தொகுப்பு
எல்லைக் கோடு – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
எல்லையிலா அருளால் காக்கும்
…..இறையவன் வகுத்த சட்டம்
எல்லைக்கோ டென்று பார்த்து
…..இணங்கிநீ வாழ்தல் திட்டம்
தொல்லைகளும் வரத்தான் செய்யும்
…தொடர்ந்துநீ முன்னே செல்வாய்
இல்லையென்றால் உழைப்பில் தேக்கம்.
…இருப்பதைக் கண்டு கொள்வாய்!
அளவுக்கு மிஞ்சும் போதில்
…அமுதமும் நஞ்சாய்ப் போகும்
பிளவுக்கு வழியைக் காட்டும்
….பிறர்மனம் புண்ணாய்ப் போகும்
அளவுக்கு மேலே காட்டும்
..அக்கறைக் கூடத் தொல்லை
களவில்லாக் கற்பைப் பேண
…காண்பது பண்பின் எல்லை!
நாட்டிலுள்ள எல்லைக் கோடு
…..நல்லவர் மதிக்கும் கோடு
வீட்டிலுள்ள எல்லைக் கோடு
…விரும்புவர் அண்டை வீடு
பாட்டிலுள்ள யாப்பின் கோடு
….பாடலின் அமைப்பைக் காட்டும்
வாட்டிவிடும் வறுமைக் கோடு
…வறுமையின் எல்லைக் கோடு!
ஆட்டத்தில் எல்லைக் கோடு
…..ஆட்டமும் சிறக்கச் செய்யும்
நாட்டத்தில் எல்லைக் கோடு
…நாளையை எண்ணிப் பார்க்கும்
நோட்டத்தில் எல்லைக் கோடு
..நோவினை இல்லாக் கற்பு
கூட்டத்தில் எல்லைக் கோடு
…கூச்சலைத் தடுத்து வைக்கும்!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
-
- அணைக்கட்டு
- அப்பா
- அமலால் நிறையும் ரமலான்
- ஆர்ப்பரிக்கும் கடலா? ஆள்பறிக்கும் கடலா??
- இணயதளம் ஓர் இனியதளம்
- இயற்கையெனும் இளையகன்னி
- இறையற்புதம்
- உறவுகள்
- ஊனம்
- எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்
- ஏமாற்று உலகம்
- கடலும்; படகும்
- காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்
- சோம்பலை விலக்கு! வெற்றியே இலக்கு!!
- தமிழாய் தமிழுக்காய்
- தாய்
- தாய் கவிதையின் தொடர்ச்சி
- பயணம்
- பாலையான வாழ்க்கை
- புள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி
- மவுனம் களைந்தால்…
- முயன்றால் வெல்லலாம்
- முரண்பாடுகளை முறியடிப்போம்
- ரமளானே வருகவே
- வண்டுதிர்க்கும் பூக்கள்
- வாழ்க்கை
- வாழ்க்கை எனும் பாடம்
- விதைகள்
- வேடிக்கை மனிதர்கள்
ஆடையில் அழகு! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 29 March 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை
இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்
கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.
நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
அருள் தரும் விளைநிலம்! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
நன்றி:- தினமணி 08 Feb 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
பர்தா – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
வாய்மையான வாக்குறுதி! – மு.அ. அபுல்அமீன் நாகூர்
சத்தியம் செய்த பின் அந்த சத்தியத்தை இதய சுத்தியோடு சுத்தமாக நிறைவேற்ற வேண்டும்.
இதனைக் குர்ஆனின் 16-92 வது வசனம் “”ஒருத்தியைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். அவள் உறுதியாக தான் நூற்ற நூலைத் துண்டு துண்டாக முறித்து விடுகிறாள். ஒரு கூட்டத்தினரைவிட மற்றொரு கூட்டம் மிக்க வளர்ச்சியுற்று இருப்பதற்காக உங்களுக்கிடையில் உங்களுடைய சத்தியத்தைத் தந்திரப் பொருளாக ஆக்குகின்றீர்கள். இதனைக் கொண்டு அல்லாஹ் உங்களை நிச்சயம் சோதிப்பான். நீங்கள் எதில் வேற்றுமைப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை மறுமை நாளில் அவன் நிச்சயமாக உங்களுக்கு விளக்கிக் கண்டிப்பான்“” என்று எச்சரிக்கிறது.
நன்றி:- தினமணி 02 Nov 2012 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
சென்றுவா ரமலானே! கொண்டுசேர் அமல்களை!! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
புடமிடு தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
யாருக்குப் பெருநாள்? – கலீல் அஹ்மத் பாகவீ
- உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
- பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
- காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
- குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்…
- என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
- புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
- என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
- தன் ஆணவத்தை அடக்கி
- அலட்சியப் போக்கை அழித்து
- பகலில் பட்டினி கிடந்து
- இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
- பசி, தாகத்தால் இச்சையை வென்று
- இறை கடமைகளை நிறைவேற்றி
- தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
- வறியவர்களின் தேவைகளை கவனித்து
- பட்டினியையும், பசியையும் அடக்கி,
- நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
- ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
- ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
- இறைவனுக்காக நோன்பிருந்த
- இறைமறையை ஓதி உணர்ந்த
- இறைகடமைகளை நிறைவு செய்த
- ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
- கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
- சிறியவர்களை போற்றி – பாராட்டி
- பெரியவர்களை மதித்து நடந்து
- அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
- செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
- இனி பாவமே செய்யமாட்டேன்
- என்ற உறுதி கொண்ட
- எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
- எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
- எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
- எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
- எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
- என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
நன்றி:- – பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,
பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்! – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்
ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!
பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
காதுகளில் சொட்டுந்தேன்!
பகைவனான ஷைத்தானைப்
பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
தொடரவும்தான் நெறியளித்தாய்!
இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
அழைத்திடுமுன் வழியாமே!
நூற்களும்தான் நண்பனாம்
நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
நண்பனாக வழங்கினாயே!
இம்மாதம் மறையோதி
இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
இனிப்பாகத் தந்தாயே
புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
தினந்தொழுத தராவிஹூமே!