தொகுப்பு
இணைந்து வாழ்வதே சிறந்தது! மு.அ. அபுல் அமீன்
கருணை காட்டவில்லை. கடுமையாய் வெறுத்தாள். அவர்களிடையே கசப்பு முற்றி இசைவான வாழ்விற்கு வாய்ப்பில்லை என்றானது. ஜமீலா, நபிகள் பெருமானார் அவர்களிடம் அவரின் நிலையை எடுத்துரைத்தார். பெருமானார் அவர்கள் தாபித்தை அழைத்து விசாரித்தார்கள். தாபித் தன் உயிரினும் மேலாய் தனது மனைவி ஜமீலாவை உவப்பதாய் உளமார நேசிப்பதாய் உறுதியாகக் கூறினார். ஜமீலாவோ தாபித் கூறுவது முற்றிலும் உண்மை என்றாலும் என்னால் அவரை நேசிக்க முடியவில்லை. நேசமில்லாமல் பொய் வேஷமிட்டு வாழ விரும்பவில்லை என்றார்.
நன்றி:- தினமணி 22 Feb 2013 வெள்ளிமணி
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்
பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.
அதனால், கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.
பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர்.
பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள். ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள்.
அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம். 26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.
இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது. அதில் உள்ள சாதக – பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது. பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.
நன்றி:- http://tamil.webdunia.com/
நல்ல குழந்தைகளை உருவாக்க 12 வழிமுறைகள்
- இல்லற வாழ்வில் புரியாத பாஷை
- கணவரை மகிழ்விப்பது எப்படி?
- கற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று?
- நல்ல மனைவி
- மணவாழ்வில் மகிழ்வுற..
- மனைவிக்கு மட்டுமா உபதேசம்?
- மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்
- மனைவியைத் தண்டித்தல்
அண்மைய பின்னூட்டங்கள்