தொகுப்பு

Posts Tagged ‘மஞ்சள்’

இறால் மஞ்சள் வாடா


இறால் மஞ்சள் வாடா காயல்பட்டினம் ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்

 முதலில் வாடாவிற்க்கு உள்ளே வைக்கும் அடக்கத்தினை தயார் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள்தூள்,உப்பு, இறால் இவற்றை சேர்த்து  கிளறி வைக்கவும்

* மாவை தட்டும் போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அந்த தண்ணீரை தொட்டு தட்டவும்.

ஒரு பலகையில் சுத்தமான  காட்டன் துணியை விரித்து அதில் ஒரு சிறு உருண்டை மாவை எடுத்து உள்ளங்கை அளவு வட்டமாக தட்டவும்.

பின் இன்னொரு சிறு உருண்டை மாவை எடுத்து இதே போல தட்டி ஒரு தட்டிய வட்டத்தின் மேல் செய்து வைத்த இறால் அடக்கத்தினை ஒரு கரண்டி அளவு வைத்து அதன் மேல் தட்டி வைத்த மற்றொரு வட்டத்தை வைத்து விரலில் தண்ணீர் தொட்டுக்கொண்டு சுற்றிவர ஒட்டிவிடவும்.

பிரிந்து வராதது போல் எல்லா பக்கமும் தண்ணீர் தொட்டு ஓட்டவும்

இதே போல் எல்லா மாவையும் வட்டங்களாக தட்டி வாடா வாக தட்டவும்

* பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி தீயை மிதமானதாக வைத்து தட்டிவைத்த வாடாவை போட்டு பொரித்து எடுக்கவும்

மிகவும் சுவையான காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா தயார். நோன்பு நேரங்களில் கறிக் கஞ்சியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

என்றும் நட்புடன்

என் இனிய இல்லம்

நன்றி:-என் இனிய இல்லம்.blogs

நன்றி:-http://en-iniyaillam.blogspot.com/

மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்

செப்ரெம்பர் 14, 2010 பின்னூட்டமொன்றை இடுக

`இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.

இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.

பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.

கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.

“என்ன தம்பி, இப்படி இருமுறீக… என்ன உங்களுக்கு உடம்புக்கு…?”

“ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி”

“அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்” – என்றார் பெரியவர்.

அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.

மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.

அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

மஞ்சள் மஞ்சக் கெழங்கே – ராஜம் முரளி


பாடி ஸ்ப்ரே, சென்ட்… என்று ஃபாரின் நறுமண சமாசாரங்கள் புழக்கத்துக்கு வரும் முன்பே, நம் நாட்டுப் பெண்கள் க ண்டுபிடித்த வாசனைப் பொருள்தான் மஞ்சள். அது வெறும் வாசனைப்பொருள் மட்டுமல்ல… அழகைக் கூட்டும் மந்திர விஷயங்களும் அதில் ஏராளமாக அடங்கியிருக்கின்றன.

பருவை விரட்டலாம்!

இளமை துள்ளாட்டம் போடும் டீன் ஏஜை எட்டிப் பிடித்ததும், பலரும் சந்திக்கும் பிரச்னை முகப் பருக்கள்! அழகுக்கு சோதனையாக வரும் இந்தப் பருக்களால் உண்டாகும் வலி இன்னொரு தொல்லை. இதற்கான எளிய வைத்தியம் மஞ்சளிடம் இருக்கிறது.

பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப் பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்து விடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

மென்மை கூட்டலாம்!

முகத்தில் தோல் சொரசொரப்பாக, கடினமாக இருந்தால் பசும் மஞ்சளோடு துளசியை சேர்த்து அரைத்துப் பூசுங்கள். விரைவிலேயே பட்டு போன்ற மென்மை முகத்தில் குடியேறும்.

கரும்புள்ளியைத் துரத்தலாம்!

பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றுடன் ஒரு எலுமிச்சை இலையை சேர்த்தரைத்துப் பூசினால் பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக்கொண்டால் அழகிய நிறம் கிடைப்பதோடு கரும்புள்ளிகளும் மறைந்துவிடும். அடர்ந்த கருமை நிறத்தவர்கள் இந்த முறையை பின்பற்றி னால் ஒரே வாரத்தில் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பளிச் நிறம் வர, மற்றொரு வழி சொல்லட்டுமா?

கால் கிலோ கிழங்கு மஞ்சள், கால் கிலோ பூலாங்கிழங்கு, கால் கிலோ கஸ்தூரி மஞ்சள் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எடுத்து 100 மி.லி தேங்காய் எண்ணெயில் கலந்து சூடாக்குங்கள். ஆறி, மேலாக தெளிந்ததும் அந்த எண்ணெயை உடலில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பயற்றம் மாவு அல்லது சோப்பு தேய்த்துக் குளித்தால் நாளுக்கு நாள் சருமம் மெருகேறி, அழகிய நிறம் பெறுவதை கண்கூடாக காணலாம்.

உலர்ந்த சருமத்தினர், நடுத்தர மற்றும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அற்புதமான சிகிச்சை இது.

அழகைக் கூட்டலாம்!

அரைத்துப் பூசினால்தான் என்றில்லை, மஞ்சள் கலந்த நீராவிகூட அழகைக் கூட்டும், தெரியுமா?! மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள். பிறகு, அதே நீரில் இரண்டு வேப்பிலையைப் போட்டு ஆவி பிடியுங்கள். அடுத்து, ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு, 3 எலுமிச்சை இலை அல்லது அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.

இத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள் விரிவடையா மல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர் ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள். அப்புறம் பாருங்கள்… ‘நானே நானா.. மாறினேனா..!’ என்று உங்கள் விழிகள் விரியும். அந்தளவுக்கு துடைத்து வைத்த குத்துவிளக்காக உங்கள் முகம் ஜொலிக்கும்.

பசும் மஞ்சள் சீசனில்தான் கிடைக்கும். இதனை காயவைத்தால், அது கஸ்தூரி மஞ்சள். பசும் மஞ்சள் கிடைக்காத சீசனில், மாற்றாக கஸ்தூரி மஞ்சளைப் பயன்படுத்தலாம்.

வெடிப்பை நீக்கலாம்!

குண்டு மஞ்சள் கிழங்கு… கெட்டியாக இருக் கும் இந்த மஞ்சள் அதிக நிறம் கொடுக்கும். கூடவே, சருமத்தைக் கடினமாக்கிவிடும். அதனால், இது உடலில் பூச உகந்ததல்ல. ஆனால், பித்த வெடிப்பை போக்குவதில் மருந்தாகவே செயல்படுகிறது.

இந்த கிழங்கு மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் 1 டீஸ்பூன் கடுகைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து, பாதவெடிப்பு மீது பற்றுப் போடுங்கள். அரைமணி நேரம் ஊறவிட்டுக் கழுவுங்கள். தினசரி இதனை செய்துவர, வலி நீங்கி, பித்த வெடிப்பு மறைவதோடு பாதமும் மிருதுவாகும்.

‘வெடிப்பு இல்லை. ஆனால், என் பாதங்கள் டல்லடிக்கின்றன. அதனை அழகுபடுத்த வழி இருக்கா?’ என்பவர்களுக்கு இது… பாதங்களை ஷாம்பு போட்டு பிரஷால் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியோடு ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து பாதத்தில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். பிறகு எலுமிச்சம் பழத் தோலால் அழுந்த தேய்த்துக் கழுவுங்கள். நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்படிச் செய்தால், பளபளவென மின்னும் பாதம் கண்களில் ஒற்றிக்கொள்ளச் சொல்லும். இரவில் படுக்கப் போகும் முன் இதைச் செய்தால் சுகமான நித்திரை நிச்சயம்.

எல்லோருமே போடக்கூடிய மஞ்சள் ஃபேஸ் பேக் ஒன்றைப் பார்ப்போமா? முழு பாசிப் பயிறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், கசகசா தலா 10 கிராம், உலர்ந்த ரோஜா மொட்டு, பூலாங்கிழங்கு தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை மூன்றும் சேர்த்தது 2 கிராம் _ இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் சிறிதளவு எடுத்து தயிரில் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் பூசி, பத்து நிமிடம் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன் முகத்துக்கு சொந்தக்காரர் நீங்கள்தான்!

****************************************************************************************

நன்றி:-ராஜம் முரளி

நன்றி:- அ.வி

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&