தொகுப்பு

Posts Tagged ‘ரேவதி சண்முகம்.’

30 வகை தொக்கு! – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

செப்ரெம்பர் 25, 2010 பின்னூட்டமொன்றை இடுக

தொக்கு… சொல்லும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் விசேஷ உணவு அயிட்டம்!

இன்றைய பிஸியான வாழ்க்கைச் சூழலில், எதையும் ஆற அமர செய்து சாப்பிட நேரமின்றி தவிக்கும் சகோதரிகளுக்கு, சந்தேகமே இல்லாமல் தொக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

காலையில் டிபனுக்கு, மதியம் சாதத்துக்கு, மீண்டும் இரவு உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்று குழம்பித் தவிப்பவர்களுக்கு, ‘நானிருக்க பயமேன்’ என்று அபயக்கரம் நீட்டும் சிம்பிளான சைட் டிஷ் – தொக்கு! பிரெட்டின்மேல் தடவி, ஸாண்ட்விச் செய்வதற்கும் தொக்கு உதவும்.

சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள்களையும் காய்கறிகளையும் வைத்தே இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளில் தினம் ஒரு தொக்கு தயாரிக்க கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

இவற்றைத் தயாரிக்க ஆகும் நேரமும் குறைவு. செலவும் அதிகமில்லை. தினம் ஒரு தொக்கு செய்து பரிமாறிப் பாருங்கள், ‘தொக்கு’ப் பொடி போட்டது போல குடும்பமே உங்களைச் சுற்றி வரும்.

குறிப்பு: இந்தத் தொக்கு வகைகளை, ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஃப்ரிட்ஜிலும் வைக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் அளவுகளில் உப்பு, புளி, காரம் போன்றவற்றை அவரவர் சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம். ஆனாலும், இவை மூன்றும் சிறிது தூக்கலாக இருந்தால்தான் தொக்கு ருசிக்கும்!

பேரீச்சம்பழத் தொக்கு

தேவையானவை: பேரீச்சம்பழம் – 100 கிராம், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சம்பழத்தைக் கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துக்கொண்டு, எடுக்கும்போது பெருங்காயத்தைப் புரட்டி எடுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நறுக்கிய பேரீச்சம்பழத்தைச் சேருங்கள். குறைந்த தீயில் மூன்று நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயத்தூள் சேர்த்து, மூன்று நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

தக்காளி தொக்கு

தேவையானவை: தக்காளி – 1 கிலோ, புளி – 1 எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் (குவித்து அளந்தது), உப்பு – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – பெரியதாக 4 பல்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: வெந்தயம், பெருங்காயத்தை முன்பு சொன்னது போல, வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி, உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள் (இல்லையெனில், கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது).அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து கிளறுங்கள்.

தண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில், இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள். கடுகு பொரிந்ததும், அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின், பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள்.

பச்சை மிளகாய் – மல்லித் தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, பச்சை மிளகாய் – 15, புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 6 பல்.

தாளிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: மல்லியைச் சுத்தம் செய்து, அலசித் தண்ணீரை வடியவிடுங்கள். ஒரு துணியில் அதைப் பரப்பி, ஈரம் காயும் வரை உலரவிடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அதில் கடுகு தாளித்து, மிளகாய், பூண்டு, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்குங்கள்.

பின்னர் மல்லித்தழையைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கி, ஆறியதும் எல்லாவற்றையும் நைஸாக அரையுங்கள். வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயத்தூள் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள்.

கொத்துமல்லித் தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு (பெரியதாக), புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 10, வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை (கருகி விடாமல்) சிவக்க வறுத்து எடுத்து, மல்லி, புளி, உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். சுருள, சுருளக் கிளறி இறக்குங்கள்.

பீட்ரூட் தொக்கு

தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பீட்ரூட்டை மண் போகக் கழுவி, தோல் நீக்கித் துருவிக்கொள்ளுங்கள். வெந்தயம், பெருங்காயம், சீரகம் மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அத்துடன் பீட்ரூட் துருவலைச் சேருங்கள். நடுத்தரத் தீயில் வைத்து, வேகும்வரை கிளறுங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

பூண்டு தொக்கு

தேவையானவை: பூண்டு – அரை கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – 1 கப், மிளகாய்த்தூள் – அரை கப், உப்பு – கால் கப், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: பூண்டைத் தோலுரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு சேருங்கள். கடுகு பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து, நடுத்தரத் தீயில் வைத்து, ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயம்-பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

சாறு வற்றி, எண்ணெய் மேலே மிதக்கும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியபின், பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகப்படுத்துங்கள்.

வெங்காயத் தொக்கு

தேவையானவை: பெரிய வெங்காயம் – அரை கிலோ, பூண்டு (விரும்பினால்) – 10 பல், வினிகர் – கால் கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை – சிறிது.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்) சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயத்தைத் தோல் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்து, ஒன்றாகப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கி, நிறம் மாறிப் பொரிந்ததும் பூண்டைச் சேருங்கள். இரண்டு நிமிடங்கள் வதக்கி வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து சுருளாகக் கிளறி இறக்குங்கள்.

பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை: பச்சை மிளகாய் (அடர் பச்சை நிறத்தில்) – கால் கிலோ, புளி – பெரிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளந்தது), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறு இலந்தைப்பழ அளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். அதிலிருக்கும் மீதி எண்ணெயுடன் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய மிளகாய்த் துண்டுகளைப் போட்டு, நன்கு வதக்கி எடுங்கள்.

பின்னர், வதக்கிய பொருள்களுடன் புளி, உப்பு, மஞ்சள்தூள், பொட்டுக் கடலை சேர்த்துத் தண்ணீரில்லாமல் அரைத்தெடுங்கள் (இந்தக் கலவையை ஆட்டுரலில் அரைப்பது சுலபம். மிக்ஸியில் அரைப்பதற்குச் சற்று சிரமமாகத் தான் இருக்கும். கிளறிக் கிளறிவிட்டுத்தான் அரைக்கவேண்டும்).

மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

புளிச்சகீரை (கோங்குரா) தொக்கு

தேவையானவை: புளிச்சகீரை – 1 கட்டு, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, வெல்லம் – ஒரு சிறிய துண்டு, உப்பு – 1 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பூண்டு – 6 பல், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கீரையை இலைகளாகக் கிள்ளி, கழுவித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் உலர விடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள். மீந்துள்ள எண்ணெயில் கீரையை சேர்த்து, நன்கு வதக்குங்கள். கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.

வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.

தக்காளி- பூண்டு தொக்கு

தேவையானவை: தக்காளி – 1 கிலோ, பூண்டு – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 25.

செய்முறை: தக்காளியை, உப்பு, புளி சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளுங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை, வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டைச் சேருங்கள். ஐந்து நிமிடங்கள் வதங்கியபின், அரைத்த தக்காளி விழுதைச் சேருங்கள். தண்ணீர் வற்றி, சிறிது சேர்ந்தாற்போல வரும்போது, பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

பாகற்காய் தொக்கு

தேவையானவை: பாகற்காய் – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, புளி – எலுமிச்சம்பழ அளவு, மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் – 1 துண்டு, உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: பாகற்காயைக் கழுவி, துடைத்து, விதை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். சின்ன வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, பாகற்காயைச் சேர்த்து வதக்குங்கள்.

பாகற்காய் நன்கு வதங்கியதும், வெங்காயம் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, இத்துடன் சேருங்கள். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

மாங்காய் தொக்கு

தேவையானவை: கிளிமூக்கு மாங்காய் – 1, மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம் – பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பூண்டு (நசுக்கியது) – 3 பல்.

செய்முறை: மாங்காயைக் கழுவித் துடைத்துத் துருவிக் கொள்ளுங்கள் (தோல் நீக்கத் தேவையில்லை). பின்னர் துருவிய மாங்காயுடன், உப்பு சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். ஒருநாள் முழுக்க ஊறியதும், மறுநாள் பிழிந்து, ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காயவையுங்கள் (பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிட வேண்டாம். ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்கள்).

அன்று முழுதும் காய்ந்தபின், மாங்காய்த் துருவலை எடுத்துக் கொள்ளுங்கள். பிழிந்து வைத்திருக்கும் தண்ணீரில், மிளகாய்த்தூள், வறுத்த வெந்தய-பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, மாங்காய்ச் சாற்றில் சேருங்கள். அத்துடன், காயவைத்து எடுத்த மாங்காய்த் துருவலையும் சேர்த்துக் கலந்து வையுங்கள். ஆந்திரத்துச் சுவையுடன், வித்தியாசமான மாங்காய் தொக்கு தயார்.

கறிவேப்பிலை தொக்கு

தேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப், உளுத்தம் பருப்பு – கால் கப், புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 20.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – கால் கப்.

செய்முறை: கறிவேப்பிலையைக் கழுவித் துடைத்து, துணியில் பரப்பி உலரவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பை வாசனை வந்து நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையை அதே எண்ணெயில், சிறிது சிறிதாக வதக்கி எடுங்கள்.

கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். வதக்கிய கறிவேப்பிலை, மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, சீரகம், புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து, சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

உருளைக்கிழங்கு தொக்கு

தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, புளி – 100 கிராம், மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 5, இஞ்சி – 1 துண்டு.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: உருளைக்கிழங்கைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். புளியை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் ஊறவிடுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, சேர்த்து வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேருங்கள்.

குறைந்த தீயில் உருளைக்கிழங்கை நன்கு வதக்குங்கள். உருளைக்கிழங்கு பாதியளவு வெந்தபிறகு, புளியைக் கரைத்து, வடிகட்டிச் சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும்வரை (சிறு தீயில் வைத்து) கிளறுங்கள். உருளைக்கிழங்கு வெந்ததும், நன்கு கிளறி இறக்குங்கள்.

பீர்க்கங்காய் தொக்கு

தேவையானவை: பீர்க்கங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 5, புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பீர்க்கங்காயைக் கழுவித் துடைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தைத் தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பீர்க்கங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பீர்க்கங்காய் வதங்கியதும், அதனுடன் தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், புளி சேர்த்து, மீண்டும் நன்கு வதக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

சின்ன வெங்காயத் தொக்கு

தேவையானவை: சின்ன வெங்காயம் – கால் கிலோ, மிளகாய்த் தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயத்தை எடுத்து, மேலே சருகாக உள்ள தோலை மட்டும் நீக்குங்கள். ஒட்டிக்கொண்டிருக்கும் தோல் அப்படியே இருக்கட்டும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு சிவக்க வறுத்துப் பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் வெங்காயத்தைச் சேருங்கள்.

வெங்காயம் நன்கு நிறம் மாறி, வாசனை வரும்வரை வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், எலுமிச்சம் பழச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்கு கிளறுங்கள். கடைசியில் பொடித்து வைத்துள்ள தூளைத் தூவி, கிளறி இறக்குங்கள்.

‘த்ரீ இன் ஒன்’ தொக்கு

தேவையானவை: தக்காளி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 150 கிராம், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோல் உரித்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

பூண்டு, வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறுங்கள். தக்காளி கரைந்து நன்கு வெந்தவுடன், எலுமிச்சம் பழச்சாறு, வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். தக்காளி, வெங்காயம், பூண்டு மூன்றின் சுவையும் கலந்த ‘த்ரீ இன் ஒன்’ தொக்கு தயார்.

குடமிளகாய் தொக்கு

தேவையானவை: குடமிளகாய் – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – அரை கப், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயம்-பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: குடமிளகாயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கிப் பொடியாக நறுக்கித் தனியே வையுங்கள். மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, குடமிளகாயைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியபின், அரைத்த விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்குங்கள்.

மாங்காய் இஞ்சித் தொக்கு

தேவையானவை: மாங்காய் இஞ்சி – கால் கிலோ, எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், வினிகர் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 20, வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் நன்கு வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகைச் சேருங்கள்.

கடுகு நன்கு பொரிந்ததும், துருவிய இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் எலுமிச்சம் பழச்சாறு, வினிகர், உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அத்துடன் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.

இஞ்சி தொக்கு

தேவையானவை: இஞ்சி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 50 கிராம், புளி – 100 கிராம், வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: இஞ்சியை நன்கு கழுவித் துடைத்து, தோல் சீவுங்கள். மீண்டும் ஒருமுறை கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அரை கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, இஞ்சி, மிளகாயை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

வதக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, சற்று சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதையும் சேர்த்து, நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.

செளசெள தொக்கு

தேவையானவை: செளசெள – 1, பச்சை மிளகாய் – 8, புளி – எலுமிச்சம்பழ அளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், பூண்டு – 4 பல், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: செளசெளவை நன்கு கழுவி, விதை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். (தோல் நீக்க வேண்டாம்). பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக அதில் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் வதக்கி இறக்குங்கள். ஆறியவுடன், மிக்ஸியில் கரகரப்பாக அரைத்தெடுங்கள். சப்புக்கொட்ட வைக்கும் இந்த செளசெள தொக்கு.

புளியங்காய் தொக்கு

தேவையானவை: நல்ல பிஞ்சு புளியங்காய் – கால் கிலோ, பச்சை மிளகாய் – 10, மல்லித்தழை – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி, பூண்டு – 4 பல், உப்பு – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: புளியங்காயைச் சுத்தமாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாக அரையுங்கள்.

கடைசியில் பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் புளியங்காய் கலவையில் சேர்த்துக் கலக்குங்கள்.

மாங்காய்-பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை: சற்றுப் பெரிய மாங்காய் – 1, பச்சை மிளகாய் – 12, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் – 1 கீற்று, பூண்டு – 4 பல்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு _ 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 1 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வறுத்துப் பொடிக்கக் கொடுத்திருக்கும் சாமான்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். மாங்காயைக் கழுவி, துடைத்துத் தோல் சீவித் துருவிக் கொள்ளுங்கள். தேங்காய், பச்சை மிளகாய், புளி, உப்பு மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள்.

பின்னர் அத்துடன் துருவிய மாங்காய், பூண்டு சேர்த்து, ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள். அதனுடன், வறுத்துப் பொடித்து வைத்திருக்கும் தூளையும் சேர்த்து, மேலும் இரு விநாடிகள் அரைத்து எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த கலவையில் சேருங்கள்.

வதக்கி அரைக்கும் மல்லி தொக்கு

தேவையானவை: மல்லித்தழை – 2 கட்டு, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.

வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 15, உளுத்தம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப்.

செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்து, எடுக்கும் சமயத்தில் பெருங்காயத்தை சேர்த்துப் புரட்டி எடுங்கள். பின்னர், அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, மிளகாயை நிறம் மாறாமல், குறைந்த தீயில் வறுத்து எடுங்கள். மீதமுள்ள எண்ணெயுடன், இன்னும் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, உளுத்தம்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒன்றாக வறுத்தெடுங்கள்.

மல்லித்தழையை அலசிச் சுத்தம் செய்து, ஒரு துணியில் பரப்பினாற்போல் உலரவிடுங்கள். இரண்டு மணி நேரம் உலர்ந்ததும், அதை இரு தடவைகளில் (ஒரு தடவைக்கு ஒரு டீஸ்பூன் எண்ணெய் வீதம் காயவைத்து) வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். வெந்தயப் பொடி, வறுத்த மிளகாய், பருப்பு வகைகள், புளி, வதக்கிய மல்லித்தழை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விடாமல், சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுதில் சேருங்கள்.

எலுமிச்சை தொக்கு

தேவையானவை: எலுமிச்சம்பழம் – 12, பச்சை மிளகாய் – 6, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தய – பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.

செய்முறை: எலுமிச்சம்பழத்தைக் கழுவித் துடைத்து, நறுக்கி, விதைகளை முற்றிலும் நீக்கிவிடுங்கள். அத்துடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசறி வைத்து, இரண்டு நாட்கள் ஊறவிடுங்கள்.

பின்னர் இதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். அத்துடன் மிளகாய்த்தூள், வெந்தயம் – பெருங்காயப் பொடி சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

தோசைக்காய் தொக்கு

தேவையானவை: தோசைக்காய் – 1, பச்சை மிளகாய் – 5, காய்ந்த மிளகாய் – 4, சின்ன வெங்காயம் – 6, பூண்டு (சிறியதாக) – 2 பல், தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை (நறுக்கியது) 1 டேபிள்ஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, உப்பு – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: தோசைக்காயை தோல் நீக்கி, சிறு துண்டு களாக்குங்கள். விதையை நீக்கவேண்டாம். மிளகாயைக் கீறுங்கள். பூண்டு, வெங்காயத்தைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள். பின் தோசைக்காய் துண்டுகள், மிளகாய், பூண்டு, வெங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, புளி, உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, இறக்குங்கள். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காய் தொக்கு

தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 10, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, தேங்காய் – 1 கீற்று. தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 6 பல் (விருப்பப்பட்டால்), எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: கத்தரிக்காய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், கத்தரிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும், புளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். இறக்கி வைத்து, மல்லித்தழை, தேங்காய் சேர்த்துக் கிளறி ஆறவிடுங்கள். ஆறியதும் சற்றுக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, (விரும்பினால்) நசுக்கிய பூண்டு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த விழுதுடன் கலந்து வையுங்கள்.

நெல்லிக்காய் தொக்கு

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – அரை கிலோ, உப்பு – கால் கப், மிளகாய்த்தூள் – கால் கப், எலுமிச்சம் பழச்சாறு – கால் கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க: கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: நெல்லிக்காயை கழுவித் துடைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவையுங்கள். பின்னர், அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால், துண்டுகளாகப் பிரிந்து, கொட்டை வெளியே வந்துவிடும்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் கடாயில் வறுத்து, நன்கு பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, நெல்லிக்காய்த் துண்டுகளைச் சேருங்கள்.

அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள். பின்னர் மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறி இறக்குங்கள்.

மிளகாய்ப் பழத் தொக்கு

தேவையானவை: (நன்கு சிவப்பான) மிளகாய்ப் பழம் – கால் கிலோ, புளி – 100 கிராம், உப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், பூண்டு (சிறியதாக) – 15 பல், காய்ந்த மிளகாய் – 3, வெந்தயம் – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: மிளகாய்ப்பழங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள், புளி சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். இரண்டு நாள் இந்தக் கலவையை ஊறவிடுங்கள். (இரண்டு நாளும் காலையிலும் மாலையிலும் அதை நன்கு கிளறிவிட வேண்டும்). மூன்றாம் நாள், ஊறிய மிளகாய்ப்பழக் கலவையை எடுத்து மிக்ஸியில் போட்டு, நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளியுங்கள். மிளகாயை முழுசாகத் தாளித்து, பூண்டை நசுக்கிச் சேருங்கள். இரு நிமிடங்கள் வதக்கி, அடுப்பை அணைத்துவிடுங்கள். ஆறியதும் இவற்றை அரைத்து, மிளகாய் விழுதுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்கி வையுங்கள். காரசாரமான சூப்பர் தொக்கு ரெடி! இதை இரண்டு நாட்கள் ஊறவிட்டுச் சாப்பிடுங்கள்.

வாழைக்காய் தொக்கு

தேவையானவை: வாழைக்காய் – 2, புளி – நெல்லிக்காய் அளவு, தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 6 முதல் 8 வரை, பூண்டு (விருப்பப்பட்டால்) – 6 பல், உப்பு – 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயை கழுவித் துடைத்து, அடுப்பில் காட்டி நன்கு சுட்டெடுங்கள். ஆறவிட்டு, தோலை நீக்குங்கள். பின்னர், துருவியால் துருவிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, வாழைக் காயில் சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அனைத்தையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான ருசியில் வாழைக்காய் தொக்கு தயார்!

நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்.

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 வகை தொக்கு, சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

ஏப்ரல் 29, 2010 1 மறுமொழி

இதாம்மா ஃபாஸ்ட் ஃபுட்

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை யோசித்துக்கூடப் பார்க்க முடியாது. எல்லோருக்கும் செய்வதையே குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்புவார்கள். அது, இரண்டு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே காலியாகி, கனத்த பாக்ஸாகவே திரும்பும்போது, அம்மாக்களின் இதயமும் கனத்துப் போகும்.

இந்தப் பிரச்னைக்கு சுலபத் தீர்வு, கலந்த சாதங்கள்! ‘‘நீங்க சொல்றது சரிதான். ஆனா அதிலயும் ஒரு பிரச்னை இருக்கே.. நாலஞ்சு வகையையே திரும்பத் திரும்பச் செஞ்சு கொடுத்தா ‘போர்’னு பிள்ளைங்க முகத்தை சுளிக்க ஆரம்பிச்சுடறாங்களே..’’ என்கிறீர்களா? அந்தக் கவலை இனி வேண்டாம்.

முப்பது நாட்களுக்கும் நீங்கள் விதவிதமான கலந்த சாதங்களை செய்து அசத்த, இதோ முப்பதுவிதமான ரெசிபிக்களை தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

திகட்டத் திகட்ட கல்கண்டு சாதம், சப்புக் கொட்ட நெல்லிக்காய் சாதம், உடலுக்கு வலு சேர்க்க உளுந்து பொடி சாதம், கலக்கல் காளான் சாதம்… என்று புதுமையான ரெசிபிக்கள் மட்டுமல்ல; நன்கு பரிச்சயமான தயிர், தக்காளி சாதங்களும்கூட இவரது ஸ்பெஷல் பக்குவத்தில் மாறுபட்ட சுவைகளோடு இங்கு வரிசை கட்டியிருக்கின்றன.

வெரைட்டிக்கு பஞ்சமில்லை. சுலபமாக சமைக்கலாம்.சத்தானதும்கூட. முக்கியமாக, பெரியவர்களும் ‘வேண்டாம்’ என்று சொல்லாமல் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

படித்த சூட்டோடு சமைத்து பரிமாறுங்கள். ‘உங்க கை பக்குவத்துக்கு ஈடு இணையே இல்லை’ என்று வீடே கொண்டாடும்!

கோவைக்காய் சாதம்

தேவை:

உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 1, கோவைக் காய் 100 கிராம், தேங்காய்த் துருவல், மிளகாய்த் தூள் தலா 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

வெங்காயம், கோவைக்காயை மெல்லியதாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளித்து, வெங்காயம், தேங்காயை வதக்குங்கள். பச்சை வாடை போனதும், கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, கறிவேப்பிலை, எலுமிச்சம் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தைக் கலந்து பரிமாறுங்கள்.


கறிவேப்பிலை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: மிளகு, கசகசா தலா 1 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், முந்திரி 4, கறிவேப்பிலை 1 கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 6.

செய்முறை: கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள். பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை தாளியுங்கள். சாதத்தில், பொடித்த பொடி, உப்பு, தாளிதக் கலவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்குங்கள்.


மும்பை சாதம்

தேவை: பச்சரிசி அரை கப், தோலுடன் உடைத்த பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் தூள் 1 சிட்டிகை, பச்சை மிளகாய் 2, நெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: குக்கரில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில், மீதமுள்ள நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து மிளகாயை சேர்த்து வதக்குங்கள்.

இந்தக் கலவையை, சாதக் கலவையோடு சேர்த்துக் கலந்தால் மும்பை சாதம் தயார்.

கதம்ப சாதம்

தேவை: பச்சரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்…) 2 கப், சின்ன வெங்காயம் 10, தக்காளி 5, சாம்பார் தூள் 2 டேபிள் ஸ்பூன், புளி கரைசல் அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.

எள் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: எள் 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு.

செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் போட்டு, பொரியும்படி வறுத்தெடுங்கள். எண்ணெயில் பெருங்காயத்தைப் பொரித்து பிறகு மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுங்கள். எள் உட்பட, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடித்து வையுங்கள்.

நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் கலக்குங்கள்.


மாங்காய் இஞ்சி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோல் நீக்கி துருவிய மாங்காய் இஞ்சி துருவல் அரை கப், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 4, எலுமிச்சை சாறு, எண்ணெய் தலா 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

பொடிக்க: உளுந்து 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன், தனியா 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் 3, எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில், மாங்காய், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை வதக்கி, கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிவக்க வறுத்து பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, தாளிதக் கலவை, எலுமிச்சம் சாறு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

ஸ்பெஷல் எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் 1 கப், எலுமிச்சம் பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 2 டீஸ்பூன், வேக வைத்த கொண்டைக் கடலை கால் கப், கடுகு 1 டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை ஒன்றிரண்டாக நசுக்குங்கள். எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, கொண்டைக் கடலை ஆகியவற்றைச் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

இந்தக் கலவையோடு சாதத்தை சேர்த்துக் கிளறுங்கள்.

புதினா கத்தரிக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பச்சை கத்தரிக்காய் 8, பெரிய வெங்காயம் 1, தக்காளி 2, புளி கரைசல் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, சீரகம், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 4, பூண்டு 6 பல்.

செய்முறை: அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரையுங்கள். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் இவற்றை நீளவாக்கில், மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகத்தை தாளித்து வெங்காயம், கத்தரிக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் தூவி ஐந்து நிமிடம் வதக்குங்கள். பிறகு, அரைத்த விழுது, தக்காளி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி,புளி கரைசலைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம்

தேவை: பச்சை பட்டாணி அரை கப், பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் 2 கப், தக்காளி 6, பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசியை சுத்தம் செய்து அதனுடன், தேங்காய்ப் பால், மூன்று கப் தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள்.

சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள்.

புளிப்பில்லாத தக்காளி என்றால் ஒரு மூடி அளவு எலுமிச்சம்பழச் சாறு சேர்க்கலாம்.

பிஸிபேளா பாத்

தேவை: அரிசி, துவரம் பருப்பு தலா 1 கப், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 4, பச்சை பட்டாணி அரை கப், வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது அரை கப், புளி எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

அரைக்க: தனியா 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, கடலைப் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1, கசகசா 2 டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

கல்கண்டு சாதம்

தேவை: பச்சரிசி 1 கப், பால் 1 லிட்டர், கல்கண்டு 1 கப், ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன், கிராம்பு 1, மில்க்மெய்ட் 3 டேபிள் ஸ்பூன், நெய் கால் கப், முந்திரி 10, பாதாம் 8, வெள்ளரி விதை 1 டேபிள் ஸ்பூன், சார பருப்பு அரை டேபிள் ஸ்பூன், கிராம்பு 1, ஜாதிபத்ரி சிறிதளவு.

செய்முறை: அரிசியை ஒரு கப் தண்ணீர், ஒரு லிட்டர் பால் சேர்த்து மிதமான தீயில் வேக வையுங்கள். அடிப் பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடுங்கள். அரிசி வெந்து குழைந்ததும் அதில் கல்கண்டை பொடித்துச் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறுங்கள்.

பாதாமை மெல்லிதாக சீவுங்கள். ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடித்து வையுங்கள். நெய்யைக் காயவைத்து முந்திரியை வறுத்து, வெள்ளரி விதை, சார பருப்பு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

கல்கண்டு சாதத்தில் பாதாம், ஏலம், கிராம்பு, ஜாதிபத்ரி பொடி, முந்திரி, வெள்ளரிவிதை கலவையைச் சேர்த்துக் கிளறுங்கள்.

சீரக சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப் (பாசுமதி அரிசியாக இருந்தால் கூடுதல் சுவை தரும்), முந்திரி 10, சீரகம் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: நெய்யை சூடாக்கி சீரகத்தைத் தாளியுங்கள். பிறகு முந்திரியைச் சேர்த்து இளம் சிவப்பாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்து இறக்குங்கள்.

சாதத்தில், சீரகக் கலவை, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கினால் சீரக சாதம் ரெடி.

ஆந்திரா புளியோதரை

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளி சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை சிறிது, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, வெல்லத் துருவல் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, பெருங்காயம் அரை டீஸ்பூன்.

செய்முறை: சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற்போல வைத்து நடுவில் குழிவாக்குங்கள். அதில் பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி), கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள். பிறகு வெல்லம் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.

மீதமுள்ள கடுகை அரைத்து வையுங்கள்.

சாதத்தில் புளி கலவை, அரைத்து வைத்துள்ள கடுகு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

மாங்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 6, பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் மாங்காய்த் துருவல் மற்றும் மிளகாயை வதக்கி எடுத்து கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில், கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்து இறக்குங்கள். இதனை மாங்காய் கலவையோடு சேர்த்து மேலும் ஒரு சுற்று அரைத்தெடுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்குங்கள்.

தோசைக்காய் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், தோசைக் காய் 1, பச்சை மிளகாய் 6, புளி சிறிய எலுமிச்சை அளவு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: தோசைக்காயின் தோல், விதைகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் தோசைக் காயை வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாய், புளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரையுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, உப்பு, கடுகு தாளிதக் கலவை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

பூண்டு சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், சின்ன வெங்காயம் அரை கப், பூண்டு 1 கப், இஞ்சி 1 துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு, வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் தலா அரை டீஸ்பூன், நெய் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, உப்பு தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

மாங்காய் மசாலா சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், புளிப்பான மாங்காய் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கடுகுத் தூள் 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மாங்காயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயுடன் மாங்காய், பொடி வகைகள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

நெய்யில் கடு-கை பொரித்தெடுங்கள்.

சூடான சாதத்தில் தாளிதக் கலவை மற்றும் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்குங்கள்.

சோயா சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சோயா உருண்டைகள் அரை கப், பெரிய வெங்காயம் 2, இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 4 டீஸ்பூன், தயிர் அரை கப், கரம் மசாலாத் தூள் 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

அரை நெல்லிக்காய் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், அரை நெல்லிக்காய் அரை கப், பச்சை மிளகாய் 10, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். நெல்லிக்காய்களை சுத்தம் செய்து கொட்டைகளை நீக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு, நெல்லிக்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி நைஸாக அரைத்தெடுங்கள்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில், நெல்லிக்காய் விழுது, கடுகு தாளிதம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

கொண்டைக்கடலை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், சிறிய கருப்பு கொண்டைக் கடலை அரை கப், தேங்காய்ப் பால் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் தலா 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, உப்பு தேவைக்கு.

செய்முறை: கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் வேகவைத்து எடுத்து வையுங்கள்.

வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளியுங்கள். பிறகு வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு தேங்காய்ப் பால், இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, வேக வைத்த கடலை, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, மேலும் இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தக்காளி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 6, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க (முதல் வகை): பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, கசகசா 2 டீஸ்பூன், முந்திரி 6, எண்ணெய் 1 டீஸ்பூன்.

மற்றொரு வகை பொடிக்கு: தனியா, துவரம் பருப்பு தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 4, கொப்பரை தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை (இரண்டு வகையையும் தனித்தனியாக) வறுத்து பொடித்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்தை தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய், தக்காளி ஆகியவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி இறக்குங்கள். சாதத்தில், பொடி வகையை தூவி, தக்காளி கலவை மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், காய்கறி கலவை (கேரட் பீன்ஸ், பட்டாணி) 1 கப், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 2, பெரிய வெங்காயம் 3, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், தயிர் அரை கப், புதினா, மல்லி தலா அரை கட்டு, பச்சை மிளகாய் 3, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: குக்கரில் எண்ணெய், நெய்யைச் சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். பின்னர் காய்களைச் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி ஆறு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அரிசியைச் சேர்த்து கிளறி மூடி வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

உளுந்து பொடி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

பொடிக்க: முழு உளுந்து 4 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கொப்பரைத் தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல் 8, பெருங்காயத் தூள் அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன்.

செய்முறை: பொடிக்கக் கூறப்பட்டுள்ளவற்றை, மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்துப் பொடியோடு சேர்த்துக் கலக்குங்கள்.

சாதத்தில், பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறுங்கள்.

வெந்தயக்கீரை சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், வெந்தயக்கீரை 2 கட்டு, தக்காளி 3, வெங்காயம் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பச்சை மிளகாய் 4, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தலா 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் ஒரு கப், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நசுக்குங்கள். எண்ணெயில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை வதக்குங்கள். பிறகு வெங்காயம், கீரை, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மீதமுள்ள மசாலாத்தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாடை போனதும், இந்தக் கலவையோடு தேங்காய்ப் பால், நான்கு கப் தண்ணீர், தேவையான உப்பு, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள்.

ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

ஸ்பெஷல் தயிர் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், பால் அரை கப், புளிக்காத புதிய தயிர் இரண்டரை கப், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது 2 டீஸ்பூன், வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, பொடியாக நறுக்கிய முந்திரி 2 டேபிள் ஸ்பூன், திராட்சை 15, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.

சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.

கத்தரி மொச்சை சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கத்தரிக்காய் 6, காய்ந்த மொச்சை கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பிரிஞ்சி இலை 2, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: தேங்காய் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தனியாத் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: மொச்சைக் கொட்டையை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வையுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மெல்லியதாக நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

எண்ணெயில், பிரிஞ்சி இலையைத் தாளித்து வெங்காயம், கத்தரிக்காயை மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள். காய் முக்கால் பதம் வெந்ததும், தக்காளி, அரைத்த விழுது, மொச்சைக் கொட்டை, தேவையான உப்பு சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

சாதத்துடன் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்குங்கள்.

கொத்துமல்லி சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

அரைக்க: மல்லித் தழை 2 கட்டு, மிளகாய் வற்றல் 10, உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் சிறு துண்டு, புளி சிறு எலுமிச்சை அளவு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: மல்லித் தழையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்தெடுங்கள். பிறகு உளுந்தை வறுத்து எடுத்து தனியே வையுங்கள். பிறகு மல்லித் தழையை வதக்குங்கள்.

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் உப்பு, புளி சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள்.

நெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளியுங்கள்.

சாதத்தில், அரைத்த விழுது, தாளிதக் கலவை, உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

காய்கறி எலுமிச்சம் சாதம்

தேவை: பச்சரிசி 2 கப், எலுமிச்சம் பழம் 2, கேரட் 1, பீன்ஸ் 10, காலிஃப்ளவர் 1 துண்டு, பட்டாணி அரை கப், இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 3, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், முந்திரி 10, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வையுங்கள். காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்து காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.

இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள்.

கூட்டாஞ்சோறு

தேவை: புழுங்கல் அரிசி 2 கப், துவரம் பருப்பு அரை கப், கேரட், கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவை தலா 1, வாழைக்காய் பாதியளவு, முருங்கை கீரை, அரைக் கீரை, முளைக் கீரை தலா 2 கைப்பிடி, சின்ன வெங்காயம், மிளகாய் வற்றல் தலா 8, பூண்டு 6 பல், கடுகு, உளுந்து, சீரகம் தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், புளி சிறிய எலுமிச்சை அளவு, வடகம் 3 துண்டு, உப்பு தேவைக்கு.

செய்முறை: காய்களை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், பூண்டு, தேங்காய்த் துருவல், மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். புளியை சிறிதளவு நீரில் கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.

அரிசி, பருப்புடன் காய்கள், கீரை வகைகள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது, புளி கரைசல், நான்கு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் போட்டு மூடி வையுங்கள். 1 விசில் வந்ததும், மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

எண்ணெயில் கடுகு, உளுந்தை தாளித்து, வடகத்தைப் பொரித்தெடுங்கள்.

இந்த வடகக் கலவையைச் சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள்.

காளான் சாதம்

தேவை: உதிராக வடித்த சாதம் 2 கப், காளான் 10, பெரிய வெங்காயம் 1, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், வெங்காயத் தாள் 2, பச்சை கலர் சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், சீன உப்பு அரை டீஸ்பூன், சோயா சாஸ் 1 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் மெல்லியதாகவும், வெங்காயத்தாளை பொடியாகவும் நறுக்குங்கள்.

எண்ணெயில் வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறியதும் காளானைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்கி, பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், சீன உப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் கிளறுங்கள்.

இந்தக் கலவையில் சாதம், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள்.

தொகுப்பு: அக்ஷயா படங்கள்:
பொன். காசிராஜன்

நன்றி:- சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி.

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-08 கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம், உளுந்து களி

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்


அந்தந்த சீசன்ல அதிகமா விளையற பொருட்களை வெச்சு விதவிதமா சமைச்சு, வேணுங்கற அளவுக்குச் சாப்பிடறது கிராமத்து மண்ணுக்கே உள்ள சிறப்புகள்ல ஒண்ணு.

அப்படி, இப்போ மலிஞ்சு கெடக்கற மாங்காயை வெச்சு ஒரு சமையல் குறிப்பைப் பார்க்கலாமா..?

……………………………………………………………

மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி

எந்த வகை மாங்காய்னாலும் சரி.. ஒரு மாங்காயை எடுத்துக் கழுவி தோலோடவே சின்னச் சின்ன துண்டங் களா நறுக்குங்க. அரை கப் பாசிப் பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவெச்சு எடுங்க. குழையக்கூடாது.

பருப்பு நல்லா வெந்த பிறகு, நறுக்குன மாங்காய், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு இதையெல்லாத்தையும் அதுல சேர்த்து மாங்காய் மசியற வரைக்கும் வேகவைங்க.

முக்கால் கப் வெல்லத்தை எடுத்து கால் கப் தண்ணி சேர்த்து கொதிக்க வைங்க. வெல்லம் கரைஞ்சு கொதிச்சதும் வடிகட்டி, அதை மாங்காய் பருப்பு கலவையோட சேர்த்து இன்னும் அஞ்சு நிமிஷம் கொதிக்க வெச்சு இறக்குங்க.

வடை சட்டில ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊத்தி, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து தாளிச்சு, மாங்காய் கலவைல கொட்டிக் கிளறுங்க.

இனி சாப்பிடவேண்டியதுதான்.

பாசிப் பருப்போட மணம், மாங்காயோட புளிப்பு, வெல்ல இனிப்புனு கலந்து கட்டி ரொம்ப ருசியா இருக்கும், இந்த மாங்காய் பாசிப்பருப்பு பச்சடி!

பொதுவா பச்சடின்னாலே மாங்காய், மிளகாய், வெல்லம் போட்டுத்தான் பண்ணுவோம். ‘உடம்புச் சூட்டை கிளப்பும்’கிறதால சிலபேர் இதத் தவிர்க் கறதும் உண்டு. ஆனா, இந்த பச்சடில மாங்காயோட சூட்டை பாசிப் பருப் போட குளிர்ச்சி அடக்கிடறதால அந்த பிரச்னையே இல்லை.

——————————————————————————–

பால் கொழுக்கட்டை

ஒரு கப் பச்சரிசி மாவை எடுத்து அகலமான ஒரு பாத்திரத்துல போட்டுக்குங்க.

ஒன்றரை கப் தண்ணிய கொதிக்க வெச்சு, அதை மாவுல கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி கிளறுங்க. கிளறின மாவு கெட்டியா சப்பாத்தி மாவு மாதிரி இருக்கணும்.

பொடிச்ச வெல்லம் ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கோங்க. ஒண்ணேகால் கப் தண்ணில, பொடிச்ச வெல்லத்தைப் போட்டு கொதிக்க வைங்க. கொதிச்சு, வெல்லம் கரைஞ்சதும் வடிகட்டி, மறுபடியும் அடுப்புல வெச்சு, ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்க வைங்க.

ஏற்கெனவே தயாரா வெச்சிருக்கற மாவை தேன்குழல் அச்சுல நிரப்பி, கொதிக்கற வெல்லப் பாகுல பிழியணும். பிழிஞ்ச மாவை ஒரு நிமிஷம் வேக வைங்க. அப்புறமா அதை மெல்லிசு கரண்டி காம்பால லேசா கிளறிவிடுங்க. மாவு கரையாது. ஆனா, சின்னச் சின்ன துண்டா உடையும். உடைஞ்சதும் கிளர்றதை நிறுத்திடுங்க. மறுபடியும் இந்தக் கலவை கொதிக்க ஆரம்பிச்சதும் மிச்சமிருக்கற மாவுல கொஞ்சம் எடுத்து அச்சுல நிரப்பி, வெல்லக் கலவைல பிழிஞ்சு விடுங்க. இதையும் ஒரு நிமிஷத்துக்கு அப்புறம் கரண்டி காம்பால லேசா கிளறி உடைச்சுவிடுங்க.

இதேமாதிரி எல்லா மாவையும் பிழிஞ்சு வேக வெச்சதும், தீயைக் குறைச்சு, வெல்லக் கலவைல அரை டீஸ்பூன் ஏலத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நல்லா கிளறுங்க.

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை அகலமான ஒரு தட்டுல விட்டு பரவலா தடவுங்க. அதுல இந்த வெல்ல மாவுக் கலவையைக் கொட்டி சமப்படுத்துங்க. ஆறினதும் விருப்பமான வடிவத்துல வெட்டி எடுத்துச் சாப்பிட லாம்.

ரொம்ப ஜோரா இருக்கும் இந்தக் கொழுக்கட்டை!

இந்தக் கொழுக்கட்டை செய்யறப்ப முக்கியமா கவனத்துல வெச்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னான்னா, மாவை ஒரு தரம் ஒரே ஈடுதான் பிழியணும். ரெண்டு மூணு ஈடாவோ மொத்த மாவையும் ஒரே தரமாவோ பிழிஞ்சு விட்டுட்டா கழி மாதிரி ஆயிடும். மாவும் வேகாது.

தேங்காய் துருவலுக்கு பதில் ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். அப்படி தேங்காய்ப்பால் சேர்க்கறதா இருந்தா வெல்லத்தை அரை கப் தண்ணி சேர்த்து கரைச்சா போதும்.

தேங்காய்ப்பாலுக்குப் பதில் மாட்டுப்பாலை ஊத்தியும் வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையை வெச்சும் இந்தக் கொழுக் கட்டையை செய்யலாம். அது ஒரு தனிச் சுவையா இருக்கும்.

………………………………………………………………..

காப்பரிசி

புட்டரிசிங்கற சிகப்பரிசியை ஒரு கப் அளவுக்கு எடுத்து, அதை கல் உமி போக சுத்தம் பண்ணி, கழுவி வைங்க.

பல்லு பல்லா சன்னமா நறுக்கின தேங்காயை கால் கப் அளவுக்கு எடுத்து, அதை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில லேசா வறுத்து அரிசியோட கலக்குங்க. அதோட, வறுத்த எள் ஒரு டேபிள் ஸ்பூன், ஏலத்தூள் ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை கால் கப் இதையெல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

ஒரு கப் வெல்லத்தை எடுத்து பொடிச்சு, கால் கப் தண்ணி யோட சேர்த்து கொதிக்க வைங்க. கொதிச்சதும் வடிகட்டி மறுபடியும் அடுப்புல வெச்சு காய்ச்சுங்க. நல்லா முத்தின பாகு பதம் வந்ததும் அரிசி கலவையை கொட்டிக் கிளறி இறக்குங்க.

ஆறினதும் பொல பொலனு உதிரும். அப்படியே அள்ளிச் சாப்பிட வேண்டியதுதான்.

கிராமப்புறங்கள்ல நெனச்சப்ப எல்லாம் இதைச் செஞ்சு சாப்பிடுவாங்கனு வைங்க. இருந்தாக்கூட வளைகாப்பு, ஆடிப் பெருக்கு, கோயில் திருவிழா.. மாதிரி விஷேச நாட்கள்ல இந்தக் காப்பரிசி இல்லாத வீடே இருக்காது.

…………………………………………………………………….

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்


வயிற்றுப் பசிக்கு  நாக்கு ருசிக்கு மட்டுமில்லீங்க… உடல் ஆரோக்கியத்துக்கும் கிராமத்து கைமணம் ரொம்ப ஜோருங்க! இயற்கையா கிடைக்கிற பொருட்கள்ல, இதமான சுகம் தர்ற கிராமத்து சமையலுக்கு எப்பவுமே தனி மவுசுதாங்க!

சில ‘ஆரோக்கிய’ ரெசிபிக்களை பார்க்கலாமா?

……………………………………………………………………………………….

முள் முருங்கை அடை

நெஞ்சு சளி, கபம் இதுக்கெல்லாம் அருமருந்து முள் முருங்கை கீரை. அதனால அடிக்கடி அதை சமையல்ல சேர்த்துக்கறது கிராமத்து வழக்கம். ஆனா குழம்பு, கூட்டுனு கொடுத்தா யாரும் அவ்வளவா விரும்பி சாப்பிடமாட்டாங்கனு அடையா செஞ்சு சாப்பிடுவாங்க.

அடைனு சொன்னாலும், செய்யற முறையப் பார்த்தா பூரி மாதிரி இருக்கும். அதனால குழந்தைங்களுக்கும் இதை ரொம்ப பிடிக்கும்.

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்செடுங்க. அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கோங்க.

இந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளா எடுத்து, உள்ளங்கைல வெச்சு வடையைவிட கொஞ்சம் பெரிய சைஸுக்குத் தட்டி, சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க. எண்ணெய் அதிகம் வேண்டாமேங்கறவங்க, இதை தோசைக் கல்லுலப் போட்டு மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம்.

இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும். இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

————————————————————-

பாசிப்பருப்பு சீயம்

முக்கால் கப் பாசிப்பருப்பை எடுத்து மலர வேக வெச்சு, கொஞ்சங்கூட ஈரம் இல்லாதபடிக்கு தண்ணிய வடிச்சுட்டு வைங்க.

அரை கப் பச்சரிசி, அரை கப் உளுந்தை ஒண்ணாச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வெச்சு, நைஸா, இட்லிமாவு பதத்துக்கு அரைச்சு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து எடுத்துக்கோங்க.

பாசிப் பருப்போட முக்கால் கப் சர்க்கரை, அரை கப் தேங்காய் துருவல், அரை டீஸ்பூன் ஏலத்தூள் இதையெல்லாம் கலந்து சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டிக்கோங்க. அரிசி மாவுக் கலவைல இதை முக்கியெடுத்து சூடான எண்ணெய்ல பொரிச்செடுங்க.

சூடா இருக்கறப்பவே சீயத்தை ரெண்டா வெட்டி அதுமேல பரவலா கொஞ்சம் நெய் விட்டு சாப்பிட்டா ஆஹா.. அந்த சுவைய என்னன்னு சொல்ல?! அபாரமா இருக்கும், போங்க!

இதுக்கு மேல் அலங்காரம், சேர்ப்பு எதுவுமே செய்ய வேண்டாம். அப்படியே கொடுத்தாலே குட்டிப் பிள்ளைங்க இஷ்டமா சாப்பிடுவாங்க.

இதுல முக்கியமான விஷயம்.. சர்க்கரை சேர்த்ததுமே பருப்பு கலவை நீர்த்துக்கும். அதனால் அந்தக் கலவைய ரொம்ப நேரம் அப்படியே வெச்சிருக்காம உடனேயே -மாவுல முக்கியெடுத்து பொரிச்சுடணும்.

தேவைப்பட்டா பருப்புக் கலவைல 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு கலக்கலாம். கலவை கொஞ்சம் கெட்டிப்படும். பாசிப் பருப்போட வேக வெச்சு மசிச்ச கொண்டைக் கடலை, காராமணியும் சேர்க்கலாம். ருசியும், சத்தும் கூடுதலா இருக்கும்.

—————————————————————–

சீம்பால் திரட்டு

கன்னு போட்ட நாலஞ்சு நாளுக்கு மாட்டுக்கு சுரக்கற பாலை வழக்கம் போல நாம உபயோகிக்க முடியாது. சீம்பால்னு சொல்ற அந்தப் பால் அவ்வளவு கெட்டியா புது வாசனையோட இருக்கும். கன்னுக் குட்டிக்கு சத்து கொடுக்கற அந்தப் பாலை திரட்டுப் பால் மாதிரி சுவையா செஞ்சு சாப்பிடறது ஊர் வழக்கம். செய்யறது ஈஸியா இருக்கும். ஆனா சுவை ஓஹோனு இருக்கும். செய்யறது எப்படினு சொல்றேன்..

சீம்பால் (மாடு கன்னு போட்ட ரெண்டாம், மூணாம் நாள் பால்) 2 கப் அளவுக்கு எடுத்து அதுல 1 கப் சர்க்கரை, பொடியா நறுக்கின முந்திரி துருவல் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலத் தூள் 1 டீஸ்பூன்.. எல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.

இட்லிப் பானைல தண்ணி ஊத்தி, அதுல பால் கலவை உள்ள பாத்திரத்தை வெச்சு, சன்னமான தீயில அரை மணி நேரம் வேக வைங்க. அப்புறமா கலவைல ஒரு கத்திய சொருகிப் பாருங்க. கத்தில பால் ஒட்டலேனா கலவை வெந்துடுச்சுனு அர்த்தம். அப்போ பாத்திரத்தை இறக்கிடுங்க.

கலவை ஆறினதும் ஒரு தட்டுல கவிழ்த்து சின்னச்சின்ன துண்டுகளா வெட்டி பரிமாறுங்க. எல்லாரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

ஏலத்தூள் வாசனை பிடிக்காதவங்க வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கலாம். கலர்ப் பொடிங்க கலந்து வேகவெச்சுக் கொடுத்தா பிள்ளைங்க குஷியா யிடுவாங்க.

……………………………………………………………………

சந்திப்பு: கீர்த்தனா

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

ஏப்ரல் 19, 2010 1 மறுமொழி

‘‘பழைய சோறா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆனா தொட்டுக்க ஏதாச்சும் இருக்கணும்” என்று சொல்லுமளவுக்கு சைடு டிஷ்சுக்கு பழகிப்போனவை நமது நாக்குகள்.

ஐந்தாறு வகை காய்களைச் சேர்த்து கமகமக்கும் குழம்பும், ரசமும், கூட்டுமாக ஜமாய்த்திருந்தாலும், ‘‘அதெல்லாம் இருக்கட்டும்.. பொரியல் என்ன?” என்று கேட்டு அது தமக்குப் பிடித்தமானதா என்பதைத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே சாப்பாட்டில் கை வைக்கும் ஆட்கள்தான் அதிகம் இங்கே.

‘‘சோறா?” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் குழந்தைகள்கூட பொரியலும் வறுவலும் பிடித்துப் போய்விட்டால் இன்னும்கொஞ்சம் என்று சாப்பாட்டை கேட்டு வாங்கி ஒரு கட்டு கட்டுவார்கள்.

‘‘நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். உடம்புக்கு நல்லதாச்சேனு தினமும் கிலோ கணக்குல காய்கறியை வாங்கி சளைக்காம நானும் பொரியல், வறுவல்னு செஞ்சுட்டுத்தான் இருக்கேன். ஆனா, எதுவுமே ஒண்ணு ரெண்டு நாளுக்குமேல எடுபடமாட்டேங்குதே.. ‘இன்னிக்கும் கோஸ் பொரியலா?’ ‘கேரட்டை விட்டா வேற தெரியாதா?’னு சலிச்சுக்கறாங்க, என்னதான் பண்றது?” என்று புலம்புகிறீர்களா..? உங்கள் கவலைக் குரல் கேட்டுத்தான் இந்த இணைப்பில் மாதம் முழுவதும் தினம் ஒரு விதமாக செய்து அசத்த, முப்பது வகைப் பொரியல்களை (அட வறுவலும் தாங்க. அது இல்லாமலா? சொல்லித் தருகிறார் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்.

பேபி கார்ன் பொரியல், பனீர் பொடிமாஸ் என்று வாண்டுகளுக்கு பிடித்த ஐட்டங்கள் மட்டுமல்ல, சத்துக்கள் மிகுந்த கிராமத்து சமாசாரமான பனங்கிழங்கு கூட இங்கே பொரியலாக அவதாரம் எடுத்திருக்கிறது. சமைத்துக் கொடுங்கள். சாப்பிடுபவர்கள் சொல்வார்கள். ”பொரியல்னா இப்படில்ல இருக்கணும்.. பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு!”

—————————————————–

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவை: பிஞ்சு கத்தரிக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, தக்காளி 2, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1.

செய்முறை: கத்தரிக் காயை பாதி காம்பு வரை நறுக்கி நான்காக கீறி (முழுவதுமாக வெட்டக் கூடாது) வையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து, (தண்ணீர் சேர்க்க கூடாது) உப்பு சேர்த்து வையுங்கள். இந்தக் கலவையை கத்தரிக் காயினுள் சிறிது சிறிதாக அடைத்து வையுங்கள்.

எண்ணெயை சூடாக்கி, அதில் கத்தரிக் காய்களை போடுங்கள். அரைத்த பொடி மீதமிருந்தால் அதையும் காயோடு சேர்த்து, மிதமான தீயில், மூடி வைத்து, அடிக்கடி கிளறிவிட்டு வேக வையுங்கள். வெந்ததும் கறிவேப்பிலை தூவி கிளறி இறக்குங்கள்.

—————————————————————–

முருங்கை மசாலாப்பொரியல்

தேவை: முருங்கைக்காய் 3, பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மல்லித் தூள் 1 டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல், சோம்பு 1 டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.

—————————————————————–

பீன்ஸ் தேங்காய்ப்பால் பொரியல்

தேவை: பீன்ஸ் அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் அரை கப், பூண்டு 4 பல், உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒன்றரை டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை குறுக்குவாக்கில் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். (அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் ஆவியை நீக்கி, நீரை வடித்துவிட்டு காயை எடுத்து வைத்தால் காய் சரியான பதத்தில் வெந்திருக்கும்) பூண்டை நசுக்குங்கள். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், பூண்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் வெந்த பீன்ஸ், தேங்காய்ப்பால், மிளகாய்த் தூள் சேர்த்து தேங்காய்ப்பால் வற்றும் வரை கிளறி இறக்குங்கள்.

————————————————————

காலிஃப்ளவர் மிளகுப் பொரியல்

தேவை: காலிஃப்ளவர் சிறியது 1, பெரிய வெங்காயம் 2, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: மிளகு 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 1, பூண்டு 6 பல், இஞ்சி 1 சிறு துண்டு

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்குங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் காலிஃப்ளவர், தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து மிதமான தீயில், அரை பதத்துக்கு வேக வையுங்கள். பிறகு மூடியைத் திறந்து அரைத்த விழுதை சேர்த்து, காய் நன்றாக வேகும்வரை சுருளக் கிளறி இறக்குங்கள்.

———————————————

ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8.

செய்முறை: காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள். தண்ணீர் சேர்க்கக் கூடாது.

மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள். பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.

——————————————————–

உருளைக்கிழங்கு ஸ்பெஷல் ஃபிரை

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

அரைக்க: இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், சோம்பு 1 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அரை அங்குல கனத்துக்கு வட்ட வட்டமாக வெட்ட வேண்டும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, அதனோடு உப்பைக் கலந்து வையுங்கள். இந்தக் கலவையை உருளைக்கிழங்கு துண்டு ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

தோசைக் கல்லை சூடாக்கி, அதன் மேல் கிழங்குகளை பரவலாக அடுக்கி வைத்து, சுற்றிலும் எண்ணெயை ஊற்றுங்கள். இதனை இருபுறமும் திருப்பிப்போட்டு மொறுமொறுப்பாக நன்கு வேக வைத்து இறக்குங்கள்.

————————————————–

கத்தரி மொச்சைப் பொரியல்

தேவை: கத்தரிக்காய் கால் கிலோ, காய்ந்த மொச்சை விதை அரை கப், பெரிய வெங்காயம் 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 8, தனியா 1 டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: மொச்சையை ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து, நீரை வடித்துவிட்டு வையுங்கள். கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்குங்கள். புளியை அரை கப் நீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறு தீயில் சிவக்க வறுத்து, நைஸாக பொடித்து வையுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் கத்தரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கிளறுங்கள். கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், புளி கரைசல், வேகவைத்த மொச்சை, அரைத்து வைத்துள்ள பொடி ஆகியவற்றை சேர்த்து சுருளக் கிளறி கறிவேப்பிலை தூவி இறக்குங்கள்.

—————————————————-

கோஸ் கடலைப் பருப்புப் பொரியல்

தேவை: முட்டை கோஸ் கால் கிலோ, கடலைப் பருப்பு கால் கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, கடுகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன்.

செய்முறை: கோஸ், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை பதமாக வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சோம்பு தாளித்து அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, அதனுடன் கோஸ், உப்பைச் சேர்த்து, மிதமான தீயில், கோஸ் வேகும் வரைக் கிளறி, கடைசியில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

—————————————————-

சேனை ஸ்பெஷல் வறுவல்

தேவை: சேனைக்கிழங்கு அரை கிலோ, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், புளி சிறு நெல்லிக்காய் அளவு.

அரைக்க: மிளகு, சீரகம் தலா 2 டீஸ்பூன், சோம்பு, மிளகாய்த் தூள் தலா 1 டீஸ்பூன், பூண்டு 6 பல்.

செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சற்று கனமான, அகலமான துண்டுகளாக நறுக்குங்கள். இதனை தண்ணீரில் போட்டு அதனுடன் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து முக்கால் பதத்துக்கு கிழங்கை வேகவைத்து இறக்குங்கள். பிறகு நீரை வடித்துவிட்டுக் கிழங்கை தனியே எடுத்து வையுங்கள்.

அரைக்கக் கூறியுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்தெடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இந்த விழுதை கிழங்குத் துண்டுகள் ஒவ்வொன்றின் மீதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். தோசைக் கல்லைச் சூடாக்கி, அதன்மீது கிழங்குகளைப் பரவலாக அடுக்கி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, கிழங்குகளை இரு புறமும் திருப்பி விட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.

——————————————————–

பீன்ஸ் பொடிமாஸ்

தேவை: பீன்ஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 1, உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன், பொட்டுக் கடலை 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். பொட்டுக் கடலையை நைஸாக பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு அல்லது கடுகைத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய்த் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். பிறகு பீன்ஸை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, பொட்டுக் கடலைப் பொடியை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

நெல்லை உருளைப் பொரியல்

தேவை: உருளைக்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் 5

செய்முறை; உருளைக்கிழங்கை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களைச் சிறிதளவு தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் கிழங்கு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவையுங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, கிழங்கு வெந்து சுருளும் வரை கிளறி, கறிவேப்பிலைத் தூவி இறக்குங்கள்.

——————————————————–


பப்பாளிக்காய் பொரியல்

தேவை: பப்பாளிக்காய் (சிறிய சைஸ்) 1, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, மலர வெந்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் தலா 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவைக்கு.

செய்முறை: பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பிஞ்சுமக்காச்சோளப்பொரியல்

தேவை: பிஞ்சு மக்காச் சோளம் 1 கிலோ, உப்பு தேவைக்கு, எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, இஞ்சி 1 துண்டு, பூண்டு 6 பல், புதினா, மல்லி தலா 1 கைப்பிடி.

செய்முறை: மக்காச்சோளத்தின் பட்டைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து பிசறி ஆவியில் ஐந்து நிமிடம் வேகவையுங்கள். அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு அரையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகக் கிளறுங்கள். பிறகு சோளம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கலர்ஃபுல் பொரியல்

தேவை: கோஸ் கால் கிலோ, கேரட் 2, பீன்ஸ் 100 கிராம், பட்டாணி அரை கப், பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் 1 கப், தேங்காய்த் துருவல் 1 கப், மலர வேக வைத்த பாசிப் பருப்பு அரை கப், வேக வைத்த கடலைப் பருப்பு அரை கப், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 4, இஞ்சி 1 துண்டு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2

செய்முறை: காய்கறிகளைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் வற்றலை சேர்த்து வதக்குங்கள். அதில் வேக வைத்துள்ள காய்கறி, பருப்பு வகைகள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பரங்கிக்காய் பொரியல்

தேவை: பரங்கிக்காய் கால் கிலோ, வேகவைத்த வேர்க் கடலை அரை கப், வெல்லம் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் 2, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பரங்கிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள். வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றலை (முழுதாக) சேர்த்து வறுத்து அதனுடன் பரங்கிக்காயை சேருங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறுங்கள். காய் வெந்ததும் வேர்க்கடலை, வெல்லம், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

காளான் மிளகுப் பொரியல்

தேவை: காளான் 200 கிராம், சின்ன வெங்காயம் 1 கப், இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், மிளகுத்தூள் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, சீரகம் அரை டீஸ்பூன்.

செய்முறை: காளானை சுத்தம் செய்து இரண்டிரண்டாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை சூடாக்கி சீரகத்தைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் தூவி வதக்குங்கள். வதங்கியதும் காளானைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, மிளகுத்தூள், கறிவேப்பிலை தூவி மேலும் மூன்று நிமிடம் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பீட்ரூட் பொடிமாஸ்

தேவை: பீட்ரூட் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், வேகவைத்த கடலைப் பருப்பு அரை கப், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துருவுங்கள். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்து, மிதமான தீயில் பீட்ரூட் வேகும் வரை கிளறுங்கள். பிறகு மிளகாய்த் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனீர் பொடிமாஸ்

தேவை: பனீர் 200 கிராம், சின்ன வெங்காயம் 15, இஞ்சி 1 துண்டு, பூண்டு 8 பல், பச்சை மிளகாய் 4, தக்காளி 1, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு, உப்பு தேவைக்கு, சோம்பு அல்லது கடுகு அரை டீஸ்பூன்.

செய்முறை: பனீரை உதிர்த்து வையுங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி சோம்பு (அல்லது கடுகு) தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி சேர்த்துக் கிளறி பனீர், மல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பனங்கிழங்குப் பொரியல்

தேவை: பனங்கிழங்கு 4, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு 1 டேபிள் ஸ்பூன்.

பொடிக்க: மிளகாய் வற்றல் 10, தனியா, கடலைப் பருப்பு, தேங்காய்த்துருவல் தலா 1 டேபிள் ஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன்.

செய்முறை: பனங்கிழங்கின் தோலை நீக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். ஆறியதும் தோல், நடு நரம்பை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். ஒரு டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்துப் பொடியுங்கள். மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்து தாளித்து நறுக்கிய பனங்கிழங்கு, அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வெண்டைக்காய் பொடிப் பொரியல்

தேவை: பிஞ்சு (விரல் நீள) வெண்டைக்காய் அரை கிலோ, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், மாங்காய் (ஆம்சூர்) தூள் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், உப்பு முக்கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: வெண்டைக்காய்களை காம்பு, வால் பகுதிகளை நீக்கிவிட்டு நடுவில் லேசாகக் கீறி வையுங்கள். காய், எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்குங்கள். இந்தப் பொடியை வெண்டைக்காய்களுக்குள் சிறிது சிறிதாக தூவி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, அதில் பொடி அடைத்த காய்களைப் போடுங்கள். மீதமுள்ள பொடிகளையும் தூவி மிதமான தீயில் அவ்வப்போது பிரட்டிவிட்டு மொறுமொறுப்பாக வேக வைத்தெடுங்கள்.

——————————————————–

அவரைக்காய் மசாலா பொரியல்

தேவை: அவரைக்காய் அரை கிலோ, சின்ன வெங்காயம் 1 கப், தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன், கடலைப் பருப்பு 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: அவரைக்காயை சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த் தூள், அவரைக் காய், உப்பு சேர்த்துக் கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி, மிதமான தீயில் வேக வையுங்கள். வெந்ததும் தீயை அதிகப்படுத்தி தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

பலாக்கொட்டை சோயாப் பொரியல்

தேவை: பலாக்கொட்டை 15, சோயா 10 உருண்டைகள், பெரிய வெங்காயம் 2, தக்காளி 4, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: பலாக்கொட்டையை உப்பு சேர்த்து வேகவைத்து இரண்டாக நறுக்குங்கள். சோயாவை கொதி நீரில் இரண்டு நிமிடம் வைத்திருந்து அலசி எடுத்து, பிறகு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்கு அலசிப் பிழிந்து, இரண்டாக நறுக்கி வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, பலாக்கொட்டை சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். கடைசியாக சோயா, கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வாழைக்காய் முருங்கை கறி பொரியல்

தேவை: வாழைக்காய் 1, முருங்கைக்காய் 2, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கெட்டி தேங்காய்ப்பால் கால் கப், உப்பு தேவைக்கு எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன். கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து, சோம்பு தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: வாழைக்காயைப் பொடியாக நறுக்குங்கள். முருங்கைக்காயின் சதைப் பகுதியை வழித்தெடுத்து வையுங்கள். வெங்காயம், தக்காளியை சன்னமாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு, கறிவேப்பிலையை தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். வதங்கியதும் வாழைக்காய், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, வெந்ததும் தேங்காய்ப்பால், முருங்கையின் சதைப் பகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கோவைக்காய் கொண்டைக்கடலை பொரியல்

தேவை: கோவைக்காய் அரை கிலோ, கொண்டைக் கடலை அரை கப், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத்தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோவைக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீளமாக, சன்னமாக நறுக்குங்கள். கொண்டைக்கடலையை ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றலை தாளித்து பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு கோவைக்காய், மிளகாய்த் தூள், தனியாத் தூள், தக்காளி, உப்பு, வேகவைத்த கடலை ஆகியவற்றைச் சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

கத்தரி பொடி பொரியல்

தேவை: கத்தரி அரை கிலோ, உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

பொடிக்க: முழு உளுந்து 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், முந்திரி 5.

செய்முறை: கத்தரிக்காயை நீளவாக்கில்நறுக்குங்கள். பொடிக்கக் கூறப்பட்டுள்ள பொருட்களை தனித் தனியே வறுத்து (பச்சை மிளகாயை சிறு தீயில், நன்கு வெளுப்பாகும்வரை வறுக்க வேண்டும்) பிறகு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நைஸாக பொடித்து வையுங்கள்.

எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தை தாளித்து கத்தரிக்காயை, தேவையான உப்பு சேர்த்து லேசாகக் கிளறுங்கள். மிதமான தீயில், மூடி வைத்து வேகவைக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்து, தண்ணீர் வற்றியதும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

வாழைக்காய் ப்ரெட் பொரியல்

தேவை: வாழைக்காய் 2, உப்பு ப்ரெட் 3 ஸ்லைஸ், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, உப்பு, எண்ணெய் தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

அரைக்க: தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், இஞ்சி 1 துண்டு, பூண்டு 5 பல்.

செய்முறை: வாழைக்காயை தோல் நீக்கி விரல் நீளத் துண்டுகளாக சற்று கனமாக நறுக்குங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு அதில் வாழைக்காயைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி காய்களைத் தனியே எடுத்து வையுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் காய்களை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுங்கள். ப்ரெட்டையும் விரல் நீளத்துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தெடுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு உளுந்தைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிறிது வதங்கியதும் தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது, சிறிதளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பிறகு வாழைக்காயைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கிளறி, வறுத்த ப்ரெட், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சேம்பு ரோஸ்ட் பொரியல்

தேவை: சேப்பங்கிழங்கு அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு, கடுகு, உளுந்து தலா 1 டீஸ்பூன்.

அரைக்க: சின்ன வெங்காயம் 10, சீரகம் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: கிழங்கை வேகவைத்து தோலை நீக்கிவிட்டு நான்காக நறுக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிதளவு எண்ணெயை சூடாக்கிக் கிழங்குகளை வறுத்தெடுங்கள். இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்தைத் தாளித்து வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு மிளகாய்த் தூள், சேப்பங் கிழங்கு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பிறகு அரைத்த விழுது சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

முள்ளங்கி பொரியல்

தேவை: வெள்ளை முள்ளங்கி கால் கிலோ, வெங்காயம் 2, தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு, சோம்பு தலா அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், பூண்டு 4 பல்.

செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

சோளப் பொரியல்

தேவை: உதிர்த்த மக்காச் சோள முத்துக்கள் 1 கப், கேரட் 1, பனீர் 100 கிராம், பீன்ஸ் 10, பட்டாணி அரை கப், எண்ணெய் 1 டீஸ்பூன், சீரகத் தூள், மிளகாய்த் தூள் தலா அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

செய்முறை: சோள முத்துக்களை சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்குங்கள். சோளம் வேக வைத்த தண்ணீர் நிறைய மீதமிருந்தால் அதிலேயே நறுக்கிய காய்கள், பட்டாணி, பனீர் ஆகியவற்றை வேக வைத்து நீரை வடித்துவிட்டு வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி அதில் சோள முத்துக்கள், வேக வைத்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிளகாய்த் தூள், சீரகத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

——————————————————–

மினி கோஸ் மஷ்ரூம் பொரியல்

தேவை: குட்டி கோஸ் 100 கிராம், காளான் 1 பாக்கெட், பெரிய வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், தனியாத் தூள் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு, கறிவேப்பிலை சிறிதளவு, மிளகு 1 டீஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை: கோஸை நடுவில் பாதியளவுக்கு இரண்டாகக் கீறி வையுங்கள். காளானை இரண்டாகவும், வெங்காயம், தக்காளியைப் பொடியாகவும் நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வறுத்து பொடியுங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி, கோஸ், மிளகாய்த் தூள் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். காய் வெந்து பச்சை வாடை போனதும், காளானைச் சேர்த்து பொடித்து வைத்திருக்கும் பொடியைத் தூவிக் கிளறி இறக்குங்கள்.

தொகுப்பு: அக்ஷயா

நன்றி:- சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:- அ.வி

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பிரிவுகள்:30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க, கட்டுரைகள், சமையல் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்


கிராமத்து சமையல்னாலே, நொறுக்குத் தீனியோ, பலகாரமோ எதுவானாலும் நிச்சயமா சத்துள்ள ஆகாரமாத்தான் இருக்கும். தேவையான பொருட்களும் நமக்கு சுலபமா கிடைக்கறதா, விலை குறைஞ்சாத்தான் இருக்கும். இங்க நாம பார்க்கப்போறதும் அந்த ரகம்தான்..

நவதான்ய உருண்டை

சோளம், கம்பு, கொள்ளு, பாசிப் பயிறு, சோயாப்பயிறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள்ளு.. இந்த ஒம்பது வகையான தானியங்களை யும் வகைக்கு கால் கப் அளவுக்கு எடுத்து, ஒவ்வொண்ணையும் தனித்தனியா, வெறும் வடை சட்டில போட்டு சிவந்து, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்துக்குங்க. ஆறினதும் மெஷின்ல கொடுத்து மாவா நைஸா அரைச்சுக்குங்க.

ரெண்டரையிலிருந்து மூணு கப் அளவுக்கு சர்க்கரையை எடுத்து மிக்ஸில போட்டு பொடிச்சு பவுடராக்குங்க. இதை, அரைச்சு வெச்சிருக்கற தானிய மாவோட கலந்து, கூடவே உருக்கின அரை கப் நெய், அரை கப் தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் சேர்த்து பிசறி பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடிச்சு வைங்க. உருண்டை பிடிக்க வராம மாவு பொல பொலனு உதிர்ந்தா கவலைப்படாதீங்க. ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பால் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு உருண்டை பிடிங்க. பதமா இருக்கும்.

புரோட்டீன் சத்து நெறஞ்ச இந்த உருண்டைல மணத்துக்குனு ஏலக்காய் மாதிரி எதையும் சேர்க்க வேண்டாம். வறுபயிறு வாச னையே கமகமனு அத்தனை பிரமாதமா இருக்கும். பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு ஒரே ஒரு உருண்டை கொடுத்தாப் போதும். வயிறு நெறஞ்சு உற்சாகமாயிடுவாங்க

கம்புரொட்டிஎள்ளுப்பொடி

ரெண்டு கப் அளவுக்கு கம்பு எடுத்து தண்ணிய தெளிச்சு பிசறி, உரல்ல போட்டு குத்தி புடைக்கணும். அதைக் காயவெச்சு மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்குங்க. இந்த மாவை வேணுங்கற அளவுக்கு எடுத்து உப்பு போட்டு கலக்கி, கொஞ்சம் கொஞ்சமா கொதி நீரை ஊத்தி நல்லா அழுத்தி பிசையணும்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பர்.. இல்லேன்னா, வாழை இலையை எடுத்து அதுல கொஞ்சங் கொஞ்சமா மாவை எடுத்து வெச்சு தண்ணியத் தொட்டு மெல்லிசு ரொட்டியா தட்டிக்குங்க. சூடான தோசைக் கல்லுல போட்டு சுட்டெடுங்க. ரொட்டியைச் சுத்தி எண்ணெய்விட்டு ரெண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுங்க. மிதமான தீயில சுடணும்.

வேகறதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கும். பொறுமையாதான் சுடணும். சத்தான இந்த ரொட்டியை சாப்பிட்டுப் பார்த்தா, அந்த ருசியே சிரமத்தைப் பார்க்காம அடிக்கடி இதைச் செஞ்சு சாப்பிடச் சொல்லும்.

கம்பு ரொட்டிக்கு தொட்டுக்க ஜோரானது எள்ளுப்பொடி. சரி, அதை எப்படி செய்யறது?

எள்ளை கல், மண் நீக்கி, சுத்தப்படுத்தி வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற வரைக்கும் வறுத்துக்கோங்க. உளுந்து, மிளகாயை அரை டீஸ்பூன் எண்ணெய்ல சிவக்க வறுத்துக்கோங்க. பூண்டு, புளி, உப்பு, எள், உளுந்து, மிளகாய் எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து அரைச்செடுத்தா போதும், பொடி தயார்! புளிக்காத கெட்டித் தயிர்ல இதைக் கலந்து கம்பு ரொட்டிக்கு தொட்டுகிட்டா.. அட, அட.. அதை நெனச்சாலே எச்சில் ஊறுதே!

இதே மாதிரி கட்டித் தயிர்ல வெல்லத்தைக் கலந்து கம்பு ரொட்டியை அதுல முக்கியெடுத்து கூடவே எள்ளுப் பொடியை தொட்டு சாப்பிட்டுப் பாருங்க. ‘தித்திக்குதே..’னு குஷியாயிடுவீங்க.

காராமணி கீரைத்தண்டு குழம்பு

மணமும் ருசியும் அத்தனை பிரமாதமா இருக்கற இந்தக் குழம்பை கிராமத்து ஆளுங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க.

அரை கப் காராமணியை சுத்தம் பண்ணி, வெறும் வடை சட்டில போட்டு வாசனை வர்ற அளவுக்கு வறுத்து, அளவான உப்பு சேர்த்து வேக வையுங்க. தண்டங்கீரையை ரெண்டு பெரிய தண்டா எடுத்து பொடியா நறுக்கி, உப்பு போட்டு வேகவையுங்க.

2 பெரிய வெங்காயம், 4 தக்காளி இதை பொடியா நறுக்கிக் கங்க. ரெண்டு முழு பூண்டை எடுத்து உரிச்சு வைங்க. வடை சட்டில 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை காயவெச்சு, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, அரை டீஸ்பூன் வெந்தயம் இதையெல்லாம் தாளிச்சு, பூண்டு, வெங்காயத்தை வதக்குங்க. வதங்கினதும் தக்காளியச் சேர்த்து வதக்கணும். காராமணி, கீரை இதையெல்லாம் வேக வெச்ச தண்ணி இருக்குமில்லையா அதுல கொஞ்சமா புளியை ஊறவெச்சு கரைச்சு வடிகட்டி அந்த கரைசலை தக்காளியோட சேர்த்துடுங்க. அதோட ரெண்டரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், கொஞ்சம் உப்பு போட்டு கொதிக்க வைங்க. பச்சை வாடை போனதும் மூணு பல் பூண்டை நசுக்கி குழம்புல போடுங்க. கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் போட்டு மூடி வெச்சு அடுப்பை அணைச்சுடுங்க.

கமகமக்கற இந்த காராமணிக்குழம்பு இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாடு எல்லாத்துக்கும் ரொம்ப அருமையா இருக்கும்.

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்


சோளச்சோறு

பேரைச் சொன்னாலே சொக்கிப்போவாங்க கிராமத்து ஆளுங்க. அத்தனை சுவையான இந்த தானியத்தை நகர வாசிகள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியலை. இதுவரைக்கும் இல்லாட்டியும் பரவாயில்லை, இந்த வெயில் நேரத்துல குளிர்ச்சியான பொருட்களாத் தேடிப் பிடிச்சுச் சாப்பிடுவீங்கள்ல.. அதுல ஒண்ணா இந்தச் சோளத்தையும் சேர்த்துக்குங்க.

உடம்புக்குச் சத்தும் குளுமையும் தர்ற இந்தச் சோளத்தைச் சோறா ஆக்கறது எப்படிங்கறதைச் சொல்றேன். கூடவே குழம்பும் துவையலும்கூட இருக்கு. நான் சொல்ற பக்குவப் பிரகாரம் செஞ்சு சாப்பிட்டு, அப்புறம் சொல்லுங்க எப்படி இருக்குங்கறதை…

ஒரு கப் அளவுக்கு சோளத்தை எடுத்து அதுல ஒரு கை அளவுக்குத் தண்ணி தெளிச்சுப் பிசறி, இறுக்கமா அமுக்கி வைங்க. பத்து நிமிஷம் அப்படியே இருக்கணும். அப்புறமா அதை உரல்ல போட்டுக் குத்தணும். சோளம் உடைஞ்சுடாதபடிக்கு, பார்த்துப் பக்குவமா இடிக்கணும். உடைஞ்சுட்டா, சோறாக்கும்போது கஞ்சி சுத்துன மாதிரி கொஞ்சம் குழைஞ்சு போயிடும்.

இடிச்சு எடுத்த சோளத்தை முறத்துல போட்டு உமி போகப் புடைச்சு எடுங்க. அதுல மறுபடி ஒரு கைப்பிடி தண்ணியத் தெளிச்சுப் பிசறி அமுக்கி வைங்க. பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் அதை உரல்ல போட்டு இடிச்சு, புடைச்சு, உமியைச் சுத்தமா நீக்கிடணும்.

அஞ்சு கப் தண்ணியக் கொதிக்கவெச்சு அதுல சுத்தம் பண்ணின சோளத்தைப் போடுங்க. பத்து நிமிஷத்துக்கு தீ நல்லா எரியட்டும். அப்புறமா தீயைக் குறைச்சுடுங்க. தண்ணி வத்திப்போய் சோளம் மெத்துமெத்துனு வேகற வரைக்கும் கிளறணும். வெந்ததும் தேவையான உப்புப் போட்டு இன்னும் பத்து நிமிஷம் அடுப்புல வெச்சுக் கிளறி இறக்குங்க. சோளச்சோறு தயார்.

சூட்டோட அப்பவேவும் சாப்பிடலாம். ஆறவெச்சு, சின்னச்சின்ன உருண்டைகளா உருட்டி, தண்ணில ஊறப்போட்டு மறுநாள் வரைக்கும் வெச்சிருந்தும் சாப்பிடலாம்.

குட்டிப்பசங்களுக்கு விருப்பமானதா மாத்தணும்னா சோளச் சோத்துல பால், நெய், சர்க்கரைச் சேர்த்துக் கொடுங்க. சத்தமில்லாம ஒரு கட்டு கட்டுவாங்க..!

——————————————————————————————————

சுக்கு மோர்க்குழம்பு

ஒரு டீஸ்பூன் பச்சரிசி, ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு… ரெண்டையும் தண்ணில அரை மணி நேரம் ஊற வைங்க. ஊறினதும், தண்ணிய வடிச்சுட்டு, அரை டீஸ்பூன் சீரகம், ஆறு பச்சை மிளகாய், நாலு சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல், சின்ன துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் இதையெல்லாம் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டு நைஸா அரைச்செடுங்க.

லேசா புளிச்ச, கெட்டித் தயிரை ஒரு கப் அளவுக்கு எடுத்து, அதுல ஒரு கப் தண்ணி, கொஞ்சம் உப்பு, அரைச்ச விழுது சேர்த்துக் கரைச்சு வைங்க.

வடை சட்டில ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊத்தி, அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, கொஞ்சம் கறிவேப்பிலை, காய்ஞ்ச மிளகாய் 1 இதையெல்லாம் போட்டுத் தாளிச்சு, கரைச்சு வெச்சிருக்கற மோர்க் கரைசலை ஊத்தி, பத்து நிமிஷத்துக்குக் கைவிடாம கிளறுங்க. பச்சை வாடை போய் நல்ல மணம் வந்ததும் இறக்கிடுங்க.

சுக்கு மணத்தோட கமகமக்கற இந்தக் குழம்பை சூடான சோளச்சோறுல ஊத்திச் சாப் பிட்டா.. அட அட..! அந்த ருசியே தனிதான்.

——————————————————————————–

கொள்ளு துவையல்

கால் கப் கொள்ளை எடுத்துக்குங்க. வடை சட்டியச் சூடாக்கி அதுல கொள்ளைப் போட்டு நல்லா பொரிஞ்சு மொறுமொறுப்பாகி, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து எடுத்து வைங்க. அதே வடை சட்டில 2 டீஸ்பூன் எண்ணெயை ஊத்தி காய்ஞ்சதும் மிளகாய் வத்தல் 3, 2 டீஸ்பூன் உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுங்க.

வறுத்து வெச்ச மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறினதும் அதோட, 2 டீஸ்பூன் தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, 2 பல் பூண்டு, தேவையான உப்பு எல்லாத்தையும் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைச்செடுங்க.

‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ம்பாங்க. கொழுப்பைக் கரைச்சு ஊளைச் சதையைக் குறைக்கற கொள்ளு, துவையலா மாறும்போது ருசி அருமையா இருக்கும். தண்ணில ஊற வெச்ச சோளச்சோற, மோர் இல்லேனா தண்ணி விட்டு கரைச்சு, கொள்ளுத் துவையலோட சாப்பிட்டா, ‘‘இந்த வெயிலுக்கு இதானே அமிர்தம்’’னு மனசாரச் சொல்லுவீங்க..

நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்

நன்றி:-அ.வி

=======================================================================

மற்ற சமையல் படைப்புக்கள்

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்

30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்

கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி

30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்

PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்

PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்

PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்

PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்

பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை