தொகுப்பு

Archive for ஏப்ரல் 3, 2010

சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில் – M.அன்வர்தீன்


சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்!
முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை”  (அல்-குர்ஆன் 4:142)

எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.

சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: –

ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்

தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்

எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!

இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!

நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.

‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.

சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில்  இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.

நன்றி:-M. அன்வர்தீன்

நன்றி:-சுவனத்தென்றல்

********************

முன்மாதிரி முஸ்லிம் – நஃப்ஸுடன், உடற்பயிற்சி, உடல், உடை


முஸ்லிம் தனது நஃப்ஸுடன்

முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல் மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்து கொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்னு ஹன்ளலிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து தங்களது தோழர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்: “நீங்கள் உங்கள் சகோதரர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். உங்களது வாகனத்தின் சேணங்களை சரி செய்து, ஆடைகளை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதர்களில் தனித்தன்மை கொண்டவர்களாக காட்சியளிக்க முடியும். நிச்சயமாக அல்லாஹ் அசிங்கமானதையும் அருவருப்பானதையும் நேசிப்பதில்லை.” (ஸுனன் அபூதாவூத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பரிதாபத் தோற்றம், கிழிந்த அடைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிலையை இஸ்லாம் வெறுக்கிறது.

உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். எனெனில், ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. உண்மை முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மாவுக்கு மத்தியில் சமத்துவத்தைப் பேணவேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். ஒன்றைவிட மற்றொன்றை உயர்த்தி விடக்கூடாது. இதுபற்றி நடுநிலையை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைக் காண்போம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனது அளவுக்கதிகமான வணக்கங்களைப்பற்றி அறிந்து, என்னிடம் “நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?” என்று கேட்டார்கள். நான் “ஆம் இறைத்தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்; நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்தவேண்டிய கடமைகள் உள்ளன” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மா ஆகியவற்றுக்கிடையே சமத்துவத்தைப் பேணுவார்
அ – அவரது உடல் நலம். உண்பது, குடிப்பதில் நடுநிலையானவர்
முஸ்லிம் தனது உடல் நிலையை அரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உண்பது, குடிப்பதில் நடுநிலையைப் பேணுவார். உணவை பேராசையுடன் அணுகவும் மாட்டார், முற்றிலும் குறைக்கவும் மாட்டார். அவரது முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கவேண்டும், அவரது வலிமையும், ஆரோக்கியமும் உற்சாகமும் காக்கப்படவேண்டும். இதுவே உணவுக்கான அளவுகோலாகும்.

(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்அன் 7:31)

உண்பது, குடிப்பதில் நடுநிலையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக் கெட்டது அவனது வயிறாகும். சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியைக் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.” (ஸுனனுத் திர்மிதி)

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். எனெனில் அது ஆரோக்கியத்தைப் பாதித்து நோய்களை உருவாக்கும்; தொழுகையில் சோம்பலை எற்படுத்தும். அந்த இரண்டிலும் நடுநிலையை மேற் கொள்ளுங்கள். அது உடலை சீர்படுத்தி வீண் விரயத்தைத் தவிர்க்கும். நிச்சயமாக அல்லாஹ் கொழுத்த உடல்களை முற்றிலும் வெறுக்கிறான். நிச்சயமாக மனிதன் மார்க்கத்தைவிட தனது மனோ இச்சையைத் தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்.” (அல் கன்ஜ்)

முஸ்லிம் போதைப் பொருட்களையும், செயற்கை உற்சாகத்தை அளிக்கும் மருந்துகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவைகளில் ஹராமானவைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விரைவாக உறங்கி விரைவாக எழுந்திட வேண்டும். நோய்க் காலங்களில் மட்டுமே மருந்து சாப்பிடவேண்டும். அவரது வாழ்க்கை முறையே இயற்கையான உற்சாகத்திற்கும் அரோக்கியத்திற்கும் காரணமாக அமைய வேண்டும்.

உடல் வலிமைமிக்க மூஃமின் பலவீனமான முஃமினைவிட அல்லாஹ்வுக்கு மிக உவப்பானவர் என்பதை உண்மை முஸ்லிம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். எனவே உடல் வலிமையைப் பேண தனது வாழ்வில் அரோக்கிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்து வருவார்
முஸ்லிம் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட இன்னும் உடலுக்குத் தீங்கிழைக்கும் அனைத்து வகையான உணவு, பானங்களை ஒதுக்கி விடுவார். இரவில் வீணாக விழித்திருப்பது போன்ற உடலையும் உள்ளத்தையும் பலவீனப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்து தவிர்ந்திருப்பார். இதனால் அவர் வலிமையும் ஆரோக்கியமும் உடையவராக இருப்பார். மேலும் தனது உடலுக்கு அதிக வலிமை சேர்க்க முயற்சி செய்து வருவார். தனக்குத் தானே ஒர் ஆரோக்கிய வழிமுறையை வகுத்துக் கொண்டு அதுவே போதுமென்று இருக்கமாட்டார். அவரது சமூக அமைப்பு, வயது, உடல் நலனுக்கேற்ப உடற்பயிற்சியைக் கற்று ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்ளவேண்டும்.

முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அழகிய உடலமைப்பைப் பெற்றுத்தரும். உடற்பயிற்சிக்கான நேரங்களை குறிப்பாக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சியின் முழுப்பலனையும் அடைந்துகொள்ள முடியும். இது அனைத்தும் எல்லாக் காலங்களிலும் நடுநிலையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பதன் மூலமே சாத்தியமாகும்.

உடல், உடையில் தூய்மையானவர்
இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிம், மக்களிடையே மிகத் தூய்மையானவராக இருக்க வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சிறந்த முறையில் குளித்து மணம் பூசிக்கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஜுமுஆ நாளில் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள்.

“நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இல்லையென்றாலும் ஜுமுஆ நாளில் குளித்து, தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்! மணம் பூசிக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குளித்து தூய்மையாக இருப்பதைப் பற்றி மிகவும் வலியுறுத்தியதால் சில இமாம்கள் ஜுமுஆ தொழுகைக்காக குளிப்பது வாஜிப் எனக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு முஸ்லிமும் வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாள் குளித்துக்கொள்வது கடமையாகும். அப்போது தனது தலையையும் உடலையும் கழுவிக் கொள்வாராக!” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது உடை, காலுறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் உடலில் வெறுக்கத்தக்க துர்நாற்றம் வருவதை அவர் விரும்பமாட்டார். நறுமணத்தின் துணையுடன் அதை தவிர்த்துக் கொள்வார்.

அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் “ஒருவர் தன் செல்வத்தின் மூன்றில் ஒரு பகுதியை வாசனைத் திரவியங்களுக்காகச் செலவிட்டாலும் அவர் வீண் விரயம் செய்தவராகமாட்டார்” என்று கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

பேணுதலான முஸ்லிம் ஒவ்வொரு நாளும் மிஸ்வாக், பிரஷ் போன்ற சாதனங்களின் மூலம் தனது வாயைத் தூய்மைப்படுத்தி பிறருக்கு நோவினை தரும் வாயின் துர்நாற்றத்தை அகற்றிடவேண்டும். வருடத்தில் ஒருமுறையேனும் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். அவ்வாறே தேவை எற்பட்டால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடமும் சிகிச்சை பெறவேண்டும்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் இரவிலோ பகலிலோ தூங்கினால் விழித்த உடன் உளுவுக்கு முன் மிஸ்வாக் செய்வார்கள்.” (ஸன்னன் அபூதாவூத்)

வாயை தூய்மையாக வைத்திருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவமளித்துக் கூறினார்கள்: “எனது உம்மத்தினருக்கு சிரமம் எற்படாது என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்யும்படி அவர்களை நான் ஏவியிருப்பேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அன்னை அயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் எந்தக் காரியத்தை முதன் முதலாகச் செய்வார்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அன்னையவர்கள் “மிஸ்வாக்’ என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மிஸ்வாக் என்பது இஸ்லாமின் கெªரவச் சின்னமாக இருந்தும் சில முஸ்லிம்கள் இது விஷயத்தில் அலட்சியம் காட்டுவது வருந்தத்தக்க தாகும். அவர்கள் தங்களது, உடல், உடை மற்றும் வாயின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் இறையில்லங்கள் மற்றும் மார்க்க உபதேச சபைகள், கல்வி மற்றும் ஆலோசனை அரங்குகளில் பங்கேற்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் துர்நாற்றம் சபையோரைத் துன்புறுத்துகிறது. இறையருள் இறங்கும் இவ்வாறான சபைகளில் சூழ்ந்துகொள்ளும் மலக்குகளையும் வெறுப்படைய செய்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது; அது மனிதர்கள், மலக்குகளுக்கு நோவினை எற்படுத்தும் என்ற நபிமொழியை அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெங்காயம், பூண்டு, உள்ளியை சாப்பிட்டவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். எனென்றால், மனிதர்களுக்கு சங்கடம் எற்படுத்தும் விஷயங்களால் மலக்குகளும் சங்கடம் அடைகிறார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கெட்ட வாடையுடைய சில காய்களை சாப்பிட்டவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையத் தடை விதித்தார்கள். அவர்களது துர்நாற்றமுள்ள வாடையால் மனிதர்கள், மலக்குகள் நோவினை அடையக்கூடாது என்பதுதான் தடைக்குக் காரணமாகும். பொடுபோக்கும், அலட்சியமும் உடைய சிலரின் வாய்நாற்றம் அருவருப்பை எற்படுத்துகிறது. உடல் மற்றும் அழுக்கடைந்த ஆடைகள், காலுறைகள் இவைகளிலிருந்து வெளிப்படும் கெட்ட வாடையாலும் பலர் பாதிப்படைகின்றனர்.

அஹ்மது மற்றும் நஸாஈ (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது அழுக்கடைந்த ஆடை அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “தனது ஆடையைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் இம்மனிதருக்குக் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்கள்

தனது ஆடையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான வசதியைப் பெற்றிருந்தும் அழுக்கடைந்த ஆடைகளுடன் மக்களிடையே வருபவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். முஸ்லிம்கள் தூய்மையான ஆடை, அழகிய, கம்பீரமான தோற்றத்துடனேயே எப்போதும் காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தான் வழமையாக அணியும் கீழாடை, மேலாடையைத் தவிர முடிந்தால் ஜுமுஆ நாளுக்காக மற்றொரு ஆடையைத் தயார் செய்து கொள்ளட்டும்.” (ஸன்னன் அபூதாவூத்)

இஸ்லாம் மனிதர்களை எல்லா நிலையிலும் தூய்மையைப் பேணி நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தூய்மையான நறுமணப் பொருட்களின் மூலம் உடலில் நறுமணம் கமழச் செய்வது அவசியமாகும். இதுவே நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக இருந்தது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களின் உடலிலிருந்து வெளியான நறுமணத்தைவிட அதிக நறுமணமுடைய கஸ்தூரியையோ அம்பரையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நான் நுகர்ந்ததேயில்லை.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் உடல் மற்றும் ஆடைகளின் தூய்மை குறித்தும், அவர்களது வியர்வையின் நறுமணம் குறித்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. அன்னார் எவரையேனும் முஸப்ஃபஹா (கைலாகு) செய்தால் அன்றைய நாள் முழுவதும் அவரது கரத்தில் நறுமணம் கமழும். அவர்கள் குழந்தைகளின் தலைமீது அன்புடன் தடவிக்கொடுத்தால் அக்குழந்தைகளிடமிருந்து நறுமணம் வீசும்.

ஜாபிர் (ரழி) அவர்கள் வழியாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது “தாரீகுல் கபீர்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஒரு வீதியில் நடந்து சென்றால் அதற்குப்பின் அந்த வீதியில் நடப்பவர் அங்கு எழும் நறுமணத்தைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றதை அறிந்து கொள்வார்.”

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களின் இல்லத்தில் உறங்கினார்கள். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறியது. அனஸ் (ரழி) அவர்களின் அன்னையார் ஒரு பாட்டிலைக் கொண்டுவந்து அதில் அந்த வியர்வையை சேகரித்தார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்கள் வினவியபோது அவர் “இது உங்களது வியர்வை; இதை நாங்கள் எங்களது வாசனைத் திரவியங்களில் சேர்த்துக் கொள்வோம்” என்றார்கள். அந்த அளவு அது மிகச் சிறந்த வாசனைத் திரவியமாக இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

தலைமுடி பற்றியும் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உண்டு. அதை சீர்செய்து இஸ்லாம் கற்பித்த நெறியின் அடிப்படையில் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவருக்கு முடி இருக்கிறதோ அதற்கு அவர் கண்ணியமளிக்கட்டும்.” (ஸன்னன் அபூதாவூது)

இஸ்லாமியப் பார்வையில் முடியைக் கண்ணியப்படுத்துவது என்றால் அதைத் தூய்மைபடுத்துவது, எண்ணெய் தேய்ப்பது, சீவிக் கொள்வது மற்றும் அழகிய வடிவில் அதைப் பேணுவதைக் குறிக்கும். தலைவிரி கோலமாக வரண்டுபோன தலைமுடியைத் தொங்கவிட்டுக் கொண்டு மக்களிடையே வருவது சபிக்கப்பட்ட ஷைத்தானின் உருவத்துக்கு ஒப்பாகிவிடும் என்ற காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

அதா இப்னு யஸப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முவத்தாவில் குறிப்பிடுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தலைவிரி கோலமாக ஒழுங்கற்ற தாடியுடன் உள்ளே நுழைந்தார். அவரை நோக்கிய நபி (ஸல்) அவர்கள் அவரது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்து கொள்ளும்படி தனது திருக்கரத்தால் சைக்கினை செய்தார்கள். அவர் சீர்செய்துவிட்டுத் திரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று தலைவிரிகோலமாக வருவதைவிட இப்படி வருவது சிறந்ததல்லவா?” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தலைவிரிகோலமாக இருப்பதை சபிக்கப்பட்ட ஷைத்தானுடன் ஒப்பிட்டது, முஸ்லிம் அழகும் கம்பீரமும் உடையவராக தோற்றமளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அசிங்கமாக, அருவருப்பாக தோற்றமளிப்பதை வெறுத்ததும்தான் காரணமாகும். மனிதன் தனது தோற்றத்தில் அழகையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்துவதை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். எவரேனும் தலைமுடியை சீர்செய்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் அவர்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களை சந்திக்க வந்தார்கள். அப்போது தலைமுடி கலைந்து தலைவிரிகோலமான ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது “இம்மனிதருக்கு தனது தலைமுடியை சீர்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் கிட்டவில்லையா?” என்று கேட்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)

நன்றி:- அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி

தமிழில் கா.ஹுஷைன் கனி, அ. உமர் ஷரீஃப்.

வெளியீடு தாருல் ஹுதா. சென்னை

நன்றி:- Read Islam

கடி(மொக்கை) ஜோக்ஸ்


1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

 ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

 சீனாவுல தான் பிறந்தது…..ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

 நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

6) மூன்று மொக்கைகள்: a) நைட்’ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்’ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

 b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

 c) எல்லா stage’லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ‘ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…என்ன கொடும சார் இது?….

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி… தூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…

10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது… சொல்லட்டுமா?

 பெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

11) True GK Facts:

** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.

** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.

** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.

** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?…..

12) ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்?

 ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி – 14 !

 அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி – 14 !!

13) மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…கணவன்: அடி செருப்பால! … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2.அழகு

3.நல்ல டைப்

4.கொழந்த மனசு…

5.இதெல்லாம் பொய்’ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

 மகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி….முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி….

17) தத்துவம்2010

” லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”!

” கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”!!

இதெல்லாம் ஒரு மெசேஜ்’ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்…

நன்றி & தகவல்:- Ghouse Hafil


ஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்! – ரவிக்குமார் எம்.எல்.ஏ


ங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா? வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்க ளுக்கு இருக்கிறார்களா? அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்… அவர்கள் நிச்சயம் ‘ஃபேஸ்புக்’ பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணைய தளம் இளைஞர்களிடையே பிரபல மாகி வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்ல… அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்!

டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு

இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

கணினி என்றாலே அது இண்டர் நெட்டுடன் இணைந்த ஒன்றுதான் என்று ஆகிவிட்டது. அலுவலகங்களில் உள்ள கணினிகளும் இன்று இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இணையப் பயன் பாட்டின் உபவிளைவுதான் ஃபேஸ்புக் போன்ற ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணைய தளங்களின் பெருக்கம். ‘மை ஸ்பேஸ்,’ ‘ஆர்குட்’ என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2009-ம் ஆண்டு இறுதி யில் இதைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக இருந்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

‘எனக்கு இன்று மனசு சரியில்லை’ என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்… குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.

மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் ‘சமூக மூலதனம்’ எனச் சொல்லப்படுகிற சமூக உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.

ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ… இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய ‘ப்ரைவஸி’ பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. ‘அதனால் ஆபத்து… இதனால் தொந்தரவு!’ என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலித் தனம்.

வாருங்களேன், ஃபேஸ்புக்கில் சந்திப்போம்!

நன்றி:- ரவிக்குமார் எம்.எல்.ஏ

நன்றி:-  ஜூனியர்  விகடன்

*******************