தொகுப்பு

Posts Tagged ‘மனநல மருத்துவர்’

நாட்டு வைத்தியம் – மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்

ஒக்ரோபர் 15, 2010 2 பின்னூட்டங்கள்

ன்னிக்கு தேதியில புள்ள பொறக்க வைக்கற ஆசுபத்திரிங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தியாகிட்டே இருக்கு. ஆனா, அப்பவெல்லாம் இப்படி ஆசுபத்திரியைத் தேடி யாரும் ஓடினது இல்ல… அரசமரம், ஆலமரம்னு சுத்தி வந்தே குணம் கண்டவங்கதான் ஜாஸ்தி! அதனால, இந்தத் தடவை மலட்டுத்தன்மையைப் போக்கற மர இலைங்க, பழங்கள்னு ஒங்களுக்குச் சொல்லப்போறேன்!


‘ஆலங்குச்சியால பல் விளக்கினா… பல்லுக்கு பலம் கிடைக்கும்’னு சொல்லக் கேட்டிருப்பீங்க. மலட்டுத்தன்மையைப் போக்குற குணமும் அதுகிட்ட இருக்கு துங்கோ! ஆலமர இளம் இலை (தளிர்), விழுது, விதை, மொக்குனு இதுல ஏதாவது ஒண்ணை எடுத்து, மையா அரைச்சி, பால்ல கலந்து சர்க்கரை சேர்த்துக் குடிச்சுட்டு வந்தீங்கனா… மலட்டுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா விலகும். ஆண், பெண் ரெண்டு பேருக்குமே இது பொருந்தும்.

‘அரசனை நம்பி புருசனை கைவிட்டாளாம்’னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்களே. இதுக்கு யார்கிட்டயாவது பொழிப்புரை கேட்டுப் பாருங்க… தப்புத் தப்பாத்தான் சொல்லுவாங்க. இங்க ‘அரசன்’னு சொன்னது அரச மரத்தைத்தான். குழந்தை வேணுங்கிற பொண்ணுங்க, கோயிலைச் சுத்தி வர்றப்ப… அங்க இருக்குற அரச மரத்தையும் சுத்தி வருவாங்க. அந்த மரத்திலிருந்து வெளி யாகுற காத்து, அவங்களோட கருப்பை வியாதிகளைக் குணப்படுத்தி, தாயாகுற அந்தஸ்தை தரும்.

அரச மரத்தோட பழங்கள நல்லா காய வச்சி, பவுடராக்கி 7 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தா… அது ஆணாயிருந்தாலும், பொண்ணாயிருந்தாலும் மலட்டுத்தன்மையைப் போக்கிடும்.

இலந்தை இலை ஒரு கைப்பிடி, மிளகு 6 எண்ணிக்கை, பூண்டு 4 பல் எடுத்து மையா அரைச்சிக்கோங்க. மாதவிடாய் வந்த முதல் நாளும், ரெண்டாவது நாளும் வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வர்றதன் மூலமா… குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பிருக்கு.

இன்னொரு வைத்தியமும் சொல்றேன். வேப்பிலையை 100 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சி, மாதவிடாய் வந்த நாள்ல இருந்து 6 நாளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். அதுக்கு அப்புறமா… அரசு, மா – இது ரெண்டு இலைகளையும் தலா 50 கிராம் எடுத்து அரைச்சி, வெறும் வயித்துல ஒன்பது நாளைக்குச் சாப்பிட்டு வந்தா… கர்ப்பப்பையில இருக்குற அழுக்கு, புழு, பூச்சி எல்லாம் ஒழிஞ்சி போயிரும். சீக்கிரமா கர்ப்பம் தரிக்கும்.

இந்த மருந்தை சாப்பிடுறப்ப… கொத்தமல்லி இலை, ராகி சாப்பிட்டு வந்தா… நல்லது. ராத்திரி சாப்பாட்டை கொறைச்சிக்கணும்கறதும் முக்கியம்!

நன்றி:- தொகுப்பு: எம்.மரிய பெல்சின்

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்பிரிவுகள்:நாட்டு வைத்தியம், மலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம் குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பகுதி-15 டாக்டரிடம் கேளுங்கள்

ஒக்ரோபர் 12, 2010 2 பின்னூட்டங்கள்

ஓய்வுக்குப் பின் வரும் உளைச்சல்… உஷார் உஷார்!’
“என் அப்பா, கௌரவமான அரசு உயர் பதவியில் 36 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இது நாள் வரை உடல் நலப் பிரச்னைகள் பற்றி அலட்டிக் கொள்ளாதவர், இப்போது ‘அது பண்ணுகிறது… இது படுத்துகிறது’ என்று களேபரம் செய்கிறார். ஏராளமான டெஸ்டுகளுக்குப் பிறகு, ‘உடல்நல பாதிப்பு ஒன்றுமில்லை’ என்று தெரிந்தபோதும், நம்ப மறுக்கிறார். என்ன பிரச்னை அவருக்கு?”

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

“வருடக்கணக்கில் பதவி, அந்தஸ்து, மரியாதை என்றே வளைய வந்தவர்கள், அதை இழக்கும்போது ஏற்படும் இயல்பான மனநல பாதிப்புதான் இது. ஓல்ட் ஏஜ் டிப்ரஷன் (Old Age Depression) எனப்படும் இந்த வயதானோரின் மனக்கவலை, அவர்களை பீடித்த அல்லது அப்படி அவர்களாக கற்பித்துக் கொள்ளும் வெறுமையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களால் உணரப்படுகிறது.

இதுவே… மத்திம வயதுடையவர்கள் தங்களது உடல் அவயங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பீதியைக் கிளப்பி, அவற்றைத் தீர்மானமாக நம்பும் மனநல பாதிப்பை, சொமோட்டோபோஃர்ம் டிஸ்ஆர்டர் (Somatoform Disorder) என்கிறோம்.

நம்முடைய கலாசாரத்தில் மனநலப் பிரச்னைகளை உள்ளது உள்ளபடியே சொல்லும் வழக்கம் ஏனோ கிடையாது. சம்பந்தப்பட்டவர்கள் அவற்றை உடல் நலப் பிரச்னைகளாகவே அடையாளம் காண்பார்கள். அதீத மனக்கவலை, சிறிய வேலைக்குக்கூட களைப்பு, எதிலும் ஈடுபாடற்ற போக்கு, கவனக்குறைவு, தூக்கமின்மை, பசியின்மை, தன்னம்பிக்கையின்மை எனத் தொடரும் இவர்களது பாதிப்புகளின் உச்சமாக தற்கொலை முயற்சியும்கூட இருக்கும். இவர்களுக்கு ‘சைக்கோ தெரபி’ எனப்படும் மனநல சிகிச்சைதான் ஒரே வழி.

மரபுசார் காரணங்கள், தனிப்பட்ட ஆளுமை சார்புள்ள காரணங்கள், மூளையில் உள்ள முக்கிய ரசாயனங்களில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் என பல அடிப்படையான விஷயங்களோடு சம்மந்தப்பட்டவரின் குடும்பச் சூழல், உண்மையான உடல்நிலை இவற்றையும் பரிசீலித்து மனநல மருத்துவர் சிகிச்சை அளிப்பார். நான்கு முதல் எட்டு வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். இதற்கு குடும்பத்தாரின் பொறுமையான அணுகுமுறை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர்… இசை கேட்பது, வளர்ப்பு பிராணிகள், நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, தனக்குப் பிடித்த பகுதி நேர பணியைச் செய்வது, விரும்பிய பயணங்களை மேற்கொள்வது, பயனுள்ள பொழுதுபோக்கு, பொதுநலன் சார்ந்த சேவைகள் உள்ளிட்ட தன் மதிப்பை உயர்த்தும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம். மனநலத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு போன்றவற்றைத் தீர்ப்பது, புதிதாக எதையேனும் கற்பது, பிறருக்கு சொல்லித் தருவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

பொதுவாக, ஓய்வுக் காலத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள இளம்வயதிலிருந்தே சேமிப்பதுபோல, மனரீதியாகவும் தயாராகும் பக்குவம் இருப்பின்… இம்மாதிரி பிரச்னை எழ வாய்ப்பிருக்காது!”

‘அடுப்பங்கரை புகை, நெடிகூட ஆஸ்துமாவுக்கு அழைப்பு வைக்கலாம்!’

“நற்பத்திரண்டு வயதாகும் எனக்கு வருடத்தின் மற்ற நாட்களில் வரும் சாதாரண சளிப் பிரச்னை, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் விபரீதமாகி விடுகிறது. இந்தக் காலத்தில் சளி தீர எந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் அது உள்ளுக்குள் சளியை இறுகச் செய்து, சதா செருமல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறுகிறது. இது சாதாரணமானதா… இல்லை, விபரீதமானதா?”

டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

“உங்களது அறிகுறிகள் ஆஸ்துமாவை அடையாளம் காட்டுகின்றன. ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவர்கள் பாதிப்பின் காலத்தைப் பொறுத்து, ஒரு வருடத்தின் சீதோஷண மாற்றம் (Seasonal Variation), ஒரு நாளின் சீதோஷண மாற்றம் (Diurnal Variation) என்று இரண்டு வகையில் அடங்குவார்கள். உங்களுடையது முதலாவதாகும். ஆஸ்துமாவின் பிற அறிகுறிகளான மூச்சிரைப்பு மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பினால் வரும் விசில் சத்தம், நெஞ்சு இறுக்கம் ஆகியவை உங்களுக்கு இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிலருக்கு சிறுவயதில் ஆஸ்துமா இருந்து இடையில் அடையாளம் காட்டாது இருந்து பின்னாளில் தீவிரமாக வெளிப்படுவதும் உண்டு. கர்ப்பக் காலத்தின்போது சர்க்கரை நோய் பாதிப்பது போல ஆஸ்துமாவும் பாதிப்பதுண்டு. சிலருக்கு பின்னாளிலும் அது சாவகாசமாக வளர்வதும் உண்டு. ஆஸ்துமாவை உறுதி செய்ய பி.எஃப்.டி. (PFT-Pulmonary Function Test) எனப்படும் நுரையீரல் செயல்பாட்டைக் கண்டு உணரும் பரிசோதனை மூலம் தெளிவு பெறலாம்.

அடையாளம் காணப்பட்ட ஆஸ்துமாவை குணப்படுத்துவதும் எளிது. மாத்திரைகள், இன்ஹேலர்கள், ஐ.வி. எனப்படும் நரம்பூசிகள், மூச்சை சீராக்கும் நெபுலைஸர்கள் போன்றவை நடைமுறையில் உதவுகின்றன. பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை காலத்தை தொடர வேண்டும்.

ஆஸ்துமா தவிர்த்தும், நுரையீரல் பாதிப்புக்கான பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. சி.ஓ.பி.டி. (COPD-Chronic Obstructive Pulmonary Disease) எனப்படும் மூச்சுக்குழாய் அடைப்பு நோய் இவற்றில் முக்கியமானது.

இவை மட்டுமல்லாது புகை பிடித்தலும் நுரையீரலை இரையாக்கும் பாதிப்புகளில் முதன்மையானது. சதா புகைவிடும் கணவரால் ‘பாஸிவ் ஸ்மோக்கிங்’ என்ற வகையில் மனைவி, குழந்தைகள் நுரையீரல் பாதிக்கப்படும் அபாயமுண்டு. அடுப்பங்கரை புகை மற்றும் நெடியும்கூட நாள் போக்கில் பெண்களின் நுரையீரல் திறனைப் பாதிக்கும்.

எனவே… அடுத்த சளி, இருமல் வரை காத்திராது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்!”

நன்றி:- டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நன்றி:-டாக்டர் மஞ்சு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்


பகுதி-10 டாக்டரிடம் கேளுங்கள்


பெற்றோர் நிச்சயித்த திருமணம் எங்களுடையது. கணவரின் படிப்பு, உத்யோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் திருப்தியடைந்த பின்னரே திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். ஆனால், மணமான இந்த எட்டு மாதங்களில் அவருக்கும் எனக்கும் கேரக்டர், ரசனை அனைத்துமே நேர்மாறானதாக இருப்பதாக உணர்கிறேன். குடும்பத்தின் சுமுகம் கெடாத வகையில் எனது தவிப்பை, எதிர்பார்ப்பை அவருக்குப் புரியவைப்பது எப்படி? அல்லது எனது எதிர்பார்ப்புகளைத் தவிர்ப்பது எப்படி?”

டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்:

“பெற்றோர் நிச்சயித்த திருமணங்கள் மட்டுமல்ல… காதல் திருமணங்களிலும் மணமான சில வருடங்களுக்கு கணவன் – மனைவி இருவரின் எதிர்பார்ப்புகளும் பரஸ்பரம் ஏமாற்றம் அடைவது இயல்புதான். இதை முதலில் நீங்கள் புரிந்து கொண்டால், சமூகத்தின் பொதுத்தன்மையில் உங்களது தனிப்பட்ட குடைச்சலாக நீங்கள் பதற்றப்படுவது சற்றே மட்டுப்படும்.

இப்பிரச்னையைப் பொறுத்தவரை, சொல்வதற்கு எளிதானதும் நடைமுறையில் சற்றுக் கடினமானதுமான தீர்வு… அட்ஜஸ்ட் செய்து போவதுதான். விட்டுக் கொடுக்கும்போது இழப்பதைவிட பெறுவதே அதிகமாக இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர முயலுங்கள். காலக்கெடுவை நெருக்காது, உங்களவரை புரிந்து கொள்வதையும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களை அறிவதையும் ஒரு புதிர் அவிழ்க்கும் ஆர்வத்தோடு மேற்கொண்டு பாருங்கள்.

அதேபோல, ‘உங்கள் கணவரின் ஆர்வங்கள், ரசனைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நீங்கள் இருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு நேர்மையாக விடை காண முயலுங்கள். அவரது எதிர்பார்ப்புகளை நீங்கள் அறிய முற்படும்போது, தானாக அவரும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைவார். இது ஒரு ரேடியோ ட்யூன் செய்யப்படுவதுபோல இல்லறத்தில் இயல்பாக மலரும்.

எல்லாவற்றையும்விட, நீங்கள் இருவரும் மனம் விட்டுப் பேசுவது முழுமையாகக் கைகொடுக்கும். ஒருவேளை உங்களின் இந்த எல்லா முயற்சிகளும் பலன் தரத் தவறினால், குடும்ப நல ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் உங்கள் எதிர்பார்ப்புகளை, சங்கடங்களை எல்லாம் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பக்குவத்துடன் அடையாளம் காட்டலாம்.

‘எல்லா விஷயங்கள்லயும் அவரும் நானும் நேரெதிர்…’ என்று கவலைப்படும் பெண்கள், இறுதியாக இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘ஐடியல் பார்ட்னர்கள்’ சினிமாவில், சீரியலில் மட்டுமே அமைவார்கள். நடைமுறையில், ஒருமித்த ரசனை உள்ள தம்பதியரைவிட வெவ்வேறு தளங்களில் ரசனை உள்ளவர்களின் தாம்பத்யமே வெகுகாலத்துக்கு சுவாரஸ்யமளிக்கும். ஆம்… ஒருமித்த ரசனைகள் நாள்போக்கில் புதுமையின்றி போரடித்துப் போகலாம். எனவே, புலம்பலை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் புரிதலை துரிதமாக்குவதன் மூலம் உங்களை செம்மையான வாழ்க்கைத் துணையாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்!”

‘கிண்டலுக்கு ஆளாகும் கீச்சுக் குரல்… கவர்ச்சிக் குரலாக வழி என்ன?’

“என் மகள் சிறுவயதிலிருந்தே சற்று கீச்சுக்குரலாக பேசுவாள். இப்போது அவள் பணியாற்றும் அலுவலகத்தில் அது பரிகாசத்துக்கு உரியதாகியிருக்கிறது. ‘டீம் லீடர்’ பொறுப்பில் இருக்கும் அவளுக்கு குரலில் கனமும் கச்சிதமும் அவசியம் என்று மேலதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். குரல் மேம்பட மருத்துவத் தீர்வு இருக்கிறதா?”

டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

“உங்கள் மகளின் பிரச்னை, பிறவிக்கோளாறா… இல்லை, இடையில் வந்ததா என்ற நீங்கள் குறிப்பிடவில்லை. எனினும் இதுபோன்ற குரல்நாண் தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் ‘ஸ்ப்ரோபோஸ்கோப்பி’ (Sproboscopy) என்ற சிறிய பரிசோதனை மூலம் அடையாளம் காணலாம். தேவையெனில், போனோ சர்ஜரி (Phono surgery) என்ற அறுவை சிகிச்சை மூலமும், அதைத் தொடர்ந்த ஸ்பீச் தெரபி மூலமும் சராசரி குரலுக்கு முயற்சிக்கலாம். இந்த சிகிச்சை வழிமுறைகள் பெரும்பாலும் ஆண் குரல் வாய்க்கப் பெற்ற பெண்களுக்கு, சராசரி குரலை மீட்க மேற்கொள்ளப்படுவதைப் போன்றது. எனவே, உடனடியாக ஒரு காது, மூக்கு, தொண்டை மருத்துவர் உதவியுடன் பிரச்னைக்கான மருத்துவத் தீர்வை அணுகுங்கள்.

சிறப்பான பேச்சு என்பதன் பின்னணியில் குரல்நாண் அதிர்வு, நாக்கு சுழற்சி, உதடுகளின் ஒத்துழைப்பு, மொழியின் ஆளுமை, சொற்பிரயோக பயிற்சி என பல அம்சங்கள் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குரல் தொடர்பான மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல்… உள்ளார்ந்த ஆளுமை, தலைமைப் பண்பில் துடிப்பு இவற்றையும் தேவையைப் பொறுத்து தனிப்பயிற்சிகள் மூலம் உங்கள் மகளுக்குக் கொடுப்பதன் மூலம், அவரது குரலில் உரிய மாற்றத்தைப் கொண்டுவர முயற்சி எடுங்கள்.

நன்றி:-

டாக்டர். டாக்டர் எஸ்.ஹர்ஷவர்தன், மனநல மருத்துவர், வேலூர்:

டாக்டர் ஆர்.சையீத், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சி:

நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-08 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-09 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்


‘கர்ப்பிணிக்கு அடிக்கடி ஸ்கேன் செய்வது ஆபத்தானதா?’

“தலைப்பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் மருமகளுக்கு மாதாமாதம் செக்கப் செல்லும்போதெல்லாம் வயிற்றை ஸ்கேன் செய்கிறார் மருத்துவர். ‘அடிக்கடி ஸ்கேன் செய்தால் வயிற்றில் வளரும் சிசுவுக்கு ஆகாது, காது கேட்கும் திறன், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்ட உள்ளுறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படும்’ என்று சிலர் எச்சரிக்கிறார்கள். தெளிவுபடுத்துங்களேன்…”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

“பொதுவாக, கர்ப்பம் தரித்ததிலிருந்து டெலிவரி வரை நான்கு ஸ்கேன் பரிசோதனைகள் போதுமானது. ஆறாவது வாரத்தில் (ஒன்றரை மாதம்) மேற்கொள்ளப்படும் முதலாவது ஸ்கேன், கருத்தரிப்பை உறுதி செய்யவும், தரித்த கர்ப்பம் கர்ப்பப்பைக்கு உள்ளா, வெளியிலா என்று அறியவும், கருவின் துடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

இரண்டாவது ஸ்கேன் 11 – 14 வாரங்களுக் கிடையே (மூன்று – மூன்றரை மாதங்கள்) மேற்கொள்ளப் படுகிறது. குரோமோசோம் கோளாறினால் மூளைவளர்ச்சி குன்றி உருவாகும் ‘டவுண் சின்ட்ரோம்’ பாதிப்பு இருப்பின், இந்த ஸ்கேனில் கண்டறியப்படும்.

வாரங்களுக்கிடையே (நாலரை மாதங்கள் – ஆறு மாதங்கள்) செய்யப்படும் மூன்றாவது ஸ்கேனில் தண்டுவடம், இதயக்கோளாறு, தாய்-சேய் இடையேயான சீரான ரத்த ஓட்டம் போன்றவற்றை தெளிவுபடுத்திக் கொள்வார் மருத்துவர்.நான்காவது ஸ்கேன் 36-வது வாரத்தில் (ஒன்பதாவது மாதம்) செய்யப்படுகிறது. குழந்தையின் பொசிஷன், தாய்-சேய் இணைப்புத் திசுவான பிளசான்டாவின் நிலை, பனிக்குட நீரளவு, குழந்தையின் வேறுபட்ட அசைவுகள் இவற்றை ஆராய உதவுவதோடு டெலிவரி தினத்தையும், நார்மலா அல்லது சிசேரியனா என்பதையும் முடிவு செய்யவும் பேருதவியாக இருக்கும்.

கருவுற்ற தாய்க்கு பி.பி., சுகர் போன்ற பிரச்னைகள் இருப்பின், மாதாமாதம் ஸ்கேன் பார்த்தாக வேண்டும் (உங்கள் மருமகள், இந்த வகையில் இருக்கலாம்). ஏனெனில், தாயின் இந்த இரண்டு கோளாறுகள் காரணமாக… பனிக்குடத்தில் நீர் வற்றுவது, சேய் வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இவற்றைக் கண்காணித்து சரியான மருத்துவத்தை பரிந்துரைக்க மாதம்தோறும் ஸ்கேன் அவசியமாகிறது.

ஸ்கேன் செய்வதால் காது பாதிக்கும், இதயம் பாதிக்கும் என்பதெல்லாம் செவிவழியாக சொல்லப்படுவதே தவிர, எந்த வகையிலும் நிரூபணமானதில்லை. எனினும், ஸ்கேன் பரிசோதனையில் சில கவனக்குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களது டாக்டரின் பரிந்துரை அன்றி நீங்களாக ஸ்கேன் பரிசோதனைக்கு முயலக்கூடாது. அல்ட்ரா சவுண்ட், சி.டி., எம்.ஆர்.ஐ., நியூக்ளியர் என பலவகையான ஸ்கேன்கள் மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மட்டுமே கர்ப்பவதிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட்டிலேயே நுணுக்கமாக மேற்கொள்ளப்படும் ‘டாப்ளர்’ பரிசோதனைகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை. அதேபோல, எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் போன்றவை கர்ப்பவதிகள் தவிர்க்க வேண்டியவையாகும்.

கர்ப்பிணி பெண்ணுக்கு… தலைவலி, வலிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் கோளாறு, வயிற்றில் கல், எலும்பு பிரச்னை என வேறுவிதமான கோளாறுகள் இருந்து, அவற்றுக்காக பலவகைப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், கர்ப்பத்தை பாதிக்காத வகையில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளும் பொருட்டு கர்ப்பம் பற்றிய எல்லா தகவல்களையும் மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிப்பது நல்லது. ஒருவேளை, சம்பந்தப்பட்டவர் உடலில் உலோகத்துண்டுகள் ஏற்கெனவே பொருத்தப் பட்டிருப்பின், அது குறித்தான விவரங்களையும் சொல்லிவிடவேண்டும். கர்ப்பிணி பெண்கள் இந்த விஷயத்தில் படுகவனமாக இருப்பது அவசியம்.”

பிள்ளையைப் பிடித்தாட்டும் ‘பிங்க்’ நிற மோகம்… தப்பிக்க என்ன வழி?’

“எட்டு வயதாகும் என் மகளுக்கு சிறு வயது முதலே பிங்க் நிறம் என்றால் உயிர். தான் உடுத்தும் உடை, விளையாடும் பொருட்கள், சுற்றுப்புறம் என அனைத்தும் பிங்க் நிறத்தில் இருந்தால் அவள் திருப்தியடைந்ததால், நாங்களும் அதை ஊக்குவித்தோம். ஆனால், அவளின் இந்த ஆசை வளர்ந்து இப்போது அவள் ‘பிங்க் மோகம்’ என்ற நிலையில் இருக்கிறாள். உதாரணத்துக்கு, பிங்க் நிற ஆடை அணிந்தவர்களையே நண்பர்களாக தேர்ந்தெடுக்கிறாள். அவள் மட்டுமல்லாது வீட்டிலிருக்கும் அனைவருமே பிங்க் நிறத்தில் உடுத்த வேண்டும் என்பதுடன், சுவர் வண்ணம், வீட்டுப் பொருட்கள் என அனைத்துமே பிங்க்-ஆக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறாள். இந்த பிங்க் மாயையில் இருந்து அவளை எப்படி மீட்பது?

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:

நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட எண்ணங்கள், விருப்பங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதும், அது செயலாக பரிணமிக்க முயல்வதும் இயல்புதான். ஆனால், அதுவே நம்முடைய, நம் சமூகத்துக்கான, தொழில் சார்ந்த கடமைகளை சரியாக செய்ய முடியாத வகையில் நம்மை ஆக்கிரமிக்கும்போது, அது ‘எண்ண சுழற்சி’ நோயாகிறது

அடிக்கடி கை கழுவுவது, பார்க்கும்போதெல்லாம் ஜன்னல் கம்பிகளை எண்ணுவது போன்றவை இதற்கு உதாரணங்கள். இப்படி மீண்டும் மீண்டும் தோன்றும் எண்ணங்கள் ஆரம்பத்தில் சந்தோஷத்தை தந்தாலும், நாளடைவில் கசந்துபோய் அதிலிருந்து விடுபட முனைந்தாலும் முடியாது தவிர்ப்பார்கள். அநேகமாக உங்கள் குழந்தையும் இந்த ‘எண்ண சுழற்சி’ நோயின் பிடியில் இருக்கலாம்.

குழந்தையின் சந்தோஷத்துக்காக இதுவரை பிங்க் நிறத்தை ஊக்குவித்தது போதும். இனி, அந்த வலையிலிருந்து அவள் மீள்வதற்கான முயற்சிகளை எடுங்கள். குழந்தையுடன் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள். அவர் உரிய கவுன்சிலிங் கொடுப்பார். பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து சிட்டிங்குகள் தேவைப்படும். குழந்தைக்கு மாத்திரைகள் இன்றி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியோடு, அதன் பிங்க் மோகத்தை படிப்படியாக குறைத்து, குணப்படுத்திவிடலாம். இரண்டு அல்லது மூன்று மாதத்தில் குழந்தை பிங்க் நிறத்தின் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவாள்.”

டாக்டர் டி.கதிரவன், ஸ்கேன் சிறப்பு மருத்துவர், பெரம்பலூர்:

டாக்டர் எஸ்.அருண்குமார், மனநல மருத்துவர், சென்னை:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-07 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்


டியர் டாக்டர்
இதுக்குப் போய் பயப்படலாமா?

‘‘நான் தினமும் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்கிறேன். இந்த பயிற்சியால் பெரிய பலன் இல்லை என்கிறார்களே… இது உண்மையா?’’

டாக்டர். கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மருத்துவ ஆலோசகர், சென்னை:

‘‘ஸ்கிப்பிங் செய்வதால் பலனில்லை என்று சொல்லிவிட முடியாது. மற்ற உடற்பயிற்சிகளோடு சேர்த்து, ஸ்கிப்பிங்கையும் சிறிது நேரம் செய்யலாம் . ஷூ அணிந்து காயர் மேட்டில் முறையானபடி ஸ்கிப் செய்ய வேண்டும். இதன்மூலம் கணுக்காலின் தசை நார்கள் வலுப்பெறும். ஸ்கிப்பிங்கை மட்டுமே முழு உடற்பயிற்சியாக நினைத்து அதிக நேரம் செய்தால், மூட்டுவலி வந்து அதற்கு மருத்துவம் பார்க்க நேரிடும். எந்த உடற்பயிற்சியையுமே, முறையாக, வல்லுநர் ஆலோசனை பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அளவுக்கு மீறினால் ஆபத்துதான்!’’

‘‘எனக்கு வயது 22. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு மாதமும் முறையாக மாதவிலக்கு ஆகும் நாள் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன், அந்த நாளைக் கணக்கிட்டு கோயிலுக்குச் செல்வதற்காக மாதவிலக்கு தள்ளிப் போவதற்கான மாத்திரையை சாப்பிட்டேன். அதன்பிறகு எனக்கு மாதவிலக்கு ஆகவேயில்லை. பரிசோதனையில் நான் கர்ப்பமாகி இருப்பது தெரிந்தது. இப்போது நான் ஆறுமாத கர்ப்பிணி.

மாதவிலக்கை தள்ளிப்போட நான் எடுத்துக் கொண்ட மாத்திரையால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமோ என்று என் மனது உறுத்துகிறது. இதைப் பற்றி விளக்குங்களேன்… ப்ளீஸ்!

அதோடு சமீபமாக எனக்கு தயிர் போன்று வெள்ளை அதிகமாக படுகிறது. மார்பகக் காம்புகளை அழுத்தினால் லேசாக வெள்ளை மற்றும் தண்ணீர் போன்று திரவம் கசிகிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?’’

டாக்டர். தமிழரசி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், நெய்வேலி:

‘‘கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்புள்ள பெண்கள் ‘குழந்தை வேண்டாம்’ என்கிற பட்சத்தில் மாதவிலக்கான பதினான்காம் நாள் முதல் தாம்பத்ய உறவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்களை தவிர்க்க முடியாது.

மாதவிலக்கு என்பது ஹார்மோன் சுழற்சியால் ஏற்படுவது. மாத விலக்கை தள்ளிப்போடும் மாத்திரைகளும் ஹார்மோன் மாத்திரைகள்தான். இவை ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும். வயிற்றில் கரு உருவானதுமே மாதவிலக்குக்கான வேலைகள் நின்றுபோய் விடும். ஆகவே மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரையின் செயல்பாடும், வீரியமும் வெகுவாகக் குறைந்துவிடும். இந்த மாத்திரையால் கருவுக்கு பெரிய அளவில் பாதிப்பு உண்டாகாது என்றாலும், பொதுவாகவே கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு மருந்து, மாத்திரை விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

கரு உருவான 20-ம் வாரத்தில் குழந்தையின் ஆரோக்கிய நிலையைக் கண்டறிய மூன்றாம் நிலை ஸ்கேன் சென்டரில் (3rd level Scan Centre) பரிசோதனை செய்துகொள்வது நல்லது (நீங்கள் இப்போதும் பரிசோதனை செய்யலாம். இருபதாவது வாரம் என்பது பிரச்னையைக் கண்டறியவும், இருந்தால் அதைச் சரி செய்யவும் சரியான காலகட்டம்).

உங்களுடைய அடுத்த பிரச்னையான வெள்ளைபடுதலுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. ரத்தசோகை, கர்ப்பப்பையை சுற்றி புண் இருத்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்… இதெல்லாம்கூட வெள்ளைபடுதலை உண்டாக்கும்.

தயிர் போல சற்று கெட்டியாக வெள்ளை பட்டு, கூடவே துர்நாற்றமும், அரிப்பும் இருந்தால் அது இன்ஃபெக்ஷனாக இருக்கும். இது கர்ப்ப காலத்தில் அதிகமாக வரும். இதனை மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் இதுபோல வெள்ளை படுதல் பிரச்னை ஏற்படும். அப்படி இருந்தால் அதனை பரிசோதித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

உங்களுடைய அடுத்த சந்தேகம் மார்பில் திரவக் கசிவு…

குழந்தை பிறந்த பிறகுதான் மார்பில் பால் சுரக்கும். ஆனால், பால் சுரப்பதற்கான வேலைகள் கருத்தரித்த காலகட்டத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன. கர்ப்ப காலத்தில் மார்பை அழுத்தக் கூடாது. அழுத்த அழுத்த, பால் உற்பத்தியை அதிகரிக்கிற புரோலேக்டின் என்கிற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் பால் சுரக்கும். மார்பை அழுத்தாதபோதும் தானாக பால் சுரந்தால், அது வயிற்றில் இருக்கும் கருவின் ஆரோக்கிய நிலையில் ஏதேனும் தடங்கல் என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். ஸ்கேன் பரிசோதனை மூலம் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம்.’’

‘‘என்னுடைய பையனுக்கு 19 வயதாகிறது. அவனை எட்டு மாத கர்ப்பமாக சுமந்தபோது, என் மீது திடீர் என்று ஒரு பெரிய பாம்பு உட்கார்ந்து விட்டது. நான் பயந்து பெரிதாக அலறிவிட்டேன். என் பையன் சாதாரண டெலிவரியில் பிறந்து, ரொம்பவும் துறுதுறுவென இருந்தான். 12\ம் வகுப்புவரை எந்தப் பாடத்திலும் பெயில் ஆனது இல்லை.

ஆனால், இப்போது கல்லூரியில் பி.காம் முதல் வருடம் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டான். அதிலிருந்து ‘என்னை யாரோ சில பெண்கள் எங்கு சென்றாலும் பின்தொடருகிறார்கள். செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ராத்திரி முழுவதும் வீட்டு முன் நின்று என்னைப் பார்க்கிறார்கள். நிர்வாணமாக என்னை ஹாலுக்கு வரச் சொல்கிறார்கள்’ என்று உளறுகிறான். ‘அந்தப் பெண்கள் என்னை கொன்று விடுவார்கள். உணவில் விஷம் கலந்து ஓட்டல்காரரிடம் சொல்லி கொடுக்கச் சொல்கிறார்கள்’ என்கிறான். ஏன் இப்படி? அவனால் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வாழ முடியுமா? ஆபீஸ் சென்று வர முடியுமா?’’

டாக்டர். வெங்கடேஸ்வரன், மனநல மருத்துவர், கோவை:

‘‘முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்பு கிறேன். இப்போது உங்கள் பையனுக்கு வந்திருக்கும் பிரச்னைக்கும் அவன் கர்ப்பத்தில் இருந்தபோது உங்கள்மேல் பாம்பு உட்கார்ந்ததற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழப்பிக் கொள்ள வேண்டாம்.

உங்கள் பையனுக்கு வந்திருக்கும் பிரச்னைக்கு ‘சைகோசிஸ்’ என்று பெயர். இந்த ‘சைகோசிஸ்’ இவர்களுக்குத்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெரிய நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்களுக்குக்கூட திடீரென்று வரும். பொதுவாக, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இது வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஜீன் கோளாறு காரணமாகவும், மனதை பாதிக்கக்கூடிய வகையில் நடைபெற்ற ஏதேனும் சம்பவம் காரணமாகவும்கூட இதுபோல் ஆகலாம்.

நரம்புகளுக்கிடையே செய்திகளை கடத்துகிற டோப்பமின் (dopamine) என்கிற கெமிக்கலில் ஏற்படும் கோளாறுதான் ‘சைகோசிஸ்‘ ஏற்படக் காரணம். அந்த கெமிக்கல்தான் தப்பு தப்பாக செய்திகளைக் கடத்தி உங்கள் மகனை இதுபோல் உணர வைக்கிறது. சைகோசிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இருக்கிற சூழ்நிலைக்குத் தக்கவாறு பிரச்னைகள் வரும். வெளிநாட்டில் வசிக்கும் சைகோசிஸ் நோயாளி ‘என்னை வேற்று கிரக மனிதர்கள் பின்தொடருகிறார்கள்’ என்பார். உங்கள் பையன் விடலைப் பருவத்தில் இருப்பதால் அவனுக்கு செக்ஸை அடிப்படையாகக் கொண்ட குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இது குணப்படுத்தக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. சிறந்த மனநல மருத்துவரின் துணையோடு தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையில் இருந்து படிப்படியாக விடுபடலாம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து முற்றிலும் குணமாக ஒன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை ஆகும். சிகிச்சையில் இருக்கும்போதே படிப்பைத் தொடரலாம். வேலைக்குப் போகலாம். ஆனால், திருமணத்தை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. அதுவும், பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முன்னரே பையனுக்கு ஏற்பட்ட பிரச்னை பற்றி எடுத்துச் சொல்லிவிடுதல் உத்தமம்!’’

‘‘எனக்கு 27 வயதாகிறது. நான் திருமணத்துக்கு முன், மூன்று வருடம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பவர் மெஷினில் வேலை செய்திருக்கிறேன். குழந்தை பிறந்தபிறகு செல்லவில்லை. மறுபடியும் நான்கு வருடங்கள் கழித்து வேலைக்குச் சென்றால் இடுப்பு, கை, கால் எல்லாம் பயங்கரமாக வலிக்கிறது. வேலையே செய்ய முடியவில்லை. ஏன் இப்படியானது? எலும்பு நன்றாக வலுவடைய என்ன உணவு சாப்பிட வேண்டும்? இதற்கு டாக்டரிடம் போனால் கரண்ட் வைக்கவேண்டி வருமா? பயமாக இருக்கிறது…’’

டாக்டர் சதீஷ், எலும்பு சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘உங்கள் வயதுக்கு மூட்டுத் தேய்மானமோ, எலும்புத் தேய்மானமோ ஏற்பட வாய்ப்பில்லை. உங்களால் வேலை செய்ய முடியாததற்கு, சத்துப் பற்றாக்குறையும் போதிய உடற்பயிற்சி இல்லாமையுமே காரணங்கள். பொதுவாக, பெண்களுக்கு நாற்பது வயதுக்குமேல் எலும்புகள் வலுவிழக்கும் என்பதால், இளம் வயதிலேயே கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பவர் மெஷினில் வேலை பார்ப்பதால், ஒரே பொசிஷனில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பீர்கள். இதனால் கழுத்துக்குச் செல்லும் நரம்புகளில் அழுத்தம் அதிகமாகி கை, கால், உடம்பு எல்லாம் வலி எடுக்கும்.

நீங்கள் பால், முட்டை போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதுடன், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உங்கள் பொசிஷனை மாற்றி, குனிந்து, நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். ஃபிஸியோதெரபிஸ்ட்டை கலந்தாலோசியுங்கள். தேவைப்பட்டால் கரண்ட் வைப்பதும் நல்லது தான். தொடர்ந்து ஐந்து நாட்கள் வைத்தால் போதுமானது. பயப்படத் தேவையில்லை. இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.’’

‘‘என் தோழிக்கு நேர்ந்த விசித்திரமான பிரச்னை இது. அவளுக்கு 37 வயது இருக்கும்போது ஒரு நாள் அவள் கணவருக்கு சாலை விபத்து ஏற்பட்டதாக ஒரு தகவல் வந்தது. அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அந்த நிமிடமே அவளுக்கு அளவற்ற ரத்தப் போக்கு ஏற்பட்டது. அன்று மாதவிலக்குக்கான நாளும் அல்ல. அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களாக அவளுக்கு மாதவிலக்கு ஏற்படவேயில்லை. அதிர்ச்சியில் அவளுக்கு மெனோபாஸ் ஆகிவிட்டதா? இதனால் ஏதேனும் பிரச்னைகள் வருமா? விளக்குங்கள் ப்ளீஸ்…’’

டாக்டர். ஞானசெளந்தரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், கன்யாகுமரி:

‘‘உங்கள் தோழிக்கு ஏற்பட்டுள்ளது ‘ப்ரிமெச்சூர் மெனோபாஸ்’. அதாவது, இளமையிலேயே ஏற்படுகிற மெனோபாஸ். மாதவிலக்கு முழுமையாக முற்றுப் பெறுவதற்குமுன்பே அதிர்ச்சியால் இப்படி நேர்ந்துள்ளது. இதனால் மெனோபாஸ் எனப்படுகிற மாதவிலக்கு முற்று நிகழாது. முட்டைப் பையில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் மெனோபாஸ் நிர்ணயிக்கப்படுகிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய மாதவிலக்கில் ஒழுங்கின்மை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முழுமையாக நின்றுவிடும். உங்கள் தோழி விஷயத்தில் அவருக்கு மாதவிலக்கு நின்ற காலகட்டத்தில் அவர் மெனோபாஸுக்கான, வயதையோ மெனோபாஸ் நிலையையோ அடைந்திருக்கவில்லை (பொதுவான மெனோபாஸ் வயது 48). உடனடியாக அவர் மருத்துவரை அணுகியிருக்க வேண்டும்.

இனியாவது தாமதிக்காமல் அவர் மருத்துவரிடம் செல்லவேண்டும். ஏனெனில், இதனால் அவர் உடலில் கால்சியச் சத்து வெகுவாகக் குறைந்திருக்க வாய்ப்புண்டு. அதை சரிப்படுத்தக்கூடிய மாத்திரைகள், உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். தினசரி ஒரு மணி நேர வேக நடைப் பயிற்சியும் அவசியம்.’’

நன்றி:- டாக்டர். கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மருத்துவ ஆலோசகர், சென்னை:

நன்றி:- டாக்டர். தமிழரசி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், நெய்வேலி:

நன்றி:- டாக்டர். வெங்கடேஸ்வரன், மனநல மருத்துவர், கோவை:

நன்றி:-  டாக்டர் சதீஷ், எலும்பு சிறப்பு மருத்துவர், மதுரை:

நன்றி:- டாக்டர். ஞானசெளந்தரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், கன்யாகுமரி:


நன்றி:- அ.வி

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

25.271139 55.307485

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்


‘‘எங்கள் வீட்டில் தங்கி இருந்தபடி வேலைக்குப் போய் வருகிறான் என் தம்பி. அவனுக்கு வயது 30. என் மகள்மீது (அவளுக்கு 20 வயது) அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந் தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். அதிலிருந்து மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் ஆகிவிட்டான்.

அவனிடம் தற்போது சில கெட்ட பழக்கங்களும் வந்து விட்டன. நான் குளிப்பதை மாடியிலிருந்து பார்க்கி றான். சரியாகச் சாப்பிடு வதோ, தூங்குவதோ இல்லை. இது எனக்கு வேதனையாக உள்ளது.

அவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடுவானா? இதற்கு வேறு என்ன வழி? அவனைத் திருத்த ஆலோசனை வழங்குங்கள்…’’

டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:

‘‘நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அவருக்கு மனநோய் இருப்பதையே உணர்த்துகிறது. தவிர, அவர் அடிக்கடி தனிமையை விரும்புகிறாரா, வேலைக்கு ஒழுங்காகப் போகாமல் டிமிக்கி அடிக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். குளியலறையில் எட்டிப் பார்ப்பது, நார்மலான நடத்தையே அல்ல.

அவருக்கு உங்கள் மகளை கல்யாணம் செய்துவைத்தால் அவர் நார்மலாகிவிடுவார் என்று சொல்லமுடியாது. வலுக்கட்டாயமாக, உங்கள் மகளின் விருப்பத்துக்கு மாறாக மணம் முடித்துவைத்தால் அது விபரீதங்களைத் தான் உண்டாக்கும்.

உடனடியாக அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள். சிகிச்சை மற்றும் ஆலோசனையின் மூலம்தான் அவரை முற்றிலும் குணப்படுத்த முடியும்!’’

‘‘என் கணவருக்கு வயது 40. பல வருடங்களாக காலையில் எழுந்தது முதல் அவருக்கு அடிக்கடி தும்மல் வந்துகொண்டே இருக்கிறது. டாக்டரிடம் சென்றுவந்தால் ஒரு வாரம்தான் நன்றாக உள்ளார். பல பரிசோதனைகள் செய்து பார்த்துவிட்டோம். ஒரு குறையும் இல்லை என்றே சொல்கிறார்கள் டாக்டர்கள். ஒவ்வொரு முறையும் அடுக்கடுக்காக தும்மல் வந்து, ரொம்ப கஷ்டப்படுகிறார். என்ன காரணத்தினால் தும்மல் வருகிறது? அதை நிறுத்த முடியாதா?’’

டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘தும்மல் என்பது நம் மூக்கில் உண்டாகும் நமைச்சலினால் ஏற்படுவது. ஒருவகையில் தும்மல் என்பது, நமது மூக்குக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு அம்சம்.

உதாரணமாக, மூக்கினுள் மிளகாய்த்தூள் சென்றதும் தும்மல் வரும். மிளகாயின் காரம் நம் நுரையீரலுக்குள் சென்று கெடுதல் விளைவிப்பதைத் தடுக்கத்தான் இந்த தும்மல்! ஆனால், இதுபோன்ற நியாயமான காரணம் எதுவும் இல்லாமலும் தும்மல் வரும். அது அலர்ஜியின் விளைவு.

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் உடலுக்கு உள்ளேயும் இருக்கலாம். வெளியேயும் இருக்கலாம்.

சாப்பிடும் பொருள்கள், மூக்கினுள் போகும் தூசி, முடி, பஞ்சு மற்றும் கடினமான நெடி போன்றவற்றினால் ஏற்படுகிற அலர்ஜி வெளி காரணங்களால் வருவது. சாப்பிடும் பொருளால் அலர்ஜி என்றால், அந்தப் பொருளை சாப்பிடாமல் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு, தக்காளி சாப்பிட்டதும் அலர்ஜி ஏற்பட்டு தும்மல் வருகிறது எனில், தக்காளிக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும். அலர்ஜியை முறியடிக்க தடுப்பு மருந்தும் உண்டு.

உடலுக்குள் நிகழும் சில மாற்றங்களால் அலர்ஜி ஏற்படுகிறது எனில், சில சமயங்களில் அது உடல் வளர்ச்சியிலேயே சரியாகிவிட வாய்ப்பு உண்டு.

உங்கள் கணவருக்கு தும்மலுடன் மூக்கடைப்பும் இருந்தால், சிறு அறுவை சிகிச்சை மூலம் சதையை அகற்றி சரி செய்யலாம். அலர்ஜிக்கு வெறுமனே ஒரு வாரம் மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதாது. அது ஏற்படும்போதெல்லாம் சாப்பிட வேண்டும். அலர்ஜி எதனால் வருகிறது என்பதை முறையான பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அந்த காரணத்தையே களைவதுதான் இதற்கு சரியான தீர்வு!’’

‘‘என் அம்மாவுக்கு 49 வயது ஆகிறது. இன்னும் மெனோபாஸ் ஏற்படவில்லை. திடீரென அவருக்கு உடம்பு முழுதும் வீக்கம் வந்து ரொம்ப வலியாக இருந்தது. டாக்டரிடம் காண்பித்ததில் ‘ஹைபோ தைராய்டு’ எனச் சொன்னார். இதற்கு ‘எல்-தைராக்ஸின்’ என்கிற மாத்திரை தினமும் பாதி மட்டும் சாப்பிடுகிறார். அவருக்கு பி.பி\யும் சர்க்கரையும் உள் ளது. இதனால் வேறு ஏதும் பிரச்னை வருமா? என்ன டயட் எடுத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவாகக் கூறுங் களேன்…’’

டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

‘‘தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்ஸின் குறைவாகச் சுரப்பதினால் ஏற்படும் பிரச்னைக்கு ‘ஹைபோ தைராடிஸம்’ என்று பெயர். இதனால் உடலின் எடை சற்று அதிகரிக்கும். உடலில் வலி ஏற்படும். தூக்கம் அதிகம் வரும். மலச்சிக்கல், முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கு உங்கள் தாயார் எடுத்துக் கொள்கிற மாத்திரைதான் சரியான தீர்வு. இந்தப் பிரச்னைக்கு தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது. இருந்தாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி இருப்பதால் உணவில் உப்பைக் குறையுங்கள். முற்றிலுமாக தவிர்த்தால் ரொம்பவும் நல்லது…’’

‘‘எனக்கு வயது 27. என் கணவருக்கு வயது 28. திருமணமாகி நான்கு மாதங்களாகிறது. நாங்கள் என் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறோம். எங்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலை காரணமாக குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருந்தோம். ஆனால், தற்போது கருத்தரித்து உள்ளேன். கருக்கலைப்பு செய்யலாம் என்றால் உறவினர்களும் தோழிகளும் ‘முதல்முறை கருக்கலைப்பு செய்தால், அதன்பிறகு குழந்தை பிறக்கவே வாய்ப்பில்லாமல் போகும் அபாயம் உண்டு’ என்கிறார்கள். எனக்குக் குழப்பமாக உள்ளது. உங்களது ஆலோசனைக்காகக் காத்திருக்கிறேன்…’’

டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:

‘‘உங்கள் தோழிகளும் உறவினர்களும் சொல்வதே சரி. ஏனென்றால் கருக்கலைப்பு ஆபரேஷன் செய்யும்போது கர்ப்பப்பையின் இரண்டு புறமும் உள்ள ஃபெலோபியன் ட்யூபில் அடைப்பு ஏற்படும். அதன் காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, முதல் குழந்தைக்கு தாயாகும் முன்னரே கருக்கலைப்பு செய்வது வரவேற்கக் கூடிய விஷயமல்ல.

அதோடு, குழந்தை பெற்றுக்கொள்ள உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதுதான் சரியான வயது. குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடவேண்டாம். செலவுகளை சுருக்கி, குழந்தைப் பிறப்பைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!’’

‘‘என் வயது 21. இரண்டே வருடங்களில் உடல்பெருத்து 45 கிலோவிலிருந்து 55 கிலோவாகி விட்டேன். சொதசொதவென தொப்பையுடன் இருக்கிற என்னைப் பார்க்க எனக்கே கவலையாக உள்ளது.

எனக்கு நிறைய சந்தேகங்கள்… தற்போது எனக்கு மாதவிலக்கு 4-5 நாட்கள் முன்னும் பின்னுமாக வருகிறது. இப்படி ஒழுங்கற்று இருப்பதால் ஏதேனும் ஹார்மோன் பிரச்னை இருந்து அதனால் எடை அதிகரிக்குமா?

ஆறு மாதங்கள் முன்புவரை எண்ணெய் அதிகமுள்ள உணவும், இனிப்பும் அதிகம் சாப்பிட்டு வந்தேன். இதனால் எடை கூடியிருக்க வாய்ப்பு உள்ளதா? ஆனால், இப்போது அவற்றை முற்றிலும் நிறுத்தி விட்டேன். அப்படியும் எடை கூடுகிறதே, ஏன்? அடிக்கடி மலச்சிக்கல் பிரச்னை வேறு.

எடை குறைக்க டானிக் குடிக்கலாமா? உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன் றவை பயனளிக்குமா? அப்படியே என் முகத்தைக் கெடுக்கும் பருக்கள் மறைய வழிசொல்லுங்கள்…

எனக்கு வீட்டில் வரன் தேடுகிறார்கள். அதற்கு முன் பழைய எடையை திரும்பப் பெற உதவுங்கள்…’’

டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:

‘‘கடிதத்தில் நீங்கள் விரிவாகக் குறிப்பிட்டிருக்கும் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, உங்கள் எடை சரியான விகிதத்தில்தான் உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை. மகப்பேறு மருத்துவ நிபுணரையோ அல்லது நாளமில்லா சுரப்பி நிபுணரையோ (என்டோகிரனாலஜிஸ்ட்) அணுகி, ஹார்மோன் பிரச்னை உள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுவதே நல்லது.

கொழுப்பு உள்ள உணவுப் பண்டங்களையும் இனிப்பு, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் சாப்பிடுவதால் கண்டிப்பாக எடை அதிகரிக்கும். நீங்கள் இவற்றை நிறுத்தினது மட்டும் போதாது. தொடர்ந்த உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைக்கும். நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க: எண்ணெயில் பொரித்த உணவு வகைகளையும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளையும் தவிர்த்து, வேக வைக்கப்பட்ட உணவை சாப்பிடுங்கள்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க: அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். காலைக்கடனை உரிய நேரத்தில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்…’’

‘‘என் மகளின் வயது 26. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, கைகளில் வெள்ளைத் தழும்புகள் இருக்கின்றன. முதலில் ஒரு பைசா அளவில் ஒன்று மட்டும் இருந்தது. இப்போது, இடுப்புக்குக் கீழிருந்து, கால்கள், பாதம் வரை 2 கால்களிலும் வில்லை வில்லையாக, 3 அங்குல நீளத்தில் உள்ளது. இது வெண்குஷ்டத்தில் சேர்ந்ததா? ஆங்கில வைத்திய முறையில் எந்த டாக்டரை அணுகலாம்? குணமாக எத்தனை நாளாகும்? எவ்வளவு செலவாகும்?’’

டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

‘‘இந்தப் பிரச்னைக்குப் பெயர் ‘விடிலைகோ’. இதை வெண்குஷ்டம் என்று சொன்னாலும், தொழுநோய்க்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

நமது தலைமுடி எப்படி நரைத்துப் போகிறதோ, அதேபோல் தோலில் சில இடங்கள் வெளுக்கிறது. தோலுக்கு நிறத்தைக் கொடுக்கக்கூடிய மெலனின் நிறமிக்குள் இருக்கும் மெலனோசைட் செல்கள் சில இடங்களில் மட்டும் அழிந்து போவதால் இந்த வெள்ளை நிறம் உண்டாகிறது. இந்த செல்கள் அழிவதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இது, அழகு சம்பந்தப்பட்ட ‘காஸ்மெடிக் பிராப்ளம்’ என்பதைத் தவிர, தொற்றுநோய் அல்ல. உயிருக்கு ஆபத்தானதும் இல்லை.

இதை ஓரளவுக்கு குணப்படுத்த வாய்ப்பு உண்டு. தோல் வைத்தியரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ‘இத்தனை நாள்களில் குணமாகும்’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. 6 மாதங்களிலிருந்து, ஒரு வருடம் வரை ஆகலாம். மருந்துகளும் அதிக விலையில்லை.

ஒரு இடத்தில் மட்டும் நீண்ட நாட்களாக இருக்கும் ‘ஸ்டேபிள் விடிலைகோ’வுக்கு, மருத்துவர் ஆலோசனையுடன், ‘காஸ்மெடிக் சர்ஜரி’ செய்யலாம். ஆனால், பரவக்கூடிய விடிலைகோவுக்கு இந்த சிகிச்சை பயனளிக்காது…’’

நன்றி:- டாக்டர் எஸ்.கே.நம்பி, மனநல மருத்துவர், வேலூர்:

நன்றி:- டாக்டர். ஆண்டனி இருதயராஜ், காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- டாக்டர் வீணா, மகப்பேறு மருத்துவ நிபுணர், திருச்சி:

நன்றி:-  டாக்டர் ரஜினி குமார், மகப்பேறு மருத்துவர், கோவை:

நன்றி:- டாக்டர் பி.வி.தனபால், பொது மருத்துவர், ராசிபுரம்:

நன்றி:- டாக்டர் ஜி.செந்தமிழ்ச் செல்வி, தோல் சிறப்பு நிபுணர், சென்னை:

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்