந்த வேலைக்கு நியமிச்ச விஷயமும் கேள்விப்பட்டேன். என் கூச்சத்தால் கை நழுவிப்போன முதல் வாய்ப்பு!

சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில தற்காலிகப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். ஆண்டு விழா வந்தது. ‘கம்பெனியில் வேலை பார்க்கும் ஒவ்வொ ருத்தரும் கட்டாயம் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் பண்ண ணும்’னு சொல்லிட்டாங்க. சின்ன வயசில் இருந்து கூச்சத்தால் நான் பொத்திவெச்சிருந்த பேச்சுத் திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு. கூச்சத்தைத் தூக்கி எறிஞ்சு களத்தில் இறங்கினேன். எல்லோரும் சின்ட்ரெல்லா, ஆலிவர் ட்விஸ்ட்டுனு இங்கிலீஷ் நாடகங்கள் போட்டுப் பொளந்து கட்டிட்டு இருந்தாங்க. ‘பாரதியார் இப்ப உயிரோடு ஊருக்குள் வந்தா எப்படி இருக்கும்?’னு பக்கா லோக்கலா காமெடி ஸ்க்ரிப்ட் எழுதி, ஸ்டேஜில் ஏறி நடிச்சு முடிச்சப்போ பயங்கர ஆரவாரம். கூச்சத்தை மறந்தா, இத்தனை கைதட்டல்கள் காத்திருக்கான்னு ஆச்சர்யமா இருந்தது. இன்னிக்கு வரைக்கும் எனக்குக் கிடைக்கிற ஒவ்வொரு கைதட்டலுக்கும் அந்தச் சம்பவம்தான் ஆதாரம். வாழ்க்கையில தப்பு செய்ய மட்டும் கூச்சப் படுங்க. மத்த விஷயங்களில் கூச்சத்தைக் கண்டுக்காதீங்க!” என்கிறார் பூரிப்போடு.

முதன்முதலாக சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே ‘மா’ என்ற திரைப்படத்தினை இயக்கி இருக்கிறார் மாற்றுத் திறனாளி பாத்திமா பீவி. இவர் தன் வாழ்க்கையில் தாண்டவமாடிய கூச்சத்தை எதிர்கொண்ட விதத்தினை விவரித்தார். ”சாதாரணமான மனிதர்களைவிட எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் இரண்டு மடங்கு அதிகமான கூச்சத்தையும் அவமானங்களையும் தாண்டி வரணும். மதுரையில் பள்ளிக்கும் கல்லூரிக்கும் நான் தவழ்ந்துதான் செல்வேன். சில வேளைகளில் ரிக்ஷாவில் செல்வேன். பள்ளிக்குள் இறங்கும்போது எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்கள். அதுவே எனக்குக் கூச்சத் தையும், தாழ்வுமனப்பான்மையையும் உருவாக்கியது.

பொது இடங்களில் எப்போதும் மற்றவர்களின் கால்களுக்கு இடையே தவழ்ந்து செல்ல வேண்டும். அதனாலேயே வெளியில் செல்லாமல் முடங்கிக்கிடந்தேன். பள்ளியில் எல்லோரும் விளையாடப் போகும்போது, ஆர்வமாக நானும் கிளம்புவேன். மாணவிகள் சிரித்துவிடுவார்களோ என்கிற தயக்கத்தில் அமைதியாக இருந்துவிடுவேன். அப்படிக் கூட்டுப் புழுவா சுருங்கியிருந்த என்னை, தலை நிமிர்த்தி வெளியே எட்டிப் பார்க்க வெச்சது புத்தகங்கள்தான். தன்னம்பிக்கைப் புத்தகங்கள்தான் எனக்குத் தைரியத்தைக் கொடுத்தது. இலக்கியப் புத்தகங்கள் எனக்கு உலகத்தைப்பற்றிய பார்வையை விரிவுபடுத்தியது. அதற்கடுத்து, என் குறை எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இயக்குநர் பயிற்சி பெறும்போது, வகுப்பறை இரண்டாவது மாடியில் இருந்தது. நான் மாடிப்படியில் தவழ்ந்து செல்லும்போது ஏளனமாகப் பார்ப்பார்கள். அதை எல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. பேச்சு, நடனம், திரைக்கதை, வசனம், கதை என்று இயக்குநர் பயிற்சிக்காகவைத்த தேர்வுகளில் எல்லாம் எனக்குத்தான் முதல் மதிப்பெண். அதற்கடுத்து, அவர்களின் கேலிப் பார்வை மரியாதையாக மாறிவிட்டது. வெற்றிகளை உங்கள் அடையாளமாகவைத்திருங்கள். கூச்சத்தை அல்ல!” என்கிறார் உற்சாகமாக.

உள் மனதில் விஷமாக ஊடுருவிப் பரவும் கூச்சத்தை எப்படி எதிர்கொள்வது? பதில் சொல்கிறார் மனநல மருத்துவர் செந்தில்வேலன். ”கரூர் அருகே கிராமத்தில் இருந்து நகரத்துக்குச் சென்று பொறியியல் படிப்பு முடித்தவன் அவன். செமஸ்டர் தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவன். நல்ல திறமைசாலி. பெரிய அளவில் பிரகாசிப்பான் என்று அவனது நண்பர்கள் கனவோடு இருந்தார்கள். ஆனால், அவனால் ஒரு சின்ன வேலைக்குக்கூடச் செல்ல முடியவில்லை. ஏனெனில், நேர்முகத் தேர்வுகளில் கேள்வி கேட்டாலே டென்ஷனாகிவிடுவான். பதில் தெரியும். ஆனால், சொல்லத் தெரியாது. அல்லது சொல்ல வராது. ஒரு வார்த்தை பேசுவதற்குள் வியர்த்து வெலவெலத்துவிடுவான். இதனால் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வதையே தவிர்க்க ஆரம்பித்தான். கடைசியில், அருகில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் 3,000 ரூபாய் சம்பளத்துக்கு லேப் அசிஸ்டென்டாக வேலைக்குச் சேர்ந்தான். அவனுடைய தகுதிக்கு லெக்சரர் ஆகியிருக்கலாம். இருந்தாலும் மாணவர்களைப் பார்த்து பாடம் நடத்தப் பயம். அவனுடைய நண்பர்கள் அவனை என்னிடம் அழைத்து வந்தார்கள். தொடர் பயிற்சி, மருந்து, மாத்திரைகள் மூலம் அவனைக் குணமாக்கினேன். இப்போது அவன் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர். இவரைப்போல உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்றஉணர்சி, தாழ்வுமனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.

பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறை யும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் ‘தப்பு’, ‘இது குற்றம்’ என்று அடக்கிவைக்கும்போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்ச லாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும். பொருட்களைப் பேரம் பேசி வாங்க முடியாது. சாலையைக் கடக்கத் தெரியாமல் தடுமாறு வார்கள். இந்தச் சூழ்நிலையில் 18-19 வயதில் கல்லூரிக்குச் செல்லும்போது, பெற்றோர் இல்லாமல் எதையும் சந்திக்கப் பயப்படுவார்கள். ‘எதிரில் இருப்பவர் நம்மைவிடச் சிறந்தவர்’ என்கிற எண்ணம் எழுந்து, தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். தன்னம்பிக்கையே இருக்காது. யாரையும் சந்திக்க, எதிர்கொள்ளப் பயப்படுவார்கள். பெரும்பாலும் சந்திப்புகளைத் தவிர்ப்பார்கள். இவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சை கொடுத்துச் சரி செய்ய வேண்டும்.

மனப் பதற்ற நோய்கள் இருந்தாலும் இந்தப் பிரச்னை கள் வரும். மனப் பதற்ற நோய்களில் சோஷியல் ஃபோபியா என்பதும் ஒன்று. அதாவது, சமூக சூழ்நிலைகளைக் கண்டு அதீதமாகப் பயப்படுவது. இந்த ஃபோபியா வந்தவர்களால் மேடையில் ஏறிப் பேச முடியாது. மேடையில் ஏறியதுமே நெஞ்சு அடித்துக்கொள்ளும். கை கால் நடுங்கும். தொண்டை வறண்டுவிடும். வியர்த்துக் கொட்டும். இதே ஆட்களை யாரும் இல்லாத அறையில் பேசச் சொன்னால், அற்புதமாகப் பேசுவார்கள். இன்னும் சிலர், அருகில் ஆட்கள் இருக்கும்போது எதையுமே செய்ய மாட்டார்கள். யாராவது அருகில் இருந்தால் சிலரால் சாப்பிடக்கூட முடியாது. பப்ளிக் டாய்லெட்டில் நான்கைந்து பேர் யூரின் போய்க்கொண்டு இருந்தால், இவர்கள் கூச்சப்பட்டு வெளியேறிவிடுவார்கள்.

பயிற்சிகள், மருந்துகள் மூலம் இந்தப் பாதிப்புகளை மாற்றிவிடலாம். கூச்ச சுபாவத்தைப் போக்க நிறைய பயிற்சிகள் எடுக்க வேண்டும். யாரையாவது சந்திக்கச் செல்வதற்கு முன், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அவர் இப்படிப் பதில் சொன்னால், அடுத்து எப்படிப் பேச்சைக் கொண்டுசெல்வது? என்று உங்களுக் குள்ளேயே ரிகர்சல் செய்ய வேண்டும். திட்டமிட்டுச் செல்லும்போது, பயம், பதற்றம் வராது. அதேபோல யாரையும் சந்திக்கச் செல்லும்போதோ, மேடையில் ஏறும்போதோ, ‘நமக்கு முன் இருப்பவர்கள் நம்மைப்போல் சராசரி மனிதர்கள்’ என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். ‘நாம் படித்திருக்கிறோம். நமக்கு இவ்வளவு திறமைகள் இருக்கின்றன. சமுதாயத்தில் நமக்கு ஒரு மதிப்பு உண்டு’ என்று சுய மரியாதையை வரவழைத்துக்கொள்ளுங்கள். இப்படி தொடர்பயிற்சிகள் எடுக்கும்போது கூச்சம் காணாமல் போய்விடும். உதாரணமாக, திருமணத்தின்போது பெண்கள் அதிகம் கூச்சப்படுவார்கள். பிறகு, இரண்டு மூன்று மாதத்தில் புருஷனை ‘வாடா, போடா’ என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்குத் தைரியம் என்பது பழக்கத்தால் வருகிறது. நீங்களும் அப்படி மற்றவர்களோடு பேசிப் பழகுங்கள்.

மூளையில் ஏற்படும் செரட்டோனின் குறைவை மருந்துகள் மூலம் சரிப்படுத்திவிடலாம். ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து மருந்துகள் எடுக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் சிலர் கேள்விகேட்கும்போது பிரமாதமாகப் பதில் அளிப்பார்கள். பரீட்சையில் பாதி மதிப்பெண்கள்கூட வாங்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேர்வுத்தாளைக் கையில் வாங்கிவிட்டாலே பயம், பதற்றம் வந்துவிடும். கை, கால் வெடவெடத்து,வியர்த்துக் கொட்டும். படித்தது எல்லாம் மறந்துவிடும். இரண்டு கேள்விக்கு மட்டும் பதில் எழுதிவிட்டு ஓடி வந்துவிடுவார் கள். இதற்கு எக்ஸாம் ஃபோபியா என்று பெயர். இந்த மாதிரி பலருக்கு குறிப்பிட்ட துறையில் மட்டும் தயக்கம், கூச்சம் இருக்கும். இதையும் மருந்துகள் மூலம் குணப் படுத்தலாம். எக்ஸாம் ஃபோபியா உள்ள மாணவர்களுக்கு தேர்வு தினத்தன்று மட்டும் மருந்து கொடுத்துப் பயத்தைப் போக்க`ம். எந்தப் பயமும் இல்லாமல் தேர்வு எழுதி விட்டு வருவார்கள். ஸ்டேஜ் ஃபியர் இருப்பவர்களுக்கும் ஸ்டேஜ் பெர்ஃபார்மன்ஸ் செய்யும்போது மாத்திரை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

ஒன்றே ஒன்றுதான்… கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!”

எப்படி உங்கள் இஷ்டம்?
கூச்சத்தை உதறியெறிந்து சிகரம் தொட்ட சிலர்…

திக்குவாய் என்பதால் கூச்ச சுபாவம் உடையவனாக இருந்தான் அவன். ஆனால், அது அவனை எந்தவிதத்திலும் அமெரிக்க ஜனாதிபதியாகவோ, புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்துவதையோ தடுக்கவில்லை. கூச்ச சுபாவத்தை மீறி வந்ததால்தான் ஒரு ஆபிரகாம் லிங்கன் உதித்தார்!

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்பது அவனின் லட்சியம். ஆனால், அவனுடைய குரல் மோசமாக இருந்தது. ஆள் கோமாளி மாதிரி இருந்தான். இவை இரண்டும் அவனுக்கு கூச்ச உணர்வைக் கொடுத்தது. அந்தக் கூச்சத்தை தகர்த்து எறிந்து அவன் கண்டுபிடித்த சினிமாதான் இன்று உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு. அவர் தாமஸ் ஆல்வா எடிசன்!

கூச்ச சுபாவமும் ‘ஸ்டேஜ் ஃபியர்’ காரணத்தாலும் அவளால் பியானோ வாசிக்க முடியவில்லை. ஆனால், அவள் புகழ்பெற்ற மர்ம நாவல்கள் எழுதி அகதா கிறிஸ்டியாக வளர்வதை அந்தக் கூச்சத்தால் தடை செய்ய முடியவில்லை!

இன்னும் பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே மாறாத வரையில் இவைகள் வெறும் வார்த்தைகள்தான்!


நன்றி:- பிரவீன், வினோத், கோகுல் , லோகாம்பாள்

படங்கள்: ஜா.ஜாக்சன், து.மாரியப்பன், ஜெ.தான்யராஜூ

நன்றி:- .வி

அரிய ஆமை – யாசர் அரஃபாத்


உள் ஒன்று வைத்து
புறம் ஒன்று பேசத் தெரியாது
அதனால்
புறம் மட்டும் பேசுவோம்!

ஒன்றுக் கூடி நிற்போம் என்று
குழு குழுவாகக்
குரல் கொடுப்போம்
தனித் தனியாக!

கட்டி அணைப்போம்
மாற்றாரை;
எட்டி உதைப்போம்
உறுப்பின் ஒரு பகுதி சதையை!

துள்ளி எழுந்தோம்
கிள்ளி எறிய அறியாமையை;
ஒற்றுமை என்றால்
ஒய்யாரமாய் நடக்கும்;

நாங்களெல்லாம் அரிய ஆமை!!

மறுமை என்பதை
மறந்துவிட்டு
மணிக்கணக்கில் பேசுவோம்
மேடைப் போட்டு;

ஒற்றுமை என்றுச் சொல்லி
தோளைத் தொட்டுச் சொன்னால்
நடக்கும்
எங்களுக்குள் ஜல்லிக்கட்டு!!

வரிக்கு வரி பதில் சொல்லுவோம்
குர்-ஆன் சுன்னா வழிமுறையில்;
எதிர்த்துக் குரல் கொடுத்தால்
குரல்வலையை நெரிப்போம் வலி முறையில்!!

வேண்டாம் இந்த விதிமுறை;
என்னாவாகும் நம் தலைமுறை!
கிடப்பில் போடுவோம் தற்புகழ்ச்சியை;
வெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை!!

ஆளுக்கொரு மூலையிலே அமைப்பாக;
சொல்லிச் சொல்லி
சுருண்டுவிட்டோம் களைப்பாக!!

வேண்டிக் கேட்பதெல்லாம்
நமக்குள் ஒற்றுமையை;
வேரருத்துவிடுவோம் நம் வேற்றுமையை!!

கரத்தோடு கரம் கோர்த்து
மனதோடு மார்க்கம் நுழைத்து
சொத்தான சுவர்க்கம் செல்ல
சத்தான அன்பைத்தருவோம்;

ஆதரவுத்தருவோம்!!!

நன்றி:–யாசர் அரஃபாத்

அரசாங்க வேலை வாய்ப்புக்கள்


கேரியர் கைடன்ஸ் !- .சிவக்குமார்

ராணுவ வேலைக்கு ப்ளஸ் டூ தகுதி!

இந்திய ராணுவம், ப்ளஸ் டூ முடித்தவர்களுக்குப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை வழங்குகிறது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். காலி இடங்கள்: 85. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 70 சதவிகித மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சி அவசியம். வயது: 16-19. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 30.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.indianarmy.gov.in

எல்லையைப் பாதுகாக்க!

எல்லைப் பாதுகாப்புப் படையில் மொத்தக் காலி இடங்கள்: 289. இன்ஜின் டிரைவர் தொடங்கி பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்கள் இதில் அடங்கும். கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு கல்வித் தகுதிகள். வயது: 20 -25க்குள். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.05.2010. கல்வித் தகுதி மற்றும் விவரங்கள் அறிய: www.bsf.nic.in

பாதுகாப்பு அமைச்சகத்தில் 97 பணிகள்!

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘டிஃபன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி’ நிறுவனம், உதவி நூலகர், டிரேட்ஸ்மேன், அலுவலக உதவியாளர், சீனியர் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 97 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 28.05.2010. ஒவ்வொரு பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது விவரங்களை அறிய: www.diat.ac.in

நீர்வளத் துறையில் வேலை!

இந்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய நீர் மேம்பாட்டு மையத்தில் பணியிடங்களுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிசைன் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினீயர், ஸ்டெனோகிராபர், கடைநிலைப் பிரிவு கிளார்க் போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது குறித்த விவரங்கள் அறிய www.nwda.gov.in

ரெப்கோ வங்கிப் பணி!

ரெப்கோ வங்கி நிறுவனம் (ஸ்கேல் 1) அலுவலர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலி இடங்கள்: 25. வயது: 21 – 30. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.repcobank.com

ரயில்வே வேலை!

ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு மத்திய மற்றும் கிழக்கு ரயில்வே போன்ற பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. ஸ்டெனோகிராபர், நூலக உதவியாளர் போன்ற பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை. ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றை அறியவும், விண்ணப்பங்களை டவுன்லோட் செய்யவும் www.rrbpatna.gov.in தளத்துக்குச் செல்லவும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.06.2010.

T.N.P.L-லில் வேலை!

கரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (ஜி.ழி.றி.லி) காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வக உதவி அலுவலர், அச்சு உதவி அலுவலர் போன்ற பல பதவிகள் உள்ளன. கல்வித் தகுதி, வயது விவரங்கள் போன்றவற்றை அறிய www.tnpl.com தளத்துக்குச் செல்லவும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.05.2010.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை!

‘சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா’ நிறுவனம் புரொஃபேஷனரி ஆபீஸர் பதவிக்காக அறிவித்துள்ள மொத்தக் காலி இடங்கள்: 500. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 55 சதவிகிதத் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணிப்பொறி இயக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். வயது: 21-30. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.06.2010. மேலும் விவரங்களுக்கு: www.centralbankofindia.co.in

ராணுவத்திடம் தொழில்நுட்பப் பயிற்சி!

இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் மத்திய/மாநில அரசுகளில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 21.06.2010க்குள் உங்கள் விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு : www.indianarmy.nic.in

மத்திய அரசில் கிளார்க் பணி!

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: கடைநிலைப் பிரிவு கிளார்க் (எல்.டி.சி). காலியிடங்கள்: 20. வயது : 18-25. கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.05.2010. மேலும் விவரங்களுக்கு: http://mod.nic.in

நன்றி:- .வி

+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்

தண்ணீர் நிறைய குடிங்க – பேரா சோ.மோகனா


இப்ப கோடைக் காலம் என்பதால் நமக்கு அதிக தாகம் எடுக்கும். ஏன் மழைக் காலத்தை விட கோடையில் அதிக தாகம் எடுக்கிறது? வியர்ப்பதால் என்று சொல்லுவீர்கள்! ஆனால், தாகத்தைத் தூண்டுவதன் முதல் காரணி யார் தெரியுமா? சிறுநீரகம்தான். ஆம் சுட்டீஸ்! உடலின் நீர் மேலாண்மையைச் செய்வது சிறுநீரகம் என்றால் ஆச்சர்யம்தானே.

பொதுவாக நம் உடலிலிருந்து சிறுநீர், வியர்வை, கண்ணீர் மற்றும் மலத்தின் வழியாக நீரும், உப்புக்களும் வெளி யேறுகின்றன. கோடைக் காலத்தில் வியர்க்காமலேயே உடலிலிருந்து நீர் ஆவியாகிவிடுகிறது. குறைவான மற்றும் அடர்த்தியான சிறுநீர் வெளியேறுகிறது. சிறுநீர் வெளியேற்றப்படும் நேர இடைவெளியும் அதிகம். இது ஏன்..?! சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பு! இரத்தத்தை சுத்தம் செய்வது, உடலில் கழிவுப் பொருட் களை வெளியேற்றுவது, உடம்பில் எவ்வளவு நீர் எவ்வளவு உப்பு, எவ்வளவு எலக்ட்ரோலைட் வேண்டும் என்பது போன்ற ஏராளமான பணிகளைச் செய்கிறது. உங்கள் உடம்பின் நீர் மேலாண்மையாளரான சிறுநீரகம் மட்டும் கொஞ்சம் தகராறு செய்தால் நமக்கெல்லாம் படா பேஜாருதான்!

மண்ணீரல், கணையத்துக்கு அருகில் முதுகெலும்பை ஒட்டி அவரைவிதை அளவுக்கு ஜோடியாக கம்பீரமாய் அமைந் துள்ளது.

பொதுவாக அனைத்து பாலூட்டிகளுக்கும் இது கருஞ்சிவப்பு நிறத்துடன்தான் இருக்கும். இது நம் உடலின் எடையில் 0.5% தான். ஆனால், இதயம் சுரக்கும் இரத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு சிறுநீரகத்துக்கே உடனடியாக வருகிறது. சிறுநீரகம் 10 செ.மீ நீளம். 6 செ.மீ அகலம், 4 செ.மீ கனமும் உள்ள ஒரு சதைக் கொத்து. இதில் இரத்தமும் நரம்பும் மட்டுமே உள்ளது. இதன் எடை 100 கிராம். நாம் உயிர் வாழ ஒரு சிறுநீரகம் மட்டும் போதும்.மற்றது ஸ்பேர்தான். ஆனால், இது ஸ்டிரைக் செய்தால் நாம் அம்பேல்தான்.

ஒவ்வொரு சிறுநீரகத்துக்கு உள்ளேயும் சுமார் 250 – 1000 நெப்ரான்கள் உள்ளன. இவைகள் தான் சிறுநீர் வடிகட்டிகள். இவை ஒவ்வொன்றின் உள்ளேயும் ஏராளமான இரத்த தந்துகி முடிச்சுக்கள் காணப்படுகின்றன. ஒரு நெப்ரானின் அளவு 500 மி.மீ மட்டுமே! இவைகளின் மொத்தப் பரப்பு சுமார் 5-8 மீ. நம் உடலின் மொத்தப் பரப்பை விட 4-5 மடங்கு அதிகம். ஆனால், இந்த நெப்ரான்களில் உள்ள நூல் போன்ற குழாய்களை நீட்டினால் அதன் நீளம் சுமார் 70-100மீ தூரம் வரை போகும். ‘என்ன சும்மா டுமீல் விடுறீங்க’ என்று சொல்கிறீர்களா… அப்படி ஏதும் இல்லையப்பா, அதுதான் உண்மை.

நெப்ரான்களுக்கு உள்ளே மேருல்லஸ் என்ற இரத்தத் தந்துகிகளின் முடிச்சு உள்ளது. சிறுநீரகத்துக்குச் செல்லும் இரத்தத்திலிருந்து உடலின் கழிவுப்பொருள் உப்பு, குளுகோஸ், அமினோ அமிலம், கொழுப்பு நீர், ஹார்மோன்கள், நச்சுப்பொருட்கள் மற்றும் நீங்கள் உட்கொண்ட மருந்துகளின் மிச்ச சொச்சங்கள் போன்றவற்றை வடிகட்டிப் பிரித்து எடுப்பது இதுதான். இதன் செயல்பாடு மிகவும் ஆச்சரியமானது. இங்கே ஒரு நிமிடத்துக்கு சுமார் 1 லிட்டர் இரத்தம் வருகிறது. 5 நிமிடத்துக்குள் உடலின் அவ்வளவு இரத்தமும் இங்கே வந்து வடிகட்டப்பட்டு இதயத்துக்கு அனுப்பப்படுகிறது.

ஒரு நாளில் இந்த நெப்ரான்கள் சுமார் 180 லிட்டர் திரவத்தை வடிகட்டுகின்றன. ஆனால், சிறுநீரகம் வருவது சுமார் 1-15 லிட்டர் மட்டுமே. மற்ற 178.5 லிட்டர் மீண்டும் உடலுக்குள் உட்கிரகிக்கப் படுகிறது. அதாவது, 99% நீர் மற்றும் உடலுக்குத் தேவையான அனைத்துப் பொருட் களும் உட்கிரகிக்கப் படுகின்றன. ஒரு நிமிடத்தில் 3 லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்படுகிறது.

நீர்… என்னென்ன செய்தாலும் உயிர் காக்கவே!

சிறுநீரகம் 24 மணி நேரத்தில் 1,300 கிராம் சோடியம் குளோரைடு என்ற சாதாரண உப்பு, 400 கிராம் சோடியம் பை கார்பனேட், 180 கிராம் குளுகோஸ் மற்றும் பிற வேதிப் பொருட்களை வடிகட்டுகிறது. வடிகட்டும் திரவத்திலுள்ள சோடியத்தை எஞ்சியோடென்சின் 2 என்ற ஹார்மோன் கட்டுப்படுத்து கிறது. இங்கு வடிகட்டும் திரவத்தில் இருந்து 97% சோடியம் நீக்கப்படுகிறது. கடைசியில் உள்ள 3% தான் உடலின் நீர்த்தேவையை சமனப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் உடலில் இருக்கும் நீரானது வியர்வை, சிறுநீர் ஆகிய பல்வேறு வகையில் விரைவில் வெளியேறுகிறது. அதனால், உடலில் இருக்க வேண்டிய நீரை சமப்படுத்த அதிக தாகம் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் நமது தசைகள் சுருங்கிவிடுவதால் தாகம் எடுப்பது குறைகிறது. கோடைகாலத்தில் இது எதிர் மாறாக செயல்பட்டு உடனே நீரைக் குடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் கோடைக் காலங்களில் எவ்வளவு நீரைக் குடித்தாலும் நல்லதுதான். தேவையற்ற நீரை உடலே வெளியேற்றிவிடும்.

வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் வந்த உடனே தண்ணீரைக் குடிக்காமல் நமது உடல் வீட்டின் உள் வெப்ப நிலைக்கு சமநிலை அடைந்ததும் நீரைக் குடிக்க வேண்டும். அப்போதுதான் வேறு ஏதும் பிரச்னைகள் ஏற்படாது. அதிக நீர் குடியுங்கள்… சிறுநீரகத்தின் வேலையை எளிதாக்குங்கள்.

தண்ணீரை கொதிக்க வைத்து பின்பு குளிர வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. எனவே, சுட்டீஸ்… கோடையை சமாளிக்க நிறைய தண்ணீர் குடியுங்கள்.

நன்றி:- பேரா சோ.மோகனா

நன்றி:- சு.வி

மருதாணி அழகில் ஒரு ஆபத்து!


மருதாணி அழகில் ஒரு ஆபத்து!

இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கேமியா) என்னும் ஒருவித ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.

ஆய்வாளர் இனாம் ஹசன் கூறுகையில், `ஆண்களும், பெண்களும் ஒரே சூழலில் வசிக்கிறோம். ஒரேவித உணவையே உண்கிறோம். ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் ஏ.எம்.எல். பாதிப்பு ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் மருதாணி வரைந்திருப்பது மட்டுமே’ என்றார்.

நன்றி:-தினத்தந்தி

30 வகை சீஸன் சமையல்


மலிவு விலையில் வாங்கலாம்….மணக்க மணக்க சமைக்கலாம்…
“நம்ம நாட்டுக்குனு ஆயிரம் ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கு. அதுல ரொம்ப ஸ்பெஷல்னா… வருஷம் முழுக்க சூரியஒளி படுறது நம்ம நாடுதான். அதனாலதான் சீஸனுக்கு ஏத்த மாதிரி வெரைட்டி வெரைட்டியா காய்கறி, பழமெல்லாம் விளையுது. நம்ம நாட்டுல வாழறவங்க கொடுத்து வெச்சவங்க…”

– மெரீனா பீச்சின் அதிகாலை வாக்கிங்கில், சீனியர் சிட்டிசனான என்.ஆர்.ஐ. மாமா-மாமி இருவரும் சிலாகித்து சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகள் இவை. உலகத்தை வலம் வந்தவர்கள் சொல்கிற வார்த்தைகளாயிற்றே… உண்மையாகத்தானே இருக்கும்!

அதிலும், நமக்கெல்லாம் பிடித்த பச்சைப் பசேல் காய்கறிகள், வகை வகையான பழங்கள் எல்லாம் விளைந்து தொங்குவது… கோடைக்காலமான இந்த சீஸனில்தான்! மாம்பழம், பலாப்பழம், தர்பூசணி, தக்காளி, புடலங்காய் என்று சந்தைகளில் வந்து குவியும் பெரும்பாலான வகை பழம் மற்றும் காய்கறிகள்… மலிவான விலையிலேயே கிடைக்கின்றன (சீஸனில் மட்டும்) என்பது இன்னும் சிறப்பு.

ஆனால், ‘மலிவாகக் கிடைக்கிறதே’ என தினமும் ஒரேமாதிரி சமைத்தால்… ‘நாக்கே செத்துப் போச்சுப்பா…’ என்ற புலம்பல் ஒலி கேட்க ஆரம்பித்துவிடும் வீட்டில்! ஆனால், கோடைக்கென்றே ஸ்பெஷலாக விளையும் காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமாக சமைத்து, ”எல்லோரும் சப்புக்கொட்டி சாப்பிடுவதற்கு 100% நான் உத்தரவாதம்” என்றபடியே பிரத்யேக சீஸன் ரெசிபிகளை இங்கே விருந்தாக்குகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

ச்சும்மா சமைச்சு அசத்துங்க…!

தக்காளி ஜாம்

தேவையானவை: தக்காளி – ஒரு கிலோ, சர்க்கரை – 3 கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்.

செய்முறை: பழுத்த தக்காளிப் பழங்களை நன்கு கழுவவும். சூடான நீர் உள்ள பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு, 2 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, பழங்களை எடுத்து உரிக்க, தோல் எளிதாக வந்துவிடும். தோலுரித்த பழங்களை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதையும் சர்க்கரையையும் சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஜாம் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ஆறியதும், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இதை சுத்தமான காற்றுபுகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

பூரி, சப்பாத்தி, அடைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது இந்த ஜாம்!

வெள்ளரி – தக்காளி -மிளகு சாலட்

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகள் – 2 கப், பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், தக்காளித் துண்டுகள் கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் மிளகுத்தூள், உப்பு தூவி மீண்டும் ஒருமுறை கலந்து பரிமாறவும்.

இது, சத்து நிறைந்த காலை சிற்றுண்டி; வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்றது!

தக்காளி வடாம்

தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், வேக வைத்து அரைத்த தக்காளிச் சாறு – 5 கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் விழுது – 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை: முதல் நாள் இரவே ஜவ்வரிசியை ஊற வைக்கவும். தக்காளி சாறுடன் பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். ஊற வைத்த ஜவ்வரிசியை மிக்ஸியில் நைஸாக அரைத்து அதில் சேர்த்துக் கிளறவும். கூழ் பதம் வந்ததும், கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஆற வைக்கவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரில் லேசாக எண்ணெய் தடவி, சிறிய கரண்டியால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் விடவும். வெயிலில் 2 அல்லது 3 நாட்கள் காய வைத்து எடுக்க… கலர்ஃபுல் தக்காளி வடாம் ரெடி!

தக்காளி பர்ஃபி

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், துண்டுகளாக்கப்பட்ட முந்திரிப் பருப்பு – அரை கப், வெனிலா எசன்ஸ் – ஒன்றரை டீஸ்பூன், நெய் – 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: தக்காளிப் பழங்களைக் கழுவி, தண்ணீரில் 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஆறியதும், பழங்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, ஜூஸ் வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளிச் சாறைப் போல், 2 மடங்கு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். அடி கனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் வடிகட்டிய தக்காளிச் சாறு, சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் வைத்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அனைத்தும் ஒன்றாகக் கலந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது, முந்திரித் துண்டுகளையும், வெனிலா எஸன்ஸையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி… நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

வேப்பம் பூ வத்தல்

தேவையானவை: வேப்பம் பூ – ஒரு கப், தயிர் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம் பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதை, தயிரில் கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அந்தப் பூவை வெயிலில் 2, 3 நாட்கள் காய வைத்து, ஈரமில்-லாத காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

தேவைப்படும் போது, நெய் அல்-லது எண்-ணெயில் பொரித்து, சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். குடற்புழு பிரச்னைக்கு சிறந்த மருந்து இது!

கொத்தவரங்காய் வத்தல்

தேவையானவை: கொத்தவரங்காய் – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கொத்தவரங்காயை காம்பு ஆய்ந்து, நன்றாகக் கழுவிக் கொள்ளவும். குக்கரில் கொத்தவரங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், தண்ணீரை வடித்து கொத்தவரங்காயை ஒரு துணியில் பரப்பவும். வெயிலில் இதனை 2, 3 நாட்கள் காய வைத்து எடுத்து, ஈரமில்லாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். இந்த வத்தலை குழம்புக்கும் பயன்படுத்தலாம்.

லெமன் சிரப்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 2 கப், சர்க்கரை – 1 கப்.

செய்முறை: எலுமிச்சைச் சாறையும் சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து கெட்டியான கண்ணாடி பாட்டிலில் ஊற்றவும். அந்த பாட்டிலின் வாய்ப்புறத்தை மெல்லிய துணியால் கட்டி தினமும் வெயிலில் வைத்து எடுக்கவும். இதேபோல் 10 நாட்கள் வைக்க எலுமிச்சை – சர்க்கரை கலவை, கெட்டியான ‘சிரப்’ போல் ஆகிவிடும். இதனை காற்றுபுகாதவாறு இறுக்கமாக மூடி வைக்கவும்.

தேவைப்படும்போது, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு இந்த ‘சிரப்’ கலந்து, ஐஸ் க்யூப் போட்டு ஜூஸ் போல குடிக்கலாம்!

இளநீர் புட்டிங்

தேவையானவை: சைனா கிராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன், இளநீர் – ஒரு கப், மில்க்மெய்டு – ஒரு டின், காய்ச்சி, ஆற வைத்த பால் – முக்கால் லிட்டர், தேங்காய் வழுகல் – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், சர்க்கரை – அரை கப்.

செய்முறை: ஒரு கப் தண்ணீரில் சைனா கிராஸை கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும். அது முழுமையாகக் கரைந்ததும் இறக்கி, இளநீர் சேர்க்கவும். அடி கனமான பாத்திரத்தில் பால், மில்க்மெய்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறவும். சர்க்கரை கரைந்ததும், சைனா கிராஸ் – இளநீர் களவையை அதில் சேர்த்து நன்கு கிளறி… உடனே இறக்கவும். தேங்காய் வழுகலை சேர்த்து ஒரு அகலமான கண்ணாடி பாத்திரத்தில் விட்டு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன் கடாயில் சிறிதளவு சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி செட் ஆன புட்டிங் மீது தூவிப் பரிமாறவும்.

இளநீர்- வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை: இளநீர் – 2 கப், தேங்காய் வழுகல் – ஒரு கப், வாழைப்பழம் – 1, கெட்டித் தயிர் – அரை கப், காய்ச்சி, ஆற வைத்த பால் – கால் கப், சர்க்கரை – அரை கப்,

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மிக்ஸியில் சேர்த்து, நன்றாக அடித்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று பரிமாறவும்.

கீரை வடை

தேவையானவை: அலசி, ஆய்ந்து, பொடியாக நறுக்கிய கீரை – 2 கப், கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு, ரவை – தலா அரை கப், இஞ்சித் துருவல் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சமையல் சோடா – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மிளகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒன்றாக சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனை 10 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதில் சிறிய உருண்டை எடுத்து, வட்டமாக வடை போல தட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு வடையையும் செய்து, ஆவியில் வேக வைத்துப் பரிமாறவும்.

இது, வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான வடை!

மாங்காய் பருப்பு மசியல்

தேவையானவை: நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 4, சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் மாங்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், 2 பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்ததும், வேக வைத்த துவரம்பருப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து நன்கு கலக்கி இறக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மீதம் உள்ள 2 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, மாங்காய்-பருப்பு கலவையில் கொட்டிக் கலக்க… மாங்காய் பருப்பு மசியல் ரெடி!

பப்பாளிக்காய் மிளகுக் கூட்டு

தேவையானவை: தோல் சீவிய பப்பாளிக்காய்த் துண்டுகள் – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் தண்ணீர் விட்டு பப்பாளித் துண்டுகள், பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சேர்த்து வறுத்துக் கொள்ளவும். ஆறியதும், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை, வேக வைத்த பப்பாளியுடன் சேர்த்து, உப்பு போட்டு லேசாகக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து அதில் கொட்டிக் கலந்து பரிமாறவும்.

தேங்காய்ப் பால் – பனீர் கறி

தேவையானவை: இளநீர் – ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய தேங்காய் வழுகல் – அரை கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், நறுக்கிய தக்காளி – அரை கப், பனீர் துண்டுகள் – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்ததும், இளநீர் விட்டுக் கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விட வும். கொதித்து வரும்போது, பனீர் துண்டு கள், தேங்காய் வழுகல் சேர்த்து, உப்பு கலந்து மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விடவும். தேங்காய்ப் பால் சேர்த்து, ஒருமுறை கொதித்தும் இறக்கவும்.

சப்பாத்தி, பூரி, பரோட்டாவுக்குத் தொட்டுக்கொள்ள சிறந்த சைட் டிஷ் இது.

கிர்ணிப் பழ ஸ்வீட் சாலட்

தேவையானவை: கிர்ணிப் பழம் – ஒன்று, வெல்லம் – கால் கிலோ.

செய்முறை: கிர்ணிப் பழத்தை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை சீவி, பழத்துடன் கலக்கவும். பழமும்
வெல்லமும் ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலந்ததும் எடுத்து, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, ‘ஜில்’லென்று பரிமாறவும்.
இரும்புச் சத்து நிறைந்த சாலட் இது. கோடை வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மாம்பழ பாஸந்தி

தேவையானவை: பால் – ஒரு லிட்டர், மீடியம் சைஸ் மாம்பழம் – 5, சர்க்கரை – ஒன்றரை கப்.

செய்முறை: மாம்பழத்தின் தோல், கொட்டை நீக்கி மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்; அரைத்த கூழ் ஒரு கப் இருக்க வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சி, மேலே படியும் ஏட்டை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, முதல்முறை ஏடு வந்ததும் எடுத்து விட்டு, மறுபடியும் காய்ச்சி… ஏடு படிந்ததும் எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் பாலும் பாதியாக சுண்டி விடும். பாஸந்திக்கு தேவையான ஏடும் கிடைத்து விடும். பிறகு, சுண்டிய பாலில் மாம்பழக் கூழ், சர்க்கரை சேர்த்துக் கிளறி உடனே அடுப்பை அணைத்து, பாத்திரத்தை இறக்கவும். எடுத்து வைத்துள்ள பால் ஏட்டை சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க… அசர வைக்கும் அற்புதமான மாம்பழ பாஸந்தி தயார்!

பலாக்காய் வறுவல்

தேவையானவை: சிறிய பலாக்காய் – ஒன்று, மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தரையில் பேப்பரை விரித்து, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பலாக்காயின் மேல் இருக்கும் தோல், நார் ஆகியவற்றை நீக்கி சுத்தப்படுத்த-வும். கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பலாக்காய்களைப் போட்டுப் பொரிக்கவும். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கரைத்து, அதன் மீது தெளிக்கவும். பொரியும் ஓசை அடங்கியதும் கரண்டியால் வடிகட்டி எடுக்க.. மொறுகலான பலாக்காய் வறுவல் மணக்க மணக்க ரெடி!

பலாக்காய் ஊறுகாய்

தேவையானவை: பொடியாக நறுக்கிய பலாக்காய்த் துண்டுகள் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் – தலா 1, சோம்பு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பலாக்காய் துண்டுகளை வேக வைத்து, தண்ணீரை வடிக்கவும். பலாக்காய் துண்டுகளை துணியால் நன்றாக ஈரம் போக ஒற்றி எடுத்து உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மிக்ஸியில் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துப் பொடிக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடித்த பொடியை சேர்த்து வறுத்து… வேக வைத்த பலாக்காய் துண்டுகளைப் போட்டு அடுப்பை அணைக்கவும். நன்றாகக் கலந்து இறக்கவும். ஆறியதும், சுத்தமான பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

பலா பிஞ்சு பொரியல்

தேவையானவை: பிஞ்சு பலா – ஒன்று, தேங்காய் துருவல் – அரை கப், பாசிப்பருப்பு – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: பலாக்காயை தோல் நீக்கி, நார் எடுத்து நன்றாக சுத்தம் செய்து… சுளைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரை வேக்காடு பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து நறுக்கிய பலா துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து கொஞ்ச நேரம் வேக விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், அடுப்பை அணைத்து தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்க… பலா பிஞ்சு பொரியல் ரெடி!

மாம்பழக் குழம்பு

தேவையானவை: நீலம் வகை மாம்பழம் (சிறியது) – 5, துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: புளியை ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். வடிகட்டிய புளிக் கரைசலை சேர்த்து அதில் மாம்பழம் சேர்க்கவும். உப்பு சேர்த்து, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் வேக விடவும். இன்னொரு வெறும் கடாயில் துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துப் பொடிக்கவும். அந்தப் பொடியை குழம்புடன் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும். மாம்பழம் வெந்து விட்டால் தோல் நன்றாக சுருங்கியிருக்கும். இந்தப் பதத்தில் இறக்கிப் பரிமாறவும்.

மாங்காய் எம்மி சட்னி

தேவையானவை: தக்காளி, மாங்காய் – தலா 1, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பூண்டு – 4 பல், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாங்காயைத் தோல் சீவி கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும். மாங்காய், தக்காளி, பூண்டு, வறுத்த கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க… சட்னி ரெடி!

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற சட்னி இது; சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.

பலாக்கொட்டை பொடி

தேவையானவை: பலாக்கொட்டை – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பலாக்கொட்டையை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டுக் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்து.. மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் வேக வைத்த பலாக்கொட்டைகள் சேர்த்து, ஒருமுறை சுற்றி எடுக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

பலாப்பழ இலை அடை

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், பலாச்சுளை (நறுக்கியது) – அரை கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி – தலா கால் டீஸ்பூன், காய்ந்த வாழை இலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்கும்போது நறுக்கிய பலாச்சுளைகளைச் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும், தண்ணீரை வடித்து வெல்லத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கெட்டியாகும் வரைக் கிளறவும். ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால், பலாப்பழ பூரணம் ரெடி!

இன்னொரு கடாயில், தண்ணீரைக் (ஒரு கப் அரிசி மாவுக்கு ஒண்ணேகால் கப் தண்ணீர் என்ற விகிதத்தில்) கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் வைத்து, உப்பு சேர்த்து, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் கிளறவும் இளஞ்சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்ட அடைகளாகத் தட்டவும். நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து, இலையை மடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு அடையையும் தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்க, வாழை இலை வாசனையோடு, வித்தியாசமான சுவையில் பலாப்பழ இலை அடை தயார்.

பலாப்பழ எனர்ஜி பாயசம்

தேவையானவை: பலாச்சுளை – 10, தேங்காய்ப் பால் – ஒரு கப், அவல் – அரை கப், செர்ரி பழம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் பழக்கடைகளிலும் கிடைக்கும்) – அரை கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: தேங்காய்ப் பாலில் அவலை ஊற வைக்கவும். நறுக்கிய பலாச்சுளை, செர்ரி பழங்களை ஒன்றாக்கி, மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பழ பேஸ்ட்டுடன் ஊற வைத்த அவல், தேன் சேர்த்துக் கலக்கவும். முந்திரித் துண்டுகளை வைத்து அலங்கரித்துப் பரி-மாறவும்.

எளிதாகத் தயாரித்து காலை, மாலை சிற்றுண்-டியாக உண்ணலாம்!

மேங்கோ டாஃபீ

தேவையானவை: தோல், கொட்டை நீக்கி அரைத்த மாம்பழக் கூழ் – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – முக்கால் கப்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மாம்பழக் கூழ், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை ‘சிம்’மில் வைத்துக் கிளறவும். கெட்டியான பதத்தில் வந்ததும், இறக்கி ஆற விடவும். ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாக்லேட் வடிவத்தில் உருட்டி வைக்க… உடலுக்கு கெடுதல் செய்யாத ஹோம் மேட் சாக்லேட் ரெடி!

பனானா ஈஸி குல்ஃபி

தேவையானவை: பச்சை (அ) ரஸ்தாளி வாழைப்பழம் – 2, மில்க் மெய்ட் – ஒரு டின், முந்திரி, பாதாம் பருப்பு – தலா 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை: வாழைப்பழத்தை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பேஸ்ட்டுடன் மில்க் மெய்ட், பாதாம், முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனை, குல்ஃபி அச்சுகளில் நிரப்பி, ஃப்ரீஸரில் வைத்துக் கெட்டியாக உறைந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

கீரை மோர்க் கூட்டு

தேவையானவை: ஆய்ந்து, அலசிய முளைக்கீரை – 2 கப் (எல்லா கீரையிலும் செய்யலாம்), தயிர் – ஒரு கப், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, குண்டு மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையுடன் உப்பு சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். ஊறிய பருப்புடன் காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய குண்டு மிளகாய் தாளிக்கவும். அதில் வேக வைத்த கீரை, அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். எல்லாம் கலந்து ஒன்றாக வந்ததும், இறக்கி.. தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இது, உடலுக்கு குளிர்ச்சி தரும்; வெயிலுக்கு ஏற்ற கூட்டு.

மாம்பழ புலாவ்

தேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், மாம்பழக் கூழ் – ஒரு கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2, காய்ந்த மிளகாய் – 2, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசுமதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அடுப்பை ’சிம்’மில் வைத்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வறுக்கவும். மாம்பழக் கூழை அதனுடன் சேர்த்துக் கிளறி, ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆறியதும் எடுத்துப் பரிமாறவும்.

தர்பூசணி பாயசம்

தேவையானவை: தர்பூசணித் துண்டுகள், கண்டன்ஸ்டு மில்க், தேங்காய் பால், சர்க்கரை – தலா ஒரு கப், முந்திரி, திராட்சை – தலா 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – தேவையான அளவு

செய்முறை: கடாயில் நெய் விட்டு திராட்சை, முந்திரி வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சர்க்கரையை தண்ணீர் விடாமல் போட்டு, அது கரைந்து பிரவுன் கலரில் வந்ததும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் பால், ஏலக்காய்தூள், வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். தர்பூசணித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல், திராட்சை – முந்திரிக் கலவையை விட்டுக் கலந்து பரிமாறலாம்; ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

இது, நீர்க்கடுப்பை குறைக்கும்.

மாம்பழம் – பேரீச்சம்பழக் கொழுக்கட்டை

தேவையானவை: பெரிய மாம்பழம் – ஒன்று (துண்டுகளாக நறுக்கியது), துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், பேரீச்சம்பழம் – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,

மேல் மாவுக்கு: மைதா – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவு: ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பூரணம்: தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகள், வெல்லம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம்பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கையால் நன்றாக பிசைய… பூரணம் ரெடி!

மைதா மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, நடுவில் பூரணம் வைத்து, மூடி ஆவியில் வேக வைக்கவும். அல்லது சிறிய பூரிகளாக இட்டு நடுவில் பூரணம் வைத்து மூடியும் கொழுக்கட்டையாக செய்து ஆவியில் வேக வைக்கலாம்.

நார்ச்சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்த இது, சிறந்த மாலை நேர மாலை சிற்றுண்டி!

வெள்ளரிக்காய் சாப்ஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், ஆம்சூர் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் – 4, கறுப்பு உப்பு (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, நெய் – தேவையான அளவு.

செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி, சிறிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி… அதில் வெள்ளரித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். தண்ணீர் வற்றியதும், கொடுத்துள்ள எல்லாத் தூளையும் சேர்த்துக் கிளறவும். பிறகு பச்சை மிளகாய், கறுப்பு உப்பு, சர்க்கரை, கொத்தமல்லியை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கிளறி இறக்க.. சுவையான வெள்ளரிக்காய் சாப்ஸ் தயார்!

தொகுப்பு: நாச்சியாள்

நன்றி:- சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்


‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா?’

“தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவுபடுத்துங்களேன்…”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.

வாரங்களுக்கிடையே (நாலரை மாதங்கள் – ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும்.

கருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் (உங்கள் மருமகள், இந்த வகையில் இருக்கலாம்). ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.

ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை. எனினும், ஸ்கேன் பரிசோதனையில் சில கவனக்குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களது டாக்டரின் பரிந்துரை அன்றி நீங்களாக ஸ்கேன் பரிசோதனைக்கு முயலக்கூடாது. அல்ட்ரா சவுண்ட், சி.டி., எம்.ஆர்.ஐ., நியூக்ளியர் என பலவகையான ஸ்கேன்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மட்டுமே கர்ப்பவதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட்டிலேயே நுணுக்கமாக மேற்கொள்ளப்படும் ‘டாப்ளர்’ பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை கர்ப்பவதிகள் தவிர்க்க வேண்டியவையாகும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு… தலைவலி, வலிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் கோளாறு, வயிற்றில் கல், எலும்பு பிரச்னை என வேறுவிதமான கோளாறுகள் இருந்து, அவற்றுக்காக பலவகைப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், கர்ப்பத்தை பாதிக்காத வகையில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளும் பொருட்டு கர்ப்பம் பற்றிய எல்லா தகவல்களையும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிப்பது நல்லது. ஒருவேளை, சம்பந்தப்பட்டவர் உடலில் உலோகத்துண்டுகள் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருப்பின், அது குறித்தான விவரங்களையும் சொல்லிவிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் படுகவனமாக இருப்பது அவசியம்.”

பிள்ளையைப் பிடித்தாட்டும் ‘பிங்க்’ நிற மோகம்… தப்பிக்க என்ன வழி?’

“எட்டு வயதாகும் என் மகளுக்கு சிறு வயது முதலே பிங்க் நிறம் என்றால் உயிர். தான் உடுத்தும் உடை, விளையாடும் பொருட்கள், சுற்றுப்புறம் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருந்தால் அவள் திருப்தியடைந்ததால், நாங்களும் அதை ஊக்குவித்தோம். ஆனால், அவளின் இந்த ஆசை வளர்ந்து இப்போது அவள் ‘பிங்க் மோகம்’ என்ற நிலையில் இருக்கிறாள். உதாரணத்துக்கு, பிங்க் நிற ஆடை அணிந்தவர்களையே நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறாள். அவள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் அனைவருமே பிங்க் நிறத்தில் உடுத்த வேண்டும் என்பதுடன், சுவர் வண்ணம், வீட்டுப் பொருட்கள் என அனைத்துமே பிங்க்-ஆக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாள். இந்த பிங்க் மாயையில் இருந்து அவளை எப்படி மீட்பது?

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது

அடிக்கடி கை கழுவுவது, பார்க்கும்போதெல்லாம் ஜன்னல் கம்பிகளை எண்ணுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். இப்படி மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ணங்கள் ஆரம்பத்தில் சந்தோஷத்தை தந்தாலும், நாளடைவில் கசந்துபோய் அதிலிருந்து விடுபட முனைந்தாலும் முடியாது தவிர்ப்பார்கள். அநேகமாக உங்கள் குழந்தையும் இந்த ‘எண்ண சுழற்சி’ நோயின் பிடியில் இருக்கலாம்.

குழந்தையின் சந்தோஷத்துக்காக இதுவரை பிங்க் நிறத்தை ஊக்குவித்தது போதும். இனி, அந்த வலையிலிருந்து அவள் மீள்வதற்கான முயற்சிகளை எடுங்கள். குழந்தையுடன் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உரிய கவுன்சிலிங் கொடுப்பார். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து சிட்டிங்குகள் தேவைப்படும். குழந்தைக்கு மாத்திரைகள் இன்றி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு, அதன் பிங்க் மோகத்தை படிப்படியாக குறைத்து, குணப்படுத்திவிடலாம். இரண்டு அல்லது மூன்று மாதத்தில் குழந்தை பிங்க் நிறத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவாள்.”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்