தொகுப்பு

Posts Tagged ‘வேலைவாய்ப்பு’

வேலை வாய்ப்பு இணையதளங்கள் – Job Vacancies Websites


JOB VAC

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

வளமான வருமானம்.. எளிமையான படிப்புகள்..! – இரா.ரூபாவதி


 

ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு. எல்லோரும் தேடிப் போகிற இன்ஜினீயரிங் கல்லூரிகளை நீங்களும் தேடிச் செல்வதைவிட குறைந்த செலவில் வளமான வருமானம் தரும் எளிமையான படிப்புகள் பல உங்களுக்காகவே இருக்கின்றன. இந்தப் படிப்புகளை படித்தால் வேலை நிச்சயம். தவிர, சுயதொழிலாக செய்வதோடு, மற்றவர்களுக்கும் வேலை தரலாம். இதோ, அந்தப் படிப்புகள்.

நன்றி:  இரா.ரூபாவதி

நன்றி:- நாணயம் விகடன்

கம்பெனி செகரட்டரிஷிப்: கைநிறையச் சம்பளம், கண்ணியமான வேலை! – ஆகாஷ்

பிப்ரவரி 24, 2013 1 மறுமொழி

இன்றைக்கு கைநிறையச் சம்பளமும், கண்ணியமான வேலையும் பெறவேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது? அப்படி ஆசை இருக்கும் இளைஞர்கள் இப்போதே கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். கல்லூரிக்குச் சென்று படிக்க நேரம் இல்லாதவர்கள்

அஞ்சல் வழி மூலம் வீட்டில் இருந்தபடியே இந்தப் படிப்பை படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படிப்பின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சொல்கிறார் ஐ.சி.எஸ்.ஐ.யின் இணை இயக்குநர் சாரா ஆரோக்கியசாமி.

”கம்பெனி செகரட்டரி படிப்பை தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) நடத்துகிறது. இதற்கு சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் இந்தியா முழுக்க இயங்கி வருகிறது. தென் இந்திய தலைமை மண்டல அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது.

இந்தப் படிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலை, அதாவது பவுண்டேஷன் புரோகிராமில் 4 தாள்கள் இருக்கின்றன. இரண்டாம் நிலையான, நிர்வாக நிலையில் (Executive Programme) இரண்டு பிரிவுகள் உண்டு. இதில் ஆறு தாள்கள் உள்ளன. மூன்றாவது, தொழில்முறை நிலையில் (புரொபஷனல் புரோகிராம்) நான்கு பிரிவுகள் உண்டு. இதில் 8 தாள்கள் உள்ளன.  

பிளஸ் டூவில் எந்த குரூப் படித்தவர்களும் இந்த அடிப்படைத் தேர்வு எழுதலாம். அடிப்படைத் தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம். இதன் பின்பு புரொபஷனல் படிப்புக்குத் தேர்வு எழுதலாம். புரொபஷனல் தேர்வு முடித்தபின் 16 மாத மேலாண்மை பயிற்சிக்குச்

(Management Training) செல்லவேண்டும். இதற்குப் பின் இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால் அசோசியேட் கம்பெனி செகரட்டரி கோர்ஸ் முடித்ததற்கான சான்றிதழ் கிடைக்கும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்தத் தேர்வுகளை எழுத முடியும்.

இந்தப் படிப்பை படித்தால் வேலை கிடைப்பது சுலபம். காரணம், 5 கோடி ரூபாயும் அதற்கு மேலும் செலுத்தப்பட்ட மூலதனம் உள்ள கம்பெனிகள் கட்டாயம் ஒரு கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது கம்பெனிகள் சட்ட விதி. அந்தப் பதவிக்கு இந்த கோர்ஸ் படித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 5 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள கம்பெனிகள் எக்ஸிக்யூட்டிவ் புரோகிராம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாகப் பணியில் அமர்த்தலாம். தவிர, பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து கம்பெனிகளும் கம்பெனி செகரட்டரியை நியமனம் செய்ய வேண்டும்.

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை படித்து முடித்தவர்கள் நிர்வாக இயக்குநரா கவும், முழுநேர இயக்குநராகவும்,  கம்பெனி யின் தலைவராகவும் உயர் பதவியில் இருக்கிறார்கள். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை முடித்தவர்கள் கம்பெனியில் முழுநேர அதிகாரியாகப் பணிபுரியலாம் அல்லது தனியாகவும் வேலை பார்க்கலாம்.  

ஒரு கம்பெனி செகரட்டரி என்பவர் கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி  தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதல், பல்வேறு துறை சார்ந்த சட்டப் பணிகள் உள்பட பல வேலைகளைச் செய்வார்.  

இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளிலும் சேரலாம். தபால் வழிக் கல்வி தான் என்பதால் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். மண்டல அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் நடக்கும் நேர்முக வகுப்பிலும் சேர்ந்து படிக்கலாம். ஓர் ஆண்டுக்கு ஜூன் மற்றும் டிசம்பர் என இரண்டுமுறை தேர்வு நடக்கும். மார்ச் 31-க்குள் சேருபவர்கள் டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-க்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் அடிப்படைத் தேர்வு எழுதலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு” என்று முடித்தார் சாரா ஆரோக்கியசாமி.

கைநிறையச் சம்பளம், நிறுவனங்களைக் கட்டிக்காக்கும் கண்ணியமான வேலையைத் தரும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை நீங்களும் படிக்கலாமே!

நன்றி:  ஆகாஷ்,  சாரா ஆரோக்கியசாமி.

நன்றி:- நாணயம் விகடன்

முஸ்லிம்களும் ஊடகங்களும் – மாலிக் கான்


விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது போன்ற சூழலில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மீடியா என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? அதில் முஸ்லிம்களின் நிலை என்ன? மீடியாவில் எவ்வாறு நாம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்? என்று எடுத்துரைத்து துயில் கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை விழிப்படையச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மீடியா ?
உலகத்தில் பரந்து இருக்கும் இதழியல்கள், தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படம், வீடியோ கான்ஃபிரன்சிங், இணையம், தனிநபர் பிரச்சாரம், வானொலி மற்றும் அலைவரிசைகள் எனப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் செய்திகள் மற்றும் இதற்குப் பயன்படும் தகவல் தொடர்புக் கருவிகள், ஜனசக்தி ஆகிய அனைத்தும் ஊடகம் (Media) என்ற கருத்தாக்கத்தில் அடக்கிவிடலாம்.

ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

1) மீடியாக்களின் அவசியம்?
மீடியா ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது. சில சம்பவங்களை எடுத்து அலசி, ஆராய்ந்துப் பார்த்தோமானால் மீடியாவின் அவசியம் என்ன என்பதை அனுமானித்துவிடலாம்.

சமீபத்திய ஈராக் போரை எடுத்துக்கொள்வோம், ஈராக்கின் பெட்ரோல் வளத்திற்கு ஆசைப்பட்டது அமெரிக்கா. அதை அபகரிக்க ஈராக்கை பயங்கரவாத நாடு என்று தன் ஆதரவு செய்தி ஊடகங்களான பி.பி.ஸி மற்றும் சி.என்.என் வழியாக உலகநாடுகள் மத்தியில் சித்தரித்தது. அணுஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்திருக்கின்றதா? என ஐ.நா நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவ்வாறு இல்லை என்று உறுதிபடக் கூறியது. எனினும் ஐ.நா’வின் சொல்லையும் மீறி அமெரிக்கா தன் தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி (Veto-Power) ஈராக் மீது போர் தொடுத்தது. அப்போது ஈராக்கை பலஹீனப்படுத்த முதன் முதலில் அமெரிக்கா தன் ஏவுகனைகளை ஈராக்கின் தகவல்தொடர்புக் கட்டிடத்தின் மீது வீசி அதை முற்றிலுமாக அழித்தது. காரணம், ஈராக்கினுள் தான் நடத்தப்போகும் அராஜக மனித மீறல்கள் உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது என்று மீடியாக்களின் வாசல்கள் அனைத்தையும் அடைத்தது.

ஈராக்கில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்தது அமெரிக்கா. இச்செய்திகளை அல்-ஜஸீரா மற்றும் சில இணைய ஊடகங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வந்தபோது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட மனிதநேய அடிப்படையில் அமெரிக்காவை எதிர்த்துப் போர் நிறுத்தம் செய்யக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் அப்பாவி முஸ்லிம்களை கைதிகளாக்கி சிறையில் அடைத்தனர். அவர்களை நிர்வாணப்படுத்தி ஒருவரோடு ஒருவராகப் பிணைத்துப் போட்டனர். ஈராக் முஸ்லிம்கள் மீது மின்சார அதிர்வுகள் கொடுத்தும், கற்பழிப்புகள் நடத்தியும் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் இணைய ஊடகங்கள் வாயிலாகக் கடந்த ஏப்ரல் 2004-ல் புகைப்படங்களாக வெளிவந்த போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ் பெல்ட் இத்தகைய இராணுவ வரம்புமீறல்களுக்கு மன்னிப்புக் கோரினார். இழந்த உடமைகளும், உயிர்களும் இவரின் மன்னிப்பின் மூலம் மீட்டிட முடியுமா? இல்லை!

இதே போன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில் இஸ்ரேலிய யூத மக்களால் விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் என்ற இல்லாத ஒரு நாட்டை யூதர்கள் திட்டமிட்டு பாலஸ்தீனில் உருவாக்கிவிட்டார்கள். இவ்விஷயத்திலும் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இன்றளவும் செயல்பட்டு வருகின்றன. வரலாறு நெடுகிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான போர்கள் அரங்கேறியே வருகின்றன.

சமீபத்திய குஜராத் கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், மோடி அரசின்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், முஸ்லிம்களின் சொத்துக்கள் மதவெறி பிடித்தவர்களால் சூரையாடப்பட்டன.

குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் அநியாயமான முறையில் தடாக் கைதிகளாகவும், பொடாக் கைதிகளாகவும் கைது செய்யப்பட்டு விசாரணை மரபு மீறலையும் தாண்டி மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்கச் செய்தனர். விசாரணை என்ற பெயரில் சித்தரவதை செய்யப்பட்டனர். இச்செய்திகளை மீடியாக்கள் வெளியுலகத்திற்குக் கொண்டுவந்த போது உலகநாடுகள் குஜராத் சம்பவத்தை விமர்சித்தன. இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவு குஜராத் சம்பவம் என எல்லோரும் கூறினர். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் எந்த முகம் கொண்டு இனி நான் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வேன் என்று கூறினார். மீடியாவின் மூலமாக இச்சம்பவங்கள் வெளிவராமலிருப்பின் இன்னும் முஸ்லிம் சமுதாயம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

மாற்று மதத்தில் ஒருவன் தவறு செய்தால் அதை அவனளவிலும், முஸ்லிம் ஒருவன் தவறு செய்துவிட்டால் அதை இஸ்லாத்தோடு இணைத்தும் செய்திகளை வெளியிடுவது முஸ்லிம்களுக்கு எதிரான மீடியாக்களுக்கு கைவந்த கலை. முஸ்லிம்கள் என்றால் வன்முறைகளைத் தூண்டுபவர்கள், தீவிரவாதிகள் என்று மாற்றார்கள் கூறும் மனோநிலைக்கு மீடியாக்கள் மக்களை மாற்றியிருக்கின்றன.

முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளும், வன்முறைகளும் ஒருபுறம் என்றால் ஊடகங்களின் வாயிலாக இஸ்லாத்தின் மீது நடத்தப்படும் அவதூறான பிரச்சாரங்கள் மற்றொருபுறம். குர்ஆன், ஹதீஸ்களை திரிப்பதும், இஸ்லாமிய ஷரீயத் சட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாது, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, பர்தா முஸ்லிம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது என்றெல்லாம் போலிப்பிரச்சாரங்கள் ஊடகங்களின் மூலமாக நடத்தப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, திருமணங்கள், போர்கள் ஆகியவைகளை தவறானமுறையில் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எந்த அளவிற்கு என்று சொன்னால் அவர்களின் சூசகமான கருத்துக்களின் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் கூட நாத்திகவாதியாக மாறிவிடுமளவிற்கு அவர்களின் மொழிப்புலமை கொண்டும், வாதத் திறன் கொண்டும் இஸ்லாத்திற்கு எதிராகப் போர் தொடுக்கிறார்கள்.

உலக அளவில் முஸ்லிகள் பொட்டுப் பூச்சிகளைப் போல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வரலாறுகள், தியாகங்கள் எல்லாம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. பள்ளிகளில் பயில வரும் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் முஸ்லிம்கள் தீயவர்கள் என்ற நஞ்சை விதைக்கின்றனர். பாடதிட்டங்களில் தங்கள் மதக் கொள்கைகளைத் திணிக்கின்றனர். காவல் துறை, இராணுவம், அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றார்கள். மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை ஊடகங்களில் வகுப்பு வெறி ஊடுறுவிவிட்டது. முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை மீடியாக்கள் மூலம் மக்கள் சக்தியை உருவாக்கி முஸ்லிம்கள்பால் சுமத்துகின்றன. நாம் மீடியாவில் அவசியத்தை உணராமலிருப்பதன் விளைவுதான் இத்தகைய தீய பலன்களை அடைய வேண்டியுள்ளது.

2) மீடியாவில் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதன் காரணங்கள்?
இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்க்க ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கல்வி கற்க மறந்துவிட்டனர். ஆரம்பகாலத்தில் அரபி மொழி அறிந்தோர் பிறமொழியை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டாதது, இன்றளவும் அரபியர்களிடத்தில் இவ்வழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு நிலை.

ஒவ்வொரு நவீனக் கண்டுபிடிப்புகள் வந்தபோதெல்லாம் அதைத் தீய வழியில் பலர் பயன்படுத்துவதைக் கண்டு அஞ்சி முற்றிலுமாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்றளவும் டி.வி இல்லாத பல இஸ்லாமிய இல்லங்கள் இருக்கத்தான் செய்கின்றன. டி.வி’யை எவ்வாறெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்பதை அறிய முற்படாமல் டி.வி பார்ப்பது ஹராம் என்ற மார்க்கத் தீர்ப்பையும் வழங்கினர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது ஹராம் என்றும் கூறினர். அதை எவ்வாறு சமுதாய வளர்ச்சிக்கும், மார்க்க வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம் என்று ஆமை வேகத்தில் அறிந்துகொண்டதன் பின்தான் ஆடியோ, வீடியோ, சி.டி, டி.வி.டி என பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனையும், நபிகளாரின் போதனைகளும் ஆரம்பகாலத்திலேயே மொழியாக்கம் செய்ய மறந்துவிட்டனர். மாறாக முன்னோர்களின் கட்டுக்கதைகளை கையிலெடுத்துக்கொண்டு இதுதான் மார்க்கம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இஸ்லாம் அதன் தூயவடிவில் பலருக்கு கிடைக்காமல் சென்றுவிட்டது. இவ்வகையான முன்னோர்களின் திரிபு பெற்ற நூல்கள், பிரச்சாரங்கள் மீடியாவில் சரிகட்டவியலாத பின்னடைவை ஏற்படுத்திவிட்டன.

முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டாதது, புதிய கண்டுபிடிப்புகளை உடனே ஏற்க மறுத்தது, குர்ஆன், ஹதீஸ்களை தெளிவுபடுத்த மறந்தது, மார்க்கப் பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பாதியேனும் சமுதாய வளர்ச்சிக்குக் கொடுக்காதது, தான் உண்டு தன் வேலையுண்டு என்ற பிற்போக்கு மனப்பான்மை என்று முஸ்லிம்கள் மீடியாவில் பின்தங்கிப்போனதன் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக முஸ்லிம்கள் ஊடகங்களில் பின் தங்கியிருப்பது அனைவரும் ஏற்றாக வேண்டிய கூற்று. எனவே இதை விரிவாக அலசுவதை விடுத்து ஊடகங்களில் நாம் எவ்வாறு முன்னேறலாம் என்பதை ஆய்வு செய்வோம்.

3) முஸ்லிம்கள் மீடியாக்களை எவ்வாறு பயன்படுத்தலாம்?
நவீன கண்டுபிடிப்புக்களைத் தூரநோக்கு பார்வை கொண்டு அங்கீகரிக்கவேண்டும். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு ஆதரவான மக்கள் சக்தியை உருவாக்க முஸ்லிம்கள் பாடுபடவேண்டும். மீயாக்களில் முஸ்லிம்கள் தாக்கத்தை ஏற்படுத்த பலவழிகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட்டுப் பார்ப்போம்.

கல்வியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சிக்கு அடிகோலிடும்.
கல்வி கற்பதில் முஸ்லிம்கள் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டாத நிலை. மனித அறிவின் பிறப்பிடம் கல்வி என்பதை ஏனோ முஸ்லிம்கள் மறந்துவிட்டார்கள். எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு இருக்கையில் கற்றறிந்த மாற்றார்கள் முஸ்லிம் சமுதாயத்தை ஊடகங்களின் வாயிலாக நசுக்குகிறார்கள். ஊடகங்களை எதிர்கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை கல்வியில் முன்னேற்றமடையச் செய்யவேண்டும். வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் ஆன்லைனில் கல்விகற்கும் நிலை நிலவிவருகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு என்று எத்தனை கல்வி நிலையங்கள் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் கல்விக்கூடங்களை நாம் வைத்திருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். பணம்படைத்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கான வாய்புகளும் வசதிகளையும் ஏற்படுத்திட முன்வர வேண்டும். கற்றறிந்தவர்கள் அனைவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்.

கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பிரிக்காமல் இரண்டும் இணைந்து கிடைக்கப் பாடுபடவேண்டும். கல்வியில் பின்தங்கியதால் மீடியாவில் மட்மல்லாது அரசு வேலைவாய்ப்பு, அரசியல் போன்றவற்றிலும் நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மீடியாவில் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு கல்வியில் முன்னேற்றம் மிகஅவசியம்.

இதழியல் மற்றும் மொழியியல் முன்னேற்றம்.
இதழியல்(Journalism) என்பது வாரஇதழ்கள், மாதஇதழ்கள், தினசரி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் எழுத்து வடிவில் மக்களைச் சென்றடையும் அனைத்து ஊடகங்களும் இதில் அடங்கும். எந்த ஒரு உலகச் செய்தியை நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனினும் மாற்றார்களிடத்தில் உள்ள ஊடகங்களைத்தானே அணுகவேண்டிய சூழல் நிலவிவருகிறது. உதாரணத்திற்கு தமிழில் முஸ்லிம்களால் நடத்தப்படும் தினசரிச் செய்தித்தாள் ஏதேனும் உண்டா? வேதனைக்குரிய விஷயம் முஸ்லிம்களில் திறமையான எழுத்தாளர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிக்கைத் துறையில் நமது சமுதாயம் முன்னேற்றம் காணவேண்டும். கருத்துக்கள் என்னவாக இருந்தாலும் அதைச் சீரிய முறையில் எடுத்துரைக்க மொழி என்ற ஊடகம் அவசியமாகிறது. எனவே மொழியை அதன் இலக்கிய, இலக்கண அறிவோடு அறிதல் வேண்டும். ஆங்கிலம் என்பது உலகில் அதிகமானோரால் பேசப்பட்டு வரும் மொழி, எனவே அவற்றையும் நாம் கற்றறிய வேண்டும்.

பட்டப் படிப்புகளில் இதழியலும் ஒரு பிரிவு. இதில் முஸ்லிம்கள் ஆர்வம் செலுத்திப் படித்து திறமையான எழுத்தாளர்களாக மாறவேண்டும். மீடியாவில் நம் சமுதாயம் முன்னேற திறமையான எழுத்தாளர்கள் பலர் உருவாக (உருவாக்க) வேண்டும். அதன் மூலமாக கணிசமான முறையில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் ஊடகங்களில் வெற்றியைக் காணும்.

தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் வானொலி அலைவரிசைகள்.
எந்த ஒரு செய்தியும் எழுத்துவடிவில் மக்களைச் சென்றடைவதை விட காட்சி ஊடகமான (Visual-Media) தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் (Documentery – Films) போன்றவற்றின் மூலமாக விரைவாகச் சென்றடைந்துவிடும். காட்சியோடு செய்திகள் மக்களைச் சென்றடையும் போது மக்கள் மனதில் அச்செய்திகள் பதியும். இவ்வகையான ஊடகங்களில் முஸ்லிம்கள் இப்போதுதான் தலைகாட்டியுள்ளார்கள். உலக அளவில் முஸ்லிம்களுக்கு சில அரபி சேனல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு சேனல் உண்டா எனில் இல்லை.

பி.பி.ஸி மற்றும் சி.என்.என் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் உலக அரங்கில் அதிகமானோரால் முஸ்லிம்கள் உட்பட கவரப்படுவதற்குக் காரணம் அவை அறிவியல் செய்திகளை ஆய்வுசெய்து தருகின்றன, மருத்துவச் செய்திகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதேயாகும்.

இத்தனை காலம் கழிந்து டாண் மியூசிக் சேனலில் தமிழில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகின்றது என்பது வியப்புக்குரிய செய்தி. அத்தகைய சேனல்களும் முஸ்லிம்களுக்குச் சொந்தமா? எனில் அதுவும் இல்லை. ஆடல், பாடல், இசை, பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டால் எண்ணற்ற தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள்.

இத்தகைய ஊடகத்தை முஸ்லிம்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். இஸ்லாத்தை எத்திவைப்பதோடல்லாமல் முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சேவை போன்ற நல்ல நோக்கங்களுக்கு இத்தகைய ஊடகங்களில் சரித்திரம் படைக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், குறும்படம் (Documentery) என்று போனால் இசை, ஆடல், பாடல், கவர்ச்சி மற்றும் கமர்ஷியல் இல்லாமல் முடியுமா? என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்காமல் இஸ்லாத்தின் வட்டத்திற்குள் இருந்துகொண்டு இத்தகைய ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சிந்தித்துப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

தனிநபர் பிரச்சாரங்கள் , மேடை நாடகங்கள், கருத்தரங்குகள், ஜும்மாப் பேருரைகள்.
இவையாவும் மக்களைச் சென்றடையும் ஊடகங்களே! இவற்றின் மூலமாகவும் மக்கள் சக்தியை உருவாக்கிட முடியும். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மட்டும் போதித்துச் சென்றுவிடாமல் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அம்சங்களும் கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். காலத்திற்குத் தகுந்தாற்போல் அவர்கள் வெள்ளிமேடைகளில் (குத்பாப் பேருரைகள்) பிரச்சாரங்கள் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம் நாடுகளில் பெருவாரியான முஸ்லிம்கள் ஒன்று குழுமக் கூடிய வெள்ளிக்கிழமை பேருரைகள் அரபி மொழியிலேயே சடங்குக்காக நடந்து வருகின்றன. நம்மில் பலரும் அதைப் பக்தியோடு கேட்டு துயில் கொண்டு செல்கிறோம். இன்றைய முஸ்லிம் சமுதாயம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது, சமுதாயத்தில் படர்ந்துவிட்ட களங்கங்கள் என்ன? மார்க்கத்தை எவ்வாறு நிலைநாட்டலாம் என உணர்ந்து இந்த குத்பாப் பேருரைகள் அமைந்தால் அதுவும் மீடியாவில் மகத்தான வெற்றிதான்.

பொழுதுபோக்கிற்காக எத்தனையோ அம்சங்கள் வந்துவிட்டன. ஆனால் பொழுதுபோக்கிலும் உபயோகமுள்ள ஒரு கருத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள், மேடை நாடகங்கள், கருத்தரங்குகள் நடத்துதல் அவசியம். இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலமாகவும் மீடியாவின் கவனத்தை திசைதிருப்ப முடியும். மார்க்கப் பிரச்சாரங்கள், தொழுகை, இபாதத் போன்றவற்றிற்கு மட்டும் முஸ்லிம்கள் ஒன்று திரளக்கூடியவர்களாக இருந்த நிலை மாறி பாபர் மசூதி பிரச்சனை, வாழ்வுரிமை மாநாடுகள், அரசியல் மேடைகள், மதமாற்ற தடைச் சட்டம், லாட்டரி ஒழிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தற்போது ஒன்று குழுமக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எனினும் மீடியாவில் நாம் சொல்லக்கூடிய அளவில் முன்னேற்றம் கண்டுவிடவில்லை. எனவே நவீன மீடியாக்களைப் பயன்படுத்தி காலத்திற்கேற்றாற் போல செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

இணையம் ( Internet).
இணையம் என்பது உலகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிடுகிறது. டாட்காம், வெப்காம், பிளாக், இ-மெயில், சாட்டிங், டேட்டிங், ஃபாரம், ஆன்லைன் என்று உலக மீடியாக்களில் இணையம் இமாலய முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கின்றது. நம் சமுதாய மக்களோ இன்னும் கம்ப்யூட்டர் என்றால் என்ன? சாஃப்ட்வேர் என்றால் என்ன? ஹார்ட் வேர் என்றால் என்ன? என்று கணினி பற்றிய உபயோகம் குறித்து அறியாமலே இருக்கிறார்கள். கணிப்பொறி மற்றும் இணையத்தின் பயன்பாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் ஊடகங்களை வலுவடையச் செய்யலாம். கணினி மற்றும் இணையத்தின் எல்லாப் பயன்பாடுகளும் தமிழிலேயே அறிந்துகொள்ள மென்பெருட்கள் வந்துவிட்டன. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் என்ற ஊடகங்களின் பயன்பாடுகள் அறிந்து முஸ்லிம்கள் இவ்வாறான மீடியாக்களைப் பயன்படுத்த முன்வருதல் வேண்டும்.

ஒற்றுமை என்ற பண்பு மீடியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
முஸ்லிம்கள் மீடியாவில் தாக்குப்பிடித்து மேற்கண்ட வழிகளில் முன்னேற ஒற்றுமை என்ற பண்பை முன்நிறுத்தியாக வேண்டும். உலக அளவில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் ஒருமித்த கருத்தில் இருந்தால் அமெரிக்காவை எதிர்கொள்ள முடியாதா? ஊரளவில் முஸ்லிம்கள் ஜமாஅத்களாகவும், அமைப்புகளாகவும் பிரியாமல் ஒன்றுபட்டால் பெரிய மக்கள் சக்தியை உருவாக்க முடியாதா? கண்டிப்பாக முடியும். அப்போதுதான் மீடியாவின் மூலமாக சிறந்த செயல் திட்டங்கள் உருவாக்கமுடியும். பொருளாதாரத்தைச் சரிகட்டி நடைமுறைப்படுத்தவும் முடியும். இதை முஸ்லிம் சமுதாய மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 8:53)

எல்லாம் வல்ல அல்லாஹ் தூய இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் மீடியாவில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்வானாக. – ஆமீன்.

 

நன்றி:- மாலிக் கான்

நன்றி:- இஸ்லாம் கல்வி.காம்

பிரிவுகள்:முஸ்லிம்களும் ஊடகங்களும் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு – ஜெயப்பிரகாஷ் காந்தி


இந்தியாவில் கல்வி பெரிய அளவிலான வர்த்தகமாக மாறி வருகிறது. இன்னொருபுறம் இன்ஜினியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. உலகமயமாதல் பொருளாதார கொள்கையால் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதை பார்க்கிறோம். தகவல் தொடர்பு துறை, கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையும் பார்க்கிறோம்.

கடந்த 2007-08ம் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் ஏறத்தாழ நிரம்பிவிட்டன. ஒரு சில இடங்களே காலியாக இருந்தன. ஆனால், தற்போது கம்ப்யூட்டர் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. சாப்ட்வேர் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்த பின்னர் இதுபோன்று காணப்படுவது இதுவே முதல்முறை.

புதிய மற்றும் வித்தியாசமான படிப்புகளை தேர்வு செய்யும் வழக்கமும் தற்போது மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. உதாரணமாக, நேனோ டெக்னாலஜி, எண்ணெய் மற்றும் பெயின்ட் தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் மாணவர்களின் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம் இன்ஜினியரிங்: பெட்ரோலியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. தேவையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெயை பெறுவதற்கான புதிய வழிகள் மற்றும் மாற்று எரிபொருள் உற்பத்தி தொடர்பான விஷயத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களின் விருப்பமாக இத்துறை உள்ளது.

இத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் ஜார்க்கண்ட், தன்பாத்திலுள்ள ஸ்கூல் ஆப் மைன்ஸ், புனேயிலுள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் டெக்னாலஜி: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது (அதை தவறாக பயன்படுத்துவதும்) சுற்றுச்சூழலுக்கு பெரிய தீங்காக உள்ளது. கோல்கட்டா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கிரசென்ட் பல்கலைக்கழகம், தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் இப்படிப்பு இடம்பெற்றுள்ளது.

பயன்படும் பிளாஸ்டிக், வாகன உற்பத்தியில் பயன்படும் பிளாஸ்டிக், எளிதில் மட்கும் பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றில் இத்துறை மாணவர்களுக்கு அறிவை வழங்குகிறது. ஜியோலாஜிக்கல் இன்ஜினியரிங்: சுரங்கவியல்தான் இத்துறையின் முக்கிய நோக்கம். வளங்களை கண் டறிதல், மேம்படுத்துதல் உள் ளிட்ட விஷயங்கள் இத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. சுரங்கம் (பூமிக்கு அடியில்) மற்றும் சுரங்கப் பாதை (வாகனங்கள் போக்குவரத்துக்கானது) அமைத்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் ஜியோடெக்னிக்கல் துறைகளை சிறப்புப் பிரிவுகளாக மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான படிப்புகளை வழங்குகின்றன.

பயர் இன்ஜினியரிங்: தீப்பிடித்தலிலிருந்து பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை இத்துறையினர் கற்றுத் தேர்ச்சி அடைகின்றனர். கட்டடங்கள் மற்றும் வடிவமைப்புகள் தீப்பிடித்து சேதம் அடையாமல் பாதுகாப்பான திட்டமிடலை இவர்கள் மேற்கொள்கிறார்கள். பழைய தீ விபத்துகளிலிருந்து கற்ற பாடங்களை இவர்கள் தங்கள் பணியில் நிறைவேற்றுகிறார்கள். நாக்பூர், நேஷனல் பயர் சர்வீஸ், கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் இன்ஜினியரிங்: அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் சுற்றுச்சூழல் சேதமடையாமல் பாதுகாப்பதற்கான துறை. ரசாயனம், உயிரியல், வெப்பம், ரேடியோக்டிவ் மற்றும் பிற மாசுபடுத்தும் பொருட்களால் இவ்வுலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான விஷயங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. பிராஸஸ் இன்ஜினியரிங், வேஸ்ட் ரிடக்ஷன் மேனேஜ் மென்ட், வேஸ்ட் வாட்டர் டிரீட் மென்ட், மாசு தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளையும் மாணவர்கள் சிறப்புப் பிரிவுகளாகக் கொள்கின்றனர். விசாகப்பட்டினம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், கோலாப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தமிழக விவசாயப் பல்கலைக்கழகம் ஆகியன எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் இன்ஜினியரிங் பிரிவில் படிப்புகளை வழங்குகின்றன.

நன்றி:- ஜெயப்பிரகாஷ் காந்தி

நன்றி:-தி.ம. கல்வி மலர்

பகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள் – கோபிநாத்


வெளிநாடுகளில் உணவகங்களிலோ, பல்பொருள் அங்காடிகளிலோ நிறைய மாணவர்கள் பகுதி நேரப் பணியாளர்களாக வேலை செய்வதைப் பார்க்க முடியும். கார் கழுவுவது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவு பரிமாறுதல், கணக்கர் பணி என்று ஏதாவது ஒரு வேலை.

இவர்களிடம் இல்லாத காசா? எதற்காக இந்த இளம் வயதில் இப்படி வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றும். வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, அவரவர் செலவுக்கு அவர்களேசம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மா பணம் தர மாட்டார்கள் என்றுகேள்விப்பட்டு இருக்கிறோம்.

நமக்குத்தான் இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் மனதில் சுழலுமே ஒழிய, அந்த மாணவர்கள் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் அந்தப் பணிகளைச் செய்வார்கள். நானும் எனது நண்பரும் ஒரு முறை ஓர் உணவகத்துக்குச் சென்றபோது, பகுதி நேரப் பணியாளர்களாக நிறைய மாணவர்கள் வேலை செய்வதைப் பார்த்தோம். ‘நம்ம பொழப்பு பரவாயில்லடா நண்பா… இவங்க சின்ன வயசிலயே இப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கே’ என்று ஆற்றாமையோடு சொன்னான்.

வெளிநாட்டில் இதுபோல் பகுதி நேரப் பணி செய்யும் இந்திய மாணவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் படித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் சம்பாதித்துக்கொண்டு இருப்பார்கள். பகுதி நேரப் பணி செய்யும் குணம் உள்ளூர்ச் சூழலிலும் இப்போது அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடுக்கி, லாரியில் ஏற்றி இன்னோர் இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்வதற்காக நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஓய்வு நேரங்களில் இதுபோன்ற வேலைகள் செய்து பணத் தட்டுப்பாட்டைச் சரிசெய்துகொள்வதாகச் சொன்னார்கள். அந்த நிறுவனத்தை நடத்துவதே கல்லூரி மாணவர்கள்தான்.

படிக்கிற மாணவர்கள், கௌரவம் பார்க்காமல் சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்க்கிறபோது கொஞ்சம் புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இதுபோன்ற இளைஞர்கள்பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஏ.சி. பொருத்துபவருக்கு உதவியாளர், இரவு நேர ஆட்டோ டிரைவர், விடுமுறை நாட்களில் கணக்கு எழுதிக் கொடுப்பது. மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது எனப் பல்வேறு விதமான பகுதி நேரப் பணிகள் இங்கும் நடந்துகொண்டு இருக் கின்றன.

இப்படிப் படிக்கிறபோதே வேலை செய்வது, வெளி நாடுகளில் ஒரு கலாசாரமாகவும் வாழ்க்கை முறை யாகவும் மாறி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது இத்தகைய வேலைகள் பணத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்யவும், கைச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்கவுமே மேற் கொள்ளப்படுகிறது. அப்பா, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால், தேவை கருதி நடக்கும் இந்தப் பணிகளை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் அவசிய மாகி இருக்கிறது.

படிப்பதே ஒரு வேலையைப் பெறுவதற்குத்தான் என்கிற மனோபாவத்தில் இருந்து, வெளியே வந்து சுயமாகச் செயல்படவும் வகுப்பு அறைகளுக்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையின் அனுபவங்களை உணரவும் இந்தப் பகுதிப் நேர பணிகள் நிச்சயம் பயன்படும். வெகுஜன மக்களின் குணாதிசயங்கள் என்ன? விதவிதமான மனிதர்களின் தேவைகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் உதவும்.

பாடப் புத்தகங்களில் சொல்லித்தரப்படாத அல்லது சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வாழ்க்கைச் சூத்திரங்களை இந்தப் பகுதி நேரப் பணிகள் சொல்லித் தரும்.

பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லித் தரும் நம் சமூகம், பெரும் பாலான நேரங்களில் அதைக் கையாள்வது குறித்து, தெளிவாகச் சொல்வது இல்லை. அப்பாவின் பணத்தைச் செலவழிப்பதில் இருக்கிற சுகமும், தான் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வதில் இருக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.

சுயமாகச் சம்பாதித்து அதைக் கையாள ஆரம்பிக்கிறபோது, ஓர் இளைஞன் தன் வாழ்வின் மிக முக்கியமான அம்சத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த அவசியமான அனுபவத்தை ஒரு சமூக ஆசிரியராக நின்று, பகுதி நேரப் பணிகள் சொல்லிக்கொடுக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துவிட்டு, வேலையில் சேர்ந்த பிறகு, ‘பொறுப்பான பிள்ளையாக’ மாற வேண்டும் என்கிற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாகவே மாறிப்போய் இருக்கிறது.

கொஞ்ச காலம் வரை படிக்கிற இயந்திரமாகவும் பிறகு, சம்பாதிக்கிற இயந்திரமாகவும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்துவிட்டதற்கு அதுவே காரணம்.

இந்த மூச்சுப் பிடிக்கிற பயணத்தில் 1,000 ரூபாயைச் சம்பாதிக்க ஒரு சராசரி இந்தியன் எவ்வளவு உழைக்க வேண்டும்… எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி நேரப் பணிகள் உணர்த்துகின்றன.

எப்போதும் கண்டுகொள்ளாமல் விடப்படும் சராசரி இந்தியப் பிரஜையின் கஷ்டங்களைக் கவனிக்கவும், அதைவிட மேலாகப் படிக்க வேண்டிய வயதில் புத்தகங்களைத் தொலைத்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக ஓடிக்கொண்டு இருக்கும் சமகால இந்தியாவை உணரவும் இந்தப் பகுதி நேரப் பணிகள் அவசியம்.

நமது சூழலில் வாழ்க்கையின் காயங்களையும் அதற்கு மருந்து போட வழி இல்லாமல் தவிக் கும் மனிதர்களையும் இந்திய இளைஞனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதன் வாயிலாகவும், வாய்ப்பாகவும்கூட இந்தப் பகுதி நேரப் பணிகள் அமையலாம்.

ஓர் உணவகத்தில் பில் போட்டுக் கொடுக்கும் பகுதி நேரப் பணி செய்யும் ஓர் இளைஞன், கொல்லைப்புறத்தில் சாக்கடைக்கு அருகே அமர்ந்து, எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்காமலா போவான்? ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பகுதி நேரப் பணியில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன், தன் தங்கையின் வயதில் இருக்கும் சிறுமி அற்ப சம்பளத்துக்குத் தன் உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் சூழலை அறிந்துகொள்ளாமலா போவான்.

படித்து முடித்து வேலையில் இருக்கும்போதும் இவை எல்லாம் கண்ணில்படுமே என்று கேள்வி வரலாம். அந்தச் சூழ்நிலையில், சம்பாதிப்பதற்காக வேலை பார்க்கும் இயந்திரமாகத்தான் இந்திய இளைஞன் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறான். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வைகள் அந்தக் காலகட்டத்தில் பலம் இல்லாததாகவே இருக்கின்றன.

பணத்துக்காக மட்டுமின்றி; வாழ்க்கைபற்றிய புரிதலுக்காகவும், சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும், சுயத்தை மேம்படுத்தவும் பகுதி நேரப் பணிகளில் ஈடுபடுங்கள். குறைந்தபட்சம் கௌரவமான வேலை – கௌரவக் குறைச்சலான வேலை என்று தரம் பிரித்துவைத்திருக்கும் பார்வையாவது மாறும்.

இன்றும் தமிழ்ச் சமூகத்தின் நிறையப் பிரிவுகளில் படிக்கும்போதே ஒரு வேலையில் இருந்து அதன் நீக்கு போக்குகளை அறிந்துகொள்ளச் சொல்கிற வழக்கம் உண்டு.

பாக்கெட் மணிக்காகவும், பணத் தட்டுப்பாட்டுக் காகவும் மட்டும் அல்லாது, பணம் இருக்கிறவர்களும் பகுதி நேரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூகத்தின் மீதான இளைஞர்களின் கவனிப்பை இன்னும் அழுத்தமாக்கும்.

கிளம்புங்கள்…

எல்லாத் தெருக்களின் மூலைகளிலும் எதிர்கால இந்தியா என்னைக் கவனிக்குமா என்று ஏக்கத்தோடு பலர் காத்திருக்கிறார்கள்

நன்றி:- கோபிநாத்

நன்றி:- ஆ.வி

!

MBA படித்தும் வேலை இல்லை – என். திருக்குறள் அரசி

ஜூன் 24, 2010 1 மறுமொழி

இன்றைக்குக் கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களின் எதிர்காலக் கனவு எம்.பி.ஏ. படிப்பதுதான். காரணம், எம்.பி.ஏ. படித்தால் வேலை நிச்சயம், கை நிறையச் சம்பளம், குளுகுளு ஏசியில் ஜிலுஜிலு வேலை, என்பதே இந்த கனவுக்குக் காரணம். இதனால்தான் லட்சக்கணக்கில் பீஸ் என்றாலும் கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் தற்போதைய நிலையில் எம்.பி.ஏ. என்பது லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்துப் படிக்கக்கூடிய அளவுக்குத் தகுதி கொண்டதுதானா? அதைப் படிப்பதால் நம் கனவில் பாதியாவது நிறைவேறுமா?

முக்கியமான இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லை என்பதே நிஜம்! இன்றையத் தேதியில், பெரிய பிஸினஸ் நிறுவனங்கள் இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படித்துவிட்டு வரும் பட்டதாரிகளை நிராகரித்து வருகின்றன. காரணம், எம்.பி.ஏ. படித்த மாணவர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் முழு அளவில் இல்லை என்பதுதான். எந்த வேலையாக இருந்தாலும் அதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி என ஒவ்வொரு நிறுவனமும் சில திறமைகளை எதிர்பார்க்கிறது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவு, லாஜிக்கல் திங்கிங், முடிவெடுக்கும் திறன், மக்கள் தொடர்பு, மனிதவளத்தை கையாளுவது… இதனோடு இதர பொது மேலாண்மைத் திறன்கள் அவசியம் இருக்க வேண்டும். எம்.பி.ஏ. படித்தவர்கள் மேற்சொன்ன இந்தத் திறமைகளில் புடம் போட்டத் தங்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை. 50% இருந்தால்கூட போதும் என்று நினைக்கின்றன நிறுவனங்கள். ஆனால், கம்பெனி நிர்வாகத்தை புத்தகங்களில் மட்டுமே படித்து வரும் எம்.பி.ஏ. மாணவர்கள், நிஜத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து வெலவெலத்துப் போகிறார்களே தவிர, தீர்வு சொல்லும் சாதுர்யம் அவர்களுக்கு இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

”எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஒரு மேனேஜர் என்கிற நினைப்பிலேயே படிக்கின்றனர். தாங்கள் சொல்லும் வேலையை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்றே அவர்கள் நினைக்கின்றனர். இது தவறு. ஒருவர் எம்.பி.ஏ. படித்திருந்தாலும் நிறுவனத்தில் சேர்ந்தபிறகு அங்கு கொடுக்கப்படும் வேலை எதுவாக இருந்தாலும் அதைச் செய்யத் தயங்கக்கூடாது. உலகில் எந்தப் பெரிய கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித் திருந்தாலும் கோக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏசி அறையில் உட்காரச் சொல்ல மாட்டார்கள். முதலில் லாரியிலிருந்து சரக்கு இறக்கச் சொல்வார்கள். கடைநிலை ஊழியர்கள் செய்யும் வேலைகூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்” என்கிறார் மும்பையில் உள்ள முக்கியக் கல்லூரியின் எம்.பி.ஏ. பேராசிரியர் ஒருவர்.

”எம்.பி.ஏ.வில் மனிதவளம், நிதி மேலாண்மை, உற்பத்தி, மார்க்கெட்டிங் எனப் பல்வேறு உட்பிரிவுகள் இருக்கின்றன. தனக்கு விருப்பமான பாடங்களைத் தாண்டி தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் இன்றைய மாணவர்களுக்கு இல்லை. தவிர, அதீத கற்பனையால் அதிகப்படியான சம்பளத்தையும் எதிர்பார்க்கிறார்கள். இதே வேலையை ஒரு சாதாரண டிகிரி முடித்த ஒருவரைக் கொண்டே செய்து விட முடியும் என்கிறபோது எதற்கு அதிகச் சம்பளம் கொடுத்து எம்.பி.ஏ. படித்தவர்களை எடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இது குறித்து இந்தியன் சொசைட்டி ஃபார் டிரெயினிங் அண்ட் டெவலப்மென்ட்டின் மாநிலச் செயலாளர் மற்றும் கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட்டின் இயக்குனர் ஆர்.கார்த்திகேயனிடம் பேசினோம்.

”எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் போகக் காரணம், மாணவர்கள் திறமைசாலிகளாக இல்லை என்பதைவிட ஆசிரியர்கள் அவர்களைத் திறமைசாலிகளாக உருவாக்கவில்லை என்றே சொல்வேன். ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள் உலக ளவில் பெயர் பெற்று விளங்கக் காரணம், அதன் ஆசிரியர்கள்தான். அங்குள்ள ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் நடத்துவதில்லை. பல்வேறு பிஸினஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். அந்த நிறுவனம் சந்திக்கும் பிரச்னை களுக்கான தீர்வைச் சொல்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்குக் கிடைக்கும் தொழிற்துறை அனுபவங்களை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். தியரியில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பிராக்டிக்கலாகச் செய்து பார்க்க ஊக்குவிக்கிறார்கள். இதனால் மாணவர்களின் அறிவுத்திறன் மிகப் பெரிய அளவில் உயர்கிறது.

முதல்தரக் கல்வி நிறுவனங்கள் அளிக்கும் இந்த உயர்தரமான கல்வியானது எல்லாக் கல்லூரிகளிலும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. குறிப்பாக, இரண்டாம்தரக் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு இந்த முறையில் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அப்படி கற்றுக் கொடுக்கிற மாதிரியான ஆசிரியர்களையும் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. குறைவான சம்பளத்துக்கு யார் வேலைக்கு வரத் தயாராக இருக்கிறார்களோ, அவர் களையே ஆசிரியர்களாக நியமனம் செய் கிறார்கள். எந்த ஒரு எம்.பி.ஏ. ஆசிரி யருக்கு தொழில் நிறுவனங்களுடனான அறிவும் தொடர்பும் இருக்கிறதோ, அவர்தான் தரமான எம்.பி.ஏ. மாணவர்களை உருவாக்க முடியும்.

அடுத்த முக்கியமான காரணம், பாடத்திட்டங்கள். இப்போதுள்ள எம்.பி.ஏ. பாடத்திட்டங்கள் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தவிர, எம்.பி.ஏ. வகுப்புகளில் இப்போது அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு நேரமில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் ஒரே நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.ஏ. படிக்கிறார்கள். பெற்றோர் மற்றும் மாணவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது கல்லூரிக் கட்டடத்தையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மட்டும் வைத்து முடிவெடுக்காமல், கல்வித்தரம் எப்படி இருக்கிறது, ஆராய்ச்சி, களப்பணி உள்ளிட்டவை எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்து முடிவு செய்வது நல்லது” என்றார் அவர்.

ஆக மொத்தத்தில் எம்.பி.ஏ. படிக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் எங்கே படிக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம். நம் கடமை, சரியான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வதே!

 

நன்றி:– என். திருக்குறள் அரசி

நன்றி:- நா.வி

வேலைவாய்ப்புச் செய்திகள்


சிண்டிகேட் வங்கியில் பி.ஓ. பணி!

பொதுத் துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள ஆயிரம் புரபேஷனரி ஆபீஸர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 வயதில் இருந்து 30 வயதுக்குள் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆகஸ்ட் 29-ல் நடைபெற உள்ள இரண்டரை மணி நேர எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 7-ம் தேதி கடைசி நாள். விரிவான விவரங்களுக்கு www.syndicatebank.in தளத்தை க்ளிக்கவும்!

ரப்பர் போர்டில் பல்வேறு பணிகள்

தேசிய ரப்பர் போர்டின் கீழ் இயங்கி வரும் ரப்பர் ஆராய்ச்சிக் கழகத்தில் இணை இயக்குநர், சயின்டிஸ்ட் உட்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியல், ரப்பர் டெக்னாலஜி, தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்ற முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 30.6.10க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rubberboard.org.in

ஐ.ஓ.சி-யில் சுருக்கெழுத்தாளர் பணி!

சுருக்கெழுத்து தெரிந்த இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்களை

//


வரவேற்கிறது, பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம். குறைந்தபட்சம் சுருக்கெழுத்து தெரிந்த அல்லது ஆங்கிலத்தில் சரளமாகத் தட்டச்சு செய்யத் தெரிந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அலுவலகப் பணியில் இரண்டு ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருப்பதுடன், அடிப்படை கணிப்பொறி அறிவு அவசியம். 18-ல் இருந்து 32 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் 26.6.10-க்குள் சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு www.iocl.com

முப்படைகளில் கமான்டன்ட் பணி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், முப்படைகளிலும் ‘ஏ’ குரூப்பில் காலியாக உள்ள கமாண்டன்ட் பணிகளுக்கான காலி இட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 1.8.10-ம் தேதியின்படி 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் உள்ள இந்தியகுடிமகன் கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு மற்றும் மத்திய உள் துறை அமைச்சகம் நடத்தும் உடல் தகுதி, மருத்துவத் தகுதித் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 24.8.10 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பங்களை 28.6.10-க்குள் அனுப்ப வேண்டும். மேல் விவரங்களுக்கு www.upsc.gov.in

பாரதிதாசனில் பி.எட்., படிக்க நுழைவுத் தேர்வு!

தொலைதூரக் கல்வி மூலம் இரண்டு ஆண்டுகள் பி.எட். படிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம். இயற்பியல், வேதியியல், பயோ-கெமிஸ்ட்ரி, கணிதம் உள்ளிட்ட பாடங்களில் பி.எஸ்ஸி., பட்டம் பெற்றவர்களும் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் பி.ஏ., பட்டம் பெற்றவர்களும்விண்ணப்பிக் கலாம். பொருளாதாரம், வணிகவியல், பொலிடிகல் சயின்ஸ் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 19.9.10 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். 23.7.10-க்குள் விண்ணப்பிக்கவும். விரிவான விவரங்களுக்கு www.bdu.ac.in

வீட்டில் இருந்தபடியே இந்தி கற்க…

புதுடெல்லியில் இயங்கும் மத்திய இந்தி இயக்குநரகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது, அஞ்சல் வழியில் இந்தி கற்றுக்கொள்ள சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சர்ட்டிஃபிகேட், டிப்ளமோ, அட்வான்ஸ் டிப்ளமோ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்தி கற்றுத் தருகிறது. அட்வான்ஸ் டிப்ளமோ தவிர, மற்ற இரு பிரிவு இந்திப் பாடங்கள், தமிழ், மலையாளம், ஆங்கிலம், வங்க மொழிகளின் வாயிலாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அட்வான்ஸ் டிப்ளமோ பாடம் மட்டும் இந்தியிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தி சர்ட்டிஃபிகேட், டிப்ளமோ பாடத் திட்டத்துக்கு 50 ரூபாயும், அட்வான்ஸ் டிப்ளமோ பாடத் திட்டத்துக்கு 200 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மணியார்டர் அல்லது காசோலை மூலமாகக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பங்களை அனுப்பக் கடைசித் தேதி 15.07.10.

ரயில்வேயில் எலெக்ட்ரீஷியன் பணி!

சென்னை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வேயில் எலெக்ட்ரீஷியன்(கிரேடு-3) பதவிகளுக்கான 892 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 1.7.10-ம் தேதியின்படி 18 வயதில் இருந்து 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 21.6.10-க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.rrbchennai.net மற்றும் www.rrbthiruvananthapuram.net தளங்களைத் தட்டுங்கள்!

வி.ஏ.ஓ ஆக வேண்டுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் வாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணிக்கான 1,000 காலியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்க உள்ளது. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் நடந்த வி.ஏ.ஓ. பதவிக்கான தேர்வில் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இன்றில் இருந்தே தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினால் தேர்ச்சி நிச்சயம்!

நன்றி:- .வி

தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்


சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன.

இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும். 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி: இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:

டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 32. இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?

விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?

மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.

சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி:

ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.

தொடர்புக்கு:

ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.

விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி

விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.

இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது. ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம். 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும். 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும். அழகான தோற்றம் தேவை.

இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப் பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து “ஆஹா’ ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.

இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது.

வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.

எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.

முகவரி:

தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல்

டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ்,

2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2.

தொலைபேசி : 2852 7579, 2841 4736.

செல்: 98401 16957.

நன்றி:–தினமணி

பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை!


எல்லோரும் நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான செயல்களில் இறங்கி வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே. உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமைய செய்ய வேண்டியவை எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்பது பற்றி விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார்.

முடிவு எடுப்பதில்தான் எதிர்கால வாழ்க்கை அடங்கி இருக்கிறது. எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவின்படி செயல்படுவது எப்படி? அதன் இடைக் காலச் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது? முடிவை வெற்றியாக மாற்ற செய்ய வேண்டியது என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

உங்கள் முடிவு சிறந்ததா?

முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று உத்தேசித்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மனமகிழ்ச்சியை தருமா? அந்த வேலை அல்லது படிப்பு உங்களுக்கும், சமூகத்திற்கும் தேவையான ஒன்றுதானா? மதிப்பு மிக்க பணியா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய பணிதானா? அதே துறையில் மேலும் பதவி உயர்வுகள் பெற்று வளரும் வாய்ப்புள்ளதா? என்பன போன்ற அடிப்படை விஷயங்களை ஆராய்ந்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள வினாக்களுக்கு உங்கள் பதில் ஏற்புடையதாக அமையும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த முடிவு சரியானது என்று கொள்ளலாம். அதன்பிறகு அடுத்தகட்ட செயல்களத் தில் இறங்குங்கள். இரண்டுக்கும் மேற்பட்ட காரணங்கள் எதிர்மறையாக அமைந்தால் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.

இலக்கை நிர்ணயம் செய்யும் முன்:

இலக்கை நிர்ணயம் செய்யும்போது விருப்பத்துடன் தேர்வு செய்திருந்தால் மகிழ்ச்சியாக செயல்பட்டு வெற்றியை அடையலாம். இங்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒரு மாணவன் பள்ளியில் படிக்கும்போதே கார் ரேஸை மிகவும் விரும்புவான். அவனுக்கு காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் கிடையாது. ஆனால் காரை எவ்வாறு வடிவமைப்பது என்பதில் ஆர்வம் காட்டினான்.

அவனது வழிகாட்டி ஆலோசகர், கணிதம், அறிவியல் அடங்கிய பாடங்களை பள்ளிப் பருவத்தில் படிக்கச் சொன்னார். பின்னர் பொறியியல் பட்டப்படிப்பை எந்திரப் பொறி யியல்- மோட்டார் வாகனப் பொறி யியல் படிப்பு படிக்க ஆலோசனை வழங்கினார். அது தவிர தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்பு குறித்த சிறப்பு படிப்பு இருப்பதாகவும் கூறினார்.

கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பயிற்சி பெறவும், கணினியில் வடிவமைக்க தேவையான மென்பொருள்கள், அவற்றை கையாளும் விதம் ஆகியவற்றையும் அனுபவ ரீதியாக பெறும்படி ஆலோசனை வழங்கினார். இதன் அடிப்படையில் செயல் படத் தொடங்கிய அந்த மாணவன் வெற்றி பெற்றான்.

தன்னைத் தானே உற்சாகப்படுத்துதல்…

உங்களிடம் உள்ள முழுமையான திறமையை நீங்கள் நினைத்தால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வேறு யாராலும் உங்களை இயங்கச் செய்ய முடியாது. வழிகாட்டிகளாக அல்லது தூண்டுகோலாக மட்டுமே அவர்கள் செயல்பட முடியும்.

பலர் சிறப்பாக திட்டமிடுவார்கள், இலக்குகளையும் நிர்ணயிப்பார்கள். ஆனால் விடாமுயற்சியும், முனைப்பும் குறையும்போது நடைமுறைப்படுத்தும் ஆற்றலற்று இருப்பார்கள்.

நீங்களே உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும்போதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் பொறுப்பு ஏற்படும். உங்களை நீங்கள் வாழும் சூழல் கட்டுப்படுத்தாமல், உங்களது சூழலை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. உங்களது ஒவ்வொரு செயலும் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடைவதற்கான முயற்சியே என்பதை உணரும்போது உங்களது பயணம் இலக்கைவிட்டு விலகாமல் இருக்கும்.

இன்று செய்ய வேண்டும் என்று எண்ணியதை எக் காரணம் கொண்டும் தள்ளிப் போடக்கூடாது. முதலில் செயல் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இலக்கு சார்ந்த தகவல்களை சேகரியுங்கள். இலக்கை அடைய பல்வேறு வழிகள் இருக்கலாம். அதில் சரியான வழியை தேர்வு செய்து அதை நடைமுறைப்படுத்துங்கள்.

இலக்கை தீர்மானிக்க தேவையான உத்திகள்

* இலக்குகள் பயனளிப்பவையாக இருந்தால்தான் நீங்களே அதை விரும்பி அடைய முயற்சி மேற்கொள்வீர்கள். எனவே விருப்பமுடையதாகவும், நல்ல பயன் தருவதையுமே இலக்காக கொள்ளுங்கள்.

* உங்களுடைய இலக்குகள் நடைமுறையில் உங்களால் அடையக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். கணிதப்பாடம் எப்படிப் படித்தாலும் புரியவில்லையென்றால் உங்களுக்கு நன்கு புரிகின்ற மற்ற பாடப்பிரிவின் அடிப்படையில் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

* நீங்கள் எதை முக்கியமாக அடைய வேண்டுமென்று கருதுகின்றீர்களோ அதை அடைவதற்கு உங்கள் இலக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், இலக்கை அடைவீர்கள்.

* உங்களது இலக்கு உங்களை நம்பிக்கையுடன் செயல்பட தூண்டுவ தாக அமைய வேண்டும். இலக்குகளை திட்டமிடும்போது எதிர் மறையான வார்த்தைகளை, சொற்களை பயன்படுத்தக்கூடாது. உங்களது எதிர்கால திட்டத்தை இலக்குகள் நிர்ணயித்து அறிக்கை யாக தயாரிக்கும்போது நம்பிக்கை ஊட்டும் சொற்களையே பயன்படுத்தப் பழக வேண்டும்.

* உங்களது இலக்குகள் ஒன்றை யொன்று சம்பந்தப்படுத்தி வலுப் படுத்துவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நடைமுறைப்படுத்துவது எளிது. வளர்ச்சியும் வெற்றியை நோக்கி இருக்கும்.

இலக்குகளின் வகைகள்:

இலக்குகளை பொதுவாக குறுகிய கால இலக்கு, இடைக்கால இலக்கு, நீண்ட கால இலக்கு என்று வகைப்படுத்தலாம். 5 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் தேவைப்படும் இலக்கை நீண்ட கால இலக்கு என்று கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு ஆண்டு களுக்குள் அடையும் இலக்கை இடைக்கால இலக்கு என்றும், ஒரு சில மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட காலத்திற்குள் அடைய முடியும் என்றால் அதை குறுகிய கால இலக்கு என்றும் கூறலாம்.

ஒரு மாணவர் வக்கீலாக வரவேண்டும் என்பது ஒரு நீண்ட கால இலக்கு. இதை ஒருவர் இலக்காக கொண்டால் அதற்காக அவர் பள்ளிப் பருவத்திலேயே ஏதாவது ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு வாதிடுதல் மற்றும் மறுத்து வாதிடுதல் என்று விவாத திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி- கல்லூரிப் பருவங்களில் தலைமைப் பண்புடன் செயல்படுவது, சட்டம் சார்ந்த படிப்பை தேர்வு செய்து படிப்பது ஆகிய அனைத்துமே இலக்கை அடைய வழி வகுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது தமது துறையில் மூத்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி வாடிக்கையாளர்கள் பற்றியும், சட்டம் சார்ந்த அடிப்படை நடை முறைகளையும் அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள வேண்டும்.

இலக்கை அடையும் வழிகள்

உங்களது வருங்காலத் திட்டத்தை சிறு சிறு பிரிவு களாக பிரித்துக் கொண்டால் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலும் உணர முடியும். எந்த செயல் நம்மை அடுத்த கட்டத்திற்கு எளிதாக கொண்டு செல்லுமோ அதை முதலில் செய்யப் பழகுங்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் உருவாக்கிய செயல் திட்டத்தை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்காமலே சில சின்னச்சின்ன மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதற்கேற்ப உங்களது செயல் திட்டத்தை அவ்வப்போது திருத்தி அமைத்துக் கொள்வது தவிர்க்க முடியாத அவசியமாகும். அதுதான் நல்ல பலனைத் தரும்.

ஏனெனில் எதிர்பார்க்காத விளைவுகளை எதிர்கொள்ளும்போதும் மாற்று வழிகளை தேர்ந்தெடுத்து இலக்கை அடையும் வகையில் வடிவமைப்பதே நல்ல செயல் திட்டம் ஆகும். எப்போதுமே ஒரு மாற்றுத் திட்டமும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எத்தகைய விளைவுகளையும் எதிர்கொள்வது சாத்தியமாகும்.

நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் இலக்கு என்பது உங்களுக்கு ஒரு வேலையை பெற்றுத் தருவது மட்டுமல்ல. வாழ்வு தழுவிய ஒன்றாகவும் கருத வேண்டும். அவை உங்களது வாழ்வியல் கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பிரதிபலிக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும். ஒன்றுக் கொன்று முரண்படக் கூடாது.

உங்களுடைய செயல் திட்டத்தை எழுதி வைத்திருந்தால் ஒவ்வொரு நிலையையும் கண்காணிக்க உதவும். எழுதப்படாத இலக்குகள் வெறும் விருப்பங்களே.