தொகுப்பு

Posts Tagged ‘வேலை’

வேலை வாய்ப்பு இணையதளங்கள் – Job Vacancies Websites


JOB VAC

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

வளமான வருமானம்.. எளிமையான படிப்புகள்..! – இரா.ரூபாவதி


 

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. எல்லோரும் தேடிப் போகிற இன்ஜினீயரிங் கல்லூரிகளை நீங்களும் தேடிச் செல்வதைவிட குறைந்த செலவில் வளமான வருமானம் தரும் எளிமையான படிப்புகள் பல உங்களுக்காகவே இருக்கின்றன. இந்தப் படிப்புகளை படித்தால் வேலை நிச்சயம். தவிர, சுயதொழிலாக செய்வதோடு, மற்றவர்களுக்கும் வேலை தரலாம். இதோ, அந்தப் படிப்புகள்.

நன்றி:  இரா.ரூபாவதி

நன்றி:- நாணயம் விகடன்

கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! – ஆகாஷ்

பிப்ரவரி 24, 2013 1 மறுமொழி

இன்றைக்கு கைநிறையச் சம்பளமும், கண்ணியமான வேலையும் பெறவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படி ஆசை இருக்கும் இளைஞர்கள் இப்போதே கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கல்லூரிக்குச் சென்று படிக்க நேரம் இல்லாதவர்கள்

அஞ்சல் வழி மூலம் வீட்டில் இருந்தபடியே இந்தப் படிப்பை படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படிப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சொல்கிறார் ஐ.சி.எஸ்.ஐ.யின் இணை இயக்குநர் சாரா ஆரோக்கியசாமி.

”கம்பெனி செகரட்டரி படிப்பை தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) நடத்துகிறது. இதற்கு சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் இந்தியா முழுக்க இயங்கி வருகிறது. தென் இந்திய தலைமை மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.

இந்தப் படிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலை, அதாவது பவுண்டேஷன் புரோகிராமில் 4 தாள்கள் இருக்கின்றன. இரண்டாம் நிலையான, நிர்வாக நிலையில் (Executive Programme) இரண்டு பிரிவுகள் உண்டு. இதில் ஆறு தாள்கள் உள்ளன. மூன்றாவது, தொழில்முறை நிலையில் (புரொபஷனல் புரோகிராம்) நான்கு பிரிவுகள் உண்டு. இதில் 8 தாள்கள் உள்ளன.  

பிளஸ் டூவில் எந்த குரூப் படித்தவர்களும் இந்த அடிப்படைத் தேர்வு எழுதலாம். அடிப்படைத் தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம். இதன் பின்பு புரொபஷனல் படிப்புக்குத் தேர்வு எழுதலாம். புரொபஷனல் தேர்வு முடித்தபின் 16 மாத மேலாண்மை பயிற்சிக்குச்

(Management Training) செல்லவேண்டும். இதற்குப் பின் இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால் அசோசியேட் கம்பெனி செகரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும்.

இந்தப் படிப்பை படித்தால் வேலை கிடைப்பது சுலபம். காரணம், 5 கோடி ரூபாயும் அதற்கு மேலும் செலுத்தப்பட்ட மூலதனம் உள்ள கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது கம்பெனிகள் சட்ட விதி. அந்தப் பதவிக்கு இந்த கோர்ஸ் படித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள கம்பெனிகள் எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாகப் பணியில் அமர்த்தலாம். தவிர, பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து கம்பெனிகளும் கம்பெனி செகரட்டரியை நியமனம் செய்ய வேண்டும்.

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை படித்து முடித்தவர்கள் நிர்வாக இயக்குநரா கவும், முழுநேர இயக்குநராகவும்,  கம்பெனி யின் தலைவராகவும் உயர் பதவியில் இருக்கிறார்கள். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை முடித்தவர்கள் கம்பெனியில் முழுநேர அதிகாரியாகப் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் வேலை பார்க்கலாம்.  

ஒரு கம்பெனி செகரட்டரி என்பவர் கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி  தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதல், பல்வேறு துறை சார்ந்த சட்டப் பணிகள் உள்பட பல வேலைகளைச் செய்வார்.  

இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேரலாம். தபால் வழிக் கல்வி தான் என்பதால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். மண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடக்கும் நேர்முக வகுப்பிலும் சேர்ந்து படிக்கலாம். ஓர் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டுமுறை தேர்வு நடக்கும். மார்ச் 31-க்குள் சேருபவர்கள் டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-க்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் அடிப்படைத் தேர்வு எழுதலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு” என்று முடித்தார் சாரா ஆரோக்கியசாமி.

கைநிறையச் சம்பளம், நிறுவனங்களைக் கட்டிக்காக்கும் கண்ணியமான வேலையைத் தரும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை நீங்களும் படிக்கலாமே!

நன்றி:  ஆகாஷ்,  சாரா ஆரோக்கியசாமி.

நன்றி:- நாணயம் விகடன்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள் !

ஜனவரி 20, 2013 1 மறுமொழி

ந்த குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்தான் பெற்றோரின் மிகப் பெரிய சொத்து. பெற்றோரின் கடைசிக் காலத்துக்கு அவர்கள் பெற்ற குழந்தைகளையே பலரும் நம்பி இருக்கின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தந்தால்தான் அவர்களும் நன்றாக இருப்பார்கள்: பெற்றோர்களையும் நல்லபடியாகப் பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகப் பணத்தைச் சேமிப்பதில் நம்மவர்களுக்கு இணையாக உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதாக இருந்தாலும் சரி, சின்னதாக தங்க நகை வாங்கி வைப்பதாக இருந்தாலும் சரி நம்மவர் களுக்கு இணை நம்மவர்களே.

குழந்தைகள் பெயரில்..!

குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக நிறைய சேமிக்கவேண்டும் என்கிற எண்ணம் நமக்கு  இருந்தாலும், அதற்கான சரியான முதலீட்டு வழிமுறைகளை நாம் தேர்வு செய்கிறோமா என்பது மிகப் பெரிய கேள்வி. அதிக லாபம் தரக்கூடிய, அதே நேரத்தில் நம் குழந்தைகளுக்கு மிகச் சரியாக பயன்தரக்கூடிய திட்டங்களில் நாம் முதலீடு செய்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும். முதலீட்டுக்கு உதவும் ஏஜென்ட்கள் சிபாரிசு செய்யும் திட்டங்களை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு  வாங்கி விடுகிறோம்.  

ஏஜென்ட்கள் சொல்லும் திட்டங்களை நாம் மறுக்காமல் வாங்குவதற்கு பல ஃபண்ட் நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் ஒரு சிம்பிளான டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, புதிதாக ஆரம்பிக்கும் சில திட்டங்களின் பெயரோடு ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தையைச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றன.  ‘சில்ட்ரன் எஜுகேஷன் ஃபண்ட்’ எனவும் ‘சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்றும் புதிய திட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம், நம்மை எளிதில் ஏமாற்றி ஃபண்டுகளையும் பாலிசிகளையும் வாங்க வைக்கின்றன. ஃபண்டிலோ அல்லது பாலிசியிலோ ‘சைல்டு/சில்ட்ரன்’ என்கிற வார்த்தை இருப்பதினாலேயே அது குழந்தைகளுக்கு ஏற்ற பாலிசி என்று சொல்லிவிட முடியாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ‘சைல்டு’ என்கிற வார்த்தை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அதில் பணத்தைப் போட ஆரம்பிக்கவேண்டும்.

இன்ஷூரன்ஸ் முதலீடல்ல!

குழந்தை பிறந்தவுடன் ஒரு தகப்பன் என்பவன் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருப்பான். அவனுக்குள் மகிழ்ச்சியும் பொறுப்புணர்வும் பல மடங்கு அதிகமாக இருக்கும். இந்தச் சமயத்தில் அந்த தகப்பனால் ஒரு சரியான இன்ஷூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியுமா என்பது சந்தேகமே. வங்கியில் வேலை பார்க்கும் குமாருக்கும் அப்படித்தான் நடந்தது. குமாருக்கு குழந்தை பிறந்தவுடனே அவருடைய இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் அவரை அணுகி ‘சைல்டு இன்ஷூரன்ஸ் பிளான்’ ஒன்றை வழங்கினார். தன் குழந்தைக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற மனநிலையில் இருந்த குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை உடனே வாங்கினார்.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்த பாலிசியின் டாக்குமென்ட்களை படித்த போதுதான், அது குழந்தையின் 18 வயது வரையிலான சேமிப்புடன் கூடிய ஆயுள் காப்பீடு பாலிசி என்று தெரிந்தது. பாலிசி முதிர்வின்போதுதான் முதிர்வுத் தொகை வழங்கப்படும் என்றும் அதில் சொல்லி இருந்தார்கள். குழந்தையின் எதிர்கால கல்வித் தேவை என்ற ஒரே விஷயத்துக்காக குமார் அந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து விட்டார்.

ஆனால், அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின்படி, குழந்தையின் 18 வயது வரை குமார் தொடர்ந்து பிரீமியம் செலுத்தவேண்டும். பாலிசி முதிர்வின்போது பாலிசித் தொகையுடன் (sum assured) சேர்த்து போனஸ் தொகையும் வழங்கப்படும். அதேசமயம், 18 வயதிற்குள் குழந்தைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமானால், பாலிசித் தொகை மற்றும் அந்தக் காலம்வரை அறிவிக்கப்பட்ட போனஸ்களும் சேர்த்து குமாருக்கு (Nominee/policy holder) வழங்கப்படும்.

குடும்பச் செலவு, எதிர்காலத் தேவைகள் மற்றும் பாலிசி பிரீமியம் தொகை முதலியன குமாரின் வருமானத்தையே நம்பி உள்ளன. குழந்தை வளரும் பருவத்தில் குமாருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், பிரீமியம் கட்டுவது தடைபட்டு பாலிசி லேப்ஸ் ஆகும் வாய்ப்பு அதிகம். அப்படி பாலிசி லேப்ஸ் ஆகிவிட்டால் குழந்தையின் எதிர்காலத் தேவைக்கு எந்த பணமும் கிடைக்காது. அப்படி இருக்க, அந்தக் குழந்தைக்கு எப்படி ஒளிமயமான எதிர்காலம் அமையும்?

டேர்ம் பிளான் பெஸ்ட்!  

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தன் குழந்தைக்கு குமார் எடுத்த பாலிசி பொருத்த மானதல்ல என்று தெரியவரும். குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டுமெனில், நாம் முதலில் கவனிக்கவேண்டியது, குழந்தையின் தகப்பனுக்குப் போதிய அளவு ஆயுள் காப்பீடு இருக்கிறதா என்பதே. போதுமான அளவு ஆயுள் காப்பீடு இல்லையெனில், வேறு எந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுப்பதைவிட ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி’ எடுப்பதே சரியான முடிவாக இருக்கும்.

நாம் எடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி நீண்டகால அளவுக்கு நமக்கு காப்பீடு அளிப்பவையாக இருக்கவேண்டும். உதாரணமாக, 30 வயதில் இருக்கும் பெற்றோர் 20 முதல் 25 ஆண்டுகளுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கவேண்டும். குழந்தையின் அப்பா இளம் வயதில் இருக்கும்போதே இந்த பாலிசியை எடுத்தால் குறைவான பிரீமியம் தொகையில் நீண்டகாலத்திற்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது, குழந்தை வளரும் பருவத்தில் நமது குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் முக்கியமாக குழந்தைக்கும், தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். இதற்கு ஃபேமிலி ஃப்ளோட்டர்

(Family Floater) பாலிசி நமக்கு கைகொடுக்கும். மேலும், இன்று நாம் வேலை செய்யும் நிறுவனங்கள் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸை அளிக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் குரூப் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் விதிமுறைகள்படி, நமது குழந்தையையும் அதில் இணைக்கவேண்டும். இது குழந்தைக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்க வழி செய்யும்.

  இன்றே, இப்போதே..!

குழந்தை பிறந்தவுடன், நமது மனதில் அது ஒரு இன்ஜினீயராக, மருத்துவராக வரவேண்டும் என்று கனவு காண்போம். இன்றையச் சூழலில் நான்கு வருடம் இன்ஜினீயரிங் கோர்ஸ், கேப்பிடேஷன் ஃபீஸ் இல்லாமல், ஆறு லட்சம் ரூபாய் தேவை. குழந்தை தற்போது பிறந்திருக்குமானால், இந்தப் படிப்புக்கான செலவு 17 வருடங்களுக்குப் பின் 7% பணவீக்க விகிதத்தின் அடிப்படையில் 19 லட்சம் ரூபாயாக இருக்கும். இதற்கான சேமிப்பை நாம் இன்றே, இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.

இரண்டாவது, முதுகலைப் படிப்புக்கு (Post Graduation)சேமிப்பது. இந்தச் செலவு குழந்தையின் 20 அல்லது 21 வயதுகளில் வரலாம். அன்றைய தேதியில் முதுகலைப் படிப்பு இரண்டு ஆண்டு படிக்க அதிகபட்சம் 23 லட்சம் ரூபாய் செலவாகும். இன்னும் சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உள்ளூரில் படிப்பதாக இருந்தாலும் வெளிநாட்டில் படிப்பதாக இருந்தாலும், வங்கியில் கல்விக் கடன் வாங்குவதே  எதிர்காலத்தில் சாத்தியமான விஷயம்.

அடுத்து, மகன்/மகளின் திருமணச் செலவு. இன்று பலரும் திருமணத்தை ‘கிராண்ட்’-ஆக செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். விளைவு, ஓய்வுக்காலத்துக்கான பி.எஃப்.-லிருந்து பணத்தை எடுக்கவேண்டியச் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்க்க,  குழந்தை பிறந்ததும் திருமணத்துக்கு என தனியாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும். 23 வயதில் இத்தகைய செலவு வரும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது கல்யாணத்துக்கு 10 லட்சம் ரூபாய் தேவை எனில், 22 வருடங்களுக்குப் பிறகு 47.40 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கும்.

படிப்பு, திருமணம் போக, குழந்தைகளுக்குத் தேவையான சைக்கிள், 18 வயதில் ஒரு மோட்டார் பைக், செல்போன் போன்றவற்றை பரிசாக அளித்து உற்சாகப்படுத்தவும் சேமிப்பின் ஒரு  பகுதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி சேமிப்பது?

நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும். அது குழந்தை களுக்காக இருக்கவேண்டும் என்றானால் அதைவிட சந்தோஷம் பெற்றோர்களுக்கு வேறென்ன வேண்டும்?  உதாரணத்திற்கு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 25-வது வயதில் 25,000 ரூபாய் சம்பாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்செய்யவேண்டிய முதலீட்டு நடைமுறைகளை இனி பார்ப்போம்.

25 வயதில்  ஒருவருக்கு குழந்தை பிறப்பதாக கணக்கில்கொள்வோம். குழந்தை பிறந்தபிறகு, 0-5 வருடங்களுக்கு மாதம் 3,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். பணவீக்கம் ஆண்டுக்கு 7% உயர்கிறது எனில், அதற்கேற்ப ஒருவரது சம்பளமும் ஆண்டுக்கு 7% அதிகரிக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்.  

6-10 வயது வரை செய்துவரும் முதலீட்டுடன் 3,000 ரூபாயைச் சேர்த்து மாதம் 6,000 ரூபாயை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். குழந்தையின் பத்தாவது வயதில் ஒரு சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்றாலும் இந்த முதலீட்டிலிருந்தே தேவையான தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.  

குழந்தைகளின் 11-15 வயது வரை மாதம் 10,000 ரூபாயை ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்யவேண்டும். 16-23 வயது வரை மாதம் 15,000 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்தச் சேமிப்பை குழந்தையின் படிப்பு (இதில் வெளிநாட்டு மேற்படிப்பு அடங்காது!) மற்றும் திருமணச் செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்குத் தேவையான முதலீட்டு விவரங்கள்  சேமிப்புத் திட்ட அட்டவணையில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. இந்த முதலீடு ஒரு குழந்தைக்கே.  இரண்டு குழந்தைகள் என்பவர்களுக்கு வருடா வருடம் உயரும் வருமானத்திலிருந்து தேவைக்கு தக்கபடி முதலீட்டையும் உயர்த்திக்கொள்வது அவசியம்.

இனி என்ன யோசனை, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இதுவரை சேமிக்கத் தொடங்காதவர்கள் உடனே அதில் இறங்க வேண்டியதுதானே!  

நன்றி: தொகுப்பு: செ.கார்த்திகேயன், படங்கள்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

நன்றி:- நாணயம் விகடன்

எக்ஸாம் ஃபீவரா..? இந்தாங்க ‘மாத்திரை’!

பிப்ரவரி 27, 2012 1 மறுமொழி

தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது! வருடம் முழுக்கப் படித்ததை ஒரு நாளில், ஒரு தாளில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் உழைத்துக் கொண்டிருப்பார்கள் மாணவர்கள். அவர்களுக்கு நடுவே… ‘ஹைய்யோ… என்னால முடியல…’ என்று தளர்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்களுக்காவே, ‘முயன்றால் முடியும்!’ என்று தங்களின் அனுபவம் மூலமாக ‘எக்ஸாம் ஃபீவர்’ மருந்து கொடுக்க வருகிறார்கள், இந்த டாப் ஸ்கோரர் கல்லூரி மாணவிகள்.

டி.வி, மொபைல், சாட்டிங்… தியாகம்!
வித்யா லக்ஷ்மி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை

”ப்ளஸ் டூ-வில் 1,124 என்னோட மார்க். நான் செய்த சில தவறுகளால 15 மார்க் பற்றாக்குறை ஏற்பட்டு, மெடிக்கல் படிக்கறதுக்கான வாய்ப்பை இழந்தது, ஒரு பனிஷ்மென்ட் பாடம் எனக்கு. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் கேள்விகளைத் தேர்ந்தெடுத்தப்போ, எல்லாக் கேள்விகளும் தெரியும்ங்கிற தைரியத்துல, சுலபமான கேள்விகளை விட்டுட்டு கஷ்டமான கேள்விகளா தேர்ந்தெடுத்துட்டேன். அதில் நிறைய நேரம் செலவாயிடுச்சு. அதனால, கேள்விகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. அன்னிக்கு பாடத்தை அன்னிக்கே படிக்கறதுதான் பெஸ்ட். இருந்தாலும் எக்ஸாம் நெருங்க நெருங்க ‘இன்னும் இதெல்லாம் படிக்கலையே’னு பதறாம, ‘இப்போ இருந்தாச்சும் படிப்போம்’னு நம்பிக்கையா ஆரம்பிச்சா, நிச்சயமா முடியும். சயின்ஸ் பாடங்களை ரியல் லைஃபோட ரிலேட் செய்து படிச்சா, சுலபமா புரியும். மறந்தும் போகாது.

காலேஜ் போயிட்டா… படிக்க வேண்டாம்னு நம்ம பசங்களுக்கு ஒரு மோசமான மூடநம்பிக்கை இருக்கு. ஸ்கூல் போலவே தினமும் படிச்சதோட, செமஸ்டர் டைம்ல டி.வி, மொபைல், சாட்டிங்னு எல்லாத்தையும் தியாகம் செஞ்சதாலதான் இப்போ என்னால 85% எடுத்து, கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகவும் முடிஞ்சது. மொபைலும், ஃப்ரெண்ட்ஸும் எப்பவும் இருப்பாங்க. செமஸ்டரை விட்டுட்டா, அரியர்ஸ்தான் இருக்கும்… ஜாக்கிரதை. கடைசியா ஒரு டிப்ஸ்… பரீட்சைக்குப் போறதுக்கு முன்னாடி, தயிர்ல சீனி போட்டு சாப்பிட்டுப் போனா, எக்ஸாம் பயத்தினால உருவாகிற அசிடிட்டி குறையும்.”

ஒரு கை இல்லாமலே!
முத்துமாரி, சேது பொறியியல் கல்லூரி, விருதுநகர்

”நான் பிறந்த ஒரு வாரத்துல மருத்துவரோட கவனக்குறைவால் தவறான ஊசி போட்டதால, என் வலது கையைப் பறிகொடுத்துட்டேன். அதுக்காக முடங்கிடாம… ‘இடது கைதான் இருக்கே’னு சந்தோஷமா வாழப் பழகினேன். அப்பா பலசரக்குக் கடை வெச்சுருக்கார். தமிழ் மீடியத்தில் படிச்சேன். டென்த்ல 477/500 வாங்கினேன்… ஸ்கூல் ஃபர்ஸ்ட்! ப்ளஸ் டூ-ல 1,046 வாங்கினேன். ‘அகரம்’ ஃபவுண்டேஷன் உதவியோட இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தேன்.

தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ங்கிறதால ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறினேன். டிக்ஷ்னரி வெச்சு ஒவ்வொரு வார்த்தையா அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டு படிப்பேன். பொதுவா தமிழ் மீடியம் ஸ்டூடன்ட்ஸுக்கு இங்கிலீஷ் ஸ்பெல்லிங்ல நிறைய மிஸ்டேக் வரும். அதனால படிச்சதை எல்லாம் நான் ஒருமுறை எழுதிப் பார்ப்பேன். அதுதான் தேர்வு நேரத்துல கை கொடுத்துச்சு. ‘இவ்வளவு நேரம் படிச்சேன்’னு கணக்கு வைக்கிறதைவிட, என்ன படிச்சுருக்கேங்கிறதுலதான் கவனமா இருப்பேன். இப்போ என்னோட டிபார்ட்மென்ட்ல 86% மதிப்பெண்களோட மூணாவது இடத்தில் இருக்கேன். என்னாலயே முடியும்னா, உங்களால் நிச்சயமா முடியும்தானே?!”

பத்து நிமிஷம்கூட பொக்கிஷம்!
கன்னி ஆர்த்தி, சேது பொறியியல் கல்லூரி, சோழவந்தான்

”நான், கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி. எங்கப்பா ஒரு விவசாயி. எங்க ஊர்ல அதிகபட்சம் பொண்ணுங்களை ப்ளஸ் டூ வரைக்கும்தான் படிக்க வைப்பாங்க. இன்ஜினீயரிங் கனவு எல்லாம் காணத் தெரியாத சூழ்நிலையில், நல்ல மார்க் வாங்கணுங்கிறதை மட்டுமே குறிக்கோளா வெச்சுப் படிச்சேன். 1,046 மார்க் எடுத்தேன். இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தப்போ, பொதுவா கிராமப்புற மாணவிகள் கூச்சத்தோட ஒதுங்கியே இருந்தாங்க. நான் எல்லார்கிட்டயும் சகஜமா பேசிப் பழகினேன். தமிழ் மீடியம்ல படிச்சுருந்ததால, மற்ற ஸ்டூடன்ட்ஸைவிட அதிகமா உழைக்க வேண்டியிருந்தது. பரீட்சை நேரத்துல அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்கூட வேஸ்ட் பண்ண மாட்டேன். கஷ்டமான பாடங்களை முதலில் முடிச்சுட்டு, அப்புறம்தான் சுலபமான பாடங்களுக்கு வருவேன். இப்போ 81% மதிப்பெண்களோட கேம்பஸ் இன்டர்வியூக்காக காத்துக்கிட்டு இருக்கேன். பரீட்சை நேரம் நெருங்கிடுச்சு… அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம்கூட பொக்கிஷம் ஃப்ரெண்ட்ஸ். பை!”

நேரம் இல்லைங்கறது… பொய்!
அஞ்சனா, சாஸ்த்ரா யுனிவர்சிட்டி, தஞ்சாவூர்

”கிளாஸ் ரூமில் குறைவாவும், கிரவுண்ட், ஸ்டேஜில் அதிகமாவும் அட்டென்டன்ஸ் கொடுக்கிற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஸ்டூடன்ட்ஸும், பர்சன்டேஜில் கலக்கலாம்ங்கிறதுக்கு, நானும் உதாரணம். கர்னாடக சங்கீதம், கீ-போர்டு, வயலின், ஓவியம், நடனம், ஸ்போர்ட்ஸ்னு எல்லாமே என் ஏரியா. சென்னையில் ஸ்கூல் படிச்சப்போ, மன்த்லி டெர்ம் எக்ஸாம் சமயத்துல எல்லாம்… ஏதாவது ஒரு ஆர்ட் காம்படிஷன், ஸ்போர்ட்ஸ்னு ஓடிட்டே இருப்பேன். இப்படி மிஸ்ஸாகற கிளாஸ், டெஸ்ட் எல்லாத்தையும் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் மூலமா சமன் செஞ்சுக்குவேன். டெஸ்ட்ஸ் கொஸ்டீன் பேப்பரை   வாங்கி, வீட்டுல நானே டெஸ்ட் எழுதுவேன். அதனால   தான் ப்ளஸ் டூ-ல என்னால 1,048 மார்க் வாங்க      முடிஞ்சது.

சென்னை, வள்ளியம்மாள் காலேஜ்ல பி.சி.ஏ சேர்ந்தப்போவும் சரி, இப்போ இந்த சாஸ்த்ரா யுனிவர்சிட்டியில எம்.பி.ஏ பண்றப்போவும் சரி… நாசிக், சிம்லானு கர்னாடக சங்கீதப் போட்டிகள், திருவையாறு தியாகராஜா ஆராதனா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரோட நாத வைபவம்னு பிஸியா பாடிட்டேதான் இருக்கேன். ஆனாலும், நைட் ஸ்டடி, வீக் எண்ட் ஸ்டடினு படிப்பை பேலன்ஸ் பண்ணிடுவேன். ‘நேரமே இல்லை’னு சொல்றது சுத்தப் பொய். நிறைய நேரம் இருக்கு… நாமதான் பிரிச்சு பிரிச்சு சரியா பயன்படுத்திக்கணும்!”

 

நன்றி:- அவள் விகடன்

தலைவா என்னை மன்னித்து விடுங்கள் – முல்லா கதைகள்


ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா “என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?”
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

“என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்” என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். “அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்” என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய
சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன்

அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில்

முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது

தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.


“ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?”

“இல்லை” என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று “தலைவா என்னை மன்னித்து விடுங்கள்”

என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

நன்றி:- இனைய நன்பர்

டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை


த்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் பின்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணியின் பெயர்: என்ஜினீயர் டிரெய்னீஸ்

காலியிடங்கள்: 1000 (மெக்கானிக்கல்- 700, எலக்ட்ரிக்கல்-200, எலக்ட்ரானிக்ஸ்-100) (பொது-498, ஒ.பி.சி-261, எஸ்.சி-151, எஸ்.டி-90) இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகலளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: இளங்கலை பட்டத்தாரியாக இருந்தால் 01.08.2011-ம் தேதி அன்று 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 01.08.1984-ம் தேதிக்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். முதுநிலை பட்டத்தாரியாக இருந்தால் 29 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்கள் 01.08.1982க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

2.பணியின் பெயர்: சூப்பர்வைசர் டிரெய்னீஸ் (என்ஜினீயரிங்)

காலியிடங்கள்: 1000 (மெக்கானிக்கல்- 740, எலக்ட்ரிக்கல்-160, எலக்ட்ரானிக்ஸ்-60,சிவில்-40) இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  01.08.2011-ம் தேதி அன்று 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 01.08.1984-ம் தேதிக்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

3.பணியின் பெயர்: சூப்பர்வைசர் டிரெய்னீஸ் (நிதி)

காலியிடங்கள்: 207 (இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் வணிகவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் முழுநேர பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  01.08.2011-ம் தேதி அன்று 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 01.08.1984-ம் தேதிக்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

4.பணியின் பெயர்: அசிஸ்டன்ட் ஆபிசர் (எச்.ஆர்) கிரேடு 2

காலியிடங்கள்: 150  (இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

கல்வித்தகுதி: ஆங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பி.பி.ஏ, பி.பி.எம், பி.எஸ்.டபிள்யு, பி,காம் பிரிவுகளில் பெர்சனல் மேனேஜ்மென்ட், ஐ.ஆர், எச்.ஆர், தொழிலாளர் நலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை முக்கிய பாடமாகக் கொண்டு முழு நேர பட்டப்படிப்பில் 65 சதவிகித எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முழுநேர பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  01.08.2011-ம் தேதி அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் 01.08.1981-ம் தேதிக்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

தேர்வு முறை: அசிஸ்டென்ட் ஆபிசர் (எச்.ஆர்) கிரேடு 2 பணிகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிற பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்கள்:

1.என்ஜினீயர் டிரெய்னீ பணிக்கு 18.09.2011

2.சூப்பர்வைசர் டிரெய்னீ பணிக்கு 25.09.2011

தமிழகத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை,  திருச்சி

விண்ணப்பக்கட்டணம்:  என்ஜினீயர் டிரெய்னீ பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணமாக ரூ.500 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏதாவது ஒரு கிளையில் 31170378124 என்ற பவர் ஜோதி கணக்கில் செலுத்த வேண்டும்.

சூப்பர்வைசர் டிரெய்னீ மற்றும் அசிஸ்டன்ட் ஆபீசர்(எச்.ஆர்) கிரேடு 2 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டணமாக ரூ.300  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏதாவது ஒரு கிளையில் 31325460299 என்ற பவர் ஜோதி கணக்கில் செலுத்த வேண்டும்.  கட்டணம் செலுத்துவதற்கான சலானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதற்கான பிரிண்ட்-அவுட் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் தகுந்த சான்றிதழ் நகல்கள் அனைத்தும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: (என்ஜினீயர் டிரெய்னீஸ் பணிக்கு)

AGM (HR &IC)

M/S Bharat heavy Electricals Ltd, Boiler Auxiliaries Plant, Ranipet Head Post Office, Ranipet -632401.சூப்பர்வைசர் டிரெய்னீஸ் மற்றும் அசிஸ்டன்ட் ஆபிசர் (எச்.ஆர்) கிரேடு 2 பணிக்கு

SDGM (HR &LAW)

M/S Bharat heavy Electricals Ltd, Boiler Auxiliaries Plant, Ranipet Head Post Office, Ranipet -632401.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2011

பிரிண்ட்-அவுட் அனுப்ப கடைசி நாள்: 24.08.2011

மேலும் விவரங்கள் அறிய http://careers.bhel.in என்ற இணையளத்தைப் பார்க்கவும்.

 

 

யாருக்கு வேலை இல்லை? – ஆர். மோகன்ராம்


அதேபோல, மாணவர்களின் தோல்விக்குத் தாய்மொழியாம் தமிழைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருப்பதும் முக்கியக் காரணமாகும். இதே நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் ஆங்கில மொழிக்குச் சிறப்புப் பயிற்சி மையங்கள் செயல்படுவதைப்போல, தமிழைப் பேசவும், படிக்கவும் பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கும் நிலை உருவாகும். கிட்டத்தட்ட இப்போதே அந்த நிலை வந்துவிட்டதாகக்கூட கூறலாம்.
மாணவரின் முதல்கட்டத் தோல்வி மொழியில் இருந்தே தொடங்குகிறது. உலக நாடுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கு அடிப்படைக் காரணம் பேச்சுரிமைதான். ஆனால், சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்த பிறகும், நமது இளைஞர்கள் பேசத் தயங்கியே வாழ்க்கையை இழந்துவிட்டனர். ஆனால், வீண் பேச்சு, விவாதங்களில் மட்டும் சளைப்பதில்லை.
இதை உணராமல் – உணர முயற்சிக்காமல் படித்துவிட்டேன், எனக்கு அரசுதான் வேலை அளிக்க வேண்டும் என்று காலத்தைக் கழிப்பது சுய முன்னேற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவாது. எனவே, ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படுவார்களேயானால், இளைஞர்கள் யாரிடமும் வேலை கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.
முதுநிலைப் பட்டம் பெற்றவருக்குக்கூட தான் வாங்கிய பட்டத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களின் அர்த்தம் தெரியாமல் இருப்பது கசப்பான உண்மை. புதுக்கோட்டையில் இயங்கி வரும் ஆங்கிலப் பயிற்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் உள்ள தனது பயிற்சி மையங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் உள்பட சுமார் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களில் தேர்வானவர்கள் 2 பேர் மட்டும்தான் என்பதிலிருந்து, ஆங்கில மொழி அறிவில் நமது இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
நமது பள்ளிகளில் பாடங்கள் மட்டுமே போதிப்பது, தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், உலக விஷயங்களைப் போதிக்காதது ஆகியனவே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம். அந்தக் காலத்தில் இருந்ததைப்போல நீதி போதனை வகுப்புகளை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும். அதில் கூறப்படும் நீதிக் கதைகளைக் கேட்காமல் பிள்ளைகள் வளர்வதால்தான் நேர்மை, நியாயம், நீதி, மனசாட்சி போன்றவை எங்கே கிடைக்கும்? என்ன விலை எனக் கேட்பதுடன், குறுக்கு வழியில் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நிலை அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் பொது அறிவை வளர்க்கும் போக்கு அதிகரிக்க வேண்டும். தினமும் நாளிதழ்கள், வார இதழ்களைப் படித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கான களமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அறிவுத் திறனுடன் ஆளுமைத் திறனையும் பெற முடியும். இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொண்டால்… யாருக்கும் வேலை இல்லை என்ற கேள்வி தானாகவே மறைந்துவிடும்.

வேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா? – டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓ)


[ கிராமப்புற சூழ்நிலையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். உலகம் விசாலமானது. நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம் உங்கள் காலடியில்.

வசதி படைத்த முஸ்லிம் தனவந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ஜகாத், சதக்கா போன்ற தான தர்மங்களின் ஒரு பகுதியை தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற அறக்கட்டளையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.

சிறிய ஊர்களில் பெரிய ஆடம்பரமான பள்ளிவாசல்கள் கட்டும் போது, பொது அறிவை விரிவுபடுத்தும் படிப்பகங்கள் ஏற்படுத்தலாம்.

படித்த றிமைசாலிகளை உருவாக்குவது யார் கையில் உள்ளது? பெற்றோர்களின் உதவி, ஆசிரியர்களின் ஊக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையிலும்தான் உள்ளது. எல்லோரும் பட்டம் பெற்று விடலாம், ஆனால் அந்த பட்டங்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் உதவும் வேலை வாய்ப்பு தேடித்தருகின்றதாக இருக்கின்றதா என்று பார்ரக்க வேண்டும்.]

தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எஸ்.எஸ்.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் முஸ்லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம் தான் வேலை கிடைக்காமல் உள்ளனர். இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது.

அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் கற்ற 48 சதவீதம் இந்துக்கள் வேலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் 10 சதவீதம் தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது.

மாண்புமிகு பிரதமர் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் பேசுகையில் முஸ்லிம்களுக்கு பொதுத்துறையில் இருப்பது போல் தனியார் பெரிய தொழிற்துறையிலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். 2009 வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தனியார் தொழில் அதிபர்கள் ரிலையன்ஸ் அனில் அம்பானியும், இரும்பு ஆலை அதிபர் சுனில் மிட்டலும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்திய நாட்டுன் பிரதமராக வந்தால் நலமாக இருக்கும் என்று கூறியதாக பத்திரிக்கை செய்தி.

எந்த மோடியை? அப்பாவி 2000 முஸ்லிம்களுக்கு மேல் மனித கொலையினை நடத்தியும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதி முகாமிலிருந்து தங்கள்வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செய்யும் குஜராத் அரசினை தலைமை ஏற்று நடத்தும் மோடியைத்தான் சொல்கின்றனர். பின் எவ்வாறு அனில் அம்பானியும், சுனில் மிட்டலும் பிரதமர் சொல்வது போன்று முஸ்லிம்களுக்கு வேலை கொடுப்பார்கன்.

ஏன், அரசாங்கத்தால் நடத்தப்படும் வேலைகளிலேயே அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 15 கொள்கை அறிக்கையின்படி முஸ்லிம்களுக்கு வேலை பூரணமாக கொடுக்கவில்லையென்று மைனாரிட்டி அமைச்சர் ஏ.ஆர். அந்துலே சொன்னதாகவும், ஒரு மத்திய அமைச்சருக்கு உள்ள ஒரு அமைச்சகம் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகளை படிக்கும் போது பரிதாபமாக நமக்குத் தெரியவில்லையா?

முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் குழு தன் அறிக்கை தயாரிக்க ராணுவத்தில் முஸ்லிம்களின் வேலை பற்றி கேட்டதிற்கு இந்துத்துவா அரசியல் வாதிகள் மட்டும் எதிர்க்கவில்லை- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் ஆச்சரியமில்லையா?

மேலும் சச்சார் அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வியிலோ, வேலையிலோ ஆதி திராவிடர்களை விட மிகவும் பின் தங்கி உள்ளனர், பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக சிறைக்கோட்டங்களின் கம்பிகளை எண்ணிக்கொண்டுள்ளனர். முன்னாள் உச்சமன்ற நீதிபதி ஜே,எஸ். வர்மா முஸ்லிம்கள் நீதித்துறையில் கண்ணுக்குத் தெரியாவிடத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.

இந்துத்துவா ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் பொதுவுடைமை பூங்கா கம்யூனிஸ்டுகள் 30 வருடம் ஆட்சி செய்யும் முஸ்லிம் ஜனத்தொகை 25 சதவீதம், ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 4.2 சதவீதம் தான் என்றால் நம்ப முடிகிறதா?

பீகார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் 3 சதவீதம் தான். தமிழ்நாட்டில் முஸ்லிம் ஜனத்தொகை 6 சதவீதம் இருந்தும், அரசால் 3.5 சதவீதம் வேலை வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அதையாவது முழுமையாகக்கொடுத்தால் சரிதான். இரண்டரை ஆண்டு காலத்தில்(25.12.2009) மொத்தமாக 2,78,294 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. அதில் எத்தனை சதவீதம் முஸ்லிம்கள் என்று அரசை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்புக்கள் கேட்டுப்பெற வேண்டும்.

மேற்கூறிய தகவல் முலம் எங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாத இருண்ட உலகம் உள்ளதோ என்ற ஐயப்பாடு ஏற்படலாம். உலகம் விசாலமானது. நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம் உங்கள் காலடியில்.

படித்த றிமைசாலிகளை உருவாக்குவது யார் கையில் உள்ளது?  பெற்றோர்களின் உதவி, ஆசிரியர்களின் ஊக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையிலும்தான் உள்ளது. எல்லோரும் பட்டம் பெற்று வீடலாம், ஆனால் அந்த பட்டங்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும்உதவும் வேலை வாய்ப்பு தேடித்தருகின்றதாக இருக்கின்றதா என்று பார்ரக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடங்களை பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களை போதிக்கச்செய்வது கல்வி ஸ்தாபனங்களை நிர்வகிப்பவர்களைச்சாரும்.

கல்வி நிலயங்களை நிர்வகிக்கிறவர்கள் குறைந்தபட்ச படிப்பு பெற்றிருந்தால் தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும். ஒரு சமயத்தில் இந்தக் கருத்தினை வழியுறுத்தும் போது ஒருவர் கேட்டார் ஏன் படிக்காதவர்கள் டாக்டர் பட்டம் பெறவில்லையா என்று! படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் பட்டம் கௌரவ பட்டம் என்று அறியாதவர்களும் நம்மிடையே கல்வி ஊதாபனங்களை நிர்வாகிர்க்கிறவர்களின் அறியாமையைத்தான் காட்டுகின்றது.

பல்கலைக்கழக(யு.ஜி.சி) அறிவித்த கொள்கைபடி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் தரமான கல்வியைத் தந்தால் தான் தரச்சான்றிதழ் தரமுடியும் என்றும், கல்லூரிகளில் விரிவுரையாளர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. யு.ஜி.சி தலைவர் திரு. சுக்தேவ் தோரட் கூற்றின்படி 24 சதவீத கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக்கழகங்களும் மட்டுமே தர(நாக்)அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது ஆச்சரியமாயிருக்கிறதா, ஆனால் அதுதான் உண்மை.

சமீபத்தில் எனது பள்ளித் தோழர் தன்னுடைய எம்.பி.ஏ படித்த மகனை அழைத்துக்கொண்டு வந்து வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னார். நானும் வெஸ்ட்ஏஷியா மனிதவள மேலாளர் திரு. ஜாஃபர் அவர்களிடம் சிபாரிசு செய்தேன். அவர் என் நண்பரின் மகனிடம் பி.சி.ஏ சம்பந்தமான கேள்வியினை கேட்டபோது தெரியாது என்று சொல்லியுள்ளார்.மேலாளர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையாம். பின்பு என் நண்பனின் மகன் என்னிடம் காரணம் சொல்லும் போது எல்லாம் மறந்து விட்டது என்றார்.

போட்டிகள் நிறைந்த உலகில் யார் எதிர் நீச்சல் போடுகிறாரோ அவர்தான் வெற்றிபெற முடியும். ஒரு தகுதியான மாணவனை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாகும்.

போதிக்கும் கல்வி ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது மனதில் புதிய உத்வேகம், கண்டுபிடிப்பு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை, தொழில் ஙட்பம், நிர்வாகத்திறமை, மனதைரியம் ஆகியவற்றை கற்றுத்தறுவதாக இருக்க வேண்டும்.

மதுரையைச்சார்ந்த 7வயது சிறுமி சுபிக்க்ஷா கம்யூட்டரில் புதிய உக்தியை கையாண்டதிற்காக உலகம் மெச்சத்தகுந்த பரிசினை பெற்று ஜனவரி ஒன்பதாம் தேதி 2009 ஜனாதிபதி சென்னை வந்தபோது நேரில் அழைத்துப் பாராட்டினார்.

நாகர்கோவில் இஸ்லாமிய மாணவி ரயிலில் கழிவுகளை தானியங்கி மூலம் கொட்டும் கருவியினை கண்டுபிடித்து பாராட்டுப் பெற்றார், அதே போன்று நாகப்பட்டிணம் இஸ்மாயில் என்ற மாணவர் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் 4ம் ஆண்டு இ.ஸி.இ இன்ஜினிரிங் படிப்பில் செல்போன், டிவி, ரோடியோ ஆண்டனாக்களை இணைக்கும் தொலைதொடர்பில் புதிய கருவி மைக்ரோ ஸ்டிரிப் பேட்ச் ஆண்டனாவினை கண்டு பிடித்துள்ளார்.

நான் குறிப்பிட்ட மூவர் சாதனை பின்னணியில் அவர்களுடைய ஆசிரியர்களும், பெற்றோர்கள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஏன் நீங்களும்உங்கள் குழந்தைகளை அவர்கள்போல் உருவாக்கக்கூடாது?

கிராமப்புற சூழ்நிலையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும்.

நான் பள்ளியில் என்.சி.சி சார்ஜன்ட்டாக பணியாற்றியபோது கமாண்டிங் வார்த்தைகள் ஹிந்தியில் இருந்தது. ஆனால் ஹிந்தியை கற்றுக்கொள்ளாது 11 வது பரீட்சையில் ஹிந்தி வினாத்தாளையே பதிலாக எழுதி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பின்பு ஹிந்தி ஏன் படிக்கவில்லை என்று நான் 1982ம் வருடம் மதுரை தல்லாகுலம் டி.எஸ்.பியாக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிக்காக மவுண்ட் அபுவிற்கு சென்றபோதுதான் உணர்ந்தேன்.

ஹிந்தி தெரியவில்லை என்றால் நாம் வட நாடுகளில் மட்டுமல்ல பக்கத்திலுள்ள ஆந்திர மாநிலத்திலும், பிழைக்கப் போகும் வளைகுடா, அரபு நாடுகளிலும்தான்.பின்பு ஹிந்தியின் முக்கியத்தை உணர்ந்து 1988ம் வருடம் தர்மபுரியில் எஸ்.பி.யாக இருந்தபோது ஹிந்தி பிராத்மிக் பரீட்சை எழுதி வெற்றி பெற்றேன். அப்போது என் வயது 42. ஆகவே ஒரு முஸ்லிம் மாணவன் தமிழ் மொழியோடு ஆங்கில, ஹிந்தி மொழியையும் தெரிந்திருப்பதின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்றால் மறுக்க முடியாது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஊதிரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிக்காக ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் ஜி,ஆர்.இ, டோப்பல், ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற பரீட்சைகள் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிப்பதோடு ‘புல்பிரைட்’ போன்ற ஸ்காலர்ஷிப்களும் வழங்கப்படுகிறது.

அதேபோன்று இந்தியாவில் புதுடெல்லியில் இயங்கும் மவுலானா அப்துல் கலாம் ஆஜாத் அரக்கட்டளை பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்த ஸ்காலர்ஷிப்பும், சென்னையில் சீதக்காதி டிரஸ்டிலும், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக் பொறுப்பேற்றிருக்கும் ‘ஓமியட்’ அறக்கட்டளையும், யு.ஜி.சி. கிராண்ட் கமிசன் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாதம் தோறும் மானியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது.

தமிழக அரசு கல்விக்காக இலவச சைக்கிள், பள்ளிவரை இலவச படிப்பு , இலவச கம்யூட்டர் போன்ற லுகைகலையும் பள்ளி கல்விக்காக அறிவித்த வாய்ப்பை முஸ்லிம் மாணவர்கள் தவற விடலாமா? சமீபத்தில் 8வது முதல் 12வது படிக்கும் இந்து மாணவர்களுக்கு ‘இந்து ஸ்காலர்ஷிப் எஃபிசியன்சி டெஸ்ட்’ நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் சேறுவதிற்கான ஊக்க உதவித்தொகையினை இப்போதே வழங்குகிறார்கள். ஏன் நம்மால் முடியாதா?

வசதி படைத்த முஸ்லிம் தனவந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ஜகாத், சதக்கா போன்ற தான தர்மங்களின் ஒரு பகுதியை தங்கள் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பயன்பெற அறக்கட்டளையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தலாம்.

சிறிய ஊர்களில் பெரிய ஆடம்பரமான பள்ளிவாசல்கள் கட்டும் போது, பொது அறிவை விரிவுபடுத்தும் படிப்பகங்கள் ஏற்படுத்தலாம்.

நான் புதுக்கல்லூரியிலும், மாநிலக்கல்லூர்யிலும் பயிலும் போது எங்கள் ஊர் இளையான்குடியில் ஐக்கிய முஸ்லிம் படிப்பகம் இருந்ததால் ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கை, இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இந்தியா, ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிக்கை களில் வரும் பொது அறிவு விசயங்கள் பிற்காலத்தில் எனக்கு அரசு தேர்வுகள் எழுத உதவியாக இருந்தது. அதே போன்ற படிப்பகங்கள் தங்கள் பகுதியில் நிறுவலாம். ஹிந்துக்கள் வீடுகள் கட்டும் போது தனியாக பூஜை அறை ஒன்றை ஏற்படுத்துவார்கள்.

நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிப்பறை கட்டி அதில் கனிணி, இன்டர்நெட் வசதி செய்து கொடுப்பதின் மூலம் உலகில் ஒருமூலையில் உள்ள லைப்பரியில் தேவைப்படும் புத்தகங்களை வீட்டில் இருந்தே படித்து தெரிந்து கொள்வதோடு, ஆன்லைன் வர்த்தகம், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடலும் செய்ய ஏதுவாக இருக்கும்.

பள்ளி இறுதிப்படிப்பினை முடித்ததுமே மாணவர்களை வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிந்து வைக்கச்சொல்லவதின் மூலம் மேல்படிப்பினை தொடர முடியாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தலாம். கல்லூரிகளிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவக்கூடிய பாடங்களை புகுத்தலாம். பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் எம்.பி.ஏ படிக்க உதவும் ஜிமேட்,கேட், பிட், ஜிஇஇ, சேட் போன்ற படிப்புகளுக்கு கோச்சிங் கொடுக்கலாம். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் ‘கேரியர் கைடன்ஸ்’ அமைப்பை ஏற்படுத்தி இது போன்ற பயிற்சிகளை ஆசிரியர்கள் கொண்டே செயல்படச்செய்யலாம்.

சென்னை ஜார்ஜ் டவுண் என்வீட்டிலிருந்து கோட்டைவரை நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு இளைஞர் என்னை வழி மறித்து ‘சார் நான் ஐ.ஏ.எஊ படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீ என்ன செய்கிறாய் என்றேன், அதற்கு அவர் பிளஸ் 2 படிக்கிறேன் என்றார்.

அந்த பையனின் கேள்வி என்னை 40 வருட சம்பவத்திற்கு கொண்டு சென்றது. நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்போது 1968 வருடம் ஒரு நாள் என் நண்பர் தாஹிருடன் ராயப்பேட்டை காவல் நிலைய அருகில் இருந்த ஐயர் ஐ,ஏ,எஸ். அகடாமியில் சென்டரில் விசாரித்தபோது அங்கே இருந்த மேலாளர் சொன்னார் நீங்கள்முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வாருங்கள் அதன்பின் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார். ஆனால் உண்மையில் ஐ.ஏ.எஊ படிக்க முதுகலை பட்டம்பெற தேவையில்லை என்பது பின்புதான் தெரிந்தது.

என்னிடம் கேள்வி கேட்ட மாணவனை நிச்சயமாக பாராட்டவேண்டும், ஏனென்றால் நாங்கள் பட்டப்படிப்பில் கேட்டக் கேள்வியை பிளஸ் 2 படிக்கும்போதே கேட்டிருக்கிறார். உண்மையில் இந்திய ஆட்சிப்பணிக்கோ அல்லது அதற்கு இணையான மாநில பரிட்சை எழுதுவதிற்கு ஆயத்தப்பணியை பிளஊ2 முடித்தவுடனேயே ஆரம்பித்துவிடவேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் என்ன என்ன விருப்பப்பாடம் ஐ.ஏ.எஊ பரீட்சைக்கு எடுக்கலாம் என்று தீர்மானிக்கலாம். இதன் மூலம் ஒரு மாணவன் 21லிருந்து 24 வயதுக்குள் இந்திய ஆட்சிப்பணி பரீச்சைக்கோ அல்லது அதற்கு இணையான பரீட்சையிலோ வெற்றி பெறலாம்.

53000 ஊழியர்களைக் கொண்ட சத்தியம் நிறுவனமே ஊழியர்களை நட்டாற்றில் விட்டபோது அரசு ஊழியம் நிரந்தர வேலை வாய்ப்பும், பல்வேறு சலுகைகளையும் கொண்டது எவ்வளவோ மேல். நாடார் சமூகத்தினருக்கு சாதாரண காவலர்,கிளார்க் பதவியிலிருந்து ஐ,ஏ,எஊ அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வீரபாண்டிய பட்டிணம் ஆதித்தனார் கல்லூயில் குறைந்த சலுகையில் நடத்தப்படுகிறது.

அது போன்ற அமைப்பு நமக்கு சென்னையில் இல்லை. அதற்காக புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும் மியாசி அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தீர்மானம் 15.10.2008 அன்று நான் கொண்டு வந்தபோது, பதவியை மட்டும் அனுவிக்க வேண்டும் ஆனால் முஸ்லிம் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்ற சிலரால் எதிர்க்கப்பட்டது என்றால் பாருங்களேன்.

சென்னை வண்டலூரில் ஐ.ஏ.எஸ்.க்கு மட்டும் கிரசண்ட் பொறியல் கல்லூரியில் நடத்தப்படுகிறது. அதேபோன்று முன்னாள் எம்.எல்,ஏ சைதை துரைசமியும் சைதைப்பேட்டியிலும், ஈ.வெ,ரா. அறக்கட்டளை சார்பிலும், அரசு சார்பில் அண்ணா நகரிலும் நடத்தப்படுகிறது.ஆனால் எம்.பி.ஏ, மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் படிப்பில் சேரவும், மேல் படிப்பிற்காக மேல் நாட்டிற்கு செல்லவும் தேவையான காம்ரகன்சிவ்(ஒருங்கிணைப்பு) பயிற்சி அளிக்க முஊலிம் அமைப்புகள் தற்போது இல்லாத குறையை நிவர்த்தி செய்ய கல்லூரிகளை நடத்துகின்றவர்கள் அல்லது தொண்டு நிறுவனம் முயல வேண்டும்.

இப்போதே சீனா 13 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. இந்தியாவும் 11 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் உலகமே அதிர்ந்திருக்கும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஆகவே பிரகாசமான எதிர்காலத்தில் நாம் முஸ்லிம் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டினால் வேலை இதயக்கனியாவது உறுதியே.

nidur.info

நன்றி:- டாக்டர் ஏ.பீ.முஹம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எஸ்(ஓ)

நன்றி:- nidur.info

வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு – ஜெயப்பிரகாஷ் காந்தி


இந்தியாவில் கல்வி பெரிய அளவிலான வர்த்தகமாக மாறி வருகிறது. இன்னொருபுறம் இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகமயமாதல் பொருளாதார கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம். தகவல் தொடர்பு துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் பார்க்கிறோம்.

கடந்த 2007-08ம் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் ஏறத்தாழ நிரம்பிவிட்டன. ஒரு சில இடங்களே காலியாக இருந்தன. ஆனால், தற்போது கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. சாப்ட்வேர் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்த பின்னர் இதுபோன்று காணப்படுவது இதுவே முதல்முறை.

புதிய மற்றும் வித்தியாசமான படிப்புகளை தேர்வு செய்யும் வழக்கமும் தற்போது மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உதாரணமாக, நேனோ டெக்னாலஜி, எண்ணெய் மற்றும் பெயின்ட் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம் இன்ஜினியரிங்: பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் மாற்று எரிபொருள் உற்பத்தி தொடர்பான விஷயத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களின் விருப்பமாக இத்துறை உள்ளது.

இத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஜார்க்கண்ட், தன்பாத்திலுள்ள ஸ்கூல் ஆப் மைன்ஸ், புனேயிலுள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் டெக்னாலஜி: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது (அதை தவறாக பயன்படுத்துவதும்) சுற்றுச்சூழலுக்கு பெரிய தீங்காக உள்ளது. கோல்கட்டா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கிரசென்ட் பல்கலைக்கழகம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்படிப்பு இடம்பெற்றுள்ளது.

பயன்படும் பிளாஸ்டிக், வாகன உற்பத்தியில் பயன்படும் பிளாஸ்டிக், எளிதில் மட்கும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றில் இத்துறை மாணவர்களுக்கு அறிவை வழங்குகிறது. ஜியோலாஜிக்கல் இன்ஜினியரிங்: சுரங்கவியல்தான் இத்துறையின் முக்கிய நோக்கம். வளங்களை கண் டறிதல், மேம்படுத்துதல் உள் ளிட்ட விஷயங்கள் இத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. சுரங்கம் (பூமிக்கு அடியில்) மற்றும் சுரங்கப் பாதை (வாகனங்கள் போக்குவரத்துக்கானது) அமைத்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் ஜியோடெக்னிக்கல் துறைகளை சிறப்புப் பிரிவுகளாக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன.

பயர் இன்ஜினியரிங்: தீப்பிடித்தலிலிருந்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை இத்துறையினர் கற்றுத் தேர்ச்சி அடைகின்றனர். கட்டடங்கள் மற்றும் வடிவமைப்புகள் தீப்பிடித்து சேதம் அடையாமல் பாதுகாப்பான திட்டமிடலை இவர்கள் மேற்கொள்கிறார்கள். பழைய தீ விபத்துகளிலிருந்து கற்ற பாடங்களை இவர்கள் தங்கள் பணியில் நிறைவேற்றுகிறார்கள். நாக்பூர், நேஷனல் பயர் சர்வீஸ், கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் சேதமடையாமல் பாதுகாப்பதற்கான துறை. ரசாயனம், உயிரியல், வெப்பம், ரேடியோக்டிவ் மற்றும் பிற மாசுபடுத்தும் பொருட்களால் இவ்வுலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான விஷயங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. பிராஸஸ் இன்ஜினியரிங், வேஸ்ட் ரிடக்ஷன் மேனேஜ் மென்ட், வேஸ்ட் வாட்டர் டிரீட் மென்ட், மாசு தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளையும் மாணவர்கள் சிறப்புப் பிரிவுகளாகக் கொள்கின்றனர். விசாகப்பட்டினம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழக விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியன எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் பிரிவில் படிப்புகளை வழங்குகின்றன.

நன்றி:- ஜெயப்பிரகாஷ் காந்தி

நன்றி:-தி.ம. கல்வி மலர்