தொகுப்பு

Archive for ஏப்ரல் 24, 2010

இக்கரைக்கு அக்கரைப் பச்சை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


இக்கரைக்கு அக்கரைப் பச்சை;
என்றும் அலைபாயுமே மனோயிச்சை

சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோஷத்துக்கு எதிரி கவலை

சுதந்திரத் தாய் நாட்டிலே
சுகம் உண்டு; செல்வம் இல்லை

இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?

எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால்
இறைவனே இல்லை என்று

சொல்லி விடுவான் மனிதன்; அதனால்
சொற்ப வாழ்வே இப்படித்தான்

இல்லாரும் உள்ளோரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய நியதி

நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
இன்று மட்டுமே உண்மை;
இதனை அடைந்தால் நன்மை