தொகுப்பு

Archive for ஏப்ரல் 13, 2010

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்


“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக் காரணம்… நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை.

‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில் வெரைட்டியான உணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’ என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதையெல்லாம் அலசி ஆராயும் சேலம், சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன், ”நெகட்டிவ் கலோரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல் செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காக இருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ் கலோரி உணவுப் பொருள். இத்தகைய நெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு, அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக் காண்பித்திருக்கிறார்.

“தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல் எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்த ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச் சொல்கிறார் கதிரவன்.

ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!

———————————————————————————————-

முட்டைகோஸ் சூப்

தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.

———————————————————————————————————

ஃப்ரூட்ஸ் அடை

தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.

குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன் இது!

—————————————————————————————-

பழ பாயசம்

தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை முத்துக்கள் – கால் கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20, பால் – ஒரு கப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம்.

செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

—————————————————————————————————

கம்பு ரொட்டி

தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

—————————————————————————————————–

பட்டாணி கேரட் அடை

தேவையானவை: பட்டாணி – கால் கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

———————————————————————————

பருப்புக் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.

—————————————————————————————-

மிளகு தானிய சூப்

தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

——————————————————————-

காய்கறி உப்புமா

தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.

———————————————————————

தினை மாவு அடை

தேவையானவை: தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

———————————————————

பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு

தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.

——————————————————————

கொண்டைக்கடலை மசாலா

தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.

————————————————————————–

புளிப்பு இனிப்பு காளான்

தேவையானவை: காளான் – அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையான அளவு, கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.

————————————————————————

முளைகட்டிய தானிய சப்பாத்தி

தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

வாழைப்பூ அடை

தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

————————————————-

பார்லி  மசாலா சாதம்

தேவையானவை: பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.

——————————————

சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

———————————————————

உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.

———————————————————————-

மக்காச்சோள ரொட்டி

தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

————————————————————————

வீட் எனர்ஷி டிரிங்க்

தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.

—————————————————-

துவரம்பருப்பு சூப்

தேவையானவை: துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1.

செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.

குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

——————————————————

வெஜ்  ஃபிஷ்  ஃப்ரை

தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.

—————————————————-

கீரை  கோஃப்தா கறி

தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை – ஒரு கட்டு, பனீர் (துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காய விழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவது ஒருமுறை செய்து உண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை உண்ணும் உணவு லைட்டாக இருத்தல் நலம்.

———————————————–

கீரை ரொட்டி

தேவையானவை: அரிசி மாவு – கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஆய்ந்த கீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

————————————————–

மிக்ஸட் ரொட்டி காய்கறி சட்னி

தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு, கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல் சுட்டு எடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டி தயார்.

கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும் சத்துக்களும் சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.

———————————————————

நூல்கோல் சப்பாத்தி

தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நூல்கோலை வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.

———————————————–

நவரத்தின புலாவ்

தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும் புலாவுக்கு இணையான சுவையுடன் கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிக சத்து நிறைந்தது.

———————————————————————-

கலர்ஃபுல் புட்டு

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

————————————————————-

தர்பூசணி மசாலா

தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

———————————————————————-

முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை – ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.

——————————————————

பாகற்காய் அல்வா

தேவையானவை: பாகற்காய் – கால் கிலோ, காய்ச்சிய பால் – ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

நன்றி:- சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன்

நன்றி:-அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை டயட் சமையல், சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பொடுகுத் தொல்லை போயே போச்சு! – சந்தியாசெல்வி.


ப்போதெல்லாம் வெளிர் பழுப்பு, அடர் பழுப்பு போன்ற நிறங்களில் கல்லூரி மாணவிகள் தங்களின் கூந்தல் நிறத்தை மாற்றிக் கொள்கிறார்கள். அது ஃபேஷனாக இருந்தாலும், முறையான பராமரிப்பின்றி அந்தக் கூந்தல் அதே நிறத்தில் வெளிறிப் போகும்போது ‘செம்பட்டை முடி’ என்றே அழைக்கப்படுகிறது.

‘‘ஜீவனே இல்லாமல் வறண்டு போயிருக்கும் இப்படிப்பட்ட முடியை உடையவர்கள் ‘தங்கள் கூந்தலும் ஒருநாள் அலையலையாய்ப் புரளுமா?’ என்று கவலைப்படுவார்கள். அந்தக் கவலைக்குத் தீர்வு உண்டு’’ என்கிறார், ‘அவள்’ வாசகிகளுக்காக அழகு டிப்ஸ்களை வழங்கிவரும் சந்தியாசெல்வி.

இந்த இதழில் அவர் பேசப்போவது, கூந்தல் பராமரிப்பு பற்றி!

cக்கு உடனடியாக ஆரோக்கியத் தோற்றம் தரவைக்கச் சுலபமான சிகிச்சை ஒன்று உண்டு.

பீட்ரூட்-1, மருதாணி-1 கப், கத்தா (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) – 2 கப், வெந்தயப் பவுடர் – 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் பீட்ரூட்டை மசிய அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில், பீட்ரூட், கத்தா, வெந்தயப் பவுடர் போட்டு மூடி வைத்து இறக்குங்கள். இதன் சாறு தண்ணீரில் இறங்கி விடும். வெதுவெதுப்பு நிலையை அடைந்ததும் இந்தத் தண்ணீரை வடிகட்டி, மருதாணிப் பவுடர் கலந்து ஒரு இரவு வையுங்கள்.

மறுநாள் இந்தக் கலவையை கூந்தல் முழுக்கவும் பூசி, ஒரு மணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். தொடர்ந்து இப்படி நாலைந்து தடவை செய்தாலே கூந்தலின் நிறத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

‘இதையெல்லாம் செய்ய எங்களுக்கு நேரம் ஏதுங்க?’ என்பவர்களுக்கு கொஞ்சம் சுலபமான வைத்தியம் உண்டு. தேங்காயை நன்றாக அரைத்து, பால் எடுத்து, கூந்தலில் தேய்த்து, அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும்கூட தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் முடி செம்பட்டையாகும். ஒவ்வொருமுறை நீந்தியபிறகும் முடியை நல்ல தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தலைக்கு ‘ஷவர் கேப்’ எனப்படுகிற சிறு தொப்பி அணிந்தும் நீந்தலாம்.

முடி கருகருவென்று வளர்வதில்லை என்பது நிறையப் பேரின் கவலை. இதற்கு சுலபமான சில கை வைத்தியங்கள் உண்டு.

சோற்றுக் கற்றாழையை வெட்டி, வெந்தயத்தை அதன் வெள்ளைப் பகுதியில் தூவி, மூடி வையுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துப் பார்த்தால் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை எடுத்து, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் முடி கருகருவென்று வளரும். இது உடலுக்குக் குளிர்ச்சியும்கூட. சைனஸ், தலைவலி இருப்பவர்கள் மட்டும் இதைத் தேய்க்கக்கூடாது.

அவர்களுக்கான இன்னொரு வைத்தியம் சொல்லட்டுமா?

கறிவேப்பிலையையும் பெரிய நெல்லிக்காயையும் நன்கு அரைத்து வடை மாதிரி தட்டிக் கொள்ளுங்கள். இந்த வடைகளைச் சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு வாரம் வையுங்கள். பச்சை நிறத்தில் கிடைக்கிற அந்தத் தேங்காய் எண்ணெயைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், கன்னங்கரேலென்ற அழகு கூந்தல் கிடைக்கும்.

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை. ஒருநாள் தலையை அலசவில்லையென்றால்கூட அரிப்பெடுத்து, காலி பண்ணிவிடும். இந்தப் பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..

வசம்பைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலைப்பகுதியில் படும்படி தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து அலசி வந்தால் பொடுகு ஓடிப்போகும்.

தேங்காய் எண்ணெயுடன் வேப்பம்பூவைக் காய்ச்சி இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வருவதும் நல்ல பலன் தரும்.

இன்னொரு வழியும் உண்டு. வேப்பிலை, வசம்பு, வால் மிளகு மூன்றையும் நன்கு அரைத்து, மயிர்க்கால் களிலும் தலையிலும் படும்படி, தடவி அரைமணி நேரம் கழித்துத் தலையை அலசுங்கள்.

‘‘அட.. இப்போல்லாம் நீங்க தலையில கை வைக்கிறதே இல்லையே..?!’’ என்று அக்கம்பக்கத்துத் தோழிகள் ஆச்சரியப்படுவார்கள்.

———————————————————————————-

நன்றி:- சந்தியாசெல்வி

நன்றி:- அ.வி

========================================================

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்கள்


( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ )

ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

1.பேசினால் உண்மையே பேசுங்கள்!

2.வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!

3.அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!

4.கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!

5.பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!

6.கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்!

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)

————————————————————————————————————

(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ)

உங்களில் இன்று நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இன்று நோயாளியை விசாரித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள்.

இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒருவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1707)

———————————————————————————————————————-

( خمس من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضاً وشهد جنازة وصام يوماً وراح يوم الجمعة وأعتق رقبة)

ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர்

1.நோயாளியை விசாரிக்கவேண்டும்.

2.ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும்.

3.அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும்.

4.ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.

5.அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : இப்னுஹிப்பான்)

——————————————————————————————————————

( عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ )

ஐந்து காரியங்கள் உள்ளன. அவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் வந்துவிடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள்.நோயாளியை விசாரிப்பவர் அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்பவர் அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் போராட வெளியேறிச் செல்பவர் அல்லது –முஸ்லிம்களின் ஆட்சித்- தலைவரை மதிக்கவேண்டும், கண்ணியப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அவரிடம் செல்பவர் அல்லது பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் பிறரின் துன்பத்திற்கு ஆளாகாமலும் தன் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : எந்த மனிதரைப் பற்றியும் புறம் பேசாமல் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று வந்துள்ளது.

(அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் -ரலி, நூற்கள் : அஹ்மத் 21079, இப்னுஹுஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம்)

—————————————————————————————————————-

அபூ கஸீர் அஸ்ஸுஹைமீ அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
ஒரு அடியான் ஒரு அமலைச் செய்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட வேண்டும்! அத்தகைய அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று அபூதர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஈமானுடன் செயல்களும் உள்ளன! என்றேன். அதற்கவர்கள், அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து சிறிதளவாவது தர்மம் செய்யவேண்டும் என்றார்கள். அவரிடம் எதுவும் இல்லை என்றால்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், அவர் தன் நாவால் நல்லவைகளைக் கூறட்டும்! என்றார்கள். அவர் சரியாக பேசமுடியாத திக்குவாய்க்காரராக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்! என்று கூறினார்கள். அவரே சக்தியற்ற பலவீனமானவராக இருந்தால்? என்று கேட்டேன். கைத்தொழில் தெரியாதவனுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கட்டும்! என்றார்கள். அவரே தொழில் தெரியாதவராக இருந்தால்? என்று கேட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை நோக்கிப் பார்த்து, உன்னுடைய நண்பனிடம் எந்த ஒரு நலவையும் விட்டுவைக்க நீர் விரும்பவில்லை போலும்! அவன் மக்களுக்கு துன்பமிழைக்காமல் இருக்கட்டும்! என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இது இலகுவான வார்த்தையாகும் என்றேன். அதற்கவர்கள், என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, யாரேனும் ஒர் அடியான் அல்லாஹ்விடம் இருக்கும் கூலியைப் பெறும் நோக்கத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றினால் நிச்சயமாக மறுமையில் அச்செயல் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடும் என்றார்கள்.

(நூற்கள் : இப்னுஹிப்பான், தப்ரானீ, ஹாகிம்)

———————————————————-

(عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ أَعْتِقِ النَّسَمَةَ وَفُكَّ الرَّقَبَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ قَالَ لَا إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ )

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்!

ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் உரிமை வழங்குவதாகும். அடிமையை உரிமை விடுவதென்பது அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும். மேலும்

பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு!

பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும்.

இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு!

நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால்

நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள்.

(அறிவிப்பவர் : பரா இப்னு ஆஸிப் -ரலி, நூற்கள் : தயாலிஸீ, அஹ்மத் 17902, இப்னுஹிப்பான்)

————————————————————————————————

தொகுப்பு:-அப்துல்லாஹ் இப்னு அலீ அல்ஜுஐஸின்.

நன்றி:-இஸ்லாம் கல்வி

================================================================================

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்


கிராமத்து சமையல்னாலே, நொறுக்குத் தீனியோ, பலகாரமோ எதுவானாலும் நிச்சயமா சத்துள்ள ஆகாரமாத்தான் இருக்கும். தேவையான பொருட்களும் நமக்கு சுலபமா கிடைக்கறதா, விலை குறைஞ்சாத்தான் இருக்கும். இங்க நாம பார்க்கப்போறதும் அந்த ரகம்தான்..

நவதான்ய உருண்டை

சோளம், கம்பு, கொள்ளு, பாசிப் பயிறு, சோயாப்பயிறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள்ளு.. இந்த ஒம்பது வகையான தானியங்களை யும் வகைக்கு கால் கப் அளவுக்கு எடுத்து, ஒவ்வொண்ணையும் தனித்தனியா, வெறும் வடை சட்டில போட்டு சிவந்து, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்துக்குங்க. ஆறினதும் மெஷின்ல கொடுத்து மாவா நைஸா அரைச்சுக்குங்க.

ரெண்டரையிலிருந்து மூணு கப் அளவுக்கு சர்க்கரையை எடுத்து மிக்ஸில போட்டு பொடிச்சு பவுடராக்குங்க. இதை, அரைச்சு வெச்சிருக்கற தானிய மாவோட கலந்து, கூடவே உருக்கின அரை கப் நெய், அரை கப் தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் சேர்த்து பிசறி பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சு வைங்க. உருண்டை பிடிக்க வராம மாவு பொல பொலனு உதிர்ந்தா கவலைப்படாதீங்க. ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பால் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு உருண்டை பிடிங்க. பதமா இருக்கும்.

புரோட்டீன் சத்து நெறஞ்ச இந்த உருண்டைல மணத்துக்குனு ஏலக்காய் மாதிரி எதையும் சேர்க்க வேண்டாம். வறுபயிறு வாச னையே கமகமனு அத்தனை பிரமாதமா இருக்கும். பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு ஒரே ஒரு உருண்டை கொடுத்தாப் போதும். வயிறு நெறஞ்சு உற்சாகமாயிடுவாங்க

கம்புரொட்டிஎள்ளுப்பொடி

ரெண்டு கப் அளவுக்கு கம்பு எடுத்து தண்ணிய தெளிச்சு பிசறி, உரல்ல போட்டு குத்தி புடைக்கணும். அதைக் காயவெச்சு மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்குங்க. இந்த மாவை வேணுங்கற அளவுக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமா கொதி நீரை ஊத்தி நல்லா அழுத்தி பிசையணும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்.. இல்லேன்னா, வாழை இலையை எடுத்து அதுல கொஞ்சங் கொஞ்சமா மாவை எடுத்து வெச்சு தண்ணியத் தொட்டு மெல்லிசு ரொட்டியா தட்டிக்குங்க. சூடான தோசைக் கல்லுல போட்டு சுட்டெடுங்க. ரொட்டியைச் சுத்தி எண்ணெய்விட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுங்க. மிதமான தீயில சுடணும்.

வேகறதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். பொறுமையாதான் சுடணும். சத்தான இந்த ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தா, அந்த ருசியே சிரமத்தைப் பார்க்காம அடிக்கடி இதைச் செஞ்சு சாப்பிடச் சொல்லும்.

கம்பு ரொட்டிக்கு தொட்டுக்க ஜோரானது எள்ளுப்பொடி. சரி, அதை எப்படி செய்யறது?

எள்ளை கல், மண் நீக்கி, சுத்தப்படுத்தி வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க. உளுந்து, மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய்ல சிவக்க வறுத்துக்கோங்க. பூண்டு, புளி, உப்பு, எள், உளுந்து, மிளகாய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்செடுத்தா போதும், பொடி தயார்! புளிக்காத கெட்டித் தயிர்ல இதைக் கலந்து கம்பு ரொட்டிக்கு தொட்டுகிட்டா.. அட, அட.. அதை நெனச்சாலே எச்சில் ஊறுதே!

இதே மாதிரி கட்டித் தயிர்ல வெல்லத்தைக் கலந்து கம்பு ரொட்டியை அதுல முக்கியெடுத்து கூடவே எள்ளுப் பொடியை தொட்டு சாப்பிட்டுப் பாருங்க. ‘தித்திக்குதே..’னு குஷியாயிடுவீங்க.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மணமும் ருசியும் அத்தனை பிரமாதமா இருக்கற இந்தக் குழம்பை கிராமத்து ஆளுங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க.

அரை கப் காராமணியை சுத்தம் பண்ணி, வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற அளவுக்கு வறுத்து, அளவான உப்பு சேர்த்து வேக வையுங்க. தண்டங்கீரையை ரெண்டு பெரிய தண்டா எடுத்து பொடியா நறுக்கி, உப்பு போட்டு வேகவையுங்க.

2 பெரிய வெங்காயம், 4 தக்காளி இதை பொடியா நறுக்கிக் கங்க. ரெண்டு முழு பூண்டை எடுத்து உரிச்சு வைங்க. வடை சட்டில 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை காயவெச்சு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம் இதையெல்லாம் தாளிச்சு, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்க. வதங்கினதும் தக்காளியச் சேர்த்து வதக்கணும். காராமணி, கீரை இதையெல்லாம் வேக வெச்ச தண்ணி இருக்குமில்லையா அதுல கொஞ்சமா புளியை ஊறவெச்சு கரைச்சு வடிகட்டி அந்த கரைசலை தக்காளியோட சேர்த்துடுங்க. அதோட ரெண்டரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. பச்சை வாடை போனதும் மூணு பல் பூண்டை நசுக்கி குழம்புல போடுங்க. கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு மூடி வெச்சு அடுப்பை அணைச்சுடுங்க.

கமகமக்கற இந்த காராமணிக்குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு எல்லாத்துக்கும் ரொம்ப அருமையா இருக்கும்.

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

மாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா? – அ.ஐஸ்வர்யா


CAT, GRE, GMAT, GATE மாதச் சம்பளம் 5,00,000 ரூபாய் நீங்கள் தயாரா?

முதுகலைப் பட்டம் படிக்கிறீர்கள். படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் எவ்வளவு எதிர்பார்ப்பீர்கள்? 5,000, 20,000 அல்லது 50,000 ரூபாய்கள். கொஞ்சம் மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்… ஐந்துலட்சம் ரூபாய் என்றால் ஓ.கே-வா?

நீங்கள் திறமையானவராக இருந்தால் அதற்கு மேலும் கொட்டிக் கொடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

CAT (Common Admission Test), GRE (Graduate Record Examination), GMAT (Graduate Management Admission Test), GATE (Graduate Aptitude Test in Engineering)… இந்த நுழைவுத் தேர்வுகள்தான் வளமான வாய்ப்புகளுக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் முள்வேலி. இந்த வேலியைக் கடந்துவிட்டால், குறைந்தபட்சமே லட்சங்களில்தான் சம்பளம் துவங்கும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்து வேலை செய்பவர்கள்கூட, வேலையை உதறிவிட்டு இந்த நுழைவுத் தேர்வினை எதிர்கொண்டு தங்கள் எதிர்காலத்தை அப்டேட் செய்துகொள்கிறார்கள். M.B.A., M.S., M.Tech போன்ற முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை வழங்குபவைதான் அந்த நுழைவுத் தேர்வுகள். கலை அல்லது இன்ஜீனியரிங் போன்ற ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி என்பதுதான் இந்தப் படிப்புகளுக்கான அடிப்படைத் தகுதிகள். இந்தியாவில் IIM, XLRI, அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, மசாச்சூசட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) போன்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது அவசியம். இவை அனைத்தும் உலகத் தரக் கல்வி நிறுவனங்கள். இங்கு படித்துத் தேர்ச்சியடையும் அனைவருக்கும் உலகின் ‘டாப் 100’ நிறுவனங்களில் வாய்ப்புகள் நிச்சயம் காத்திருக்கும்.

”ஒரு துளி பிழைக்கும் இடம் கொடுக்காத இந்தத் தேர்வுகளில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் எவரும் சாதிக்கலாம்!” என்று நம்பிக்கை வார்த்தை சொல்கிறார் ரகுநாத். CAT, GRE, GMAT தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்திய அளவில் முத்திரை பதித்திருக்கும் ‘TIME’ (Triumphant Institute of Management Education) பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் இவர்.

”இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் நடத்தும் சிகிஜி தேர்வு மிகவும் கடினமானது என்ற பிம்பம் இருந்தாலும், இளைஞர்களின் ‘மோஸ்ட் வான்டட்’ தேர்வும் அதுதான். காரணம், அந்தத் தேர்வு முடிவினைத்தான் கிட்டத்தட்ட 100 மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் கணக்கில்கொள்கின்றன.

வெர்பல்(verbal) எனப்படும் ஆங்கில அறிவுத் திறன் சார்ந்த கேள்விகள், குவான்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் (quantitative aptitude) எனப்படும் கணிதத் திறன் சார்ந்த கேள்விகள், லாஜிக்கல் ரீசனிங் (logical reasoning) எனப்படும் யோசிக்கும் திறன் சார்ந்த கேள்விகள்தான் அனைத்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுத் திட்டங்களிலும் இடம்பெறும்.

CAT தேர்வினில் 60 முதல் 70 கேள்விகள் வரை கேட்கப்படும். இந்தத் தேர்வினை time stressed test என்று கூறலாம். சென்ற ஆண்டு முதல் இந்தத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஆனால், அது மீண்டும் பேப்பர் – பென்சில் தேர்வாக மாற்றப்படலாம் என்பதால், இரண்டுவிதமான தேர்வுகளுக்குமே மாணவர்கள் தயாராக இருப்பது நல்லது. சரியான பதில் ஒன்றுக்கு 7.5 மதிப்பெண்கள். தவறான ஒவ்வொரு பதிலுக்கும் தலா 2.5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். பொதுவாக, நமது மாணவர்கள் ஆப்டிட்யூட் பகுதியில் பெரும்பாலும் கெட்டி. ஆனால், வெர்பல் பகுதியில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். ஆனால், எந்தப் பயமும் பதற்ற மும் இல்லாமல் இவற்றைச் சமாளிக்கலாம்.

M.S படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு GRE. இந்தத் தேர்வை நடத்துவது அமெரிக்காவைச் சேர்ந்த ETS -Educational Testing Service என்ற அமைப்பு. இதை எழுத விரும்புபவர்கள் அதன் வெப்சைட்டில் (www.ets.org/gre) பதிவு செய்ய வேண்டும். 180 டாலர்கள் கட்டணம். தேர்வை வருடத்தின் எந்த நாளிலும் எழுதலாம். வெர்பல் பகுதிக்கு 800 மதிப்பெண்களும், குவான்ட்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிக்கு 800 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. இதில் ஒரு இந்திய மாணவர் 700-க்கும் குறைவாக ஆப்டிட்யூட் பகுதியில் மதிப் பெண்கள் வாங்கினால், அவரை ஒரு திறமைசாலியாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் கருதுவது இல்லை. ஆனால், இதற்காகப் பயப்படத் தேவை இல்லை. நம் நாட்டின் பள்ளிக்கூடக் கணிதப் பாடத் திட்டங் களைப் போலத்தான் இருக்கும் கேள்விகள். வெர்பல், ஆப்டிட்யூட் பகுதிகளுக்குச் செல்லும் முன், அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வு வைப்பார்கள். அதில் இரண்டு தலைப்புகள் கொடுத்து அதைப்பற்றிக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். இந்த இரண்டு கட்டுரைகளும் ஏதேனும் சிக்கலான சூழ்நிலைக்குத் தீர்வு சொல்வதாக அமையும். உதாரணமாக, கூவம் நதியைச் சுத்திகரித்து சிங்காரச் சென்னையைச் சாத்தியப்படுத்துவது எப்படி?’ என்பது மாதிரியான கேள்விகள். வெர்பல், குவான்டிடேட்டிவ் பகுதிகளின் முடிவுகள் தேர்வு முடிந்த உடனே தெரிந்துவிடும். அனாலிட்டிகல் ரீசனிங் தேர்வின் முடிவு ஆறு வாரங்களுக்குப் பிறகே நமக்கு அனுப்பிவைக்கப் படும்.

கொஞ்சம் கவனத்தோடு எழுத வேண்டிய தேர்வு GRE. ஏனென்றால், ஒரு முறை விடை அளித்த பிறகு, அந்தக் கேள்விக்கான பதிலை மாற்ற முடியாது. தெரியவில்லை என்பதற்காக, எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் விட்டுவிடவும் முடியாது. GRE தேர்வுடன் சேர்த்து TOEFL எனும் மற்றொரு தேர்வையும் எழுதினால்தான் வெளிநாடு களில் M.S. படிக்க முடியும். ஆங்கிலம் அல்லாத வேறு ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் ஆங்கிலத் திறமையை நிரூபிக்கும் தேர்வுதான் TOEFL. வாசிப்பது, எழுதுவது, கவனிப்பது, பேசுவது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்கள் ஆங்கிலத் திறனைச் சோதிப்பார்கள். இதில் மொத்த மதிப்பெண்களான 120-ல் ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்கள்கூட சர்வசாதாரணமாக ஸ்கோர் செய்யலாம். நல்ல தயாரிப்பு இருந்தால் முழு மதிப்பெண்களையும் பெறலாம்.

பொதுவாகவே, CAT, GRE தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு, GMAT தேர்வு சுலபமானதாகவே இருக்கிறது. இந்தத் தேர்வு வெளிநாட்டுப் பல்கலைக்கழக M.B.A., படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வு. இதன் வெர்பல் பகுதி மற்ற நுழைவுத் தேர்வுகளுடன் ஒப்பிடும் போது சற்றே கடினமானது. GMAT தேர்வு முடிவுகள் மட்டுமே வெளிநாட்டு M.B.A., படிப்புகளுக்குப் போதுமானது இல்லை. குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது வேலை அனுபவம் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்களையே ஏற்பார்கள். ஆனால், இந்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு முடித்த ஃப்ரெஷர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த GMAT தேர்வுக்கும் TOEFL தேர்வு கட்டாயம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் IELTS எனும் தேர்வையும் ஆங்கிலத் திறனுக்கான தகுதியாக நிர்ணயித்திருக்கின்றன. ஏதேதோ சொல்கிறார்களே என்று தயங்க வேண்டாம். எல்லா படிப்புகளுக்கு மான அடிப்படைகள்தான் இவற்றுக்கும். தினசரி பயிற்சியும் முயற்சியும் இவற்றுக்கான கூடுதல் தேவைகள்!” என்று முடிக்கிறார் ரகுநாத்.

சென்ற ஆண்டு GRE தேர்வில் 1,540 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் வித்யா வெங்கட், அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகத்தில் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் படிப்பில் சேர்ந்திருக்கிறார். ”GRE தேர்வில் வெர்பல் பிரிவு கொஞ்சம் கஷ்டம்தான். அதனால் படிக்கும்போதே அதற்காக நிறைய நேரம் செலவிடுவது நல்லது. பொதுவாக, வெர்பல் தொடர்பான கேள்விகள் Barro’’s புத்தகத்தில் இருந்துதான் கேட்கப்படும். அதனால், அந்தப் புத்தகத்தை அட்டை டு அட்டை புரட்டிப் பார்ப்பது நல்லது. தேர்வில் முதல் 15 கேள்விகளுக்கு அவசரப்படாமல் பதில் கூற வேண்டும். முதல் 15 கேள்விகளில் நாம் எப்படிப் பதில் சொல்கிறோமோ அதை வைத்துதான், அடுத்தடுத்த கேள்விகளின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படும். எனவே, நிதானமாக யோசித்துப் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்படும். அதனால் GRE தேர்வைப் பொறுத்தவரை, கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் நல்லது. பல பல்கலைக்கழகங்களும் GRE ஸ்கோரைவிட நம் இன்ஜினீயரிங் புராஜெக்ட்டுகள், மதிப்பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். எனவே, ஆரம்பம் முதல் அம்சமாக வைத்துக்கொள்ளுங்கள்!” என்கிறார் வித்யா.

GATE தேர்வில் அகில இந்திய அளவில் 18-வது இடம் பிடித்த ஜாஃபர், சென்னை I.I.T-யில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜீனியரிங் படிக்கிறார். இன்ஜினீயரிங் மாணவர்கள் முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுதான் GATE. அதை எதிர்கொள்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ஜாஃபர். ”ஒருமுறை எழுதிய GATE தேர்வின் மதிப்பெண்கள் அடுத்த இரண்டு வருடங்களுக்குச் செல்லும். சமயங்களில் ஒரு வருடத்துக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் எனத் திடீர் குண்டைத் தூக்கிப் போடுவார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். இன்ஜினீயரிங் படிப்பை ஓரளவுக்கு ஒழுங்காகப் படித்திருந்தாலே, GATE தேர்வை எளிமையாக எதிர்கொள்ளலாம். போன வருடம் வரை பாடங்களில் இருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்டனர். இந்த வருடத்தில் இருந்து ஆப்டிட்யூட் கேள்விகளும் இடம்பெறலாம் எனச் சொல்கிறார்கள்.

I.AS., I.P.S. மாதிரியான ஒரு படிப்புதான் I.E.S (Indian Engineering Service). அது படித்தவர்களைத்தான் இந்தியாவின் உயர் தொழில்நுட்பப் பிரிவுகளில் தலைமைப் பொறுப்புகளில் நியமிப்பார்கள். GATE தேர்வுக்குத் தயாரானவர்களுக்கு I.E.S தேர்வுகள் ரொம்பவே சுலபமாகத்தான் இருக்கும். அதே மாதிரி, பெல், ஐ.ஓ.சி.எல்., எல்.அண்ட்.டி மாதிரியான நிறுவனங்கள் GATE தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவர்களை எழுத்துத் தேர்வே இல்லாமல் நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். வரும் நாட்களில் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு GATE தேர்வின் மதிப்பெண்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். டெக்னிக்கல் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் GATE ஸ்கோர் கேட்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!” என்கிறார் ஜாஃபர்.

இந்த வருட CAT தேர்வில் 99.81% மதிப்பெண்கள் பெற்றிருக்கும் அஷோக், ஏற்கெனவே எட்டு வருட வேலை அனுபவம் உள்ளவர். அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய I.I.M களில் இருந்து ஒரே நேரத்தில் அழைப்பு வந்திருக்கிறது இவருக்கு. பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகிறார் இவர். ”மற்றவர் களோடு ஒப்பிடும்போது நமது திறன் எந்த இடத்தில் இருக்கிறது. எத்தனை போட்டியாளர்களை நாம் கடக்க வேண்டும் போன்ற விஷயங்களை அகில இந்திய அளவிலான மாதிரித் தேர்வுகளில் கலந்துகொள்வதன் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். நான் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். படிப்பு விஷயங்களில் ரொம்பவே ‘டச்’ விட்டுப் போயிருந்ததால், அடிப்படை விஷயங்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால், வகுப்பில் சேர்ந்த புதிதில் பேனா பிடித்து எழுதவே வரவில்லை!” என்று சிரிக்கும் அஷோக்கின் அகில இந்திய ரேங்க் 480. இந்த ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்தப் படிப்புகளுக்கான செலவுகள் லட்சங்களில் எகிறும் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆனால், விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால், இந்த உலகத்தையே வடிவமைக்கும் பொறுப்பு நாளை உங்கள் கைகளில். அதற்கு உண்டான தகுதிகளை இன்றே வளர்த்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே!

படங்கள்: ஆ.முத்துக்குமார், து.மாரியப்பன்

———————————————————————————-

நன்றி:-அ.ஐஸ்வர்யா

நன்றி:-ஆ.வி

===================================================================

சிரிப்போ சிரிப்பு


“ நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”

“ கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால தூக்கி போட்டுட்டாங்களாம்!”

***************

”எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம் பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!”

” ஏன் என்னாச்சு!”

நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல இலவசமா வருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க!”

***************

“ உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!”

” ஏன் என்னாச்சு!”

” ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!”

***************

‘’ பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”

‘’ செல்போன் ரீ-சார்ஜ் கர்ர்ட சுரண்டிகிட்டு இருக்கார்.”

***************

”காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”

“ பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”

***************

“ நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு கூப்பிட்டிருப்பாங்க!”

“ நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு தாராளமா கூப்பிடுவாங்க!”

***************

” இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”

“ கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி நடிக்க முடியும்

***************

“ திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே ஏன்?”

“ நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு கேட்டீங்க

***************

“மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?”
” கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!”

******

” நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?”
” எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!

****************

” மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!”
” ஏன் முடியாது?”
” எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்”

******************

” மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்”
” அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!”

**************

” இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?”
டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்!”

****************

” செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!”
” போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!”

***************

” நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!”
” ஏன், என்ன நேர்ந்தது?”
” புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!’

***************

” நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!”
” அதென்ன பாய் அடி?”
” ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!”

**************

” மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!”
” நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!”

**************
” நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?”
” வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!”

***************

” ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?”
” மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!”

***************

” தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!”
” அப்படி என்ன கேட்டுட்டார்!”
” பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!”

*****************

” எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?”
” தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!”

****************

” எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!”
த்ரி-ஷா தான்”

****************

” போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!”
” ஏன் என்னாச்சு?”
” லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!”

**********************
‘’ இப்பொழுது மழை எதுவும் இல்லை, பிறகெதுக்கு குடை ரிப்பேர் காரன் அரண்மனைக்குள் வந்துள்ளான்?’’

‘’ நமது வெண்கொற்றக்குடையிலிருக்கும் ஓட்டையை பார்த்திருப்பான் மன்னா!’’

*******************

‘’ புற வழிச்சாலையின்னு அறிவிப்பு பலகை இருந்தத மாற்றி புறமுதுகுச்சாலையின்னு எழுதியிருக்கிறாங்களே! ஏன்?’’

’’ வழக்கமா மன்னர் இந்த வழியாத்தான் புறமுதுகிட்டு ஓடி வருவாராம்!’’

**************************

‘’ இருமலுக்கு டாக்டர் ஊசி போட்டப்போ லொக்கு லொக்குன்னு இருமுன தாத்தா நர்ஸ் நமீதா ஊசி போட்டதும் வேற மாதிரி இருமுறாரு!’’
‘’ எப்பிடி?’’
‘’ லக்கு லக்குன்னு இருமுறாரு”

——————————————————————————————————

நன்றி:- இடை வெளிகள்

நன்றி:- ஐ.பு. பால்ராசய்யா

===============================================================================