தொகுப்பு

Archive for ஏப்ரல் 5, 2010

சர்க்கரை நோய் ஒரு பார்வை


சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

 1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
 2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
 3. நகர்புற வாழ்வியல் சூழல்
 4. முறையற்ற உணவு பழக்கம்
 5. மது, புகை, போதை பொருட்களால்
 6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள்,கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
 7. இன்னும் பிற

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

 1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
 3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
 4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
 5. அடிக்கடி தாகம், அதிக பசி
 6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் – அதனால் ஆண்மைக்குறைவு
 7. தூக்கமின்மை
 8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்

சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:

 1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
 2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
 3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
 4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.

சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:

 1. வாழைப்பூ
 2. வாழைப்பிஞ்சு
 3. வாழைத்தண்டு
 4. சாம்பல் பூசணி
 5. முட்டைக்கோஸ்
 6. காலிஃபிளவர்
 7. கத்தரிப்பிஞ்சு
 8. வெண்டைக்காய்
 9. முருங்கைக்காய்
 10. புடலங்காய்
 11. பாகற்காய்
 12. சுண்டைக்காய்
 13. கோவைக்காய்
 14. பீர்க்கம்பிஞ்சு
 15. அவரைப்பஞ்சு

சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:

 1. முருங்கை கீரை
 2. அகத்திக் கீரை
 3. பொன்னாங்கண்ணிக் கீரை
 4. சிறுகீரை
 5. அரைக்கீரை
 6. வல்லாரை கீரை
 7. தூதுவளை கீரை
 8. முசுமுசுக்கைகீரை
 9. துத்தி கீரை
 10. மணத்தக்காளி கீரை
 11. வெந்தயக் கீரை
 12. கொத்தமல்லி கீரை
 13. கறிவேப்பிலை
 14. சிறு குறிஞ்சான் கீரை
 15. புதினா கீரை

சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:

 1. விளாம்பழம் -50கிராம்
 2. அத்திப்பழம்
 3. பேரீத்தம்பழம்-3
 4. நெல்லிக்காய்
 5. நாவல்பழம்
 6. மலைவாழை
 7. அன்னாசி-40கிராம்
 8. மாதுளை-90கிராம்
 9. எலுமிச்சை 1/2
 10. ஆப்பிள் 75கிராம்
 11. பப்பாளி-75கிராம்
 12. கொய்யா-75கிராம்
 13. திராட்சை-100கிராம்
 14. இலந்தைபழம்-50கிராம்
 15. சீத்தாப்பழம்-50கிராம்

சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:

 1. எலுமிச்சை சாறு -100மி.லி
 2. இளநீர் -100மி.லி
 3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
 4. அருகம்புல் சாறு -100மி.லி
 5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
 6. கொத்தமல்லி சாறு -100மி.லி
 7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி

தவிர்க்க வேண்டியவைகள்:

 1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட்,ஐஸ்கிரீம்)
 2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
 3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
 4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
 5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.

************ ********* ********* ********* ***

க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல்

ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்,ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவதுத‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம்குறை‌ந்து‌விடு‌ம்.

இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம்

Subject: Re: நோய்கள் பற்றி விழிப்புணர்வு: சக்கரை வியாதி (டயாபட்டீஸ்)

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் முக்கிய,உபயோகமுள்ள ஆலோசனைகள். தந்தமைக்கு சகோதரருக்கு மிக்க நன்றி. நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது இதை படிப்பவர்கள் தனது உறவினர்களில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் இவற்றை தெரிவித்து உதவலாம்.

இதில் குறிப்பிட்டுள்ள படி, இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று இருந்துவிடாமல் சிறு நீரகங்கள் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளையும் அவ்வப்போது எடுத்து பார்ப்பது சிறந்தது. உலகில் 10 நொடிகளில் ஒருவர் சர்க்கரை நோயால் இறப்பதாக ஒரு சர்வதேச அறிக்கை தெரிவிக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் நோயற்ற வாழ்வை தர துஆச்செய்வோமாக.

Subject: நோய்கள் பற்றி விழிப்புணர்வு: சக்கரை வியாதியின் (டயாபட்டீஸ்) கோளா

2. சக்கரை வியாதி கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். மாத்திரையால் சக்கரை வியாதி குறையவில்லையெனில் இன்சுலினுக்கு மாறிவிடுவது சிறந்தது. இன்சுலினுக்கு மாறுவது அவசியமா என்பதை உங்கள் டாக்டரிடம் அவசியம் கேட்டு தெரிந்துகொள்ளவும்.

3. சக்கரை வியாதிக்கு தொடர்ந்து மருத்துவம் செய்வது மிக அவசியம்.

4. கொழுப்புச்சத்து, சிறுநீரகம், கண் மற்றும் கால்களை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது அவசியம்.

5. சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. Now-a-days these machines are easily and cheaply available. Easy to use as well.

A. சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடும்; ஆனால் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழப்பது தெரியாமல் போய்விட கூடும் என்பதால், செலவை பாராமல் தொடர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

B.சக்கரை வியாதி நரம்புகளை மறக்க செய்வதால், புண் ஏதும் ஏற்பட்டால் இலகுவாக ஆறாது. நிறைய பேருக்கு கால்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகையால் கால் பரிசோதனை செய்ய வேண்டும்.

C.ஆரம்பத்திலிருந்தே கண் பரிசோதனை செய்து கொள்வது கண்ணில் கோளாறு வராமல் தடுக்க ஏதுவாக இருக்கும்.

D.சக்கரை வியாதியோடு, கொழுப்பு சத்தும், இரத்த அழுத்தமும் அதிகமாக இருக்குமேயானால் மிகவும் ஆபத்து. பக்க வாதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால், தொடர் சிகிச்சை செய்வது அவசியம்.

குடும்பத்தில் (தாய், தந்தை) சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு அதிகம் இந்த நோய் வரக் கூடும் என்பதால் அளவாக உணவையும் அதிகமாக உடற்பயிற்சியும் செய்து கொண்டால் வியாதி வருவது தள்ளி போக கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அல்லாஹ் நன்கு அறிந்தவன்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. புகாரி 5678

நன்றி:- இனைய நன்பர்

********************************************

PART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – அபூ ரிஸ்வான்


இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Ready mades); கலைநயம் மிக்க சேலைகள்! கண்கவரும் ஆபரணங்கள்! கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், இருசக்கர ஊர்திகள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் பெரும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோரும் வாங்கிச் செல்கிறார்கள்.

இப்படி குவித்தும், அடுக்கியும், ஷோ கேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருள்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுபனவற்றையும், அவசியமானவற்றையும்தான் வாங்குகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அமெரிக்காவில் 20 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள். இன்னுமொரு புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் 17 மில்லியன் நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோயிச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக் குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (compulsive shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (shopaholic) என்றும் அழைக்கிறார்கள்.

‘Shopaholic’ என்னும் சொல் ‘alcoholic’ என்ற ஆங்கில சொல்லின் பொருள்படும் ‘நிறுத்தாத குடிகாரன்’ மற்றும்  ‘workaholic’ என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் கொண்ட ‘இடைவிடாது பணிசெய்து கொண்டிருப்பவன்’ என்பது போன்றவையே! இப்படிப்பட்ட மனக்கட்டுப்பாடற்ற நிலை மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோமானால் அதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும்.

முதலாவது காரணம்: மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள். உலக மக்கள் பலமதங்களை பின்பற்றுபவர்களாக இருந்தும் இறைநம்பிக்கையும், மறுமைப்பற்றிய சிந்தனையும், இவ்வுலக வாழ்வு மிகக்குறுகிய, நிலையற்ற வாழ்வு என்னும் உண்ணமையும் மனதில் ஆழப்பதியாததே! அதிலும் இளைஞர்களின் எண்ணங்கள் இன்னும் விபரீதமாய் இருக்கின்றன. “வாழ்க்கை வாழ்வது ஒருமுறையே; அதனால் அவ்வாழ்க்கையில் எல்லாவிதமான இன்பங்களையும், சாதனங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும்” என்பது தான்.

இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுக்கு தேவையான பொருட்களை மற்றுமின்றி தேவையில்லாத பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள் தான் இப்படி ‘ஷாப்பஹாலிக்காக’ (shopaholic) இருக்கிறார்களா என்றால் அவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வசதியுடையவர்களும் (middle class) இப்படிப்பட்ட மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பு எடுக்கப்ட்ட புள்ளிவிபரப்படி, 10 ஷாப்பஹாலிக்குகளில் 9 பேர் பெண்களாகவும் ஒருவர் ஆணாகவும் இருந்தார். தற்பொழுது ஆண்களிலும் இம்மனோநிலை கொண்டவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

இரண்டாவது காரணம்: பெருமையடிப்பது. மற்றவர்களிடம் இல்லாத புதுப்புதுவகையான பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தனது தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். கடைகளில் ஏதாவது புதிய மாடல் நகை விற்பனைக்கு வந்திருந்தால், பழைய நகைகளை விற்றுவிற்று அப்புதிய மாடல் நகையை உடனே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். பெருமையோடு தம் உறவினர்களிடமும், தோழிகளிடமும் காட்டுகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு முறையும் நகைகளை மாற்றும்பொழுது எந்த அளவுக்கு பணம் வீணாக செலவாகிறது என்பதை இப்பெண்கள் உணர்வதில்லை. இம்மனநிலையை ஆய்வுசெய்யும் நிபுணர்கள் இது ஒருவகையான ‘நாகரீகத்தின் மேல்படியில் நிற்பவர்கள் நான்தான் என்று காட்டும் மனநிலை’ என வர்ணிக்கிறார்கள்.

மூன்றாவது காரணம்: பொருட்களை தேவையில்லாமல் ஆசைப்பட்டவற்றையெல்லாம் வாங்கிக்குவிப்பது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு எத்தனை ஆடைகள் தேவைப்படும்? ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்ணாயிருந்தால் அவருக்கு 5 முதல் 10 சேலைகள் தேவைப்படலாம். செல்வந்தர்களாக இருந்தால் 10 முதல் 20 சேலைகள் வாங்கி அணியலாம். இவையெல்லாம் மிதமான தேவைகள். ஆனால் தற்காலத்தில் என்ன நடக்கிறது? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் சட்டை துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suit case) வைத்து கொடுக்க்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராய் இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான் தாயகம் திரும்பும்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரையில் வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார். இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை!

மேலும் சில பெண்கள் திருமணத்திற்கு அழைப்பின்பால் செல்லும் போது ஒரு புதிய சேலையை அணிந்துக் கொண்டுதான் செல்லவேண்டும்  என்று விரும்புகிறார்கள். ஒரு ஊரில் ஒருவருடத்தில் 25 திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு புதுப்புடவை வீதம் 25 புடவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் கூட இப்படிபட்ட வீண்விரயத்தை செய்யக்கூடாது என்று இருக்கும் போது நடுத்தரவர்க்க மக்கள் இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்து பொருளாதாரத்தை அழிக்கலாமா? இதை இறைவன் மறுமையில் விசாரிக்க மாட்டான் என்று இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

நான்காவது காரணம்: பெண்களிலும் சரி, ஆண்களிலும் சரி, தனது வீட்டை மற்றவர்களைவிட அலங்கரிக்க வேண்டும் என்ற மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. வீடுகட்டும் பொழுது அவ்வீடு அங்கு குடியிருக்கப்போகும் குடும்பத்தினருக்குப் போதுமான வசதியுடையதாகவும், போதுமான அறைகள் உடையதாகவும் இருக்கவேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பமும். ஆனால் வீட்டின் உட்புறம் செய்யக்கூடிய வசதியைவிட வீட்டிற்கு வெளிப்புறமும் முகப்பிலும் பெரும்  அலங்காரங்களை செய்தும், தூண்களை கட்டியும், மேலும் மார்பில் (marble) போன்ற சலவைக்கற்களை சுவரெங்கும் பதித்தும் அலங்காரம் செய்வது வீண்விரயமாய் ஆகாதா? அதிலும் முஸ்லிம் அல்லாதவர்களின் வீடுகளைவிட முஸ்லிம்களின் வீடுகள் வீண் அலங்காரங்களின் உறைவிடமாக காட்சி அளிக்கின்றன.

எனக்குத் தெரிந்த ஒருவர் – என்னுடன் சிறுவயதில் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர் – ஒரு மிகப்பெரிய அலங்காரமான வீட்டைக் கட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே அவருடைய தகப்பனார் கற்கோட்டையைப் போன்ற ஒரு பெரிய வீட்டை கட்டிவைத்துவிட்டுத் தான் மரணம் அடைந்தார். மகனுக்கு அந்த பழைய மாடல் வீடு பிடிக்கவில்லை. ஊரில் மதிப்பாகவும், அலங்காரமாகவும் புதிய வீட்டில் வாழ ஆசைப்பட்டார். ஆகையால் பழைய வீட்டை முற்றாக இடித்துவிட்டு அதே இடத்தில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய வீட்டை கட்டிவிட்டார். இச்செயலை என்னவென்று கூறுவது? தன் தகப்பனார் கட்டிய வீட்டில் சிறுசிறு திருத்தங்களைச் செய்து அவர் நினைவாக தன் குடும்பத்தினரோடு வாழ்ந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்? அல்லது வேறொரு இடத்தில் ஒரு புதிய வீட்டைக் கட்டியிருந்தாலும் பரவாயில்லை! தற்காலத்தில் முஸ்லிம்களின் ஆடம்பரம் எல்லைக் கடந்து விட்டதை மேற்கூறிய ஒரு உதாரணத்தைக் கொண்டே அறியலாம்.

முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் – ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டும் – தனது ஆசையென்ன? வாழ்க்கைக்கு தேவையானவை என்னென்ன? என்று உணர்ந்துக் கொள்ளவேண்டும். மறுமை நாளை நம்பிக்கைக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் இந்த ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்துக் கொண்டால் இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டும், அதேசமயம் வீண்விரயமும் செய்யாமலும் இறைவனுடைய உவப்பைப் பெற்று வாழலாம். நமது ஆசைகள்  எவை, தேவைகள் எவை என்பதை எப்படி அறிந்துக் கொள்வது? அதை அடுத்த பகுதியில் (PART-II) இன்ஷா அல்லாஹ் காண்போம்.

நன்றி:- அபூ ரிஸ்வான் ( Kuttukkal Mohamed Jaffarullah, M.Tech, Koothanallur)

நன்றி:-சுவனத்தென்றல்

********************

தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை! – PART-II

__________________________________________________-

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

அன்பான சகோதர, சகோதரிகளே! குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சிம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் நிறைய இருக்கின்றன.

ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: –

“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: –

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.

இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: –

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து – அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: –

‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: –

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் – ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: –

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் – அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூத்

ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: –

ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: –

“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: –

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: –

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: –

நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்:

“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

நன்றி:-சுவனத்தென்றல்

********************

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்! – M.அன்வர்தீன்


“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)

ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)

குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.

இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: –

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: –

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)

நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: –

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: –

அல்லாஹ் கூறுகிறான்: –

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: –

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)

“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)

அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி

தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: –

“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)

யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)

தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: –

‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)

‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)

கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்.

நன்றி:-M. அன்வர்தீன்

நன்றி:-சுவனத்தென்றல்

********************