தொகுப்பு

Archive for ஏப்ரல் 27, 2010

வெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்


மிக அழகாகப் பறந்தாலும், வெளவால் பறவை இனம் கிடையாது. இதற்கு இருப்பது இறக்கைகள் அல்ல, அதன் விரல்களின் நுனியிலிருந்து உடலோடு சேர்ந்து விரிந்திருக்கும் மெல்லிய தோலின் பகுதிதான். இதை மெம்ப்ரேன் என்பார்கள். இதில் பறவைகளுக்கு இருப்பது போல் ஓர் இறகுகூடக் கிடையாது என்பது இன்னொரு வித்தியாசம்.

வெளவால்களுக்குப் பறவைகளைப் போன்ற அலகுகள் கிடையாது. எலிக்கு இருப்பது போன்ற வாயும் பற்களும்தான். கிட்டத்தட்ட ‘பறக்கும் எலி’ என்றுகூட வெளவால்களைச் சொல்லலாம்.

உலகின் குளிர்ப் பகுதிகளிலும் சில தனிமையான தீவுகளையும் தவிர, எல்லா இடங்களிலும் வெளவால்கள் உண்டு. வெளவால்களில் மொத்தம் 951 வகை உண்டு. இவை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.

வெளவால் இனங்களில் மிகப் பெரியது ‘பறக்கும் நரி’ (Flying Fox Bat) என்று அழைக்கப்படும் வெளவால் இனம். தலையிலிருந்து கால்வரை இதன் நீளம் நாற்பது செ.மீ. இறக்கைகளின் நீளம் இரண்டு மீட்டர். இதன் எடை ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகம்!

மிகச் சிறிய வெளவால் இனத்தின் பெயர் ‘கிட்டிஸ் ஹாக்|நோஸ்டு பேட்’ (Kitti’s Hog-nosed Bat). தலையும் உடலும் சேர்ந்து, இதன் உயரம் வெறும் 3 சென்டிமீட்டர். இறக்கைகளின் நீளம் 15 சென்டிமீட்டர். எடை 2 கிராம்தான்!

சூரிய ஒளியில் அவற்றால் சரியாகப் பார்க்கமுடியாது. வெளவால்கள் ‘இரவுப் பிராணிகள்’! பகல்நேரத்தில் இருளடைந்த பிரதேசங்களான குகைகள், மரப்பொந்துகள் போன்றவற்றில் பதுங்கித் தலைகீழாகத் தொங்கித் தூங்கும். இரவுநேரத்தில்தான் இரையைத் தேடி வெளியே வரும்.

துளிகூட ஒளியே இல்லாத இருளிலும் எதன்மீதும் மோதாமல் பறக்க இவற்றால் முடியும். காரணம் | பறக்கும்போது இவை சில ஒலிகளை வெளிப்படுத்துகின்றன (இவற்றை மனிதர்களால் கேட்க முடியாது). வழியில் ஏதேனும் பொருள் இருந்தால், வெளவால்கள் வெளிப்படுத்திய ஒலி அவற்றில் பட்டு வெளவால்களிடமே திரும்ப வரும்! இதன்மூலம் பொருள் இருப்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்துப் பறந்துவிடும். இதை ‘எக்கோ லொக்கேஷன்’ என்பார்கள்.

நொடிக்கு நாலு ஒலிகளை ஏற்படுத்தியபடியே பறக்கும் வெளவால்கள், வழியில் ஏதேனும் பூச்சியின்மேல் ஒலி பட்டுத் திரும்ப வந்தால், நொடிக்குச் சுமார் 200 ஒலிகளை எழுப்பி, அந்தப் பூச்சி எவ்வளவு தொலைவில் உள்ளது, என்ன சைஸ் என்றெல்லாம்கூடக் கண்டுபிடிக்கும்!

கொசுக்கள், வண்டுகள் போன்ற இரவுப்பூச்சிகளை வெளவால்கள் தின்னும். வெப்ப நாடுகளிலுள்ள வெளவால்கள், பூக்களிலுள்ள தேனை உண்ணும். சிலது, பழங்களைத் தின்னும்! மேலும் சில பெரிய வெளவால்கள் சின்ன வெளவால்களையும் எலி, தவளை, மீன் போன்றவற்றையும் உண்ணும்.

உணவு கிடைக்காத காலத்துக்காக தேவையான உணவைச் சேமிக்கும். உணவு கிடைக்காத காலங்களில் நெடும் தூக்கம் போடவோ அல்லது அதிகம் உணவு கிடைக்கும் இடங்களுக்கு மாறவோ செய்யும்!

தென் அமெரிக்க வெளவால் களில் சிலவற்றை ‘Vampire Bats’ என்பர். ஏனெனில், இவற்றின் உணவுரத்தம்தான் (மனித ரத்தம் உட்பட!). தங்களது கூரான இரண்டு முன்பற்களை வைத்து, ஆழமான வெட்டுகளை உருவாக்கி, அதன்மூலம் வெளிவரும் ரத்தத்தைக் குடிக்கும் இவை! ரத்த இழப்பு தவிர, இவற்றின் மூலம் ‘ரேபீஸ்’ போன்ற கொடிய நோய்களும் உருவாகும்.

பாம்பு, பெரிய பறவைகள் போன்றவற்றால் வெளவால்கள் கொல்லப்பட்டாலும், அவற்றின் பெரிய எதிரி மனிதர்கள்தான்! பெரும்பாலான வகை வெளவால்கள் அழியும் நிலையில் உள்ளன.


நன்றி:- சு.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

குழந்தை ஆரோக்கியம் – H.R. Akbar Ali


பெற்றோர்களுக்கு தொலைக்காட்சியால் தம் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் பாதிப்பு பற்றி கொஞ்சமும் தெரிவதில்லை. பிறந்ததிலிருந்து வளர்ந்து ஆளாகும் வரை கவனித்துப்பார்த்ததில், ஒருவன் வன்முறையாளனாக பரிணமிப் பதற்கு, பெற்றோர்களால் அடித்து வளர்க்கப்படுவது, அக்கறையற்று கண்டுகொள்ளப்படாமல் விடப்படுவது போன்றவை காரணிகளாக இருந்தாலும், தொலைக் காட்சியில் அவன் காணும் வன்முறைக் காட்சிகள்தான் பிரதானக் காரணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

டி.வி. பார்த்துக் கொண்டே அளவு தெரியாமல் உண்பது, அல்லது உணவைத் தவிர்ப்பது, அசையாமல் நெடு நேரம் இருப்பது என்பது, ஒன்று-உடல் பருமனை கூட்டுகிறது அல்லது ஊட்ட மின்றி உடல் நலிவு பெறச் செய்கிறது.

1995 வரை டி.வி. இல்லாமலிருந்த பிஜியில், அது வந்து மூன்று வருடங்கள் கழித்து பார்த்தபோது 11 சதவிகிதப் பெண்கள் அளவுக்கு மீறி உண்பது, பின் அதை வாந்தி எடுப்பது என்ற விநோத நோய்க்கு ஆளானார்கள். அதுவே சொந்த டி.வி. உள்ள வீடுகளில் மும்மடங்காக இருந்தது. சீனாவில் டி.வி. அறிமுகமான பிறகு, கச்சிதமான உடல் கொண்டிருந்த சீன மக்களின் உடல்வாகு மாறிவிட்டதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

1000 குழந்தைகளை, 2 மணிநேரத் திற்கு மேல் டி.வி. பார்த்தவர்களை, 26 வருடங்களாக ஆய்வு செய்தபொழுது, குறிப்பாக 5 லிருந்து 15 வயதுள்ள குழந்தைகள் பல வருடங்களுக்குப் பிறகு ஆரோக்கியமற்றவர்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் சமூக அந்தஸ்து, பெற்றோர்களின் பழக்க வழக்கங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தபொழுது, கொழுப்புச்சத்து மிகுந்தவர்களாக, புகைப் பிடிப்பவர்களாக, உடல் திறனற்ற வர்களாக அவர்கள் பெரும்பாலும் இருந்தனர். அது இளவயதில் மிகுதியாக டி.வி. பார்த்ததன் நேரடி விளைவாகும்.

குழந்தைகளுக்கான டி.வி. நிகழ்ச்சிகளின் நீளத்தைவிட பொதுவான நிகழ்ச் சகளின் நீளம் 70 சதவிகிதம் அதிகம். காரணம் குழந்தைகளிடம் பரபரப்பையும், கிளர்ச்சியையும் அதிகரிக்க வைத்து அதிக நேரம் பார்க்க வைத்து தங்கள் ‘ரேட்டிங்’கை உயர்த்துவதற்கேற்ப படத் தொகுப்புமுறையை வடிவமைத்து, விறு விறுப்புக் குறையாமல் பார்த்துக் கொள் கிறார்கள். குழந்தைகளின் எதிர்பார்ப்பை தக்க வைக்க அவர்களின் உடலில் “டோபாமைன்” என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. காட்சி முடிந்து தங்கள் பாடத் தை படிக்கும்போது “டோபாமைன்” முந் தைய வேகத்தில் சுரக்காது. ஆகவே ஆர் வமும் முனைப்பும் மட்டுப்பட்டு பாடத் தை உள்வாங்க முடியாமல் போகிறது. கணிதம் போன்ற விளங்கிப் புரிந்து படிக்க வேண்டிய பாடங்களில் பலவீனம் உண்டாகிறது. தேர்வுகளில் மோசமான மதிப்பெண்கள் பெறுகிறார்கள். 1 மணி நேரத்திற்கு மேல் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 சதவீதம் கவனக்குறைவு அதிகரிக்கிறது.

இரவு 9 மணிக்கு குழந்தைகள் உறங்கச்செய்யப் பழக்க வேண்டும். அது, காலையில் நேரத்தே புத்துணர்வோடு எழுந்து செயலாற்ற உதவும். அவர்களின் எதிர்காலம் சிறக்கும்.

குறிப்பு : டிவி பார்ப்பதற்கும் படுக்கச் செல்வதற்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ….

சிரிப்பு மாமு சிரிப்பு-03


‘‘‘எங்கிருந்தோ பணம் வரப்போகுது… அதான் உள்ளங்கை அரிக்குது’னு அடிக்கடி சொல்றியே.. முதல்ல உன் ‘படை’ பலத்தை ஒரு தோல் டாக்டர்கிட்டே காட்டுடா!’’
_____________________________________________________________________________

‘‘ஹமாம் 13 ரூபாய், சிந்த்தால் 19 ரூபாய், லக்ஸ் 13 ரூபாய், பியர்ஸ் 19 ரூபாய், மெடிமிக்ஸ் 16 ரூபாய்,லைபாய் 12ரூபாய், டெட்டால் 24 ரூபாய்! எதை வேணும்னாலும் வாங்கு… ஆனா, குளிச்சிருடா செல்லம்!’’

_____________________________________________________________________________
‘‘அன்பே! திருநெல்வேலிக்கு ஒரு தாமிரபரணி! மதுரைக்கு ஒரு வைகை!திருச்சிக்கு ஒரு காவிரி!சென்னைக்கு……நீ!அதாம்மே… கூவம்!’’

_____________________________________________________________________________
‘‘அந்தப் பொண்ணுங்கள்லாம் உன்னை ‘ஜெம்’னு சொன்னாங்கனு பெருமையா சொன்னியே.. உச்சி குளிர்ந்து போகாதடா! ‘ஜெம்’னா GINGER EATING MONKEY-னு அர்த்தம்டா… இஞ்சி தின்ன குரங்கே!’’

_____________________________________________________________________________
‘‘காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’

_____________________________________________________________________________
‘‘விருட்சம், அன்று விதையாய் இருந்தது. பெளர்ணமி, அன்று பிறையாய் இருந்தது. சிலை, அன்று பாறையாய் இருந்தது. மழை, அன்று மேகமாய் இருந்தது. ஆமாம்.. என் மனைவியே.. நீயும்கூட ஒரு காலத்தில் அன்பான மனுஷியாக இருந்தாய்…!’’

_____________________________________________________________________________
‘‘டேய்.. ஓ.சி. நாயகா! இனிமே என் பைக் எடுக்கும்போது கொஞ்சம் மணிசங்கர் அய்யரை நினைச்சுப் பாரு! ரெண்டு ரூபா ஏத்திட்டாருப்பா!’’

_____________________________________________________________________________
‘‘என் கல்யாணத்துக்கு நீ மொய் எழுதவே வேண்டாம். ஏன்னா..நீ எழுதப் போற பத்து ரூபாய் மொய்க்கு என் பக்கத்தில் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுப்பியே, அதுக்கே எனக்குப் பதினஞ்சு ரூபா செலவாகும்! அதனால வேணாம் ராசா!’’

_____________________________________________________________________________

‘‘‘காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.. வாச கதவை ராஜலட்சுமி தட்டுகிற நேரமிது!’’னு எனக்கு நீ எஸ்.எம்.எஸ். அனுப்பினியே.. இன்னிக்கு உன் தட்டுல அவ்வளவு கலெக்ஷனா மச்சி?!’’

_____________________________________________________________________________
‘‘காவிரியிலகூட தண்ணியை விட்டுட்டாங்க. தடிமாடே! நீ எப்படா ‘தண்ணி’யை விடப்போறே?’’

_____________________________________________________________________________
‘‘டியர்! உன்னை மயிலுக்கும் குயிலுக்கும் ஒப்பிடலாம்… காதலோடு சொல்கிறேன்.. உனக்கு குயில் நிறம், மயில் குரல்!’’

_____________________________________________________________________________
‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’

_____________________________________________________________________________
‘‘நண்பா.. பனியில் நனைஞ்ச அழகான பூக்களைப் பார்க்கும்போது, எனக்கு உன் ஞாபகம் வருது! அழகான நிலவை பார்க்கும்போதும் நீதான் ஞாபகத்துக்கு வர்றே! அழகா எதைப் பார்த்தாலும், உடனே உன்னை நினைச்சுக்குவேன். அப்பல்லாம் என்னை நானே கேட்டுக்குவேன்.. ‘இவ்வளவையும் அழகா படைச்ச ஆண்டவன் உன்னை மட்டும் ஏன் அசிங்கமா படைச்சான்?’’

_____________________________________________________________________________
‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’

_____________________________________________________________________________
‘‘இன்று.. நாளை.. ஏன், எப்போதும் ஓர் இதயம் உனக்காகவே துடித்துக் கொண்டிருப்பது தெரியாதா..?மடையா.. அது உன் இதயம்தாண்டா!’’

_____________________________________________________________________________
‘‘அர்ஜுனருக்கு வில்லு..அரிச்சந்திரனுக்கு சொல்லு..குதிரைக்கு கொள்ளு..ரோஜாவுக்கு முள்ளு..நீ ஜொள்ளு..நான் லொள்ளு!’’

_____________________________________________________________________________
‘‘நன்றி நண்பா!இன்று சனிக்கிழமை. வெளியூர் வந்த இடத்தில் கோயிலே இல்லை. அவசரத்துக்கு உன்படத்தை வைத்து சுற்றிவந்து வணங்கினேன்.‘சனீஸ்வராய நமஹ!’’’

————————————————————————————————————————-

நன்றி:- ஆ.வி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க


எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம் என்பது நன்மை தரும்.சிறுகச் சிறுகச் செலவைக் கூட்டும். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும். வீட்டுக்குள் இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள்

வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’ இங்கே…

* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக காம்பாக்ட் புளோரசன்ட்அணைக்க மறக்காதீர்கள்.
விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும்

* `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்‘ செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறக்கக் கூடாது.

* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்கு உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.

* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.

* `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப் பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’ போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.

* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’ அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப்- லோடு’ அல்லது `எகானமி செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள்.

* `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள் அல்லது மாற்றி விடுங்கள்.

* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே வைத்திருக்காதீர்கள்.

* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன் பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள்.

* மின் சக்தியை அதிகமாகச் சாப்பிடும் பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து, புதியவற்றை வாங்குங்கள்.

* தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப் பாருங்கள்.

* எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே சரிசெய்யுங்கள்.

நன்றி:-தினத்தந்தி

நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி


உலக அளவில் மக்களை அதிகம் பயமுறுத்தும் நோய்களில் ஒன்று நீரிழிவு. டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகை நீரிழிவு நோய்கள் உள்ளன. இதில் டைப் 1 நீரிழிவு நோய்க்கு தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். இதற்கு அவர்கள் `நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

`நானோ’ என்பது `மிகச்சிறிய’ என்று பொருளாகும். மிகச்சிறிய அளவிலான மருந்துப்புரதங்களை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் டைப் 1 நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

மனித உடலில் சில நோய்கள் தாக்கும்போது அதை குணப்படுத்த தானாகவே நோய்எதிர்ப்பு சக்தி செயல்படும். இதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சிவப்பு அணுக்கள் மற்றும் செல்கள் செயல்பட்டு நோய்க் கிருமிகள் அல்லது நோய் பாதித்துள்ள செல்களை தாக்கி அழிக்கும். இதை தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தி (ஆங்கிலத்தில்- ஆட்டோ இம்யூன்) என்பார்கள்.

டைப் 1 நீரிழிவு நோய் விஷயத்திலும் இந்த தானியங்கி நோய் எதிர்ப்பு சக்தியை இந்த புதிய நானோ தடுப்பூசி அதிகரிக்கிறது. மேலும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் செல்கள் உருவாகாமல் இவை தடுக்கின்றன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடலுக்குள் நடக்கும்போது வேறு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது இந்த தடுப்பூசியின் சிறப்பு.

நீரிழிவை ஏற்படுத்தும் செல்களை விட ஆயிரத்தில் ஒரு பங்கு சிறியதாக இந்த நானோ மருந்துகள் உள்ளன. இருப்பினும் அதிக சக்தி மிக்கதாக இவை செயல்பட்டு நீரிழிவு பாதிப்பை கட்டுப்படுத்தி படிப்படியாக குணப்படுத்துகிறது.

டைப் 1 நீரிழிவு பாதித்த எலிகளுக்கு இந்த நானோ தடுப்பூசிகளை பயன்படுத்தி சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளனர். இதே முறையை பயன்படுத்தி மனிதர்களுக்கும் நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பார்வை அற்றவர்களுக்கு இன்டர்நெட்


பார்வையற்றவர்களின் உலகம் சவால் நிறைந்தது. அவர்கள் ஒவ்வொரு தேவைக்கும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டி இருக்கும். இன்று உலகமே இன்டர்நெட் எனப்படும் இணையவலையில் கட்டுண்டு உள்ளது.

பார்வையற்றவர்கள் இதுவரை இன்டர்நெட்டை பயன்படுத்துவதென்றால் ஒரு நேரத்தில் ஒரு வரியை மட்டுமே படிக்கும்படி மட்டுமே வலைத்தள வசதி இருந்தது. அதாவது கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் எழுத்துக்களை ஒலி வடிவில் மாற்றி வாசிக்கும் மென்பொருளின் உதவி அவர்களுக்கு கிடைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு வரியாக வரிசையாக மேலிருந்து கீழ் என்ற அடிப்படையில் தகவல்களை கேட்க முடிந்தது.

தற்போது பார்வையற்றவர்களும் சாதாரணமாக இன்டர்நெட்டை பயன்படுத்த நவீன வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் (ஹைட்ராலிக் மற்றும் லேட்சிங் மெக்கானிசம்) பாலிமர் திரை தயாரிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட் தகவல்கள் மற்றும் படங்களை பார்வையற்றவர்கள் தொட்டுப்பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி புள்ளிகளாக மாற்றிக் கொடுக்கும். இதனால் அவர்களும் சாதாரணமானவர்கள்போல அனைத்து தகவல்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர் நெய்ல் டி ஸ்பிங்கா இந்த நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளார்.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆழ்கடலுக்குள் அதிசய உயிரினங்கள்!


மனிதன் நிலப்பரப்பில் அனேக விஷயங்களை ஆராய்ந்துவிட்டான். பூமியில் 70 சதவீதம் உள்ள கடல் பரப்பில் அவன் அறியாத பல விஷயங்கள் மூழ்கி கிடக்கின்றன.

உயிரினங்களின் தாய் என கடல் போற்றப்படுகிறது. நிலத்தில் இருப்பதுபோல எரிமலைகள், மலைகள் போன்றவையும் கடலுக்குள் உண்டு. தற்போது உலகின் மிக ஆழமான கடல் எரிமலைப் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த எரிமலை பள்ளத்துக்குள் ஒரு ரோபோ இறங்கி ஆய்வு செய்ததில் வியப்பூட்டும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ரோபோவின் பெயர் `ஆட்டோ சப்6000`. இங்கிலாந்தின் `ராயல் ரிசர்ச் சிப்‘ அமைப்பு இந்த ரோபோவை வடிவமைத்து ஆராய்ச்சி செய்தது. ஆய்வில் வெளிவந்த சில தகவல்கள் வருமாறு…

* தென் அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் கடல் பகுதியில் கேமேன் ட்ரோ என்ற இடத்தில் இந்த எரிமலைப்பள்ளம் உள்ளது. இது 5 கிலோமீட்டர் ஆழம் கொண்டது. 400 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை உடையது.

* இதுவரை 30 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட பசிபிக் கடலில் உள்ள ஒரு எரிமலைப் பள்ளமே அதிக வெப்பநிலையை (270 டிகிரி) கொண்டதாக இருந்தது.

* குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வெப்பநிலையிலும் உருகாத வகையில் ரோபோ தயாரிக்கப்பட்டு இருந்தது. காப்பர் மற்றும் இரும்பு கொண்டு இது உருவாக்கப்பட்டது.

* ஆய்வில் இன்னொரு விஷயம் விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது இந்த அதிக வெப்பநிலையிலும் கடல் எரிமலை அடியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தான் அந்த வியப்புக்குரிய விஷயம். இவை இதுவரை அறியப்படாத அதிசய உயிரினங்களாகும்.

* ஒரு வேளை இங்கு உயிரினங்களின் தோற்றத்திற்கான தடயங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதுகுறித்த ஆய்வுகள் தொடர உள்ளன.

நன்றி:-தினத்தந்தி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@