தொகுப்பு

Posts Tagged ‘nature’

பேரீச்சை பழத்தின் சத்துக்கள், மருத்துவ குணங்கள்


d4

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள்,  தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை  அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.  அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது.  குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.d2

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள்  பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ்.  வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு  விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும்  புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை d3இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு  சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும்  பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது.
d7பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவd1சியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

பேரீச்சை 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்துஆற்றல் 280 kcal   1180 kJ

மாப்பொருள்     75.03 g
– சர்க்கரை  63.35 g
– நார்ப்பொருள்  8 g  
கொழுப்பு 0.39 g
புரதம் 2.45
நீர் 20.53 g
தயமின்  0.052 mg   4%
ரிபோஃபிளாவின்  0.066 mg   4%
நியாசின்  1.274 mg   8%
பான்டோதெனிக் அமிலம்  0.589 mg  12%
உயிர்ச்சத்து பி6  0.165 mg 13%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  19 μg  5%
உயிர்ச்சத்து சி  0.4 mg 1%
உயிர்ச்சத்து ஈ  0.05 mg 0%
உயிர்ச்சத்து கே  2.7 μg 3%
கால்சியம்  39 mg 4%
இரும்பு  1.02 mg 8%
மக்னீசியம்  43 mg 12% 
பாசுபரசு  62 mg 9%
பொட்டாசியம்  656 mg   14%
சோடியம்  2 mg 0%
துத்தநாகம்  0.29 mg 3%

d6

 


 

செட்டிநாடு புலாவ் Chettinad Pulav


தேவையானவை

சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ
பெரிய வெங்காயம் – 5
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 4
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒன்று
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
புதினா – ஒரு கப்
கொத்தமல்லி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் – அரை முடி

தாளிக்க:

கிராம்பு

பட்டை
பிரிஞ்சி இலை
ஏலக்காய்
செய்முறை 

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எலக்ட்ரிக் ரைஸ் குக்கரி்ல் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் மூடி வைக்கவும். எலக்ட்ரிக் குக்கர் ஆப் ஆனவுடன் சூடாக எடுத்து பரிமாறவும்.

இப்பொழுது சூடான சுவையான செட்டிநாடு புலாவ் ரெடி. இதனுடன் வெங்காய பச்சடி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

நன்றி:- இனைய நன்பர்

நன்றி:- முகநூல் நன்பர்