தொகுப்பு

Posts Tagged ‘BP’

ஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி!


நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வித்தியாசமின்றி, நடுத்தர வயதைத் தாண்டியவர்களில் பலருக்கும் இன்று உயர் ரத்த அழுத்தம் (Hypertension) காணப்படுகிறது. ரத்த அழுத்தம், 140/90 என்ற அளவினைக் கடக்கும்போது, அதை உயர் ரத்த அழுத்தப் பிரச்னை என்கிறோம். இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசிய, சென்னை, பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் திருநாராயணன், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகளைப் பற்றியும் கூறுகிறார். இவை அனைத்துமே, ரத்த அழுத்தத்தை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நேரடி உணவுகள். இவற்றைச் செய்து வழங்கியிருக்கிறார் பாரம்பரிய சமையல் கலை நிபுணர் சுந்தரவல்லி.

கருப்பரிசி, சிவப்பரிசி தோசை

தேவையானவை: கருப்பரிசி (பச்சரிசி), சிவப்பரிசி (புழுங்கலரிசி) – தலா ஒரு கப், உளுந்து, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, தேங்காய்த் துருவல் – ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்), தக்காளி – மூன்று, சீரகம், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் – தேவையான அளவு, இந்துப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.


வெள்ளைப் பூசணி, பச்சைப் பட்டாணிக் கூட்டு

தேவையானவை: வெள்ளைப் பூசணி – ஒரு சிறு துண்டு, பச்சைப் பட்டாணி – அரை கப், தேங்காய்த் துருவல், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், சிறிய பச்சைமிளகாய் – ஒன்று,  கறிவேப்பிலை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பூசணியைத் தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர்விட்டு ஒரு கொதிக்கு வேகவைக்கவும். பச்சைப் பட்டாணியையும் வேகவைத்துக்ªகாள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வேகவைத்த காய்கறிகளுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடைசியாக ஒரு கடாயில் அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டுத் தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.


முருங்கைக் கீரைக் கூட்டு

தேவையானவை: முருங்கைக் கீரை – ஒரு கப், பாசிப் பருப்பு – கால் கப், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்துகொள்ளவும். பாசிப் பருப்புடன், கீரை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கீரைக் கூட்டில் கலந்து, உப்பு சேர்த்துப் பரிமாறவும்.


பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகு – 100 கிராம், எலுமிச்சம் பழம் – நான்கு, இந்துப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எலுமிச்சம் பழங்களை விதை நீக்கிச் சாறு எடுக்கவும். பச்சை மிளகை சிறு சிறு கொத்தாக நறுக்கி, காம்புடன் அலசித் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சைச் சாறு, இந்துப்பு சேர்த்து மூன்று நாள் ஊறவிடவும். ஊறிய பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைப்படும்போது எடுத்துப் பரிமாறவும்.


கொள்ளு ரசம்

தேவையானவை: கொள்ளு – அரை கப், புளி – சிறு எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, ரசப்பொடி – ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை: கொள்ளை அரை மணி நேரம் ஊறவைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். வேகவைத்த பிறகு, தண்ணீரைத் தனியே வடித்து விடவும். வெந்த கொள்ளை, சுண்டலாகத் தாளித்து உண்ணலாம். புளியைத் தேவையான தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். அதில் ரசப்பொடி, உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைக்கவும். பிறகு கொள்ளு வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நுரை கட்டி வரும்போது, நெய்யில் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும்.


தவிர்க்க வேண்டியவை:

அதிக உப்பு சேர்ந்த பொருட்கள், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பிஸ்கட், அதிகப் புளிப்பு, உப்பு, காரம் மிகுந்த உணவுகள், துரித உணவுகள், இனிப்பு வகைகள் போன்றவை, உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி, ரத்தக் குழாயைச் சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்த்தல் நலம்.

சேர்க்க வேண்டியவை:

பழங்கள், காய்கறிகளில் சோடியம் சத்துக்குப் பதிலாக பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால், சர்க்கரை நோய் இல்லாத, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, வாழைப் பழம் நன்மை தரும். கீரை வகைகள் பெரும்பாலும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை ஆகியவை சோடியத்துக்கு மாற்றாக அமைந்து உடலில் நீர் கோத்துக்கொள்வதைத் தவிர்த்து, ரத்த அழுத்தத்தை ஓரளவுக்குக் குறைக்கும். உப்புக்கு மாற்றாக, இந்துப்பு பயன்படுத்தலாம். குறைந்த அளவு போட்டாலே, அது உப்பின் சுவையைத் தந்துவிடும். சிறுநீரை எளிதாக வெளியேற்றக்கூடிய வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளைப் பூசணியை வாரம் ஒருமுறையாவது, உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்களில் குறைந்த அளவில் நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மிகக் குறைந்த அளவில் நெய் சேர்த்துக்கொள்வது தவறு இல்லை. சீஸ், வெண்ணெய், டால்டா போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். எப்போதாவது ஒரு நாள் சிறிய அளவில் முறுக்கு, தேன்குழல், காரச்சேவு முதலிய நொறுக்குத் தீனிகளைச் சிறிதளவு  எடுத்துக்கொள்ளலாம். வாதுமை, முந்திரி, பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளை எண்ணெய், நெய்யில் பொரிக்காமல் உப்பு சேர்க்காமல் நான்கு, ஐந்து சாப்பிடலாம்.

இரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapyஇரத்த கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்தக் கொதிப்பு (Hypertension) அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நம் உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்களின் உள் சுவர்கள் இரத்த ஓட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தும் அதிக அளவு தடையைக் குறிக்கும்.

இரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது?
நாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் “இரத்தக் கொதிப்பு” என்று கூறுகிறோம்.

இரத்தக் கொதிப்பு ஒரு வியாதியா?
இரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத்  தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.


இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை?

இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
இரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.

பக்கவாதம் (Stroke)
இரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.

பார்வை பறிபோகுதல்(Blindrers)
விழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.

சிறுநீரக செயலிழப்பு (Renel Failure)
இரத்தக் கொதிப்பு இருப்பதே தொ¢யாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், இரத்தக் கொதிப்பினால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்று பார்த்தோம். அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.

இதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)
இதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.

நமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது?
இரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை

(1) சிஸ்டாலிக் அழுத்தம்
(2) டயஸ்டாலிக் அழுத்தம்

    முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.

    இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.

    ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.

    140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)

    இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.

நார்மல்

சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
(மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
(மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல் 130 – 139 85 – 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1 140 – 159 90 – 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2 160 – 179 100 – 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 3 180 – க்கு மேல் 110 – க்கு மேல்

இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?
மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:
உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்
அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:
யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:
தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால் இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்: நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.

40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்த கொதிப்பை குறைக்க

அறிகுறிகள்:

 1. குறைந்த இரத்த அழுத்தம்.

தேவையானப் பொருள்கள்:

 1. பால்.
 2. பூண்டு
பால்
பால்
பூண்டு
பூண்டு

செய்முறை:
பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

இரத்த கொதிப்பு குறைய

அறிகுறிகள்: 1. இரத்த அழுத்தம்.  2.தலைச்சுற்றுதல்.

 1. நெல்லி வற்றல்.
 2. பச்சைப்பயிறு.

நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பட

அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அறிகுறிகள்:

தேவையான பொருட்கள்:

 1. அகத்தி கீரை.
 2. சுண்டவத்தல்.

செய்முறை: அகத்தி கீரை, சுண்ட வத்தல் ஆகியவைகளை சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பட

அறிகுறிகள்:

தேவையான பொருள்கள்:

 1. கறிவேப்பிலை.
 2. எலுமிச்சைச்சாறு.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை
எலுமிச்சைச்சாறு
எலுமிச்சைச்சாறு
கறிவேப்பிலை சாறு
கறிவேப்பிலை சாறு

செய்முறை: கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

குறைந்த இரத்த  அழுத்தம் கட்டுப்பட

அறிகுறிகள்:

தேவையான பொருள்கள்:

 1. ஜடமான்சி வேர்.
 2. கற்பூரம்.
 3. இலவங்கப்பட்டை.

செய்முறை: குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஜடமான்சி வேர், கற்பூரம் மற்றும் இலவங்கப்பட்டைகளை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.

கொழுப்பு குறைய

அறிகுறிகள்:

தேவையான பொருட்கள்:

 1. நெல்லிக்காய்.
 2. சீரகம்.
 3. பூண்டு.
 4. சின்ன வெங்காயம்.
சின்னவெங்காயம்
சின்னவெங்காயம்
பூண்டு
பூண்டு
நெல்லிக்காய்
நெல்லிக்காய்

செய்முறை:
நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.

நன்றி:- Rtn. Dr. S. முரளி, M.D.S

நன்றி:-www.grannytherapy,com

பிரிவுகள்:இரத்த கொதிப்பு BP குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,