இல்லம் > நாட்டு வைத்தியம், மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம் > நாட்டு வைத்தியம் – மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்

நாட்டு வைத்தியம் – மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்


ன்னிக்கு தேதியில புள்ள பொறக்க வைக்கற ஆசுபத்திரிங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தியாகிட்டே இருக்கு. ஆனா, அப்பவெல்லாம் இப்படி ஆசுபத்திரியைத் தேடி யாரும் ஓடினது இல்ல… அரசமரம், ஆலமரம்னு சுத்தி வந்தே குணம் கண்டவங்கதான் ஜாஸ்தி! அதனால, இந்தத் தடவை மலட்டுத்தன்மையைப் போக்கற மர இலைங்க, பழங்கள்னு ஒங்களுக்குச் சொல்லப்போறேன்!


‘ஆலங்குச்சியால பல் விளக்கினா… பல்லுக்கு பலம் கிடைக்கும்’னு சொல்லக் கேட்டிருப்பீங்க. மலட்டுத்தன்மையைப் போக்குற குணமும் அதுகிட்ட இருக்கு துங்கோ! ஆலமர இளம் இலை (தளிர்), விழுது, விதை, மொக்குனு இதுல ஏதாவது ஒண்ணை எடுத்து, மையா அரைச்சி, பால்ல கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிச்சுட்டு வந்தீங்கனா… மலட்டுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா விலகும். ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொருந்தும்.

‘அரசனை நம்பி புருசனை கைவிட்டாளாம்’னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்களே. இதுக்கு யார்கிட்டயாவது பொழிப்புரை கேட்டுப் பாருங்க… தப்புத் தப்பாத்தான் சொல்லுவாங்க. இங்க ‘அரசன்’னு சொன்னது அரச மரத்தைத்தான். குழந்தை வேணுங்கிற பொண்ணுங்க, கோயிலைச் சுத்தி வர்றப்ப… அங்க இருக்குற அரச மரத்தையும் சுத்தி வருவாங்க. அந்த மரத்திலிருந்து வெளி யாகுற காத்து, அவங்களோட கருப்பை வியாதிகளைக் குணப்படுத்தி, தாயாகுற அந்தஸ்தை தரும்.

அரச மரத்தோட பழங்கள நல்லா காய வச்சி, பவுடராக்கி 7 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தா… அது ஆணாயிருந்தாலும், பொண்ணாயிருந்தாலும் மலட்டுத்தன்மையைப் போக்கிடும்.

இலந்தை இலை ஒரு கைப்பிடி, மிளகு 6 எண்ணிக்கை, பூண்டு 4 பல் எடுத்து மையா அரைச்சிக்கோங்க. மாதவிடாய் வந்த முதல் நாளும், ரெண்டாவது நாளும் வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வர்றதன் மூலமா… குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பிருக்கு.

இன்னொரு வைத்தியமும் சொல்றேன். வேப்பிலையை 100 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சி, மாதவிடாய் வந்த நாள்ல இருந்து 6 நாளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். அதுக்கு அப்புறமா… அரசு, மா – இது ரெண்டு இலைகளையும் தலா 50 கிராம் எடுத்து அரைச்சி, வெறும் வயித்துல ஒன்பது நாளைக்குச் சாப்பிட்டு வந்தா… கர்ப்பப்பையில இருக்குற அழுக்கு, புழு, பூச்சி எல்லாம் ஒழிஞ்சி போயிரும். சீக்கிரமா கர்ப்பம் தரிக்கும்.

இந்த மருந்தை சாப்பிடுறப்ப… கொத்தமல்லி இலை, ராகி சாப்பிட்டு வந்தா… நல்லது. ராத்திரி சாப்பாட்டை கொறைச்சிக்கணும்கறதும் முக்கியம்!

நன்றி:- தொகுப்பு: எம்.மரிய பெல்சின்

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்







பிரிவுகள்:நாட்டு வைத்தியம், மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
  1. 7:40 பிப இல் நவம்பர் 25, 2010

    bayanulla seythi thanks

  2. 7:45 பிப இல் நவம்பர் 25, 2010

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடையை சேவை தமிழ் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கிறது அல்லாஹ் உங்கள் பணி சிறக்க கிருபை செய்ய துஆ செய்கிறேன்

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக