தொகுப்பு

Archive for the ‘வரலாறு’ Category

அன்னை ஆயிஷா ரலி أم المؤمنين عائشة رضي الله عنها


அன்னையின் சிறப்புகள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா (ரழி) ஆவார்கள். திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்;பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள். இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.

மிகச் சிறந்த அறிவாளியாகவும், அதிக ஞாபகசக்தியும் பெற்றுத் திகழ்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மிக நீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக, அதிகமான நபிமொழிகளையும் நமக்கு அறிவிப்புச் செய்திருக்கின்றார்கள். இஸ்லாமிய பிக்ஹுச் சட்டங்கள், ஷரீஅத் சட்டங்கள் இன்னும் இஸ்லாமியச் சட்டங்களின் பல கிளைகளிலும் அன்னையவர்களுக்கு இருந்த தெளிவான ஞானத்தின் மூலமாகவும், அதன் விளக்கங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டிருந்ததன் காரணமாக அவர்களுடன் அதிக நேரங்கள் இணைந்திருந்ததன் காரணமாக அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைகள், இன்னும் நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த விளங்கிய அன்னையவர்கள், அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை.

அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக இறைவனின் ஸலாமைப் பெற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலரிதழ்களின் மூலமாக சொர்க்கம் உண்டென நன்மாராயத்தைப் பெற்றுக் கொண்டவர்களுமாவார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் தான் கழிந்தது. அதிலும், அன்னையவர்கள் வாழ்ந்த அந்த வீடு தான் இறுதித் தூதர் (ஸல்) அவர்களின் மண்ணறையாகவும், நெடுதுயில் கொள்ளும் இடமாகவும் ஆனது. அன்னையவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் எப்பொழுதும் அவர்கள் வாழ்ந்த அந்த இல்லம் வானவர்களால் எப்பொழுதும் சூழப்பட்ட நிலையிலும், இறைவனின் சாந்தியும், சமாதானமும், அருளும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடிய, புகலிடமான மதீனாவாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்த உலகத்தில் தோன்றிய, இன்னும் தோன்றவிருக்கின்ற பெண்களில் மர்யம் பின்த் இம்ரான் (அலை) அவர்களைத் தவிர, மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த அருட்கொடைகளுக்கு உரித்தானவராகத் திகழ்கின்றார்கள்.

வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டில் வைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கனவில் அன்னையவர்களின் உருவத்தைக் காண்பித்து, இவர் தான் இந்த உலகிலும், மறு உலகிலும் உங்களுக்கு மனைவியாக வாய்க்கப் போகின்ற பெண்மணி என்ற நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்டவர்களும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் கன்னிப் பெண்ணாக இருந்த நிலையில் மணமுடிக்கப்பட்டவரும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் கழிந்தது. இன்னும் அன்னையவர்கள் வசித்த இல்லத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அன்னையவர்களும் ஒன்றாக இருந்த பல சமயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக வஹி அருளப்பட்ட நற்பெயருக்கு உரித்தானவரும்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழர், உற்ற நண்பர் அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் மகளும்,

அன்னையவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, அத்தகைய களங்கத்திற்கு சொந்தக்காரரல்ல என்று இறைவனே சாட்சியமளித்து திருமறை வசனத்தை இறங்கிய நற்பேற்றுக்கும் உரித்தானவரும்,

முஸ்லிமாகவே பிறந்து, முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டவரும், மிகவும் பரிசுத்தமான சூழ்நிலையில் வார்த்தெடுக்கப்பட்டவரும்,

வல்லோனானாம் அல்லாஹ் தனது மன்னிப்பையும், பேரரருட் கொடைகளையும் அன்னைக்கு வழங்க இருப்பதாக வாக்குறுதி அளித்த அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொண்டவர்களாவார்கள்.

பிறப்பும் வளர்ப்பும், நினைவாற்றல்

ஆயிஷா (ரழி) அவர்களின் தாய் வழியும், தந்தை வழியும் மக்காவின் மிகச் சிறந்த பிரபலமான நன்கறியப்பட்ட குலமாக இருந்த காரணத்தால், மக்காவின் செழிப்பு மிக்க குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்தார்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் (ரழி), தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் (ரழி) அவர்களாவார்கள். உம்மு ருமான் (ரழி) அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல் கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள். இவருக்கும் அபுபக்கர் (ரழி) அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா (ரழி) ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா (ரழி) அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தையாரான அபுபக்கர் (ரழி) அவர்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் இறைவன் மிகவும் போற்றி சிலாகித்துக் கூறியுள்ளான். அபுபக்கர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில், மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்த போது, அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட தூதர் (ஸல்) அவர்களின் உயிரை மதித்தவரும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழருமாக ஆயிஷா (ரழி) அவர்களின் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்கள் இருந்த காரணத்தினால், அவரது புகழுக்கு ஏற்றவாறு ஆயிஷா (ரழி) அவர்களின் புகழும் மிகவும் கீர்த்தி மிக்கதுதான். இன்னும் ஆயிஷா (ரழி) அவர்களின் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பின்னால் கூட தன்னுடைய ஆருயிர்த் தோழரான இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் அடக்கம் செய்யப்பட்ட நற்பேறுக்கு உரித்தானவராகவும் திகழ்ந்தார்கள். இன்னும் சுவனச் சோலைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து நுழையும் பாக்கியம் பெற்றவர்களுமாவார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் ஐந்து வயதே நிரம்பிய சிறுமியாக இருந்த நேரமது. அப்பொழுது பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது சிறுமிகளுக்கே உரிய பொழுது போக்கு மற்றும் விளையாட்டு என்ற அடிப்படையில், ஆயிஷா (ரழி) அவர்களும் இதில் விலக்காக இருக்கவில்லை, அக்கம் பக்கத்திலுள்ள சிறுமிகளுடன் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

ஒரு சமயம், ஆயிஷா (ரழி) அவர்கள் இறக்கை உள்ள குதிரையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில்,

என்ன ஆயிஷாவே! உங்களுடைய குதிரையில் இறக்கை முளைத்துள்ளது. குதிரைக்கு இறக்கை இருக்காதல்லவா என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிண்டலாகக் கேட்டார்கள். துடிப்பும், வேடிக்கையும், நகைச்சுவை உணர்வும் கொண்ட சிறுமியாக இருந்த ஆயிஷா (ரழி) அவர்கள், அந்த இளம் வயதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கிண்டலான பேச்சுக்கு இவ்வாறு பதில் கூறினார்கள்.

ஆம்! இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களிடம் இருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்ததல்லவா! என்று பதில் கூறினார்கள்.

மேற்கண்ட சம்பவம் மூலம், ஆயிஷா (ரழி) அவர்கள் புத்திக் கூர்மையுள்ள, கேள்விகளுக்கு உடனுக்குடன் தக்க பதில் கொடுக்கக் கூடிய திறன், மார்க்கத்தைப் பற்றிய அறிவு, மற்றும் வரலாறு சம்பந்தமான அறிவு ஆகியவற்றை அந்த இளம் வயதிலேயே பெற்றிருந்த பாங்ககைக் காண முடியும்!

இன்னும் கம்ப்யூட்டர் போல மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் எந்த சம்பவத்தையும் மறந்ததாக குறிப்புகள் இல்லை. அவர் எதனையும் மறந்து விட்டார் என்று கூறுவதற்குக் கூட ஆதாரங்களில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, புறப்பட்ட வேளையில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு எட்டு வயது தான் நிரம்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடந்த சின்னச் சின்ன விசயங்களைக் கூட அன்னை அவர்கள் ஞாபகம் வைத்திருந்தார்கள். முதன் முதல் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்று மதீனாவில் உதயமான அந்த வேளையில் நடந்த அத்தனை வரலாற்றுச் சம்பவங்களையும் அன்னை அவர்கள் மிகவும் ஞாபகப்படுத்தி வைத்திருந்தார்கள்.

மணவாழ்க்கை

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக அவர்கள் வாழ்க்கைப் பட்ட பொழுது, அவர்களுக்கு ஒன்பது வயது தான் நிரம்பி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவளித்து அரவணைத்துக் கொண்டிருந்த அன்னை கதீஜா (ரழி) அவர்களின் பிரிவினால் அண்ணலார் முஹம்மது (ஸல்) அவர்கள் வாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்தத் திருமணம் நடந்தது. அன்றைய அரேபியாவின் இரு பெரும் தலைமைக் குலங்களாகத் திகழ்ந்த கதீஜா (ரழி) மற்றும் அபூதாலிப் ஆகியோர்கள், மக்காவின் அத்தனை எதிர்ப்புகளிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய இருவரும் ஒரு சேர இறையடி சேர்ந்து விட, அந்த இக்கட்டான தருணங்களில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனிமையில் விடப்பட்டது போலவும், எதையோ இழந்து விட்டது போலவும் மிகவும் கைசேததுக்குரியவராக இருந்தார்கள். இன்னும் இவர்கள் இருவரும் இறந்ததன் பின்னர் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் மிகவும் கொடிய கொடூரமான கால கட்டத்தை மக்காவில் சந்திக்க ஆரம்பித்தார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தில் இணைந்த பொழுது, அவர்கள் மிகப் பெரிய அரண்மனை வாழ்க்கையை வாழவில்லை. மிகப் பெரிய அறையில் தங்;க வைக்கப்படவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்கள் வசித்த இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகச் சிறிய அறையில் தான் தனது மண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது. மழை நீர் வீட்டினுள் விழாமல் இருப்பதற்கு துணியால் மூடப்பட்டிருந்தது. இன்னும் அந்த அறைக்கு ஒரே ஒரு கதவு தான் இருந்தது. அந்தக் கதவு என்றுமே மூடப்பட்டதுமில்லை. அந்தக் கதவில் மறைப்புக்காக ஒரு துணி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அறையை அடுத்து ஒரு அறை சற்று உயரமாக இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்பிக்கையாளர்களின் தாய்மார்களை விட்டும் ஒதுங்கி இருந்த கால கட்டத்தில் இந்த அறையில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனித்திருந்தார்கள். அறையின் உயரம் ஒரு ஆள் நிற்கும் அளவு உயரம் தான் இருந்தது. அந்த அறையில் பாய் ஒன்றும், தட்டு ஒன்றும், தோளால் ஆன தண்ணீர்ப் பை ஒன்றும், மரச் சிறாய்கள் வைத்து தைக்கப்பட்ட தலையணை ஒன்றும் தான் அந்த வீட்டின் சொத்தாக இருந்தது. இதனைத் தவிர்த்து, இந்த உலக வாழ்வை ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள் எதுவும் கிடையாது, இன்னும் மறுமையை ஞாபகப்படுத்தும் பொக்கிஷங்கள் தான் அங்கே காணப்படக்கூடியதாக இருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களை விரும்பவில்லை. மாறாக, மரணத்தின் பொழுது ஏழையாகவே மரணிக்க விரும்பினார்கள். இன்னும் உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளிலே, ஏழைகளுடனும், தேவையுடையவர்களுடனுமே எழுப்பப்பட வேண்டும் என்று தான் அவர்களது பிரார்த்தனையும் இருந்தது.

அன்னையவர்களின் தயாள குணம்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது மற்றும் அவர்களது தேவைகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பாளராக பிலால் (ரழி) அவர்கள் இருந்தார்கள். இன்னும் அன்னையவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளைக் கூட பிலால் (ரழி) அவர்களிடம் பெற்றுக் கொண்டு, தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் வசதி கூட அவர்களுக்கு இருந்தது. இன்னும் அன்றைய அரேபியாவின் முழு ஆட்சிப் பொறுப்பும் இஸ்லாத்திடம் இருந்து கொண்டிருந்தது. இஸ்லாமிய அரசின் நிறைசேரி என்றழைக்கக் கூடிய நிதியமைச்சகத்துக்கு நாடெங்கிலும் இருந்து பொருள்களும், செல்வங்களும், தானியங்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால், மிகப் பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சொந்தக்காரராக இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த தினத்தன்று, அவர்களது வீட்டில் சமைக்கக் கூடிய தானியங்கள் இல்லாத நிலை தான் இருந்தது.

இந்த உதாரணமிக்க வாழ்வை ஆயிஷா (ரழி) அவர்கள் தங்களது இறுதி நாட்கள் வரை கூடக் கடைபிடித்து வாழ்ந்தார்கள். தனக்கு உதவிப் பணமாக நிதியமைச்சகத்திலிருந்து வரும் பணத்தை ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் செலவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்களது இல்லத்துக்கு வந்து திரும்பும் எந்த ஏழையும் வெறுங் கையுடன் திரும்பியதில்லை.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து தினமும் நிதியமைச்சுக்கு பொருள்களும், செல்வங்களும் குவிந்து கொண்டிருந்த நிலையில், அன்னையவர்கள் நினைத்திருந்தால் மிகச் சிறந்த செல்வச் செழிப்பு மிக்க வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வாழ்வை, தனது இறுதிக் காலம் வரைக்கும் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள்.

அப்துல்லா பின் ஜுபைர் (ரழி) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) மற்றும் அன்னையின் உடன் பிறந்தாளான அஸ்மா (ரழி) ஆகிய இருவரது கொடைத்தன்மையை இங்கு நமக்கு நினைவு இவ்வாறு நினைபடுத்துகின்றார்கள்.

அவர்கள் பெறுகின்ற அனைத்து செல்வங்களையும் அல்லாஹ்வின் பெயரால் தானம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்தவுடன் அவற்றை தேவைப்படுகின்ற ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கக் கூடியவர்களாகவும், அதே நேரத்தில் அஸ்மா (ரழி) அவர்கள் அவ்வப்பொழுது சேர்ந்த பணத்தை தானமிடக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். அஸ்மா (ரழி) அவர்களோ, தான் கடன் வாங்கும் நிலையில் இருந்து கொண்டிருக்க நிலையில் கூட, யாராவது எதையாவது கேட்டு வந்து விட்டால் தன்னிடம் இருப்பவற்றைக் கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்பொழுது, நீங்களே கடன் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது, எதற்கு பிறருக்கு வழங்குகின்றீர்கள் என்று பிறர் கேட்கும் பொழுது, திருப்பிச் செலுத்துகின்ற எண்ணத்துடன் வாங்கும் கடனை அடைப்பதற்கு அல்லாஹ் உதவி புரிவதாக வாக்களித்திருக்கின்றான் அல்லவா! என்று கூறுவார்களாம். இன்னும் நான் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒரு சமயம், தன்னிடம் இருந்த 70 ஆயிரம் திர்ஹம்களை ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் அன்னையவர்கள். அப்பொழுது அவர்களது கைத்துண்டு தான் அவர்களிடத்தில் மிச்சமிருந்தது. இன்னும் ஒரு மாலைப் பொழுதில் அவர்களுக்கு ஒரு லட்சம் தினார்களை முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அதனை அப்பொழுதே தானமாக மக்களுக்கு வழங்கி விட்டார்கள். அப்பொழுது, அவர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருத்தி, அன்னையவர்களே..! நீங்கள் இன்றைக்கு நோன்பு வைத்துள்ளீர்கள், உங்களுக்காக எதையாவது ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது, நீங்கள் எனக்கு ஏன் இதனை முன்பே தெரியப்படுத்தவில்லை என்று தான் கேட்டார்கள். இன்னும் ஒரு முறை அப்துல்லா பின் ஜுபைர் (ரழி) அவர்கள் ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். அது வந்த வேகத்தில் தானமாக வழங்கப்பட்டு விட்டது அன்னையவர்களால்..!

ஒரு நாள் அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழைப் பெண் தானமாக எதனையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்னையவர்களின் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அன்னையவர்கள் தனது பணிப் பெண்ணை நோக்கி, நம்மிடம் இருக்கின்ற அந்த துண்டு ரொட்டியை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு கூறினார்கள். அந்தப் பணிப் பெண்ணோ, அன்னையே..! நீங்கள் நோன்பு திறப்பதற்கு இந்த ரொட்டித் துண்டை விட்டால் நம்மிடம் எதுவும் கிடையாது என்று கூறினார்கள். அதற்கு அன்னையவர்கள், அவளோ பசியென்று நம் வீடு தேடி வந்து நிற்கின்றாள். முதலில் அவளது பசியைப் போக்குவோம். மாலையில் நம் பசியைப் போக்க இறைவன் வேறு எதாவதொரு ஏற்பாட்டைச் செய்வான் என்று கூறினார்கள். அன்றைய மாலைப் பொழுதில், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து அன்னைக்காக சமைத்த இறைச்சித் துண்டு வந்திருந்தது. அப்பொழுது, பார்த்தாயா பெண்ணே..! நாம் காலையில் தானம் கொடுத்ததை விடச் சிறந்த உணவை அல்லாஹ் நமக்காக ஏற்பாடு செய்து தந்திக்கின்றான் என்று கூறினார்கள். முஆவியா (ரழி) அவர்களுக்கு விற்ற வீட்டில் தான் அன்னையவர்கள் இருந்தார்கள், இன்னும் தனக்கு வருகின்ற பரிசுப் பணம், உதவிப் பணம் ஆகியவற்றை அல்லாஹ்வின் நேசத்திற்காக அனைத்தையும் தானம் வழங்;கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இன்னும், தனது அக்காள் அஸ்மா (ரழி) அவர்களது மகனான அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்கள் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்களும் தனது சிறிய தாயார் மீது அளப்பரிய பாசத்தை வைத்திருந்ததோடு, அவர்களின் தேவையை நிறைவு செய்து உதவி வந்தார்கள்.

ஒருமுறை, அன்னையவர்கள் மித மிஞ்சி தான தர்மங்கள் வழங்கி வருவதையிட்டு, அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்கள் ஏதோ ஒரு விமர்சனமான வார்த்தைகளை, அன்னையவர்களைப் பற்றிக் கூறி விடுகின்றார்கள். அதனைக் கேட்ட அன்னையவர்கள் மிகவும் கோபம் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் எனது பொருள்களைச் செலவழிப்பதை விமர்சனம் செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் இந்தப் பூமியில் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அவர் எவ்வாறு இப்படிப்பட்ட விமர்சனத்தைச் சொல்லலாம். இனி ஒரு போதும் நான் அப்துல்லா பின் சுபைர் (ரழி) அவர்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டார்கள். பின் அவர்களது கோபம் தணிந்தது. தனது தவறை நினைத்து, அதற்குப் பிராயச்சித்தமாக சத்தியமிட்டதற்குப் பகரமாக பல அடிமைகளை விடுதலை செய்தார்கள்.

இன்னும் அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள், எளிதில் அவர்களது கண்கள் கண்ணீரைச் சொறிந்து விடும் அளவுக்கு இளகிய மனதுடையவர்கள். ஒரு சமயம் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் அன்னையின் வீட்டு வாசலில் தானம் கேட்டு வந்து நின்றார். அப்பொழுது அன்னையவர்களிடம் மூன்று பேரீச்சம் பழங்கள் தான் இருந்தது. அதனை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார்கள், அதனைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் – தனது குழந்தைகளுக்கு முறையே ஒரு பழத்தைக் கொடுத்து விட்டு, ஒன்றைத் தானும் வாயில் போட்டுக் கொண்டாள். அதில் ஒரு குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட பழத்தை மிக வேகமாகத் தின்று முடித்து விட்டு, தாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் வாயையே பார்த்துக் கொண்டிருந்தது. தனது குழந்தைகளின் அகோரப் பசிப் பிணியை அறிந்த அந்தத் தாய், தனது வாயிலிருந்த பழத்தை வெளியில் எடுத்து, இரு குழந்தைகளுக்கு ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொடுத்தாள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரழி) அவர்களால் தாங்க இயலாமல், அழுதே விட்டார்கள். அவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார்கள்.

களங்கம் சுமத்தியவர்களை இனங்காட்டினான் இறைவன்

அன்னையவர்களது வாழ்வு பரிசுத்தமானது, இறையச்சம் மிகுந்தது, இருப்பினும் அவர்கள் கூட நயவஞ்சகர்களின் சதித் திட்டத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை. ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் கதீத் என்ற இடம் நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது படையணியை நடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். பனூ முஸ்தலக் என்ற கோத்திரத்தாருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது படைக்கும் இடையே சிறியதொரு போர் ஒன்று நடந்தது. இந்தக் குறிப்பிட்ட போரின் பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பல நயவஞ்சகர்கள் சேர்ந்து வந்திருந்தார்கள். அந்தப் போரின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது படை மரீஸா என்ற ஆற்றின் கரையை அடைந்த பொழுது, அங்கு சிறிது தங்கி இளைப்பாறி விட்டுச் சென்றார்கள்.

அந்தப் போரின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த ஆயிஷா (ரழி) அவர்களுக்கு 19 வயது நிரம்பியிருந்தது, இன்னும் அவர்கள் மிகவும் ஒல்லியாக இளைத்துமிருந்தார்கள். அப்பொழுது, தனது அக்காளான அஸ்மா (ரழி) அவர்களிடமிருந்து ஒரு கழுத்து மாலை ஒன்றை இரவல் வாங்கி அணிந்து வந்திருந்தார்கள். பாலைவன நடுவே படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அன்னையவர்கள் ஒதுக்குப்புறமான இடம் தேடிச் சென்று விட்டார்கள். திடீரென தான் அணிந்திருந்த கழுத்து மாலையைக் காணாத அன்னையவர்கள், தான் வந்த வழியில் எங்கேயேனும் விழுந்திருக்கக் கூடும் என்று நினைத்து, வந்த வழியே திரும்பி தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள், தனது இருப்பிடத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது, படைகள் அந்த இடத்தை விட்டும் சென்று விட்டிருந்தன.

அந்தக் காலப் பழக்கம் எவ்வாறிந்ததென்றால் பெண்கள் ஆண்களிடமிருந்து தனித்து வைக்கப்படுவார்கள். இன்னும் பெண்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்யும் பொழுது, அவர்கள் பெட்டி போன்ற பரிகையில் அமர்ந்து பயணம் செய்வார்கள். அந்தப் பெட்டியில் திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கும். இதனால் ஆண்கள் அவர்களைப் பார்ப்பது தவிர்க்கப்பட்டிருந்தது. படைகள் கிளம்பும் பொழுது, ஒட்டகத்தை ஓட்டி வரக் கூடியவர்கள், பெண்கள் உட்கார்ந்திருக்கக் கூடிய அந்தப் பெட்டியை ஒட்டகத்தின் மீது தூக்கி வைக்க, ஒட்டகம் பின் எழுந்து தனது பயணத்தைத் துவங்கும். அது போல ஆயிஷா (ரழி) அவர்கள் அமர்ந்து வந்த பெட்டியும் தூக்கி வைக்கப்பட்டது. ஆனால் ஆயிஷா (ரழி) அப்பொழுது, மிகவும் இளைத்திருந்த காரணத்தால், பெட்டியைத் தூக்கி வைத்தவர்களுக்கு, உள்ளே ஆள் இருக்கின்றதா? அல்லது இல்லையா என்பதை அறிய இயலாதிருந்தது. எனவே, ஆள் இல்லாமலேயே பெட்டி தூக்கி வைக்கப்பட்டு, படைகள் அந்த இடத்தை விட்டும் நகர்ந்து வெகு தூரம் சென்று விட்டன. இந்த நிலையில், கழுத்து மாலையைத் தேடி விட்டு, திரும்பி வந்த அன்னையவர்கள் படையைக் காணாது, தன்னைக் காணாது மீண்டும் அவர்கள் தன்னை இதே இடத்திற்கு தேடி வருவார்கள் என நினைத்து, பயப்படாமல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டார்கள்.

அன்றைய தின வழக்கப்படி, படைகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்து வருவதற்காகவே ஒருவரை நியமித்து வைத்திருப்பார்கள். இவர் படைகள் கிளம்பிச் சென்றவுடன் மிகவும் தாமதமாக அந்த இடத்தை விட்டும் கிளம்பி வருவார். அவ்வாறு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் தான் சஃப்வான் பின் முஅத்தல் (ரழி) என்பவர். இவர் படைகள் எதனையும் விட்டுச் சென்றிருக்கின்றார்களா என்று அந்த இடத்தில் தேடிக் கொண்டு வரும் பொழுது, ஹிஜாப் அணிந்த நிலையில் ஒரு உருவம் ஒன்று, அங்கு தரையில் படுத்துக் கிடப்பதைக் காண்கிறார்கள். தரையில் படுத்துக் கிடப்பது பெண் என்று தெரிந்ததும், சஃப்வான் (ரழி) அவர்கள் சற்று ஒதுங்கி நின்று, தனது ஒட்டகத்தை ஓட்டும் தொணியில் குரல் கொடுக்கின்றார்கள். அந்தக் குரலைக் கேட்டு படுத்திருக்கும் பெண் எழும்பட்டும் என்று தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். ஒட்டகத்தை அதட்டும் குரழின் ஒலியைக் கேட்ட அன்னையவர்கள் விழித்தெழுந்தார்கள். பின் அந்த ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து உட்கார, சஃப்வான் (ரழி) அவர்கள் அந்த ஒட்டகத்தை கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

அன்றைய தினம் மதிய வேளையில் இன்னொரு இடத்தில் படையணி தங்கக் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த பொழுது, ஆயிஷா (ரழி) அவர்கள் சஃப்வான் (ரழி) அவர்களுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இன்னும் அனைத்து படைவீரர்கள் முன்னிலையிலும் அந்த ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினார்கள். இந்தக் காட்சி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருந்த நயவஞ்சகர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி, அவர்கள் அனைவரும் அப்துல்லா பின் சலூல் என்ற நயவஞ்சகனின் தலைமையில் தங்களது சதித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இவனுக்கென்றே தனியானதொரு குணம் உண்டு. அந்த கேடு கெட்ட குணத்தை வைத்து, சந்தேகத்தையும், கிசுகிசுக்களையும் ஆயிஷா (ரழி) அவர்கள் மீது கதை கட்டி, முஸ்லிம் படைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்தான்.

இந்த கிசுகிசு மதீனாவின் அனைத்து வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த கிசுகிசுவில் ஹஸன் பின் தாபித், ஹம்னா பின் ஜஹ்ஸ், மற்றும் மஸ்தா பின் அதாதா ஆகியோரும் முன்னணியில் இருந்தார்கள். அந்தக் கிசுகிசுவில் ஆயிஷா (ரழி) அவர்களின் கற்பின் மீது களங்கத்தைச் சுமத்தி பேசப்பட்டது (இறைவன் பாதுகாப்பானாக!). நயவஞ்சகர்கள் தங்களது நயவஞ்சகச் சேற்றை அன்னை மீது வாறி இறைத்த வண்ணமிருந்தார்கள். மேலும், இந்த கிசுகிசுக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது காதிற்கும் எட்டியது. தனது குடும்பத்துப் பெண், இன்னும் தனது பிரியமான மனைவியின் மீது களங்கம் சுமத்தப்படுத்திப் பேசப்படுவது, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகமான சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் தன்னைச் சுற்றி நடக்கின்ற இந்த அநாகரீக செயல்கள் எதனையும் அறியாதவர்களாக மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஆயிஷா (ரழி) தனது கடமைகளைச் செய்து வந்தார்கள்.

ஒருநாள் இரவு, வயதான மஸ்தா பின் அதாதா (ரழி) அவர்களுடன் ஆயிஷா (ரழி) அவர்கள் தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் மதீனாவின் ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்ற பொழுது, தனது மகனின் கேடு கெட்ட செயலை மனதில் வைத்துக் கொண்டு, தனது மகனைக் குறித்து சாபமிட்டுக் கொண்டே வருகின்றார். அதனைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள், ஏன் நீங்கள் உங்கள் மகன் மீது சாபமிடுகின்றீர்கள், அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட நற்பேற்றுக்கும் உரியவராவார், நீங்கள் எச்சரிக்;கையுடன் உங்கள் மகனைப் பற்றிப் பேசுங்கள் என்று கூறுகின்றார்கள். தனது மகனின் இழி செயலைக் குறித்து விசனப்பட்ட அந்தத் தாய், இந்தப் பிரச்னையை ஆயிஷா (ரழி) அவர்களது காதுகளுக்குக் கொண்டு செல்கின்றார்.

தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவைகள் குறித்து எதுவுமே அறியாதிருந்த அன்னையவர்கள், தனது காதில் விழுந்த அந்த செய்தியைக் கேட்டவுடன், தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவேலைகளை அறிந்தவுடன் அன்னையால் தாங்க முடியவில்லை. அவர்களது முகம் வெளிறிப் போனது. விரைவாக வீடு வந்து சேர்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தனது தாய், தந்தையரைப் பார்த்து வருவதாகக் கூறி அனுமதி பெற்றுக் கொண்டு, நேரே தனது தாய் வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள். மதீனாவில் உலவி வந்த இந்த கிசுகிசுக்களை அவர்களும் கேட்டிருந்த காரணத்தினால், அன்னையவர்கள் அணையுடைத்த வெள்ளம் போல அழ ஆரம்பித்து விட்டார்கள். அன்னையவர்களின் பிரியத்திற்குரிய தாயார் தனது மகளின் நிலையை அறிந்து, அவரைத் தேற்ற முயன்றும் அவர்கள் தோற்றுத்தான் போனார்கள். அன்னையவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.

நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியாக இருக்கின்ற காரணத்தினால், உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் தான் இந்த களங்கத்தைச் சுமத்தி இருக்கின்றார்கள். எனவே, அழ வேண்டாம், எல்லாம் விரைவில் சரியாகி விடும் என்று அந்த அன்னையவர்கள் வீடு தேடி வந்த தனது மகளான ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், தூய்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள் எந்த ஆறுதல் வார்த்தைகளையும் செவி கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. தன் மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் தன்னால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும், மனதில் பாரத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு நிம்மதி அடைய முடியும் என்றார்கள். இரண்டு நாட்கள் இரவும் பகலும் அழுது கொண்டே இருந்ததன் காரணமாக அன்னையின் உடல் நலிவடைந்திருந்தது.

மூன்றாம் நாள் அன்னையவர்களின் தாய் மற்றும் தந்தை அபுபக்கர் (ரழி) அவர்களும் வீட்டில் அமர்ந்து கொண்டு தங்களது ஆசை மகளுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வருகின்றார்கள்.

ஆயிஷாவே! நீங்கள் தவறிழைத்திருக்கும் பட்சத்தில் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்ளுங்கள் என்று அமைதியான குரழில் அன்னைக்கு அறிவுரை கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

கண்ணில் நீர் வற்றியிருந்த கண்களோடு சோகத்துடன் இருந்த அன்னையவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் அளிக்க அனுமதி வழங்குமாறு தன் தாயிடம் கேட்கின்றார்கள். ஆனால் அன்னையின் தாயார் அவர்களோ எந்தப் பதிலையும் கூறாது அமைதியாக இருக்கின்றார்கள். பின் தனது தந்தையை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் பதில் அளிப்பதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்க, அபுபக்கர் (ரழி) அவர்களோ வந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா (ரழி)அவர்கள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அனுமதியும் வழங்கவில்லை.

இறுதியாக, அன்னையவர்கள் தனது ஆருயிர்க் கணவரைப் பார்த்துக் கூறினார்கள், நான் தவறிழைத்திருக்கவில்லை என்று சொல்லி மறுத்தால், எனது சொல்லை யாரும் நம்பும் நிலையில் இல்லை. ஆனால் நான் குற்றமற்றவள், அல்லாஹ் மட்டுமே இதனை அறிவான் என்று கூறி விட்டு, என் மீது சுமத்தப்பட்ட களங்கத்திற்குச் சரியான பதில் இதுவாகத் தானிருக்கும் என்று, யூசுப் (அலை) அவர்களது தந்தை அளித்த பதிலாக வருகின்ற, யூசுப் அத்தியாயத்தின் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்; மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார். (12:18)

அன்னையவர்கள் இருந்த நிலையில், யூசுஃப் (அலை) அவர்களது தந்தையாரான யஃகூப் (அலை) அவர்களது பெயரைக் கூட ஞாபகப்படுத்த முடியாத அளவுக்கு மனதால் மிகவும் நொந்து போய் இருந்தார்கள். இந்த கணத்தில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கீழ்க்காணும் வசனம் இறக்கி அருளப்பட்டு, அன்னையவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்தான்.

இந்த வசனம் அருளப்பட்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புருவங்களைச் சுற்றியும் வியர்வை முத்துக்கள் பணித்திருந்தன. பின் ஆயிஷா (ரழி) அவர்களின் பக்கம் திரும்பியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது. மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (24:11)

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ”இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா? (24:12)

அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள். (24:13)

இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும். (25:14)

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும். (25:15)

இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ”இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா? (24:16)

நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான். (24:17)

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன். (24:18)

எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு. அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான். (24:20)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது – எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் – மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (24:21)

மேலே கண்ட இறைவசனம் இறங்கியதன் பின், தங்களது செல்வத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் பொய்யென்று இறைவனால் நிரூபிக்கப்பட்டு விட்டது குறித்தும், தனது மகளின் நிலை கண்டு, இறைவன் திருவசனத்தை இறக்கியது குறித்தும், அன்னையவர்களின் பெற்றோர்கள் அகமகழிந்து போனார்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

ஆயிஷாவே! நீங்கள் உங்கள் கணவரிடம் சென்று நன்றி கூறுங்கள்..! என்று கூறிய பொழுது, நான் அல்லாஹ்வுக்குத் தான் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன் என்று பதில் கூறி, அல்லாஹ் தான் என்மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிந்தான். இன்னும் எனது கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு தனது வசனங்களை இறக்கி அருளியமைக்காக அல்லாஹ் தான் என் நன்றிக்கு உரியவன் என்று பதிலளித்தார்கள். இன்னும் இந்த வசனங்கள் மறுமை நாள் வரை ஒலிக்கும். இந்த வரலாற்றுச் சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் உஃபுக் என்றழைக்கப்படுகின்றது.

மதிப்பும் கௌரவமும்

இந்த சம்பவத்திற்குப் பின்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வைத்திருந்த பிரியம் இன்னும் அதிகமாயிற்று. ஒருமுறை அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இந்த உலகத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யாராக இருக்கும்? என வினவிய பொழுது, ஆயிஷா (ரழி) அவர்கள் தான் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான நபர் என்று பதிலளித்தார்கள். பின்பு, ஆண்களில் யார் என வினவிய பொழுது, அபுபக்கர் சித்தீக் (ரழி) என்று பதிலளித்தார்கள்.

ஒருமுறை உமர் (ரழி) அவர்கள் தனது மகளும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவியுமான ஹப்ஸா (ரழி) அவர்களிடம், ஆயிஷா (ரழி) அவர்களுடன் போட்டி போட வேண்டாம் என்றும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கின்றார்கள் என்றும், அவரைக் குறைத்துமதிப்பிடாது கௌரவமாக உயர்ந்த அந்தஸ்துடன் கண்ணியத்துடன் பழகி வரும்படி அறிவுரை கூறினார்கள்.

இதன் காரணமென்னவெனில், அன்னையவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைச் சட்டங்களிலும், அதன் விளக்கத்திலும் தன்னிகரற்ற அறிவு ஞானத்தைப் பெற்றிருந்ததேயாகும்.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைப் பேச விட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருமுறை ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த வீரர்கள், அம்புகளை எறிந்து கொண்டு தங்களுக்குள் வீர விளையாட்டு ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனை அன்னையவர்கள் பார்க்க விரும்பிய பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிற்க அவர்களுக்குப் பின் அன்னையவர்கள் மறைந்து நின்று கொண்டு, பிறர் தன்னைக் கவனிக்காதவாறு விளையாட்டைக் கண்டு ரசித்தார்கள். அந்த விளையாட்டு முடியும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த இடத்தை விட்டும் நகரவில்லை. இன்னும் இருவரும் தங்களுக்கிடையில் மாறி மாறி பல கதைகளைப் சொல்லிக் காட்டிக் கொள்வார்கள்.

கணவனும் மனைவியும் எவ்வாறு நட்புடன் வாழ வேண்டும் என்பதற்கு அன்னையவர்களின் வரலாறு மிகுந்த படிப்பினை மிக்கது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களது மனைவிமார்களுடனும், குடும்பத்தவர்களுடனும் பிரியத்துடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து அவர்கள் சிறிதும் கவனக் குறைவாக இருந்தது கிடையாது. தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டு விட்டால், தனக்கு அருகில் குடும்பத்தவர்கள் இருக்கின்றார்களே, அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், பொழுது சந்தோசமாகக் கழிந்து கொண்டிருக்கின்றதே என்று எண்ண மாட்டார்கள். மாறாக, தங்களது குடும்பத்தவர்களுடன் தான் இதுவரை அமர்ந்திருந்தோமா என்று பிறர் நினைக்கும் அளவுக்கு, பாங்கு சொன்ன உடனேயே அந்த இடத்தை விட்டும் அகன்று பள்ளியை நோக்கி விரையக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தவர்கள் மீதான அன்பு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்று அவர்களைப் பராக்காக்கி விடாது.

அன்னையவர்களின் வரலாற்றில் இன்னுமொரு சம்பவம் அவர்களது மதிப்புக்கு மணி மகுடம் சூட்டியது போலாகி விட்டது. ஆம்! அன்னையவர்களின் காரணத்தால் அப்பொழுது ஒரு இறைவசனத்தை இறைவன் இறக்கி அருளினான். ஒரு பயணத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அபுபக்கர் (ரழி) மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் ஆயிஷா (ரழி) அவர்களும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார்கள். பாலைவனத்தில் ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி தங்கிக் கொண்டிருந்த பொழுது, அன்னையவர்களின் கழுத்து மாலை ஒன்று மீண்டும் காணாமல் போய் விட்டது. நபித்தோழர்கள் பலர் அந்த மாலையைத் தேடிச் சென்றும், அதனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். அப்பொழுது அதிகாலைத் தொழுகைக்கு பாங்கும் சொல்லப்பட்டு விட்டது. ஆனால், அவர்கள் கூடாரம் அடித்துத் தங்கிய இடத்தில் அதிகாலைத் தொழுகைக்கு தங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

நபித்தோழர்களோ அதிகாலைத் தொழுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கின்றது, தண்ணீரும் அருகில் இல்லை, எங்கே தொழுகை தவறி விடுமோ என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கு அன்னையவர்கள் தான் காரணம் என்றும், காரணம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். நபித்தோழர்களிடம் காணப்பட்ட அந்த வருத்தத்தக்க நிலையைக் கண்ட அபுபக்கர் (ரழி) அவர்களோ, இந்த சூழ்நிலை உங்களால் தானே வந்தது என்று தனது மகளான அன்னை ஆயிஷா (ரழி) அவர்களைக் கடிந்து கொள்ளும் நிலைக்கு சூழ்நிலை இறுக்கமானது. அந்த நேரத்தில் தான் அன்னையவர்களின் காரணத்தால், இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடின், சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ”தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43)

இதுவரைக்கும் அன்னையவர்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த நபித்தோழர்கள், மேற்கண்ட இறைவசனம் இறங்கியதன் பின்பு, இறைவன் தங்கள் மீது காட்டிய கருணையை எண்ணி மகிழ்ந்தவர்களாக, அன்னையவர்களின் காரணத்தால்தான் இந்த சலுகை எங்களுக்குக் கிடைத்தது என்று புகழ ஆரம்பித்து விட்டார்கள்.

சற்று முன்பு தனது மகளைக் கடிந்து கொண்ட அபுபக்கர் (ரழி) அவர்கள் கூட இப்பொழுது தனது மகள் மீது இறைவன் சொறிந்த கருணை மழையைக் கண்டு புன்னகை பூக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கூறினார்கள் : இந்த இறைவசனம் இறங்கும் வரைக்கும், இவ்வளவு பெரியதொரு அருட்கொடையை எனது மகளின் காரணத்தால் இறைவன் இறக்கி அருளுவான் என்று நான் நினைக்கவில்லை, இந்த அருட்கொடை எமக்கு மட்டும் உரித்தானதல்ல, மாறாக, உலக இறுதி நாள் வரைக்கும் தொடர்ந்து வரக் கூடியதல்லவா என்று தனது மகளுடன் இறைவன் இருந்து கொண்டிருக்கின்றான் என்பதை இட்டு எண்ணி எண்ணி அபுபக்கர் (ரழி) அவர்கள் மகிழ்ந்தார்கள். இன்னும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக, தனது மகளுக்கு இறைவன் நீடித்த ஆயுளை வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் இந்த முஸ்லிம் உம்மத் எண்ணற்ற அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.

அன்றைய தினத்தினுடைய அதிகாலைத் தொழுகை நிறைவடைந்து, பயணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கிளம்பிய ஒட்டகங்களின் ஒன்றின் கீழாக இருந்து, காணாமல் போன கழுத்து மாலை கண்டெடுக்கப்பட்டும் விட்டது.

பிரிவும், பதிலும்

ஹிஜ்ரி 9 ம் வருடம், இஸ்லாம் அரபுப் பிரதேசத்தையும் தாண்டி தனது ஆட்சிப் பரப்பை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஆறத் தழுவிக் கொண்ட அரபுப் பூமியின் புதிய தலைநகராக மதீனத்துந்நபவி திகழ்ந்து கொண்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, மிகவும் வசதி வாய்ப்புகளுடனும் வாழ்ந்திருந்த மனைவிமார்கள் சிலர், இப்பொழுது மதீனாவில் காணப்படும் செல்வச் செழிப்புக்கு ஈடாக தங்களுக்குக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செலவுத் தொகைகள் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மனைவிமார்களது உலகாதாய நோக்கம் கொண்ட இந்த கோரிக்கை இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சங்கடப்பட வைத்தது, கவலை கொள்ளச் செய்தது.

இதன் காரணமாக எந்த மனைவியரிடத்திலும் சேர்ந்திருப்பதில்லை என்று உறுதி பூண்டவர்களாக ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டினை ஒட்டிய அறையில் தங்கிக் கொண்டார்கள். இந்த கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் இருந்து தவறி விழுந்ததன் காரணமாக சிறு காயமும் ஏற்பட்டிருந்தது. இந்த சூழ்நிலை இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பத்தவர்களிடையே சிறு சலனத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

28 நாட்கள் முடிந்து, 29 ம் நாள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ஆயிஷாவே! நான் சொல்வதைக் கேட்டுக் கொள்ளுங்கள். பின் உங்களது பெற்றோர்களிடம் ஆலோசனை கலந்து விட்டு உங்களது முடிவினைச் சொல்லுங்கள் என்று கூறியவர்களாக, இந்த உலக வாழ்க்கையின் கஷ்டங்கள், வறுமை ஆகியவற்றையா அல்லது வசதியான வாழ்க்கையா.., இந்த இரண்டில் எது வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் இதுபற்றி உங்களது பெற்றோர்களுடன் கலந்தாலோசனை செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்களது மனதில் இருந்து பட்டென பதில் வந்தது. நானும் என்னுடைய குடும்பத்தவர்களும், தேவை ஏற்படும் எனில் எங்களது வாழ்வையே உங்களுக்காக அற்பணம் செய்வதற்குத் தயாராகவே இருக்கின்றோம். இது விசயத்தில் எனது குடும்பத்தவர்களுடன் கலந்தாலோசனை செய்வதற்கு எந்த அவசியமுமில்லை. நான் என்னுடைய வாழ்வை உங்களுடன் வாழ்வதற்கே விரும்புகின்றேன், இந்த உலக வாழ்க்கையின் ஆடம்பரங்களை அல்ல என்று அன்னையவர்கள் கூறி முடித்தார்கள். இந்த பதிலைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வதனத்தில் அழகிய புன்சிரிப்பு தவழ்ந்தது. அதன் பின் அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ”நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ”ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக! (33:28-29)

ஆயிஷா (ரழி) அவர்களுடன் ஏற்பட்ட இந்த வாதங்கள் முடிவுற்ற பின், இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நீங்கள் என்னிடம் பெற்றுக் கொண்ட இந்த பதிலை நீங்கள் மற்ற மனைவியர்களிடத்தில் கூற வேண்டாம். அவர்கள் என்ன பதிலைச் சொல்கின்றார்கள் என்பதை நான் பார்க்க வேண்டும் என்று குலைந்தபடி ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! ஆயிஷாவே! நான் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியனாகத் தான் என்னுடைய இறைவனால் அனுப்பப்பட்டுள்ளேனே தவிர, அடக்குமுறையாளனாக அல்ல.அவரவர் முடிவில் தலையிடும் அதிகாரம் எனக்கில்லை என்று கூறி முடித்தார்கள்.

பின் மற்ற மனைவியர்களிடத்தில் அவரவர் விருப்பம் என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது, அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் என்ன பதிலைக் கூறினார்களோ அதே பதிலையே மற்றவர்களும் கூற, மிக நீண்ட நாட்களாக வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்தது. மதீனாவைச் சூழ்ந்திருந்த இறுக்கமான சூழ்நிலை கலைந்து, மீண்டும் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்பியது.

வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைக் காணும் பாக்கியம் பெற்றவர்கள்

ஒரு சமயம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குதிரையின் மீது அமர்ந்திருந்த ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். (இதனைப் பார்த்த ஆயிஷா (ரழி) அவர்கள்) இறைத்தூதர் (ஸல்) அவர்களே! யார் அந்த மனிதர்? என்று வினவினார்கள். ஆயிஷா (ரழி) அவர்களின் கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டு விட்டு, அவர் தான் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அவர்கள் மனித உருவில் வந்திருந்தார்கள், இன்னும் உங்களுக்கு அவர்கள் தனது ஸலாமை எத்தி வைத்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள் என்று கூறினார்கள். உடனேயே, யா அல்லாஹ்! எங்களது விருந்தினரும், இன்னும் உன்னுடைய கண்ணியமிக்க தூதுவருமான ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு நற்பேறுகளை வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டில் தங்கியிருந்த சமயத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அங்கு வருகை தந்தது பற்றி அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்த செய்தியில், ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டின் முன் முன்பின் அறியாத மனிதர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி, தொழுது கொண்டிருந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்து விட்டு, வீட்டுக்கு வெளியில் வந்து பார்க்கின்றார்கள், யாரை எதிர்பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்களோ, அந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் தான் அங்கு வந்து நின்று கொண்டிருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களே! ஏன் நீங்கள் உள்ளே வர மறுக்கின்றீர்கள்..! உள்ளே வாருங்கள்..! என்று அழைக்கின்றார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களோ, நாயும் இன்னும் உருவப் படங்களும் உள்ள இடங்களுக்கு நாங்கள் வர மாட்டோம் எனப் பதில் கூறுகின்றார்கள். பின்னர் வீட்டினுள் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த பொழுது, ஒரு பொம்மை வீட்டின் ஒரு மூலையில் கிடந்ததை அப்புறப்படுத்திய பின் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டினுள் நுழைந்தார்கள்.

நபிமொழி அறிவிப்பாளராக..!

இன்னும், அன்னையவர்களுக்கு இருந்த கல்வி ஞானத்தின் காரணமாக மிகச் சிறந்த உயர்ந்த அந்தஸ்திற்குரியவர்களாக திகழ்ந்தார்கள். மார்க்கத்தின் மிகவும் சிக்கலான பல கேள்விகளுக்கு பல நபித்தோழர்களும், பெண்களும் அன்னையிடம் வந்து அதற்கான விளக்கத்தையும் தெளிவையும் பெற்றுச் செல்லும் அளவுக்கு மார்க்க விசயங்களில் மிகவும் கற்றறிந்த மேதையாகத் திகழ்ந்தார்கள். இன்னும் ஸஹீஹான பல நபிமொழிகள் அன்னையின் மூலமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த இன்னும் அவர்களுடன் எப்பொழுதும் இருந்து கொண்டிருந்த பல நபித்தோழர்களில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை நமக்கு நபிமொழிகளாக அறிவித்த, இன்னும் தனிச்சிறப்பாக ஆயிரக்கணக்காக நபிமொழிகளுக்கு சொந்தக்காரர்களின் முதல் ஏழு நபித்தோழர்களின் வரிசையில் அன்னையவர்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

1. அபூஹுரைரா அப்துர் ரஹ்மான் பின் சகர் தோசி (ரழி) (5374 ஹதீஸ்கள்)

2. அப்துல்லா பின் உமர் பின் கத்தாப் (ரழி) – (2630 ஹதீஸ்கள்)

3. ஆயிஷா (ரழி) (2210 ஹதீஸ்கள்)

4. அப்துல்லா பின் அப்பாஸ் (ரழி) (1660 ஹதீஸ்கள்)

5. ஜாபிர் பின் அப்துல்லா அன்ஸாரி (ரழி) (1540)

6. சஅத் பின் மாலிக் அபூ ஸயீத் அல் குத்ரீ (ரழி) (1540)

7. அனஸ் பின் மாலிக் (ரழி) (2286)

மற்ற பெண்களைக் காட்டிலும் அன்னையவர்கள் கல்வி ஞானத்தில் தேர்ச்சி பெற்ற முதல் தர பெண்மணியாகத் திகழ்ந்தார்கள். அன்னையைப் பற்றி மதிப்பிட வேண்டும் என்றால், அவர்கள் தனது இளமைக் காலத்தில் அபுபக்கர் (ரழி) போன்ற உன்னதமிக்க மனிதரைப் பெற்றோராகவும், இன்னும் தனது மணவாழ்க்கையை மிக இள வயதில் ஆரம்பித்து அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனும் வாழ்ந்த காரணத்தினால் அவர்களது வாழ்க்கையே ஒரு பாடப் புத்தகமாகத் திகழ்ந்ததே, அவர்களைக் கல்விக் கடலாகப் பரிணமிக்கச் செய்தது. இன்னும் இறைவனின் தூய ஞான ஒளியானது அன்னைக்கு நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூலமாகக் கிடைத்ததும், இன்னும் அவர்களுக்காக இறைவன் பல முறை பதில் தந்திருக்கின்றான், தனது திருவசனங்களை அன்னையின் காரணத்தால் அருள் செய்திருக்கின்றான் என்பதிலிருந்து, உலகத்துப் பெண்களில் அன்னையவர்கள் ஒலிக் கீற்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதில் மிகையில்லை.

கலீபாக்களின் ஆட்சிக் காலத்தில் அன்னையவர்களின் மார்க்க தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) ஏற்றுக் கொள்ளப்பட்டன. சொத்துப் பங்கீடு விசயத்தில் அன்னையவர்கள் மிகச் சிறந்த கல்வி ஞானத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், மக்கள் அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அன்னையை அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள். சொத்துப் பங்கீடு விசயத்தில் மிகவும் சிக்கலான பிரச்னைகளுக்கு அன்னையவர்கள் மிக எளிதாக, அதனை தீர்த்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) இறுதிக் கணமும், அன்னையும்..,

ஆயிஷா (ரழி) அவர்களுக்கிருந்த மார்க்க விசய ஞானம், இன்னும் சிறப்பான குணநலன்கள் ஆகியவற்றின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்கள் மீது அலாதியான அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள், அன்னையவர்களும் உடல் நலமற்றிருந்தார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனக்கு முன்பாக நீங்கள் இறந்து விட்டீர்கள் என்று சொன்னால், நானே உங்களைக் குளிப்பாட்டுவேன், நானே உங்களுக்கு கஃபன் இடுவேன், இன்னும் நானே உங்களை மண்ணறைக்குள் இறக்கி வைப்பேன் இன்னும் உங்களுக்காக நான் பிரார்த்தனையும் செய்வேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அன்னையவர்கள், எனது மரணத்தை நீங்கள் கொண்டாடுவீர்கள் போலிருக்கின்றதே! என்று வேடிக்கையாகக் கேட்டு விட்டு, உங்களுக்கு முன் நான் மரணித்து விட்டால், நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த வீட்டிற்கு ஒரு புது மனைவியைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்கள், உடல் நலம் தேறாமலேயே தன்னைப் படைத்தவனிடம் சென்று சேர்ந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

என்னுடைய முறையின் பொழுது எனது வீட்டில் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதுவும் எனது மடியில் வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது கண்டு நான் பெருமைப்படுகின்றேன், அதனைப் பாக்கியமாகவும் கருதுகின்றேன் என்று அன்னையவர்கள் பெருமையோடு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னையவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த இறுதிக் கணங்களில் அன்னையவர்களின் இல்லத்தில் நுழைகின்றார்கள். நுழைந்தவரின் கையில் பல் துலக்கக் கூடிய மிஸ்வாக் குச்சி இருக்கின்றது. அந்த மிஸ்வாக் குச்சியை ஆசையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்க்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்ட அன்னையவர்கள், உங்களுக்காக மிஸ்வாக்கைக் கொண்டு பல் துலக்க ஆசையாக இருக்கின்றதா? எனக் கேட்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சைகையால் சம்மதம் தெரிவிக்க, அன்னையவர்கள் தனது சகோதரரிடமிருந்து மிஸ்வாக்கைப் பெற்றுக் கொண்டார்கள். அந்த மிஸ்வாக் கடினமாக இருந்த காரணத்தால் அன்னையவர்கள் தனது பற்களால் கடித்து, அந்த மிஸ்வாக்கை மிருதுவாக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பற்களை துலக்கி சுத்தப்படுத்தி விடுகின்றார்கள். அருகில் இருந்த பாத்திரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கைகளை நனைத்து அடிக்கடி தனது முகத்தில் தடவிக் கொண்டே..,

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, மரணம் அதிக வேதனையுடையதாக இருக்கின்றது.

பின் தனது விரல்களை உயரே சுட்டிக் காட்டியவர்களாக, மிகச் சிறந்த நண்பரை நோக்கி (நான் விரைகின்றேன்) என்று கூறினார்கள்.

அது கணமே, உடல் என்னும் கூட்டுக்குள் சிறையிருந்த உயிர், வல்லோனை நோக்கி விரைந்தது.

கனவு நிறைவேறுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன் அன்னையவர்கள் ஒரு கனவு கண்டார்கள். அந்தக் கனவில் மூன்று நிலவுகள் அன்னையின் இல்லத்தில் இறங்குவதாகக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பொழுது, அன்னையவர்களின் இல்லத்தில் தான் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்னும்;, அன்னையவர்கள் கண்ட கனவில் தோன்றிய மூன்று நிலவுகளில், ஒரு நிலவு அவர்களது இல்லத்தை ஒளியூட்டிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் கண்ட கனவின் ஒரு பகுதி நிறைவடைந்து விட்டது என்று அபுபக்கர் (ரழி) அவர்கள் அந்தக் கனவின் விளக்கத்தைக் கூறினார்கள். பின்னர் அன்னையவர்களின் தந்தையாரான அபுபக்கர் (ரழி) அவர்கள் இறந்த பொழுது, தனது ஆருயிர்த் தோழர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். பின் உமர் (ரழி) அவர்களும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டதுடன், அன்னையவர்களின் கனவு நிறைவேறியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யார் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்களோ, இன்னும் அவர்களது அதிக விருப்பத்திற்கு உரியவராக இருந்தார்களோ, அந்த அன்னையவர்களின் இல்லத்திலேயே அவர்களது உயிரும் பிரிந்தது என்று இமாம் தகபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆம்! இதன் மூலம் தனது விருப்பத்திற்குரிய மனைவியான ஆயிஷா (ரழி) அவர்களதும், இன்னும் தனது விருப்பத்திற்குரிய இடமுமான அன்னையவர்களின் இல்லத்திலேயே இறந்தார்கள், அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 58 ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு, சொர்க்கச் சோலைகளை நாடிச் சென்று விட்டார்கள். தனது 66 ம் வயதில் ரமளான் மாதம் 17 ஆம் நாள் மரணமடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மதீனாவில் ஜன்னத்துல் பக்கீ என்ற நல்லடக்க பூமியில் அன்னையவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அபூஹுரைரா (ரழி) அவர்கள் அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்துல்லா பின் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழி) மற்றும் அப்துல்லா பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் சித்தீக் (ரழி) ஆகிய இருவரும் அன்னையின் உடலை மண்ணறைக்குள் வைத்தனர்.

(அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

நன்றி:- http://www.ottrumai.net/


பிரிவுகள்:அன்னை ஆயிஷா ரலி, அன்னை ஆயிஷா ரலி أم المؤمنين عائشة رضي الله عنها, கட்டுரைகள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

உமர் முக்தார்


பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்

உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்

உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “

படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”
முசோலினி ” யார் அவர்களை வழி நடத்துவது ?”

தளபதி: ” ஒமர் முக்தார் “

முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”

தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.

பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?

இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.

ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது).

சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.

நன்றி:-  Cuddalore MuslimFriends

நன்றி:- http://ta.wikipedia.org/

நன்றி:- http://shahulbook.blogspot.com/

நம் பணத்தின் கதை! – வரலாறு!

ஜனவரி 31, 2011 1 மறுமொழி


நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன.


ன்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் தொடங்கினார்.  1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.

நமது நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப காலத்தில் ரூபாய் நோட்டை (1770 – 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100, 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக  பாதியாக வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய் கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.

1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த  நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.


வட இந்தியாவில் நமக்கு எந்த ஊரை பற்றி தெரியுமோ இல்லையோ, நாசிக் பற்றி நிச்சயம் தெரியும்.


காரணம், இங்குதான் நமது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இங்கிலாந்திலிருந்து கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை கப்பல் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டன. இது நேரம் பிடிக்கும் விஷயமாக இருந்ததால், 1925-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு பிரின்டிங் பிரஸை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். முதலில் இங்கே தபால்தலைகள் மட்டுமே அச்சடிக் கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் வேலை தொடங்கியது. இன்று வரை இங்கு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

ஆனால் இந்தியப் பொருளாதாரம் வளர வளர, பணத்தின் தேவை அதிகரித்ததாலும் வங்கிகளின் எண்ணிக்கை பெருகியதாலும் மேலும் சில இடங்களில் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பிரின்டிங் பிரஸ்களைத் தொடங்கியது நமது மத்திய அரசாங்கம். 1974-ல் மத்தியப் பிரதேசம் தேவாஸில் ஒரு அச்சகம் தொடங்கப்பட்டது.இந்த இரண்டு ஆலைகளும் எஸ்.பி.எம்.சி.ஐ.எல். [Security Printing and Minting Corporation of India Limited] நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

இவை தவிர, ஆர்.பி.ஐ. தனியாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்கிற பொது நிறுவனத்தை 90-களில்  தொடங்கியது. இந்த நிறுவனம் மைசூரிலும் மேற்கு வங்காளம் சல்பானியிலும் கரன்சி மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங் களை அச்சடித்து வருகிறது.

இங்க் பேப்பர் சேஃப்டி

கரன்சி தயாரிக்கும் பிரின்டிங் பிரஸுக்குத் தேவையான பேப்பர்கள், இங்க் போன்றவை தயார் செய்ய மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆலைகளை நடத்தி வருகிறது மத்திய அரசு. ஹோசங்காபாத்தில் பேப்பர் மில், தேவாஸில் சென்சிட்டிவ்வான இங்க் தயாரிக்கும் ஆலை நடத்தப்பட்டு வருகிறது. கரன்சிகளின் ரகசியங்கள் கருதியே இப்படி ஒரு ஏற்பாடு.

கரன்சி ஆர்டர்

கரன்சிகளை எவ்வளவு அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஆர்.பி.ஐ.தான் இந்த நிறுவனங்களுக்குச் சொல்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ஆர்டர்கள் இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பிரின்டிங் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

பத்தாயிரம் ரூபாய் நோட்டு வரை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கிறது.

கரன்சி விநியோகம்

ஆர்.பி.ஐ. கொச்சி உட்பட பத்தொன்பது இடங்களில் தனது கரன்சி கருவூலங்களை [chest] வைத்துள்ளது. இங்கிருந்துதான் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர, எஸ்.பி.ஐ. உள்பட தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 4,200 கிளைக் கருவூலங்கள் வழியாகவும் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப் படுகின்றன. போலியில்லாத ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு ஆர்.பி.ஐ.யையே சாரும்.

 

நன்றி:-– கண்பத்,  மோ. கிஷோர் குமார்

நன்றி:- நா.வி

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு


உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.


இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. “108’ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நன்றி:- தி.

ஹம்ஸா ரழி

திசெம்பர் 2, 2010 1 மறுமொழி

ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர்.

அப்துல் முத்தலிபின் மகனான ஹம்ஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையாவார். மேலும் வைபா எனும் செவிலித்தாயிடம் பால் அருந்தியதில் நபிகளாருக்கும் இவருக்கும் பால்குடிச் சகோதர உறவும் இருந்தது. இவர் நபிகளாரின் வயதினை ஒத்தவரும் நபிகளாரின் சிறந்த நண்பரும் கூட. வாலிபப் பருவத்தில் சிறந்த உடல்வாகும் வளப்பு மிகு தோற்றமும் கொண்டு விளங்கிய ஹம்ஸா(ரழி) சிறந்த வாக்குச் காதுரியமும், நேர்மையும் நிறைந்த பண்பாளராகத் திகழ்ந்தார். அண்ணலாரின் அழகிய நற்பண்புகள் ஹம்ஸா (ரழி) அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.

இஸ்லாத்தை ஏற்பது நபிகள் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த ஆரம்பகட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரில் இவரும் ஒருவர். அண்ணலார் போதித்த ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கையை எதிர்ப்பின்றி மனதால் ஏற்றுக் கொண்டாலும் அவர்களின் சிந்தனை சலனமற்ற நீர்போல நிலைபெற்றிருந்தது. ஏகத்துவ எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் நபி(ஸல்)அவர்கள் மீது வீசப்பட்ட போதுதான் சலனமற்ற நீரில் எறியப்பட்ட கல்லினால் நீரில் உருவாகும் வண்ண வளையங்களின் அழகுத் தோற்றங்கள் போல ஹம்ஸா(ரழி) அவர்களின் சிந்தனையில் ஏகத்துவ இறைவழிபாட்டுக் கொள்கையின் இனிமை புரிந்தது.

கஃபாவின் அருகில் இணைவைப்பாளர்களில் முக்கியமானவானான அபூஜஹ்ல் தலைமையில் ஏகத்துவ எதிர்ப்பாளர் கூட்டம் நபி(ஸல்)அவர்களின் பிரச்சாரத்தை குறைகூறி நடக்கிறது. முஹம்மதுவின் பிரச்சாரங்கள் நம் முன்னோர்களின் அனுஷ்டானங்களுக்கு எதிராகவும், நம் வழிபாட்டுத் தெய்வங்களின் மகிமைக்கு பங்கம் விளைவிப்பதாகவும் உள்ளது. தம் சகோதரர் மகன் செய்யும் இப்பிரச்சாரங்கள் ஹம்ஸாவும் அறிவார் எனக்கூறி நபிகளாரைத் தூசித்துப் பேசுகிறான் அபூஜஹ்ல். இதனை செவிமடுத்த ஹம்ஸா(ரழி) முஹம்மதுவைத் தவறாக எவரும் எடைபோட வேண்டாம் என எச்சரிக்கிறார். இதனால் வாக்குவாதம் ஏற்பட, கூட்டம் குழப்பத்துடன் கலைகிறது. அதன் பிறகு தனிமையில் அமர்ந்து சிந்தித்த ஹம்ஸா(ரழி)அவர்களுக்கு நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரமும் அவர்களின் போதனைகளும் சரியானதே என மேலும் உறுதி ஏற்படுகிறது.

வேட்டையாடுதலில் ஆர்வம் கொண்ட ஹம்ஸா(ரழி) ஒருநாள் வேட்டைக்கு சென்று திரும்பிய பின்னர் கஃபாவை வலம் வர நாடியவராக அதனை நோக்கி செல்லும் போது அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் என்பவனின் அடிமைப் பெண்ணொருத்தி ஹம்ஸா(ரழி) அவர்களை அபூஉமாராவே! முஹம்மதுவைப் அபூஜஹ்ல் மிக இழித்துரைக்கிறான், கொடுமைகள் புரிகிறான். முஹம்மது இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார் என்று எடுத்துரைத்தார். இதனைக் கேட்டு வெகுண்ட சினங்கொண்டவராக ஹம்ஸா(ரழி) கஃபா சென்று அபூஜஹ்ல் எங்கே? என்று கேட்டவராக கஃபாவின் ஒரு ஓரத்தில் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்த அபூஜஹ்லை நோக்கி தம்மிடம் இருந்த வில்லின் நானை விரைப்புடன் இழுத்து அபூஜஹ்லின் தலைக்கு அம்பினைச் செலுத்தினார். தலையில் காயமுற்ற அவனிடம் ஏகத்துவத்தின் சிறப்பினை எடுத்துக் கூறியவராக அண்ணலார் போதிக்கின்ற போதனைகளை தாம் ஏற்றுக் கொண்டதையும் இஸ்லாத்தின் இனிய கொள்கைகளால் தாம் ஈர்க்கப் பட்டதையும் வீரத்துடன் எடுத்துரைக்கிறார்.

இஸ்லாத்தை எப்படியும் ஒழித்தே தீருவேன் எனக்கங்கனம் கட்டித் திரிந்த அபூஜஹ்லிடம் இதுபோன்ற மிரட்டல்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எந்த தடையும் இழைக்க முடியாது என உறுதியாக எண்ணிய ஹம்ஸா(ரழி) சிங்கத்தின் குகையிலேயே சிங்கத்தை நேரிட்டு வீழ்த்தும் துணிவுடன் தாம் ஈமான் கொண்டதை எடுத்துரைத்தார். ஹம்ஸா(ரழி)வின் இடிமுழக்க குரலைக் கேட்ட குறைஷிகள் நிலை தடுமாறி ஓட்டம் பிடித்தனர். சிலர் அபூஜஹ்லுக்கு பரிந்து பேச முனைந்தும் அவன் அவர்களைத் தடுத்து விட்டான். இணைவைப்பாளர்கள் இந்நிலையில் தம் கடவுளர்களுக்கு என்ன நேருமோ என்று ஒரு புறம் சிந்திக்க, சத்தியத்தை போதித்த சகோதரரின் மகன் தூசிக்கப்பட்டதால், விமர்சனங்களைச் செவியுற்ற நான் விபரீதங்கள் ஏதும் புரிந்து விட்டேனோ? என்ற மனக்குழப்பம் ஹம்ஸா(ரழி)க்கு ஏற்படுகிறது. தம் இதயத்தை விசாலமாக்கி உள்ளம் பக்குவப்பட கஃபா சென்று பிராத்தனை புரிந்ததோடல்லாமல் அண்ணல் நபிகளாரையும் பிராத்திக்க வேண்டுகிறார் ஹம்ஸா(ரழி)அவர்கள். நபி(ஸல்)அவர்கள் பிராத்திக்கிறார்கள்.

ஈமானிய உறுதி இன்னும் மெருகேறுகிறது. அண்ணல் நபிகளாரின் அடிச்சவடுகளைப் பின்பற்றும் உத்தம சஹாபாக்களில் ஒருவராகவும் நபிகளாரின் பக்கபலமாகயிருந்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைப்பதில் வரும் இடர்களை துச்சமென மதித்து துயரேதுமின்றி துணிந்து செயல்பட்ட தீரர்களில் ஹம்ஸா(ரழி)அவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அஸதுல்லா-அல்லாஹ்வின் சிங்கம் என்ற சிறப்புப் பெயருக்கும் சொந்தக்காரர் இவர் நபிகளார் மதீனத்துக்கு ஹிஜ்ரத் செய்தபின் நிகழ்ந்த பத்ருப் போரில் பங்கேற்று (ஹஜ்ரி 2ம் ஆண்டு) முஸ்லீம்களின் வெற்றிக்காக முனைந்து பேரிட்டு வெற்றிக் கனியைச் சுவைப் பதில் ஹம்ஸா(ரழி) அவர்கள் ஆற்றிய பங்கு நினைவு கூறதக்கது. அன்றைய அராபியர்களின் போர் வழக்கப்படி முதலில் தனித் தனியாக போராடும் முறையில் அண்ணல் நபிகளால் நியமிக்கப்பட்ட மூவர் ஹம்ஸா(ரழி), அலி(ரழி), அபூஉபைதா(ரழி) ஆகியோராவர். உத்பா, ஸைபா, வலீத் ஆகியோர் நிராகரிப்போரால் நிறுத்தப் பட்டவர்கள் இத்தனிப் போரில் ஹம்ஸா(ரழி)அவர்கள் உத்பாவை வீழ்த்தி வெற்றியின் ஆரம்ப நிலையை இஸ்லாத்துக்கு துவக்கி வைத்தார்கள்

இப்போரில்தான் குறைஷி இணைவைப்பாளர்களின் முக்கியமானோர்களாகிய அபூஜஹ்ல், உத்பா, ஸைபா, வலீத் போன்றோரின் உடல்கள் கொல்லப்பட்டு கோர நிலையில் துர் நாற்றத்திற்குள்ளாகி தீண்டுவாரின்றி கிடந்தன. உத்பாவின் மகளாகிய ஹின்தா(அபூஸுப்யானின் மனைவி) ஹம்ஸாவின் ஈரலைப் பிடுங்கி பற்களால் கடித்து துப்புவேன் என்று சபதமேற்கிறார். ஹம்ஸாவைக் கொன்றால் உம்மை அடிமைத் தலையிலிருந்து விடுவிப்பதோடு பொன்னும் பொருளும் சன்மானமாய்த் தந்து சிறப்புவிக்கிறோம். என்று வஹ்ஷீ இனம் நீக்ரோ அடிமையையும் தயார் செய்தார்கள் இவன் ஜுபைர் இப்னு முத்அம் என்பவரின் அடிமை. வஹ்ஷீ குறிபார்த்து ஈட்டி எறிவதில் கைதேர்ந்தவன். பத்ருப் போரின் தோல்வியை ஜீரணிக்க முடியாத மக்கா நிராகரிப்பாளர்கள் பழிதீர்க்கும் பொறுட்டு துவங்கிய போர்தான் உஹதுப் போர். இப்போரின் ஆரம்ப நிலை இஸ்லாமியர்களின் பக்கம் சாதகமாகத்தான் இருந்தது. குறைஷியர்கள் விட்டு விட்டு ஓடிய போரின் கனீமத் -போர்ப் பொருட்-களை கண்ணுற்ற முஸ்லீம் வீரர்கள் அண்ணலாரின் கட்டளையை மீறி அங்கிருந்து இடம் பெயர்ந்து அப்பொருட்களை வாரி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நிராகரிப்பாளர்கள் தருணம் பார்த்து பின்புறமாக தாக்குதல் நடத்தி பெருஞ் சேதத்தை விளைவித்தனர். ஆக ஆரம்பத்தில் வெற்றியடைந்த முஸ்லிம்கள் நபிகளாரின் கட்டளையை சிலர் புறக்கணித்ததால் இறுதியில் பெரும்பாதிப்பைச் சந்திக்கின்றனர். சிலர் செய்த தவறின் விளைவால் 70 நபித்தோழர்கள் ஷஹீதாக்கப்படுவதுடன் நபி (ஸல்) அவர்களும் காயப்படுத்தப்படுகிறார்கள்.

போர்களத்தில் ஹின்தா ஹம்ஸா(ரழி)யைக் கொல்வதற்கு உரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சந்தர்ப்பத்தில் ஹம்ஸா(ரழி) வேறு ஒருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் போது வஹ்ஷீ வீசிய ஈட்டி ஹம்ஸா(ரழி) அவர்களின் இடுப்பில் நுழைந்து கால்கள் வழியாக வெளியேறியது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்த நிலையில் எதிரிகளால் தாக்கப்பட்டுத் தம் இன்னுயிரை நீத்தார் ஹம்ஸா(ரழி). அவர்களின் உடலை சின்னாபின்னப் படுத்தி உடலை கூறு போடுகின்றனர் நிராகரிப்பாளர்கள். அவரின் ஈரக்குலையை பல்லினால் கடித்து துப்புகிறாள் ஹிந்தா. போர் முடிந்து ஷஹீதான சகாபாக்களின் உடல்களை சேகரித்து கபனிட்டு அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணலாருக்கு ஹம்ஸா(ரழி)யின் சிதைக்கப்பட்ட உடலைக் கண்டதும் நான் இது போன்ற வேதனை இதுவரையில் அனுபவிக்கவில்லை என சோகத்தினால் கண்ணீர் வடிக்கிறார். மக்கா வெற்றிக்குப் பின் ஹிந்தாவும் வஹ்ஸியும் இஸ்லாத்தை தழுவி விடுகின்றனர். இருப்பினும் நீங்கள் என் கண்முன் தோன்ற வேண்டாம் என அவர்களை மன்னித்து அப்புறப்படுத்தி விடுகின்றனர். நபிகளார்.

படிப்பினை:

ஹம்ஸா(ரழி) அவர்கள் முதலில் நன்றாக சிந்தித்து மார்க்கத்தை ஏற்றார்கள். ஈமான் கொண்ட பிறகு அதிலே மிகவும் உறுதியாக நின்று தன் இறுதி மூச்சுவரை இஸ்லாத்திற்காகவே போராடினார்கள். அவர்களுடைய வீரம் எதிரிகளை நடுங்கச் செய்யக் கூடியதாக இருந்தது.

தொழுகையை அதற்குரிய நேரங்களில் தொழுவது, பெற்றோரைப் பேணுவது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது – இவை செயல்களில்(அமல்களில்) மிகச் சிறந்தவை. (புகாரி, திர்மிதி-இப்னு மஸ்ஊத்)

பேரீத்தம் பழம் ஒன்றை கையில் வைத்திருந்த நபித்தோழர் ஒருவர் அண்ணல் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவோர்க்கு சுவனம் கிடைக்குமா? என்று வினவ நபிகளார் ஆம் என்று பதில் அளித்தவுடன் கையிலுள்ள பேரீத்தம் பழத்தை தூக்கி எறிந்து விட்டு போர் புரிந்து வீரமரணமமைகிறார் – புகாரி.

மேற்கூறிய இரு நபிமொழிகளின் படியும் அருள்மறையின் 2:155,156 வசனத்திற்கேற்ப அனைத்து சோதனைகளுக்கும் ஆட்பட்டு இறுதியாக தனது உயிரையும் இறைவனுக்காகவே அர்ப்பணித்தார்கள். அதே போன்று நம்மையும் ஈமானில் உறுதியும், எதிரிகளைக் கண்டு நடுங்காமல் அவர்களை நடுங்கச் செய்யக் கூடிய வீரமும் உடையவர்களாக ஆக்க வல்ல நாயனிடமே வேண்டுவோம்.

(… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

நன்றி:- http://www.ottrumai.net/

  • அண்ணல் நபி (ஸல்)
  • அல் குர்ஆன்
  • அல்லாஹ்வின் திருநாமங்கள்
  • அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
  • அஹ்லுல் பைத்
  • இஸ்லாம் இலகுவான மார்க்கம்
  • ஈத் முபாரக்
  • உம்ரா
  • உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
  • எது முக்கியம்?
  • கடமையான குளிப்பு
  • கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
  • குழந்தைகள்
  • சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
  • ஜனாஸா (மய்யித்)
  • ஜும்ஆ
  • துஆ
  • தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
  • தொழுகை
  • நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
  • நல்லறங்கள்
  • நோன்பு
  • பர்தா
  • பார்வை
  • பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
  • பெற்றோர்
  • மனைவி
  • முன்மாதிரி முஸ்லிம்
  • யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
  • வலிமார்கள்
  • வாழ்வின் முன்னேற்றத்திற்கு
  • விதியின் அமைப்பு
  • ஷிர்க் என்றால் என்ன?
  • ஸலாம் கூறுவதன் சிறப்பு
  • ஸுன்னத் வல் ஜமாஅத்
  • ஹஜ்
  • Sadaqa
  • Sadaqat-Ul-Jariyah
  • பிரிவுகள்:ஹம்ஸா ரலி, ஹம்ஸா ரழி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    பிலால் ரழி


    பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

    பிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.

    ஏகத்துவக் கொள்கைளின் எதிரில் இணைவைப்பும், தனிமனித வழிபாட்டின் அனுஷ்டானங்களும் புரோகிதமும் தவிடு பொடியாவதைக் கண்டு வெகுண்ட மக்கத்து இணைவைப்பாளர்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொன்டோரைக் கொடுமைப் படுத்துவதில் சிறிதும் சளைக்கவில்லை. உமைய்யா பின் கலஃப் தன் அடிமையான பிலால்(ரழி) அவர்கள் மீது ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக சினந்து தம்வம்சத்தாரின் துணையுடன் அவரை மிகவும் கொடுமைப் படுத்தினான். சுடும் பாலைவன மணலில் அவரை ஆடையின்றி கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து பிலால் (ரழி) அவர்கள் சற்றும் அசைய முடியாதவாறு செய்து துன்புறுத்தினான். சித்தரவதையின் உச்சநிலையை உணர்ந்த போதும் பிலால் (ரழி) அவர்கள் தான் ஏற்றிருந்த ஏகத்துவ கொள்கையிலிருந்து எள் முனையும் மாறவில்லை அவர்களின் உடல் சித்தரவதையால் சின்னா பின்னப் படுத்தப்பட்டு கசையடி, அடி உதை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டும் கூட ”அஹதுன் அஹதுன்’ என்றே கூறினார்கள்.

    இணைவைப்பாளர்களின் இத்தண்டனைகள் சித்தரவதைகள் யாவுமே பிலால் (ரழி) அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கையை மேன்மேலும் உறுதிப் படுத்தவே உதவியது. அடிமையாய் இருந்து இவ்வாறு சித்தரவதைகளுக்கு ஆளாகிய பிலால் (ரழி) அவர்களை விடுதலை செய்ய எண்ணிய அபூபக்கர் (ரழி) அவர்கள் அவரின் எஜமானிடம் பிலால்(ரழி) அவர்களை விலைக்கு கேட்கிறார்கள். 10 தங்க காசுகளுக்கு பிலால் (ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்களிடம் உமைய்யா விற்று விட்டு எக்காளத்தில் கூறுகிறான் இவரை நீர் ஒரு தங்கக் காசுக்கு கேட்டிருந்தாலும் நான் விற்றிருப்பேன் எனக் கூறுகிறான். பிலால் (ரழி) அவர்களுக்காக வேண்டி நீ 1000 தங்கக் காசுகள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன் என அபூபக்கர்(ரழி) அவர்கள் அவனுக்கு பதில் அளித்தார்கள். பின்னர் பிலால்(ரழி) அவர்களை அபூபக்கர் (ரழி) அவர்கள் விடுதலை செய்தார்கள்.

    மதினாவிற்கு இடம் பெயர்ந்தபின் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பிலால்(ரழி) அவர்களின் நடைமுறைகள் நபிகளாரைக் கவர்ந்தன. மதீனா பள்ளியில் மக்களை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு கூறும் பணிக்கு நபி(ஸல்) அவர்கள் பிலால்(ரழி)யை நியமிக்கிறார்கள். அபிஷீனிய அடிமைக்கு இத்தனை பெரிய அந்தஸ்த்தா? என இணைவைப்பாளர்கள் எரிச்சலடைந்தனர். முதல் இமாம் நபி (ஸல்) முதல் முஅத்தீன் பிலால் (ரழி) என நாம் அறிகிறோம்.

    பிலால் (ரழி) பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்ட சஹாபிகளில் ஒருவர். அப்போரில் இணைவைப்பாளனான உமைய்யாவை (முன்னாள் எஜமான்) பிலால் (ரழி) அவர்கள் கொன்றார்கள். மக்கா வெற்றி கொள்ளப் பட்டதும் அல்லாஹ்வின் ஆலயமாம் கஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் நுழைந்த மூவரில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி அப்புறப் படுத்திய பின்னர் முதன் முதலில் பாங்கோசையை முழங்கியவரும் அவரே. நபிகளாரின் மரணத்திற்குப் பின் அண்ணல் நபிகளின் மீது கொண்ட அளவு கடந்த பற்றினால் பாங்கு சொல்லும் போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவதை உணர்ந்த பிலால் (ரழி) பாங்கு கூற மறுக்கிறார்கள். தான் சிரியா சென்று ஜிஹாத் செய்யப்போவதாக அபூபக்கர் (ரழி) யிடம் சொல்கிறார்கள். அபூபக்கர் (ரழி) பிலால் (ரழி) அவர்களை பாங்கு கூறுமாறு உத்தரவிடுகிறார்கள். அதற்கு பிலால் (ரழி) அவர்கள் நீர் எம்மை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தது அல்லாஹ்வின் அருளை நாடியா? அல்லது உம் கட்டளைக்கு கீழ்படிய வேண்டியா? என்று வினவினார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களுக்கு சிரியா செல்ல அனுமதி தந்தார்கள். சிரியா சென்றடைந்த பிலால் (ரழி) அவர்களை உமர் (ரழி) அவர்கள் தன் ஆட்சி காலத்தில் அங்கு சென்று சந்தித்து பாங்கு கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள். பாங்கு கூறுகிறார்கள் பிலால் (ரழி) அவர்கள்.

    பனுஜுஹ்ரா வம்சத்து பெண் ஒருவரையும் ஹிந்துல் கூலானிய்யா என்ற பெண்னையும் மணமுடித்திருந்த பிலால் (ரழி) அவர்களுக்கு குழந்தைகளேதுமில்லை. தம் 70 வது வயதில் சிரியாவின் தலை நகரான டமாஸ்கஸில் இயற்கை எய்தினார்கள். மிஃராஜ் சென்று திரும்பிய நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சுவனத்தில் உமது காலடியோசையை நான் கேட்டேன். நீர் செய்யும் நல்லறம் எது? என நபிகளார் வினவியதற்கு நான் எப்பொழுது ஒலுச் செய்தாலும் உடனே 2 ரக்காஅத் தொழும் வழக்கமுடையவனாக இருக்கிறேன் என பதிலளித்தார்கள்.

    படிப்பினை : அல்லாஹ் அருள் மறையில் எங்கெல்லாம் ஈமான் கொள்வதைக் குறிப்பிடுகிறானோ அங்கெல்லாம் நல்லறங்கள் புரிவதையும் இணைத்தே கூறுகிறான்.

    நான் எதை ஏவியுள்ளேனோ அதை இயன்றவரை செய்யுங்கள். நான் எதைத் தவிர்ந்து கொள்ளக் கூறினேனோ அதை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளுங்கள். எனும் நபி மொழிக் கேற்ப பிலால் (ரழி) அவர்களின் வாழ்வு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்களின் வழியில் நாமும் செயல்பட்டு மறுமையில் வெற்றியடைய அல்லாஹ் அருள் புரிவானாக.

    (… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

    நன்றி:- http://www.ottrumai.net/

  • அண்ணல் நபி (ஸல்)
  • அல் குர்ஆன்
  • அல்லாஹ்வின் திருநாமங்கள்
  • அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
  • அஹ்லுல் பைத்
  • இஸ்லாம் இலகுவான மார்க்கம்
  • ஈத் முபாரக்
  • உம்ரா
  • உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
  • எது முக்கியம்?
  • கடமையான குளிப்பு
  • கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
  • குழந்தைகள்
  • சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
  • ஜனாஸா (மய்யித்)
  • ஜும்ஆ
  • துஆ
  • தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
  • தொழுகை
  • நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
  • நல்லறங்கள்
  • நோன்பு
  • பர்தா
  • பார்வை
  • பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
  • பெற்றோர்
  • மனைவி
  • முன்மாதிரி முஸ்லிம்
  • யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
  • வலிமார்கள்
  • வாழ்வின் முன்னேற்றத்திற்கு
  • விதியின் அமைப்பு
  • ஷிர்க் என்றால் என்ன?
  • ஸலாம் கூறுவதன் சிறப்பு
  • ஸுன்னத் வல் ஜமாஅத்
  • ஹஜ்
  • Sadaqa
  • Sadaqat-Ul-Jariyah
  • அஸ்மா பின்த் அபூபக்கர் ரழி


    இப்போது நாம், இஸ்லாமிய வரலாற்றில் புகழுடன் ஒளிவீசும் தாரகையாய்த் திகழ்கின்ற ஒரு மகத்தான பெண்மணியின் சரிதையைக் காணப் போகின்றோம்.

    அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜூபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி)யின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்களின் வரலாறுதான் அது!

    இறைவனின் மீது உண்மையான உறுதியான நம்பிக்கை கொண்ட அஸ்மா (ரழி) அவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!

    ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பத் தலைவியை வறுமையும் துன்பமும் வந்து வாட்டிய காலமும் உண்டு. அப்போது அவர்கள் பொருமையின் சிகரமாய் ஒளிர்ந்தார்கள். பிறகு செழிப்பும் வளவாழ்வும் வந்து மகிழ்வித்தன. அப்போது கிஞ்சிற்றும் செருக்குறாமல் குணத்தின் குன்றாய் வாழ்ந்துகாட்டி பெண்குலத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியைப் படைத்தார்கள்.

    அவர்களின் வாழ்க்கை

    வறுமைக்கு இலக்காகும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்! பெண்ணினத்தை இழிவுக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு ஒரு பெண் ஆணைவிடவும் அதிக அறிவு பெற்றவளாக, சிறந்தவளாக திகழ முடியும் எனும் உண்மையின் நிரூபணம்!

    பெண் என்றால் ஓர் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும், வெளியலங்காரத்தையும் பகட்டையும் தவிர வேறெந்த நன்மையோ குறிக்கோளோ அவளிடம் இல்லை என்று கருதுபவர்களுக்கு பெண் என்பவள் வெறும் வெளியலங்காரம் எனும் நிலையை விட்டு உயர்ந்தவள், சமுதாயப் புத்தமைப்பில் ஓர் அங்கமாகவும் சமுதாயத்தின் உயர்வையும் சிறப்பையும் நிலைநாட்டுவதற்கு உறுதுணையாகவும் அவள் இருந்திட முடியும் எனும் உண்மையின் தெளிவுரை!

    இஸ்லாத்தைத் தழுவுதல்

    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா (ரழி) அவர்கள் இஸ்லாத்தின் முன்னணிப படையில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்!

    மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணை வைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி எழுந்ததும் பிறகு எத்துணை பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின என்பதும் யாவரும் அறிந்ததே!

    அல்லாஹ்வின் அருமைத் தூதரும் அவர் தம் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களும்கூட அக்கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது. எவ்விதத் தளர்வோ தயக்கமோ அடைந்தார்களில்லை. இக்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமெனப் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்!

    இறுதியில் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் அன்புத் தூதருக்கும் அவர்தம் தோழர்களுக்கும் அனுமதி வழங்கினான்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றிபெற அஸ்மா (ரழி) அவர்கள் ஆற்றிய சேவை என்ன?

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட இந்நிகழ்ச்சி வெளிரங்கத்தில் ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!

    ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!

    இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!

    ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்கு உள்ளாகும் நிலைமை!

    ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்! அண்ணலாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் அலீ (ரழி) அவர்களுக்குத் தெரியும்! அடுத்து, சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா (ரழி) அவர்களுக்கும் அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும்! அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.!

    அஸ்மா (ரழி) அவர்களின் சாதுர்யம்

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள், குறைஷி குலத்து வன்னெஞ்சர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த தம்முடைய இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறி தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையை அடைந்தார்கள். எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் அந்நாட்களில் அஸ்மா (ரழி) அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்!

    அங்கே மக்காவில்…….! அண்ணலாரின் வீட்டுக்கு வெளியே தங்களின் கொடிய கொலைபாதகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நபியவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த எதிரிகளுக்கு……. பாவம.;….! வீட்டினுள் விரிப்பில் படுத்துக் கொண்டிருப்பது முஹம்மத் (ஸல்) அல்ல, அலீ (ரழி) தான் என்பது அதிகாலை நேரம் புலர்ந்ததும் தான் தெரிய வந்தது! ஆனால் அப்போது அவர்களால் என்ன செய்திட முடியும்?

    அவர்களின் தலைவன் அபுஜஹ்ல் தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்தது கண்டு வெகுண்டெழுந்தான்…….! அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது!

    அவனும் அவனுடைய தோழர்களும் அவர்களுக்கே உரிய போலிப் பகட்டெனும் செருக்குடனும் அபூபக்கர் (ரழி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்! உள்ளே இருந்து வெளியே வந்தது வேறு யாருமல்ல, இளம் வயதுப் பெண்மணியாகிய அஸ்மா (ரழி) தான்! குகையில் தங்கியுள்ள அண்ணலாருக்கம் தம் அன்புத் தந்தையாருக்கும் வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்!.

    உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி! அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:

    உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் அதட்டினான்: மிரட்டினான் ஆனால் அஸ்மா (ரழி) அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அன்பே உருவான அஸ்மா (ரழி) அவர்களின் அழகிய கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!

    ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் இப்படித்தான் செய்வார்கள் ஆண்களிடம் தங்களின் ஜம்பம் பலிக்காவிட்டால் பாவம்! பெண்களைத்தான் அடிப்பார்கள்!

    பொறுமைக் கடலான அஸ்மா (ரழி) அவர்கள் அந்த அற்பனின் அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனித்திடலானார்கள். அந்தக் கோழைகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை ஹிஜ்ரத் பயணம் இப்போது முன்னைவிட ஜாக்கிரதையாக தௌர் குகையிலிருந்து தொடர்ந்திட வேண்டியதிருப்பதால்!

    அஸ்மா (ரழி)யின் சகோதரர் அபூபக்கர் அவர்களின் மூத்த புதல்வர் அப்துல்லாஹ் என்பவர் (அதுவரை அவர் முஸ்லீம் ஆகாமல் இருந்தார்) பகல் நேரங்களில் மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்து எதிரிகளின் திட்டங்கள், செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொண்டு வருவார். மாலை நேரத்தில் தம் சகோதரியுடன் குகைக்கு வந்து எல்லாச் செய்திகளையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பார்!

    அபூபக்கர் (ரழி) அவர்களின் வேலையாள் அமீர் இப்னு ஃபுஹைரா என்பவரின் மூலம் ஒரு தற்காப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது! அது என்ன? அவர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டே சென்று குகை அருகே வருவார். அங்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் பால் கறந்து கொடுத்துவிட்டு, பிறகு அஸ்மா (ரழி) அவர்களும் அவர்தம் சகோதரரும் குகையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பின்னாலேயே அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்! அதன்மூலம் அவ்விருவரின் காலடிச் சுவடுகளை அழித்து விடுவார். எதிரிகளில் எவனாவது ஒருவன் அவ்விருவரின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றுவிட்டால்..! இரகசியம் வெளிப்படுவதற்கான அந்த வழியும் இந்த ஏற்பாட்டினால் அடைக்கப்பட்டது!

    இளம் வயதுடைய அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய நுட்பமான ஏற்பாடுகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றினார்களெனில் அவர்களின் அறிவுத் திறனை என்னவென்றுரைப்பது!

    குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களிடம் கூறினார்கள், அலீ (ரழி) அவர்களிடம் சென்று நாளை இரவு இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியாக நியமிக்கப் பட்டவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வரவேண்டும் என்று அறிவித்து விடுவீராக!

    அலீ (ரழி) அவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் கட்டளைப்படி வந்து சேர்ந்தார்கள்!

    மறுபுறத்தில் அஸ்மா (ரழி) அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்! அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது!

    உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.

    இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஷதாதுந் நிதாகைன்| (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா (ரழி) அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!

    பணமும் பாட்டனாரும்

    அஸ்மா (ரழி) அவர்களின் அறிவு அவர்களின் ஈமானைப் போன்று உயர்வானதாய் இருந்தது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாய் அமைந்திருந்தன. இதோ! மற்றொரு நிகழ்ச்சி!

    அபூபக்கர் (ரழி) அவர்கள் ஹிஜ்ரத்தின்போது வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துச் சென்றிருந்தார்கள்! எதற்காக? தம் குடும்பத்தினருக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக அல்ல! மாறாக, முஹம்மர் (ஸல்) அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேற்கொண்ட அழைப்புப் பணி உலகமெங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகத்தான்! தம்மை விடவும் தம் குடும்பத்தை விடவும் உயர்வாய்க் கருதிக் கொண்டிருந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனும் உன்னதக் குறிக்கோளுக்காகத்தான் அபூபக்கர் (ரழி) அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

    இந்த விஷயம் அவர்களின் தந்தை அபூகுஹாஃபாவுக்குத் தெரிய வருகிறது. அவர் முதியவராகவும கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார். அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! மிகுந்த மனவேதனையுடனும் கோபத்துடனும் வந்து தம்முடைய பேத்தியான அஸ்மா (ரழி) அவர்களை நோக்கிக் கேட்டார்.

    அபூபக்கர் உங்களை மற்றொரு துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். உங்களைத் தன்னந்தனியே விட்டு விட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தன்னுடைய பணம் முழுவதையும் உங்களுக்குத் தராமல் கொண்டு சென்று விட்டாரே?’

    என் அன்புப் பாட்டனாரே! அப்படியல்ல என்று பதிலளித்த அஸ்மா (ரழி) அவர்கள் முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் கொண்டுவந்து அபூபக்கர் (ரழி) அவர்கள் பணம் வைத்துக் கொண்டிந்த பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துவிட்டார்கள்.!

    இங்கு வந்து பாருங்களேன்!’ என்று கூறி பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று அந்தப் பையில் வைத்து ‘இது என்னவென்று சொல்லுங்கள்’ என்றார்கள்!

    அப்போது அபூகுஹாஃபா (ரழி) அவர்கள் மனம் நிம்மதி அடைந்து, ‘இதனை உங்களுக்காக விட்டுச் சென்றுள்ளாரெனில் நல்லதைத்தான் செய்துள்ளார்’ என்று கூறினார்கள்.

    அசத்தியவாதிகளின் நரித்தனமான பிரச்சாரம்.

    ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையை ஏற்று முஸ்லிமகள் மக்காவை விட்டு மதீனாவில் குடியேறிய தொடக்கத்தில் மதீனாவின் தட்பவெப்ப சூழ்நிலை முதலில் அவர்களின் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இறைவனின் நாட்டப்படி, சிறிது காலம் முஹாஜிர்களின் எந்தக் குடும்பத்திலும் குழந்தைகளே பிறக்கவில்லை.

    இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் இந்த இயற்கையான நிலையைக்கூட எதிர்ப்பு ஆயுதமாகக் பயன்படுத்தத் தவறவில்லை. உடனே வதந்திகளைக் கிளப்பினார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்களில் ஒருவருக்குக்கூட குழந்தை பிறக்கவில்லை. அவர்களுக்குப் பிறகு அவர்களின் பெயரைக் கூற சந்ததிகளே இருக்கமாட்டார்கள் என்று அறிவுக்குப் புறம்பான அநாகரீகமான பொய்யைப் பரப்பிவிட்டு, அதன்மூலம் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.

    அசத்தியவாதிகளின் எல்லா வழிகளிலும் தங்களின் நரித்தனத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இன்று வரைக்கும் நாம் கண்டுவரும் உண்மைதானே!

    அஸ்மா (ரழி) அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!

    ஓரிரு மாதங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரையும் ஏனைய நெருங்கிய உறவினர்களையும் அழைத்து வருவதற்காக ஜைத் இப்னு ஹாரிஸா (ரழி) மற்றும் அபூ ராஃபிஉ (ரழி) இருவரையும் மக்காவுக்கு அனுப்பினார்கள். இதுபோன்று அபூபக்கர் (ரழி) அவர்கள் தம் பணியாளின் மூலம் தம் மகன் அப்துல்லாஹ்வுக்குக் கடிதம் கொடுத்து விட்டார்கள். அதில் அப்துல்லாஹ்வின் தாயார் உம்மு ரூமானையும் (அபூபக்கர் (ரழி) அவர்களின் இரண்டாவது மனைவி) அவரது சகோதரிகளையும் மதீனாவுக்கு அழைத்து வருமாறு ஏவப்பட்டிருந்தார்.

    அதற்கு ஏற்ப அப்துல்லாஹ் தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா, ஆயிஷா (ரழி) இருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!

    அஸ்மா (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனந்த மிகுதியால் அல்லாஹூ அக்பர்| என்று முழங்கினார்கள்.

    அஸ்மா (ரழி) அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி (ஸல்) அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்!

    இந்தச் செய்தியைக் கேட்ட யூதர்கள் பொறாமைத் தீயில் வெந்தார்கள்.

    ஏழை மணாளரின் மனைவி!

    அஸ்மா (ரழி) அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் வாழ்க்கைப்பட்ட குடும்பமும் மக்கா நகரில் பெரும் செல்வாக்குப் பெற்ற, வளம் கொண்ட குடும்பங்களாய் இருந்தன. ஆம்! அவர்கள் மக்கா நகரின் பெருந்தலைவரின் (அபூபக்கர் (ரழி) அவர்களின்) மகள், மாபெரும் தலைமைக் கோத்திரத்தின் செல்வச் செழிப்புள்ள இளைஞரின் (ஜூபைர் (ரழி) அவர்களின்) மனைவி! குறைஷிகளிடையே மதிப்பு மரியாதை கொண்ட தலைவரான அப்துல் உஸ்ஸா என்பவரின் மகளார் கதீலா என்பவர்தான் அவர்களின் தாயார்!

    ஆயினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக மக்கத்து குறைஷிகளின் தயவினால் எவ்வாறு பெரிய பெரிய மனிதர்களின் பொருளாதார நிலை பாழாக்கப்பட்டதோ அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களும் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளப்பட்டார்கள்!

    ஜூபைர் (ரழி) அவர்கள் அப்போது 17 வயது இளைஞர். இஸ்லாத்தை தழுவியதற்காக முதலில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை அடித்து உதைத்தார்கள். வீட்டில் அடைத்து வைத்தார்கள். அப்படியும் அவர்களின் பிடிவாதம் தெளியவில்லை என்றானபோது அவர்களை வீட்டிலிருந்து விரட்டினார்கள். இறுதியில் ஜூபைர் (ரழி) அவர்கள் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!

    செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழை மணாளருக்குத்தான் அஸ்மா (ரழி) அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள். அவர்கள் மனம் சோர்ந்திடவில்லை. ஏழை என்றாலும் பரவாயில்லை. அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் எனும் வகையில் மகிழ்வோடு அந்தத் திருமணத்தை அஸ்மா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

    கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!

    மதீனாவில் ஆரம்ப காலத்தில் தாம் பட்ட கஷ்டங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அஸ்மா (ரழி) அவர்களே விளக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவர்களின் வாய்மொழியாகவே கேட்டால் நல்லது என்கின்றீர்களா? இதோ கூறுகின்றார்கள், கேளுங்கள்!

    ஜூபைர் (ரழி) அவர்களுடன் எனக்குத் திருமணம் நடைபெற்ற நேரத்தில் அவரிடம் பணம் இல்லை, எந்தப் பணியாளும் இல்லை! வறுமை வயப்பட்டும் அளவு கடந்த துன்பத்திற்குள்ளானவராகவும் இருந்தார்கள். அவருக்கென உரியவை ஒரு குதிரையும் ஓர் ஒட்டகமும்தான்! மேலும் நானே அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று!

    மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் பேரிச்சந் தோட்டமாக கொஞ்சம் நிலத்தை ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது! நான் தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளை பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு வருவேன். வீட்டிற்கு வந்து அவற்றை எனது கையாலேயே உடைத்து ஒட்டகத்திற்கு தீனியாகப் போடுவேன். வாளியினால் தண்ணீர் இறைத்து நிரப்புவேன். மேலும் வீட்டின் எல்லா வேலைகளையும் நானே செய்து கொண்டிருந்தேன். எனக்கு நல்லவிதமாக ரொட்டி சமைக்கத் தெரியாது. ஆகையால் மாவைப் பிசைந்து மட்டும் வைத்துவிடுவேன். எனது வீட்டுக்கு அருகில் அன்ஸாரிப் பெண்கள் சிலர் வசித்தார்கள். அவர்கள் வந்து அன்புடனும் பாசத்துடனும் ரொட்டிகள் சமைத்துத் தந்து கொண்டிருந்தார்கள்!’

    தினமும் இத்தகைய சிரமங்கள் எனக்கு நேர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் தோட்டத்திலிருந்து பேரீச்சங் கொட்டைகளை மூட்டை கட்டி சுமந்து வந்து கொண்டிருந்தேன். வழியில் நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் ஒட்டகத்தின் மீது இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் சிலரும் அவர்களுடன் வந்தார்கள்.

    இவ்வாறு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னை நபியவர்கள் கண்டபோது என் மீது இரக்கப்பட்டு ஒட்டகத்தைப் படுக்கச் செய்தார்கள். நானும் அதில் ஏறி அவர்களுக்குப் பின்னே அமர்ந்து செல்வதற்காக! ஆனால் நான் வெட்கத்தின் காரணத்தால் அதில் பயணமாகவில்லை!

    இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் (ரழி) அவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால் எனது சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.

    அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒரு பணியாளை நியமித்தபோது அஸ்மா (ரழி) அவர்கள் தமக்கு அரியாசனமே கிடைத்துவிட்டது போன்றுதான் உணர்ந்தார்கள்! அப்படியெனில் அவர்கள் அன்றாடம் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதைப் பாருங்கள்!

    இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். ‘இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்’ என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

    வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே! என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளே, கண்மணி அஸ்மா (ரழி) அவர்களின் மீதி வரலாற்றையும் கேளுங்கள்!

    அஸ்மா (ரழி) அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா (ரழி) அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் தனவந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜூபைர் (ரழி) அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!

    அவர்களுடைய வாழ்கையின் இலக்கணம் இதுதான்!

    அஸ்மா (ரழி) அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத் துறையில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை! அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்’ என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை! நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜூபைர் (ரழி) அவர்களும் சம்பாதித்தார்கள்!

    முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.

    இதன் காரணமாகத்தான் ஜூபைர் (ரழி) அஸ்மா (ரழி) தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா (ரழி) அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எழிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!

    ஒருபோது அவர்களின் மகன் முன்திர் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் ஈராக்கின் போரிலிருந்து திரும்பி வரும்போது தம் தாயாருக்காக மிகவும் விலை உயர்ந்த மெல்லிய மென்மையான சேலைகளை வாங்கி வந்தார். அவற்றைத் தம் தாயாரிடம் அவர் கொடுத்தபோது, அச்சேலைகளின் பளபளப்பையும் மென்மையையும் பார்த்த அஸ்மா (ரழி) அவர்கள், ‘நான் இதுபோன்ற மெல்லிய சேலைகளை அணிவதில்லை’ என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்!

    ஆம்! அஸ்மா (ரழி) அவர்கள் வறுமையின் காரணத்தால் பல மைல்களுக்கு அப்பாலிருந்து பேரீச்சங் கொட்டைகளைச் சுமந்து… அன்று பட்ட கஷ்டங்களின் பாடங்களை மனத்தில் பசுமையாக்கிக் கொண்டிருந்ததால் இன்று பெருமைக்கு ஆளாகவில்லை! பகட்டையும் பளபளப்பையும் விரும்பவில்லை!

    ஆனால் ஒரு கேள்வி எழலாம். செல்வ நிலை ஏற்பட்ட பிறகும் அஸ்மா (ரழி) அவர்கள் முரட்டு ஆடைகளை உபயோகித்துக் கொண்டு ஏழ்மைக் கோலத்தில் வாழ்ந்தார்களெனில், பழைய கருமித்தனத்தை இன்னும் கைவிட்டார்களில்லை என்றுதானே பொருள்?

    இல்லை! அஸ்மா (ரழி) அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எழியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். அவர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையைப் பாருங்கள்.

    பிறருக்கு உதவி செய்வதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்தான் இறைவன் செல்வத்தை வழங்குகிறானே தவிர, சேமித்து வைப்பதற்காக அல்ல! ஆகையால் அல்லாஹ்வின் அடிமைகளுக்கு உதவுங்கள்! உங்கள் செல்வத்திலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளுக்கு நீங்கள் உதவிடவில்லை யானால் அது கஞ்சத்தனம் ஆகும்! அப்போது அல்லாஹ்வும் தனது அருளையும் கருணையையும் உங்களுக்கு வழங்காது போய்விடுவான். நீங்கள் தான தர்மங்கள் செய்வீர்களாயின் உண்மையில் அதுவே உங்களுக்கான சிறந்ததொரு பொக்கிஷமாகும். அது என்றைக்கும் குறைந்து விடாது. மேலும் அது வீணாகிப் போய்விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை.’

    இது போன்ற அறிவுரைகளை வழங்கிய அதே நேரத்தில் செயல் ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள் அஸ்மா (ரழி) அவர்கள்! அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா (ரழி) அவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை. கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா (ரழி) அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.’

    பிற்காலத்தில் அவர்களின் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா (ரழி) அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!

    இப்படிக் கணக்கின்றி வழங்கும் கரமுடையவர்களாய் அஸ்மா (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் கணவர் ஜூபைர் (ரழி) அவர்களின் இயல்பில் கொஞ்சம் கடுமை இருந்தது. ஆகையால், அஸ்மா (ரழி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள்.

    அல்லாஹ்வின் தூதரே! என் கணவரின் சொத்திலிருந்து அவரின் அனுமதி இன்றி அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து உதவலாமா?’

    நபியவர்கள், ‘ஆம்! கொடுக்கலாம்’ என்றார்கள்.

    சுவரின் நிழலும் சிறு வியாபாரியும்

    அஸ்மா (ரழி) அவர்கள் இத்தகைய தாராளத்துடன் நடந்து கொண்டாலும் வீடு வாசல்களைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். எவ்வளவு சிறிய பிரச்சனையானாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருந்தார்கள்!

    ஒரு தடவை வீட்டில் ஜூபைர் (ரழி) அவர்கள் இல்லாதபோது ஏழை வியாபாரி ஒருவர் வந்து அஸ்மா (ரழி) அவர்களிடம் உதவி வேண்டி நிற்கின்றார். ‘உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் பொருட்களை வைத்து விற்பதற்கு அனுமதி தாருங்கள்’ என்று கோரினார்.

    அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

    நான் அனமதி வழங்கிவிடுவேன் ஆனால் ஜூபைர் (ரழி) அவர்கள் வந்து மறுத்து விடுவார்களாயின் பெரிய சிக்கலாய் போய்விடும். ஆகையால் வீட்டில் அவர்கள் இருக்கும்போது வந்து கேளுங்கள்!’

    ஜூபைர் (ரழி) அவர்கள் வீடு திரும்பியபோது மீண்டும் அந்த வியாபாரி வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு தனது கோரிக்கையை வத்தார்.

    அப்துல்லாஹ்வின் தாயார் அவர்களே! நான் ஓர் ஏழை. அன்றாடம் சில பொருட்களை விற்றுத்தான் பிழைக்கின்றேன். உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் அமர்ந்து வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து அனுமதி தாருங்கள்.’

    அஸ்மா (ரழி) அவர்கள் ‘எனது வீட்டை விட்டால் மதீனாவில் உமக்கு வேறு வீடு கிடைக்கவில்லையா?’ என்று அதட்டுவது போன்று கேட்டார்கள்.

    இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டிருந்த ஜூபைர் (ரழி) அவர்கள், ‘உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஓர் ஏழை வியாபாரம் செய்வதைத் தடுக்கின்றாயே?’ என்று தம் மனைவியைக் கண்டித்தார்கள்!

    உடனே அஸ்மா (ரழி) அவர்கள் அனுமதி வழங்கிவிட்டார்கள். அதைத்தானே அவர்கள் எதிர்பார்த்தார்கள்!

    தாயின் பாசமும் இறைவசனமும்.

    ஓரிறைக் கொள்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் அஸ்மா (ரழி) அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். இறைவனை நிராகரிக்கும் போக்கும், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் கடவுளாகக் கருதி அவற்றை வணங்கி வழிபடுவதும் அவர்களுக்கு அறவே பிடிக்காது! எந்த அளவுக்கெனில். அப்படி வாழும் இணைவைப்பவர்களை அவர்கள் மிக நெருங்கிய உறவினர்களாயினும் சரியே, மிகக் கடுமையாக வெறுப்பவர்களாய் இருந்தார்கள்!

    அன்றைய சமூகத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய உறவினர்களில் அல்லது தூரத்து உறவுமுறையுடையவர்களில் சிலர் அல்லது பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருந்தார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களில் சிலர் கடும் பகைவர்களாகி இஸ்லாத்தை அழிக்கும் கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர்! இத்தகைய கடும் பகைவர்களுடன் எவ்விதத் தொடர்பும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது.

    ஒருவர், இறைவன் மீதும் இஸ்லாத்தின் எதிரிகளிடமும் ஒரே நேரத்தில் நேசம் கொள்வது என்பது எப்படி சாத்தியமாகும்? நம்முடைய நெருங்கிய உறவினர்களாயிற்றே என்று அந்த எதிரிகள் மீதான அன்புக்கும் தன் உள்ளத்தில் இடம் அளித்து, அவர்களிடம் நேசம் பாராட்டி நெருங்கிப் பழகும் மனிதரை உண்மையான இறைநம்பிக்கையாளராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    இந்நிலையில்தான் ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா (ரழி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன.

    பிறகு எண்ணிப் பார்க்கின்றார்கள்! அவருடைய தாயார் இணைவைப்புக் கொள்கையில இருக்கின்றார். தீனுடைய இறைநெறியுடைய பிணைப்பு குடும்பப் பிணைப்பை விட சக்திவாய்ந்ததாகும். திருக்குர்ஆன் இப்படி அறிவுறுத்தியுள்ளது.

    (நபியே) அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எவர்கள் விரோதித்துக் கொண்டார்களோ அவர்களை நேசிக்கக் கூடியவர்களாய் இருக்கக் காணமாட்டீர், அப்படிப்பட்டவர்கள் அவர்களின் தந்தையராகவோ மகன்களாகவோ சகோதரர்களாகளோ அவர்களுடைய குடும்பத்தினராகவோ இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 58:22)

    அஸ்மா (ரழி) அவர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்துக்களெல்லாம் நிழலாடுகின்றன. உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள் என்று கூற மறுத்துவிட்டது!

    என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்’ என்று தன் சகோதரி ஆயிஷா (ரழி) அவர்களிடம் தூது அனுப்பினார்கள்.

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ‘ஆம்! உம்முடைய தாயாருடன் உறவு கொண்டு வாழுங்கள். அவரை வரவேற்று உபசரியுங்கள்’ என்று கூறிவிட்டு பின் வரும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘எவர்கள் உங்களுடன் தீனின் இறைநெறியின் விஷயத்தில் போரிடவில்லையோ மேலும் உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களுடன் நீங்கள் நல்ல முறையிலும் நீதத்துடனும் நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துகின்றவர்களை நேசிக்கின்றான். ஆனால் எவர்கள் தீனின் விஷயத்தில் உங்களுடன் போரிட்டார்களோ மேலும், உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றினார்களோ, அப்படி வெளியேற்றுவதில் பரஸ்பரம் உதவி செய்தார்களோ அவர்களுடன் நீங்கள் நட்புக் கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அத்தகையவர்களிடம் எவர்கள் நட்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அநீதியாளர்கள்தான். (அல்குர்ஆன் 60:8)

    இத்தகைய நீண்ட வசனத் தொடரை ஓதிக்காட்டி மனிதர்களுக்கிடையிலான நல்ல உணர்வுகளில் இஸ்லாம் என்றைக்கும் குறுக்கீடு செய்யாது. மனத்தில் எழும் உயர்ந்த எண்ணங்களைக் கொன்று விடாது எனும் உண்மையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரழி) அவர்களுக்கு உணர்த்திய பிறகு, அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!

    அஸ்மா (ரழி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.

    ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா (ரழி)யின் வரலாறு நமக்க வழங்குகின்றது!

    வீரம்

    அஸ்மா (ரழி) அவர்கள் இவ்வாறு கொள்கையில் எஃகு போன்ற உறுதியும் பொறுமையும் பெற்றிருந்த அதே நேரத்தில் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணமைடந்த பிறகு ஒருமுறை அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய கணவர் மற்றும் மகனுடன் ஷாம் தேசத்தின் போர்க்களத்தில் பங்கு பெற்றார்கள் என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் மிகப் பயங்கரமாக நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் பிற பெண்களுடன் சேர்ந்து தங்களுக்கே உரிய முக்கியமான போர்ப்பணிகளை ஆற்றியுள்ளார்கள்.

    மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா (ரழி) அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம். ‘ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?’ என்று மக்கள் கேட்டபோது, ‘திருடனோ, கொள்ளைக்காரனோ என்னுடைய வீட்டுக்கு வந்தால் இந்தக் கத்தியினால் அவனுடைய வயிற்றைக் கிழித்து விடுவேன்’ என்று பதிலளித்தார்கள்.

    தாய், மகனுக்கு ஆற்றிய உரை

    அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு இத்துணை உறுதியான மனநிலையையும் வீர உணர்வையும் ஒரு பெண்மணி பெற்றிட முடியுமா என்ற சிந்தனையிலும் திகைப்பிலும் நம்மை ஆழ்த்திவிடுகின்றது! அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீர மரணத்தின்போது சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைக் கேள்விப்படும் ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்னை அஸ்மா (ரழி) அவர்களைப் பற்றிய மிக உயர்ந்த மரியாதையும் மதிப்பச்சமும் நிறைந்துவிடும் என்பது திண்ணம்! வரலாற்றுத் தொகுப்புகளில் பொன்னெழுத்துக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அந்நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

    வரலாறு சான்று வழங்குகிறது:- ஜூபைர் (ரழி) அவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.

    ஜூபைர் (ரழி) அவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் (ரழி) அவர்களாவர். அன்று ஹிஜ்ரத் சகாப்தத்தின் தொடக்கத்தில் முஹாஜிர்களுடைய எந்தக் குடும்பத்திலும் குழந்தை பிறக்காதிருந்த நிலையில் முதல் குழந்தையாக| அஸ்மா (ரழி) அவர்கள் வீட்டில் பிறந்து, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புக்குரிய பிரார்த்தனையைப் பெற்றவர் இவர்தான். எவருடைய பெயரைக் கேட்டதும் பனூஉமையாக்களின் கலீஃபாக்கள் அச்ச மேலீட்டால் இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார்களோ அவர் ஜூபைரின் மகனாராகிய இந்த அப்துல்லாஹ்தான்!

    இவருடைய தியாக வரலாறு என்ன?

    அமீர் முஆவியா (ரழி) அவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை. ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள். செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் கலீஃபா அலீ (ரழி) ஃபாத்திமா (ரழி) தம்பதியினரின் மகனார் ஹூசைன் (ரழி) அவர்கள். மற்றொருவர்தான் ஜூபைர் (ரழி) அஸ்மா (ரழி) தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்!

    யஜீதின் படையினர் ஹுசைன் (ரழி) அவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை! உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.

    அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களின் வீரமரண நிகழ்ச்சி, பல உன்னதமான படிப்பினைகளை தன்னுள் கொண்டுள்ளதாகும். ஆனால் இங்கே அஸ்மா (ரழி) அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் விவரிக்கின்றோம். ஏனெனில் அவர்களுடைய வீரக்காவியத்தின் சில முன்மாதிரிகளை விளக்குவதுதானே நமது நோக்கம்!

    அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தொடர்ந்து யஜீதை எதிர்த்துப் போராடி வந்தார்கள். யஜீதுக்குப் பிறகு மர்வான் என்பவர் கலீஃபா ஆனார். இவரையும் மிகத்துணிவுடன் வெற்றிகரமாக எதிர்த்து வந்தார்கள். மர்வானுக்குப் பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!

    அவரால் எவ்வாறு வெற்றியடைய முடிந்தது என்பது நமது தலைப்பை விட்டு தூரமான விஷயமாகும். உண்மையாதெனில், ஹஜ்ஜாஜ் தமது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகளைப் பெற்றார். அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை அவர் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கினாரெனில் இறுதியில் அவர்கள் கஅபா ஆலயத்தினுள் அடைக்கலம் புகுந்து ஒளிந்திட நேரிட்டது!

    ஹஜ்ஜாஜ் அதுமட்டுமா செய்தார்? அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களை விட்டு அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கும் பிறகு தன்னிடம் வந்து சேருவதற்கும் உரிய அனைத்து சூழ்ச்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் உயிர்த்தியாகிகளாய் விளங்கிய, வாய்மையான வீரர்கள் ஒருசிலரே அவர்களுடன் இருந்தார்கள்.

    இந்நிலையில் ஹஜ்ஜாஜை எதிர்த்து மேற்கொள்ளும் போர் எப்படி வந்து முடியும் என்பது அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்களுக்குப் புலப்பட்டது! அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.

    அஸ்மா (ரழி) அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் பெருமைக்குரிய மகனார் எதிரே வந்து நின்றார். போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!

    மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ:-

    அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’

    அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!

    அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் இப்னு உமர் (ரழி) போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்…! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!

    அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

    என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||

    மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||

    உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!

    அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –

    என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!

    இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் யஜீதுக்கு எதிராக தாம் மேற்கொண்ட போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார்:-

    மகனே, இன்ஷா அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!

    இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

    மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு! என்று அறிவுறுத்தினார்கள்!

    அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

    பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!

    ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!

    மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற ஏன் அதனையும் விஞசும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

    இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!

    ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவர். சொல் நயமும் கருத்து வளமும் செறிந்த அவருடைய சொற்பொழிவு மக்களிடம் நல்ல மதிப்பையும் புகழையும் பெற்றிருந்தது! அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா (ரழி) அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.

    உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.

    நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.

    பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்!

    நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!

    இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.

    இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்

    இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.

    அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!

    ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!

    பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்| எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!

    வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!

    அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா (ரழி) அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!

    உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!

    மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!

    இதுதான் அஸ்மா (ரழி) அவர்களின் வீர வரலாறு! நபித் தோழியர்களுள் மிக நீண்டதோர் ஆயுள் காலத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே. அவர்களில் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். வரலாற்றில் நிகழ்ந்த எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் கண்டுள்ளார்கள். இஸ்லாத்திற்கு முரணான முந்திய அறியாமைக்கால வாழ்கை அமைப்பையும் கண்டார்கள். பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வு முழுவதையும் அடுத்து நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் பொற்கால ஆட்சியையும் காணும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்.

    மகத்தான சிறப்புடன் திகழ்ந்த தம்முடைய மகனார் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் புகழின் சிகரத்தில் இருந்த காலகட்டத்தையும் பார்த்தார்கள். போரில் கொல்லப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்ட கோரக்காட்சியையும் பார்த்தார்கள். எண்ணற்ற துன்பங்கள் தொடர்ந்து வந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இணையிலா உறுதியையும் இறைநம்பிக்கையையும் நிறைந்த பொறுமையையும் துணிவையும்தான் வெளிப்படுத்தினார்கள்.

    உயர் பண்புகளையும் உன்னதப் படிப்பினைகளையும் கொண்டு முழு நிலவாய் ஒளிரும் அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கும் பிற மக்களுக்கும் குறிப்பாக தீன் குலப் பெண்மணிகள் அனைவர்க்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும்!

     

    يَـٰٓأَيَّتُہَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَٮِٕنَّةُ (٢٧) ٱرۡجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً۬ مَّرۡضِيَّةً۬ (٢٨) فَٱدۡخُلِى فِى عِبَـٰدِى (٢٩) وَٱدۡخُلِى جَنَّتِى (٣٠) { سُوۡرَةُ الفَجر89-27-30}

    (… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

    நன்றி:- http://www.ottrumai.net/

    பிரிவுகள்:அஸ்மா பின்த் அபூபக்கர் ரலி, அஸ்மா பின்த் அபூபக்கர் ரழி குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் The Lineage of Muhammad [pbuh] نسب النبي صلى الله عليه وسلم


    نسب النبي صلى الله عليه وسلم وأسرته

    1 محمد صلى الله عليه وسلم முஹம்மது (ஸல்)
    2 بن عبد الله இப்னு அப்துல்லாஹ்
    3 بن عبد المطلب ـ شَيْبَة இப்னு அப்துல் முத்தலிப் (பெயர் ஷைபா)
    4 بن هاشم ـ واسمه عمرو இப்னு ஹாஷிம் (பெயர் அம்ரு)
    5 بن عبد مناف ـ المغيرة இப்னு அப்து மனாஃப் (பெயர் முகீரா)
    6 بن قُصَىّ ـ واسمه زيد இப்னு குஸய்ம் (பெயர் ஜைது)
    7 بن كِلاب இப்னு கிலாப்
    8 بن مُرَّة இப்னு முர்ரா
    9 بن كعب இப்னு கஅப்
    10 بن لؤى இப்னு லுவய்ம்
    11 بن غالب இப்னு காலிப்
    12 بن فِهْر.وهو الملقب بقريش وإليه تنتسب القبيلة இப்னு ஃபிஹ்ர் (இவரே குறைஷி என அழைக்கப்பட்டவர். இவர் பெயராலேயே அக்கோத்திரம் அழைக்கப்படுகிறது)
    13 بن مالك இப்னு மாலிக்
    14 بن النَّضْر ـ واسمه قيس ـ இப்னு நழ்ர் (பெயர் கைஸ்)
    15 بن كِنَانة இப்னு கினானா
    16 بن خُزَيْمَة இப்னு குஜைமா
    17 بن مُدْرِكة ـ واسمه عامـر இப்னு முத்கா (பெயர் ஆமிர்)
    18 بن إلياس இப்னு இல்யாஸ்
    19 بن مُضَر இப்னு முழர்
    20 بن نِزَار இப்னு நிஜார்
    21 بن مَعَدّ இப்னு மஅத்து
    22 بن عدنان‏.‏ இப்னு அத்னான். (ஆதாரம்:- இப்னு ஹிஷாம், தபரி)
    23 ابن أُدَد இப்னு உதத்
    24 بن الهَمَيْسَع இப்னு ஹமய்ஸா
    25 بن سلامان இப்னு ஸலாமான்
    26 بن عَوْص இப்னு அவ்ஸ்
    27 بن بوز இப்னு பவுஜ்
    28 بن قموال இப்னு கிம்வால்
    29 بن أبي இப்னு உபை
    30 بن عوام இப்னு அவ்வாம்
    31 بن ناشد இப்னு நாஷித்
    32 بن حزا இப்னு ஹஜா
    33 بن بلداس இப்னு பல்தாஸ்
    34 بن يدلاف இப்னு யதுலாஃப்
    35 بن طابخ இப்னு தாபிக்
    36 بن جاحم இப்னு ஜாம்
    37 بن ناحش இப்னு நாஷ்
    38 بن ماخى இப்னு மாகீ
    39 بن عيض இப்னு ஐழ்
    40 بن عبقر இப்னு அப்கர்
    41 بن عبيد இப்னு உபைத்
    42 بن الدعا இப்னு துஆ
    43 بن حَمْدان இப்னு ஹம்தான்
    44 بن سنبر இப்னு ஸன்பர்
    45 بن يثربى இப்னு யஸ்பீ
    46 بن يحزن இப்னு யஹ்ஜன்
    47 بن يلحن இப்னு யல்ஹன்
    48 بن أرعوى இப்னு அர்அவா
    49 بن عيض இப்னு ஐழ்
    50 بن ديشان இப்னு தைஷான்
    51 بن عيصر இப்னு ஐஸிர்
    52 بن أفناد இப்னு அஃப்னாத்
    53 ابن أيهام இப்னு ஐஹாம்
    54 بن مقصر இப்னு முக்ஸிர்
    55 بن ناحث இப்னு நாஸ்
    56 بن زارح இப்னு ஜாஹ்
    57 بن سمى இப்னு ஸமீ
    58 بن مزى இப்னு மஜீ
    59 بن عوضة இப்னு அவ்ழா
    60 بن عرام இப்னு அராம்
    61 بن قيدار இப்னு கைதார்
    62 ابن إسماعيل இப்னு இஸ்மாயீல்
    63 بن إيراهيم عليهما السلام‏.‏ இப்னு இப்றாஹீம்.              (ஆதாரம்:- தபகாத் இப்னு ஸஅது)
    64 ابن تارَح ـ واسمه آزر இப்னு தாரஹ். அவரது பெயர் ஆஜர்
    65 بن ناحور இப்னு நாஹூர்
    66 بن ساروع ـ أو ساروغ இப்னு ஸாரூஃ
    67 بن رَاعُو இப்னு ராவூ
    68 بن فَالَخ இப்னு ஃபாலக்
    69 بن عابر இப்னு ஆபிர்
    70 بن شَالَخ இப்னு ஷாலக்
    71 بن أرْفَخْشَد இப்னு அர்ஃபக்ஷத்
    72 بن سام இப்னுஹிஸாம்
    73 بن نوح عليه السلام இப்னு நூஹ் (அலை)
    74 بن لامك இப்னு லாமக்
    75 بن مَتوشَلخَ இப்னு மதவ்ஷலக்
    76 بن أَخْنُوخ ـ يقال‏:‏هو إدريس النبي عليه السلام இப்னு அக்நூக். (இவர்கள்தாம் இத்ரீஸ் (அலை) என்றும் சொல்லப்படுகிறது.)
    77 بن يَرْد இப்னு யர்து
    78 بن مَهْلائيل இப்னு மஹ்லாயீல்
    79 بن قينان இப்னு கைனான்
    80 بن أنُوش இப்னு அனூஷ்
    81 بن شِيث இப்னு ஷீஸ்
    82 بن آدم ـ عليهما السلام‏.‏ இப்னு ஆதம் (அலை)                        (ஆதாரம்:-இப்னு ஹிஷாம்)

    நபியவர்களின் வமிசம்

    நபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர் மூன்று வகையாகப் பிரிகின்றது.

    முதலாவது: அனைத்து வரலாற்று ஆசிரியர்களும், வமிச இயல் வல்லுனர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருப்பது. இது நபி (ஸல்) அவர்களில் தொடங்கி அத்னானில் முடிகிறது.

    இரண்டாவது: இதில் மிகுந்த கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றை ஒன்றிணைப்பது இயலாததாகும். அது அத்னானிலிருந்து நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் வரையிலான வமிசத் தொடராகும். இதில் சிலர் மௌனம் காக்கிறார்கள். சிலர் அத்னானுக்கு மேல் வமிசத் தொடரை கூறக்கூடாது என்கிறார்கள். சிலர் வமிசத் தொடரை அதற்கு மேலும் கூறுவது கூடும் என்கிறார்கள். இவ்வாறு கூறுபவர்கள் வமிசத் தொடர் மற்றும் எண்ணிக்கையில் முரண்படுகிறார்கள். அவர்களது முரண்பாடான கருத்துகள் முப்பதையும் தாண்டியுள்ளது. எனினும் அத்னான், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வமிசத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

    மூன்றாவது: இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களிலிருந்து ஆதம் (அலை) அவர்கள் வரையிலானது. இதில் வேதக்காரர்களின் கருத்தையே ஏற்க வேண்டி வருகிறது. அதில் பல கருத்துகள் பொய்யானவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் சில கருத்துகள் குறித்து மௌனம் காப்பதே சிறந்ததாகும்.

    நபி (ஸல்) அவர்களுடைய தூய வமிச வழியைப் பற்றி மேற்கூறப்பட்ட மூன்று பிரிவுகளையும் வரிசையாகக் காண்போம்.

    முதல் பிரிவு: முஹம்மது (ஸல்) இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் (பெயர் ஷைபா) இப்னு ஹாஷிம் (பெயர் அம்ரு) இப்னு அப்து மனாஃப் (பெயர் முகீரா) இப்னு குஸய்ம் (பெயர் ஜைது) இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுவய்ம் இப்னு காலிப் இப்னு ஃபிஹ்ர் (இவரே குறைஷி என அழைக்கப்பட்டவர். இவர் பெயராலேயே அக்கோத்திரம் அழைக்கப்படுகிறது) இப்னு மாலிக் இப்னு நழ்ர் (பெயர் கைஸ்) இப்னு கினானா இப்னு குஜைமா இப்னு முத்கா (பெயர் ஆமிர்) இப்னு இல்யாஸ் இப்னு முழர் இப்னு நிஜார் இப்னு மஅத்து இப்னு அத்னான். (இப்னு ஹிஷாம், தபரி)

    இரண்டாவது பிரிவு: இது அத்னானுக்கு மேலே உள்ளவர்கள் பற்றியது. அத்னான் இப்னு உதத் இப்னு ஹமய்ஸா இப்னு ஸலாமான் இப்னு அவ்ஸ் இப்னு பவுஜ் இப்னு கிம்வால் இப்னு உபை இப்னு அவ்வாம் இப்னு நாஷித் இப்னு ஹஜா இப்னு பல்தாஸ் இப்னு யதுலாஃப் இப்னு தாபிக் இப்னு ஜாம் இப்னு நாஷ் இப்னு மாகீ இப்னு ஐழ் இப்னு அப்கர் இப்னு உபைத் இப்னு துஆ இப்னு ஹம்தான் இப்னு ஸன்பர் இப்னு யஸ்பீ இப்னு யஹ்ஜன் இப்னு யல்ஹன் இப்னு அர்அவா இப்னு ஐழ் இப்னு தைஷான் இப்னு ஐஸிர் இப்னு அஃப்னாத் இப்னு ஐஹாம் இப்னு முக்ஸிர் இப்னு நாஸ் இப்னு ஜாஹ் இப்னு ஸமீ இப்னு மஜீ இப்னு அவ்ழா இப்னு அராம் இப்னு கைதார் இப்னு இஸ்மாயீல் இப்னு இப்றாஹீம். (தபகாத் இப்னு ஸஅது)

    மூன்றாம் பிரிவு: இது இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மேல் அவர்களின் தந்தை தாரஹ். அவரது பெயர் ஆஜர் இப்னு நாஹூர் இப்னு ஸாரூஃ இப்னு ராவூ இப்னு ஃபாலக் இப்னு ஆபிர் இப்னு ஷாலக் இப்னு அர்ஃபக்ஷத் இப்னுஹிஸாம் இப்னு நூஹ் (அலை) இப்னு லாமக் இப்னு மதவ்ஷலக் இப்னு அக்நூக். (இவர்கள்தாம் இத்ரீஸ் (அலை) என்றும் சொல்லப்படுகிறது.) இப்னு யர்து இப்னு மஹ்லாயீல் இப்னு கைனான் இப்னு அனூஷ் இப்னு ஷீஸ் இப்னு ஆதம். (இப்னு ஹிஷாம்)

    அர்ரஹீக்குல் மக்தூம் -ரஹீக் என்ற நூலிலிருந்து

    The Lineage of Muhammad [pbuh]

    With respect to the lineage of Prophet Muhammad [pbuh], there are three versions: The first was authenticated by biographers and genealogists and states that Muhammad’s genealogy has been traced to ‘Adnan. The second is subject to controversies and doubt, and traces his lineage beyond ‘Adnan back to Abraham. The third version, with some parts definitely incorrect, traces his lineage beyond Abraham back to Adam [AWS].

    After this rapid review, now ample details are believed to be necessary.

    The first part: Muhammad bin ‘Abdullah bin ‘Abdul-Muttalib (who was called Shaiba) bin Hashim, (named ‘Amr) bin ‘Abd Munaf (called Al-Mugheera) bin Qusai (also called Zaid) bin Kilab bin Murra bin Ka‘b bin Lo’i bin Ghalib bin Fahr (who was called Quraish and whose tribe was called after him) bin Malik bin An-Nadr (so called Qais) bin Kinana bin Khuzaiman bin Mudrikah (who was called ‘Amir) bin Elias bin Mudar bin Nizar bin Ma‘ad bin ‘Adnan. [Ibn Hisham 1/1,2; Talqeeh Fuhoom Ahl Al-Athar, p. 5-6; Rahmat-ul-lil’alameen 2/11-14,52]

    The second part: ‘Adnan bin Add bin Humaisi‘ bin Salaman bin Aws bin Buz bin Qamwal bin Obai bin ‘Awwam bin Nashid bin Haza bin Bildas bin Yadlaf bin Tabikh bin Jahim bin Nahish bin Makhi bin Aid bin ‘Abqar bin ‘Ubaid bin Ad-Da‘a bin Hamdan bin Sanbir bin Yathrabi bin Yahzin bin Yalhan bin Ar‘awi bin Aid bin Deshan bin Aisar bin Afnad bin Aiham bin Muksar bin Nahith bin Zarih bin Sami bin Mazzi bin ‘Awda bin Aram bin Qaidar bin Ishmael son of Abraham [AWS]. [Rahmat-ul-lil’alameen 2/14-17]

    The third part: beyond Abraham [AWS] , Ibn Tarih (Azar) bin Nahur bin Saru‘ bin Ra‘u bin Falikh bin Abir bin Shalikh bin Arfakhshad bin Sam bin Noah [AWS] , bin Lamik bin Mutwashlack bin Akhnukh [who was said to be Prophet Idris (Enoch) [AWS]] bin Yarid bin Mahla’il bin Qainan bin Anusha bin Shith bin Adam [AWS]. [Ibn Hisham 1/2-4; Rahmat-ul-lil’alameen 2/18; Khulasat As-Siyar p.6]

    Ref:-Ar-Raheeq Al-Makhtum (THE SEALED NECTAR)-by Saifur Rahman al-Mubarakpuri

    نسب النبي صلى الله عليه وسلم

    نسب نبينا محمد صلى الله عليه وسلم ينقسم إلى ثلاثة أجزاء‏:‏ جزء اتفق عليه كافة أهل السير والأنساب، وهو الجزء الذي يبدأ منه صلى الله عليه وسلم وينتهي إلى عدنان‏.‏

    وجزء آخر كثر فيه الاختلاف، حتى جاوز حد الجمع والائتلاف، وهو الجزء الذي يبدأ بعد عدنان وينتهي إلى إبراهيم عليه السلام فقد توقف فيه قوم، وقالوا‏:‏ لا يجوز سرده، بينما جوزه آخرون وساقوه‏.‏ ثم اختلف هؤلا المجوزون في عدد الآباء وأسمائهم، فاشتد اختلافهم وكثرت أقوالهم حتى جاوزت ثلاثين قولًا، إلا أن الجميع متفقون على أن عدنان من صريح ولد إسماعيل عليه السلام‏.‏

    أما الجزء الثالث فهو يبدأ من بعد إبراهيم عليه السلام وينتهي إلى آدم عليه السلام، وجل الاعتماد فيه على نقل أهل الكتاب، وعندهم فيه من بعض تفاصـيل الأعمـار وغيرهـا ما لا نشك في بطلانه، بينما نتوقف في البقية الباقية‏.‏

    وفيما يلى الأجزاء الثلاثة من نسبه الزكى صلى الله عليه وسلم بالترتيب ‏:‏

    الجزء الأول ‏:‏ محمد بن عبد الله بن عبد المطلب ـ واسمه شَيْبَة ـ بن هاشم ـ واسمه عمرو ـ بن عبد مناف ـ واسمه المغيرة ـ بن قُصَىّ ـ واسمه زيد ـ بن كِلاب بن مُرَّة بن كعب بن لؤى بن غالب بن فِهْر ـ وهو الملقب بقريش وإليه تنتسب القبيلة ـ بن مالك بن النَّضْر ـ واسمه قيس ـ بن كِنَانة بن خُزَيْمَة بن مُدْرِكة ـ واسمه عامـر ـ بن إلياس بن مُضَر بن نِزَار بن مَعَدّ بن عدنان‏.‏

    الجزء الثانى ‏:‏ ما فوق عدنان، وعدنان هو ابن أُدَد بن الهَمَيْسَع بن سلامان بن عَوْص بن بوز بن قموال بن أبي بن عوام بن ناشد بن حزا بن بلداس بن يدلاف بن طابخ بن جاحم بن ناحش بن ماخى بن عيض بن عبقر بن عبيد بن الدعا بن حَمْدان بن سنبر بن يثربى بن يحزن بن يلحن بن أرعوى بن عيض بن ديشان بن عيصر بن أفناد ابن أيهام بن مقصر بن ناحث بن زارح بن سمى بن مزى بن عوضة بن عرام بن قيدار ابن إسماعيل بن إيراهيم عليهما السلام‏.‏

    الجزء الثالث ‏:‏ ما فوق إبراهيم عليه السلام، وهو ابن تارَح ـ واسمه آزر ـ بن ناحور بن ساروع ـ أو ساروغ ـ بن رَاعُو بن فَالَخ بن عابر بن شَالَخ بن أرْفَخْشَد بن سام بن نوح عليه السلام بن لامك بن مَتوشَلخَ بن أَخْنُوخ ـ يقال ‏:‏ هو إدريس النبي عليه السلام ـ بن يَرْد بن مَهْلائيل بن قينان بن أنُوش بن شِيث بن آدم ـ عليهما السلام‏.‏

    நன்றி:- ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி

    நன்றி:-   தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி

    அம்மார் பின் யாஸிர் (ரழி)


    தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

    வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார்(ரழி) ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்(ரழி) ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும் படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார்(ரழி). தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்(ரழி) அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார்(ரழி) அவர்கள். விட்டு விடுகின்றனர். அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்(ரழி) நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.

    அம்மார்(ரழி) அவர்களை தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராகீம்(அலை) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபி(ஸல்) துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்(ரழி) கூறுகின்றார்கள். அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது. யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத்(ரழி) அம்மார்(ரழி)அவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்.. சிறந்த போர் வீரரான அம்மார்(ரழி) அபூபக்கர்(ரழி) வஆட்சியில் நிகழ்ந்த யமாமா, பாரசீகப் போரில் கலந்து கொண்டார்கள். யமாமா போரில் அம்மார்(ரழி), முஸ்லீம்களே ஏன் சுவனத்தை விட்டும் வெருண்டோடுகிறீர்கள் என போர் வீரர்களுக்கு உற்சாக மூட்டினார். அப்போரில் அம்மார்(ரழி)அவர்களின் ஒரு காது துண்டிக்கப்பட்டது. அப்படியும் அயராது போரிட்டார்.

    உமர்(ரழி) ஆட்சி காலத்தில் கூஃபாவின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அம்மார்(ரழி) அவர்களை ஒருவன் ஒற்றைச் செவியன் எனக் கூறினான். அவனை அம்மார்(ரழி) அவர்கள் தண்டிக்கவில்லை. ஹுதைபத்துல் யமான்(ரழி) அவர்களிடம் அவருடைய மரணவேளையில் யாரைப் பின்பற்றுவது என மக்கள் கேட்டதற்கு அம்மார்(ரழி) அவர்களை பின்பற்றுங்கள். எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார்(ரழி) இருப்பார் எனக் கூறினார்கள். ஹிஜ்ரத்க்கு பின் மதீனாவில் பள்ளி கட்டும் பணியில் அம்மார்(ரழி) இருமடங்கு சுமை சுமந்து வருவார்கள். புழுதி படிந்த அவர்களது மேனியையும் முகத்தையும் நபி(ஸல்)அவர்கள் தம் திருக்கரங்களால் துடைத்திருக்கிறார்கள். (புகாரி)

    அம்மார்(ரழி) அவர்கள் அக்கிரமக்காரர்களால் கொல்லப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒருமுறை சுவர் இடிந்து விழுந்து மூர்ச்சையான அம்மார்(ரழி) அவர்களைக் குறித்து நபித்தோழர்கள் அவர் இறந்து விட்டதாக எண்ண மீண்டும் நபி(ஸல்) அவர்கள் சுமையாவின் மகனை அக்கிரமக் காரர்கள் கொலை செய்யப் போகின்றனர் எனக் கூறினார்கள். ஹிஜ்ரி 37 ல் அலி(ரழி) அவர்களுக்கும் முஆவியா(ரழி) அவர்களுக்கும்மிடையே நிகழ்ந்த ஸிப்பீன் போரில் அலி(ரழி)அவர்கள் படையில் பங்கெடுத்திருந்த அம்மார்(ரழி)அவர்கள் தனது 93 வது வயதில் அப்போரில் கொல்லப்படுகிறார்கள். இரத்தம் தோய்ந்த துணியுடன் கபனிடப் பட்டார்கள். அம்மாரை கான சுவனம் ஆசைப்படுகிறது-திர்மிதியில் காணப்படும் நபி மொழி.

    படிப்பினை: உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? 3:142 வசனத்திற்கு ஒப்ப வாழ்ந்த அம்மார்(ரழி) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெறும் படிப்பினை ஈமானிய உறுதியே. ஈமான் கொண்டு இஸ்லாத்தை ஏற்றது முதல் இஸ்லாம் மேலோங்கவேண்டும். சத்தியம் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் தம் உடலாலும், உள்ளத்தாலும் போராடி தமது 93 வது வயதிலும் வாளேந்திப் போர் புரிந்து தம் உயிரையும் அல்லாஹ்விற்காகத் துறந்த தியாகச் செம்மல் அம்மார்(ரழி) அவர்களைப் போன்றே நாமும், நம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அல்லாஹ்விற்காகவே அர்பணிக்கக் கூடிய மக்களாக நம்மை ஆக்கியருள வல்ல நாயனிடமே பிரார்த்திப்போம்.

    (… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

    நன்றி:- http://www.ottrumai.net/

    பிரிவுகள்:அம்மார் பின் யாஸிர் ரலி, அம்மார் பின் யாஸிர் ரழி, சஹாபாக்கள் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

    அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)

    செப்ரெம்பர் 24, 2010 பின்னூட்டமொன்றை இடுக

    ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் :

    யா அல்லாஹ்..!(உனது) சுவனச் சோலைகளில் உள்ள சல்சபீல் என்னும் நீரூற்றிலிருந்து இனிமையான, குளுமையான தண்ணீரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குப் புகட்டுவாயாக!

    நெடிதுயர்ந்த உடலும், நல்ல உடலமைப்பும், சிவந்த கன்னங்களும், சுருள் முடிகளையும், பிரகாசமான முகத்தோற்றத்தையும், இன்னும் வலிமையான உடலமைப்பையும் கொண்டவர் தான் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள். மிகச் சிறந்த வியாபாரியும், இன்னும் மத விவகாரங்களில் மிகச் சிறந்த ஞானத்தையும், உண்மையையும், நேர்மையையும் பண்பாகப் பெற்றவர். கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாரயங் கூறப்பட்ட பத்து நபித்தோழர் பெருமக்களில் இவரும் ஒருவராவார்.

    தமத்துல் ஜந்தல் என்னும் போருக்கு தளபதியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டு, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைமைப் பொறுப்பை பறைசாட்டக் கூடியதற்கான தலைப்பாகையை அணிவிக்கப்பட்டவரும் ஆவார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த சத்திய அழைப்பை ஏற்று, தனது 30 வது வயதில் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இருமுறை ஹிஜ்ரத் செய்த அதாவது ஒருமுறை அபீசீனியாவிற்கும் இன்னொரு முறை மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து சென்ற நற்பேற்றுக்கும் உரியவராவார்.

    இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் அப்து அம்ர் என்ற பெயருடன் இருந்தவரை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் என மாற்றினார்கள். அதன் பிறகு மக்கள் இவரை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்றே அழைக்கலானார்கள். சிறந்த புத்திகூர்மையையும் நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டிற்குச் சொந்தக்காரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன்பிலிருந்தே மதுபானம் அருந்துவதை வெறுத்தொதுக்கிய நற்குணத்திற்குச் சொந்தக்காரராவார்.

    அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பொழுது அவர்கள் வெறுங்கையுடன் தான் சென்றார்கள். எந்தவித பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை. இந்த நிலையில், சஅத் பின் ரபீஈ அன்ஸாரீ (ரழி) என்ற நபித் தோழருடன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களை சகோதரராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இணைத்து வைத்தார்கள். அவரை வரவேற்றுக் கண்ணியப்படுத்திய சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :

    சகோதரரே..! இறைவன் என்மீது அளவற்ற அருட்கொடைகளைச் சொறிந்துள்ளான். இந்த மதீனாவிலேயே நான் தான் மிகப் பெரிய செல்வந்தனாகவும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் இரண்டு மிகப் பெரிய தோட்டங்களும், இரண்டு மனைவிகளும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு தோட்டங்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கின்றதோ அதனையும், இரண்டு மனைவிகளில் உங்களுக்குப் பிடித்த மனைவி ஒருவரையும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற தோட்டத்தை உங்கள் பெயரிலும், நீங்கள் தேர்ந்தெடுக்கின்ற மனைவியை நான் விவாகாரத்தும் செய்து தருகின்றேன், அவளது இத்தா தவணை முடிந்ததும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள். நீங்கள் இப்பொழுது என்னுடைய இஸ்லாமிய சகோதரராக இருப்பதின் காரணமாக உங்களது வாழ்வில் நல்லனவற்றை நாடுவதும், ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் உங்களது தேவையை நிறைவேற்றி வைப்பதற்கு இஸ்லாம் நமக்குக் காட்டித்தந்திருக்கின்ற வழிமுறையும், சமூகக் கடமையுமாகும் என்று கூறினார்கள்.

    இத்தகைய தியாகமிக்க வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களை இஸ்லாமிய வரலாற்றில் அன்றி வேறு எங்கு காண முடியும்?!

    ஆனால், கண்ணியமும், சுயமரியாதையும் கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சகோதரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன், அவர் கூறினார்:

    அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பானாக! இன்னும் உங்களது உடமைகளிலும், உங்களது குடும்பத்தினர் மீதும், உங்களது குழந்தைகளின் மீது அருள்பாலிப்பானாக! உங்களது செல்வங்கள் உங்களிடமே இருக்கட்டும். முதலில் எனக்கு வணிகச் சந்தைக்கான வழியைக் காட்டுங்கள். எனது வாழ்வாதாரத்தை நானே தேடிக் கொள்கின்றேன். உங்களுக்கு ஒரு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

    அதன் பின் வணிகச் சந்தைக்கான வழியை அறிந்து கொண்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், தனது வியாபாரத்தை அங்கு தொடங்கினார்கள். அவர் எப்பொழுது தனது சொந்த வியாபாரத்தைத் தொடங்கினாரோ அப்பொழுதிலிருந்து இறைவன் அவரது வியாபாரத்தின் மீது அருட்கொடைகளைச் சொறிய ஆரம்பித்தான்.

    ஒருநாள் மாலை நேரத்தில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளை அணிந்த நிலையில் வித்தியாசமான தோற்றத்தில் நின்று கொண்டிருந்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே..! உங்களது தோற்றத்தில் நான் ஒரு வித்தியாசத்தைக் காணுகின்றேனே..! என்று கூறினார்கள்.

    மரியாதையோடும், அன்போடும் .. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் ஒரு அன்ஸாரிப் பெண்ணை மணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

    நீங்கள் எவ்வளவு மணக்கொடை கொடுத்துத் திருமணம் புரிந்தீர்கள். ஒருகட்டித் தங்கத்தைக் கொடுத்துத் திருமணம் புரிந்திருக்கின்றேன் என்று கூறினார்கள்.

    திருமண வலிமா விருந்து கொடுத்தாகி விட்டதா? இல்லையெனில், ஒரு ஆட்டையாவது அறுத்து விருந்து கொடுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களின் வியாபாரத்தில் இறைவன் தனது பூரண அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர் கனவிலும் நினைத்திராத அளவுக்கு அவரது செல்வ வளங்கள் அதிகரித்துச் சென்றன. அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் ஒரு கல்லைத் தொட்டாலும் அது தங்கமாக மாறி விடும் என்று சொல்லுமளவுக்கு அவர் ஆரம்பித்த அத்தனை வியாபாரங்களிலும் இறைவன் தனது அருள் மழையைப் பொழிந்து கொண்டிருந்தான். வியாபாரத்தை அடுத்து, விவசாயத்திலும் அதிகக் கவனம் செலுத்தினார். மிகப் பரந்த அளவில் விவசாயத்தை ஆரம்பித்த அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு, கைபரில் ஒரு பெரிய நிலத்தையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஜர்ராஃப் என்ற இடத்தில் இருந்த அவரது நிலத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காகவே, அவரிடம் 20 ஒட்டகங்கள் இருந்தன. இவ்வளவு சொத்துக்களையும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் தனது சம்பர்த்தியத்தின் மூலமாகவே ஈட்டிக் கொண்டார். மேலும், இத்தனை சொத்துக்களில் இருந்து வரக் கூடிய வருமானத்தை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர் செலவிடுவதற்காக என்றுமே தயங்கியதில்லை, அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    ஒரு சமயம், 700 ஒட்டகங்கள் நிறைய வணிகப் பொருட்களுடனும், தானியங்களுடனும் மதீனமா நகரத்துக்குள் நுழைந்த பொழுது, அந்த வணிகக் கூட்டத்தின் வருகையால் மதீனா நகரமே அதிர்ந்து கொண்டிருந்தது. இந்த சலசலப்பை செவியுற்ற அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இந்த மதீனாவிற்கு என்ன நேர்ந்து விட்டது, ஒரே சலசலப்பாக இருக்கின்றதே..! என்று தனது பணிப் பெண்ணிடம் கேட்கின்றார்கள். அப்துர் ரஹ்மானின் 700 ஒட்டகங்கள் வணிகப் பொருட்களுடன் மதீனா நகருக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் இந்த சலசலப்புக்கள் என்று அவருக்குக் கூறப்பட்டது. இதனைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன் :

    ”அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சுவனத்தில் நுழையும் பொழுது, தவழ்ந்த நிலையிலும், குதித்துக் குதித்தும் நுழைவார்கள்;” என்று கூறினார்கள்.

    இதனைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து அன்னையவர்களிடம், நீங்கள் இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றீர்களா என்று கேட்டார்கள். அன்னையவர்களும் ஆம்..! எனச் சொன்னதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களால் தனக்கு அறிவிக்கப்பட்ட இந்த நன்மாராயத்திற்காக, அல்லாஹ்வின் பெயரால் இந்த வணிகப் பொருட்களையும், அதனைச் சுமந்து வந்திருக்கின்ற இந்த ஒட்டகங்களையும் நான் இந்த முஸ்லிம் உம்மத்தின் நல்வாழ்வுக்காக தானமாகக் கொடுக்கின்றேன் என்று கூறி, அத்தனை பொருட்களையும் ஒட்டகங்களையும் தானம் செய்து விட்டார்கள்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயம் தீனுல் இஸ்லாத்தில் புடம் போடப்பட்ட தங்கங்களாக பரிணமிப்பதற்குப் பேருதவி செய்த அந்த வல்லோனாம் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது ஆரம்ப நாள் முதல் இறுதி நாள் வரையும், கணக்கில்லாமல் தனது சொத்துக்களை தானம் வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு தானமாக வழங்கினாலும், அவரது சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் வளர்ந்ததே ஒழிய குறைந்ததாகச் சரித்திரம் கிடையாது. அவரது சந்ததிக்காக மிகப் பெரும் சொத்தை விட்டுச் சென்றார். அவரது நான்கு மனைவிகளுக்கு மட்டும் எண்பதாயிரம் தினார்களையும், ஏராளமான தங்கக் கட்டிகளையும் விட்டுச் சென்றார். அவற்றை வெட்டி, அவரது சந்ததியினரிடையே பங்கு வைக்கப்பட்டது. அவர் இறந்த பொழுது, அசையாச் சொத்துக்களைத் தவிர்த்து, ஆயிரம் ஒட்டகங்களையும், நூறு குதிரைகளையும், மூவாயிரம் ஆடுகள் கொண்ட மந்தையையும் விட்டுச் சென்றார். இவ்வளவு செல்வ வளங்களையும் பார்த்து சந்தோஷப்படுவதை விட்டு விட்டு, எப்பொழுதும் மறுமை நினைவிலேயே, அதன் எதிர்பார்ப்பிலேயே கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.

    ஒருமுறை அவர் நோன்பு திறப்பதற்காக வேண்டி அவருக்கு முன் தட்டில் உணவு வைக்கப்பட்டது. அவர் முன் வைக்கப்பட்ட உணவுத் தட்டுக்களைப் பார்த்தவுடன், அவரது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக ஓட ஆரம்பித்தது.

    முஸ்அப் பின் உமைர்..! நீங்கள் இவனை விடச் சிறந்தவர்கள்.. என்று தன்னைச் சுட்டிக் காட்டிக் கொண்ட அவர்கள்,

    நீங்கள் இறந்த பொழுது உங்களது உடலை மூடுவதற்கு சரியான அளவில் ஆடை கிடைக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய ஆடையைக் கொண்டு தலையை மூடினால் கால் தெரிந்தது, காலை மூடினால் தலை தெரிந்தது. இந்த உலகம் அவருக்கு மிகப் பெரிய செல்வ வளத்தைக் கொண்டு அவரை மகிழ்விப்பதற்காக தயாராகத் தான் இருந்தது. அவருக்கு வழங்கிய இறைவனது அருட்கொடைகளைக் கொண்டு அவர் இறைவனைப் பயந்தார், அந்த அருட்கொடைகளில் தன்னை இழந்து விடாமல், இறைவனது மறுமையில் கிடைக்கக் கூடிய அளவில்லாத அருட்கொடைகளின் மீது ஆசை வைத்தார். இதனை அவர் நினைத்த மாத்திரத்திலேயே வெட்கம் மேலிட பயத்தால், அழுக ஆரம்பித்து விட்டார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள். அதன் காரணமாக தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த உணவைக் கூட அவரது கரங்கள் தீண்டாமலேயே இருந்தது.

    மறுமைக்காகத் தங்களது இவ்வுலக வாழ்க்கையைத் தியாகம் செய்த அந்த நல்லுலங்களின் சிறப்பான குணங்களுக்கு இவையே மிகச் சிறந்த சான்றுகளாகும். ஒருமுறை இவர் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர், அப்துர் ரஹ்மானே..! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது, ஏன் இப்படித் தேம்பித் தேம்பி அழுகின்றீர்கள்? உங்களது கண்களில் கண்ணீர் வழிகின்றன, இன்னும் நீங்கள் கவலை தோய்ந்தவர்களாக இருக்கின்றீர்களே? காரணமென்ன என்று வினவினார். அதற்கு அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள்,

    இந்த முஸ்லிம் உம்மத்தின் ஆட்சியாளராக இருந்து, இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடை பெற்றுச் சென்று விட்ட நம் தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது குடும்பத்திற்காக எதனையும் விட்டு விட்டுச் செல்லவில்லை. மிகவும் எளிமையான அளவில் கூட, இன்னும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உணவைக் கூட அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. ஆனால் நாம் இப்பொழுது செல்வ வளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இறுதி முடிவு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து அருட்கொடைகளையும் சுகிக்கும்படி நம்மை விட்டு விட்டு, மறுமையில் நம்மை அனாதரவாக விட்டு விடாமல் இருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன், என்று அவருக்கு பதில் கூறினார்கள்.

    அவர்கள் இந்த உலக வாழ்க்கையும், மறுமையையும் நினைத்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் என்னவென்று சொல்வது..! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    தனது வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளுக்கிடையேயும் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் பல போர்களில் கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக ஜிஹாதில் கலந்து கொண்டார்கள். ஒரு போரில் கலந்து கொண்ட அவர் இஸ்லாத்தின் பிரதான எதிரியாகத் திகழ்ந்த உமைர் பின் உஸ்மான் என்பவனை தீரத்துடன் துணிந்து அவனது தலையைக் கொய்து பெருமை படைத்தார்கள்.

    இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டு போரிட்டுக் கொண்டிருந்த பொழுது, இரு வீரச் சிறுவர்களான மஆத் மற்றும் மாஊத் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களிடம் வந்து, அபு ஜஹ்ல் என்பவன் எங்கே, அவன் எந்த இடத்தில் இருக்கின்றான் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள் என்று கேட்டார்கள். அவனிடம் உங்களுக்கு என்ன வேலை? என்று அந்தச் சிறுவர்களிடம் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் வினவினார்கள். அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அதிகத் தொல்லை கொடுப்பதாகக் கேள்விப்பட்டோம், அவனை எங்களது கரங்களால் கொன்று நிரந்தரமாக அந்த நரகத்தின் அடித்தளத்திற்கு அனுப்ப விரும்புகின்றோம் என்று அந்த வீரச் சிறுவர்கள் பதில் கூறினார்கள். அந்தச் சிறுவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அபூ ஜஹ்ல் மிகவும் கோபாவேசமாக இவர்களை நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள், உங்களது இரை அதோ வந்து கொண்டிருக்கின்றது என்று அபூ ஜஹ்லை அந்தச் சிறுவர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். அவனை அடையாளம் காட்டியது தான் தாமதம், மின்னலெனப் பாய்ந்த அந்தச் சிறுவர்கள் தொடுத்த இடி போன்ற தாக்குதலால் நிலை குலைந்த அபூ ஜஹ்ல் தனது குதிரையிலிருந்து விழுந்து உயிரை விட்டான். அந்த சிறுவர்களது வீரத்தை என்னவென்று சொல்வது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த அளவற்ற அந்தப் பாசம் தான் அவர்களது வீரத்திற்கு வித்திட்டது. அபூ ஜஹ்லை எதிர்க்கும் வலிமையைத் தந்தது. இந்த இளம் வயதில் இஸ்லாத்தின் கொடிய எதிரியை எதிர்க்கும் மன வலிமையைத் தந்ததே இஸ்லாத்தின் அளப்பரிய ஆற்றலின் உந்து சக்தியாகும்.

    ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு தாமத்துல் ஜன்தல் என்ற இடத்தை முஸ்லிம்களின் நிலப்பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியாக ஆக்கிக் கொள்வதற்காக ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பனூ கலப் என்ற குலத்தவர்கள் வசித்து வந்தார்கள், இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரிகளாகச் செயல்பட்டார்கள். இந்தப் படைக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களைத் தளபதியாக நியமித்து அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தலைவருக்கான தலைப்பாகையையும் அணிவித்து, அவரது கையில் இஸ்லாமியக் கொடியையும் கொடுத்து அனுப்பி வைக்கின்றார்கள்.

    இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அந்த மக்களை இஸ்லாத்தின் பால் அழையுங்கள். அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் இஸ்லாத்திற்குள் வரவில்லை என்றால், அவர்களை எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால் அங்குள்ள வயதானவர்களைத் தாக்க வேண்டாம், பெண்களையும் குழந்தைகளையும் தாக்க வேண்டாம் கவனமாக இருக்கவும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், அந்த மக்களிடம் மூன்று நாட்கள் இருந்து மிகவும் அழகான முறையில் இஸ்லாத்தின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்கள். இஸ்லாத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள். அந்தக் குலத்துத் தலைவனாக இருந்த அஸ்பக் பின் அம்ர் குல்பி, கிறிஸ்துவத்தை மிகவும் நேசித்துக் கொண்டிருந்த அவர், இஸ்லாத்தின் கொள்கையால் கவரப்பட்டார், பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

    அவர் இஸ்லாத்திற்குள் நுழைந்ததன் காரணமாக, அதனால் தாக்கமுற்ற அவரது குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இன்னும் அவர்களில் எவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்கள் இஸ்லாமிய அரசுக்கு ஜிஸ்யா என்ற பாதுகாப்பு வரி செலுத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

    இன்னும் அந்த குலத் தலைவர் தனது மகளை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் அமைதியான பிரச்சாரப் பணியின் மூலமாக போர் இல்லாது, எந்தவித உயிர் மற்றும் பொருட்சேதங்கள் இல்லாமல் அமைதியான முறையில் அந்தப் பகுதி மக்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

    இஸ்லாமிய அழைப்புப் பணி

    இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக கணக்கு வழக்கின்றி, அளவில்லாமல் அள்ளிக் கொடுத்து சேவை புரிந்து வந்தார். செல்வத்தை இவ்வாறு தானம் செய்ததன் காரணமாக, இஸ்லாமிய வீரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஒருமுறை இஸ்லாமிய வீரர்கள் போரில் பயன் படுத்துவதற்காக வென்றே ஐநூறு குதிரைகளை வாங்கினார்

    அவர் இறப்பதற்கு முன்பாக தன்னிடம் இருந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்தார். இன்னும் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் ஐநூறு திர்ஹம்களை பரிசாக வழங்கினார்.

    இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை வழங்குமாறு தனது உயிலில் எழுதி வைத்திருந்தார்கள்.

    ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக அடிக்கடி பிரத்யேகமாகப் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

    யா அல்லாஹ்..! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு உனது சுவனத்தில் உள்ள சல்சபீல் என்னும் ஓடையில் ஓடும் தூய நீரைப் பருகச் செய்யும் பாக்கியத்தை வழங்குவாயாக!

    இன்னும் இந்த பூமியிலே வாழ்ந்த எண்ணற்ற மக்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் நற்பேறு பெற்றவர்களாகவும் திகழ்ந்தார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே தனது ஆருயிர்த் தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு சுவனம் உண்டென்று நற்செய்தி வழங்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களால் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு தளபதியாக நியமிக்கப்பட்ட பெருமையையும், சுவனத்திற்காக நற்செய்தி வழங்கப்பட்ட பெருமையையும், ஆயிஷா (ரழி) அவர்களால் பிரத்யேகமாகப் பிராத்திக்கப்பட்டவருமான, இத்தகைய பாக்கியத்தைத் தவிர வேறு எது தான் ஒருவருக்கு இந்த உலகத்தில் வேண்டும்? இதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் தானே..!

    தபூக் யுத்தம்

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்காக வேண்டி முஸ்லிம் வீரர்களைத் தயாராகும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தக் கட்டளையினை அடுத்து, அந்தப் போருக்காக வேண்டி மிகப் பெரிய பொருளாதார வளமும் தேவைப்பட்டது. அதனையும் முஸ்லிம்களிடம் முறையிட்டார்கள். ஏனென்றால் மிக நீண்ட தூரம் பயணம், அந்தப் பயணத்தில் வரக் கூடிய வீரர்களுக்கான உணவு மற்றும் செலவினங்களுக்கு அதிகப் பொருளாதாரம் தேவைப்பட்டது. ஆனால் பயணத்திற்குத் தேவையான பொருள் வளமும், ஒட்டகம், குதிரை போன்ற வாகன வசதியும் மிகவும் குறைவாகவே முஸ்லிம்களிடம் இருந்தது. இதன் காரணமாக, வருவதற்கு விருப்பம் கொண்டிருந்த பலர் வாகன வசதியின்மை காரணமாக மதீனாவிலேயே தங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகியது. தங்களால் வர இயலவில்லை என்னும் மனக் கவலையின் காரணமாக பலர் அழுத நிலையில் இருந்து கொண்டிருந்தனர். தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளும் பேறும், அதனுடைய நற்கூலியும் நமக்குக் கிடைக்கவில்லையே என்னும் வருத்தம் அவர்களை மேலிட்டது. எனவே, இந்தப் போருக்கு ஜய்ஸே உஸ்ரா அதாவது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உருவான படை என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் போருக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காக முஸ்லிம்கள் தாராளத்தன்மையைக் காட்டும்படி வேண்டி நின்றார்கள்.

    இந்தப் போரிலும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் மிகவும் தாராளமாக பொருளுதவி செய்தார்கள். ஒரு பை நிறைய வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்தார்கள்.

    எல்லாப் புகழும் இறைவனுக்கே..! இஸ்லாமிய வரலாறு தவிர வேறு எங்கும் இவர்களைப் போன்றதொரு கொடையாளிகளை, தங்களது இவ்வுலக வளங்களைத் தானமாகக் கொடுத்து, மறுவுல அருட்கொடைகளுக்கு ஆசை கொண்டவர்களைப் பார்க்க இயலாது.

    இப்பொழுது, இஸ்லாமியப் படை தபூக் நோக்கி நகர்ந்த பொழுது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் அந்தப் படையில் இணைந்து கொண்டார்கள். முஸ்லிம் படை ஒரு இடத்தில் பயணத்தை இடை நிறுத்தி ஓய்வெடுத்த பொழுது, அங்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இல்லாத காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் முன்னிற்க தொழுகை நடத்தப்பட்டது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இமாமாக முன்னின்று தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடைத்தன்மைக்கும், பரிசுத்த ஆன்மாவுக்கும், நேர்மைக்கும் பெயர் போன தனது ஆருயிர்த் தோழரைப் பின்பற்றி தொழ ஆரம்பித்தார்கள்.

    இத்தகைய அருமையான பாக்கியமும் கௌரவமும் வேறு யாருக்குத் தான் கிட்டும்! இத்தகைய மாபெரும் கௌரவத்தை தனது ஆருயிர்த் தோழருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார்கள். இந்தப் பூமியில் வந்துதித்த இந்த மனிதப் புனிதர்களை பூமிக்கும் மேலாக இருக்கக் கூடிய அந்த ஏழு வானங்களுக்கு அப்பாலும், இன்னும் அதற்கும் மேலானதொரு உயர்தரமான சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியமிக்கவர்களாக உயர்த்திக் காட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

    மக்கா வெற்றி

    இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரபல்யமான வரலாற்றுச் சம்பவமான மக்கா வெற்றியின் பொழுதும், இன்னும் அதனை அடுத்து ஹஜ்ஜத்துல் வதா என்ற இறுதி ஹஜ்ஜின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உடன் இருந்த நற்பேறு பெற்றவருமாவார்.

    ஹிஜ்ரி 10 ம் ஆண்டு, இறைவனது அழைப்பின் பேரில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அதன் பின் இஸ்லாமிய உம்மத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது யார் என்றதொரு பிரச்னை எழுந்த பொழுது, அந்தப் பிரச்னையைத் தீர்த்து அபுபக்கர் (ரழி) அவர்களை தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வருவதற்காக, முக்கியப் பங்காற்றியவர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

    பின் அபுபக்கர் (ரழி) அவர்கள் மரண தருவாயில் இருந்த பொழுது, தனக்கு அடுத்த யாரை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதற்காக, அபுபக்கர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகே, உமர் (ரழி) அவர்களது பெயரை அடுத்த கலீபா பதவிக்காக முன்மொழிந்தார்கள். உமர் (ரழி) அவர்கள், தொழுகையில் இமாமாக நின்று கொண்டு தொழ வைத்துக் கொண்டிருந்த பொழுது தாக்கப்பட்டு, கீழே விழுந்தவுடன் உடனடியாகச் செயல்பட்டு,இமாமாக முன்னின்று தொழுகையை நடத்தியவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) ஆவார்கள். தொழுகையை முடித்துக் கொண்டவுடன், உடனடியாக உமர் (ரழி) அவர்களை அவரது இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அப்பொழுது, உங்களுக்கு அடுத்து தலைமைப் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்பதனை அறிவித்து விடுமாறு உமர் (ரழி) அவர்களுக்கு ஆலோசனை கூறினார்கள்.

    அப்பொழுது ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியை அமைத்து அவர்களுக்குள் ஒருவரை மூன்று நாட்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உமர் (ரழி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அந்த ஆறு நபர்கள் கொண்ட கமிட்டியில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் ஒருவராவார்.

    உமர் (ரழி) அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டதன் பின் இரண்டாம் நாளில், அடுத்த கலீபாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. ஆறு பேர் கொண்ட கமிட்டிக்குப் பதிலாக அதனை மூன்றாகக் குறைத்துக் கொள்ளுமாறு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, அந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின், தல்ஹா (ரழி) அவர்கள் தனது இடத்தை உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்களுக்காக விட்டுக் கொடுக்க, அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாகத் தனது இடத்தை சுபைர் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுக்க, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக சஅத் (ரழி) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். இதில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் தனது இடத்தை தானே விட்டுக் கொடுத்து, தனது வாக்கை உதுமான் (ரழி) அவர்களுக்கு ஆதரவாக வழங்கியதன் காரணமாக, மிகவும் எளிய முறையில் பிரச்னைகள் இன்றி, புதிய கலீபாவாக உதுமான் (ரழி) அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    உதுமான் (ரழி) அவர்களது கரங்களில், முதன் முதலில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களே வழங்கினார்கள். இதன் மூலம் இந்த உம்மத்தை அலைக்கழிக்கக் கூடிய பிரச்னைகள் பல எழுந்த பொழுது, அதனை சாதுர்யமாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடனும் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்களாக அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

    அமீருல் முஃமினீன் உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன், எனக்குப் பின்னால் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான எனது மனைவிமார்களை நாணயமும், நம்பிக்கையும், நேர்மையும், தூய்மையான சிந்தனையும் கொண்ட ஒருவர் பாதுகாக்கக் கூடியவராக இருப்பார். அந்த வகையில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) தனது கடமையைச் சரியாகச் செய்தார் என்று உதுமான் (ரழி) அவர்கள் குறிப்பிடக் கூயடிவர்களாக இருந்தார்கள்.

    ஒரு ஹஜ்ஜின் பொழுது, இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்ததோடல்லாமல், அவர்களுக்கு சரியாக வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பயண நெடுகிலும் அவர்களது தனிமைக்காக வேண்டிய பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். அந்த ஹஜ் நெடுகிலும் அவர்களது கண்ணியத்தையும், கௌரவத்தையும் பேணிப் பாதுகாக்கும் விதத்தில் அத்தனை ஏற்பாடுகளும் அமைத்திருந்தார். இத்தனையையும், அவர்கள் தனக்காக பிரத்யேகமாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தார்.

    உதுமான் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். உதுமான் (ரழி) அவர்கள் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    (… அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன் பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ உன் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான். (89:27-30)

    நன்றி:- http://www.ottrumai.net/

  • அண்ணல் நபி (ஸல்)
  • அல் குர்ஆன்
  • அல்லாஹ்வின் திருநாமங்கள்
  • அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
  • அஹ்லுல் பைத்
  • இஸ்லாம் இலகுவான மார்க்கம்
  • ஈத் முபாரக்
  • உம்ரா
  • உறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்
  • எது முக்கியம்?
  • கடமையான குளிப்பு
  • கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்
  • குழந்தைகள்
  • சோம்பல் இஸ்லாத்தின் பார்வையில்
  • ஜனாஸா (மய்யித்)
  • ஜும்ஆ
  • துஆ
  • தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்
  • தொழுகை
  • நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
  • நல்லறங்கள்
  • நோன்பு
  • பர்தா
  • பார்வை
  • பிழை பொருத்தருள் யாஅல்லாஹ்
  • பெற்றோர்
  • மனைவி
  • முன்மாதிரி முஸ்லிம்
  • யா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா?
  • வலிமார்கள்
  • வாழ்வின் முன்னேற்றத்திற்கு
  • விதியின் அமைப்பு
  • ஷிர்க் என்றால் என்ன?
  • ஸலாம் கூறுவதன் சிறப்பு
  • ஸுன்னத் வல் ஜமாஅத்
  • ஹஜ்
  • Sadaqa
  • Sadaqat-Ul-Jariyah
  • பிரிவுகள்:அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி, இஸ்லாம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,