தொகுப்பு

Archive for ஏப்ரல் 28, 2010

சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம் – டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)


உலகினைப் படைத்து பரிபாலிக்கிற எல்லாம் வல்ல அல்லாஹ் மலக்குகளுக்கோ அல்லது ஜின்களுக்கோ அளிக்காத தனி மதிப்பினை ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களுக்குக் கொடுத்து அகிலத்திலிருந்து பூமி அதற்கு ஒளிதரும் சூரியன், ஓய்வினைத்தரும் சந்திரன் உள்பட அனைத்து கிரகங்களைப் படைத்து அதனை தன் தனி சக்தியால் அதன் வட்டத்தில் ஒன்றை ஒன்று முந்தாது மோதாது சுழன்று செயலாற்றும் திறனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் என்று மாமறை அல்குர்ஆன் சொல்வதினை அனைவரும் படித்திருக்கிறோம்.

அதனை சோதனை செய்யும் முறையில் விஞ்ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகிலம் எவ்வாறு உருவாக்கப் பட்டிருக்குமென்று ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். ஐரோப்பிய வானவியல் விஞ்ஞானிகள் ஜெனிவாவில் அந்த ஆராய்ச்சி மையம் ‘செண்டர் ஃபார் நியூகிலியர் ரிசர்ச்’ ஆகும். அதற்கு ஒன்பதாயிரத்து நானூறு ஆயிரம் டாலர் செலவழித்து பிரான்ஸ்-ஸ்விஸ் எல்லைப்பகுதியில் 30.3.2010 அன்று ‘பிக் மெஷின்’ ‘பிக் பேங்க்’ என்று பெயரிட்டு ஒரு செயற்கை அண்ட அகில அமைப்பு உருவானதினை  அறிய சோதனை நடத்தினார்கள். அந்த ஆராய்ச்சியின் மாற்றங்கள் எந்தளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிய இரண்டு மாதங்கள் ஆகுமாம். ஆனால் அகிலத்தினைப்படைக்க அல்லாஹ் எடுத்த நாட்கள் நான்கேயாகும். பல கோடி ஆண்டுகளானாலும் விஞ்ஞானிகள் அல்லாவஹ்வின் அற்புதங்களை இன்னும் அறிய முடியவில்லை என்பதிற்கு இது தலையாய உதாரணமாகாதா?

இறை மறுப்பாளர்களும், இணை வைப்பவர்களும் ஸமூத், ஆத், லூத், மத்யன,; சாலிஹ் நபிமார்களை பொய்யாக்கி துன்புறுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த இறை வேதனை  ப+மியை புரட்டிப்போடுகின்ற பூகம்பம், சூறாவளி, அனல்காற்று அள்ளி வீசும் ஒளிப்பிழம்பு. இன்று உலக ஆதிக்க அரசுகளாக திகழ்கின்ற மேலை நாடுகள் தங்களது ஆயுத பலத்தால் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தாக இருக்கின்றன. குண்டுகளை அள்ளிப் பொழியும் நவீன விமானங்கள் தான் அவர்கள் பலம் வாய்ந்த ஆயுதங்கள். ஆனால் சமீபத்தில் ஐஸ்லாண்டில் 200 ஆண்டுகள் அமிங்கிக்கிடந்த எரிமலை வெடித்து ஐரோப்பிய வானத்தினை கருமேக மூட்டத்தால் மறைக்குமளவிற்கும், தீ பிளம்புகள் 100 மீட்டர் அளவிற்கு உயரே கிளம்பும் அளவிற்கும் தனது தனலினை கொட்டியதென்றால் அமெரிக்கா, இஸ்ரேயில், ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் நினைத்த நேரத்தில் உடனே இஸ்லாமிய நாடுகளின் மீது வான்வெளி போர்தொடுக்க முடியாத நிலை ஏற்பட அது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
அல்லாஹ் நினைத்தால் ஐஸ்லாண்டு எரிமலையினால் எப்படி ஒருவாரம் வானூர்திகள் இயக்க முடியவில்லையோ அவ்வாறு  ஐஸ்லாண்டு ‘ஐஜாப்ஜலோக்குள’; பனிப்பாறைகள் வெடித்தது போன்று செயல்களை செயல்படுத்த வல்லமைமிக்கவன் அல்லாஹ். அந்த எரிமலை வெடிக்கும் அதனால் ஒருவாரம் ஐரோப்பிய வான்வெளிப்பயண மக்களுக்கு ஒரு சோதனையாக அமையும் என்று ஏன் வல்லமை மிக்க வல்லரசுகள் கண்டுபிடிக்க முடியவில்லை? நூஹ(ஸல); நபியவர்களை துன்புறத்தியவர்கள் 2004 ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைபோல் அழிக்கப்பட்ட சம்பவம் அந்த அலைகளைப்பார்த்த பின்னும் மக்களுக்கு அடையாளமாகத் தெரியவில்லையா?
இறை மறுப்பவர்கள் மற்றும்; சில மேதாவி பெயரளவிலுள்ள முஸ்லிம்கள் மலக்குகள,; ஜின்கள் வாழ்ந்ததினையும்-வாழ்வதினையும் நரகம் என்ற இறைத்தண்டனை-சொர்க்கம் என்ற இறைக்கொடைகள் இருப்பதினையும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். ஆனால் அமெரிக்காவின் இயற்பியல் விஞ்ஞானி ஊனமுற்றவர், தனது குறும் படங்களின் படைப்புகளால், ‘டிஸ்கவரிச்சேனலில்’ ஒளிபரப்பாகி புகழ் பெற்றவர். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் இடைப்பட்ட வெளியிலுள்ள பால் மண்டலங்களில் மிதந்தபடி உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்.
பூமியில் நாம் இருப்பதுபோல மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ வாய்ப்புள்ளது.  அவர்கள் நம்மைப்போலத்தான் இருப்பார்கள் என  எண்ணக்கூடாது. ஆனால் அவர்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும்’ என்கிறார். இதிலிருந்து அல் குர்ஆன் கூற்றுப்படி மலக்குகள்-ஜின்களும் நபிமார்களுக்கு வழிநடத்தியும,; இக்கட்டான நேரங்களில் பாதுகாவலில் ஈடுபட்டதும் புலனாகவில்லையா? உஹதுப் போரில் குரைசியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும,; நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ரத்தக்காயம் பட்டாலும் நபியவர்களையும் மற்ற முக்கிய தோழர்களையும் கொல்லப்படாது காத்தது கண்களுக்குத் தெரியாத ஜின்கள்தான் என்றால் உண்மைதான் என்று எண்ணத்தோன்றவில்லையா?
அல்குர்ஆனில் நபிமார்கள் இறைவனின் பிள்ளைகளல்லவென்றும் நபிமார்கள் கடவுளல்லவென்பதினையும் பல இடங்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஆனால் ஈசா நபியினை ஹிருத்துவ மக்கள்  கடவுளின் ஆவதாரமாக இயேசுபிரான் என்று அறியாமையில் அழைக்கின்றனர்.
பிலிப் புல்மேன் என்ற ஹிருத்துவ எழுத்தாளர், ‘தி காட்மேன் ஜீசஸ் மற்றும் ஸ்கவுன்ட்ரல் கிறிஸ்ட்’ என்ற புத்தகம் எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘ஜீசஸ் ஒரு மனிதர,; அவர் வரலாற்று நாயகர,; ஆனால் அவர் கடவுளல்ல’ என்றும் எழுதியுள்ளார் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தக் கூற்றுப்படி அல்குர்ஆனில் சொல்லிய வாசகம் உண்மை உணர்த்தவில்லையா?
சமீபத்தில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் நடந்த ஒரு செய்தியினை தமிழ் பத்திரிக்கைகள் சாதனையாக விளம்பரப்படுத்தயிருந்தன. அது என்ன தெரியுமா? அங்குள்ள கைதிகளுக்கு, படித்த கைதிகள் படிப்பதிற்கு பாடமெடுத்த செய்திதான் அது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அதனை பெருமானர்(ஸல்) அவர்கள் மதினாவில் செய்துள்ளார்கள்.
பத்ர் போரில் பெருமானார்(ஸல்) அவர்களின் படை போர் தொடுத்த மக்கா குறைசியர்களை ஓட ஓட விரட்டினார்கள். அதில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மதீனா நகருக்குக் கொண்டுவரப்பட்டு ஈட்டுத்தொகை கொடுக்க திராணியுள்ளவர்களை மன்னித்து விடுதலை செய்து விட்டு, ஈட்டுத்தொகை கொடுக்க முடியாதவர்களை மதினாவாழ் மக்கள் பத்து நபர்களுக்கு ஒரு கைதி வீதம் படிப்பினைப் போதிக்க வேண்டுமென ஆணையிட்டார்கள் என்றது வரலாறு. ஆகவே கைதிகளுக்குக் கூட கல்வி போதிப்பதில் இஸ்லாம் வழிகாட்டியாக இருந்திருக்கின்றதென்பது  தெரியவில்லையா?
சென்ற மாதம் மிகவும் பரபரப்பாக தமிழக மக்களிடையே பேசப்பட்ட செய்தியாக இருந்தது இறை மறுப்பாளராக இருந்த டாக்டர் பெரியார்தாசன் இஸலாத்தினை ஏற்றுக் கொண்டு தனது பெயரினை அப்துல்லா என்றும் மாற்றிக் கொண்டது. இறை மறுப்பார்கள் இஸ்லாத்தில் சேருவது ஒன்றும் ஆச்சரியமில்லை என்கிறது அல்குர்ஆன், அல்அஹ்காப்’(மணல்மேடுகள்)வசனங்கள(36) கீழ்கண்டவாறு கூறுகிறன்றது,
(வமவல்லாயுகிப் தாகியல்லாஹ பலைச பிமுஹிசி சிபில்அருளி வலைச லகு மின் குhளிகி அவைலியாவ் உலாயிக பிலஸாலிம் முபின்) அதாவது, ‘எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ, அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வினைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வினையன்றி அவனுக்கு பாதுபாப்பவர் ஒருவருமில்லை. அவனை புறக்கணிப்பவர்கள் பகிரங்க வழிக்கேட்டில் தான் இருப்பார்கள்’. ஆகவே இறை மறுப்பாளர்களும், பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களும் இஸ்லாம் கூறும் உண்மை தத்துவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையினை இனிமேலும் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது சரிதானே என் சொந்தங்களே?


நன்றி:- டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

நன்றி:- TMB

தகவல் :- AP,Mohamed Ali

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை – திருமதி. சகுந்தலா நரசிம்ஹன்


திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் “சதி” (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்’ என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித இஸ்லாமிய ஆடையையும் அணியாதபோது, நான் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்பதே எனது மறுப்பிற்கு முதல் காரணமாக இருந்தது. என்றாலும் எனது ஆர்வம் வெறுப்பை வென்றது.

சவூதி அரேபியாவின் ரியாத் ஏர்போர்ட்டில் நான் கால்வைத்த கணத்திலேயே மிகவும் பண்போடு “பெண்கள் பகுதி” க்கு அழைத்துச் சென்று அமர வைக்கப்பட்டேன். விசாச் சடங்குகளை முடித்துவர என் கணவர் சென்றிருக்கும் வேளையில் ஒரு குட்டி அரண்மனை போன்று மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த அறையின் அலங்காரங்களில் மனம் லயித்துப் போனேன். செல்வச் செழிப்புடன் கூடிய கண்ணியமும் கெளரவமும் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கப்படுவது என் மனதை முதன் முதலாகத் தொட்டு விட்டது!

சவூதிக்குக் கிளம்பும் முன்னரே அங்குள்ள ஹிஜாப் பற்றிய விதிமுறைகளைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால், புர்காவினைக் கையோடு கொண்டு வந்திருந்தேன். என்றாலும், ஏர்போர்ட் ஃபார்மாலிட்டீஸ்களை முடித்து நகரத்தின் அழகான வீதிக்களைக் கடந்து ஃபைஸலியா ஹோட்டல் வந்து சேரும் வரை நான் புர்காவை அணிந்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் யாரும் சொல்லவேயில்லை.

மறுநாள் காலையில், ஹோட்டல் நிர்வாகத்தினர் அழகான எம்ராய்டரிங் செய்யப்பட்ட புதிய கறுப்பு நிற அபாயா (இந்தியாவில் நாம் புர்கா என்று சொல்லும் உடையை சவூதியில் இவ்வாறு தான் அழைக்கிறார்கள்) ஒன்றினைக் கொடுத்தார்கள். இதனை நான் அணிந்து கொண்டால் வெளியே செல்லும் வேளையில் அதிக சவுகரியமாக இருக்கமுடியும் என்று கனிவோடு ஆலோசனை கூறினார்கள்.

“சவுகரியமா? இதன் மூலமா?” என்று மனதில் கேட்டுக் கொண்டேன்.

எனது தோற்றத்திற்கும், தனித்தன்மைக்கும் வேட்டு வைக்கும் இந்த உடை, எனக்கு சவுகரியத்தை அளிக்கப்போகிறதா? என்ற கேள்வியை வெளிக்காட்டாமல் சற்றே சினத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன்!. ஆனால் நான் ரியாதில் தங்கியிருந்த அடுத்த ஆறு நாட்களில் என் எள்ளலுக்கும் சினத்திற்கும் தகுந்த பதில் கிடைத்தபோது வியப்பிலாழ்ந்து போனேன்.

நோபல் பரிசுக்கு இணையாக அறிவியல், மருத்துவம் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளுக்கான விருதுகளையும் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுகளையும் ஆண்டுதோறும் வழங்கும் சர்வதேசப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

மறுநாள் காலையில், அரண்மனையின் உயரிய கம்பீரத்தோடு, பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த “பிரின்ஸ் சுல்தான் க்ராண்ட் செரமோனியல் ஹால்” இல் அடியெடுத்து வைத்த எனக்குப் புதிய வியப்பு ஒன்று அறிமுகமானது. அத்துணை பெரிய சபையில் பெண்களுக்காகத் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

பூக்களை மொத்தமாக இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் எனது வலப் பக்கத்திலும் அவருக்கு அருகில் ஒரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் போதிக்கும் பெண் நிபுணரும் அமர்ந்திருந்தனர். ஒரு முழு ஆண்டின் பெரும்பகுதி நேரத்தினை நியூயார்க்கில் செலவழிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவியும் ஜே ஆர் டி டாட்டாவின் நெருங்கிய தோழி என்று அறியப் பட்டவருமான ஒரு பெண்மணி எனது இடப்பக்கத்திலும் அவருக்கு அருகில் இளம் பத்திரிகையாளர் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தார். ஜித்தாவிலிருந்து வந்திருந்த ‘மிகப் பெரும் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்’ என்று அறியப் பட்ட ஒரு பெண்ணும் எங்களோடு அமர்ந்திருந்தார்.

சரி, இதில் வியக்க என்ன உள்ளது என்கிறீர்களா? அவர்கள் அனைவருமே அணிந்திருந்தது கறுப்பு நிற ஹிஜாப் உடை தான்.

என்னருகில் அமர்ந்திருந்த பெரும் நிறுவன உரிமையாளரான அந்த இளம் பெண் விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்த டிவி கேமராக்கள் எங்களை நோக்கித் திரும்பும் நேரத்தில் எல்லாம் விலகியிருக்கும் தன் முகத்திரையினை சரி செய்து முகத்தை மூடிக் கொண்டார். புதிராகப் பார்க்கும் என் பார்வையினைப் புரிந்தவராக என் பக்கம் சாய்ந்து, “கேமராக்கள் நம்மைப் படம்பிடிப்பதை விட்டும் விலகி விட்டால் எனக்கு தெரியப் படுத்துங்கள்!” என்றார். நிகழ்ச்சிக்கு வந்த மற்ற அனைத்துப் பெண்களைப் போலவே இவரும் மிக அழகிய ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்பு விலகாமல் ஆர்வத்துடன் நெருங்கி கேட்டேன்: “எதனால் தங்கள் முகத்தினைக் கேமராமுன் காண்பிக்க மறுக்கிறீர்கள்?”

அதற்கு அவர், “நீங்கள் இப்போது அணிந்துள்ள புடவை, ஏதேனும் ஒன்றில் சிக்கி, உங்கள் முழங்கால் வெளியே தெரிவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் அல்லவா? அது போலவே அறிமுகமற்றப் புதியவர்கள் என் முகத்தைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை!” என்றார்.

“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவிக்கப்பட்டு அடிமைப்படுத்தப் படுகிறார்கள்” என்ற சொல்லையே இந்தியாவில் திரும்பத் திரும்ப கேட்டிருந்த என் மனதினுள் இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தனது கைகளுக்கும் விரல்களுக்கும் உதட்டுக்கும் கண்களுக்கும் தேர்ந்த ஒப்பனை செய்திருந்ததையும் கவனித்தேன். மனதில் எழுந்த கேள்விகளை அடக்க முடியாமல் அவர் பக்கம் நெருங்கினேன்.

“இத்தனை அற்புதமான அலங்காரங்களைச் செய்துள்ள உங்கள் அழகை இந்த புர்கா சிதைக்கவில்லையா?” பொருளாதார நிபுணரான அப்பெண் மென்மையாக சிரித்தவாறே கூறினார்.

“இல்லவே இல்லை! இத்தனை அலங்காரங்களையும் என் சந்தோஷத்திற்காக மட்டுமே செய்கிறேன். நம் சுவைக்குத் தக்கவாறு உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவது நமது தனிப் பட்ட விருப்பமில்லையா அது மாதிரி…!” என்றார்.

அத்துடன் நில்லாமல், “இந்த அழகு அலங்காரங்கள் எல்லாம் வேற்று ஆண் ஒருவரை ஈர்ப்பதற்காக அல்லவே? பின்பு ஏன் கவலை?” என்றார்.

அப்படியென்றால் இத்தனை காலம் மேற்கத்திய மற்றும் கீழத்தேய எழுத்தாளர்கள் அனைவரும், “புர்கா என்பது பெண்ணடிமைத்தனம் என்று கூறி வந்தது பொய்யா?” என்ற பெரிய கேள்வி ஒன்று பூதாகரமாக என் மனதில் உருவாவதை உணர்ந்தேன்.

என் கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் வாரிசுதாரரான ஜித்தாப் பெண்ணிடமும் இது பற்றி உரையாடினேன்.
“உங்களுக்குத் தெரியுமா?” என்று என்னிடம் கேள்வி எழுப்பினார் செல்வச் சீமாட்டியான அந்த பெண். “மேற்கத்திய நாடுகளின் என் பயணங்களில் கவனித்திருக்கிறேன். அலுவல் சார்ந்த உயர் நிகழ்ச்சிகளில் உடல் முழுமையாக மறையும் வண்ணம் பிஸினஸ் சூட் அணிந்து வரும் மேற்கத்தியப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையோரின் உடைக்கும் ஹிஜாபுக்கும் பெருத்த வித்தியாசம் ஏதுமில்லை!” என்றார்.

“கறுப்பு நிறக் கலாச்சார உடையினை உடல் முழுவதும் சுற்றிக் கொள்ளுதல்” என்று பலரை இதுநாள் வரை கேலி செய்திருந்த எனக்கு, யதார்த்தமான இப்பதில் வெகுவாக யோசிக்க வைத்தது. பொறுமையின் எல்லையைக் கடந்தவளாக ஆர்வம் மிகுதியில் என் கையில் கொண்டு வந்திருந்த புர்காவை எடுத்து அணிந்து பார்த்தேன். எடுத்த எடுப்பில் சற்றே வெறுப்பாய் உணர்ந்த நான், அடுத்த சில நாழிகைகளில் எனது வெறுப்புத் தளர்வதை உணர ஆரம்பித்தேன். பிற்பாடு ஹிஜாப் அணிந்தவண்ணம் வெளியே செல்லவும் ஆரம்பித்தேன்.

என் போன்றே ஹிஜாப் அணிந்து பார்த்த, மருத்துவத்துறைக்கான பரிசினை வென்ற அமெரிக்கர் ஒருவரின் மனைவி பெண்களின் கூட்டத்திற்கிடையே பேசுகையில், “தான் அணிந்துள்ள ஹிஜாப் மூலம், தான் மிகவும் சவுகரியமாகவே உணர்வதாக”க் குறிப்பிட்டார். “சுருக்கங்கள் நிறைந்த, அடிக்கடி விலகும் எனது ஸ்கர்ட் பற்றி இனிக் கவலையில்லை!” என்று கூறி அங்குள்ள பெண்கள் அனைவரையும் சிரிக்கச் செய்தார். வியப்பில் என் விழிகள் அகலும் வண்ணம் நாங்கள் பார்வையிடச் சென்ற தேசியக் கண்காட்சி மையம், பல்கலைக் கழகம், மருத்துவ-ஆராய்ச்சி மையம் என்று எங்கு, எப்பணியில் நோக்கினாலும் பெண்கள் தடங்கலின்றி சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்தவண்ணம் பணிகளில் ஈடுபட்டிருந்ததைத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா?

அறிவியல், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பப் பணிகளிலும் அநாயசமாகவும் எளிமையாகவும் அப்பெண்கள் ஹிஜாபுடன் எவ்வித இடைஞ்சலுமின்றி செயற்படுவதைக் கண்டு வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

இந்தியத் தூதர் M.O.H ஃபாரூக் அவர்கள் எங்களுக்காக அவர் வீட்டில் அளித்திருந்த உயர் ரக விருந்தில்கூட பெண்கள் (அதிகாரிகளின் மனைவிகள்) அனைவருக்குமான தனித்த இடத்தில் விருந்து நடந்தது.அதன் பிறகு ஒரு நாளில், கோல்டு மார்க்கெட் எனப்படும் தங்க நகைகள் விற்கும் கடைவீதிக்குச் சென்று வந்தேன். (பார்ப்பதற்கு மும்பையின் ஜாவேரி பஜார் போன்று ஆனால் அதைவிடச் சிறப்பாக இருந்தது இப்பகுதி) அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மால்கள் அனைத்திலும் ஹிஜாபுடன் ஏறி இறங்க எனக்கு மிக மிக எளிமையாகவே இருந்தது. அந்நேரத்தில் அப்பகுதிகளில் சவூதி நாட்டு படித்த இளம் பெண்கள் பலரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படி பார்த்த பல பெண்கள் தங்கள் கைகளில் லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைல் ஃபோன்களை வைத்துக் கொண்டு மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அமர்ந்து, தன் மொபைல் ஃபோனில் டயல் செய்து கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணை அணுகினேன்.

அந்தப் பெண், நவீன கலாச்சாரச் சூழலில் வளர்ந்தவர் என்பது பார்க்கும் பார்வையிலேயே தெரிந்தது. படித்த, பகட்டான உடையணிந்த பெண் என்பதால் ஹிஜாப் குறித்த மாற்றுச் சிந்தனையை எதிர்பார்த்து அணுகினேன்.”நீங்கள் ஹிஜாபை விரும்பித்தான் அணிகிறீர்களா?” என்று கேட்டு விட்டேன்.

நொடிக்கூட தாமதிக்காமல் பதில் வந்தது: “இது எனக்கு கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும் ஒரு உள்ளாடையை அணிவது போன்று எளிமையாகவும் இருக்கிறது” என்றார். என்னை ஏறிட்டு நோக்கியவர், என் மனதில் உள்ள குழப்பங்களைப் படித்தது போன்று எதிர்கேள்வி ஒன்றையும் என்னிடமே போட்டார்:

“செரினா வில்லியம்ஸ், இப்போது அணிந்துள்ள ஸ்கர்ட்டை விடச் சிறிய, பிகினி உடையினை அணிந்தால் இன்னும் வேகமாக அவரால் ஆட முடியும்தான். ஆனால் அது அவருக்கு சவுகரியமாக இருக்காது என்பதால் அவர் செய்ய மாட்டார் இல்லையா?” என்றார். இதுநாள் வரை எனக்குக் கிடைக்காத சில விடைகள் சரசரவென்றுக் கிடைக்க ஆரம்பித்தன.

இச்சூழலில், மும்பையின் மலபார் ஹில் பகுதியில் ஒருமுறை நான் கலந்து கொண்ட திருமண டின்னர் பார்ட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. மணமகளாக அலங்காரம் செய்யப்பட்ட பெண் ஒருத்தி, பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து சிகை அலங்காரம் செய்திருந்தாலும் கூன்கட் (Ghoonghat) எனப்படும் முக்காடு கொண்டு தலைப்பகுதியினை நிகழ்ச்சி முழுவதும் தன்னை மறைத்திருந்தாள். அவளது அலங்கரித்த தலைமுடியை மறைத்திருப்பது பற்றி நான் எழுப்பிய வினாவிற்கு, “கூன்கட் எனப்படும் தலையினை மறைப்பதுதான் பெரியோர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். இது எங்கள் பாரம்பரிய கலாச்சாரமாகும்; நான் ஏன் அதை மீற வேண்டும்?” என்று பெருமையாகக் கூறுயதே விடையாகக் கிடைத்தது. எனவே எனக்கு ஏற்பட்ட பலவித அனுபவத்திலிருந்து சில முடிவுகளுக்கு வந்தேன்.

மும்பையில் ஒரு சமுதாயத்தின் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக ஒரு பெண் தலையை மறைப்பது பெருமையாக கருதப்படுவதும் அது ஆண்களிடையே ‘அடிமைத்தனம்’ என்ற கூக்குரலாக வெளியே வருவதில்லை. ஆனால், இஸ்லாத்தில் பெண்கள் ஹிஜாப் அணிகையில் மட்டும் ‘பெண்ணடிமை’த் தனமாக உருவகப்படுத்தப் படுவது ஏன்? என்ற நெருடல் அவ்வேளையில் எழுந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் பெண்ணின் உடை அளவிலான கோட்பாடுகள் என்பது உள்ளது என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் அது அவரவர் கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு ஏற்று மாறுபடுகிறது. செரினா வில்லியம்ஸின் உதாரணம் உட்பட.

என்னுடைய ஆறாவது நாளின் முடிவில் அபாயா (ஹிஜாப்) அணிந்த பெண்களில் ஒருத்தியாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இந்த உடை அணிந்ததன் மூலம் நான் எதுவும் சிரமமாக உணர்கிறேனா? பெண்ணுரிமைக்காக கடுமையாகப் போராடுபவள் என்ற உணர்வில் இருந்து சற்றும் மாறுபடாமல் என் அடிமனதில் இருந்து எழுந்த பதில், இல்லை. எனக்கு எந்தச் சிரமமும் இல்லவே இல்லை!
சவூதி அரேபியாவுக்குச் சென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! அங்கே ஹிஜாப் அணிந்து வலம் வந்தபோதும்

வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை! தமிழில்: மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி

ஏப்ரல் 28, 2010 1 மறுமொழி

بسم الله الرحمن الرحيم

سر النجاح – ومفتاح الخير والبركة والفلاح

ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்;  குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்!  சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின்   மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”

இஸ்திகாரா  தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة  ثم  ليقل : اللهم إني أستخيرك  بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك  من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به.   (أخرجه البخاري. )

“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”

இதன் பொருள்:

“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம்,  மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம்.  உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக  பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான  முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு  ஆதாரமாக  இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா  தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன்  உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்!  உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது.  இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான்.  யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்!  பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள்.  விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்”  (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான்.  ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்;  குறித்த அப்பெண்னை மணப்பான்;  காலப்போக்கில்  அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று  விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார்.    அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன;  அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300  பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம்  சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம்.  குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை”  (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”  (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால்  இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த  வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ  வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது  மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.


நன்றி:- மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி

நன்றி:- சுவனத்தென்றல்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நான் தொலைத்த பால்யம் – திருமதி. லக்ஷ்மி காட்டல்

ஏப்ரல் 28, 2010 1 மறுமொழி

பாட்டி சொன்ன கதைகளில்லை
அம்மா ஊட்டிய கவளமில்லை,
அத்தை பாடிய தாலாட்டில்லை
தாத்தா தோளில் சவாரியில்லை,
மாமா தந்த செல்லமில்லை,
அப்பா மடியில் தூங்கவில்லை……..!

ஐந்து மணி அலாரத்தில்
அம்மாவின் அவசரத்தில்,
அரைகுறையாய் விடியும்
பொழுதுகள் ரசிக்கவில்லை…!

ஆயா அள்ளித் தருகிற
அவசர சாப்பாடும்
அம்மா தருகிற அரைகுறை
முத்தமும் ருசிக்கவில்லை !

பொதி சுமக்கும் கழுதையாய்
முதுகில் புத்தக மூட்டை,
தத்தும் நடை மாறா
என் பிஞ்சு பாதங்கள்,
தடுமாற எட்டெடுத்து வைத்தேன்
பள்ளி எனும் போர்க்களத்தில்,
ஏ பி சி டி ஆயுதங்கள்
எண்களின் போர்முறைகள்
எதுவும் என் தலையில் ஏறவில்லை !

காலையில் பார்த்த குருவியும்
சாலையில் பார்த்த நாய்குட்டியுமே
என் இதயம் முழுக்க……..!
மாலை முழுதும் விளையாட
மனம் கொள்ளா ஆசை,
அம்மா கைப் பிரம்பு
ஆசைக்கு அணைகட்ட
வீட்டுப் பாடம் எழுத
என் பஞ்சு கைகளுக்கு வலுவில்லை
அம்மா மடியும் அப்பா தோளும்
அவசரத் தேவை!

கூண்டுக் கிளியாய் நானுமிங்கே,
என்றோ நான் வளர்கையில்
வருத்தப் போகும் கணங்களாய்
அவசர உலகில் நான் தொலைத்த பால்யம்!


நன்றி:- முகநூல் (Facebook)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

யானைக்கு வந்த திருமன ஆசை, மலிவான பொருள் – முல்லா கதைகள்

குழந்தைகளுக்கான பாதுகாப்பு டிப்ஸ்


நம்மைச் சுற்றி வெவ்வேறு வடிவங்களில் ஆபத்துகள் இருக்கின்றன. ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை. நாம் கொஞ்சம் கவனமாக இருந்தாலே எந்த ஆபத்தையும் தவிர்த்துவிடலாம். இங்கே பல்வேறு சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. கவனமாகப் படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். உன் நண்பர்களுக்கும் சொல்லவும்.

நடந்து செல்லும்போது

இரண்டுபுறமும் பார்த்துவிட்டுத்தான் சாலையைக் கடக்க வேண்டும்.

‘ஸீப்ரா கிராஸிங்’ எனப் படும்கறுப்பு|வெள்ளைக் கோடுகள்உள்ள இடத்தில்தான் சாலையைக் கடக்க வேண்டும். றீ போக்குவரத்துக் காவலரோ, பாதசாரிகளுக்கான பச்சை விளக்கோ அனுமதித்த பின்தான் சாலையைக் கடக்க வேண்டும்.

சுரங்கப்பாதைகள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதே பாதுகாப்பு.

சாலையில் போடப்பட்டிருக்கும் தடுப்பு வேலிக்கு நடுவில் புகுந்தோ அல்லது அவற்றைத் தாண்டியோ செல்லக் கூடாது.

ரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போது இருபுறமும் கவனமாகப் பார்க்கவேண்டும். கேட் மூடியிருந்தால், திறக்கும்வரை காத்திருப்பதில் தவறில்லை.

சாலையில் கீழேயும் கவனித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். எங்கேயாவது டிரெய்னேஜ் கிடங்குகள் திறந்திருந்து, அவற்றுள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உண்டல்லவா?

சைக்கிள் ஓட்டும்போது

சைக்கிளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது.

சைக்கிளின் பின்னால் அமர்ந்திருக்கும்போது புத்தகம் படித்துக்கொண்டு செல்லக்கூடாது.

‘என் நண்பன்தானே ஓட்டுகிறான்’ என்று அவனோடு பேசிக்கொண்டே சென்று, அவன் கவனத்தைக் கலைக்கக் கூடாது.

சைக்கிளை ஓட்டும்போது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் செல்வது, சிவப்போ, மஞ்சளோ ஒளிர்ந்தால் நிறுத்தக் கோட்டுக்கு முன்பே நிற்பது போன்ற விதிகளை எப்போதும் மீறக் கூடாது.

சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருக்கும் போது, அவற்றின் இடையே புகுந்து செல்லக் கூடாது.

டிரஸ், புத்தகப் பை போன்றவை சக்கரத்தில் மாட்டிக்கொள்ளாது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

போட்டி போட்டுக்கொண்டு ஓட்டுவது, பெரிய வாகனங்களை முந்த முயல்வது போன்றவை வேண்டாமே!

சாலைகளைக் கடக்கும்போது, நின்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.

18 வயது நிரம்பிய பிறகே சைக்கிளுக்கு அடுத்த கட்ட வாகனங்களை ஓட்டப் பழகவேண்டும். அவற்றை ஓட்டும்போதும் மேற்சொன்னவற்றைப் பின்பற்றுவது நல்லது.

பஸ், வேன், ஆட்டோவில் செல்லும் போது

பள்ளி வாகனத் திலோ, பஸ்ஸிலோ செல்லும்போது படியில் உட்காரவோ, நிற்கவோ கூடாது.

பஸ் நின்றபிறகுதான் ஏறவேண்டும், இறங்கவேண்டும். ஓடும்போது அதில் ஏறவோ, இறங்கவோ முயற்சிக்கக் கூடாது.பஸ் மட்டுமல்ல… ஆட்டோ, ரிக்ஷா, ஸ்கூல் வேன் இவற்றில் பயணம் செய்யும்போதும் இதைப் பின்பற்றுவது நல்லது.

நண்பர்களாக ஆட்டோவில் சென்றால்மூன்று பேர் மட்டுமே ஒரு வாகனத்தில் செல்ல வேண்டும். வாகனம் பளுவைத் தாங்கமுடியாத நிலைக்குத் தள்ளக்கூடாது.

எந்த வாகனத்தில் சென்றாலும் உள்ளிருந்து வெளியே எட்டிப் பார்ப்பது, கை|கால்களை நீட்டுவது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. எந்த வாகனத்திலும் விழும் நிலையில் அமரக்கூடாது. றீ புத்தகப் பையோ, உடைகளோ மற்ற வாகனங்களில் மாட்டி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்கூல் வேனை விட்டு இறங்கியபின்அதன் குறுக்கே ஓடிக் கடக்காதீர்கள். வாகனம் போகும்வரை காத்திருந்து அதன்பின் கடப்பதே நல்லது.

கவனமாய் இருக்கணும்

தெருவில் யாராவது பின் தொடர்ந்து வந்தால், மிரட்டினால், கிண்டல் செய்தால், அசிங்கமாகப் பேசினால் பயப்படக் கூடாது. ஸ்கூலில் டீச்சரிடமும், வீட்டில் பெற்றோரிடமும் உடனே தெரியப் படுத்துங்கள். அவசரம் என்றால் தயங்காமல் 1098-க்கு போன் செய்து உதவி கேளுங்கள் (கடைசி பெட்டிச் செய்தியைப் பார்க்கவும்).

சாக்லெட், பிஸ்கட், ஐஸ்க்ரீம், பொம்மை என்று வெளியில் யார் என்ன பொருள் கொடுத்தாலும் அதை வாங்கக்கூடாது.

ஸ்கூலில் க்ளாஸ்மேட்டோ, சீனியரோ எல்லோரிடமும் நட்போடு பழகுங்கள். அதே சமயம் யாராவது உங்களை எதற்காகவாவது வற்புறுத் தினாலோ மிரட்டினாலோ உடனே டீச்சரிடம் சொல் லுங்கள்.

நீண்டநேரம் முழங்கால் போடச் செய்வது, கடுமையாக அடிப்பது, அசிங்கமாக திட்டுவது போன்ற காரியங்களில் ஆசிரியரே ஈடுபட்டால் கூட, பயந்துபோய் மறைக்க வேண்டாம். இதனால் பிரச்னை தீராது. அம்மா, அப்பாவிடம் சொன்னால் அந்த ஆசிரியரிடம் பேசிபிரச்னையை சரிசெய்வார்கள். அல்லது வேறு பள்ளியில் உங்களை சேர்த்துவிடுவார்கள்.

வெளியே நீங்கள் செல்கிற இடத்தில் அது தெரிந்த நபரோ, புது நபரோ, உங்களைத் தவறான நோக்கத்தில் தொட்டாலோ, தடவினாலோ, கட்டிப்பிடித்தாலோ, முத்தம் கொடுத்தாலோ மறைக்காமல் பெற்றோரிடம் சொல்லுங்கள். தவறாக எது நடந்தாலும் அதை முதல் தடவையிலேயே தெரியப்படுத்துங்கள். ரொம்ப இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டால் 1098-ல் உதவி கேளுங்கள்.

தினமும் ஸ்கூலில் நடக்கிற எல்லா விஷயங்களையும் அம்மாவிடமோ அப்பாவிடமோ ஒன்றுவிடாமல் சொல்லிப் பழகுங்கள். உங்களுக்குப் பள்ளியில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்ற விஷயம் நீங்கள் சொன்னால்தானே பெற்றோருக்குத் தெரியும்… பயம், தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளப் பழக வேண்டும்.

உங்கள் ஸ்கூலில், காற்றும் வெளிச்சமும் நிறைந்த பாதுகாப்பான கட்டடம், விளையாட்டு மைதானம், சுத்தமான குடிநீர், டாய்லெட், குப்பையில்லாத சுற்றுச்சூழல் இவை இருக்க வேண்டியது அவசியம். இவற்றில் எதில் குறையிருந்தாலும் பெற்றோரிடம் சொல்லி, பள்ளியில் பேசச் சொல்லுங்கள். தவிர, ஃபேன் லொட லொட என்று சுற்றினாலோ டேபிள் \ சேர் உடைந்திருந்தாலோ உடனே மாற்றச் சொல்லிக் கேளுங்கள்.

நிறைய மார்க் வாங்க வேண்டியது அவசியம்தான். அதற்காக முயற்சி எடுத்துப் படிக்கலாம். ஆனால், மார்க் குறைந்துவிட்டால் மனம் சோர்ந்துவிடக் கூடாது. டீச்சர் திட்டினாலோ, சக மாணவர்கள் கிண்டலடித்தாலோ அவமானமாக உணராதீர்கள்.

உங்கள் ஃப்ரெண்ட்ஸ் யாராவது திடீரென யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்தாலோ, தனியாக அழுதுகொண்டிருந்தாலோ, செத்துப் போவதை பற்றி பேசினாலோ தாமதிக்காமல் டீச்சரிடம் சொல்லுங்கள்.

எந்த பிரச்னையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை முயற்சியில் இறங்குவது முட்டாள்தனம். இவ்வுலகத்தில் படித்து சாதித்த மேதைகளைப் போலவே படிக்காமல் சாதித்த மேதைகளும் உண்டு, அதனால் மார்க் குறைவதற்கெல்லாம் மனம் தளரக் கூடாது. சரியா?

ஆபத்து ஏற்பட்டால்

மின்சாரக் கசிவினால் உண்டான தீயை அணைக்க தண்ணீரை ஊற்றக் கூடாது. மணலைக் கொட்ட வேண்டும்.

யாரைத் தேடியும் எதற்காகவும் ஒருபோதும் தீ எரிகிற பகுதிக்கு உள்ளே செல்ல வேண்டாம்.

தீ விபத்து ஏற்பட்டால் யார் பேச்சையும் கேட்காமல், யாருக்காகவும் காத்திருக்காமல் முதலில் வெளியே ஓடி வாருங்கள். முதியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் தீயில் மாட்டிக்கொண்டிருந்தால் பெரியவர்களிடம் தகவல் சொல்லுங்கள். தீப்பற்றி எரியும்போது, ஸ்கூல் பேக், பொம்மை, புது டிரஸ் எதையும் எடுக்கக் கூடாது. பொருள் போனால் போகிறது, உயிர்தான் முக்கியம். எந்த இக்கட்டிலிருந்தும் முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

தீப்பிடித்த நேரத்தில் லிஃப்ட்டைப் பயன்படுத்த வேண்டாம். லிஃப்ட் பாதியில் நின்றுவிட்டாலோ, கதவைத் திறக்க முடியாமல் போனாலோ பிரச்னையாகிவிடும்.

தீ பரவினால் பதற்றமடையாமல் உடனே அங்கிருந்து விலக வேண்டும். அங்குமிங்கும் ஓடி நெரிசலை உண்டாக்காமல் முறையாக அந்த இடத்தை விட்டுப் போகவேண்டும்.

புகையில் சிக்கிக்கொண்டால், தரையில் மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள். ஈரத்துணியால் முகம், வாய் இரண்டையும் சேர்த்து மூடிக்கொண்டால் மூச்சுத் திணறல் ஏற்படாது.

உடையில் தீ பிடித்தால் மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஸ்டாப், ட்ராப் அண்ட் ரோல் (Stop, drop and roll) அங்குமிங்கும் ஓடாமல் கீழே படுத்து உருள வேண்டும். தீ அணைப்பதற்கான வழி இது. முடிந்தால் உடைகளை அப்புறப்படுத்துங்கள். தண்ணீரை உடலில் ஊற்றியோ போர்வையாலோ தீயை அணைக்கலாம். றீதீப்புண்களில் ஒட்டியுள்ள உடையைப் பிய்த்து அகற்ற வேண்டாம். மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.

தீப்புண்ணில் எண்ணெய், ஆயின்ட்மெண்ட், இங்க் போன்றவற்றைக் கொட்டக் கூடாது. காயம்பட்ட இடத்தை மெல்லிய துணியால் மூடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

ஷாக் அடித்துவிட்டால், உடனே பவர் சப்ளையை நிறுத்துங்கள். மரக்கட்டை, ஈரமில்லாத போர்வை அல்லது கயிற்றைக் கொண்டு விடுவிக்கவும். பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால், உடைகளைத் தளர்த்தி, தலையை முன்னும் பின்னுமாக அசைத்துவிடுங்கள். பாதிக்கப்பட்டவர் மூச்சுவிட இது உதவும்.

இந்த எண்களை மறக்காதீர்கள்

சின்னதாக ஒரு டெலிபோன் டைரி வாங்குங்கள். அதில் வீட்டு போன் நம்பர், முகவரியை எழுதி வையுங்கள். வீட்டில் போன் இல்லையெனில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது உறவினர் வீட்டு நம்பரை எழுதி வைக்கவும். இது தவிர, ஸ்கூல் போன் நம்பர், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, அவசரப் போலீஸ் நம்பர் 100, தீயணைப்புப் படை எண் 101 மாதிரியான முக்கியமான போன் நம்பர்களை குறித்து வையுங்கள். டைரியை தினமும் மறக்காமல் எடுத்துச் செல்லவும்.

பத்து ஒன்பது எட்டு (1098) – இந்த எண்ணை மறக்கவே கூடாது. இது சுட்டிகளுக்கான டெலிபோன் நம்பர். சைல்ட் ஹெல்ப் லைன் என்று பெயர். வீட்டிலோ வெளியிலோ பள்ளியிலோ எங்கு என்ன பிரச்னை வந்தாலும் உடனே இந்த எண்ணுக்கு டயல் செய்து உதவி கேட்கலாம்.

தீ விபத்து ஏற்பட்டாலோ… குழியில் விழுவது, லிஃப்டில் மாட்டிக்கொள்வது மாதிரியான உயிருக்கு ஆபத் தான நிலையில் யாராவது சிக்கிக்கொண்டாலோ உடனே தீயணைப்பு மற்றும் மீட்புப் படையை (101) தொடர்பு கொள் ளுங்கள். நீங்களே மாட்டிக்கொண்டால் பதற்றப்படாமல், அதிலிருந்து தப்பும் வழியை யோசியுங்கள்.