தொகுப்பு
நீதிமன்றில் நித்தியானந்தா போட்டோ கமண்ட்ஸ் (கற்பனை) சிரிக்க,சிந்திக்க மட்டும்
நீதிமன்றம்… விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது..
புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது..
ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல…
வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல..
வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று… இல்லை நிச்சியமாக இல்லை…
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்???
மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா? இல்லை..
மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..??
காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை..
அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக…
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்???
எனக்கு கால் வலி என்பதனாலேயா?….இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக….
உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,
எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,
என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால்
நான் வாங்கிய அடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை,
உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்…
நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..
கேளுங்கள் என் கதையை, என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான், ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது…
என் பெயரோ நித்தியானந்தா,
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்,
ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,
கஞ்சா பிசினஸ், கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்…. ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்…… ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்….
கேரளாவுக்கு ஓடினேன்
கர்னாடகாவுக்கு ஓடினேன்
பெங்களூருக்கும் ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்…… இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்…
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.
என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,
வீடியோவை யூரியூப்பில் போக்கி இருக்க வேண்டும்,
என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும்
இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா? தப்பியோட விட்டார்களா
இந்த நித்தியானந்தாவை, என்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்??
எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?
நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா?
எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,
காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமா?
இல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??
இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில், என்னை போன்ற நித்தியானந்தாக்கள், ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்.
ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம் – செஃப் ஜேக்கப்
பெண்களை மிக அதிகமாகத் தாக்கும் ரத்தசோகையை நூற்றுக்கு நூறு உணவுப் பழக்கத்தின் மூலமே விரட்டி அடித்துவிடக் கூடிய ஒன்றுதான்” என்று நம்பிக்கையோடு பேசும் ‘டயட்டீஷியன்’ கிருஷ்ணமூர்த்தி,
”இந்திய அளவில் 60 முதல் 70 சதவிகிதத்தினர் ரத்தசோகையால் பாதிப்புக்குள்ளாகின்றனர். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது, ரத்தசோகை ஏற்படுகிறது. உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் ஹீமோகுளோபின் அளவும் குறையும். குழந்தைகள், பெண்கள், கருவுற்ற தாய்மார்கள்’தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதல் காரணமே… சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாததுதான். மருந்து, மாத்திரைகளை அதிக அளவு உட்கொள்பவர்களுக்கும் ரத்தசோகை வரலாம். மரபு வழியி’லும் இந்தப் பிரச்னை வரலாம்.
உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. சிக்கன், மீன், முட்டை, ஈரல் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்’களுக்கு ரத்தசோகை வருவதற்’கான வாய்ப்புகள் குறைவு” என்று சொன்ன டயட்டீஷி’யன்,
“மூச்சுத் திணறல், அசதி, நடக்கவே முடி’யா’மல் போதல், முகம், கண், விரல், கைகள் வெளுத்துப் போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது ரத்தசோகையாக இருக்’கலாம். உடனடி’யாக உணவு விஷயத்’தில் கவனத்தை செலுத்துங்’கள்” என்று அட்வைஸ் கொடுத்தார்.
இதைக் கேட்டதுமே… ”உணவுதான் உற்சாக’மாக வாழ்வதற்கு ஒரே மருந்து. சத்துள்ள உணவுகளை சரிவி’கிதத்தில் சாப்பிட்டால் போதும். ‘ரத்த சோகையா? அப்படினா என்ன..?’னு கேட்பீர்கள். இதோ, ரத்தசோகையை விரட்டியடிக்கவும்… வரவிடா’மல் தடுக்கவும் கூடிய உணவுகள்” என்றபடியே ரெசிபிகளை அள்ளி வழங்கினார் செஃப் ஜேக்கப்…
பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -‘ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.
செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.
காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.
பருப்பு-பீன்ஸ் கூட்டு!
தேவையானவை: பீன்ஸ் – 100 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 50 கிராம், பூண்டு – 2 பல், சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பு, துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பீன்ஸ், உப்பு போட்டு வேக விடவும். இதனுடன், வெந்த பருப்பை சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். பொடித்த எள்ளை மேலாகத் தூவி பரிமாறவும்.
இதை சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
”சபாஷ்… சரியான ரெசிபிகள்!”
ரெசிபிகளை கையில் எடுத்த ‘டயட்டீஷி’யன்’ கிருஷ்ணமூர்த்தி, ”பூசணி விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்கிறது. கண்ணுக்குத் தேவையான பீட்டா கரோட்டின், நல்ல கொழுப்பு, தாது உப்புக்களும் இதன்’மூலம் கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய புரதச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு, இந்த பாயசத்திலேயே கிடைத்துவிடுகிறது. எண்ணெய் பசை அதிகம் இருப்பதால் சருமத்தையும் பாதுகாக்கும்.
கூட்டில் சேர்த்துள்ள பீன்ஸ் மற்றும் எள் ஆகியவற்’றில் இரும்புச்சத்தும், பருப்பில் புரதமும் இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்கள், தினமும் 300 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் இருக்கும் உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தக் கூட்டில் 170 மைக்ரோ கிராம் அளவுக்கு ஃபோலிக் ஆசிட் கிடைத்து விடுகிறது. உடம்புக்குத் தேவையான கார்போஹைட்ரேட், அதிக அளவு புரதம், எனர்ஜி ஆகியவையும் கிடைத்துவிடுவதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.
மொத்தத்தில் இந்த ரெசிபிகளில், ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் அடங்கி’இருக்கின்றன. சபாஷ்… சரியான ரெசிபி!’ என்றார்.
படங்கள்: ‘ப்ரீத்தி’ கார்த்திக்
நன்றி:-அவள்விகடன்
_________________________________________________
மணவாழ்வில் மகிழ்வுற.. நஷ்மல் பலாஹி
கணவன்மார்கள் பலர் தமது துணைவிகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடும் விமர்சனங்கள் இதோ…
என் மனைவி என் முன்னால் அழகாக இருப்பதில்லை…என் மனைவியொரு சுயநலவாதி…
என் மனைவி என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள்…என் மனைவி மார்க்கக் கடமைகளில் கவனம் செலுத்துவதில்லை…
என் மனைவிக்கு அறிவு மட்டு…அவள் ஒரு குழப்பக்காரி…அதிகம் சந்தேகிக்கிறாள்…
குழந்தைகளைக் கவனிப்பதில் அலட்சியம் செய்கிறாள்…எனது குடும்பத்தை மதிப்பது கிடையாது…
இவைகள்தான் இக்கணவர்கள் மகிழ்ச்சியில் தோற்றுவிட்டதாகக் கூறும் காரணிகள்..
01.பெண்களோடு மென்மையாக நடத்தல்.
02. அவர்களுக்கு உதவி உபகாரம் செய்தல்.
03.கோணலான குணங்களுக்காகப் பொறுத்துக் கொள்ளல். (ஷரஹ்:முஸ்லிம்)
அந்த வகையில் மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்:
02.தீனுள்ளவளைக் கொண்டு வெற்றியடைதல்.
அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாய் விட்டு சிரிக்க
அந்த அலுவலகத்திலே..எல்லோரும் தலையை விரிச்சுப் போட்டுட்டு இருக்காங்களே…ஏன்?
அங்க லஞ்சம் கொடுத்தா தான் எதுவும் நடக்குமாம்..
அதை ‘சிம்பாலிக்’ கா உணர்த்தறாங்களாம்..
லஞ்சம் தலை விரிச்சு ஆடுதுன்னு
________________________
அம்மா…அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?
ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்..
அதுதான்..
_____________________
நாதஸ்வர வித்வான்- (சபா காரியதரிசியிடம்)அடடா…நீங்க சொல்ற தேதிக்கு
நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதே
சபா காரியதரிசி-ஒத்து வரலேன்னா..பரவாயில்லை..
நீங்க வந்தா போதும்
___________________________
வந்தவர்: என் மனைவிக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் டாக்டர்
டாக்டர்: அதுக்காக ஏன் இவ்வளவு கவலைப்படறீங்க
வந்தவர்: பாத்திரங்களை ‘வீசி’ எறியறாளே என் மேல
டாக்டர்: ???
__________________________
நம்ம தலைவருக்கு ஆஸ்பத்திரியில உடனடியா ரத்தம் கொடுக்கணும்னு..
சொல்றாங்க..ஆனா அவர் குரூப் ரத்தம் கிடைக்கலை
அவர் ரத்தம் என்ன குரூப்
ஊழல் குரூப்பாம்
_________________________
1வது நபர்: அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற
2வது நபர்: ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ
சர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே!
___________________________
நன்றி:- தமிழா
__________________________
தாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்
PART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – அபூ ரிஸ்வான்
இத்தொடர் ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியில் பொதுவாக மக்கள், குறிப்பாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் அடங்கா ஆசை கொண்டவர்கள் (compulsive shopping nature), பொருள்களின் மீது மிகுந்த ஆசையுடையவர்களாகவும், அதற்கான பொருளாதார வசதியில்லாதவர்கள் கூட கடன் வாங்கியோ அல்லது தவனை முறையிலோ பொருள்களை வாங்கும் பழக்கம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
மேலும் பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.
இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) – இமால்டா – பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.
இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை. சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன. சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.
இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:
“மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்” (அல்-குர்ஆன், அல்-ஃபுர்கான் 25:67)
இத்திருவசனத்திலிருந்து இறைவன் ‘வீண்விரயம் செய்வோரையும்’ ‘கஞ்சத்தனம் செய்வோரையும்’ தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.
இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் (சுப்ஹா…) கூறுகிறான்:
“உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
‘ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை’ குறிப்பிடும் பொழுது அல்லாஹ் (சுப்ஹா…), ‘கையை முற்றிலும் விரித்துவிட்டவர்’ என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.
பிறிதொரு இறைவசனத்தில் ‘வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’ என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:
“உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்-குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.
ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ‘ஷைத்தானின் சகோதரராய்’ இறைவன் வர்ணிக்கின்றான்.
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு – தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான். ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் – மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.
வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அது எப்படி என்பதை அடுத்த பகுதியில் (Part 3) சற்று ஆராய்வோம்.
நன்றி:- அபூ ரிஸ்வான் ( Kuttukkal Mohamed Jaffarullah, M.Tech, Koothanallur)
நன்றி:-சுவனத்தென்றல்
********************
அண்மைய பின்னூட்டங்கள்