தொகுப்பு

Posts Tagged ‘சமைக்க’

30 வகை சுண்டல்-புட்டு சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்


சுண்டல், புட்டு என்று அசத்தியிருக்கும் ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன், ”விதம்விதமான… அதேசமயம், சத்து நிறைந்த சுண்டல், புட்டுகள் இவை. இதையெல்லாம் தினம் ஒன்றாக சமைத்துக் கொடுத்து… குட்டீஸ்களை மட்டுமல்ல… பெரூஸ்களையும் நீங்கள் குஷிப்படுத்தலாம்” என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்.

தொடரட்டும் இந்த உற்சாகம்… உங்கள் இல்லங்களிலும்!

சம்பா கோதுமை சுண்டல்

தேவையானவை: சம்பா கோதுமை – அரை கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சம்பா கோதுமையை முதல் நாள் இரவே நன்றாகக் களைந்து ஊற வைக்கவும். மறுநாள், குக்கரில் உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு, வேக வைத்த சம்பா கோதுமையை அதில் போட்டுக் கிளறவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

சிவப்பரிசி புட்டு

தேவையானவை: கைக்குத்தல் அரிசி மாவு – ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பூரா சர்க்கரை (பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும்) – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: மாவில் மிதமான சுடுநீரைத் தெளித்துப் பிசிறி, வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி, ஆவியில் வேக வைக்கவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, ஒரு தட்டில் ஆறவிட்டு, கைகளால் நன்றாக தேய்த்து விடவும். இந்த மாவில் கொப்பரைத் துருவல், பூரா சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

பூரா சர்க்கரை கிடைக்கவில்லையெனில் சாதா சர்க்கரையிலும் இந்த புட்டை செய்யலாம்.

நட்ஸ் சுண்டல்

தேவையானவை: முந்திரித் துண்டுகள், பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, பனீர் துண்டுகள் – தலா கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… மிளகாயைக் கிள்ளிப் போடவும். காரம் எண்ணெயில் இறங்கியதும், மிளகாயைத் தனியே எடுத்து விடவும். அந்த எண்ணெயில் பனீர் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

மிளகாய் காரத்துக்குப் பதிலாக மிளகுத்தூள் சேர்த்தும் செய்யலாம்.

சீரகசம்பா புட்டு

தேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: அரிசியை வெறும் கடாயில் சிறிது சிறிதாகப் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும். இதில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசிறி ஆவியில் வேக வைக்கவும். சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு, 2 கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, வேக வைத்த அரிசி ரவை, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரித் துண்டுகளை அதில் போட்டுக் கலக்கினால்… சீரகசம்பா புட்டு தயார்!

பழ இனிப்பு சுண்டல்

தேவையானவை: பச்சைப் பயறு – அரை கப், ஆப்பிள் துண்டுகள் – கால் கப், தேன் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். இதனுடன் ஆப்பிள் துண்டுகள், தேன், மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

கேழ்வரகு மாவு புட்டு

தேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், சர்க்கரை – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு, மிதமான தீயில் வறுத்து, தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிடவும். பிறகு, நன்றாக கைகளால் தேய்த்து கட்டியில்லாமல் சலிக்கவும். அந்த மாவுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு, நெய், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும்.

நேஷனல் சுண்டல்

தேவையானவை: வெள்ளை சோயா பீன்ஸ், பச்சைப் பட்டாணி – தலா அரை கப், சிவப்பு ராஜ்மா – கால் கப், பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோயா பீன்ஸ், ராஜ்மா இரண்டையும் முந்தைய நாள் இரவே தனித்தனியாக ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இரண்டையும் ஒன்றாக வேக விடவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பச்சைப் பட்டாணியை போட்டு மிதமான தீயில் வதக்கவும். அதிலேயே சோயா பீன்ஸ், ராஜ்மா, அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு ஆகியவற்றை வரிசையாகச் சேர்த்து வதக்கினால், மூவண்ணக் கொடி நிறத்தில்… நேஷனல் சுண்டல் தயார்.

பருப்பு ரவை புட்டு

தேவையானவை: துவரம்பருப்பு – முக்கால் கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய தேங்காய் பல், உப்பு – சிறிதளவு.

செய்முறை: துவரம்பருப்பை சிறு ரவை போல் பொடித்து கடாயில் கொட்டி, மிதமான தீயில் வறுக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்து, உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, தூசு தும்பு இல்லாமல் வடிகட்டி, பாதியாகக் காய்ச்சவும். கீறிய தேங்காய் பல், ஏலக்காய்த்தூள், வேக வைத்து உதிர்த்த துவரம்பருப்பு ரவை ஆகியவற்றை அதில் சேர்த்து, நெய்யை விட்டு நன்றாகக் கலந்து வைக்க… பருப்பு ரவை புட்டு ரெடி!

சேனை சுண்டல்

தேவையானவை: சிறிய துண்டுகளாக நறுக்கிய சேனை – ஒரு கப், புளி – கொட்டை பாக்களவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: புளியை 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, சேனைத் துண்டுகளை போட்டு வேகவிடவும். முக்கால் பதத்தில் வெந்ததும், வடிதட்டில் கொட்டி, தண்ணீரை வடிய விடவும். இந்த சேனைத் துண்டுகளை எண்ணெயில் போட்டு மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

“இதென்ன… ‘[பொரியலை’ப் போய் ‘சுண்டல்’ங்கிறாங்களே” என்கிறீர்களா? நவராத்திரி சமயத்தில் இதை ‘சுண்டல்’ என்றே விநியோகிப்பார்கள்.

புழுங்கலரிசி புட்டு

தேவையானவை: புழுங்கலரிசி – ஒன்றரை கப், வெல்லம் – அரை கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: புழுங்கலரிசியை சிறிது சிறிதாக கடாயில் போட்டு சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசான சூட்டில் தண்ணீர் விட்டு தளர்வாகக் கலந்து, துணியில் போட்டு மூட்டை கட்டி, ஆவியில் வேகவிடவும். துவரம்பருப்பை முக்கால் பதத்துக்கு வேக வைத்து, கைகளால் கட்டியில்லாமல் மசிக்கவும். கடாயில் வெல்லத்தைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்ததும் தூசு, தும்பு இல்லாமல் வடிகட்டவும். இதைத் திரும்பவும் கொதிக்க வைத்து, கெட்டிப் பாகாகக் காய்ச்சி, மசித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு, பொடித்து வேக வைத்துள்ள புழுங்கல் அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறவும். முந்திரி, தேங்காய் துண்டுகளை நெய்யில் வறுத்து, அதில் கொட்டிக் கிளறவும். புழுங்கலரிசி புட்டு தயார்!

இது, இரண்டு நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.

நாட்டு சோள சுண்டல்

தேவையானவை: நாட்டு சோளம் – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோளத்தை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். வேக வைத்த சோளத்தை அதில் சேர்த்து, சிறிது உப்பு போட்டு, பொடித்த மசாலாவை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

பழ புட்டு

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், நேந்திரம் பழம் – 2, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பத்து நிமிடம் நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைக்கவும். இதில் கொதிநீர் விட்டு, உப்பு போட்டுப் பிசிறி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு, புட்டுக் குழாயில் அழுத்தமாக அடைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். நேந்திரம் பழத்தைப் பொடியாக நறுக்கி, இந்தப் புட்டுடன் கலந்து சாப்பிடவும்.

ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை: நைலான் (பெரிய) ஜவ்வரிசி – ஒரு கப், வறுத்த – வேர்க்கடலை – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் – சிறிதளவு, கீறிய பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 24 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, ஊறிய ஜவ்வரிசி, உப்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கிளறி எடுக்கவும். விருப்பப்பட்டால் சிறிது காராபூந்தி சேர்த்துக் கொள்ளலாம்.

சிவப்பு அவல் புட்டு

தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், அச்சு வெல்லம் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: அவலை நெய்யில் நன்றாக வறுக்கவும். அச்சு வெல்லத்தைத் தூளாக்கி, அவலுடன் சேர்த்து, மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை சுற்றி எடுக்கவும்.

விருப்பப்பட்டால், முந்திரியை வறுத்துச் சேர்க்கலாம்.

காராமணி மசாலா சுண்டல்

தேவையானவை: காராமணி – ஒரு கப், துருவிய கேரட், துருவிய மாங்காய் – தலா கால் கப், அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது – ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வைத்து குழையாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, சீரகம் தாளித்து துருவிய கேரட், மாங்காய், போட்டு வதக்கி, வேக வைத்த காராமணி, அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது, சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தை தூவி எடுக்கவும்.

காரசார புட்டு

தேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கலரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு, தனியா, புளி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதை, வெள்ளைத் துணியில் மூட்டைக் கட்டி, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். வேக வைத்து உதிர்த்த கலவையை அதில் சேர்த்துக் கிளறி இறக்கினால் காரசார புட்டு தயார்.

ராஜ்மா இனிப்பு சுண்டல்

தேவையானவை: ராஜ்மா – ஒரு கப், சர்க்கரை சேர்த்த கோவா – கால் கப், கொப்பரை துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து, குக்கரில் வேக விடவும். கடாயில் நெய் விட்டு, வேக வைத்த ராஜ்மா, கோவா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, கொப்பரைத் துருவலைத் தூவி இறக்கவும்.

சாக்லேட் சுண்டல்

தேவையானவை: நான்கு மணி நேரம் ஊற வைத்து, முக்கால் பதத்தில் வேக வைத்த ஏதேனும் ஒரு வகைப் பயறு – ஒரு கப், சாக்லேட் பவுடர், பால் பவுடர் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், வறுத்த கசகசா – 2 டீஸ்பூன், வறுத்த பாதாம், முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் வெண்ணெயைப் போட்டு, அதில் சாக்லேட் பவுடரை சேர்க்கவும். லேசாக உருகியதும்… வேக வைத்த தானியத்தை அதில் சேர்க்கவும். இரண்டும் நன்றாக கலந்து வரும்போது, பால் பவுடர் சேர்த்துக் கிளறவும். கடைசியாக… வறுத்த கசகசா, பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து இறக்கவும்.

கருப்பட்டி புட்டு

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கருப்பட்டி – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, முந்திரி துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: பச்சரிசியை சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள்சேர்த்து தண்ணீர் விட்டுக் கலந்து, ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். கருப்பட்டியை கடாயில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கி… தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து, வேக வைத்த பச்சரிசி மாவை அதில் போட்டு நன்றாகக் கலந்து, முந்திரி துண்டு களைத் தூவி பரிமாறவும்.

சிக்கி முக்கி சுண்டல்

தேவையானவை: வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, வறுத்த எள், ஒன்றிரண்டாகப் பொடித்த பொட்டுக்கடலை, கோதுமை மாவு, வறுத்த ரவை – தலா கால் கப், கடுகு, மிளகுத்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கோதுமை மாவு, எள், வேர்க்கடலைப் பொடி, ரவை, பொட்டுக்கடலைப் பொடி, மிளகுத்தூள், உப்பு ஆகியற்றை அதில் சேர்த்து… ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் கெட்டியாகக் கிளறவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, உருட்டி வைத்துள்ள கலவையைப் போட்டு நன்றாக வறுபடும் அளவுக்குக் கிளறி இறக்கினால்… சிக்கிமுக்கி சுண்டல் தயார்.

மாவு மசாலா சுண்டல்

தேவையானவை: கடலை மாவு, ராகி மாவு, பயத்தம் மாவு – தலா கால் கப், பதப்படுத்தப்பட்ட பச்சரிசி மாவு – அரை கப், கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டுக் கொதித்ததும்… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்க்கவும். கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை ஒன்றாகக் கலந்து, அதில் போட்டுக் கிளறி இறக்கவும். இந்த மாவை மெல்லிய நீள உருளை வடிவில் உருட்டி ஆவியில் வேகவிடவும். ஒவ்வொன்றாக எடுத்து, சிறு பட்டன் வடிவில் வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… தேங்காய் துருவல் சேர்த்து, மாவு பட்டன்களைப் போட்டு வதக்கி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சோள ரவை புட்டு

தேவையானவை: சோள ரவை – முக்கால் கப், சர்க்கரை – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய், தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சோள ரவையை சிவக்க வறுத்து, கொதிக்கும் நீரை விட்டு பிசிறி மூடி வைக்கவும். சிறிது நேரம் ஊறியதும் நன்றாகத் தேய்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து வைக்கவும். சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சி, அதில் நெய் சேர்த்து, கலந்து வைத்துள்ள ரவையைப் போட்டுக் கிளறி, வறுத்த முந்திரியைச் சேர்த்தால்… சோள ரவை புட்டு ரெடி!

ஓட்ஸ் புட்டு

தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: நெய்யில் ஓட்ஸ்ஸை போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்து, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும். சிறிது நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்து தூவவும்.

ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய அசத்தல் புட்டு இது.

சோயா நக்கெட் சுண்டல்

தேவையானவை: சோயா உருண்டைகள் – 10, கறுப்பு உளுந்து – அரை கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: உளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும். சோயா உருண்டைகளை கொதிநீரில் போட்டு, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, பொடித்த சோயாவை சேர்க்கவும். வேக வைத்த உளுந்து, பொடித்து வைத்திருக்கும் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றையும் அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குயிக் எனர்ஜி சுண்டல்

தேவையானவை: பச்சை பயறு – அரை கப், துருவிய நெல்லிக்காய் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பப்பாளி, வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி – சிறிதளவு, துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா, காய்ந்த மிளகாய் (பொடித்தது) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்து மறுநாள் உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். அதனுடன் துருவிய நெல்லிக்காய், நறுக்கிய பப்பாளி, வெள்ளரி, தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கலக்கினால்… குயிக் எனர்ஜி சுண்டல் ரெடி!

கிரீன் சுண்டல்

தேவையானவை: பச்சைநிற கொண்டைக் கடலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப், பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை – கால் கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், சீஸ் – ஒரு துண்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைநிற கொண்டைக் கடலையை முந்தைய நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக விடவும். பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, கீரையை சேர்த்து, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். வேக வைத்த கடலையை அதில் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறி, துருவிய சீஸ் தூவி இறக்கவும்.

மிக்சட் புட்டு

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கேழ்வரகு, கம்பு, சோளம், நாட்டு சோளம், புழுங்கல் அரிசி எல்லாவற்றையும் தனித்தனியே வறுத்து சேர்த்த கலவை – ஒரு கப், வெல்லம் – மாவின் அளவில் மூன்றில் ஒரு பங்கு, தேங்காய் துருவல் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு, முந்திரி – சிறிதளவு.

செய்முறை: அரிசி உள்ளிட்ட அனைத்து தானியங்களையும் மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு போட்டு, கொதி தண்ணீர் விட்டு கலந்து ஆவியில் வேக விடவும். வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், வேக வைத்த மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து, அதில் சேர்த்தால் மிக்சட் புட்டு ரெடி!

உக்காரை

தேவையானவை: கடலைப்பருப்பு, பாசிபருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், வெல்லம் – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஆவியில் வேக வைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். இதில் ஏலக்காய்த்தூள், நெய், தேங்காய் துருவல், உதிர்த்த பருப்புக் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான உக்காரை தயார்!

கம்பு மாவு புட்டு

தேவையானவை: கம்பு மாவு – அரை கப், வெல்லம் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கம்பு மாவுடன் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு நன்றாக பிசிறி, துணியில் மூட்டைகட்டி ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், நெய், வேக வைத்த மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

வெஜிடபிள் புட்டு

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காய் – 2, வெல்லம் – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (அ) வாழைக்காயை முக்கால் பதத்தில் வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் நெய், உப்பு, ஏலக்காய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மசித்த கிழங்கு சேர்த்து நன்றாகக் கலக்க… வெஜிடபிள் புட்டு தயார்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: வீ.நாகமணி

நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை சுண்டல்-புட்டு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பேரிச்சை புட்டிங், பேபிகார்ன் பரோட்டா


பேரிச்சை புட்டிங்

தேவையானவை: நறுக்கிய பேரீச்சை, சோள மாவு, பால்- தலா ஒரு கப், பிரெட் – ஒரு பாக்கெட், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.


 

செய்முறை: பிரெட்டை பாலில் ஊற வைத்து பிழிந்து எடுத்து மற்ற பொருட்களுடன் கலக்கவும். ஒரு தட்டில் நெய் தடவி, பிரெட் கலவையை பரத்தி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பேரீச்சை புட்டிங் உடலை புஷ்டியாக்கும்.

 

பிரியா கிஷோர், சென்னை-4

பேபிகார்ன் பரோட்டா

தேவையானவை: பேபி கார்ன் – 3 (துருவிக் கொள்ளவும்), கோதுமை மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கப், உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய பேபி கார்ன், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி, பேபிகார்னைப் போட்டு தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும் இறக்கவும்.

கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இதை சப்பாத்தி போல் இட்டு வதக்கிய கலவையை அதன்மேல் பரப்பி உருட்டவும். மீண்டும் கனமான சப்பாத்திகளாக இடவும். தோசைக் கல்லில் நெய் விட்டு, சப்பாத்திகளைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

சூப்பர் டேஸ்ட்டில் சத்தான பரோட்டா ரெடி!

எஸ்.விஜயா சீனிவாசன், திருவறும்பூர்

நன்றி:- எஸ்.விஜயா சீனிவாசன், திருவறும்பூர்

நன்றி:- – பிரியா கிஷோர், சென்னை-4

30 வகை சப்பாத்தி – சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்


”இன்னிக்கு, ஸ்கூலுக்கு சப்பாத்திதான் வெச்சிவிட்டிருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடணும். புரிஞ்சுதா?”

”போம்மா, எப்பப் பார்த்தாலும் அதே சப்பாத்திதானா. நான் சாப்பிட மாட்டேன்..?”

வீட்டுக்கு வீடு ஒலிக்கும் இந்த ‘டிஷ்யூம்… டிஷ்யூம்’… இத்தோடு விடைபெறப் போகிறது.

 

பின்னே..! புதினா, வெந்தயக்கீரை, கம்பு, சோளம், காய்கறி, ட்ரைஃப்ரூட் என்று 30 வகையான சப்பாத்திகளை ‘சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் பரிமாறும்போது, இனி என்ன கவலை!

”பச்சைக் குழந்தையில ஆரம்பிச்சு, பாட்டிங்க வரைக்கும் சப்பாத்தி சாப்பிடலாம். அதுவும் ஒபிஸிட்டி, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ஹார்ட் பிராப்ளம்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு வரப்பிரசாதம் சப்பாத்திதான்” என்று சொல்லும் சாந்தி விஜயகிருஷ்ணன்,

”கோதுமையை தவிட்டோட அரைச்சு, சப்பாத்தி செய்தா, சத்து வீணாகாம உடம்புல சேர்ந்துடும். மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சதும், மெல்லிசான துணியால நாலு மணி நேரத்துக்கு மூடி வெச்சுட்டா, சப்பாத்தி மிருதுவா இருக்கும். அவசரமா செய்யணும்னா… மிதமான சுடுநீர் இல்லனா, வெதுவெதுப்பான பாலை விட்டு தளர்வா பிசைஞ்சுகிட்டா போதும்” என்று டிப்ஸும் கொடுக்கிறார்.

பிறகென்ன… ஜமாயுங்க!

ஸ்வீட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை, நெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, பால், தண்ணீர் சேர்த்து, மாவை கெட்டியாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையில் சிறிது எடுத்து சிறிய வட்டமாக தேய்க்கவும். அதன் மேல்புறம் நெய் தடவி, பொடித்த சர்க்கரையைத் தூவி நான்காக மடித்து, மாவு தொட்டு மீண்டும் தேய்த்து, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிக்ஸட் வெஜ் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – இரண்டு கப், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்,  துருவிய குடமிளகாய், துருவிய வெங்காயம் – தலா இரண்டு டீஸ்பூன், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கார சப்பாத்தி

தேவையானவை: வாழைக்காய் – 1, கோதுமை மாவு – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – இரண்டு டீஸ்பூன், தனியா – இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயைத் தோலுடன் வேக வைத்து, பிறகு தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து, பொடித்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் உப்பு, மசித்த வாழைக்காய், பொடித்த தனியா – மிளகாய், நறுக்கிய கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

மிளகு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மிளகு – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மசாலா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், விரலி மஞ்சள் – தலா 1, காய்ந்த மிளகாய் – 2, துருவிய வெங்காயம் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: கடாயில் முக்கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விரலி மஞ்சளை சேர்த்துப் பொடித்து, கோதுமை மாவுடன் கலக்கவும். உப்பு, துருவிய வெங்காயம் சேர்க்கவும். இதை தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்,

ட்ரை ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், முந்திரி, பாதாம் பிஸ்தா சேர்ந்த கலவை – முக்கால் கப், பேரீச்சை துண்டுகள் – 5, உலர்ந்த திராட்சை – 10, நெய் – தேவையான அளவு.

செய்முறை: பாதாம், முந்திரி, பிஸ்தா கலவையை நைஸாக பொடித்துக் கொள்ளவும், பேரீச்சை, திராட்சையை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கோதுமை மாவில், பொடித்த பொடி, அரைத்த விழுது சேர்த்து, சிறிது நெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது பால் சேர்த்துக் கலக்கலாம். பிசைந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் தடவி சுட்டெடுக்கவும்.

புதினா சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய புதினா – கால் கப், துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, இஞ்சி, புதினா, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

கடலை மாவு சப்பாத்தி

தேவையானவை: கடலை மாவு – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், ஓமம், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய், ஆம்சூர் பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவுடன் கோதுமை மாவு, ஓமம், கரம் மசாலாத்தூள், நெய், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

க்ரீன் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தமல்லியுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில் கோதுமை மாவைப் போட்டு, தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, கோதுமை மாவு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விடவும். இதில் கோதுமை மாவைப் போட்டு தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முள்ளங்கி சப்பாத்தி

தேவையானவை: துருவிய முள்ளங்கி – அரை கப், கோதுமை மாவு – ஒரு கப், சோள மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு (தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்), கெட்டியாகப் பிசையவும்.

மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பயறு சப்பாத்தி

தேவையானவை: ஊற வைத்த பயறு – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2,  சீரகத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஊற வைத்த பயறுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, சீரகத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

முந்திரி கார சப்பாத்தி

தேவையானவை: முந்திரி – 15, கசகசா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கோதுமை மாவு – ஒரு கப், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்திரியுடன் கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன், பொடித்த முந்திரி கலவை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இதை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

எள் சப்பாத்தி

தேவையானவை: வெள்ளை எள், மைதா மாவு – தலா கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், நெய் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும். தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பொடிக்கவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தேங்காய் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, தடிமனான சப்பாத்திகளாக இடவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

வேர்க்கடலை சப்பாத்தி

தேவையானவை: வேர்க்கடலை – கால் கப்,  கோதுமை மாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் – தலா 4, சிறிய மாங்காய் துண்டு – 1, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், மாங்காய் துண்டு, இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை கோதுமை மாவுடன் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

உருளைக்கிழங்கு சப்பாத்தி

தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள்  – கால் டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, துருவிய பனீர் – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, மிளகாய்த்தூள், வெங்காயம், பனீர், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரெட் சப்பாத்தி

தேவையானவை: பழுத்த தக்காளி – 2, கோதுமை மாவு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை கொதி நீரில் போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மிளகாயுடன் தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து, கோதுமை மாவை சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

பேபிகார்ன் சப்பாத்தி

தேவையானவை: துருவிய பேபிகார்ன் – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தால் சப்பாத்தி

தேவையானவை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல், தனியாத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறியதும் பருப்பை எடுத்து மசித்து… பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேங்காய் துருவல், கோதுமை மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

மக்காச்சோள சப்பாத்தி

தேவையானவை: மக்காச்சோள மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், சாட் மாசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோள மாவுடன் கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

அரிசி சப்பாத்தி

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன், கோதுமை மாவு, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய் எண்ணெய் விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது பிசைந்த மாவைப் போட்டு, குழவியால் தேய்த்து, மெல்லிய சப்பாத்திகளாக தட்டி, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

பிரெட் சப்பாத்தி

தேவையானவை: பிரெட் துண்டுகள் – 2, கோதுமை மாவு – ஒரு கப், துருவிய பனீர் – கால் கப், பால் – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து… துருவிய பனீர், வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கோதுமை மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஷவ்வரிசி சப்பாத்தி

தேவையானவை: மாவு ஜவ்வரிசி – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள்கள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து, கோதுமை மாவு, வேர்க்கடலைப் பொடி, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் துகள்கள், உப்பு, நெய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரவை சப்பாத்தி

தேவையானவை: ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், புதினா – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையில் கொதிக்கும் தண்ணீர் விட்டு… இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, கோதுமை மாவு, உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சீரக சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், தயிர் – கால் கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர் சேர்த்து… எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால் துருவிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம்.

கம்பு சப்பாத்தி

தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், துருவிய சௌசௌ – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய தேங்காய், ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவு, கோதுமை மாவு, துருவிய சௌசௌ, தேங்காய், ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சேமியா சப்பாத்தி

தேவையானவை: சேமியா – கால் கப், கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சேமியாவில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் கோதுமை மாவு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்

சாக்கோ சப்பாத்தி

தேவையானவை: பால் பவுடர் – கால் கப், சாக்கோ பவுடர், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகள் – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் சாக்கோ பவுடர், பால் பவுடர், வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாகக் கலந்து… முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து, தண்ணீர் தெளித்து பிசையவும். இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ஃப்ரூட் சப்பாத்தி

தேவையானவை: ஆப்பிள் – 1, கோதுமை மாவு – ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிளை தோல் சீவி துருவி… உப்பு, நெய், மிளகுத்தூள், கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

தொகுப்பு: ரேவதி, படங்கள்: து.மாரியப்பன்

நன்றி:- சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்

நன்றி:-அ.வி


பிரிவுகள்:30 வகை சப்பாத்தி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 வகை கூட்டு! – வசந்தா விஜயராகவன்


ஜோரா சமைக்கலாம்.. ஜாலியா சுவைக்கலாம்…

.ம்… காய்கறிகளின் விளைச்சல் அதிகமாகிவிட்டதால், விலையும் மெள்ள குறைய ஆரம்பித்துவிட்டது. இனி, காய்கறிகளுடன் தைரியமாகக் கூட்டணி போடலாம் என்கிற சூழலில்… இங்கே 30 வகை கூட்டுகளை மணக்க மணக்கப் பரிமாறுகிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்

.”காய்கறி, பருப்பு, பயறு, கிழங்குனு எல்லாத்தையும் கலந்து கட்டி அசத்தலாம்கிறதுதான் கூட்டுகளோட ஸ்பெஷாலிட்டியே! காய்கறிகளோட விலை, கண்காணாத உசரத்துக்கு எகிறினாலும் கவலைப்படத் தேவையில்ல. காய்கறிகளைக் குறைச்சலாவும், பருப்பு மற்றும் பயறு வகைகளைக் கூடுதலாவும் சேர்த்தா… அமர்க்களமான கூட்டு ரெடி. சப்புக் கொட்டிக்கிட்டே சாப்பிடலாமே!’’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் வசந்தா விஜயராகவன்.

பிறகென்ன… காய்கறிகளோடு கூட்டணி போட்டு ஜமாயுங்க!

சௌசௌ மலபார் கூட்டு

.

தேவையானவை: சௌசௌ துண்டுகள் – 150 கிராம், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் விழுதாக அரைக்கவும். சௌசௌவில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சேனைக்கிழங்கு மிளகு கூட்டு

தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். அரைத்து வைத்துள்ள கலவை, உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கத்திரிக்காய்-போண்டா புளிக் கூட்டு

தேவையானவை: கத்திரிக்காய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.

வறுத்து அரைக்க: தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

போண்டா செய்ய: உளுத்தம்பருப்பு – 100 கிராம் (ஊற வைக்கவும்).

செய்முறை: கத்திரிக்காயை நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். ஊறிய உளுத்தம்பருப்புடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து, போண்டாவாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். புளியைக் கரைத்து, வேக வைத்த கத்திரிக்காயில் விட்டு, வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பை போடவும். அரைத்து வைத்திருக்கும் பொடியையும் போட்டு கொதிக்கவிடவும். உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குவதற்கு முன்பு பொரித்த போண்டாக்களைப் போட்டு ஒரு முறை கிளறி இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

காலிஃப்ளவர் மசாலா கூட்டு

தேவையானவை: காலிஃப்ளவர் – 100 கிராம் (உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்தால், புழுக்கள் நீங்கிவிடும்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், நறுக்கிய தக்காளி, வெங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவரில் மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். வேக வைத்த காலிஃப்ளவரை சிறிது எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். பொரித்து மீதமுள்ள எண்ணெயில் தக்காளி, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும்போது பொரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு

தேவையானவை: நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், புடலங்காய் சேர்ந்த கலவை – கால் கிலோ, கடுகு, சீரகம், தனியா – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் – தலா 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்கறிகளை உப்பு போட்டு வேக வைக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெந்த காய்கறிகளில் அரைத்த விழுதைக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும் சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், இஞ்சி தாளித்துக் கொட்டி இறக்கவும்.

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

தேவையானவை: உரித்த சாம்பார் வெங்காயம் – 150 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும். துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கொத்தவரங்காய் – மிளகு பொரித்த கூட்டு

தேவையானவை: கொத்தவரங்காய் – 150 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்தவரங்காயில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த கொத்தவரங்காயுடன் அரைத்த விழுது சேர்த்து, கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை: பரங்கிக்காய் – ஒரு கீற்று, பால் – அரை டம்ளர், பச்சை மிளகாய் – 2, சர்க்கரை – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்.

.

செய்முறை: பரங்கிக்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் இரண்டையும் அரைத்து, வெந்த பரங்கிக்காயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். கடைசியில் பால் விட்டுக் கலக்கவும்.

காரம், தித்திப்பு என கலக்கலாக இருக்கும் இந்தக் கூட்டு.

பாகற்காய் புளிக் கூட்டு

தேவையானவை: நறுக்கிய பாகற்காய் – 100 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம் – சிறு துண்டு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பாகற்காயுடன் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து… வெந்த பாகற்காய், பருப்புடன் சேர்த்து, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.தக்காளி பிட்லை

. தேவையானவை: தக்காளித் துண்டுகள் – 100 கிராம் (தக்காளி செங்காயாக இருக்க வேண்டும்), துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தனியா, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

.செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். தக்காளித் துண்டுகளுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, உப்பு, வேக வைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். கூட்டு பதத்தில் வந்ததும், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

. அவரைக்காய் பொரித்த கூட்டு

.தேவையானவை: நறுக்கிய அவரைக்காய் – 100 கிராம், பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், ரசப்பொடி – அரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: அவரைக்காயுடன் பயத்தம்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். இதனுடன் உப்பு, ரசப்பொடி சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. பாகற்காய்-எள்ளு புளிக் கூட்டு

. தேவையானவை: பாகற்காய் துண்டுகள் – 100 கிராம், எள்ளு – 2 டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, வெல்லம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிது எண்ணெயில் எள்ளு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து… பாகற்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பாகற்காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் வறுத்துப் பொடித்த எள்ளு, மிளகாய்த்தூள் சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து நன்றாக கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

.கொண்டைக் கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: கொண்டைக் கடலை – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – ஒரு டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: முந்தைய நாளே கொண்டைக் கடலையை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் புளிக் கரைசலை விட்டு… உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலில் கொட்டவும். வேக வைத்த கொண்டைக் கடலையையும் கொட்டவும். பிறகு, சிறிது தண்ணீரில் கரைத்த கடலை மாவை அதில் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

.வெள்ளைப் பூசணி மோர் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய வெள்ளைப் பூசணி துண்டுகள் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கெட்டி மோர் – ஒரு டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: பூசணிக்காய் துண்டுகளை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். துவரம்பருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மோர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

.வாழைத்தண்டு புளிக் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 150 கிராம், கெட்டியான புளிக் கரைசல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன்.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – கால் கப்.

.செய்முறை: வாழைத்தண்டில் மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசலை விட்டு வேக விடவும். பருப்புகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வறுக்க கொடுத்தவற்றை வறுத்து அரைக்கவும். இந்த விழுதை வேக வைத்த வாழைத்தண்டு, பருப்புகளுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.

.மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு

.தேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.

. சேப்பங்கிழங்கு-தக்காளி ரோஸ்டட் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தக்காளி சாறு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது!

.பூசணி வடகம் புளிக் கூட்டு

. தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.பூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து… ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.

.செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. மரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு

. தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு – 200 கிராம், தேங்காய்ப் பால் – ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து… தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

.சாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது!

.சேப்பங்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

. தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

.

.செய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.

. பொடி சேர்த்த காய்கறி கூட்டு

.தேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) – 200 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.

. பாகற்காய்-கொண்டைக் கடலை கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் – 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.

.செய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.

. பீட்ரூட்-தேங்காய் கூட்டு

.தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 150 கிராம், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

.காராமணி-வேர்க்கடலை புளிக் கூட்டு

.தேவையானவை: காராமணி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).

.செய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

. கேரட்-பீன்ஸ்-இஞ்சி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,

.

.செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

. பரங்கிக்காய் – காராமணி கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

.சுட்ட கத்திரி கூட்டு

.தேவையானவை: பெரிய கத்திரிக்காய் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

.

.வாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு

. தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் – 150 கிராம், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

.

.செய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

. சேனை புளிச்சேரி

.தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

.

.செய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.உருளைக்கிழங்கு-தேங்காய்ப் பால் கூட்டு

.தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு – 200 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

.செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி – பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

.இந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .

நன்றி:- வசந்தா விஜயராகவன்

நன்றி:- அ.வி


பிரிவுகள்:30 வகை கூட்டு! குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி – ராஜேஸ்வரி கிட்டு


நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் என்றாலே… ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலை, இந்தத் தடவை ஒளி வேகத்தில் உயர… ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின் 

”ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடும்” என குண்டு போடும் மதுரை, ராஜேஸ்வரி கிட்டு,

”கொஞ்சம் யோசனையோட செயல்பட்டீங்கனா… ஆனை விலை, குதிரை விலை காய்கறியைக்கூட அடங்கற விலைக்கு வாங்கின திருப்தி வந்துடும். அதாவது, காய்கறிகளோட தோலை பத்திரப்படுத்தி, அதையும் ஒரு கூட்டு, பொரியல்னு மாத்திடுங்க. தினம் தினம் கறிகாய் வாங்கி, காசை கரைக்கத் தேவைஇருக்காது” என்று சொல்வதோடு, காய்கறித் தோல், பழத்தோல் போன்றவற்றில் சுவையான பதார்த்தம், துவையல், ஜாம் என்று விதம்விதமாக சமைத்துக் காட்டி அசத்துகிறார்.

பின்குறிப்பு: தோலையெல்லாம் பக்குவமாக சீவி எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக அலசி பயன்படுத்துவது முக்கியம்.

முற்றல் முருங்கைக்காய் வடை

தேவையானவை: முற்றிய முருங்கைக்காய் – 10, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், சோம்புத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு, நறுக்கிய பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வெண்டைக்காய் காம்பு தோசை

தேவையானவை: வெண்டைக்காய் காம்பு, இட்லி அரிசி – தலா 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் நன்றாக சுத்தம் செய்த வெண்டைக்காய் காம்புகளைச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, உப்பு போட்டுக் கலக்கி, ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயத்தை எண்ணெயில் லேசாக வதக்கி மாவில் கலந்து, தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

தர்பூசணிப் பட்டை வற்றல்

தேவையானவை: தர்பூசணி மேல் தோலை நீக்கி, உட்புற வெள்ளைப் பட்டை, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியில் பிங்க் நிறத்தில் இருக்கும் சதைப்பகுதியை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து சாப்பிடவோ… ஜூஸ் செய்யவோ பயன்படுத்தலாம். வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியின் மேல் தோலை நீக்கி, இரண்டு அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, கொதிநீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும்போது, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும்.

தர்பூசணிப் பட்டை கூட்டு

தேவையானவை: தர்பூசணி உட்புற வெள்ளைப் பட்டை (நறுக்கியது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், தேங்காய் துருவல், கேரட் துண்டுகள் – தலா  கால் கப், தக்காளி – 3, சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துண்டுகள் – அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியின் உட்புறம் வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு… சாம்பார் பொடி, மாங்காய், கேரட், வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு, தர்பூசணி பட்டையை சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, தேங்காய் துருவல், சோம்புத்தூள் போட்டு கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

முள்ளங்கி இலை கூட்டு

தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி இலை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி – தலா அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 2, கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வடகம், பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கடாயில் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் கேரட் துருவல், உப்பு, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகத்தைப் போட்டு பொரித்து, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொட்டி இறக்கவும். விருப்பப்பட்டால் கைப்பிடி வறுத்த வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம். சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

புடலங்காய் குடல் சட்னி

தேவையானவை: புடலங்காய் குடல் (விதையுடன் உள்ள நடுப்பகுதி) – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். எள்ளை வெறும் கடாயில் பொரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, புடலங்காய் நடுப்பகுதியை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். பச்சை வாசனை போனதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

பீட்ரூட் தோல் உசிலி

தேவையானவை: சிறிது சதையுடன் சீவிய பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், கடலைப்பருப்பு – கால் கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் உதிர் உதிராகப் பொடிக்கவும். பீட்ரூட் தோலை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் இருபது நிமிடம் போட்டு, மறுபடி புது தண்ணீரில் நன்றாக கழுவி, உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கேரட் துருவலையும் சேர்த்து வதக்கவும். உதிர்த்த கடலைப் பருப்பைப் போட்டுக் கிளறி, வெந்த பீட்ரூட் தோல் துண்டுகளை சேர்த்துக் கிளறவும். எல்லாம் கலந்து உதிர் உதிராக வந்ததும் கொத்தமல்லித்தழை கலந்து இறக்கவும்.

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

தேவையானவை: சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்… மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

சௌசௌ தோல் சட்னி

தேவையானவை: ஓரளவு சதையுடன் தடிமனாக சீவிய சௌசௌ தோல் துண்டுகள் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிஸ்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை: சௌசௌ தோலை நன்றாகச் சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளைத் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ தோல், கொத்தமல்லித் தழை, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி… புளி, தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

முருங்கைப்பூ மசாலா கிரேவி

தேவையானவை: முருங்கைப்பூ – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 2, ஃபிரெஷ் க்ரீம், புதினா, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைப்பூவை கல், மண் நீக்கி, சுத்தமாகக் கழுவவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கலந்து… முருங்கைப்பூ, உப்பு போட்டு, வெந்ததும் க்ரீம் சேர்க்கவும். தளதளவென கொதித்ததும் இறக்கவும்.

வேப்பம்பூ வற்றல்

தேவையானவை: வேப்பம்பூ – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், புளி பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் – ஒரு டேபிஸ்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை நன்றாகக் கழுவிப் பிழிந்து, மற்ற பொருட்களுடன் சேர்த்துப் பிசிறி, இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் நன்றாகக் காயும் வரை வெயிலில் உலர்த்தி எடுத்து, பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தேவைப்படும்போது, இதை ரசத்தில் சிறிது போடலாம். வறுத்துச் சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

ஆரோக்கியத்துக்கு உகந்த வற்றல் இது.

மா பருப்பு புளிக்குழம்பு

தேவையானவை: மாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 20, வெல்லத்தூள் – சிறிதளவு, எண்ணெய், வடகம், சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூச்சி அரிக்காத மாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.

வயிற்று உபாதைகளுக்கு மா பருப்பு நல்ல மருந்து.

வாழைக்காய் தோல் ஸ்டார் ஃப்ரை

தேவையானவை: வாழைக்காய்த் தோல் துண்டுகள் (முழு வாழைக்காயை நன்றாகக் கழுவி, முழுசாக வேக வைத்து, சிறிது சதையுடன் தோல் சீவிய துண்டுகள்) – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2. நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 8, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வாழைக்காய் தோல் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்துப் புரட்டவும். பிசிறி வைத்திருக்கும் வாழைத் தோல், உருளைத் துண்டுகளை இதில் போட்டு வதக்கவும். சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் ஆகும்வரை வறுக்கவும். மொறுமொறுப்பாக வந்ததும், கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

வாழைப்பூ மடல் கூட்டு

தேவையானவை: வாழை மடல் துண்டுகள்  (வாழைப்பூவின் உள்ளே வெள்ளையாக உள்ள மடலை நறுக்கிய துண்டுகள்) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, குட்டி மாங்காய் துண்டுகள் தலா – அரை கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப், ஆம்சூர் பொடி, வெல்லத்தூள் – தலா டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, நீர் மோர் – சிறிதளவு, வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ மடலை நறுக்கியவுடன் நீர்மோரில் போடவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைப்பூ மடலை பிழிந்து போட்டு, உப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்துக் கலந்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி… ஆம்சூர் பொடி, வெல்லத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.

உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த கூட்டு இது.

முருங்கை காம்பு சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை உருவிய பிறகு உள்ள காம்பு, கறிவேப்பிலை உருவிய பிறகு உள்ள காம்பு – தலா 100 கிராம், சுண்டைக்காய் – கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – 6, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: காம்புகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கவும்.  சுண்டைக்காயைத் தட்டி, உடைத்து கடாயில் போட்டு, வெங்காயம் சேர்த்துப் புரட்டி… மஞ்சள்தூள், காம்புகளைப் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். சுண்டைக்காய் வெந்ததும் கடைந்து, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதைச் சாப்பிட்டால் வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்காது.

காய்கறி தோல் சூப்

தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, கடாயில் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு… உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். இதை மிக்ஸியில் போட்டு விழுதாக்கி, காய்கள் வேக வைத்த நீரை சேர்த்துக் கொதிக்க விடவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் காய்கறி தோல் கலவையில் சேர்த்துக் கலக்கி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி இறக்கவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த பிரெட் துண்டுகளைப் போடலாம்.

கேரட் தோல் ரொட்டி

தேவையானவை: நறுக்கிய கேரட் தோல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து, தோலை சற்று தடிமனாக சீவிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு உதிர் உதிராக வரும்வரை அடிக்கவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் கலந்து, சுடுநீர் ஊற்றி, ரொட்டி தட்டுவதற்கேற்ப முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து, கனமான ரொட்டியாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாகச் சுட்டெடுக்கவும்.

புதினா சட்னி, தேங்காய் சட்னி இதற்கேற்ற சைட்டிஷ்!

நாரத்தங்காய் தோல் பச்சடி

தேவையானவை: நறுக்கிய நாரத்தங்காய் தோல் – 2 கப், கீறிய பச்சை மிளகாய் – 4, பொடித்த வெல்லம் – அரை கப், புளி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தங்காய் தோலைக் கொதி நீரில் போட்டுப் பத்து நிமிடம் மூடி வைத்தால், நிறம் மாறி கசப்புத் தன்மை போய்விடும். பிறகு, தோலை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் மூன்று கப் தண்ணீர் விட்டு, நாரத்தங்காய் தோல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் புளி பேஸ்ட், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நாரத்தங்காய் கலவையில் கொட்டி இறக்கி, ஆறியதும் பாட்டிலில் சேமித்துப் பயன்படுத்தவும்.

ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். எந்த சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

வாழைக்காய் தோல் சட்னி

தேவையானவை: வாழைக்காய் தோல் துண்டுகள் (சிறிது சதையுடன் இருப்பது போன்று சீவிக் கொள்ளவும்) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வாழைக்காய் தோலை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். அதே கடாயில் வாழைக்காய் தோல் துண்டுகளையும் லேசாக வதக்கி, புளி, இஞ்சி, உப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கி பயன்படுத்தவும்.

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை: நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காய் தோலை வெந்நீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மற்ற பொருட்களுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

பப்பாளித் தோல் ஜாம்

தேவையானவை: பப்பாளித் தோல் துண்டுகள் – 2 கப், பப்பாளிப் பழ விழுது – அரை கப், சர்க்கரை – ஒன்றரை கப், சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், ராஸ்பெரிஸ் ரெட் கலர் – அரை டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 3 டீஸ்பூன்.

செய்முறை: பப்பாளித் தோலை நன்றாக சுத்தம் செய்து, பழ விழுதுடன் சேர்த்து வேக வைத்து அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இந்த விழுதில் சர்க்கரை சேர்த்து, வாய் அகன்ற குழிவான கடாயில் போட்டு, கைவிடாமல் கிளறவும். ஜாம் பதம் வந்ததும் சிட்ரிக் ஆசிட் கலந்து, ஐந்து நிமிடம் கிளறவும். ஒரு தட்டில் ஜாமைப் போட்டால், தண்ணீர் பிரிந்து வராமல் இருந்தால் அது சரியான பதம். கலர், எசன்ஸ் கலந்து உடனே இறக்கவும்.

பாட்டிலை மரப் பலகையின் மேல் வைத்து ஜாமை பாட்டிலில் சேமிக்கவும். ஜாமை முழுவதும் நிரப்பக்கூடாது. ஆறியதும் மூடி வைக்கவும்.

பப்பாளித் தோல் அசோகா

தேவையானவை: சிறிது சதையோடு நறுக்கிய பப்பாளிப் பழத் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன், வெந்த பாசிப்பருப்பு – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பப்பாளிப் பழத்தோலை நன்றாக சுத்தம் செய்து, குக்கர் தட்டில் வைத்து தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் வேகவிடவும். இதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு, கோவா, பாசிப்பருப்பு, பாதி அளவு நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதேபோல் மாம்பழத்தோலிலும் செய்யலாம்.

ஆரஞ்சுத் தோல் டூட்டி ஃப்ரூட்டி

தேவையானவை: நன்றாகக் கழுவி, மெல்லிய சிறு துண்டுகளாக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் – 2 கப், சர்க்கரை – கால் கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஃபுட் கலர் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: ஒரு வாய் அகன்ற பாட்டிலில் ஒரு அடுக்கு சர்க்கரை, ஒரு அடுக்கு தோல் துண்டுகள் என மாற்றி மாற்றி போட்டு மெல்லிய வெள்ளைத் துணியால் பாட்டிலை மூடி ஒருநாள் முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை பஞ்சு போல் இளகியிருக்கும். சர்க்கரையும் சிரப் போல கரைந்திருக்கும். தோலை தனியே எடுத்து விட்டு, சிரப்பை அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி, பழத் தோல் துண்டுகளைச் சேர்த்துக் குலுக்கவும். ஊறியதும், மறுபடியும் துண்டுகளை தனியே எடுத்து காயவிடவும். தொடர்ந்து மூன்று நாள் இதுபோல் செய்து, சிரப் வற்றி லேசான ஈரம் இருக்கும்போதே மூன்றாகப் பிரித்து பச்சை, சிவப்பு, மஞ்சள் ஃபுட் கலரைப் போட்டுப் பிசிறி காயவிடவும். உலர்ந்தபின் பாட்டிலில் போட்டு மூடிவைத்துக் கொள்ளவும்.

கலர்ஃபுல் டூட்டி ஃப்ரூட்டி ரெடி!

எலுமிச்சம்பழத் தோல் ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சைத் தோல் – 20, காய்ந்த மிளகாய் – 50 கிராம், கட்டிப் பெருங்காயம் – ஒரு துண்டு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாளே, எலுமிச்சைத் தோலில் உப்பு, மஞ்சள் சேர்த்துப் பிசிறி மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை தனித்தனியே போட்டு வாசம் வரை வறுத்துப் பொடிக்கவும். மறுநாள் ஊறிய எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, எலுமிச்சைத் தோல் துண்டுகளைப் போட்டு வதக்கி, பொடித்தவற்றையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தோல் நன்றாக வெந்து, கையால் கிள்ளுகிற பதம் வந்ததும், வெல்லம் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து பயன்படுத்தவும்.

பரங்கி பஞ்சு லட்டு

தேவையானவை: விதைகள் நீக்கப்பட்ட பரங்கிக்காயின் பஞ்சு போன்ற நடுப்பகுதி – ஒரு கப், தேங்காய் விழுது, பாசிப்பருப்பு – தலா கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நெய், பால் பவுடர் தலா – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், வறுத்த முந்திரித் துருவல் – தேவையான அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பரங்கி பஞ்சு பகுதியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லத்தை சேர்க்கவும். அது கரைந்ததும், பரங்கி விழுது, பாசிப்பருப்பு பொடி சேர்த்துக் கிளறவும். இவை நன்றாக சேர்ந்து வந்ததும், பால் பவுடர், தேங்காய் விழுது, நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வெந்து வந்ததும், எசன்ஸ் சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி, முந்திரித் துருவலில் புரட்டி எடுக்கவும்.

பீட்ரூட் தோல் ஜாம்

தேவையானவை: நன்றாகக் கழுவி நறுக்கப்பட்ட பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், நறுக்கிய பீட்ரூட் – கால் கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு, உப்பு சேர்த்து, பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, பீட்ரூட் சேர்த்து குக்கர் தட்டில் வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, உப்பு கலந்து, ஒரு கடாயில் போட்டு, அடுப்பில் வைத்து, கைபடாமல் கிளறவும். தளதளவென்று ஜாம் போல் வந்ததும், நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். ரத்த சோகையைத் தடுக்கும்.

பரங்கி விதை பாயசம்

தேவையானவை: காய வைத்து உரித்த பரங்கி விதை – ஒரு கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பால் – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்), சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை: கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி… அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

கேரட் தோல் கீர்

தேவையானவை: கேரட் தோல் துண்டுகள் – ஒரு கப், பால் – 2 டம்ளர், பாதாம் மிக்ஸ் – அரை கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 30 கிராம்.

செய்முறை: கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

பீட்ரூட் தோல் அல்வா

தேவையானவை: பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

நெல்லிக்கொட்டை டீ

தேவையானவை: நெல்லிக்கொட்டை – அரை கப், புதினா, துளசி இலை – தலா 15, கருப்பட்டி – தேவையான அளவு, சுக்கு – சிறு துண்டு.

செய்முறை: நெல்லிக்கொட்டைகளை நன்றாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி நெல்லிக்கொட்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். சுக்கை தட்டிப் போட்டு, துளசி இலை, புதினா, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக அருந்தவும்.

இந்த டீ, மழை காலத்தில் அருந்த சூப்பராக இருக்கும். சளி, இருமல் வராமலும் தடுக்கும்.

தொகுப்பு: ரேவதி
படங்கள்: எம்.விஜயகுமார்

நன்றி:- மதுரை, ராஜேஸ்வரி கிட்டு

நன்றி:- அ.வி

    பிரிவுகள்:விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    நாகூர் கொத்து பரோட்டா


    துபாய் போனாலும்  மலேசியா போனாலும்  நாகூர் கொத்து பரோட்டா போல வருமா

    kothuparotta

    கொத்து பரோட்டா செய்ய தேவையானவை

    பரோட்டா – 2
    முட்டை – 2
    வெங்காயம் – 1
    தக்காளி – 2
    கறிவேப்பிலை – ஒரு கொத்து
    கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
    மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் – தேவையான அளவு
    உப்பு – தேவையான அளவு

    கொத்து பரோட்டா செய்முறை1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    2. அடுப்பில் சட்டியை  வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
    3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
    4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.
    5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

    6 பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
    7. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    நன்றி:-நாகூர் டுடே

    நன்றி:- http://nagoretoday.blogspot.com/

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

    கிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.


    சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்…
    “கிராமத்துல இருந்தவரைக்கும், நம்ம வீட்டுத் தோட்டத்துல விளையற காய்கறிங்க, சுலபமா வாங்கக்கூடிய வகையில இருக்கற காய்கறிங்கனு கிடைக்கறத வச்சே, சுவையா சமைச்சு சாப்பிடுவோம். குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு, அம்மாவோட கைப்பக்குவத்துல கிறங்கிப் போவோம். அந்த சந்தோஷம்… கோடி ரூபா கொட்டிக் குடுத்தாலும் கிடைக்காது…”

    – காலவெள்ளத்தில் நகர்ப்புறங்களில் அடைக்கலமாகிவிட்ட பலரும், இப்படி பெருமூச்சுவிடத் தவறுவதில்லை.

    ‘விலை மலிவு’, ‘சுலபமாகக் கிடைக்கும்’ என்ற காரணங்களோடு, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற உன்னதத் தத்துவமும் அம்மாவின் கிராமத்துச் சமையலில் சேர்ந்தே இருக்கும் என்பது மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய ஓர் அம்சமாகும்.

    ‘அதெல்லாம் ஒரு காலம்’ என்றாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்… அந்த ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் ரசித்து, ருசித்த கிராமத்துச் சமையலை இங்கே விருந்தாக்கி, மலரும் நினைவுகளுக்குள் மூழ்கடிக்கிறார் ‘பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா.

    “பீட்ஸா, பர்கர், சோளாபட்டூரானு ஊர், பேர் தெரியாத விதவிதமான சமையல் ரெசிபிங்க நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டாலும், காலகாலமா நம்ம கிராமத்து அடுப்புகள்ல கொதிச்சுக்கிட்டிருக்கற எளிமையான சமையலுக்கு இருக்கற ருசி… அது கொடுக்கற திருப்தி… வேற எங்கயுமே கிடைக்காது. நீங்களும் இதையெல்லாம் செஞ்சு பாருங்க… வீடே வயிறார உங்களைப் பாராட்டும்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார் பத்மா.

    அப்புறமென்ன… உங்க வீட்டையும் கிறங்கடிங்க!

    கம்புதோசை

    தேவையானவை: கம்பு – 100 கிராம், பாசிப்பருப்பு – 1 கப், அரிசி – 1 கப், இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், பச்சை மிளகாய் – 1, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து, பின்பு இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.

    சோள ரவை உப்புமா

    தேவையானவை: சோளம் – 1 கப், அரிசி ரவை – 1 கப், கோதுமை ரவை – 1 கப், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சோளத்தை ரவையாக உடைக்கவும். அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும். கடா யில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும்… கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: காய்கறிகள் சேர்த்தும் தயாரிக்கலாம். இதற்கு சட்னி, சாம்பார் சிறந்த காம்பினேஷன்.

    அவரைக்காய் பருப்பு உசிலி

    தேவையானவை: அவரைக்காய் – கால் கிலோ, துவரம்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைத்து, சிறிது உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு தாளித்து, அரைத்த பருப்பை சேர்த்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி, வேக வைத்த அவரைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    பாசிப்பருப்பு பெசரட்

    தேவையானவை: பச்சரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இந்த தோசைக்கு எந்த சைட் டிஷ்ஷூம் வேண்டாம். அப்படியே சூடாக சாப்பிடலாம். பாசிப்பருப்பு, வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.

    கருப்பட்டி அப்பம்

    தேவையானவை: கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.

    செய்முறை: கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.

    குறிப்பு: மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த அப்பம்.

    ராகி மோர்க்கூழ்

    தேவையானவை: ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

    குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும்.

    உளுந்து அடை

    தேவையானவை: புழுங்கல் அரிசி – 250 கிராம், கறுப்பு உளுந்து – 100 கிராம், துவரம்பருப்பு – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப், காய்ந்த மிளகாய் – 5, இஞ்சி – சிறு துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: புழுங்கல் அரிசி, கறுப்பு உளுந்து, துவரம்பருப்பை தனித்தனியாக ஊற வைக்கவும். அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைக்கவும். உளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு: கறுப்பு உளுந்து, புரதச் சத்து மிக்க தானியம் ஆகும். பருவமடையும் பெண்களுக்கு உளுந்து களி தயாரித்து கொடுப்பது வழக்கம். எலும்புகள் வலுவடைய இது உதவும். எனவே… துவையல், அடை, இட்லி மிளகாய்ப்பொடி போன்றவற்றைத் தயாரிக்கும்போது கறுப்பு உளுந்து சேர்ப்பது நல்லது.

    கொள்ளு உருண்டை காரக்குழம்பு

    தேவையானவை: கொள்ளு – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.

    குறிப்பு: கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு.

    வெள்ளரிக்காய் கூட்டு

    தேவையானவை: வெள்ளரிக்காய் – 3, பாசிப்பருப்பு – 1 கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேகவிடவும். காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப்போட்டு நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    குறிப்பு: வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி. வெள்ளரிக்காயில் சாலட், தயிர்ப்பச்சடியும் தயாரிக்கலாம்.

    புளிப் பொங்கல்

    தேவையானவை: அரிசி – 250 கிராம், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – 100 மில்லி, கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: 1 பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் எடுத்து, புளியை கரைத்துக் கொள்ளவும். அதில் அரிசியைப் போட்டு, தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில் வந்ததும் இறக்கவும். சாதம் வெந்து நன்கு குழைந்து இருக்கும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, வெந்த சாதத்துடன் கலந்து நன்கு மசிக்கவும்.

    குறிப்பு: புளிப்பு, காரம் எல்லாம் சேர்ந்த இந்த புளிப் பொங்கலை, கருவுற்ற பெண்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    எண்ணெய் கத்திரிக்காய் மசாலா

    தேவையானவை: சிறிய கத்திரிக்காய் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, கரம் மசாலாத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு எல்லாம் கலந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பாகத்தை அரைப்பாகம் கத்தியால் கீறி, கலந்து வைத்திருக்கும் மசாலாவை அதனுள்ளே வைத்து அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். கத்திரிக்காய் பொன்னிறமாக, இருபுறமும் வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.

    குறிப்பு: எண்ணெய் கத்திரி மசாலாவை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

    பாசிப்பருப்பு கோசுமல்லி

    தேவையானவை: பாசிப்பருப்பு – 100 கிராம், துருவிய கேரட் 1 கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள் – 1 கப், எலுமிச்சம்பழம் – 1 மூடி (பிழிந்து கொள்ளவும்), உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பாசிப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, துருவிய கேரட், வெள்ளரித்துண்டுகள், கொத்தமல்லி, உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்… கோசுமல்லி ரெடி!

    குறிப்பு: இதை வெங்காயம், தக்காளி சேர்த்தும் தயாரித்துச் சாப்பிடலாம்.

    பிடிகருணை மசியல்

    தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, எலுமிச்சம்பழம் – ஒன்று, வெல்லம் (பொடித்தது) – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பிடிகருணையை குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கி, தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு, மசித்த கிழங்குடன் சேர்த்து, உப்பு சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து கலக்கவும். கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.

    பரங்கிப் பச்சடி

    தேவையானவை: சிவப்பு பரங்கிக் கீற்று – கால் கிலோ, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1, பொடித்த வெல்லம் – 4 டீஸ்பூன், புளித்தண்ணீர் – ஒரு சிறிய கப், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பரங்கிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி… உப்பு, புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து வேகவிடவும். தேங்காய் துரு வல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்.

    குறிப்பு: இந்தப் பச்சடி, பொரித்த குழம்புக்கு சிறந்த காம்பினேஷன். இதை எளிதாக தயாரிக்கலாம். பரங்கிக்காயுடன் வெல்லம், இஞ்சி, மிளகாய் சேர்த்து அரைத்து ஜாம் தயாரிக்கலாம்.

    கேப்பை கஞ்சி

    தேவையானவை: கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.

    செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.

    குறிப்பு: இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம்.

    கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)

    தேவையானவை: கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    குறிப்பு: இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம். மற்றவர்களும் சாப்பிடலாம்.

    பீர்க்கங்காய் கூட்டு

    தேவையானவை: பீர்க்கங்காய் – 2, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை குழைவாக வேக விடவும். பீர்க்கங்காயை வேக விட்டு, வெந்த பருப்பை அதில் சேர்க்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கொதிக்க விட்டு இறக்கவும்.

    குறிப்பு: இது, தோசை – இட்லிக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

    மரவள்ளி பொரியல் (ஆல்வள்ளிக்கிழங்கு)

    தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – அரை கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    செய்முறை: மரவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். தோல் உரித்து பொடியாக நறுக்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… நறுக்கியதைப் போட்டு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: மரவள்ளிக்கிழங்கில் அடை செய்யலாம். வெல்லம் சேர்த்து வேக வைத்தும் சாப்பிடலாம். சிப்ஸ்கூட தயாரிக்கலாம்.

    தக்காளி அடை

    தேவையானவை: பழுத்த தக்காளி – 4, புழுங்கல் அரிசி – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 4, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: புழுங்கல் அரிசியை ஊற வைத்து… இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்து, இருபுறமும் எண் ணெய்விட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இட்லி மிளகாய்ப்பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

    முருங்கைக்கீரை பொரியல்

    தேவையானவை: முருங்கைக்கீரை (உருவியது) – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: முருங்கைக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, உப்பு போட்டு வேக விட்டு தண்ணீரை நன்கு வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, முருங்கைக்கீரையை போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: முருங்கைக்கீரையில் இணையற்ற இரும்புச் சத்து உள்ளது.

    புடலங்காய் பொரித்த குழம்பு

    தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், பாசிப்பருப்பு – ஒரு கப், மிளகு-சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: புடலங்காயை பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து வேக விடவும். மிளகு-சீரகம், காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். புடலங்காயுடன் தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். அரைத்த மசாலா மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் காய்-பருப்பு கலவையில் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.

    குறிப்பு: புடலங்காய், பத்தியச் சமையலுக்கு ஏற்றது.

    கீரை வடை

    தேவையானவை: உளுத்தம்பருப்பு – 200 கிராம், முளைக்கீரை (ஆய்ந்து, நறுக்கியது) – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: உளுத்தம்பருப்பை ஊற வைத்து… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இதற்குத் தொட்டுக் கொள்ள எல்லா வகை சட்னியும் ஏற்றது.

    எள்ளுப்பொடி

    தேவையானவை: எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.

    குறிப்பு: இதை, சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

    பரங்கி அசோகா

    தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், பரங்கிக்காய் நறுக்கியது – ஒரு கப், நெய் – 100 மிலி, சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10.

    செய்முறை: பாசிப்பருப்பை வறுத்து வேக விடவும். பரங்கிக்காயை நெய் விட்டு வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, வெந்த பருப்பு, அரைத்த பரங்கி விழுது இரண்டையும் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.

    குறிப்பு: உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்தும் இதே முறையில் தயாரிக்கலாம்.

    சத்துமாவு உருண்டை

    தேவையானவை: சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.

    செய்முறை: சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.

    குறிப்பு: சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.

    சுண்டைக்காய் பொரியல்

    தேவையானவை: பிஞ்சு சுண்டைக்காய் – 200 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சுண்டைக்காயை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேக விட்டு, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த சுண்டைக்காயைப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: சுண்டைக்காய், பித்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உடையது. பிஞ்சு சுண்டைக்காயில் விதை அதிகம் இருக்காது. எனவே, கசப்பு அதிகம் தெரியாது. முற்றிய சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து, உப்பு சேர்த்துக் காய வைத்து, எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம்.

    ராகி மசாலா தோசை

    தேவையானவை: அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.

    குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்

    தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப், கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – தேவை யான அளவு.

    செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை குக்கரில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். கடலைப்பருப்பை வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, வேக விடவும். வெந்தபருப்புடன், தேங்காய் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்து, சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். மைதா மாவை கேசரி பவுடருடன் சேர்த்து கெட்டியாகக் கரைத்து, அதில் இந்த உருண்டைகளை தோய்த்து, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    குறிப்பு: பண்டிகை நாட்களில் செய்யக்கூடிய வித்தியாசமான ஸ்வீட் இது.

    கொத்தவரங்காய் மோர்க் கூட்டு

    தேவையானவை: கொத்தவரங்காய் – 100 கிராம், தயிர் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கொத்தவரங்காயை நறுக்கி உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிகட்டவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து, தயிரில் கலக்கவும். இதை வேக வைத்த கொத்தவரங்காயில் விடவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்தவரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

    முருங்கை மசாலா பொரியல்

    தேவையானவை: முருங்கைக்காய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, கத்திரிக்காய் – 4, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

    செய்முறை: முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கத்திரிக்காயும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கத்திரிக்காய் போட்டு கரம் மசாலாத்தூள், வெங்காயம், மிளகாய்த்தூள் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கி, வேக வைத்த முருங்கைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: சூடான சாதத்தில் இந்த பொரியலைப் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சைட் டிஷ் தேவை இல்லை.

    -தொகுப்பு: நாச்சியாள்,
    படங்கள்: கே.கார்த்திகேயன் அட்டையில்: சுனைனா

    நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்.

    நன்றி:- அ.வி

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

    30 வகை தொக்கு! – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    செப்ரெம்பர் 25, 2010 பின்னூட்டமொன்றை இடுக

    தொக்கு… சொல்லும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் விசேஷ உணவு அயிட்டம்!

    இன்றைய பிஸியான வாழ்க்கைச் சூழலில், எதையும் ஆற அமர செய்து சாப்பிட நேரமின்றி தவிக்கும் சகோதரிகளுக்கு, சந்தேகமே இல்லாமல் தொக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

    காலையில் டிபனுக்கு, மதியம் சாதத்துக்கு, மீண்டும் இரவு உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்று குழம்பித் தவிப்பவர்களுக்கு, ‘நானிருக்க பயமேன்’ என்று அபயக்கரம் நீட்டும் சிம்பிளான சைட் டிஷ் – தொக்கு! பிரெட்டின்மேல் தடவி, ஸாண்ட்விச் செய்வதற்கும் தொக்கு உதவும்.

    சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் காய்கறிகளையும் வைத்தே இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளில் தினம் ஒரு தொக்கு தயாரிக்க கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

    இவற்றைத் தயாரிக்க ஆகும் நேரமும் குறைவு. செலவும் அதிகமில்லை. தினம் ஒரு தொக்கு செய்து பரிமாறிப் பாருங்கள், ‘தொக்கு’ப் பொடி போட்டது போல குடும்பமே உங்களைச் சுற்றி வரும்.

    குறிப்பு: இந்தத் தொக்கு வகைகளை, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளில் உப்பு, புளி, காரம் போன்றவற்றை அவரவர் சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். ஆனாலும், இவை மூன்றும் சிறிது தூக்கலாக இருந்தால்தான் தொக்கு ருசிக்கும்!

    பேரீச்சம்பழத் தொக்கு

    தேவையானவை: பேரீச்சம்பழம் – 100 கிராம், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப்.

    தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, எடுக்கும்போது பெருங்காயத்தைப் புரட்டி எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம்பழத்தைச் சேருங்கள். குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயத்தூள் சேர்த்து, மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

    தக்காளி தொக்கு

    தேவையானவை: தக்காளி – 1 கிலோ, புளி – 1 எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் (குவித்து அளந்தது), உப்பு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – பெரியதாக 4 பல்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

    செய்முறை: வெந்தயம், பெருங்காயத்தை முன்பு சொன்னது போல, வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள் (இல்லையெனில், கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது).அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து கிளறுங்கள்.

    தண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில், இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள். கடுகு பொரிந்ததும், அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின், பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள்.

    பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

    தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, பச்சை மிளகாய் – 15, புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 6 பல்.

    தாளிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

    செய்முறை: மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடியவிடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலரவிடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.

    பின்னர் மல்லித்தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லாவற்றையும் நைஸாக அரையுங்கள். வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயத்தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.

    கொத்துமல்லித் தொக்கு

    தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு (பெரியதாக), புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

    வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 10, வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை (கருகி விடாமல்) சிவக்க வறுத்து எடுத்து, மல்லி, புளி, உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். சுருள, சுருளக் கிளறி இறக்குங்கள்.

    பீட்ரூட் தொக்கு

    தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: பீட்ரூட்டை மண் போகக் கழுவி, தோல் நீக்கித் துருவிக்கொள்ளுங்கள். வெந்தயம், பெருங்காயம், சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அத்துடன் பீட்ரூட் துருவலைச் சேருங்கள். நடுத்தரத் தீயில் வைத்து, வேகும்வரை கிளறுங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

    பூண்டு தொக்கு

    தேவையானவை: பூண்டு – அரை கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – 1 கப், மிளகாய்த்தூள் – அரை கப், உப்பு – கால் கப், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    செய்முறை: பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு சேருங்கள். கடுகு பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயம்-பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

    சாறு வற்றி, எண்ணெய் மேலே மிதக்கும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின், பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துங்கள்.

    வெங்காயத் தொக்கு

    தேவையானவை: பெரிய வெங்காயம் – அரை கிலோ, பூண்டு (விரும்பினால்) – 10 பல், வினிகர் – கால் கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை – சிறிது.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) சோம்பு – அரை டீஸ்பூன்.

    செய்முறை: வெங்காயத்தைத் தோல் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து, ஒன்றாகப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கி, நிறம் மாறிப் பொரிந்ததும் பூண்டைச் சேருங்கள். இரண்டு நிமிடங்கள் வதக்கி வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளாகக் கிளறி இறக்குங்கள்.

    பச்சை மிளகாய் தொக்கு

    தேவையானவை: பச்சை மிளகாய் (அடர் பச்சை நிறத்தில்) – கால் கிலோ, புளி – பெரிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளந்தது), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறு இலந்தைப்பழ அளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். அதிலிருக்கும் மீதி எண்ணெயுடன் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய மிளகாய்த் துண்டுகளைப் போட்டு, நன்கு வதக்கி எடுங்கள்.

    பின்னர், வதக்கிய பொருள்களுடன் புளி, உப்பு, மஞ்சள்தூள், பொட்டுக் கடலை சேர்த்துத் தண்ணீரில்லாமல் அரைத்தெடுங்கள் (இந்தக் கலவையை ஆட்டுரலில் அரைப்பது சுலபம். மிக்ஸியில் அரைப்பதற்குச் சற்று சிரமமாகத் தான் இருக்கும். கிளறிக் கிளறிவிட்டுத்தான் அரைக்கவேண்டும்).

    மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

    புளிச்சகீரை (கோங்குரா) தொக்கு

    தேவையானவை: புளிச்சகீரை – 1 கட்டு, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பூண்டு – 6 பல், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: கீரையை இலைகளாகக் கிள்ளி, கழுவித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் உலர விடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள். மீந்துள்ள எண்ணெயில் கீரையை சேர்த்து, நன்கு வதக்குங்கள். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.

    வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.

    தக்காளி- பூண்டு தொக்கு

    தேவையானவை: தக்காளி – 1 கிலோ, பூண்டு – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – அரை கப்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 25.

    செய்முறை: தக்காளியை, உப்பு, புளி சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை, வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டைச் சேருங்கள். ஐந்து நிமிடங்கள் வதங்கியபின், அரைத்த தக்காளி விழுதைச் சேருங்கள். தண்ணீர் வற்றி, சிறிது சேர்ந்தாற்போல வரும்போது, பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

    பாகற்காய் தொக்கு

    தேவையானவை: பாகற்காய் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் – 1 துண்டு, உப்பு – 2 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    செய்முறை: பாகற்காயைக் கழுவி, துடைத்து, விதை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, பாகற்காயைச் சேர்த்து வதக்குங்கள்.

    பாகற்காய் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இத்துடன் சேருங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    மாங்காய் தொக்கு

    தேவையானவை: கிளிமூக்கு மாங்காய் – 1, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம் – பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பூண்டு (நசுக்கியது) – 3 பல்.

    செய்முறை: மாங்காயைக் கழுவித் துடைத்துத் துருவிக் கொள்ளுங்கள் (தோல் நீக்கத் தேவையில்லை). பின்னர் துருவிய மாங்காயுடன், உப்பு சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். ஒருநாள் முழுக்க ஊறியதும், மறுநாள் பிழிந்து, ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காயவையுங்கள் (பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிட வேண்டாம். ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்கள்).

    அன்று முழுதும் காய்ந்தபின், மாங்காய்த் துருவலை எடுத்துக் கொள்ளுங்கள். பிழிந்து வைத்திருக்கும் தண்ணீரில், மிளகாய்த்தூள், வறுத்த வெந்தய-பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, மாங்காய்ச் சாற்றில் சேருங்கள். அத்துடன், காயவைத்து எடுத்த மாங்காய்த் துருவலையும் சேர்த்துக் கலந்து வையுங்கள். ஆந்திரத்துச் சுவையுடன், வித்தியாசமான மாங்காய் தொக்கு தயார்.

    கறிவேப்பிலை தொக்கு

    தேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப், உளுத்தம் பருப்பு – கால் கப், புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 20.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – கால் கப்.

    செய்முறை: கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.

    கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

    உருளைக்கிழங்கு தொக்கு

    தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, புளி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, இஞ்சி – 1 துண்டு.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    செய்முறை: உருளைக்கிழங்கைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் ஊறவிடுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேருங்கள்.

    குறைந்த தீயில் உருளைக்கிழங்கை நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு பாதியளவு வெந்தபிறகு, புளியைக் கரைத்து, வடிகட்டிச் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும்வரை (சிறு தீயில் வைத்து) கிளறுங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.

    பீர்க்கங்காய் தொக்கு

    தேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 5, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: பீர்க்கங்காயைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தைத் தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பீர்க்கங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பீர்க்கங்காய் வதங்கியதும், அதனுடன் தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மீண்டும் நன்கு வதக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

    சின்ன வெங்காயத் தொக்கு

    தேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கிலோ, மிளகாய்த் தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

    வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

    செய்முறை: சின்ன வெங்காயத்தை எடுத்து, மேலே சருகாக உள்ள தோலை மட்டும் நீக்குங்கள். ஒட்டிக்கொண்டிருக்கும் தோல் அப்படியே இருக்கட்டும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு சிவக்க வறுத்துப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் வெங்காயத்தைச் சேருங்கள்.

    வெங்காயம் நன்கு நிறம் மாறி, வாசனை வரும்வரை வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு கிளறுங்கள். கடைசியில் பொடித்து வைத்துள்ள தூளைத் தூவி, கிளறி இறக்குங்கள்.

    ‘த்ரீ இன் ஒன்’ தொக்கு

    தேவையானவை: தக்காளி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 150 கிராம், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோல் உரித்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

    பூண்டு, வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறுங்கள். தக்காளி கரைந்து நன்கு வெந்தவுடன், எலுமிச்சம் பழச்சாறு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு மூன்றின் சுவையும் கலந்த ‘த்ரீ இன் ஒன்’ தொக்கு தயார்.

    குடமிளகாய் தொக்கு

    தேவையானவை: குடமிளகாய் – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: குடமிளகாயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கிப் பொடியாக நறுக்கித் தனியே வையுங்கள். மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, குடமிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்குங்கள்.

    மாங்காய் இஞ்சித் தொக்கு

    தேவையானவை: மாங்காய் இஞ்சி – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், வினிகர் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 20, வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகைச் சேருங்கள்.

    கடுகு நன்கு பொரிந்ததும், துருவிய இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, வினிகர், உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அத்துடன் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.

    இஞ்சி தொக்கு

    தேவையானவை: இஞ்சி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 50 கிராம், புளி – 100 கிராம், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவுங்கள். மீண்டும் ஒருமுறை கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரை கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி, மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

    வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, சற்று சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதையும் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

    செளசெள தொக்கு

    தேவையானவை: செளசெள – 1, பச்சை மிளகாய் – 8, புளி – எலுமிச்சம்பழ அளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், பூண்டு – 4 பல், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன்.

    செய்முறை: செளசெளவை நன்கு கழுவி, விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். (தோல் நீக்க வேண்டாம்). பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக அதில் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்குங்கள். ஆறியவுடன், மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுங்கள். சப்புக்கொட்ட வைக்கும் இந்த செளசெள தொக்கு.

    புளியங்காய் தொக்கு

    தேவையானவை: நல்ல பிஞ்சு புளியங்காய் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 10, மல்லித்தழை – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, பூண்டு – 4 பல், உப்பு – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: புளியங்காயைச் சுத்தமாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரையுங்கள்.

    கடைசியில் பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் புளியங்காய் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள்.

    மாங்காய்-பச்சை மிளகாய் தொக்கு

    தேவையானவை: சற்றுப் பெரிய மாங்காய் – 1, பச்சை மிளகாய் – 12, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 1 கீற்று, பூண்டு – 4 பல்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு _ 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். மாங்காயைக் கழுவி, துடைத்துத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள்.

    பின்னர் அத்துடன் துருவிய மாங்காய், பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள். அதனுடன், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் தூளையும் சேர்த்து, மேலும் இரு விநாடிகள் அரைத்து எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த கலவையில் சேருங்கள்.

    வதக்கி அரைக்கும் மல்லி தொக்கு

    தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

    வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப்.

    செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்து, எடுக்கும் சமயத்தில் பெருங்காயத்தை சேர்த்துப் புரட்டி எடுங்கள். பின்னர், அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, மிளகாயை நிறம் மாறாமல், குறைந்த தீயில் வறுத்து எடுங்கள். மீதமுள்ள எண்ணெயுடன், இன்னும் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, உளுத்தம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒன்றாக வறுத்தெடுங்கள்.

    மல்லித்தழையை அலசிச் சுத்தம் செய்து, ஒரு துணியில் பரப்பினாற்போல் உலரவிடுங்கள். இரண்டு மணி நேரம் உலர்ந்ததும், அதை இரு தடவைகளில் (ஒரு தடவைக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் வீதம் காயவைத்து) வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயப் பொடி, வறுத்த மிளகாய், பருப்பு வகைகள், புளி, வதக்கிய மல்லித்தழை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல், சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுதில் சேருங்கள்.

    எலுமிச்சை தொக்கு

    தேவையானவை: எலுமிச்சம்பழம் – 12, பச்சை மிளகாய் – 6, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தய – பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

    செய்முறை: எலுமிச்சம்பழத்தைக் கழுவித் துடைத்து, நறுக்கி, விதைகளை முற்றிலும் நீக்கிவிடுங்கள். அத்துடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்து, இரண்டு நாட்கள் ஊறவிடுங்கள்.

    பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். அத்துடன் மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயப் பொடி சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

    தோசைக்காய் தொக்கு

    தேவையானவை: தோசைக்காய் – 1, பச்சை மிளகாய் – 5, காய்ந்த மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 6, பூண்டு (சிறியதாக) – 2 பல், தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (நறுக்கியது) 1 டேபிள்ஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை: தோசைக்காயை தோல் நீக்கி, சிறு துண்டு களாக்குங்கள். விதையை நீக்கவேண்டாம். மிளகாயைக் கீறுங்கள். பூண்டு, வெங்காயத்தைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள். பின் தோசைக்காய் துண்டுகள், மிளகாய், பூண்டு, வெங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, இறக்குங்கள். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    கத்தரிக்காய் தொக்கு

    தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, தேங்காய் – 1 கீற்று. தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 6 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை: கத்தரிக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், புளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். இறக்கி வைத்து, மல்லித்தழை, தேங்காய் சேர்த்துக் கிளறி ஆறவிடுங்கள். ஆறியதும் சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, (விரும்பினால்) நசுக்கிய பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த விழுதுடன் கலந்து வையுங்கள்.

    நெல்லிக்காய் தொக்கு

    தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – அரை கிலோ, உப்பு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

    வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: நெல்லிக்காயை கழுவித் துடைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். பின்னர், அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால், துண்டுகளாகப் பிரிந்து, கொட்டை வெளியே வந்துவிடும்.

    வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் வறுத்து, நன்கு பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நெல்லிக்காய்த் துண்டுகளைச் சேருங்கள்.

    அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

    மிளகாய்ப் பழத் தொக்கு

    தேவையானவை: (நன்கு சிவப்பான) மிளகாய்ப் பழம் – கால் கிலோ, புளி – 100 கிராம், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பூண்டு (சிறியதாக) – 15 பல், காய்ந்த மிளகாய் – 3, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

    செய்முறை: மிளகாய்ப்பழங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள், புளி சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். இரண்டு நாள் இந்தக் கலவையை ஊறவிடுங்கள். (இரண்டு நாளும் காலையிலும் மாலையிலும் அதை நன்கு கிளறிவிட வேண்டும்). மூன்றாம் நாள், ஊறிய மிளகாய்ப்பழக் கலவையை எடுத்து மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளியுங்கள். மிளகாயை முழுசாகத் தாளித்து, பூண்டை நசுக்கிச் சேருங்கள். இரு நிமிடங்கள் வதக்கி, அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் இவற்றை அரைத்து, மிளகாய் விழுதுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்கி வையுங்கள். காரசாரமான சூப்பர் தொக்கு ரெடி! இதை இரண்டு நாட்கள் ஊறவிட்டுச் சாப்பிடுங்கள்.

    வாழைக்காய் தொக்கு

    தேவையானவை: வாழைக்காய் – 2, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 6 முதல் 8 வரை, பூண்டு (விருப்பப்பட்டால்) – 6 பல், உப்பு – 2 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: வாழைக்காயை கழுவித் துடைத்து, அடுப்பில் காட்டி நன்கு சுட்டெடுங்கள். ஆறவிட்டு, தோலை நீக்குங்கள். பின்னர், துருவியால் துருவிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வாழைக் காயில் சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அனைத்தையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான ருசியில் வாழைக்காய் தொக்கு தயார்!

    நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்.

    நன்றி:- அ.வி

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

    பிரிவுகள்:30 வகை தொக்கு, சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    ஆசை ஆசையாய் 30 வகை தோசை – கருப்பட்டி முதல் ஓட்ஸ் வரை


    தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை…

    தலைமுறை தாண்டியும் தவறாமல் நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும் ஒரு சில பழம் பாடல்களில் இதுவும் ஒன்று.

    இதற்குக் காரணம்… ‘தோசை’ என்கிற உணவின் மீது குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வமும்… ஆசையும்தான்!

    ”இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?” என்று கேட்டதுமே பெரும்பாலான குழந்தைகள் ஏகோபித்த குரலில் சொல்வது… ”தோசை” என்பதைத்தானே!

    “ம்ஹ¨ம்… எனக்கு மம்மு வேண்டாம்” என அடம்பிடிக்கும் குழந்தைகூட, “தோசை செஞ்சு தர்றேண்டா செல்லம்”னு கொஞ்சினா… அடுத்த நிமிஷமே சரண்டராகி விடுமே!

    ஆக, தோசைக்கு எப்போதுமே நூற்றுக்கு நூறு மார்க்தான்.

    இதோ… பாட்டியின் கருப்பட்டி தோசையிலிருந்து, ‘மாடர்ன் வேர்ல்டு’ கற்றுக் கொடுத்திருக்கும் பீட்சா தோசை வரை வகை வகையாக செய்து அசத்தி, ஆச்சரியப்படுத்தியிருக்கும் சமையல்கலை வல்லுநர் உஷாதேவி, “ஒவ்வொரு வகை தோசைக்கும் அரிசியை ஊற வைக்கறதுல இருந்து, தோசை மாவை கல்லுல வார்க்குறது வரைக்கும் நிறைய வரைமுறைகள் இருக்கு. அதையெல்லாம் சரியா செஞ்சாத்தான் தோசை ருசிக்கும்… கல்லுல ஒட்டிக்கிட்டு அடம் பிடிக்காம, அழகா பெயர்ந்து வரும்” என்று உத்தரவாதம் தருகிறார்.

    பிறகென்ன… எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியான தோசையை சுட்டுப்போட்டு போரடிக்காமல்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோசை என்று வீட்டில் ‘தோசைத் திருவிழா’வைக் கொண்டாடுங்க தோழிகளே!

    ரவா தோசை

    தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், வறுத்த ரவை – இரண்டரை கப், பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, ரவை, சீரகம், உப்பு, நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கல்லின் ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விட வேண்டும். இருபக்கமும் எண்ணெய் விட்டு, முறுகலாக வெந்ததும் எடுக்கவும். இதனை திருப்பிப் போடத் தேவையில்லை. இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

    மிக்ஸட் தோசை

    தேவையானவை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (கலந்தது) – ஒரு கப், பச்சரிசி – ஒன்றரை கப், புழுங்கலரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    தாளிக்க: பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.

    செய்முறை: அரிசி, பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி.. சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கி, மாவில் கொட்டவும். மாவை, தோசைக் கல்லில் மெல்லியதாக விட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு, பரிமாறவும்.

    அவியல், இதற்கு சூப்பரான சைட் டிஷ்!

    தோசை முறுகலாக வருவதற்கு… முதலில் அரிசியைப் போட்டு, பாதி அரைத்தவுடன் ஊற வைத்த பருப்புகளைப் போட்டு அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்காமல் உடனே செய்ய வேண்டும். மாவானது, இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    கோதுமை தோசை

    தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை பொடி, புதினா பொடி – தலா அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, எல்லா பொருட்களையும் போட்டு, தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து, சிறிது நேரம் வைத்திருக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவு எடுத்து சிறிது கனமாக இட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.

    தக்காளித் தொக்குடன், சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும்.

    பருப்பு தோசை (இனிப்பு)

    தேவையானவை: பாசிப் பருப்பு அல்லது பச்சைப் பயறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லம் (அ) பனை வெல்லம் – ஒன்றேகால் கப், ஏலக்காய் – 2, நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: பருப்பு, அரிசியை தனித் தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக கரகரவென கெட்டியாக அரைத்து, ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல் லம் அல்லது பனை வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி… மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். பொடித்த ஏலக்காய், தேங்காய் துருவல் போட்டு நன்கு கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு விட்டு, தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் (அ) எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும். விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து தோசையை எடுக்கும் சமயத்தில் தூவிப் பரிமாறலாம்.

    கேழ்வரகு தோசை

    தேவையானவை: கேழ்வரகு – கால் கிலோ, உளுத்தம்பருப்பு – கைப்பிடியளவு, பச்சரிசி – கால் கப், முருங்கைக் கீரை – கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: கேழ்வரகு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி ஒவ்வொன்றையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தனித்தனியாக நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, அவற்றை ஒன்றாக சேர்த்து உப்பு, முருங்கைக் கீரை சேர்த்து, நன்கு கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறலாம்.

    காரக்குழம்புடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்!

    சோள தோசை

    தேவையானவை: வெள்ளைச் சோளம், பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: வெள்ளைச் சோளம், பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தனித்தனியாக அரைக்கவும். பிறகு, எல்லா மாவையும் ஒன்றாக கலந்து, உப்பு சேர்க்கவும். இந்த மாவை, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில், எண்ணெய் தேய்த்து, ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் மாவை விடவும். இருபுறமும் எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள காய்கறி குருமா சூப்பராக இருக்கும்!

    ஜவ்வரிசி தோசை

    தேவையானவை: ஜவ்வரிசி – ஒரு கப், புழுங்கல் அரிசி – ஒன்றரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வப்போது இதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அரிசி நன்கு அரைபட்டவுடன்… ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.

    தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

    புதினா சட்னியுடன் சாப்பிட்டால், டேஸ்ட் கூடுதலாக இருக்கும்!

    சோயாபீன்ஸ் தோசை

    தேவையானவை: சோயாபீன்ஸ் – ஒரு கப் (10 மணி நேரம் ஊற வைக்கவும்), புழுங்கல் அரிசி – ஒரு கப் (ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்), வெந்தயம் – ஒரு டீஸ்பூன் (அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும்), உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: ஊறிய சோயாபீன்ஸை அரைக்கவும். பிறகு… அரிசி-வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து ஒரு இரவு முழுவதும் புளிக்க வைக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை விட்டு தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்!

    வெங்காய தோசை

    தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், புழுங்கல் அரிசி – 3 கப், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 4, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பச்சரிசி, உளுத்தம்பருப்பு, புழுங்கல் அரிசி ஆகியவற்றை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை ஒரு இரவு புளிக்க விடவும்.

    பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை ஊத்தப்பம் போல் வார்த்து, எண்ணெய் விட்டு, வெந்தவுடன் எடுக்கவும்.

    தேங்காய் சட்னியுடன் பரிமாறினால், சுவை தூக்கலாக இருக்கும்.

    செட் தோசை

    தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), உளுத்தம்பருப்பு – அரை கப் (இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் – அரை கப், கேரட் துருவல் – அரை கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி – தேவையான அளவு, உப்பு, நெய் (அ) எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பை தனித்தனியாக தோசை மாவு பதத்தில் அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, சிறிது கனமாக தோசை வார்க்கவும். அதன் மீது தேங்காய் துருவல் தூவி, மூடி போட்டு மூடவும். சுற்றிலும் நெய் (அ) எண்ணெய் விட்டு வாசனை வந்ததும், மூடியைத் திறந்து தோசையை எடுத்து தட்டில் வைக்கவும். இதேபோல் மற்றொரு தோசை செய்து, அதில் கேரட் துருவலைத் தூவி மூடி… வெந்தவுடன் மூடியை எடுக்கவும். அதன் மீது இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை தூவி, ஏற்கெனவே செய்து வைத்துள்ள தோசை மேல் வைக்க… செட் தோசை ரெடி!

    இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

    அவல் தோசை

    தேவையானவை: அவல், தயிர் – தலா 2 கப், பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், சாதம்-கையளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: அவலை சுத்தம் செய்து கழுவி, கடைந்த தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இரண்டு வகை அரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு, தயிரில் ஊற வைத்த அவலுடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும். அதனை 5 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, மாவை எடுத்து ஓரத்தில் இருந்து உள்பக்கம் வரும் வகையில் வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேக விடவும்.

    இதற்கு காரச் சட்னி அருமையான காம்பினேஷன்.

    குறிப்பு: மாலையில் தோசை செய்யத் திட்டமிட்டால், காலையிலேயே மாவை அரைத்து தயார் செய்துகொள்ள வேண்டும்.

    கம்பு தோசை

    தேவையானவை: கம்பு, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: கம்பு, புழுங்கல் அரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை தோசை மாவுக்கு அரைப்பது போல் தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

    தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் அபாரமாக இருக்கும்.

    ஓட்ஸ் தோசை

    தேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், அரிசி மாவு, வறுத்த ரவை, கோதுமை மாவு – தலா கால் கப், பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

    செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் ஓட்ஸ், அரிசி மாவு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, தண்ணீர் விட்டு ரவா தோசைக்கு மாவு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மெல்லியதாக மாவை வார்த்து, இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

    கீரை தோசை

    தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பாலக் கீரை – ஒரு கப், பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை வார்த்தெடுத்தால்… கீரை தோசை தயார்.

    ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!

    குறிப்பு: பாலக் கீரைக்கு பதிலாக, வல்லாரைக் கீரையும் சேர்க்கலாம்.

    பீட்ரூட் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், அரைத்த பீட்ரூட் விழுது – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: தோசை மாவுடன் பீட்ரூட் விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் ஊத்தப்பத்தை விட மெல்லியதாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

    சட்னி எதுவும் இல்லாமலே சாப்பிடலாம்.

    கேரட் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், கேரட் விழுது – அரை கப், பொடித்த காய்ந்த மிளகாய் – தேவைப்படும் காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: தோசை மாவில் கேரட் விழுது, பொடித்த காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் சிறிது கனமாக மாவை வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மாவில் சேர்த்தும் செய்யலாம்.

    இந்த தோசையை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்.

    தக்காளி தோசை

    தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், புழுங்கல் அரிசி – அரை கப், நறுக்கிய தக்காளி – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 6, வெங்காயம் – ஒன்று, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: இரண்டு அரிசியையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டு மாவையும் ஒன்றாக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு… தக்காளி, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு மற்றும் தக்காளி கலவையை ஒன்றாக்கி, உப்பு போட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு: இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.

    புதினா – கொத்தமல்லி தோசை

    தேவையானவை: தோசை மாவு – 2 கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி (சேர்ந்தது) – ஒரு கப், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பூண்டு – 2 பல்.

    செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். இதை தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து சுட்டெடுக் கவும்.

    இது, வித்தியாசமான சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

    பப்பாளி தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை மாவில் கலந்து… தோசைகளாக வார்த்தெடுக்கவும்.

    பனீர் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், பனீர் துருவல் – ஒரு கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 3, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: பனீர் துருவலுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு பாதி வெந்ததும் பனீர் கலவையை அதன் மேலே தூவி, சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தோசையை திருப்பி போட்டு, வெந்தவுடன் எடுத்து சூடாகப் பரிமாறவும்.

    மசாலா தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், உருளைக்கிழங்கு – கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், நறுக்கிய பச்சை மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், காரச்சட்னி – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன், பொட்டுக்கடலை மாவு தூவி, கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். மசாலா ரெடி!

    தோசைக் கல் சூடானதும், எண்ணெய் விட்டு, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, பாதி வெந்ததும் ஒரு பாதியில் காரச்சட்னி தடவி… மறு பாதியில் கிழங்கு மசாலா வைத்து, நெய் விட்டு மடிக்கவும். அதே போல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்யவும்.

    இந்த தோசையை சூடான சாம்பாருடன் பரிமாறினால் ருசியாக இருக்கும்.

    புளிப்பு-கார தோசை

    தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

    செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, கடலைப்பருப்பைத் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவற்றை ஒன்றாக்கி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும். கடைசியாக, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, 20 முதல் 30 நிமிடங்கள் வரை புளிக்க வைத்து, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.

    இதற்குத் தொட்டுக் கொள்ள சட்னி தேவையில்லை

    பருப்புப் பொடி தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், நெய் – தேவையான அளவு.

    பருப்புப் பொடிக்கு: உளுத்தம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எள் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 5 பல், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை – பருப்புப் பொடி: வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு போட்டு வறுத்து தனியே வைக்கவும். கடலைப்பருப்பைபையும் வறுத்து தனியே வைக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து தனியே வைக்கவும். எள், பூண்டு வறுத்து ஆற விடவும். ஆறியவுடன், வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். அதனுடன் வறுத்த எள், பூண்டு சேர்த்து சிறிது நேரம் சுற்றி எடுத்தால்… பருப்புப் பொடி ரெடி! ஆறியவுடன், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.

    தோசைக் கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை சற்று கனமாக விட்டு, பருப்புப் பொடியை மேலே தூவி அதன்மேல் சிறிதளவு நெய் விட்டு மூடி வைக்கவும். இதனை, திருப்பிப் போட வேண்டாம். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

    இந்த தோசைக்கு, சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சரியான சைட் டிஷ்!

    கல் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப்.

    செய்முறை: சூடான தோசைக் கல்லில், மாவை சற்று கனமாக விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, மிதமான தீயில் வேக விடவும். அப்போதுதான் ஓரத்தில் முறுகலாகவும், நடுவில் ‘மெத்’தென்றும் இருக்கும். இதனை ஒரு பக்கம் மட்டுமே வேக வைக்க வேண்டும்.

    எந்த சட்னி வைத்து பரிமாறினாலும் சுவையாக இருக்கும்.

    பீட்சா தோசை

    தேவையானவை: இட்லி மாவு – 2 கப், நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெட்சப் – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடமிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் போட்டு வதக்கி… தக்காளி, சிறிதளவு சீஸ் துருவல் சேர்த்து இறக்கவும்.

    தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, சற்று தடிமனாக மாவை வார்த்து மூடி வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து.. தோசை மீது தக்காளி கெட்சப் விட்டு, வதக்கிய காய்கறியைப் பரப்பி, கடைசியாக வெண்ணெய், சிறிதளவு சீஸ் துருவல் ஆகியவற்றைத் தூவி, வாசனை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

    நெய் தோசை

    தேவையானவை: புழுங்கல் அரிசி – கால் கிலோ, பச்சரிசி – 100 கிராம், உளுந்து – 75 கிராம், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து-வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு, நன்கு கழுவி தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு போட்டு 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க விடவும்.

    தோசைக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும். வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாகப் பரிமாறவும்.

    தோசை வெந்தவுடன், அதன் நடுவிலிருந்து ஓரம் வரை தோசை கரண்டியால் நீளவாக்கில் வெட்டி (ஒரு பக்கம் மட்டும்), மடித்தால், ஹோட்டல்களில் நெய் தோசை கொடுப்பது போலவே, வீட்டிலும் கோன் வடிவில் குழந்தைகளுக்கு பரிமாறலாம்.

    இந்தத் தோசைக்கு எந்த வகை சட்னியும் சுவை சேர்க்கும்.

    காளான் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், காளான் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்புப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு – 2 பல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கவும். நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள், குழம்பு பொடி, உப்பு சேர்த்து… பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்து நறுக்கிய காளான் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி கொஞ்ச நேரம் மூடி வைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் சீரகத்தூள் தூவி கிளறி இறக்க… காளான் ரெடி!

    தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, தோசை வார்த்து, காளான் கலவையை, அதன் மீது வைத்து, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், தோசை தயார். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

    முட்டைகோஸ் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், நறுக்கிய முட்டைகோஸ் – கால் கிலோ, காய்ந்த மிளகாய் – 6, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

    செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு… வெங்காயம், முட்டைகோஸ், கிள்ளிய காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கவும். ஆறியவுடன், மிக்ஸியில் சேர்த்து கெட்டியாக அரைக்க… முட்டைகோஸ் மசலா தயார்!

    கல்லில் எண்ணெய் தேய்த்து, தோசை மாவை மெல்லியதாக வார்த்து, முட்டைகோஸ் மசாலாவை அதன்மேல் தடவி, சிறிது நேரம் வேகவிட்டு, சூடாகப் பரிமாறவும்.

    வெஜிடபிள் மிக்ஸ் தோசை

    தேவையானவை: தோசை மாவு – இரண்டு கப், கேரட், பீன்ஸ், பட்டாணி, நறுக்கிய காலிஃப்ளவர் (கலந்தது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 5, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, வெங்காயம்-2, காரச்சட்னி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: சுத்தம் செய்து நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் முந்திரி, திராட்சை, சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வேக வைத்த காய்கறிகள் என ஒவ்வொன்றாகச் சேர்த்து, தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை மெல்லியதாக வார்க்கவும். லேசாக வெந்ததும், கெட்டியான காரச்சட்னியை கொஞ்சம் போல தோசை மீது தடவி, நடுவில் காய்கறி கலவையை வைத்து சுருட்டவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

    கருப்பட்டி தோசை

    தேவையானவை: புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கருப்பட்டி – கால் கிலோ, தேங்காய் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், சுக்குப்பொடி – அரை டீஸ்பூன், வறுத்து, ஒன்றிண்டாகப் பொடித்த வேர்கடலை – ஒரு கப்.

    செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, அரைத்து ஒன்றாகக் கலக்கவும். பிறகு, 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த கருப்பட்டி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு, கரைத்து வடிகட்டவும். அந்தக் கரைசலை லேசாக கொதிக்க வைத்து, ஆற வைத்து.. தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி சேர்த்துக் கலந்து தோசை மாவில் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை கனமாக வார்த்து, பொடித்த வேர்க்கடலையை அதன் மீது போட்டுப் பரப்பி, மூடவும். தீயை மிதமாக வைத்து, வேகவிட்டு எடுக்கவும். இதேபோல் ஒவ்வொரு தோசையையும் தயார் செய்து பரிமாறவும்.

    -தொகுப்பு: நாச்சியாள், படங்கள்: வி.செந்தில்குமார்

    நன்றி:- சமையல்கலை வல்லுநர் உஷாதேவி

    நன்றி:- அ.வி

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

    நோன்புக் கஞ்சி செய்முறை – அபூஅஸீலா

    ஓகஸ்ட் 13, 2010 1 மறுமொழி

    ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

    மாலையில் இஃப்தார் எனப்படும்  நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.

    தேவையானவை:

    பச்சரிசி    = 500 கிராம்
    பூண்டு    = 1 முழு பூண்டு
    கடலைப்பருப்பு   = 50 கிராம்
    வெந்தயம்   = 2 தேக்கரண்டி
    இஞ்சி    = இருவிரல் அளவு
    சீரகப்பொடி   = 2-3 தேக்கரண்டி
    மஞ்சள் பொடி   = 1 டீ ஸ்பூன்
    மிளகாய்பொடி  = அரை டீ ஸ்பூன்
    உப்பு    = தேவையான அளவு
    பெரிய வெங்காயம்  = இரண்டு
    கேரட்    = பாதி
    தக்காளி    = 2 பழங்கள்
    சமையல் எண்ணை  = 50 மில்லி
    பச்சை மிளகாய்   = 2-3 (காம்பு நீக்கியது)
    புதினா+மல்லி   =  தலா ஒரு கொத்து
    எலுமிச்சை பழம்   =  ஒன்று
    தேங்காய்ப் பால்   = 300 மில்லி
    மட்டன் எலும்பு/கறி  = 100 கிராம்

    சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:

    1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி,வெந்தயம்,கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

    2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு+மஞ்சள்பொடி+மிளகாய்பொடி கலந்து தயாராக வைக்கவும்.

    3) தக்காளி,வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக/ஸ்லைசாக நறுக்கவும்.

    4) புதினா+மல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

    5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    6) எஞ்சிய இஞ்சியையும் பூண்டையும் தோல்நீக்கி மிக்ஸியிலிட்டு பேஸ்ட் ஆகும்படி அரைக்கவும்.

    செய்முறை:

    7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.

    8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.

    9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.

    11) வதங்கும்போது சீரகப் பொடி+மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சட்டிக்குள் இறக்கவும்

    12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.

    13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.

    14) கொதி வந்தபிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    15). கொதிக்கும்போது பாதியளவு எலுமிச்சை சாறுபிழிந்து சட்டியில் இடவும்.

    16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.

    18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். நோன்புக் கஞ்சி செய்முறை ஊருக்குஊர் மாறும் என்றாலும் சுவை ஒன்றே. சுமார் 4-6 பேருக்குத் தேவையான நோன்புக் கஞ்சி செய்முறையை நானறிந்தவரை ஓரளவு தொகுத்துள்ளேன். தாய்மார்களின் கைப்பக்குவத்துடன் போட்டியிட முடியாது என்றாலும் பேச்சிலர்களுக்கு ஏற்றவகையில் முடிந்தவரை புரியும்படி விளக்கியுள்ளேன் என்று நம்புகிறேன்.

    நன்றி:- அபூஅஸீலா

    மற்ற சமையல் படைப்புக்கள்

    அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

    30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

    30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

    கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

    30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

    PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

    PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

    PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

    PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

    PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

    பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

    பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை