இல்லம் > மீன் பிரியாணி > மீன் பிரியாணி! சமையல் குறிப்புகள்!! சூப்பர் சுவை!!!

மீன் பிரியாணி! சமையல் குறிப்புகள்!! சூப்பர் சுவை!!!


மீன் பிரியாணி மீன் பிரியாணி
தேவையான பொருட்கள்
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக் கர�டி

செய்முறை *
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும், *
வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கவும்.
மிளகாயைக் கீறிக் கொள்ளவும். *
ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும். *
வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். *
தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். *
பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும்.
பாத்திரத்தில் `தம்` சேர்த்து (ஆவி போகாமல் மூடிவைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். *
குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். *
சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

நன்றி:- இணைய நண்பர்கள்

  1. 7:13 முப இல் ஏப்ரல் 4, 2015

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அன்பு வலைப்பதிவாளர் அவர்களுக்கு, எனது http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog- ப்ளாக்கில் “அறிமுகம் மற்றும் நுழையும் முன்” பகுதிகளைப் படித்தால் என்னைப் பற்றி மேல் விவரம் தெரியவரும். இத் தொடர் இஸ்லாம்கல்வி.காமிலும் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் பல வலைகளில் வர இருக்கிறது. தாங்கள் படித்து விட்டு என்னை zubair61u@gmail.com ல் தொடர்பு கொண்டால் வேர்ட் ஃபார்மட்டில் உள்ள தொடர்களைத் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவைகளை தங்கள் வலையிலும் வெளியிட்டு சமுதாயத்திற்கு எத்தி வைக்கும் பணிக்கு மற்றவர்களைப் போல் தாங்களும் பங்கெடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம். கூ.செ..செய்யது முஹமது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக