தொகுப்பு

Archive for ஏப்ரல் 21, 2010

தகவல் பெட்டி-03


v     அட்லாண்டிக் பெருங்கடல்தான், உலகில் அதிக உப்பு நிறைந்த பெருங்கடல் (உலகிலேயே உப்பு அதிகமுள்ள இடம் Dead Sea. இது சற்றுப் பெரிய ஏரி போல அலைகளற்று காணப்படும்!)

v     இங்கிலாந்து நாட்டில் அதன் அரசரோ, அரசியோ போகக்கூடாத இடம் House of Commons. இந்தியாவின் லோக்சபாவுக்கு இணையான இடம் அது.

v     தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பெர்க்கில்தான், உலகின் மிக ஆழமான சுரங்கம் உள்ளது.

v     கேலிபோர்னியாவில் உள்ள ‘டெத் வேலி’ (Death Valley) தான் உலகிலேயே மிகவும் வறண்ட பகுதி.

v     மிகப்பெரிய கால்வாயான பனாமா கால்வாயின் மொத்த நீளம் 64 கிலோ மீட்டர்.

v     பண்டைய ஏழு அதிசயங்களுள் ஒன்று ‘ஜீயஸ்’ (Zeus) கடவுளின் சிலை. கிரேக்கக் கடவுள்களில் மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டவர் இந்த ‘ஜீயஸ்’!

v     வடதுருவத்தை அடைந்த முதல் மனிதனின் பெயர் ராபர்ட் பியரி (Robert Peary).

v     அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அதற்குப் பெயர் கொடுத்தவர் அமெரிக்கோ வெஸ்புகி.

v     பெருங்கடல்களுள் சிறியது ஆர்டிக் பெருங்கடல்.

v     உலகின் மிகப் பரந்த தெரு, நியூயார்க்கில் உள்ள ‘பிராட்வே’.

v     இரான் நாட்டின் பழைய பெயர் ‘பெர்ஸியா’.

v     வெட்டுக்கிளியின் காதுகள், அவற்றின் கால்களில் இருக்கின்றன.

v     பேரரசர்அக்பரின்நினைவிடத்தின்பெயர்‘சிக்கந்த்ரா’ (Sikandra).

v     ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம்.

v     எகிப்திய பிரமிடுகளில் பழங்கால ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது, குலூவின் பெரிய பிரமிடு (Great Pyramid of Khulu).

********************************************************************

நன்றி:- சு.வி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்


கோவை, ஏப்.20: ஆன்லைன் “சாட்டிங்’ மூலம் நண்பராகும் நபர்களுக்காக வங்கியில் புதிய கணக்கை துவங்கி, ஆன்லைன் மோசடி நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“”வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆன்லைன்  லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. உங்களது முகவரி, மொபைல் எண், வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்”
இந்த வாசகங்களைக் கொண்ட இ}மெயில் பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது.

ஆர்வக்கோளாறும், ஆசையும் இருப்பவர்கள் தொல்லையை விலை கொடுத்து வாங்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இ}மெயிலுக்கு பதில் அனுப்பினும் தொடருவது தொல்லை இ}மெயில்கள் தான். “பண பரிவர்த்தனை செய்வதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தை உடனே செலுத்தி, சில கோடிகளில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ எனத் தெரிவிக்கப்படும். இதை நம்பி, பணத்தை செலுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணமும் கிடைக்காது. மீண்டும் இ}மெயிலும் வராது.

கோவையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேலையைத் துவங்கியுள்ளது ஆன்லைன் மோசடிக் கும்பல். கோவையில் உள்ள முக்கியமான

5 ஹோட்டல்களுக்கு “அல்-கொய்தா’ பயங்கரவாத அமைப்பின் பெயரில் மிரட்டல் இ -மெயில் வந்தது.

அந்த இ-மெயில் முகவரிக்கு பதில் அனுப்பிய கோவை போலீஸôர், அவர்கள் கேட்கும் பணத்தை தருவதாகத் தெரிவித்தனர். ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து, அதில், பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி மீண்டும் இ}மெயில் வந்தது.

இ-மெயிலில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கு யாருடையது என போலீஸ் விசாரித்தது, கோவையில் தங்கிப் படிக்கும் ஒரு நைஜீரியா இளைஞர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு அது என்பது தெரியவந்தது.      மேலும், அந்த இ}மெயில் தில்லியில் இருந்து அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை போலீஸôர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், “தனக்கு “சாட்டிங்’ மூலம் தில்லியில் உள்ள ஒருவர் நண்பரானார். வங்கிக் கணக்கை துவங்கி, அந்தக் கணக்கு எண்ணை அனுப்பினால், ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும் என்றார். இதை நம்பி, நான் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் பெற்றுக் கொண்டேன். வெடிகுண்டு மிரட்டல் இ}மெயிலுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது’ எனத் தெரிவித்துள்ளார்.

மோசடிக் கும்பல் பெரும்பாலும், “சாட்டிங்‘ இணையதளங்களை பயன்படுத்தி, புதிய நண்பர்களை உருவாக்குகின்றனர். அவர்களிடம் நைசாகப் பேசி, வங்கிக் கணக்கை துவக்க வைக்கிறார்கள். பிறகு வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பரிவர்த்தனை ஐடி, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த வங்கிக் கணக்கை கொடுத்து, அதில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள் மோசடி நபர்கள்.

பணம் கொடுக்காமல், போலீஸôருக்கு தகவல் கொடுத்தாலும், வங்கிக் கணக்கு  அவர்களது பெயரில் இல்லாததால், சட்டப்படி அவர்கள் மீது போலீஸôரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

“சாட்டிங்’ மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி, வங்கிக் கணக்கு விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம்’ என எச்சரிக்கிறது சைபர் சொசைட்டி ஆப் இந்தியா.

ஆன் லைனில் நடைபெறும் மோசடிகள் குறித்து இந்த விழிப்புணர்வை அது ஏற்படுத்தி வருகிறது.

“லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறும் “பிஸ்ஸிங்’ இ}மெயில்களை நம்ப வேண்டாம். அத்தகைய இ}மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். முடிந்த அளவிற்கு வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் ஆகியவற்றை ரகசியமாக வைக்க வேண்டும். அவற்றை இ}மெயிலில் சேகரித்து வைக்கக் கூடாது’ என்கின்றனர் சைபர் சொசைட்டி நிர்வாகிகள்.

————————————————————————————-

நன்றி:-தினமணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முரண்பாடுகளை முறியடிப்போம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.


உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;

விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;

நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;

பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;

நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;

பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;

நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;

அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;

மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;

உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;

அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;

வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;

ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;

விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;

வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;

காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;

அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?

உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;

அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;

இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;

“உலக அமைதி”க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;

வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே– என்பதே யதார்த்தம்;

இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக “விவாகரத்து” பெருகுவதே அவமானம்;

அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;

காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;

தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை…………………..!!!!!

சிரிப்பு மாமு சிரிப்பு-02


‘‘நண்பா… நேத்து அவசர வேலையா நான் வெளியே கிளம்பும்போது நீ வந்துட்டே! வேறவழியில்லாம நான் வீட்லயே இருக்க வேண்டியதாப் போச்சு… ராகுகாலம் வந்தால் வெளியே கிளம்பக்கூடாதாமே…!’’

————————————————————————————————————————-
‘‘‘சிங்கம் போல நடந்து வர்றான் செல்லப் பேராண்டி’னு உன்னைப் பார்த்து, உன் பாட்டி பாடினாங்களாமே! ஏண்டா வீட்டுக்குப் போகும்போது தவழ்ந்து போற அளவுக்கா தண்ணியடிச்சிருந்தே?!’’

————————————————————————————————————————-

‘‘கழுத்துலதங்கச் சங்கிலிபோட்டுக்கிட்டு கலக்குறே மச்சான்.. சங்கிலியும் கழுத்துமா உன்னை பார்க்கறப்ப எங்க வீட்டு டாமி ஞாபகம்தான் வருது!

————————————————————————————————————————-
‘‘நண்பா! ‘என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்… என் ஃபுல்சப்போர்ட்டும் உனக்குத்தான்’னு சொல்லிட்டு, கடைசியில எனக்கு வெச்சிருந்த என்  ஃபுல் சாப்பாட்டையும் சேர்த்து ஒரு கட்டுக் கட்டிட்டியேடா!’’

————————————————————————————————————————-
‘‘நட்புங்கிறது ஒயின் மாதிரிடா… அது பழசாக ஆக ஸ்வீட்டாகிட்டே இருக்கும்.. உன்னையும் என்னையும் போல! நீ பழசாயிட்டே இருக்கே! நான் ஸ்வீட் ஆயிட்டே இருக்கேன்!’’

————————————————————————————————————————-
‘‘உனக்குத் தெரியுமா? கடலைவிட காதல் ஆழமானது. ஆனா ‘கடலை’ காதலை விட ஆழமானது!

————————————————————————————————————————-
‘‘நண்பா! இன்னிக்கு ஒருத்தர்,  ‘உன் நண்பனைச் சொல்…உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ அப்படின்னாரு! உன் பேரைச் சொன்னேன்… காறித் துப்பிட்டுப் போயிட்டாரு!’

————————————————————————————————————————-
இரண்டு ஆண்யானைகள் பேசிக்கொண்டு நின்றிருந்தன. அப்போது ஒரு பெண் யானை அவற்றைக் கடந்து சென்றது. ஒரு ஆண்யானை, மற்றொரு யானையிடம் சொன்னது| ‘‘பியூட்டிஃபுல்… 3600, 2800.. 3600!’’

————————————————————————————————————————-

‘‘மாப்ளே! நேத்து உன்னோட பழைய காதலியை பஸ்ல பார்த்தேண்டா…இப்பவும் உன் நினைப்புதான் அவளுக்கு. வேண்டாம்டா… இது தப்புடா.. அவகிட்ட வாங்கின ஐந்நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துடுடா. கெட்ட வார்த்தையிலயே உன்னைத் திட்டறாடா!’’

————————————————————————————————————————-
‘‘நீ ரொம்ப அழகாயிருக்கேனு நான் நினைக்கல. நான் உன்னைக் காதலிக்கல. ஆனா, ஏதாவது ஏடாகூடமா நடந்துடுமோனு பயமாயிருக்கு. உன் மூஞ்சியப் பேக்கறதுக்குள்ள ஓடிப்போயிடு!’’

————————————————————————————————————————-
‘‘பங்காளி, நான் துண்டைக் கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்.. துண்டைக் கழுத்தில் போட்டா ஊருக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டை இடுப்பில் கட்டினா கோயிலுக்குப் போறேன்னு அர்த்தம்.. துண்டைத் தலையில் போட்டா கடன் கேக்கறேன்னு அர்த்தம்!’’

————————————————————————————————————————-
‘‘டேய்! நீ சிரிச்சா ரஜினி..பேசினா வைரமுத்து..ஆடினா பிரபுதேவா..பாடினா ஜேசுதாஸ்..படுத்தா உசிலைமணி..வெயிட்டை குறைடா மாப்ளே!’’

————————————————————————————————————————-
‘‘மச்சான்! நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்,  ஒப்புக்கறேன். நீ புறநானூறைப் படிச்சு முடிச்சவன்தான்,  ஒப்புக்கறேன். ஆனா, என்னோட பணம் நானூறை முழுங்கி ஏப்பம் விட்டுட்டியேடா…நீ நல்லா இருப்பியா?’’

————————————————————————————————————————-

‘‘எங்கு சென்றாலும்புதிதாய் என்ன செய்தாலும்உன் குரலைக் கேட்டுவிட்டேஎதுவும் செய்ய விரும்புகிறேன். கழுதை கத்தினால் நல்ல சகுனமாமே!’’

————————————————————————————————————————-

நன்றி:- ஆ.வி

================================================================

சிரிக்க சிந்திக்க-02


ஆஹா ஆடி..!

——————————————————————————————-

(நகைக்கடை அருகே கணவனும் மனைவியும்…)

‘‘சொன்னாக் கேளு, பட்ஜெட் உதைக்குது, மாப்பிள்ளைக்கு அரைப்பவுன்லயே மோதிரம் எடுத்துக்கலாம்.’’

‘‘வேணாங்க. ஆடி பதினெட்டு முதல் நோம்பி. மாப்பிள்ளை கோவிச்சுக்குவார், நமக்கும் மரியாதை இல்லை.’’

‘‘நெனைச்சுப் பாருடி, ஃபிளாஷ் பேக்கை! இதே என் முதல் நோம்பிக்கு ‘தங்கம்’ங்கற பேர்ல ஒரு கடுகை என் விரல்ல போடச் சொல்லிக் கொடுத்தானே உங்கப்பன்! அப்ப எங்கடி போச்சு இந்த மரியாதை?’’

‘‘எங்கப்பன் பொண்ணைக் கொடுத்தது, மளிகைக்கடையில பொட்டலம் கட்டுறவருக்கு… நான் என் பொண்ணைக் கொடுத்திருக்கிறது, ஹோல்சேல் காய்கறி மண்டி ஓனருக்கு!’’

(இடிக்கும் லாஜிக் அறிந்து ஒரு பவுனுக்கு சம்மதிக்கிறார் கணவர்).

__________________________________________________________

(பெட்டிக்கடை அருகே கடைக்காரரும், வாலிபரும்…)

‘‘ஏன் தம்பி, டெய்லி அந்தப் பொண்ணை ஓரம்கட்டி நின்னு பேசுறியே, எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே லவ்ஸ் விடறதா உத்தேசம்? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’

‘‘அட, நீங்க ஒண்ணுங்க, அது என் பொண்டாட்டி.‘ஆடி’க்கு அவுங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. அங்க இருந்து வேலைக்கு வர்றா… அதான் இங்கே வந்து நின்னு பேசுறோம்… இப்ப புரியுதா?’’

(ஆனாலும் கடைக்காரரின் சந்தேகக் கண்கள் இமைக்கவேயில்லை).

______________________________________________________________

குளிர்பானக் கடையொன்றில் இருவர்…

‘‘என்ன தம்பி.. வர்றவங்க, போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ‘கூல்டிரிங்க்ஸ்’ வாங்கித் தர்றே..?’’

‘‘அண்ணே..! வர்ற ஆவணி மாசம் எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சு… எட்டாம் கிளாஸ் படிச்ச எனக்கு ‘எம்.சி.ஏ.’ படிச்ச பொண்ணு கிடைச்சிருக்கு… அந்த சந்தோஷத்தைத்தான் கொண்டாடறேன்…’’

‘‘இங்க பாரு தம்பி… ஏரில் பூட்டற மாடுகள், ஒரே மாதிரி இருந்தாத்தான் வயலை உழுது பயிரு பச்சையைப் பாக்க முடியும். எட்டாங்கிளாஸ் படிச்ச நீ எருது வண்டி வேகத்திலயும், எம்.சி.ஏ. படிச்ச அந்தப் பொண்ணு ஏரோப்பிளேன் வேகத்திலயும் போனாக்கா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாரு..’’

(‘எட்டாங்கிளாஸ்’ எரிச்சலுடன் நகர்கிறது).

_________________________________________________________________-

ஒரு வீட்டுவாசலில் கணவனும் மனைவியும்…

‘‘ஆடித்தள்ளுபடியில ஒரு புடவை எடுத்துத் தாங்களேன்!’’

‘‘நான் பணக் கஷ்டத்துல தள்ளாடிக்கிட்டிருக்கேன். உனக்குத் தள்ளுபடியில புடவை கேக்குதாக்கும்…’’

‘‘சாயங்காலமானா நீங்க ‘தள்ளாடுறது’தான் ஊருக்கே தெரியுமே…’’

(கணவர் கப்சிப்).

__________________________________________________________________

டாக்டரிடம் கேளுங்கள் பகுதி-02

ஏப்ரல் 21, 2010 1 மறுமொழி

மெலிந்த தேகம்.. மாறாத சோகம்!

‘‘எனக்கு வயது 43. மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பப் பை நீக்கப்பட்டது. கேன்சர் வருவதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று டாக்டர் சொன்னாலும், குழப்பமாக உள்ளது. வெள்ளைபடுவது, வலது மார்பில் பால் போல் திரவம் வருவது என்ற பிரச்னைகளால் பயந்துகிடக்கிறேன். எனக்கு தெளிவு தாருங்கள், டாக்டர்.’’

டாக்டர் ஆர்.ஆர்.ராய் (கேன்சர் சிறப்பு நிபுணர், சென்னை):– ‘‘கர்ப்பப் பையை நீக்கியவர்களுக்கெல்லாம் கேன்சர் வரும் என்று பயப்படத் தேவை இல்லை. கர்ப்பப் பை நீக்கும் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்களைப் பொதுவாக மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒரு தடவை செக்கப்புக்கு வரச் சொல்வார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அந்த மருத்துவரிடம் தெளிவாகக் கூறி விளக்கம் பெறுங்கள்.

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது எல்லாமே நார்மலாக உள்ளது. பயப்படவும், குழம்பவும் அவசியமில்லை. வெள்ளைப்படுதல், மார்பகத்தில் திரவம் வருதல் போன்றவை இன்ஃபெக்ஷனால்கூட இருக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு ஆன்டிபயாடிக் மாத்திரை கள் எடுக்கலாம். கர்ப்பப் பை நீக்கியதும் சில பெண்களுக்கு இதுபோல் வருவதுண்டு. கவலைப் படவேண்டாம். நல்ல உணவு, ஓய்வு, ஆரோக்கியமான சிந்தனை | இவை போதும், உங்களைத் தெளிவாக்க!’’

——————————————————————————————————–


‘‘என் வயது 53. இரண்டு ஆண்டுகளாக யானைக்கால் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளேன். இந்த நோய் பூரணமாகக் குணமாக எந்த ஆஸ்பத்திரியை அணுக வேண்டும்? இதற்கான இலவச மருத்துவமனை எங்காவது உள்ளதா? தற்போது இடது காலில் உள்ள நோய், வலது காலுக்கும் பரவுமா? மேலும் பரவாமல் தடுக்க என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?’’

டாக்டர் ஏ.டி.செல்வகுமார் (இணை இயக்குநர், நோய்பரப்பி களால் உண்டாகும் நோய் தடுப்புப் பிரிவு, சென்னை): ‘‘பைலேரியா என்னும் யானைக்கால் நோய் ஒருமுறை வந்துவிட்டால், அதை பூரணமாக குணமாக்க முடியாது. சிகிச்சை மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்; மேலும் பரவாமல் தடுக்கலாம். சுடுநீர் தெரபி, காற்றழுத்த தெரபி, மின்காந்த தெரபி போன்ற சிகிச்சை முறைகள் வீக்கம் அதிகமாகாமல் தடுக்கும்.

நோயால் பாதிக்கப்பட்ட காலை நீங்கள் சுத்தமாக கழுவிப் பராமரித்தல் அவசியம். சாதாரண சோப்பு அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கொண்டு தினந்தோறும் கழுவ வேண்டும். விரல் இடுக்குகள் மற்றும் தோலின் மடிப்பு பகுதிகளில் ஈரப்பசை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தில் புண் ஏற்பட்டால் நைட்ரோ ஃப்யூரோசான் களிம்பும், விரல் இடுக்கில் வரும் சேத்துப் புண்ணுக்கு விட்ஃபீல்டு பசையையும் தடவவேண்டும். கால், கை நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சொத்தைப்பல் இருந்தால் அகற்ற வேண்டும். கால் வீக்கம் இருந்தால், தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தவறாது எலாஸ்டிக் பேண்டேஜ் கட்டவேண்டும். தூங்கும்போதும், ஓய்வெடுக்கும்போதும் காலை சற்று உயரே தூக்கி வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சியும் மசாஜும் அவசியம்.

உணவில் கொழுப்பையும் உப்பையும் குறைத்து, கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொசுவலை, கொசுவத்தி, கொசு தடுப்பு களிம்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை இரவில் உபயோகித்து, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும். இந்நோய் உங்களிடமிருந்து பிறருக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி உங்கள் குடும்பத்தினர் அனைவரும் டி.இ.சி என்ற மாத்திரை எடுப்பது அவசியம். இந்த மாத்திரை, யானைக்கால் நோயை உண்டாக்கும் லார்வாக்களை அழிக்கும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற உறுப்புகளுக்கு நோய் பரவாமலும் தடுக்கும்.

யானைக்கால் நோய் பரம்பரை வியாதி அல்ல. க்யூலக்ஸ் என்ற கொசுக்களால் ஏற்படுவது. இந்நோய் வந்த மனிதனின் ரத்தத்தில் மைக்ரோ பைலேரியா என்னும் லார்வாக்கள் (குட்டிப் புழுக்கள்) கலந்துள்ளன. அந்த மனிதனை கொசு கடிக்கும்போது, ரத்தத்தோடு சேர்ந்து இந்தக் குட்டி புழுக்களும் கொசுவின் உடலுக்குள் சென்று வளர்கின் றன. பிறகு, இன்னொரு மனிதனை அந்தக் கொசு கடிக்கும்போது அவனது உடலுக்குள் லார்வாக்கள் செலுத்தப்படு கின்றன. அவை வளர்ந்து, ரத்த நாளங்களில் கலந்து நிணநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் கால் வீக்கம், விரைவீக்கம், பெண்களுக்கு மார்பகம், பிறப்புறுப்பு போன்றவை பாதிக்கப்படு கின்றன. யானைக்கால் நோய்க்கான சிகிச்சை மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி போன்ற இடங்களில் அரசு பொது மருத்துவமனை களில் செயல்படுகின்றன. இங்கே டி.இ.சி. மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப் படுகின்றன..’’

———————————————————————————————————-

‘‘எனது பெண் குழந்தைக்கு இப்போது 10 மாதம். 6.9 கிலோ எடை தான் இருக்கிறாள். இந்த வயதுக்கு இது குறைவான எடை என்று தோன்றுகிறது. எவ்வளவு போராடினாலும் சிறிதளவுதான் சாப்பிடுகிறாள். அவளது இந்த ஒல்லி உடல்வாகு வாழ்நாள் முழுதும் தொடருமா (என் கணவரும் மாமியாரும் ஒல்லி உடல்வாகு உடையவர்கள்)? எந்த உணவை, எந்த அளவு கொடுத்தால் அவள் புஷ்டியாக ஆவாள்?’’

டாக்டர் ஜே. விஸ்வநாத்(குழந்தை மருத்துவ நிபுணர், சென்னை): ‘‘பொதுவாக 10 மாதங்களில் இந்தியக் குழந்தைகளின் சராசரி எடை 7 கிலோதான். எனவே, எடை குறைவாக இருப்பதாக நினைத்து கவலைப்பட வேண்டாம். பிறக்கும்போது குழந்தை சராசரியாக 2.5 கிலோ எடை இருக்கும். இது ஆறு மாதங்களில் இரு மடங்காகும். ஒரு வருடத்தில் மூன்றரை மடங்காகும். இரு வருடத்தில் 4 மடங்காகும். பிறக்கும்போது சராசரி 51?செ.மீ. ஆக உள்ள குழந்தையின் உயரம், ஒரு வருடத்தில் 77? செ.மீ. ஆகிறது. அதேபோல், பிறக்கும்போது தலைச் சுற்றளவு சராசரியாக 35?செ.மீ. இருக்கும். ஓராண்டில் 45? செ.மீ. வரை வரும். இந்த அளவுகளுடன் ஒப்பிட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளது.

மேலும், பிறந்தபோது ஒல்லியாக இருக்கும் குழந்தை எப்போதுமே அப்படி இருக்கும் என்பதில்லை. அப்பாவோ, அம்மாவோ மெலிந்த தேகம் கொண்டிருந்தால் குழந்தையும் அப்படி இருக்கும் என்று நினைப்பதும் தவறு. உங்கள் குழந்தைக்கு புரோட்டீன், கார்போஹைட் ரேட், கொழுப்பு, தாதுப்பொருள் கலந்த சரிவிகித உணவு கொடுக்க வேண்டும். அப்படியும் மெலிந்து கொண்டே போனால், குழந்தைநல நிபுணரின் ஆலோசனையுடன் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து, ஏதாவது பிரச்னை இருந்தால் சிகிச்சை மேற்கொள்ளவும். 9 மாதங்கள் ஆனதுமே காலையில் இரண்டு சிறிய இட்லிகளும், மதியம் மற்றும் மாலையில் சாதம், பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றோடு நெய் கலந்தும் தரவேண்டும். இவற்றுடன் தாய்ப் பால் அல்லது 500 மி.லி. பிற பாலும் தரவேண்டும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை, மீன் கொடுக்க லாம்.

சிறிது சிறிதாக சாதத்தின் அளவு அதிகரிக்கப்படவேண்டும். பருப்பு சோறு இருவேளை தரலாம். தாய்ப்பால் அல்லது வேறு பால் அருந்தும் குழந்தைக்கு டானிக்குகள் தேவை இல்லை..’’

————————————————————————————————————–

‘‘எனக்கு வயது 50. மூன்று குழந்தைகள். எல்லாமே சுகப்பிரசவம். கடந்த சில ஆண்டுகளாக, இருமினாலும், தும்மினாலும், சிரித்தாலும் சிறுநீர் வெளியேறிவிடுகிறது. சிலசமயம், சிறுநீர் கழிக்க டாய்லெட் செல்வதற்குள் போய்விடுகிறது. வயதானால் இப்படி ஆகுமா? இதைப்பற்றி எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டே இதுநாள் வரை இருந்துவிட்டேன். என் பிரச்னைக்கு ‘அ.வி’ ஒரு வழி சொல்லுமா?’’

டாக்டர் கார்த்திக் குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட் மற்றும் பெல்விக் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜன்): ‘‘சிறுநீர் அடக்க முடியாமல் போவது மற்றும் உங்களுக்கு இருக்கும் அடியிறக்கம் போன்றவை வயதானதால் மட்டும் வரும் பிரச்னைகள் இல்லை. இரண்டு, மூன்று குழந்தை பிறந்த பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வரும் பிரச்னைகள் இவை.

பிறப்பு உறுப்பு வழியாக அடிக்கடி பிரசவம் (நார்மல் டெலிவரி) ஆகும்போது, அப்பகுதியின் தசைகளும் நரம்புகளும் பாதிக்கப்படுவதுதான் இந்தப் பிரச்னைக்கு காரணம். நார்மல் டெலிவரியான பெண்களில், 40 சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்னை உண்டு. உங்களுக்கு முதலில் ‘யூரின் – கல்ச்சர் டெஸ்ட்’ செய்ய வேண்டும். ஏதாவது நோய்த்தொற்று இருந்தால் அதில் தெரிந்துவிடும். சிறுநீரகத்தில் கல் எதுவும் இருக்கிறதா என்று அறிய ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கும் செய்துகொள்ளலாம். இவை முதல்கட்ட பரிசோதனைகள். பிறகுதான் உங்கள் பிரச்னைக்கு உரிய பிரத்யேக டெஸ்டான ‘யூரோடைனமிக்ஸ்’ என்ற பரிசோதனை செய்யவேண்டும். என்ன வகையான சிகிச்சை தேவை என்பதை அறிய இந்தப் பரிசோதனை உதவும்.

அவசரமாக சிறுநீர் போகவேண்டும் என்ற உணர்வு எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளிலேயே குணப்படுத்தி விடலாம். அடியிறக்கம் இருப்பதால் சிரித்தாலும் தும்மினாலும் சிறுநீர் வந்துவிடும் பிரச்னைக்கு, ஸ்லிங் ஆபரேஷன் என்று ஒரு அறுவைசிகிச்சை செய்யலாம்..’’

—————————————————————————————————————–

‘நான்கைந்து மாதங்களுக்கு முன் என் கணவர் திடீரென, தனக்கு மயக்கமாக வருவதாகவும், இரு கண்களிலும் பார்வை தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு ஒரு மாதத்துக்கு, காலையில் எழுந்ததும் மயக்கம் வருகிறது என்றார். ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக வேலை பார்த்தது, தூக்கமின்மை, நேரத்துக்கு சாப்பிடாதது ஆகியவை காரணங்கள் என டாக்டர் சொன்னார். அவர் வயது 37. அவருக்கு வந்திருப்பது குறைவான ரத்த அழுத்த நோயா? அப்படி இருந்தால் கண்பார்வை மங்குமா?’’

டாக்டர் தேவதாஸ் (பொது மருத்துவ நிபுணர், திருச்சி): ‘‘சாதாரணமாக நல்ல உடல்நலத்துடன் இருப்பவர் களுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் வரவே வராது. அனீமியா போன்ற அதிக ரத்தம் விரயம் ஆகும் குறை பாடு உள்ளவர்களுக்கோ, விபத்தின்போது பாதிக்கப் பட்டவர்களுக்கோ மற்றும் இதயத் துடிப்பு அதிகமாகத் துடிப்பவர்களுக்கோ மட்டும்தான் இது ஏற்படும்.

இதனால் உடலின் வலு முழுவதும் குறைந்து, உடம்பே ஒருவித குளிர்நிலைக்கு வரலாம். உங்கள் கணவருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இல்லாததால், அவருக்கு குறைந்த அழுத்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் கணவரின் கண்கள் பாதிக்கப்பட்டதற்கும் குறைந்த ரத்த அழுத்தத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பார்வை மங்குவதை அப்படியே விட்டுவிடாமல், தகுந்த கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளவும். எதற்கும் கொஞ்சம் ஓய்வெடுப்பது நல்லது..’’

————————————————————–

நன்றி:-

Dr. ஆர்.ஆர்.ராய் (கேன்சர் சிறப்பு நிபுணர், சென்னை)

Dr. ஏ.டி.செல்வகுமார் (நோய்பரப்பி களால் உண்டாகும் நோய் தடுப்புப் பிரிவு, சென்னை)

Dr. ஜே. விஸ்வநாத்(குழந்தை மருத்துவ நிபுணர், சென்னை):

Dr. கார்த்திக் குணசேகரன் (யூரோ கைனகாலஜிஸ்ட் & பெல்விக் ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜன்)

Dr. தேவதாஸ் (பொது மருத்துவ நிபுணர், திருச்சி)

நன்றி:- அ.வி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? (கூந்தல் பராமரிப்பு) – சந்தியா செல்வி


கூந்தலின் மணம் இயற்கையானதா இல்லையா என்று மன்னனுக்கே சந்தேகம் வந்ததாகச் சொல்கிறது புராணம். அத்தனை பெருமை வாய்ந்த கூந்தலைப் பராமரிக்க வேண்டாமா?

‘ஓ! பராமரிக்கிறேனே..’ என்று சிலர் தினம் தினம் ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். ‘‘கூந்தலுக்குத் துன்பம் விளைவிக்கக்கூடிய செயல் இதுபோல வேறெதுவுமில்லை..’’ என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார், சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பார்லர் நடத்துகிற சந்தியா செல்வி.

‘‘பல வருடங்களுக்கு முன்பு பிரபல கூந்தல் பராமரிப்பு நிறுவனம் ஒன்று அழகுக் கலைஞர்களுக்காக சென்னையில் ஒரு ‘வொர்க்ஷாப்’ நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். அங்கே வைக்கப்பட்டிருந்த நுண்ணோக்கியில் என் தலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அன்றுதான் ஷாம்பூ போட்டுக் குளித்திருந்த என் மண்டையில் (முடியில் அல்ல) நன்றாக ஒட்டிக் கொண்டு, கூந்தலின் வேர்க்கால்களை அடைத்தபடி இருந்தது ஷாம்பூ.

இத்தனைக்கும், ஷாம்பூவை அலச குறைந்தது இரண்டு பக்கெட் தண்ணீராவது தலைக்கு மட்டும் ஊற்றுகிறவள் நான். அன்றும் அப்படித்தான் ஊற்றியிருந்தேன். ஆனாலும், ஷாம்பூ அதற்கெல்லாம் பெப்பே காட்டிவிட்டு மண்டையிலேயே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

வொர்க்ஷாப்புக்கு வந்திருந்த கூந்தல் பராமரிப்பு நிபுணரிடம் இதுபற்றி நான் கவலையோடு விசாரித்தபோது, ‘ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் மண்டையில் அது அப்பிக் கொள்ளத்தான் செய்யும். தினமும் இப்படி ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும்’ என்றார். சரி, ஷாம்பூவை எப்படித்தான் உபயோகிப்பது என்று நான் கேட்டதற்கு, ‘ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக்கொள்ள வேண்டும், பிறகே, தலையில் வைத்துத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவிளைவை அது தரும். இல்லையேல் கூந்தலுக்கு ஆபத்துதான்..’ என்றார் அந்த நிபுணர்.

அன்றைய தினத்திலிருந்து ஷாம்பூவை அவர் சொன்ன முறையில் தான் பயன்படுத்துகிறேன். முடி அதிகம் உதிரவில்லை என்பதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்..’’ என்கிற சந்தியா செல்வி, கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சொன்ன சில டிப்ஸ்..

எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.

கண்டிப்பாக, வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்.

மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.

இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்.

அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்.

கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

ப்போதெல்லாம் பத்து, பதினோரு வயது குழந்தைகளுக்குக்கூட நரைத்துப் போகிறது. இதைத் தவிர்க்கவும் எளிய சிகிச்சை முறை ஒன்றைச் சொல்கிறார் சந்தியா செல்வி..

‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’

ங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்?

‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது. நான் சொல்கிற சிகிச்சையை அவளுக்குச் செய்துவிடுங்கள். பிறகு பாருங்கள்.. ‘என் வெல்லக் கட்டி அம்மாவே’ என்று உங்களைக் கொண்டாடப் போகிறாள்..’’ என்கிறார் சந்தியா செல்வி.

‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.

பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.

ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு கரகரவென்று அரைத்த பச்சரிசி மாவுடன் பன்னீர் கலந்து மூக்கு மற்றும் தாடை ஓரம் மென்மையாகத் தேய்த்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்..’’

——————————————————————————-

நன்றி:-சந்தியா செல்வி

நன்றி:-அ.வி

=================================================================