நான் படித்ததில் பிடித்ததை இவ்வலைப்பூவில் அனைவரிடமும் பகிர்ந்து மகிழ்கிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவருக்கே!

அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! – அஸ்ஹர் ஸீலானி

 

எனது அன்புக் கணவருக்கு ஒரு மனம் திறந்த மடல்!

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால்

 

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக!

எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

 

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன.

 

என்னை நம்புங்கள்! நான் எப்படி இதை எழுதுவது? நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை அடைந்த பின்னரும என்னால் எப்படி எனது உளக்குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். இது ஏனென்று உங்களுக்கு தெரியுமா? நாமிருவரும் ஓருடலும் ஈருயிருமாக அல்லவா இருந்தோம்? எதற்காக எமது வாழ்வு இப்படியான ஒரு அவல நிலையை அடைந்தது? நமது வாழ்க்கையை வழப்படுத்த வேண்டிய சுபிட்சத்தை நாம் ஏன் இழந்தோம், நாமிருவரையும் பிரித்து வைப்பதில ஷைத்தான் வெற்றி பெற்றுவிட்டான். ‘உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறிய உனது மனைவி எந்தப்பயனும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க காரணமாக இருந்து விட்டாள்’ என்று உங்களை நம்பவைத்து விட்டான் அந்த ஷைத்தான். உங்களது இரண்டாவது வாரிசான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க நான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அப்போதே நான் நினைத்தேன் இது பெண் குழந்தை என்பதற்காகத் தான் நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு பெண் அந்த நேரத்தில் படும் வேதனையை நீங்கள் நன்றாக அறிந்திருந்தும் என்னை ஆறுதல் படுத்துவதற்காவது நீஙகள் வரவில்லை. ஒவ்வொரு மனைவியும் அந்த நேரத்தில் கணவனின் வருகையை எதிர்பார்ப்பாள். ஆனால் அந்தப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அது என்னை பெரிதும் பாதித்த ஒரு விடயமாகும்.

 

நான் உங்களிடம் மனம் வருந்திய போது நான் நினைத்திருக்க வில்லை நாம் இன்றைக்கு வாழும் நெருக்கடி மிக்க வாழ்க்கைக்கு இது தான் ஆரம்பம் என்று! என்றாலும் பின்னர் நீங்கள் இதை எண்ணி வருந்தினீர்கள். எனது உணர்வை புரிந்து கொண்டீர்கள. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

 

நமக்கு அல்லாஹ் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பாக்கியமாக தந்த போது நான் அவமானத்தையும், இளிவையும், பரிகசிப்பையும் தவிர வேறு எதையும் பெறவில்லை. நீங்கள் ஒரு நாள் சொன்னீர்கள் உனக்கு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் தெரியும் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு இந்த வீட்டில் எந்த உரிமையுமில்லை என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தில் ஈட்டியால் குத்திய வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளை நீங்கள் மறந்திருந்தாலும் எனது உள்ளத்தை விட்டு அவைகள் மறைந்து விடவில்லை. என்னைப் பெற்றெடுத்த எனது அன்பு தந்தை மரணிக்கும் வரை நோயிலே இருந்தார். அவரை இறுதி வரையிலும் பார்க்க விடாமல் என்னை தடுத்தீர்கள்…

 

என் அன்புக் கணவரே! உங்களுக்கு ஏன் இந்த கல் மனம்? உங்களின் இந்தக் கோபத்தையும் அடக்கு முறையையும் என்னால் தாங்க முடியுமா என்ன?

 

எனது அன்புக் கணவரான உங்களின் மேலான கவனத்திற்கு நான் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்த போது அது ஆண் குழந்தை இல்லை என்ற உடன் உங்களை விட அதிகம் நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் அது பெண் குழந்தை என்பதற்காகவோ அல்லது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறைகாண வேண்டும் என்பதற்காகவோ அல்ல! மாறாக உங்கள் மீது எனக்குள்ள இரக்கத்தினாலும் உங்களின் உணர்வைப் புரிந்துகொண்டதாலும், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் தான். இதனை நீங்கள் என்னை சொல்லாலும், செயலாலும் நோவினை செய்த போதெல்லாம் நான் பொறுமை காத்ததன் மூலம் நீங்கள் மிக தெளிவாக புரிந்திருப்பீர்கள்…

 

உண்மையில் என்னை நம்புங்கள்! நான் ஏதோ ஒரு பாவம் செய்தவிட்டேனோ தவறிழைத்து விட்டேனோ என்றெல்லாம் எண்ணினேன். சில வேளை உங்களது கவலைக்கும் மன உளைச்சலுக்கும் நான் தான் காரணமோ, என்னை நம்புங்கள்! ஆண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டுமென்ற உங்களின் கனவுக்கு நான் தான் தடைக்கல்லாக அமைந்து விட்டேனோ என்று கூட நான் எண்ணியதுண்டு. உங்களது உணர்வு இப்படி ஆனதனால் உங்களது உரிமை விடயத்தில் நான் ஒரு பாவியாகி விட்டேனா என்று எண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு…

 

எனது அன்பான கணவரே! விடயம் நீங்கள் எண்ணுவது போன்றுமல்ல, நான் அதற்குக் காரணமும் அல்ல… இவை அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடும். அவனின் விருப்பமும் அவனது களா கத்ருமாகும். எதற்காக நீங்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என்றால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை?

 

சில நேரம் இதற்கெல்லாம் நீங்கள் கூட காரணமாக இருக்கலாமல்லவா? அல்லது ஆணையோ பெண்ணையோ பெற்றெடுக்க முடியாத மலடனாகவோ அல்லது மூளை குறைபாட்டுடனோ, அல்லது அங்கவீனமான பிள்ளைகளையோ தந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது ஆண் பிள்ளைகளைத்தான் தந்த பின்னர் அப்பிள்ளைகள் பெற்றோருக்கு நோவினை செய்கின்ற கேடு கெட்ட பாவிப்பிள்ளைகளாக அவர்கள் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதிக மனிதர்கள் இவை அனைத்தையும் அனுபவிக்க அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் இம்மகத்தான அருட்கொடைக்கு ஏன் அவனை புகழக்கூடாது?

 

இந்த அருளுக்கு ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடாது? அல்லாஹ் அவனது திருமறையில்,

 

(வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்). (அஷ்ஷுரா-49.50).

 

நிச்சயமாக பெண் பிள்ளைகள் அல்லாஹ் அருளிய மிகப்பெரும் கொடை! யார் அப்பெண் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்களோ அல்லாஹ் அவர் மீது அருள் புரிகிறான் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லவில்லையா?

 

(தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை பரிசளிக்கிறான்) என்றால் பெண் மட்டுமே என்றும் (தான் நாடியவர்களுக்கு ஆண் மக்களை பரிசளிக்கிறான்) என்றால் ஆண் மட்டுமே (அல்லது ஆண் பெண் இருவரையும் என்றால்) சிலருக்கு ஆண் பெண் இரு சாராரையும் கலந்தும் என்றும் (தான் நாடினால் மலடாக்குவான் என்றால்) அவர்கள் யாரையுமே பெற முடியாதவர்களாக்கி விடுவான் என்பது கருதாதாகும்.

 

நிச்சயமாக அறிந்தவன் சக்திபெற்றவன் என்றால்) அனைத்தையும்) அறிந்தவன் யாவற்றையும் செய்பவன் அவனேயாவான்.

 

எனது அன்புக்குரிய கணவரே! எந்த சக்தியுமற்ற எதையுமே செய்ய முடியாத மிகவும் பலவீனமான என் மீது ஏன் இவ்வளவு கோபத்தை கொட்டுகிறீர்கள்?

 

எதற்காக பெண் பிள்ளைகளினால் எந்த மரியாதையையும் அடைய முடியாது என்று எண்ணி அவர்களை வெறுத்தொதுக்கிய (ஜாஹிலிய்யா) அறியாமை கால மக்களுக்கு ஒப்பாகிறீர்கள்?

 

அப்பெண்கள் அவமானத்தையும் இழிவையும் தருவார்கள் என்று எண்ணினார்கள். அல்லாஹ் அவனது திருமறையில்

 

(இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாரயங் கூறப்பட்டால். கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க. அவன் முகம் (துக்கத்தால்) கறுத்தாக ஆகி விடுகிறது.) அந்நஹ்ல்-58.59.

 

எனது அன்பு கணவரே! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்த அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) மக்களுக்கு ஒப்பாகுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?

 

நபி மொழிகளில் (சுன்னாவில்) பெண் மக்களின் சிறப்பு:

 

நல்ல (சாலிகான) மனிதர்களுடன் சுவர்க்கத்திலே கொண்டு போய் உங்களைச் சேர்ப்பிப்பதற்கு காரணமான பெண் பிள்ளைகளை ஏன் வெறுக்கின்றீர்கள்? ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்ச்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும் என்பதை பின்வரும் நபி மொழிகள் உணர்த்துவதை நீங்கள் அறியத் தவறிவிட்டீர்கள்.

 

1) அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடத்தில் ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் அவர்களுக்கு எதையாவது (உண்ணக்) கொடுக்குமாறு கேட்டவளாக வந்தாள். ஆனால் ஒரு பேரிச்சம் பழத்தை தவிர வேறு ஏதும் என்னிடத்தில் இருக்கவில்லை. அதை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதில் எதனையும் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்தாள். பின்னர் அப்பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் நபிகளார் ( ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். இச்செய்தி பற்றி அவர்களுக்கு சொன்ன போது சொன்னார்கள்

 

‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள’ (அறிவிப்பவர்; ஆயிஷா( ரழி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).

 

இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில், ‘எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் (அப்பெற்றேர்) சோதிக்கப்படும் போது அதை பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள்’

 

2) மேலும் ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக ‘அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.’ (ஆதாரம் முஸ்லிம்).

 

3) நபிகளார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள’ அறிவிப்பவர் (அனஸ் (ரழி), ஆதாரம் முஸ்லிம்).

 

இமாம் திர்மிதிக்குரிய ஓர் அறிவிப்பில்’ எவரொருவர் இரண்டு அடிமைப் பெண்களை பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கிறார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்றாக சேர்த்து காட்டினார்கள்.’ இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹான தரத்தையுடைய ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.

 

4) ‘எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்’ என்று நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி).

 

இப்னு மாஜாஹ், ஹாகிம், இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.

 

5) ‘எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்’. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி (ரழி), (ஆதாரம் திர்;மிதி).

 

இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹ் என்கிறார்கள்.

 

6) ‘எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது’ என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் (றழி), ஆதாரம்: அஹ்மத்.

 

இதை இமாம் அல்பானி (ரஹ்) இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.

 

எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா?

 

உங்களுக்குத் தெரியாதா?

 

- அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று.

 

- அவர்கள் தான் நபிகளார் (ஸல்) அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா?

 

கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு அதில் இரக்கம் நிரம்பியுள்ளது! எவ்வளவு கள்ளங் கபடமற்ற தூய்மையான மனது!!?

 

இதை இன்னும் இளகுவாக நீங்கள் புரிந்து கொள்வதாயின், நீங்கள் நோய் வாய்ப்பட்டு கட்டில் படுக்கையாக கிடந்த போது எவ்வளவு அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்?

 

சிந்தித்தீர்களா?

 

- உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை.

 

- வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

 

- அவர்களது கல்வித் திறமையையும், அவர்களது வெட்க உணர்வையும் ஹிஜாப் அணிவதில் அவர்களது ஆர்வத்தையும் பார்த்தீர்களா?

 

- உங்களுக்கு எவ்வளவு வெட்க்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்க வில்லையா?

 

எனது அன்புக் கணவரே! இந்த நேரத்திலே பெண் பிள்ளைகள் விடயத்தில் முன்னோர்கள் (ஸலபுஸ்ஸாலிஹீன்) என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன.

 

- வாதிலா பின் அஸ்க்கஃ என்ற நபித் தோழர் சொன்னார் ‘யார் ஆண்களைவிட பெண்களை முதல் கரை சேர்க்கிறார்களோ அல்லாஹ் அவர்களுக்கு பெண்களை முதல் கொடுப்பான்

 

- ஸாலிஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் தனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் சொல்லுவார்கள் “நபிமார்களில் அதிகமானவர்கள் பெண் பிள்ளைக்குத் தந்தையாக இருந்தார்கள்.

 

- யாஃகூப் பின் புக்த்தான் (ரஹ்) கூறுகிறார்கள் : “எனக்கு ஏழு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். எனக்கு (என் மனைவிக்கு) ஒவ்வொரு முறையும் பெண் பிள்ளை பிறக்கும் போது என்னிடத்தில் அஹ்மத் இப்னு ஹன்பல் வந்து கூறுவார்கள், “யுஸுபின் தந்தையே! நபிமார்களில் அதிகமானவர்கள் பெண் பிள்ளைக்குத் தான் தந்தையாக இருந்தார்கள்”. நான் எதிர் பாராத சிறப்புகளெல்லாம் பெண் பிள்ளைகள் விடயத்தில் அடைந்தேன.

 

- முஹமத் பின் ஐஃபர் என்பவர் கூறும் போது, “பெண் பிள்ளைகள் (அல்ஹஸனாத்து) நன்மைகள்யை சம்பாதிக்க வைக்கிறவர்கள் என்றும் ஆண் மக்கள் அருள்கள் (நிஃமத்) என்றும்

 

அதாவது பெண் மக்கள அல் ஹஸனாத்தும் ஆண்மக்கள் அல்லாஹ் இடத்தில் கேள்வி கணக்குரியவர்கள் ( நிஃமத்துக்கள்) என்றும் சொன்னார்கள்.

 

- ஓரு காட்டரபிப் பெண் தானொரு பிள்ளை பெற்ற போது இப்படிப் பாடினாள்:

 

ஏன் எனக்கோர் அடிமை இல்லை

எனது வீடு பெருக்கி எனக்கு தனிமை போக்குவாள்

எனக்கு தலை வாந்து முடிசூட்டுவாள்

எனது முந்தானையை தரி செய்வாள்

அவளுக்கு எட்டு வயதாகும் போது

அவளை வலகரம் பிடித்து நான் கொடுப்பேன்

அவளுக்கு மர்வானையோ அல்லது முஅவியாவையோ மணம்முடித்து நான் கொடுப்பேன்

மதிக்க முடியா மஹர்தொகையை அவள் பெறுவாள்

 

- இன்னொருவர் பாடும்போது:

 

என் பிள்ளை நான் நுகரும் ரோஸா மலராகும்;

நானும் அவள் அன்னையும் அவளுக்கே அர்ப்பணம்

 

- ழூலம் ஆன் பின் அவ்ஸ் என்பவர் தனக்கு எட்டுப் பெண் பிள்ளைகள் என்றும் ஆண் பிள்ளைகளை விட அவர்கள் தனக்கு உவப்புக்குரியவர்கள் என்றார்கள்.

 

- ஒரு கவிஞன் ஒருவருக்கு பெண் பிள்ளை பிறந்த போது,

 

அப்பெண் பிள்ளை மூலம் அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் செய்தான். அப்பெண்ணை (அல்லாஹ்) உங்களுக்கு அழகு படுத்திக் கொடுத்தான்.(அல்லாஹ்). அதிக நன்மையை அவர்கள் மூலம் ஏற்படுத்தினான். அவர்களை வெறுத்து விடாதீர்கள் அவர்கள் (எதிர்காலத) தாய்மார்கள். உங்கள் சகோதரிகள். அவர்கள் தான் சாச்சி(மார்)கள்; அவர்கள் மாமி(மார்)கள்; அவர்கள் தான் (மறுமையின்) நிரந்தர நல்லமல்கள்; ஒரு சுதந்திர மனிதன் அவனது பல சந்தோஷங்களின் பின் நிம்மதி இழந்து விடுகிறான். ஒருஅடிமை பல இன்னலுக்குப் பின் வாழ்க்கையில் நிம்மதி அடைகிறான்.

 

இறுதியாக எனது அன்பான கணவருக்கு நீங்கள் அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாவதை விட்டும் எச்சரிக்கை செய்கிறேன். மாறாக அல்லாஹ்வின் பால் ஒதுங்கி விடுமாறு கேட்கிறேன். அவனது அன்பின் பால் சாய்ந்துவிடுங்கள். அல்லாஹ்விடம் அஞ்சிக் கெஞ்சி துஆ கேடபவர்களின் துஆவை கேட்கவும் உங்களது துஆவுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான். நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கும் அவனது அருளில் உங்களுக்கு அருள் புரிவான். அவன் கூறுகிறான்,

 

(மேலும் (நபீயே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக,) நிச்சயமாக நான் , (வர்களுக்கு ) மிக ச்சமீபமாகவே இருக்கிறேன். அழைப்பவரின் அழைப்புக்கு- அவர் என்னை அழைத்தால் நான் பதில் அழிப்பேன்., ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.(ஆல்பகரா,186)

 

எல்லாம் வல்ல அல்லாஹ் ஸாலிஹான பிள்ளைகளை அருளி, பெண் பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் நமக்கு கண் குளிர்ச்சியை தருவானாக!

 

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறக்காத்துஹூ

 

இப்படிக்கு உங்களது இஃலாஸான மனைவி.

 

ஆண், பெண் குழந்தை உருவாகுவதற்கு காரணம் ஆணின் உயிரணுவே! பெண்ணின் சினை முட்டையல்ல! எனவே ஒரு பெண் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க  அவளுடைய கணவனே காரணமாயிருக்க மனைவியை குறை கூறுவது அறவீனமன்றோ!)

நன்றி:-அஸ்ஹர் ஸீலானி

 

 

சாட்சி! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

நீதியை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் பொய்சாட்சி சொல்லக் கூடாது.”"பொய் சாட்சி கூறுவது கொடிய குற்றம்” என்று நபிகள் நாயகம்(ஸல்) நவின்றதை ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லீம் நூல்களில் காணப்படுகிறது.

பொய்சாட்சி கூறுவதைப் போலவே பயந்தோ, பணிந்தோ துணிவின்றி சாட்சி கூற மறுப்பதும் கூடாத செயலே. இதனை கீழ்காணும் குர்ஆனின் 4-135வது வசனம் விளக்குகிறது. “”விசுவாசிகளே! நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாகவும், உங்களுக்கோ உங்களின் பெற்றோருக்கோ உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். நீங்கள் யாருக்கு விரோதமாக சாட்சி கூறுகிறீர்களோ அவர் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் அருகதை உடையவன் அல்லாஹ். ஆகையால் நீங்கள் பயந்தோ, இரக்கப்பட்டோ சாட்சியம் கூறுவதில் தவறிவிடாதீர்கள். நீங்கள் நீதி செய்வதில் மனோ இச்சைக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும் அல்லது சாட்சியம் கூறாமல் புறக்கணித்தாலும் உங்கள் செயலை அல்லாஹ் நன்கு அறிவான்”.

அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம் கூறுகிறது.

“”வழக்கமிருப்பின் வர்த்தகத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளுங்கள். சாட்சியை ஒரு பக்கம் சாதகமாக நடக்கும்படி வற்புறுத்தாதீர்கள். அச்செயலும் பாவம்”.

அதுமட்டுமின்றி “”அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்” என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.

நாம் நல்ல காரியங்களில் சாட்சியம் சொல்லும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சாட்சி சொல்ல மறுக்காது, உண்மையை மறைக்காது இறைவன் தந்த மறை கூறும் அறவழியில் சாட்சி கூறி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி  18-May-2012 வெள்ளிமணி

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

சாட்சி!

பயணம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

April 19, 2012 Leave a comment

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
   தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
    முயற்சியால் வென்றதும் பயணம்
பந்தென உருண்டு பக்குவத் திங்கள்
      பத்தினில் கருவறைப் பயணம்
வந்திடும் தருணம் வந்ததும் நலமாய்
     வையகம் கண்டதும் பயணம்
 
கருவறைப் பயண மிருந்ததை மறந்து
      கனவினில் மிதந்திடும் நீயும்
ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும்
     உறுதியை நம்பியே மரணம்
வருவதும் பயணம்; அதுவரை உலகில்
     வாழ்வதும் நிலையிலாப் பயணம்
பருவமும் மாறி வளர்சிதை மாற்றம்
     படிப்பினைக் கூறிடும் பயணம்
 
மடியினில் சாய்ந்து தாயுடன் பயணம்
    மகிழ்வுடன் தந்தையின் தோளில்
நடைதனைப் பழக்கும் நண்பனாய் வந்த
    நடைபயில் வண்டியில் பயணம்
தடைகளை யுடைத்துப் புரளவும் முயன்று
    தவழவும் வாய்த்ததும் பயணம்
விடைகளாய் அறிவும் தெளிந்திடப் பள்ளி
     வகுப்பினிற் சேர்ந்ததும் பயணம்
 
பிழைப்பினை நாடித் தாயகம் விட்டுப்
      பிரிந்ததும் சுவையிலாப் பயணம்
உழைப்பினப் பொருத்து ஊரெலாம் மாறி
     உலகினில் உழலுதற் பயணம்
தழைத்திடும் இளமைப் பருவமே எமக்குத்
     தந்திடும் துணையுடன் பயணம்
அழைத்திடும் காலம் வரும்வரை நாமும்
     அவனியில் உலவுதல் பயணம்
 
மனிதனாய் வாழ நல்வழித் தேடி
    மார்க்கமும் பயிலுதல் பயணம்
புனிதமாய்க் கருதும் புகலிடம் தேடி
     புறப்படல் அருள்நிறைப் பயணம்
இனிவரும் மறுமை இனியதாய் அமைய
   இறைவனை வழிபடும் பயணம்
கனியென நினைத்த வாழ்க்கையிற் பின்னர்
    கசந்திடும் பயணமே மரணம்!

(விளம்+மா+விளம்+மா+விளம்+விளம்+மா)

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்

April 16, 2012 Leave a comment

அகிலம் படைத்த அதிபதி
அல்லாஹ் சொல்கிறான் அமரர்
சகிதம் அண்ணல் நபி மீது
சகல பொழுதும் ஸலவாத்து

துஆவின் துவக்கமும் ஸலவாத்தே
தூயோன் அல்லாஹ்வை வேண்டும்
துஆவின் முடிவும் ஸலவாத்தே

துலங்கும் துவக்கும் செயலும்
தவறாது ஓதும் ஸலவாத்து
தவறுகளின் தக்க பரிகாரம்

அவதூறை அகற்றி அன்றாட
அமல்களைப் பரிசுத்த மாக்கும்

அவசர உலகில் அணுவளவும்
ஆபத்து நேரா திருக்க
அவசியம் ஓத வேண்டும்
அண்ணல் நபி மீது ஸலவாத்து

எந்த காலமும் நேரமும்
ஏந்தல் நபிமீது ஸலவாத்து
எந்த நிலையிலும் ஓதலாம்
ஏக இறைவன் ஏற்பான்.

நன்றி:- தினமணி –  முஸ்லீம் முரசு பிப்ரவரி 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

அவசியம் ஓத வேண்டும்

மங்குஸ்தான் பழம்

April 11, 2012 Leave a comment

மங்குஸ்தான் பழம்

ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர்.

 

பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது.

 

 பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.

 

 இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

 

 Tamil – Mangosthan

 English – Mangosteen

 Malayalam – Mangusta

 Telugu – Maugusta

 Botanical Name – Garcinia mangostana

அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன் படுத்தி வந்தனர். சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

 

 சீதபேதி

 இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

 

 உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

 

 வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

 

 கண் எரிச்சலைப் போக்க

 கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

 

 வாய் துர்நாற்றம் நீங்க

 வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

 

 மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

 

 மூலநோயை குணப்படுத்த

 நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

 

 பெண்களுக்கு

 மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

 

 சிறுநீரைப் பெருக்க

 சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

 

 * இருமலை தடுக்கும்

 * சூதக வலியை குணமாக்கும்

 * தலைவலியை போக்கும்

 * நாவறட்சியை தணிக்கும்.

 மங்குஸ்தான் பழத்தில்

 நீர் (ஈரப்பதம்) – 83.9 கிராம்

 கொழுப்பு – 0.1 கிராம்

 புரதம் – 0.4 கிராம்

 மாவுப் பொருள் – 14.8 கிராம்

 பாஸ்பரஸ் – 15 மி.கி.

 இரும்புச் சத்து – 0.2 மி.கி

 

 உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்

 

மங்குஸ்தான் டீ:

இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த மங்குஸ்தான் டீ. இந்த டீ குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தவிர்க்கப்படும்.

நன்றி:- இனைய நன்பர்


The Mangosteen is harvested and packaged in bags to be delivered to markets in the Philippines.
WHAT IS MANGOSTEEN?Mangosteen contains 40 highly potent Xanthones.
There are 200 known Xanthones found in fruits & vegetables and remarkably 40 are found in mangosteen.

Excellent source of antioxidants. Antioxidants helps boost the Immune System and fight free radicals.

Well over 100 positive effects.
Scientific research on the Mangosteen by a number of experts indicates that it can have well over 100 positive effects.

Mangosteen (Garcinia mangostana L.) is a tropical tree native to Southeast Asia and native to the Malay Archipelago.  It is believed that the Queen of England was so delighted by the mangosteen’s unique taste and exquisite flavor that she named it “Queen of Fruits.” 

The mangosteen tree is slow-growing, attains 20 to 82 ft 
(6-25 m) in height, has dark-brown or nearly black, flaking bark. Its short-stalked leaves are elliptic, leathery and thick, dark-green, slightly glossy above and yellowish-green and dull beneath.  The flowers are 1 1/2 to 2 in (4-5 cm) wide and fleshy and may be male or hermaphrodite on the same tree. The rind (pericarp) of the edible fruit is deep reddish purple when ripe. The fragrant flesh is sweet and creamy, citrusy with a touch of peach flavor.  It is closely related to other edible tropical fruits such as button mangosteen and lemon drop mangosteen.

Cutting through the shell, one finds edible flesh, botanically defined as an aril, shaped like a peeled tangerine but bright white, about 3-5 cm in diameter, nested in a deep red outer pod. Depending on the fruit size and ripeness, there might be seeds in the aril segments. The seeds, however, are not palatable unless roasted. The number of aril pods is directly related to the number of petals on the bottom of the pericarp. On average, a mangosteen has 5 aril segments (round up figure). The plant does not start producing fruit until around 15 years old, which is somewhat an impediment to cultivation. The outer shell of the fruit, pericarp (rind), is firm (softens during riping), typically 4-6 cm in diameter, and contains astringent phytochemicals which discourage infestation by insects, fungi, plant viruses and bacteria. The same phytochemicals are pigments giving the exocarp its characteristic purple color, including phenolics acids, also called phenols. These pigments have antioxidant properties which afford the fruit further protection from ultraviolet radiation and free radicals generated during photosynthesis. Isolation of exocarp pigments has permitted their identity to be revealed as xanthones, mainly garcinol and mangostin [1], which, as phenolics, make the exocarp highly astringent and inedible.The outer shell of the fruit, pericarp (rind), is firm (softens during riping), typically 4-6 cm in diameter, and contains astringent phytochemicals which discourage infestation by insects, fungi, plant viruses and bacteria. The same phytochemicals are pigments giving the exocarp its characteristic purple color, including phenolics acids, also called phenols. These pigments have antioxidant properties which afford the fruit further protection from ultraviolet radiation and free radicals generated during photosynthesis. Isolation of exocarp pigments has permitted their identity to be revealed as xanthones, mainly garcinol and mangostin [1], which, as phenolics, make the exocarp highly astringent and inedible.

அளப்பரிய அருள்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

April 8, 2012 Leave a comment

ஏக இறைவனை ஏற்கும் ஏகத்துவ கொள்கையை மறுத்து மாறு செய்வோர், தாறுமாறாய் பொருள் சேர்த்து ஊறு விளைவிக்கும் செயல்புரிவோர் உல்லாசமாய் வாழ்கின்றனர்.

இக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி திளைத்து முக்குளித்து சொக்கிக் கிடக்கின்றனர்.

ஏகத்துவ கொள்கையை ஏற்று எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி அல்லல்பட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சி நல்லன செய்யும் நல்லடியார்கள் பலர் உள்ளனர். 

அவர்களின் உள்ளத்தில் உரசல், ஊசல் ஏற்படாது இருக்கவும், ஏக்கம் எழாமல் இருக்கவும், “”நிராகரிப்போர் உல்லாசமாக ஊர் சுற்றுவது உம்மை மயக்கிவிட வேண்டாம். அது மிகக் குறைந்த சுகம். பின்னர் அவர்கள் ஒதுங்குமிடம் நரகம். அதுவோ படுக்கையில் மிக கெட்டது (குர்ஆன் 3-196)” என்ற வசனங்கள் இறக்கப்பட்டன.

வாழ்வின் வழிகாட்டி திருக்குர்ஆனை தெளிவாய் எடுத்துரைத்த எம்பெருமானார், மதீனாவை ஆட்சி புரிந்த பொழுது நபிகளின் தோழர் உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி அவர்களைப் பார்க்கச் சென்றார்கள். மதீனாவின் மாமன்னர் ஒரு குடிசையில் முரட்டு கோரைப் பாயில் படுத்திருந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதுகில் ஏற்பட்ட சிவந்த வடுக்களைப் பார்த்து வாடி உமர் (ரலி) அழுதார்கள்.

“”ஏன் அழுகிறீர்?” என்று நபிகள் நாயகம் கேட்டார்கள்.

“”ரோமாபுரி மன்னர் கைஸரும் பாரசீக மன்னர் கிஸ்ராவும் வசதிகளோடு வளமாய் வாழும்பொழுது நீங்கள் அதனினும் அதிக வசதிகளோடு உயர்ந்த வாழ்க்கை வாழலாமே” என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

“”அவர்களுக்கு இவ்வுலகம். இங்கேயே வசதியாக வாழ்கிறார்கள். நமக்கு மறு உலகம். அங்கே உள்ளது அரிய வாழ்வு” என்று எம்பெருமானார் சொன்னதும் வாயடைத்து நின்றார் உமர்(ரலி) என்ற தகவல் புகாரி, முஸ்லிம் நூல்களில் உள்ளது.

இவ்வுலக சுகங்களில் மயங்கி, அவற்றை சுகித்து வாழ பகரவொண்ணா பாதகங்கள் செய்து, சாகாவரம் பெற்ற நித்ய ஜீவன் என நினைத்து, சத்தியம் தவறி சகலரின் சாபத்திற்கும் ஆளாவது வாழ்க்கையல்ல. ஏக இறைவன் வகுத்த வழியில் வகையாய் வாழ்ந்து மறுமையிலும் தொகையாய்ப் பெறுவோம் தூயோன் அல்லாஹ்வின் அளப்பரிய அருளை.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி  06 April 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

நற்பலனைப் பெறுவோம்

அளப்பரிய அருள்

நற்பலன் பெறுவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்

April 1, 2012 Leave a comment
திருக்குர்ஆனில் நீதி போதனைகள், உலக மக்களை விளித்தே விளம்பரப்படுத்தப்படுகின்றன. நபிகள் நாயகத்தின் தோழர்கள் அல்லது எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து சந்தேகம் கேட்போர் விளக்கம் பெறுவதற்கும், சில சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில், நெருக்கடியான நேரங்களில் ஏகத்துவத்தை ஏற்றோர் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கும் ஏற்ற வசனங்கள் வந்தன.

நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாத்தைப் போதித்த ஆரம்ப நாட்களில், ஆண்கள் எத்தகைய தொல்லைகளையும் துன்பங்களையும் அடைந்தார்களோ, மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்களோ, இன்னல்களுக்கு இடையிலும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்களோ அதுபோல பெண்களும் பேரிடர்களை சந்தித்தனர். ஆனாலும் கலங்காது நபிகள் காட்டிய வழியில் கருத்தூன்றி இறைவன் பொருத்தத்தை நாடி போராடும் ஆண்களுக்கும் போதிய உதவிகள் செய்து ஹிஜ்ரத்தையும் மேற்கொண்டனர். இஸ்லாமிய பிரச்சாரத்தையும் பிறழாது செய்தனர்.

அண்ணல் நபிகளாரின் மனைவி ஹஜ்ரத் உம்மு சலமா(ரலி) அவர்களுக்குப் பெண்களின் பெரும் பங்கைக் குறிப்பிடும் வசனங்கள் வான் முறை குர்ஆனில் இல்லையே என்ற ஆதங்கம். சாதகமான வேளையில் நபிகளாரிடம் நாயகி உம்மு சலமா (ரலி) “”அல்லாஹ்விற்காக நாட்டைத் துறந்து வந்த பெண்களைப் பற்றி அல்லாஹ் அறிவிக்கவில்லையே” என்று கேட்டார்கள்.

அப்பொழுது “”உங்களிடமிருந்து ஆணோ அல்லது பெண்ணோ யாராயினும் ஆற்றிய நற்செயல்களை நான் வீணாக்க மாட்டேன்” என்ற திருக்குர்ஆன் (3-195) வசனம் இறக்கப்பட்டது.

நற்கிரியைக்கு உரிய நற்பலன் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும் நல்ல சொர்க்கம். ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் கிடைக்கும். அல்லாஹ் அருளை அள்ளி வழங்குகையில் ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. “நற்செயல்களுக்குரிய நற்பலன், செய்த நன்மையின் தன்மைக்கேற்ப ஆண், பெண் தரம் பிரிக்காது தரப்படும்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறான்.

நன்மையைச் செய்வோம்.  நற்பலனைப் பெறுவோம்.

நன்றி:- தினமணி –  வெள்ளிமணி  30 Mar 2012

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்

புளிச்சேப்பக்காரர் விருந்து

சாலை விதிகள் போற்றுவோம்

வரவுக்கு வரம்பு

ஆண்டவன் நீதி

பசுமை தேநீர் Green Tea

தானத்தின் பொருள்

யார் யாருக்கு வழங்கலாம்?

இரக்கம் காட்டுகிறவன்!

நாமே வழங்குவோம்

இரக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 150 other followers