தொகுப்பு

Archive for ஏப்ரல் 19, 2010

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்


அந்தந்த சீசன்ல அதிகமா விளையற பொருட்களை வெச்சு விதவிதமா சமைச்சு, வேணுங்கற அளவுக்குச் சாப்பிடறது கிராமத்து மண்ணுக்கே உள்ள சிறப்புகள்ல ஒண்ணு.

அப்படி, இப்போ மலிஞ்சு கெடக்கற மாங்காயை வெச்சு ஒரு சமையல் குறிப்பைப் பார்க்கலாமா..?

……………………………………………………………

மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி

எந்த வகை மாங்காய்னாலும் சரி.. ஒரு மாங்காயை எடுத்துக் கழுவி தோலோடவே சின்னச் சின்ன துண்டங் களா நறுக்குங்க. அரை கப் பாசிப் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவெச்சு எடுங்க. குழையக்கூடாது.

பருப்பு நல்லா வெந்த பிறகு, நறுக்குன மாங்காய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு இதையெல்லாத்தையும் அதுல சேர்த்து மாங்காய் மசியற வரைக்கும் வேகவைங்க.

முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க வைங்க. வெல்லம் கரைஞ்சு கொதிச்சதும் வடிகட்டி, அதை மாங்காய் பருப்பு கலவையோட சேர்த்து இன்னும் அஞ்சு நிமிஷம் கொதிக்க வெச்சு இறக்குங்க.

வடை சட்டில ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து தாளிச்சு, மாங்காய் கலவைல கொட்டிக் கிளறுங்க.

இனி சாப்பிடவேண்டியதுதான்.

பாசிப் பருப்போட மணம், மாங்காயோட புளிப்பு, வெல்ல இனிப்புனு கலந்து கட்டி ரொம்ப ருசியா இருக்கும், இந்த மாங்காய் பாசிப்பருப்பு பச்சடி!

பொதுவா பச்சடின்னாலே மாங்காய், மிளகாய், வெல்லம் போட்டுத்தான் பண்ணுவோம். ‘உடம்புச் சூட்டை கிளப்பும்’கிறதால சிலபேர் இதத் தவிர்க் கறதும் உண்டு. ஆனா, இந்த பச்சடில மாங்காயோட சூட்டை பாசிப் பருப் போட குளிர்ச்சி அடக்கிடறதால அந்த பிரச்னையே இல்லை.

——————————————————————————–

பால் கொழுக்கட்டை

ஒரு கப் பச்சரிசி மாவை எடுத்து அகலமான ஒரு பாத்திரத்துல போட்டுக்குங்க.

ஒன்றரை கப் தண்ணிய கொதிக்க வெச்சு, அதை மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி கிளறுங்க. கிளறின மாவு கெட்டியா சப்பாத்தி மாவு மாதிரி இருக்கணும்.

பொடிச்ச வெல்லம் ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கோங்க. ஒண்ணேகால் கப் தண்ணில, பொடிச்ச வெல்லத்தைப் போட்டு கொதிக்க வைங்க. கொதிச்சு, வெல்லம் கரைஞ்சதும் வடிகட்டி, மறுபடியும் அடுப்புல வெச்சு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க வைங்க.

ஏற்கெனவே தயாரா வெச்சிருக்கற மாவை தேன்குழல் அச்சுல நிரப்பி, கொதிக்கற வெல்லப் பாகுல பிழியணும். பிழிஞ்ச மாவை ஒரு நிமிஷம் வேக வைங்க. அப்புறமா அதை மெல்லிசு கரண்டி காம்பால லேசா கிளறிவிடுங்க. மாவு கரையாது. ஆனா, சின்னச் சின்ன துண்டா உடையும். உடைஞ்சதும் கிளர்றதை நிறுத்திடுங்க. மறுபடியும் இந்தக் கலவை கொதிக்க ஆரம்பிச்சதும் மிச்சமிருக்கற மாவுல கொஞ்சம் எடுத்து அச்சுல நிரப்பி, வெல்லக் கலவைல பிழிஞ்சு விடுங்க. இதையும் ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் கரண்டி காம்பால லேசா கிளறி உடைச்சுவிடுங்க.

இதேமாதிரி எல்லா மாவையும் பிழிஞ்சு வேக வெச்சதும், தீயைக் குறைச்சு, வெல்லக் கலவைல அரை டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நல்லா கிளறுங்க.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை அகலமான ஒரு தட்டுல விட்டு பரவலா தடவுங்க. அதுல இந்த வெல்ல மாவுக் கலவையைக் கொட்டி சமப்படுத்துங்க. ஆறினதும் விருப்பமான வடிவத்துல வெட்டி எடுத்துச் சாப்பிட லாம்.

ரொம்ப ஜோரா இருக்கும் இந்தக் கொழுக்கட்டை!

இந்தக் கொழுக்கட்டை செய்யறப்ப முக்கியமா கவனத்துல வெச்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னான்னா, மாவை ஒரு தரம் ஒரே ஈடுதான் பிழியணும். ரெண்டு மூணு ஈடாவோ மொத்த மாவையும் ஒரே தரமாவோ பிழிஞ்சு விட்டுட்டா கழி மாதிரி ஆயிடும். மாவும் வேகாது.

தேங்காய் துருவலுக்கு பதில் ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். அப்படி தேங்காய்ப்பால் சேர்க்கறதா இருந்தா வெல்லத்தை அரை கப் தண்ணி சேர்த்து கரைச்சா போதும்.

தேங்காய்ப்பாலுக்குப் பதில் மாட்டுப்பாலை ஊத்தியும் வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையை வெச்சும் இந்தக் கொழுக் கட்டையை செய்யலாம். அது ஒரு தனிச் சுவையா இருக்கும்.

………………………………………………………………..

காப்பரிசி

புட்டரிசிங்கற சிகப்பரிசியை ஒரு கப் அளவுக்கு எடுத்து, அதை கல் உமி போக சுத்தம் பண்ணி, கழுவி வைங்க.

பல்லு பல்லா சன்னமா நறுக்கின தேங்காயை கால் கப் அளவுக்கு எடுத்து, அதை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில லேசா வறுத்து அரிசியோட கலக்குங்க. அதோட, வறுத்த எள் ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை கால் கப் இதையெல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

ஒரு கப் வெல்லத்தை எடுத்து பொடிச்சு, கால் கப் தண்ணி யோட சேர்த்து கொதிக்க வைங்க. கொதிச்சதும் வடிகட்டி மறுபடியும் அடுப்புல வெச்சு காய்ச்சுங்க. நல்லா முத்தின பாகு பதம் வந்ததும் அரிசி கலவையை கொட்டிக் கிளறி இறக்குங்க.

ஆறினதும் பொல பொலனு உதிரும். அப்படியே அள்ளிச் சாப்பிட வேண்டியதுதான்.

கிராமப்புறங்கள்ல நெனச்சப்ப எல்லாம் இதைச் செஞ்சு சாப்பிடுவாங்கனு வைங்க. இருந்தாக்கூட வளைகாப்பு, ஆடிப் பெருக்கு, கோயில் திருவிழா.. மாதிரி விஷேச நாட்கள்ல இந்தக் காப்பரிசி இல்லாத வீடே இருக்காது.

…………………………………………………………………….

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்


வயிற்றுப் பசிக்கு  நாக்கு ருசிக்கு மட்டுமில்லீங்க… உடல் ஆரோக்கியத்துக்கும் கிராமத்து கைமணம் ரொம்ப ஜோருங்க! இயற்கையா கிடைக்கிற பொருட்கள்ல, இதமான சுகம் தர்ற கிராமத்து சமையலுக்கு எப்பவுமே தனி மவுசுதாங்க!

சில ‘ஆரோக்கிய’ ரெசிபிக்களை பார்க்கலாமா?

……………………………………………………………………………………….

முள் முருங்கை அடை

நெஞ்சு சளி, கபம் இதுக்கெல்லாம் அருமருந்து முள் முருங்கை கீரை. அதனால அடிக்கடி அதை சமையல்ல சேர்த்துக்கறது கிராமத்து வழக்கம். ஆனா குழம்பு, கூட்டுனு கொடுத்தா யாரும் அவ்வளவா விரும்பி சாப்பிடமாட்டாங்கனு அடையா செஞ்சு சாப்பிடுவாங்க.

அடைனு சொன்னாலும், செய்யற முறையப் பார்த்தா பூரி மாதிரி இருக்கும். அதனால குழந்தைங்களுக்கும் இதை ரொம்ப பிடிக்கும்.

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்செடுங்க. அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கோங்க.

இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா எடுத்து, உள்ளங்கைல வெச்சு வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம்.

இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும். இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

————————————————————-

பாசிப்பருப்பு சீயம்

முக்கால் கப் பாசிப்பருப்பை எடுத்து மலர வேக வெச்சு, கொஞ்சங்கூட ஈரம் இல்லாதபடிக்கு தண்ணிய வடிச்சுட்டு வைங்க.

அரை கப் பச்சரிசி, அரை கப் உளுந்தை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வெச்சு, நைஸா, இட்லிமாவு பதத்துக்கு அரைச்சு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து எடுத்துக்கோங்க.

பாசிப் பருப்போட முக்கால் கப் சர்க்கரை, அரை கப் தேங்காய் துருவல், அரை டீஸ்பூன் ஏலத்தூள் இதையெல்லாம் கலந்து சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிக்கோங்க. அரிசி மாவுக் கலவைல இதை முக்கியெடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க.

சூடா இருக்கறப்பவே சீயத்தை ரெண்டா வெட்டி அதுமேல பரவலா கொஞ்சம் நெய் விட்டு சாப்பிட்டா ஆஹா.. அந்த சுவைய என்னன்னு சொல்ல?! அபாரமா இருக்கும், போங்க!

இதுக்கு மேல் அலங்காரம், சேர்ப்பு எதுவுமே செய்ய வேண்டாம். அப்படியே கொடுத்தாலே குட்டிப் பிள்ளைங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.

இதுல முக்கியமான விஷயம்.. சர்க்கரை சேர்த்ததுமே பருப்பு கலவை நீர்த்துக்கும். அதனால் அந்தக் கலவைய ரொம்ப நேரம் அப்படியே வெச்சிருக்காம உடனேயே -மாவுல முக்கியெடுத்து பொரிச்சுடணும்.

தேவைப்பட்டா பருப்புக் கலவைல 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலக்கலாம். கலவை கொஞ்சம் கெட்டிப்படும். பாசிப் பருப்போட வேக வெச்சு மசிச்ச கொண்டைக் கடலை, காராமணியும் சேர்க்கலாம். ருசியும், சத்தும் கூடுதலா இருக்கும்.

—————————————————————–

சீம்பால் திரட்டு

கன்னு போட்ட நாலஞ்சு நாளுக்கு மாட்டுக்கு சுரக்கற பாலை வழக்கம் போல நாம உபயோகிக்க முடியாது. சீம்பால்னு சொல்ற அந்தப் பால் அவ்வளவு கெட்டியா புது வாசனையோட இருக்கும். கன்னுக் குட்டிக்கு சத்து கொடுக்கற அந்தப் பாலை திரட்டுப் பால் மாதிரி சுவையா செஞ்சு சாப்பிடறது ஊர் வழக்கம். செய்யறது ஈஸியா இருக்கும். ஆனா சுவை ஓஹோனு இருக்கும். செய்யறது எப்படினு சொல்றேன்..

சீம்பால் (மாடு கன்னு போட்ட ரெண்டாம், மூணாம் நாள் பால்) 2 கப் அளவுக்கு எடுத்து அதுல 1 கப் சர்க்கரை, பொடியா நறுக்கின முந்திரி துருவல் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலத் தூள் 1 டீஸ்பூன்.. எல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

இட்லிப் பானைல தண்ணி ஊத்தி, அதுல பால் கலவை உள்ள பாத்திரத்தை வெச்சு, சன்னமான தீயில அரை மணி நேரம் வேக வைங்க. அப்புறமா கலவைல ஒரு கத்திய சொருகிப் பாருங்க. கத்தில பால் ஒட்டலேனா கலவை வெந்துடுச்சுனு அர்த்தம். அப்போ பாத்திரத்தை இறக்கிடுங்க.

கலவை ஆறினதும் ஒரு தட்டுல கவிழ்த்து சின்னச்சின்ன துண்டுகளா வெட்டி பரிமாறுங்க. எல்லாரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

ஏலத்தூள் வாசனை பிடிக்காதவங்க வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கலாம். கலர்ப் பொடிங்க கலந்து வேகவெச்சுக் கொடுத்தா பிள்ளைங்க குஷியா யிடுவாங்க.

……………………………………………………………………

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

ஒட்டகமே ! ஒட்டகமே ! – பி. எம். கமால், கடையநல்லூர்


ஒட்டகமே ! ஒட்டகமே !
எங்களின் உயிர் சுமந்த
பெட்டகமே ! புத்தகமே !

அகிலத்தின் பேரொளியை
ஆண்டவனின் ஒளித்துளியை
அலுங்காமல் குலுங்காமல்
அரபகத்துப் பாலைகளில்
அதிசயமாய் நீ சுமந்தாய் !
நீ-

“வஹி’ வரும் போதெல்லாம்
வலி தாங்க முடியாமல்
வழியில் படுத்தெழுந்த
வகையறிந்து அதிசயித்தேன் !

எங்கள்
அண்ணல் நபிகளையா
அங்கே நீ சுமந்தாய் ?
இந்த
அண்ட சராசரத்தை
அல்லவா நீ சுமந்தாய் !

பயகம்பர் நபிக்கு
பால் தந்த ஒட்டகமே !
எங்கள் நபிக்கு
உன் பால் தந்து
உபசரித் ‘தாய்’ நீ !

அவரோ
அகிலத்தை
அன்பால் நேசித்து
அருளே நிறைகின்ற
பண்பால் உயரவைத்து
பசிபோக்கிப் பாதுகாத்தார் !

பால் தந்த ஒட்டகமே !
பண்பாட்டு நாயகர்
பயணித்த ஒட்டகமே !
நீங்கள்
உங்கள் குலத்திடையே
உயர் திணை ஆனீர்கள் !
எங்கள் மனப் பரப்பில்
இன்னும் நடக் கின்றீர்கள் !

ஒட்டகமே ! பட்டினியின்
புத்தகமே !
நீ
சுமந்து நடந்தது
எங்களின் பல்கலைப்
பாடப் புத்தகத்தையல்லவா ?

நீ
முதுகினில் தானே
முத்து நபி சுமந்தாய் ?
நாங்களோ
இறுதி நாள் வரையில்
இதயத்தில் அல்லவா
எப்போதும் சுமந்திடுவோம் ?

ஒட்டகமே !
எங்கள் நபி நாயகத்தை
கண்கள் இமை
சுமப்பதுபோல்
கடுவெளியில் நீ சுமந்தாய் !

சுவனத்துப் பூ மலரை
கவனத்துடன் சுமந்ததினால்
பாலை வனக் கப்பல் நீ
பரிணாமம் பெற்றுயர்ந்து
புராக்கை விடவும்
புனிதம் அடைந்து விட்டாய் !

ஒளி சுமந்த ஒட்டகமே !
நீ வழி நடந்த போதெல்லாம்
சூரியச் சூட்டில்
சுழன்றடித்த காற்று எல்லாம்
தென்றலாய் தானே
தெரிந்திருக்கும் உனக்கு ?

அன்று நீ
கஸ்தூரி வாடையில்
கரைந்திருப்பாய் !
கண்கள் எல்லாம்
காட்சிகளில் நிறைந்திருப்பாய் !
மலக்குகள் உனைக்கண்டு
மனம் புழுங்கி இருப்பார்கள்

ஒட்டகமே !
செல்வ நபி நாதரிடம்
சேர்ந்ததின் பின்  தானே
பகுத்தறிவு உனக்குப்
பக்குவப்பட்டது ?
அதனால்  தான்
மதீனத்து மண்ணில்
மன்னரின் இடத்தை
படுத்துக் கிடந்து நீ
பக்குவமாய் சொன்னாய் !
நீ

படுத்த இடத்தில தானே
பள்ளி எழுந்தது ?
ஒட்டகமே! ஒட்டகமே!
ஒளி சுமந்த பெட்டகமே !
நீ

நானாக
இருந்திருக்கக் கூடாதா ?

……………………………………………………

நன்றி:- பீ. எம். கமால்  கடையநல்லூர்

****************************************************************************************

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான  ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.


4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது.  இதுவும்    மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை          பாதிப்படையும்.

6. தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப்    பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான         உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

—————————————————————-

நன்றி:-இனைய நன்பர்

################################################################

நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)

ஷிர்க் என்றால் என்ன?


அஸ்ஸலாமு அலைக்கும். அல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூளிள்ளஹி (ஸல்).  மற்றும் அல்லாஹின் சாந்தியும் சமாதானமும் சஹாபாஹ் (ரலி) பெரு மக்கள் மீதும், தாபியீன்கள், தப’அ THAABIYEENGALUKKUM (ரஹ்), மற்றும் இமாம்கள் (ரஹ்), எனது உஸ்தாது, ஷைகுமார்களின் (ரஹ்) மீதும் உண்டாவதாக.

“வமா தௌபீகீ இல்லா பில்லாஹ்”

இன்றைய நாட்களில், சிலர் அல்லாஹ் உடைய அச்சம் இல்லாமல் சாதாரண முஸ்லிகளை முஷ்ரிக்குகள் என்று வாய் கூசாமல் சொல்லியும் எழுதியும் திரிகிறார்கள். இஸ்லாமும், ஷிர்க்கும் இரு எதிர் எதிரானவைகள் என்பதில் ஐயமில்லை. ஷிர்க்கை நீக்கி மனிதர்களை சுத்தமாக்க வந்தது தான் இஸ்லாம். ஷிர்க் செய்வது கண்டிக்கத்தக்க மேஜர் குற்றம். ஆனால் பொய்யாக வேண்டும் என்று தனது மனம் போன போக்கில் ஒரு முஸ்லிமை முஷ்ரிக் என்று சொல்லுவது கடினமான க்னடிக்கதக்க குற்றம்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “உண்மையில் உங்களில் ஒரு மனிதனை பற்றி நான் பயப்படுவது என்னவென்றால் யார் அதிகமாக அல்லாஹுடைய கலாமகிய அல்-குர்’ஆணை ஓதுகிறார்களோ, அவருடைய முகம் பிரகாசிக்கும், மேலும் அவர் இஸ்லாத்தின் பவர் உடைய பிரதிநிதியாக வருவார். இது அல்லாஹ் உடைய விருப்பம் இருக்கும் வரை தொடரும். பிறகு இவைகள் எல்லாம் அவரிடமிருந்து எடுக்கப்பட்டுவிடும், எப்பொழுது அவர் தாம் ஓதியவற்றை எல்லாம் தனக்கு பின்னால் போட்டு விட்டு, தனது அண்டையரை “முஷ்ரிக்” என்று குற்றம் சுமத்தி வாளை கொண்டு தாக்குவார். எந்த இரண்டும் ஷிர்க் என்ற கணக்கில்  அமையும், அதாவது தக்குகிரவரா அல்லது தக்கப்படுகிரவரா? என்று ரசூல் (ஸல்) அவர்கள் வினவ பட்டார்கள். அதற்க்கு, தாக்குகிறவர் (அடுத்தவர்களை “முஷிர்க்” என்று சொல்லுபவர்) என்று ரசூல் (ஸல்) அவர்கள் பதில் உரைத்தார்கள். இந்த ஹதீத் JAYYID என்ற வகையில் வருகிறது. (ஆதாரம்: தப்சீர் இப்ன் கதீர், VOL 2 P265, AMJID ACADEMY, LAHORE,PAKISTAN).

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபை கொண்டு, மேலே கூறப்பட்ட ஹதீத், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தங்களுடைய மனோ இச்சைக்கு தக்கவாறு அல் குர்’ஆன் வாக்கியத்திற்கு அர்த்தம் செய்து கொண்டு சுன்னது வல் ஜமாஅத் காரர்களை முஷ்ரிக் என்று ஷைத்தான் தௌஹீத் வாதிகள் குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் இணை வைத்தல் என்பது ஏக வல்லவனாகிய இறைவனை போல் “தாத்” திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும் (தன்னில் தானாக தனித்து இயங்கும் சக்தியோடு) மற்றொண்டு இருக்கிறது என்று நம்புவது.  மாற்று மதத்தோர் தாங்கள் வணங்கும் கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும் வணக்கதுகுரியான என நம்ப்கிரார்கள்.  இதுவே இணை வைத்தலாகும். (SHARAH AKAATHUN NASABI)
அல்-குர்’ஆன், அல்-ஹதீத் அடிப்படையில் ஷிர்க் என்றால் என்ன என்று விளக்குவது பொருத்தமாக இருக்கும்.  அதாவது மூன்று வகையான ஷிர்க்குகள் உள்ளது.

1. SHIRK – வணக்கத்தில் (WORSHIP)
2. SHIRK – உள்ளமையில்  (PERSONALITY)
3. SHIRK – குணத்தில்/தன்மையில்  (ATTRIBUTE)

முதல் வகை: அல்லாஹ்வை தவிர்த்து எந்த பொருளையும் அல்லது எந்த மனிதனையும் வணங்க தகுந்தது என்று ஒத்து கொள்வது.

இரண்டாவது வகை: எந்த பொருளையும் அல்லாஹ்வுக்கு சமமாக கருதுவது.

மூன்றாவது வகை: அடுத்தவர்களின் குணங்கள் அல்லாஹ் உடைய குணங்களை போன்று என்று கருதுவது.

அல்லாஹு தஆலா ஷிர்க் ஐ ( WORSHIP) தடுப்பதில்  கீழ் கண்டவாறு எச்சரிக்கிறான்:

1. ஆகவே எவர் தன் இரச்சகனை சந்திக்க ஆதரவுவைக்கிராரோ, அவர் நற்கருமங்களை செய்யவும். தன் இரச்சகனின் வணக்கத்தில் அவர் எவரையும் இணையாகக வேண்டாம். (சூரத்துல் KAHF, VERSE 110)

2. நபியே! நீங்கள் உமது இரச்சகனை தவிர மற்ற யாரையும் வணங்க வேண்டாம். ( SURATHUL BANI ISRAEL VERSE 23)

எதிர் மறையில், உள்ளமையிலும் (PERSONALITY), குணத்திலும் (ATTRIBUTE) SHIRK ஐ பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

1. மேலும் அவனுக்கு நிகராக ஒன்றும்  இல்லை (SOORTHAUL
IKHLAS VERSE 4).

2. அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பஹிங்கர வழி கேட்டில் இருந்தோம்,  அகிலத்தாரின் இரச்சகனான இறைவனுக்கு உங்களை (சிலைகளை) இணையாக ஆக்கி வைத்த போது. (SURAH ASHUR’AA VERSE 97 & 98)

மேலே கூறப்பட்ட ஆயத்துகள் வணக்கத்தில், உள்ளமையில், குணத்தில் ஷிர்க் ஐ காட்டுகிறது. இவைகள் மிக பெரிய மோசமான வரம்பு மீறிய குற்றம்.

ஷிர்க் ஒரு இழி செயல் அல்லது வரம்பு மீறிய செயல் என்று இறைவன் கூருஹிறான். “நிச்சயமாக இணைவைத்தல் மிக பெரிய அநியாயம்” (SURATHUL LUKMAAN VERSE 13)

அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் (சுன்னத் வல் ஜமாஅத்) எந்த விதத்திலும் படைத்தவனுக்கு வணக்கத்திலும், உள்ளமையிலும், குணத்திலும் இணை ஒரு காலமும் வைக்கமாட்டோம். அவ்வாறு தவறாக எங்களை எண்ணுபவர்களை அல்லாஹ் பார்த்து கொள்ளுவானாக என்று அல்லாஹ் இடம் பொறுப்பை விட்டு விடுஹிறோம்.

வணக்கம் (WORSHIP) என்றால் என்ன?

மேலே கூறப்பட்ட மூன்று ஷிர்க் வகைகளிலும் ஏற்படும் சந்தேஹங்களையும், குழப்பங்களையும் அகற்றுவது நல்லது என்று நினைக்கிறோம்:

1.” மிக தாழ்மையோடு தன்னை இறைவனிடம் ஒப்படைப்பது”. – ( BY இமாம் BAGAAWI (RAH) – MUALIM UT-TANZEEL P-22 VOL-1)

2. “THE HIGHEST RANK OF HUMILITY – அதிக பட்ச தாழ்மையுடன் தன்னை ஒப்படைப்பது” – (BY  அல்லாமா அலூசி (RAH) – RUHUL MA’ANI P-86 VOL-1)

3. “வணக்கம் என்பது தாழ்மையின் END LIMIT” – ( BY QAZI BAIDAWI- BAIDAWI – P9 – VOL-1)

4. “கீழ் படிதல் ஒரு வணக்கம்” (IBAADHA) – BY ABU HAYYAN ANDOULISI – AL BAHRUL MUHEET – P23- VOL 1)

மேலும் நிறைய MUFASIRREN கள் இபாதா என்பது மிக தாழ்மையுடன் சிலருக்கு முன்னால் சமர்பிப்பது என்பதை அழுத்தி சொல்வது.

ஆனால் கீழ் கண்ட ஆதாரங்களை கொண்டு வணக்கத்திற்கும், மரியாதைக்கும் வித்தியாசம் உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம்.

1. சஹாபா (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அதிமான தாழ்மை காட்டியது. சஹாபா (ரலி) பெரு மக்கள் காட்டிய தாழ்மையை கீழ் கண்ட நிகழ்ச்சியின் மூலமாக விளக்கினால் தகும். இது வஹ்ஹபிய உலமா தலைவரில் ஒருவரான SAFEE UR RAHMAN – MUBARAK PURI-அவர்களின் வார்த்தை அல்லது ஆதாரத்தின் வெளிப்பாடு:

“உர்வா அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி)  பெரு மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்த பிறகு, தங்களுடைய மக்களிடம் திரும்பி வந்த பிறகு, மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும், மற்றும் மன்னர்  நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை, முஹம்மது (ஸல்) நபிக்கு அவர்களுடைய தோழர்கள் மரியாதை கொடுத்ததை போன்று, கொடுக்க வில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டு கழுவும் பொழுது, அந்த தண்ணீரை சஹாபா (ரலி) பெரு மக்கள் கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல் தங்கள் கைஹளில் ஏந்தி கொண்டார்கள், பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும், தலையிலும் தடவி கொண்டார்கள். மேலும் முஹம்மது (ஸல்) நபி அவர்கள் உத்தரவு ப்ரபித்தால் அதை தலையாய கடமையாக ஏற்று செய்கிறார்கள். முஹம்மது (ஸல்) நபி அவர்கள் பேசும் போது, வாய் மூடி மெளனமாக கேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலி) பெரு மக்கள் ரசூல் (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பாக்காமல் மரியாதை செய்தார்கள்.  (ஆதாரம் – AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORE)

2. தொழுகையில் கையை கட்டி தொழுவதும் (FOLDED ARMS) , ருகுவில் கையை திறந்து தொழுவதும் (OPEN ARMS) ஒரு வகை இபாதத். ஆனால் ரசூல் (ஸல்) அவர்களுக்கு முன்னால், முதலாளிகளுக்கு முன்னால், தாய் தந்தையர்களுக்கு முன்னால் கையை கட்டி (FOLDED ARMS) நிற்பது ஒரு மரியாதையே தவிர வணக்கம் இல்லை. ரசூல் (ஸல்) அவர்களின் முபாரக்கான எச்சிலை முகத்தில் தடவிக்கொள்வது ஒரு அதிகாமாக செலுத்தும் மரியாதையை. அதாவது கையை கட்டி நிற்பதை விட. (சஹாபாக்கள் (ரலி) ரசூல் (ஸல்) காட்டிய மரியாதையை என்ற தலைப்பில் மேற்கூரப்பட்டவற்றை விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்.)

3. மேலும் மக்காஹ் முஷ்ரிகீன்கள் சிலைகளை வணங்கும் பொழுது “நாங்கள் ஏன் சிலைகளை வணங்குஹிறோம் என்றால் அவைகள் எங்களை அல்லாஹ்வின் பக்கத்தில் சேர்த்து வைக்கும் என்பதற்காகவே அன்றி நாங்கள் வணங்கவில்லை. (SURATHUL ZUMAR VERSE – 3)

அதாவது முஷ்ரிகீன்கள் அல்லாஹ்வை வணங்குவதற்கு சிலைகளை தேர்ந்த்டுத்து கொண்டார்கள். ஆனாலும் அவைகளை  (சிலைகளை ) (தாத்தில்) முழுமையாக தன்னாகவே உள்ளமையில் உள்ளது என்று நம்பியதால், அதை வணங்கியவர்கள் வழி கெட்டு போனார்கள். இதை தான் இறைவன் அல் குர்ஆனில் பல இடங்களில் சுட்டி காட்டுகின்றான்.  அவ்வாறு இல்லை என்று வாதிட்டால், கீழ் காணும் ஆயத்துகளுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்: அல் குரான் : 7:117, 3:49, 54:1

திர்மதி (ரஹ்) இமாம் அவர்கள் “கையையும், காலையும் முத்தமிடல்” என்ற பாடத்தில் ஒரு ஹதீதை அறிவிக்கிறார்கள். அவர்கள் சொல்லுகிறார்கள், யூத நாட்டை சேர்ந்த சில மக்கள் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள், ரசூல் (ஸல்) அவர்களிடம் கேள்விகளை கேட்டு விட்ட பிறகு, ரசூல் (ஸல்) அவர்கள் சொல்வதெல்லாம் சரியே என்று ஒப்புக்கொண்டு, ரசூல் (ஸல்) அவர்கள் உண்மையான நபி என்று அறிந்த பிறகு வந்தவர்கள், ரசூல் (ஸல்) அவர்களின் கையையும், காலையும் முத்தமிட்டார்கள். பிறகு ரசூல் (ஸல்) அவர்கள் அல்லாஹ் இன் உண்மையான நபி என்று நற்சாட்சியம் கூறினார்கள்.  இந்த ஹதீத் நசயீ (ரஹ்) இமாம் அவர்களின் “AS-SUNAN”(VOL 7, PAGE 111, HADEETH # 4078), AL IMAAM IBN MAAJAA IN “AS SUNAN” VOL 2 – 1221, HADEEDH # 3705, THIRMADHI IMAAM IN “AS-SUNAN” VOL 5, PAGES 77,305 HADEEDH # 2733, 3144 AND IMAAM AHMED IBN HANBAL IN “AL MUSNAD” VOL 4, PAGE 239,240 AND OTHER MUHADHITHEEN.

IBN KATHEER அவர்கள் சூரத்துல் மாயிதா 101 ஆயத்துக்கு விளக்க உரை எழுதும் பொழுது ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறார்கள். அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் சில வற்றின் மீது கோபமாக இருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் எழும்பி நின்று குனிந்து ரசூல் (ஸல்) அவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களை முத்தம் இடுகிறார்கள். பிறகு உமர் (ரலி) கூறுகிறார்கள், யா ரசூலுல்லாஹ் (ஸல்), நாங்கள் அல்லாஹ்வை எங்களுடைய இறைவனாகவும், உங்களை அல்லாஹ் உடைய ரசூலாகவும் (ஸல்), இஸ்லாம் ஐ எங்களுடைய தீனாகவும், அல் குரானை எங்களுடைய வழிகாட்டியாகவும், தலைவராகவும் சந்தோஷத்துடன் பொருந்தி கொண்டோம். அல்லாஹ் மேலும் உங்களுடன் (ஸல்) நன்மை பாராட்டுவானாக என்று உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சந்தோசம் அடையும் வரை சொல்லி கொண்டே சென்றார்கள். (தப்சீர் இப்ன் கதீர்) மற்ற விளக்க உரையாளர்களும் மேலே சொன்ன நிகழ்வை சொல்லி காட்டு கிறார்கள்.

இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தை முத்தமிட்டதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை என்பது குறுப்பிடத்தக்கது.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் ஊராகிய ‘நிஷாபூர்” வந்த பொழுது, இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களை காண வந்தார்கள். வந்த உடன், இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் புகாரி (ரஹ்) அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு புகாரி (ரஹ்) அவர்களிடம் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் வேண்டியது என்ன வென்றால் ” ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியரே, ஹதீத் கலையின் தலைவரே, ஹதீத் கலையின் டாக்டரே (தபீப்), உங்களின் பாதங்களை முத்தமிட அனுமதி தாருங்கள். (ஆதாரம்: IBN NUQTA IN AT-TAQYID LI MARIFA RUWAT AS SUNAN WAL MASANID,- VOL 1 PAGE 33, DHAHABI IN SIYAR ALAM AN NUBALA –  VOL 12, PAGE 432, 436, NAWAWI IN TAHDHIB AL ASMA WAL LUGHAT – VOL 1 PAGE 88, IBN HAJAR ASKALAANI , MUQADDIMA FATH AL BARI – PAGE 488 AND NAWAB SIDDIQ HASAN QANOOJI IN AL HITTA FIL DHIKR AS SIHAH AS SITTA – PAGE 339.

குறிப்பு : இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் புகாரி (ரஹ்) இமாமை புகழ்ந்ததை வைத்து பார்க்கும் பொழுது நமக்கு தோன்றுவது “ஷாகுல் ஹமீது” என்று பெயரிடல்லாம்.

(மரியாதையை கருதி கையையும், காலையும் முத்தமிடல் என்னும் தலைப்பில் விரிவாக எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.
முக்கியம் கவனிக்க வேண்டியது யாருக்கு மரியாதையை செய்தாலும் அவைகள் தானாக தன்னிச்சையாக அல்லாஹ் உடைய சக்திக்கு அப்பாற்பட்டு  இயங்கும் என்று நம்பாமல் இருந்தால், அது மரியாதை என்ற அடிப்படையில் தான் வரும்.

மேலும் விளக்கம் பின்வருமாறு:

பெருமானார் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த எல்லா விஷயங்களிலும் உள்ளத்தில் அறிந்து உண்மையாக்கி வைப்பது தான் ஈமான் ஆகும். இவ்வாறு உண்மை படுத்துவதை விட்டால் அல்லது மறுத்தால் அவன் காபிர்.

பெரும் பாவம் முமினான அடியானை ஈமானை விட்டும் அப்புரப்படுதாது, ஏனென்றால் ஈமானின் எதார்த்த நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. (SHARAH AQAAIDUN NASABI)

அடுத்து முற்றாக வணக்கங்களை விட்டு விட்டு இருப்பதுவும், பாவங்களை செய்வதுவும், முமினான அடியானை ஈமானை விட்டும் போக்கி விடாது. உதாரணமாக தொழுகையை விட்டால் அவன் காபிறல்ல. ஆனால் கடமையை செய்யாது விட்ட பாவி. அதே நேரத்தில், தொழுவதே கடமை இல்லை என மறுத்தால் அவன் காபிர் என்பதில் சந்தேகமில்லை.  (SHARH FIKHUL AKBAR).

“கடமைகள் புரிவது சுன்னத் வல் ஜமாத்தின் கொள்கை படி ஈமானின் பூர்ணதுவதிற்கு ஷரத்து. அமலை விட்டால் முஸ்லிம் தான், ஆனால் சம்பூரந்தை (முழுமையை) விட்டு விட்டான். (துஹ்பாதுள் முரீத்)

ஷிர்க் இணை வைத்தல் என்பது ஏக வல்லவனாகிய இறைவனை போல் “தாத்” திலும், சிபாத்- தன்மையிலும், அப்-ஆல்-செயல்களிலும் (தன்னில் தானாக தனித்து இயங்கும் சக்தியோடு) மற்றொண்டு இருக்கிறது என்று நம்புவது.  மாற்று மதத்தோர் தாங்கள் வணங்கும் கல், மண், சூரியன், சந்திரன், நெருப்பு, அனைத்தும் வணக்கதுகுரியான என நம்ப்கிரார்கள்.  இதுவே இணை வைத்தலாகும். (SHARAH AKAATHUN NASABI)

“இணை வைத்தல் என்பது தெய்வீகத் தன்மைகளில் இறைவனக்கு கூட்டானவன் இருப்பதாக தரிபடுதுவது.” (SHARAH AKAATHUN NASABI).

“அவர்கள் (இணை வைப்பவர்கள்) அவற்றை வணக்கத்துக்கு உரியவை என்று நம்புவது தான் அவர்களை ஷிர்க் இல் சேர்த்தது.” (SHAHIDHUL HAQ)

மேலும் இவர்களின் விபரீதமான கருத்தை பாருங்கள்:

1. தூரமான இடத்தில இருந்து ஒருவரை அழைக்கும் பொழுது  அழைத்தவன் காபிராகி விடுஹிறான், அழைப்புக்கு செவி ஏற்றவேனும் காபிர்.  (யா சாரிய (ரலி) அல் ஜபல் என்று கூறிய உமர் (ரலி)) (நவூது பில்லாஹி மின்ஹா).

2. அல்லாஹ் ஐ தவிர்த்து பிறரிடம் உதவி கோரக்கூடாது, அவ்வாறு கோரினால் அது ஷிர்காம்.  இப்பூஉலகில் நமது தேவைகளை பிறரிடம் கேட்டு பெறாமல் யாரிருக்க முடியும்?. எந்த தனி மனிதனும் தத்தம் தேவைகளை நிறைவு செய்திட பிறர் ஒருவரது உதவியை நாடித்தானாக வேண்டும். இப்படி உபகாரம் கேட்பவர்கள் எல்லாம் காபிர் என்றால் யார் தான் முஸ்லிம்?

3. அருள் மறை குர்ஆனில் : ஆதம் (அலை) அவர்களுக்கு சஜதாஹ் செய்ய – அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான். இப்படி மரியாதை செய்ய எண்ணி செய்யும் சஜதாஹ் இணை வைத்தல் என்றால் அல்லாஹ் மலாயக்கதுமார்களை (அலை) இணை வைக்க ஏவினான? ஏவி இருந்தால் கட்டளை இட்ட காவலன் அல்லாஹும், சஜ்தா செய்த மலக்குமார்களும் (அலை) காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா).

3. யூசுப் (அலை) அவர்களுக்கு அவர் தம் பெற்றோர் சகோதரர்களும் சஜ்தா செய்தனரே! ஆக சஜ்தா செய்த யாகூப் நபி (அலை) மற்றும் அவர்களின் சகோதரர் களும் காபிர்களா? (நவூது பில்லாஹி மின்ஹா)

இறைவன் ஏதேனும் சமூகத்தை தனக்கு இணை வைக்கும் படி எவுவானா? மார்க்க வல்லுநேர்களே தீர்பளியுங்கள்.

இவ்வாறாக இக்கொள்கை குருடர்கள் கொஞ்சம் கூட இறை அச்சமின்றி நபிமார்களை, அமரர்களை முஷ்ரிக்குகளாக ஆக்கி வந்து இருக்கின்றனர்.

ஆகவே, கீழ் கண்ட ஹதீதை பதிவு செய்து அடுத்த நமது கட்டுரையாகிய “தௌஹீத்’ என்றால் என்ன ? என்பது பற்றி எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

“கடைசி காலத்தில் ஒரு கூட்டம் உண்டாகும், அவர்கள் சிறியவர்களாகவும் அறிவில் அற்பமானவர்களாகவும் இருப்பார்கள், ஹதீதுகளை, பெரியோர்களின் பேச்சுக்களை பேசுவார்கள். குரானை ஓதுவார்கள். ஆனால் அவர்களுடைய ஈமான் அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது, வில்லில் இருந்து அம்பு வெளியே பாய்ந்து செல்வது போல் அவர்கள் சன்மார்க்கத்தில் இருந்து அகன்று போய் கிடப்பார்கள். (ராவி: அலி (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மேலும் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக: ” எனது பிற்கால உம்மத்துகளில் சிலர் ஏற்படுவார்கள் (மற்றொரு ரிவாயது திர்மதி ஷரீபில் வருகிறது) அதிகமாக பொய்யர்களும், எமாற்றுக்காரர்களும் ஏற்பெடுவார்கள் என்பதாக) நீங்களோ உங்களின் மூதாதையர்களோ கேள்விப்பட்டு இராத செய்திகளை அவர்கள் கூறுவார்கள். கிட்டே நெருங்க விடாமல் ஜாக்கிரதையாக அவர்களை விட்டும் நீங்கள் விலகி அகன்று விடுங்கள், இல்லாவிடில் அவர்கள் உங்களை வழி கெடுத்து பித்னா குழப்பத்தில் ஆக்கி விடுவார்கள். (ஆதாரம் முஸ்லிம்)

இவர்களின் கொள்கைக்கும் முஹ்தஜிலா, காரிஜியா களின் கொள்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ” காபிர்கள் அளவில் இறங்கிய ஆயத்துகளை முஸ்லிம் அளவில் காரிஜியாக்கள் மாற்றி சாற்றியதின் காரணமாக அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரலி) அவர்கள், ஆண்டவனுடைய சிருஷ்டிகளில் எல்லாம் மிக கெட்ட சிருஷ்டியாக காரிஜியாக்களை கணித்தார்கள். (ஆதாரம் புகாரி)

“AAKHIRU THA’WAANAA ANIL HAMDHU LILLAHI RABBIL AALAMEEN.
“சல்லல்லாஹு அலா முஹம்மது, சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்”
“நல்லதை பின் பற்றுவோம், தீயதை விட்டு விலகுவோம்.

“சத்தியம் நிலைக்கட்டும், அசத்தியம் அழியட்டும்”.

—————————————————————-

நன்றி:-இனைய நன்பர்

################################################################

நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2

திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!

கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:

1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.

2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, கதவில் பொருத்திய லென்ஸ் வழியாகவோ பார்த்து, அடையாளம் தெரிந்த பிறகு கதவை திறக்க வேண்டும்.

3. வாசல் மற்றும் முன், பின் கதவுகளுக்கு கூடுதலான தாழ்ப்பாள்கள், கதவுகளுடன் உள்ள சங்கிலி இணைப்புகள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.

4. குளியலறை மற்றும் ஏர்கண்டிஷன் ஜன்னல்களுக்கு கூடுதல் கிரில் கம்பி பாதுகாப்பு கொடுங்கள்.

5. உங்கள் மொட்டை மாடியில் இருந்து மாடிப்படி வழியாக வீட்டுக்குள் வர இயலாத வகையில் தடுப்புச் சுவர் மற்றும் கதவுகளை அமைத்து, அடைத்து வைக்கவும்.

6. வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்கள், அருகில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லவும்.

7. வெளியே செல்லும்போது எல்லா அறைகளையும் பூட்டி சாவிகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

8. பகல் நேரங்களில் தண்ணீர் கேட்டோ, விசாரணை என்ற பெயரிலோ, விற்பனையாளர்களாகவும், மின்சாரம், தொலைபேசி ரிப்பேர் செய்பவர்களாகவும், பால் கவர், பழைய பேப்பர் வாங்குபவர்களாகவும், நகைக்கு பாலீஸ் போடுபவர்களாகவும், திருடர்கள் வரலாம்.  இரக்கம் காட்டி ஏமாற வேண்டாம்.

9. சந்தேகத்துக்கிடமாக யாரேனும் உங்கள் வீட்டையோ, தெருவிலோ, சுற்றித் திரிந்தால், நோட்டமிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். அவர்களை விசாரிக்கையில் ஒத்துழைப்பு கொடுங்கள். டிவி பார்க்கும்போதும், சமைக்கும்போதும் வீட்டின் கதவு உள்பக்கம் எப்போதும் பூட்டியபடியே இருக்கட்டும்.

10. வீட்டில் தனியாக இருப்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களை டி.வி., போன், கிரைண்டர், பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய அனுமதிக்கக் கூடாது. அத்தகையோர் வேலை செய்யும்போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை வைத்துக் கொண்டு பணம் நகைகளை எடுக்கவோ, கழற்றி வைக்கவோ கூடாது.

11. வீட்டின் வேலைக்காரர்களை நியமிக்கும்போது அவர்களது இருப்பிட முகவரி மற்றும் புகைப்படம் அவருக்கு தெரிந்த நபர்களின் விலாசம் ஆகியவற்றை சேகரித்துக் கொள்வது அவசியம். வீட்டு வேலைக்காரர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்வதை தவிர்க்கவும். உங்கள் பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க வங்கி லாக்கர் மிகச் சிறந்தது.

12. அந்நியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது, அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவல், தொழில் விவரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், காஸ், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றின் நகல் பெற்ற பின்பு அனுமதிக்கவும்.

13. உங்கள் தெரு, காலனி, அப்பார்ட்மென்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களை நியமிக்கவும்.

14. பஸ்சில் பயணம் செய்யும்போது உங்கள் பர்ஸ், செல்போன் மற்றும் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.

15. உங்கள் பணம் கீழே கிடப்பதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உங்கள் உடமைகளை அபகரிக்கலாம்.

16. மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் தனியே செல்லும்போது செயின் பறிப்பு திருடர்களிடம் கவனமாக இருக்கவும்.

17. பொது இடங்களில் வைத்து உங்கள் பணத்தை எண்ணுவதை தவிர்க்கவும்.

18. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலோ, கணவன் & மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, காவல் நிலையத்துக்கு தகவல் தந்தால்,  நாங்கள் உங்கள் வீட்டை கண்காணிக்க வசதியாக இருக்கும். தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்.

19. இரவு நேரங்களில் தூங்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குவது,  ஜன்னல் அருகே விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.

20. இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது சைடுலாக் அவசியம் போட வேண்டும்.

இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

THANKS : http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2214&id1=9

நன்றி:-தினகரன்

=================================================================30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

ஏப்ரல் 19, 2010 1 மறுமொழி

‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள்.

ஐந்தாறு வகை காய்களைச் சேர்த்து கமகமக்கும் குழம்பும், ரசமும், கூட்டுமாக ஜமாய்த்திருந்தாலும், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. பொரியல் என்ன?” என்று கேட்டு அது தமக்குப் பிடித்தமானதா என்பதைத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே சாப்பாட்டில் கை வைக்கும் ஆட்கள்தான் அதிகம் இங்கே.

‘‘சோறா?” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் குழந்தைகள்கூட பொரியலும் வறுவலும் பிடித்துப் போய்விட்டால் இன்னும்கொஞ்சம் என்று சாப்பாட்டை கேட்டு வாங்கி ஒரு கட்டு கட்டுவார்கள்.

‘‘நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். உடம்புக்கு நல்லதாச்சேனு தினமும் கிலோ கணக்குல காய்கறியை வாங்கி சளைக்காம நானும் பொரியல், வறுவல்னு செஞ்சுட்டுத்தான் இருக்கேன். ஆனா, எதுவுமே ஒண்ணு ரெண்டு நாளுக்குமேல எடுபடமாட்டேங்குதே.. ‘இன்னிக்கும் கோஸ் பொரியலா?’ ‘கேரட்டை விட்டா வேற தெரியாதா?’னு சலிச்சுக்கறாங்க, என்னதான் பண்றது?” என்று புலம்புகிறீர்களா..? உங்கள் கவலைக் குரல் கேட்டுத்தான் இந்த இணைப்பில் மாதம் முழுவதும் தினம் ஒரு விதமாக செய்து அசத்த, முப்பது வகைப் பொரியல்களை (அட வறுவலும் தாங்க. அது இல்லாமலா? சொல்லித் தருகிறார் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்.

பேபி கார்ன் பொரியல், பனீர் பொடிமாஸ் என்று வாண்டுகளுக்கு பிடித்த ஐட்டங்கள் மட்டுமல்ல, சத்துக்கள் மிகுந்த கிராமத்து சமாசாரமான பனங்கிழங்கு கூட இங்கே பொரியலாக அவதாரம் எடுத்திருக்கிறது. சமைத்துக் கொடுங்கள். சாப்பிடுபவர்கள் சொல்வார்கள். ”பொரியல்னா இப்படில்ல இருக்கணும்.. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு!”

—————————————————–

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவை: பிஞ்சு கத்தரிக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, தக்காளி 2, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1.

செய்முறை: கத்தரிக் காயை பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது) வையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, (தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள். இந்தக் கலவையை கத்தரிக் காயினுள் சிறிது சிறிதாக அடைத்து வையுங்கள்.

எண்ணெயை சூடாக்கி, அதில் கத்தரிக் காய்களை போடுங்கள். அரைத்த பொடி மீதமிருந்தால் அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு வேக வையுங்கள். வெந்ததும் கறிவேப்பிலை தூவி கிளறி இறக்குங்கள்.

—————————————————————–

முருங்கை மசாலாப்பொரியல்

தேவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.

—————————————————————–

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

தேவை: பீன்ஸ் அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் அரை கப், பூண்டு 4 பல், உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒன்றரை டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். (அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து வைத்தால் காய் சரியான பதத்தில் வெந்திருக்கும்) பூண்டை நசுக்குங்கள். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்குங்கள்.

————————————————————

காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்

தேவை: காலிஃப்ளவர் சிறியது 1, பெரிய வெங்காயம் 2, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 1, பூண்டு 6 பல், இஞ்சி 1 சிறு துண்டு

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக வையுங்கள். பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள்.

———————————————

ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8.

செய்முறை: காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள். பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.

——————————————————–

உருளைக்கிழங்கு ஸ்பெஷல் ஃபிரை

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அரை அங்குல கனத்துக்கு வட்ட வட்டமாக வெட்ட வேண்டும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, அதனோடு உப்பைக் கலந்து வையுங்கள். இந்தக் கலவையை உருளைக்கிழங்கு துண்டு ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

தோசைக் கல்லை சூடாக்கி, அதன் மேல் கிழங்குகளை பரவலாக அடுக்கி வைத்து, சுற்றிலும் எண்ணெயை ஊற்றுங்கள். இதனை இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாக நன்கு வேக வைத்து இறக்குங்கள்.

————————————————–

கத்தரி மொச்சைப் பொரியல்

தேவை: கத்தரிக்காய் கால் கிலோ, காய்ந்த மொச்சை விதை அரை கப், பெரிய வெங்காயம் 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: மொச்சையை ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து, நீரை வடித்துவிட்டு வையுங்கள். கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்குங்கள். புளியை அரை கப் நீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறு தீயில் சிவக்க வறுத்து, நைஸாக பொடித்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள். கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், புளி கரைசல், வேகவைத்த மொச்சை, அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.

—————————————————-

கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

தேவை: முட்டை கோஸ் கால் கிலோ, கடலைப் பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

—————————————————-

சேனை ஸ்பெஷல் வறுவல்

தேவை: சேனைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு.

அரைக்க: மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த் தூள் தலா 1 டீஸ்பூன், பூண்டு 6 பல்.

செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று கனமான, அகலமான துண்டுகளாக நறுக்குங்கள். இதனை தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். பிறகு நீரை வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள்.

அரைக்கக் கூறியுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தோசைக் கல்லைச் சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.

——————————————————–

பீன்ஸ் பொடிமாஸ்

தேவை: பீன்ஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பொட்டுக் கடலையை நைஸாக பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு அல்லது கடுகைத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு பீன்ஸை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, பொட்டுக் கடலைப் பொடியை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

நெல்லை உருளைப் பொரியல்

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 5

செய்முறை; உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.

——————————————————–


பப்பாளிக்காய் பொரியல்

தேவை: பப்பாளிக்காய் (சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பிஞ்சுமக்காச்சோளப்பொரியல்

தேவை: பிஞ்சு மக்காச் சோளம் 1 கிலோ, உப்பு தேவைக்கு, எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், புதினா, மல்லி தலா 1 கைப்பிடி.

செய்முறை: மக்காச்சோளத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து பிசறி ஆவியில் ஐந்து நிமிடம் வேகவையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகக் கிளறுங்கள். பிறகு சோளம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கலர்ஃபுல் பொரியல்

தேவை: கோஸ் கால் கிலோ, கேரட் 2, பீன்ஸ் 100 கிராம், பட்டாணி அரை கப், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் 1 கப், தேங்காய்த் துருவல் 1 கப், மலர வேக வைத்த பாசிப் பருப்பு அரை கப், வேக வைத்த கடலைப் பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, இஞ்சி 1 துண்டு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2

செய்முறை: காய்கறிகளைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் வற்றலை சேர்த்து வதக்குங்கள். அதில் வேக வைத்துள்ள காய்கறி, பருப்பு வகைகள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பரங்கிக்காய் பொரியல்

தேவை: பரங்கிக்காய் கால் கிலோ, வேகவைத்த வேர்க் கடலை அரை கப், வெல்லம் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக) சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

காளான் மிளகுப் பொரியல்

தேவை: காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை: காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பீட்ரூட் பொடிமாஸ்

தேவை: பீட்ரூட் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், வேகவைத்த கடலைப் பருப்பு அரை கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துருவுங்கள். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பீட்ரூட் வேகும் வரை கிளறுங்கள். பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனீர் பொடிமாஸ்

தேவை: பனீர் 200 கிராம், சின்ன வெங்காயம் 15, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், பச்சை மிளகாய் 4, தக்காளி 1, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கு, சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன்.

செய்முறை: பனீரை உதிர்த்து வையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு (அல்லது கடுகு) தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்துக் கிளறி பனீர், மல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனங்கிழங்குப் பொரியல்

தேவை: பனங்கிழங்கு 4, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன்.

செய்முறை: பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வெண்டைக்காய் பொடிப் பொரியல்

தேவை: பிஞ்சு (விரல் நீள) வெண்டைக்காய் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், மாங்காய் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு முக்கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு, வால் பகுதிகளை நீக்கிவிட்டு நடுவில் லேசாகக் கீறி வையுங்கள். காய், எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்குங்கள். இந்தப் பொடியை வெண்டைக்காய்களுக்குள் சிறிது சிறிதாக தூவி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, அதில் பொடி அடைத்த காய்களைப் போடுங்கள். மீதமுள்ள பொடிகளையும் தூவி மிதமான தீயில் அவ்வப்போது பிரட்டிவிட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.

——————————————————–

அவரைக்காய் மசாலா பொரியல்

தேவை: அவரைக்காய் அரை கிலோ, சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த் தூள், அவரைக் காய், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி, மிதமான தீயில் வேக வையுங்கள். வெந்ததும் தீயை அதிகப்படுத்தி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பலாக்கொட்டை சோயாப் பொரியல்

தேவை: பலாக்கொட்டை 15, சோயா 10 உருண்டைகள், பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வாழைக்காய் முருங்கை கறி பொரியல்

தேவை: வாழைக்காய் 1, முருங்கைக்காய் 2, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் கால் கப், உப்பு தேவைக்கு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயைப் பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயின் சதைப் பகுதியை வழித்தெடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் வாழைக்காய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, வெந்ததும் தேங்காய்ப்பால், முருங்கையின் சதைப் பகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கோவைக்காய் கொண்டைக்கடலை பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, கொண்டைக் கடலை அரை கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோவைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக, சன்னமாக நறுக்குங்கள். கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை தாளித்து பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு கோவைக்காய், மிளகாய்த் தூள், தனியாத் தூள், தக்காளி, உப்பு, வேகவைத்த கடலை ஆகியவற்றைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கத்தரி பொடி பொரியல்

தேவை: கத்தரி அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: முழு உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், முந்திரி 5.

செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில்நறுக்குங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை தனித் தனியே வறுத்து (பச்சை மிளகாயை சிறு தீயில், நன்கு வெளுப்பாகும்வரை வறுக்க வேண்டும்) பிறகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நைஸாக பொடித்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தை தாளித்து கத்தரிக்காயை, தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கிளறுங்கள். மிதமான தீயில், மூடி வைத்து வேகவைக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்து, தண்ணீர் வற்றியதும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வாழைக்காய் ப்ரெட் பொரியல்

தேவை: வாழைக்காய் 2, உப்பு ப்ரெட் 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல்.

செய்முறை: வாழைக்காயை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாக சற்று கனமாக நறுக்குங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு அதில் வாழைக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி காய்களைத் தனியே எடுத்து வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் காய்களை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள். ப்ரெட்டையும் விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்தைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பிறகு வாழைக்காயைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறி, வறுத்த ப்ரெட், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சேம்பு ரோஸ்ட் பொரியல்

தேவை: சேப்பங்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, சீரகம் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நான்காக நறுக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிதளவு எண்ணெயை சூடாக்கிக் கிழங்குகளை வறுத்தெடுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தைத் தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு மிளகாய்த் தூள், சேப்பங் கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பிறகு அரைத்த விழுது சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

முள்ளங்கி பொரியல்

தேவை: வெள்ளை முள்ளங்கி கால் கிலோ, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சோளப் பொரியல்

தேவை: உதிர்த்த மக்காச் சோள முத்துக்கள் 1 கப், கேரட் 1, பனீர் 100 கிராம், பீன்ஸ் 10, பட்டாணி அரை கப், எண்ணெய் 1 டீஸ்பூன், சீரகத் தூள், மிளகாய்த் தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோள முத்துக்களை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்குங்கள். சோளம் வேக வைத்த தண்ணீர் நிறைய மீதமிருந்தால் அதிலேயே நறுக்கிய காய்கள், பட்டாணி, பனீர் ஆகியவற்றை வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அதில் சோள முத்துக்கள், வேக வைத்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிளகாய்த் தூள், சீரகத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

மினி கோஸ் மஷ்ரூம் பொரியல்

தேவை: குட்டி கோஸ் 100 கிராம், காளான் 1 பாக்கெட், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோஸை நடுவில் பாதியளவுக்கு இரண்டாகக் கீறி வையுங்கள். காளானை இரண்டாகவும், வெங்காயம், தக்காளியைப் பொடியாகவும் நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வறுத்து பொடியுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி, கோஸ், மிளகாய்த் தூள் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். காய் வெந்து பச்சை வாடை போனதும், காளானைச் சேர்த்து பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.

தொகுப்பு: அக்ஷயா

நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க, கட்டுரைகள், சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,