தொகுப்பு

Posts Tagged ‘சாதம்’

மறந்து போன மருத்துவ உணவுகள் பகுதி-2 சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா


மருந்து சாதம்

தேவையானவை: சுக்கு – ஒரு துண்டு, வெள்ளை மிளகு – 2 டீஸ்பூன், திப்பிலி – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் – 2, பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.

வல்லாரைக் கீரைக் கூட்டு

தேவையானவை: வல்லாரைக் கீரை – ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி – 50 கிராம், மிளகு – 5 கிராம், பாசிப்பருப்பு – 100 கிராம், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.

பானகம்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் – 10, நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு, சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – 10.

செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.

அலுப்புக் குழம்பு

தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை – தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி – தலா 10, திப்பிலி – 5, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன், கத்தரிக்காய் – அரை கிலோ, மொச்சை – 100 கிராம், புளி – சிறிதளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளித்தள்ளும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.

நன்றி:- சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா 

ஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு! – பிரேமா நாராயணன்,


இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று… சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான். 

”இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?” என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.

”சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்” என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.

”சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்” என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.

சத்துமாவு பாசிப்பருப்பு அடை

தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு,  எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

 கம்பு தயிர் சாதம்

தேவையானவை: கம்பு – ஒரு கப், தண்ணீர் – 5 கப், பால் – ஒன்றரை கப், தயிர் – ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்).  பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.

உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.

பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.  

 மாங்காய் இஞ்சி   நெல்லிக்காய்த் துவையல்

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 4, மாங்காய் இஞ்சி – 50 கிராம், கொத்துமல்லித் தழை – கைப்பிடி, பச்சை மிளகாய் – 2, புளி – சிறு அளவு, துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான ‘மாங்காய் இஞ்சி – நெல்லிக்காய் சாதம்’ தயார்.

 கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்

தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் – தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை – சிறிதளவு, தக்காளி – 1, ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.    

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் ‘ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.

 முளைகட்டிய பாசிப்பயறு சூப்

தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு – அரை கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 4 பல், தனியாதூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப்பால் – ஒரு கரண்டி.

செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும்.  நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.

விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.

நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்

தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை – 2 கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.

குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.

படங்கள்: எம்.உசேன்

 

 

பிரிவுகள்:30 வகை டயட் சமையல், கட்டுரைகள், சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மறந்து போன மருத்துவ உணவுகள் – சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா


”’உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின்  நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…” என வரவேற்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா. இவர் வழங்கும் இந்த ரெசிபிகள் சுவையானவை… சத்தானவை!

 

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.

செய்முறை: பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.

மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

அஷ்ட வர்க்க உணவுப்பொடி

தேவையானவை: சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.

செய்முறை: இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!

மருத்துவப் பயன்: இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.

 

இஞ்சிப் பச்சடி

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

 

எள்ளு சாதம்

தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!

மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.

 

 

வேப்பங்கொழுந்து துவையல்

தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

 

மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்றி:- சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா 

செட்டிநாடு புலாவ் Chettinad Pulav


தேவையானவை

சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 5
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒன்று
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – அரை முடி

தாளிக்க:

கிராம்பு

பட்டை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்
செய்முறை 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரி்ல் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மூடி வைக்கவும். எலக்ட்ரிக் குக்கர் ஆப் ஆனவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.

இப்பொழுது சூடான சுவையான செட்டிநாடு புலாவ் ரெடி. இதனுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

நன்றி:- இனைய நன்பர்

நன்றி:- முகநூல் நன்பர்

 

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

ஏப்ரல் 29, 2010 1 மறுமொழி

இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்புவார்கள். அது, இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி, கனத்த பாக்ஸாகவே திரும்பும்போது, அம்மாக்களின் இதயமும் கனத்துப் போகும்.

இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அதிலயும் ஒரு பிரச்னை இருக்கே.. நாலஞ்சு வகையையே திரும்பத் திரும்பச் செஞ்சு கொடுத்தா ‘போர்’னு பிள்ளைங்க முகத்தை சுளிக்க ஆரம்பிச்சுடறாங்களே..’’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம்.

முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை செய்து அசத்த, இதோ முப்பதுவிதமான ரெசிபிக்களை தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

திகட்டத் திகட்ட கல்கண்டு சாதம், சப்புக் கொட்ட நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்க உளுந்து பொடி சாதம், கலக்கல் காளான் சாதம்… என்று புதுமையான ரெசிபிக்கள் மட்டுமல்ல; நன்கு பரிச்சயமான தயிர், தக்காளி சாதங்களும்கூட இவரது ஸ்பெஷல் பக்குவத்தில் மாறுபட்ட சுவைகளோடு இங்கு வரிசை கட்டியிருக்கின்றன.

வெரைட்டிக்கு பஞ்சமில்லை. சுலபமாக சமைக்கலாம்.சத்தானதும்கூட. முக்கியமாக, பெரியவர்களும் ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

படித்த சூட்டோடு சமைத்து பரிமாறுங்கள். ‘உங்க கை பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை’ என்று வீடே கொண்டாடும்!

கோவைக்காய் சாதம்

தேவை:

உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.


கறிவேப்பிலை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: மிளகு, கசகசா தலா 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி 4, கறிவேப்பிலை 1 கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 6.

செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.


மும்பை சாதம்

தேவை: பச்சரிசி அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

கதம்ப சாதம்

தேவை: பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.

எள் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: எள் 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு.

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.


மாங்காய் இஞ்சி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறு, எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

பொடிக்க: உளுந்து 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் 3, எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் 1 கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப், கடுகு 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 4, பூண்டு 6 பல்.

செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

தேவை: பச்சை பட்டாணி அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் 2 கப், தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

பிஸிபேளா பாத்

தேவை: அரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப், வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப், புளி எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

அரைக்க: தனியா 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1, கசகசா 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

கல்கண்டு சாதம்

தேவை: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 1 கப், ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், கிராம்பு 1, மில்க்மெய்ட் 3 டேபிள் ஸ்பூன், நெய் கால் கப், முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன், சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர், ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.

பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து, வெள்ளரி விதை, சார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

கல்கண்டு சாதத்தில் பாதாம், ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி பொடி, முந்திரி, வெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.

சீரக சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்), முந்திரி 10, சீரகம் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.

சாதத்தில், சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.

ஆந்திரா புளியோதரை

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெல்லத் துருவல் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.

செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

மாங்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 6, பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

தோசைக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

பூண்டு சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 1 கப், இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மாங்காய் மசாலா சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கடுகுத் தூள் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.

சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

சோயா சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அரை நெல்லிக்காய் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப், தேங்காய்ப் பால் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.

செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தக்காளி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க (முதல் வகை): பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, கசகசா 2 டீஸ்பூன், முந்திரி 6, எண்ணெய் 1 டீஸ்பூன்.

மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில், பொடி வகையை தூவி, தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், தயிர் அரை கப், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்யைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

உளுந்து பொடி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.

சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.

வெந்தயக்கீரை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், வெந்தயக்கீரை 2 கட்டு, தக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் ஒரு கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் அரை கப், புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 2 டீஸ்பூன், வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி 2 டேபிள் ஸ்பூன், திராட்சை 15, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.

கத்தரி மொச்சை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பிரிஞ்சி இலை 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: தேங்காய் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தனியாத் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

எண்ணெயில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.

கொத்துமல்லி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: மல்லித் தழை 2 கட்டு, மிளகாய் வற்றல் 10, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் 1 துண்டு, பட்டாணி அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், முந்திரி 10, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கூட்டாஞ்சோறு

தேவை: புழுங்கல் அரிசி 2 கப், துவரம் பருப்பு அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவு, முருங்கை கீரை, அரைக் கீரை, முளைக் கீரை தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு, வடகம் 3 துண்டு, உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள்.

இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

காளான் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், சீன உப்பு அரை டீஸ்பூன், சோயா சாஸ் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.

எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.

இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

தொகுப்பு: அக்ஷயா படங்கள்:
பொன். காசிராஜன்

நன்றி:- சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி.

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-08 கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம், உளுந்து களி

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்


“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக் காரணம்… நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை.

‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில் வெரைட்டியான உணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’ என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதையெல்லாம் அலசி ஆராயும் சேலம், சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன், ”நெகட்டிவ் கலோரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல் செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காக இருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ் கலோரி உணவுப் பொருள். இத்தகைய நெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு, அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக் காண்பித்திருக்கிறார்.

“தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல் எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்த ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச் சொல்கிறார் கதிரவன்.

ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!

———————————————————————————————-

முட்டைகோஸ் சூப்

தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.

———————————————————————————————————

ஃப்ரூட்ஸ் அடை

தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.

குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன் இது!

—————————————————————————————-

பழ பாயசம்

தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை முத்துக்கள் – கால் கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20, பால் – ஒரு கப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம்.

செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

—————————————————————————————————

கம்பு ரொட்டி

தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

—————————————————————————————————–

பட்டாணி கேரட் அடை

தேவையானவை: பட்டாணி – கால் கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

———————————————————————————

பருப்புக் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.

—————————————————————————————-

மிளகு தானிய சூப்

தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

——————————————————————-

காய்கறி உப்புமா

தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.

———————————————————————

தினை மாவு அடை

தேவையானவை: தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

———————————————————

பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு

தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.

——————————————————————

கொண்டைக்கடலை மசாலா

தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.

————————————————————————–

புளிப்பு இனிப்பு காளான்

தேவையானவை: காளான் – அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையான அளவு, கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.

————————————————————————

முளைகட்டிய தானிய சப்பாத்தி

தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

வாழைப்பூ அடை

தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

————————————————-

பார்லி  மசாலா சாதம்

தேவையானவை: பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.

——————————————

சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

———————————————————

உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.

———————————————————————-

மக்காச்சோள ரொட்டி

தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

————————————————————————

வீட் எனர்ஷி டிரிங்க்

தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.

—————————————————-

துவரம்பருப்பு சூப்

தேவையானவை: துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1.

செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.

குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

——————————————————

வெஜ்  ஃபிஷ்  ஃப்ரை

தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.

—————————————————-

கீரை  கோஃப்தா கறி

தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை – ஒரு கட்டு, பனீர் (துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காய விழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவது ஒருமுறை செய்து உண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை உண்ணும் உணவு லைட்டாக இருத்தல் நலம்.

———————————————–

கீரை ரொட்டி

தேவையானவை: அரிசி மாவு – கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஆய்ந்த கீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

————————————————–

மிக்ஸட் ரொட்டி காய்கறி சட்னி

தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு, கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல் சுட்டு எடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டி தயார்.

கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும் சத்துக்களும் சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.

———————————————————

நூல்கோல் சப்பாத்தி

தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நூல்கோலை வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.

———————————————–

நவரத்தின புலாவ்

தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும் புலாவுக்கு இணையான சுவையுடன் கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிக சத்து நிறைந்தது.

———————————————————————-

கலர்ஃபுல் புட்டு

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

————————————————————-

தர்பூசணி மசாலா

தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

———————————————————————-

முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை – ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.

——————————————————

பாகற்காய் அல்வா

தேவையானவை: பாகற்காய் – கால் கிலோ, காய்ச்சிய பால் – ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

நன்றி:- சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன்

நன்றி:-அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை டயட் சமையல், சமையல், மகளீர் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,