தொகுப்பு
நாமே வழங்குவோம்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
தெருவில் எளிய ஆடை அணிந்து செல்லும் ஸல்மான் பார்ஸி (ரலி)யை கூலியாள் என்றெண்ணி ஷாம் நாட்டு வியாபாரிகள் சுமையைக் கொடுத்து தலையில் சுமந்து வர பணித்தனர். அவ்வாறு ஒரு நாள் சுமை தூக்கிச் செல்லும்பொழுது மதாயின் வாசிகள் அமீர் என்றழத்து சலாம் சொன்னார்கள். அவர் ஆளுநர் என்றறிந்து பதறிய ஷாம் வியாபாரிகள் ஸல்மான் பார்ஸி(ரலி) தலை சுமையை இறக்க முயன்றனர்.
இதையே திருவள்ளுவரும் செங்கோண்மை அதிகாரத்தில்,
“இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்” என்கிறார்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 27 Jan 2012
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
ஸபருள் முளஃப்பர் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.
ஆண்டில் இரண்டாம் மாதம்
ஆரம்ப இஸ்லாமிய போர்களில்
தாண்டவ மாடிய எதிரிகளைத்
தாளிட்டு பணிய வைத்து
சத்தியம் வெண்ற மாதம்
சரித்திரம் படைத்த மாதம்
உத்தம சஹாபாக்கள் உண்மையில்
மகிழ்ந்த ஸபருள் முளஃப்பர்
ஹுது நபியின் ஏகத்துவத்தை
ஏற்காது ஏளனம் செய்த
ஆது கூட்டம் அழிந்த
ஆபத்தான புயல்வீசிய புதனை
அய்யாமுள் ஜாஹிலியா என்ற
அறியாமை கால அரபிகள்
பொய்யாய்ப் புகன்றனர் ஸபரைப்
பொல்லாத மாத மென்று
முத்துநபி வழியில் வாழும்
பழுதிலா இஸ்லாமியர் இனியும்
பழிக்காதிர் ஸபர் முளஃப்பர் மாதத்தை
நன்றி:- முஸ்லிம் முரசு – ஜனவரி 2012.
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
இவர்களின் படைப்புகளில் சில
இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
ஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல்வதறிந்த குறைஷி காபிர்கள் அவரைப் பிடித்து இழுத்து வந்து தண்டிக்க ஓடினர். ஸுஹைபைச் சுற்றி வளைத்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய ஸுஹைப்(ரலி) அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து, “”என் அருகில் நெருங்கினால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் குறி வைத்து அம்பெய்தி கொன்றுவிடுவேன். அம்புகள் தீர்ந்ததும் எஞ்சியவரை என் வாள் வஞ்சம் தீர்க்கும்” என்றார்.
அல்லாஹ்வின் அருள் தேடி அவன் தூதர் இருக்கும் மதினாவிற்குச் செல்லும் ஸுஹைப் (ரலி) அவர்கள் பொருள் இருக்கும் இடத்தைப் புலப்படுத்தியதும் பிறர் பொருள் கவரும் கொள்ளையர்களான புல்லர் கூட்டம் புறமுதுகிட்டு மக்காவிற்குத் திரும்பி ஓடியது.
ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா சென்று சேருவதற்கு முன்னால், “”அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி தம்மையே விற்றவரும் மனிதர்களில் உண்டு. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக்க இரக்கம் காட்டுகிறவன்” (2-207) என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கியது.
ஸுஹைப் (ரலி) அவர்கள் மதீனா வந்ததும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,””அபூயஹ்யாவே! உங்களின் வியாபாரம் லாபம் அளித்துவிட்டது” என்று கூறி மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
நன்றி:- தினமணி – வெள்ளிமணி 23 Sep 2011
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691
துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.
பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.
உறுப்பினர்:- தமிழ்நாடு நுகர்வோர் இயக்கம்.
அண்மைய பின்னூட்டங்கள்