தொகுப்பு

Posts Tagged ‘திர்மிதி’

இத்தா (கணவன் மரணம், விவாகரத்து) – மௌலவி S.H.M. இஸ்மாயில்


இல்லற பந்தத்தில் இணையும் பெண்களில் அதிகமானோர் ஏதோ ஒரு விதத்தில் “இத்தா” இருக்கும் நிலையை அடைகின்றனர். சிலபோது விவாகரத்தின் மூலமோ அல்லது கணவனின் இறப்பு மூலமோ இது நிகழலாம். எனவே இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை இந்தக் கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

இத்தா” – பொருள்:- “அத்த” என்றால் எண்ணினான் என்பது அர்த்தமாகும். நோயாளி-பயணிகளின் நோன்பு பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்;

எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கின்றாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேணடும். (2:185)

இங்கே றமழானில் விடப்பட்ட நோன்புகளை ஏனைய மாதங்களில் கணக்கிட்டு நோற்பதற்கு “இத்ததுன்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் “இத்தா” என்பது விவாகரத்துப் பெற்ற பெண் அல்லது கணவனை இழந்த பெண் குறிப்பிட்ட காலம் திருமணஞ் செய்யாமல் காத்திருக்கும் காலத்தைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப் படுகின்றது.

இத்தாவின் கால அளவு:

ஒரு பெண் எதற்காக இத்தா இருக்கிறாள்? எந்த நிலையில் இருக்கின்றாள்? பெண்ணின் நிலை என்ன? என்ற அடிப்படையில் பெண்ணின் இத்தாக் காலம் மாறுபடும். இதனைப் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

(1) கர்ப்பிணிப் பெண்:

இத்தா இருக்கும் பெண் கர்ப்பிணியாயின் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். கணவன் “தலாக்” விட்டதற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி அல்லது கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தாவாக இருந்தாலும் சரி இதில் விதிவிலக்கில்லை.

ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன் மரணிக்கின்றான். கணவன் மரணித்து ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு மணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது ஓரிரு நிமிடங்களின் பின்னரோ அவள் குழந்தையைப் பெற்று விட்டால் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.

இதே போன்று ஒரு பெண் கர்ப்பமுறும் போது கணவன் மரணிக்கின்றான். அவள் அதன் பின் 9 மாதங்கள் தாண்டிய பின்னர்தான் குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்றாலும் அவள் அதுவரை இத்தா இருந்தேயாக வேண்டும்.

இது குறித்து அல்குர்ஆனில் பின்வருமாறு கூறப்படுகின்றது;

கர்ப்பிணிகளின் (இத்தாக்)காலம் அவர்கள் தமது குழந்தைகளைப் பெற்றுப் பிரசவிக்கும் வரையிலாகும்..” (65:3)

இங்கே அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வார்த்தை அவர்கள் பெற்ற குழந்தை உயிருடன் பிறந்தாலும் அல்லது இறந்து பிறந்தாலும், நிறைவாகப் பிறந்தாலும் அல்லது குறைப்பிரசவமாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் என்பதை உணர்த்துமுகமாக உள்ளது.

ஸபீஆதுல் அஸ்லமீ என்ற பெண்மணி ஸஃத் பின் கவ்லாவின் மனைவியாவார். இவர் பத்ரில் பங்குகொண்ட ஸஹாபியாவார். இவர் ஹஜ்ஜதுல் விதாவில் மரணமானார். அப்போது அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். இவர் மரணித்ததும் அவர்கள் பிரசவித்தார்கள். இந்தப் பெண்மணி தனது பிரசவத்தீட்டு முடிந்ததும் திருமணம் பேசுவோர் தன்னைத் திருமணம் பேசுவதற்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்கள். அப்போது அபுஸ் ஸனாபில் என்ற நபித்தோழர் இவர்களைப் பார்த்து “உன்னை நீ அலங்கரித்திருக்கக் காண்கின்றேனே! நீ திருமணம் செய்ய விரும்புகின்றாயா?” எனக் கேட்ட அவர், “நீ 4 மாதங்கள் – 10 நாள் கழியும் வரை திருமணம் செய்ய முடியாது!” எனக் கூறினார்.

இவர் அப்படிக் கூறியதன் பின், நடந்ததை ஸபீஆ(ரலி) அவர்கள் கூறும் போது;

“நான் எனது ஆடைகளை உடுத்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்ட போது “நீ பிரசவித்த போதே உனக்குத் திருமணம் ஆகுமாகி விட்டது!” என்று கூறியதோடு, “நீ விரும்பினால் திருமணம் செய்துகொள்!” என எனக்கு ஏவினார்கள்” என்று கூறுகின்றார்கள்.

(புகாரி 5318, 5319, முஸ்லிம் 1485, திர்மிதி, நஸஈ, அஹ்மத்)

எனவே, கர்ப்பிணிப் பெண் குழந்தை பெற்றதும் அவளது இத்தாக்காலம் முடிந்து விடும்.

(2) கர்ப்பிணி அல்லாத கணவன் மரணித்த பெண்களின் இத்தா:

கணவன் மரணித்த பெண்கள் கர்ப்பிணிகள் அல்ல என்றால் 4 மாதங்களும், 10 நாட்களும் இத்தா இருக்க வேண்டும். இந்தக் காலம் பிறைக் கணக்கின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். ஆங்கிலக் கணக்கின்படி பார்க்கக் கூடாது. ஆங்கில மாதத்தில் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியில் முடிகின்றது. பிறைக் கணக்கின்படி மாதம் 28 இல் முடியவே முடியாது. ஆங்கிலக் கணக்கில் பல மாதங்கள் 31 ஆம் திகதியில் முடிவடைகின்றன. பிறைக் கணக்கில் மாதம் 29 அல்லது 30 இல் முடிவடையும். 31 ஆம் நாள் என்பது பிறைக் கணக்கில் வரவே வராது. எனவே 4 மாதம் – 10 நாள் என்பது பிறைமாதக் கணக்கின்படி பார்க்கப்பட வேண்டும்.

கணவன் மரணித்த பெண்கள், கணவனுடன் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் சரி! நீண்ட நாட்களாக ஈடுபடாவிட்டாலும் சரி! இத்தாவை இருந்தேயாக வேண்டும். 4 வருடங்களாக வெளிநாட்டில் தொழில் செய்துகொண்டிருந்த கணவர் அங்கேயே மரணித்து விடுகின்றார். இவர் தனது மனைவியுடன் நீண்டகாலம் இல்லறத்தில் ஈடுபடவில்லை என்றாலும் இறந்த கணவனுக்காகத் தனது துக்கத்தை வெளியிடு முகமாகவும், “இத்தா” என்ற வணக்கத்தை நிறைவேற்று முகமாகவும் அந்தப் பெண் 4 மாதம் 10 நாள் இத்தா இருந்தேயாக வேண்டும்.

திருமண உடன்படிக்கை நிறைவேறிக் கணவன், மனைவியைச் சந்திப்பதற்குள் கணவன் மரணித்து விட்டாலும் திருமண ஒப்பந்தம் நிறைவேறி விட்ட காரணத்தால் அந்தப் பெண்ணும் 4 மாதங்கள் 10 நாட்கள் மரணத்திற்கான இத்தா இருந்தாக வேண்டும்.

இந்த இத்தாக் குறித்துக் குர்ஆன் பேசும் போது;

உங்களில் எவரேனும் மனைவியர்களை விட்ட நிலையில் மரணித்து விட்டால், அவர்கள் தமக்காக நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (இத்தாவழிபாட்டில்) காத்திருக்க வேண்டும். அவர்கள் தமது காத்திருக்கும் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் தமது விடயத்தில் தாமாக நல்ல முறையில் அவர்கள் நடந்துகொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்.” (2:234)

இத்தாவுக்கான தனியான சட்டங்கள்:

கணவன் மரணித்ததற்காக இருக்கும் இத்தா துக்கம் கலந்த இத்தாவாகும். தலாக் விடப்பட்ட பெண் மேற்கொள்ளும் இத்தாவுக்கும், இதற்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

(1) திருமணம் பேசுதல்:

பொதுவாக எந்தப் பெண்ணும் “இத்தா” இருக்கும் போது திருமணம் பேசலாகாது. இது “தலாக்”, மரணம் இரண்டு “இத்தா”க்களுக்கும் பொருத்தமானதாகும். “தலாக்” விடப்பட்ட பெண்ணைப் பொருத்தவரையில் அவள் இத்தாவில் இருக்கும் போதும் “தலாக்” விட்ட கணவனின் மனைவி என்ற அந்தஸ்த்திலேயே இருக்கின்றாள். எனவே அவளிடம் திருமணம் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசமுடியாது. இதேவேளை, கணவன் மரணித்ததற்காக “இத்தா” இருக்கும் பெண்ணிடம் நேரடியாகத் திருமணம் பேசுவது தடுக்கப்பட்டதாகும். எனினும் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டும் விதமாக மறைமுகமான வார்த்தைகள் மூலம் திருமணம் செய்யும் உணர்வை வெளிப்படுத்த இஸ்லாம் அனுமதிக்கின்றது.

பின்வரும் வசனம் இது குறித்துத் தெளிவாகப் பேசுகின்றது;

“(இத்தாவில் இருக்கும் பெண்களிடம்) நீங்கள் திருமணஞ் செய்துகொள்ளும் விருப்பத்தை மறைமுகமாய்த் தெரிவிப்பதிலோ அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். (திருமணம் பற்றி) நல்ல வார்த்தைகளை நீங்கள் கூறுவதைத் தவிர இரகசியமாக அவர்களிடம் வாக்குறுதி அளிக்காதீர்கள்! (இத்தாவுடைய) காலக்கெடு, அதன் தவணையை அடையும் வரை திருமண ஒப்பந்தத்தைத் தீர்மானிக்காதீர்கள்! நிச்சயமாக உங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறிந்து, அவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் சகிப்புத் தன்மைமிக்கவனுமாவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:235)

(2) கணவன் இறந்ததற்காக “இத்தா” இருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கவர்ச்சியான சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிவது, வாசனை-எண்ணைத் திரவியங்கள் பாவிப்பது, கண்ணுக்குச் சுர்மா இடுவது, மருதானி பூசுவது, நகைகள் அணிவது – அனைத்தையும் தவிர்க்க வேண்டும். கணவனின் மரணத்தைத் தவிர வேறு எவரின் மரணத்திற்காகவும் 3 நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவது எமக்குத் தடுக்கப்பட்டுள்ளது. கணவனுக்காக 4 மாதங்களும், 10 நாட்களும் அவள் துக்கம் அனுஷ்டிப்பாள். அவ்வேளையில் நாம் கண்ணுக்குச் சுர்மா இடலாகாது; வாசனை பூசலாகாது. நெய்வதற்கு முன்னர் சாயல் இடப்படாத வர்ணம் தீட்டப்பட்ட ஆடைகளை அணியலாகாது..என உம்மு அதிய்பா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 5341, 5342, 5343)

ஒரு பெண்மணி தனது மகளின் கணவன் மரணித்து விட்டதாகவும், இத்தாவில் இருக்கும் தனது மகளுக்குக் கண்ணில் நோவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்குச் சுர்மா இடலாமா? எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் வேண்டாம்!என மறுத்தார்கள். (புகாரி 5336, 5337, முஸ்லிம்)

எனவே, மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண்கள் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.

இந்த “இத்தா” குறித்து அதிக மூடநம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தன.

– வயது போன பெண்கள் 40 நாட்கள் “இத்தா” இருந்தால் போதும்.

– அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.

– ஆண்பிள்ளைகள்-சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ, எவருடனும் பேசவோ கூடாது.

– கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஆண்பிள்ளை இருக்கலாம் என்பதால் கர்ப்பிணிகளும் அவர்களைப் பார்க்கக் கூடாது.

என ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் இருந்தன. இவை இன்று மங்கி-மறைந்து விட்டன. இருப்பினும் இவர்கள் தேவைகளுக்காக வெளியில் செல்வது குறித்து மக்கள் மத்தியில் இன்னும் ஐயங்கள் உள்ளன.

“தலாக்” விடப்பட்ட பெண்ணைப் பொருத்த வரையில் கணவனின் இல்லத்தில்தான் “இத்தா” இருப்பாள். கணவன் மரணித்த பெண் “இத்தா” இருக்கும் போதும் நிர்ப்பந்தம் ஏதும் இல்லாவிட்டால் கணவனின் இல்லத்தில்தான் “இத்தா” இருக்க வேண்டும். “தலாக்” விடப்பட்ட பெண் கணவனின் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாது. அப்படிச் செல்வது கணவன்-மனைவிக்கிடையே விரிசலை விரிவாக்குவதுடன் இணக்கப்பாட்டுக்கான வாயில்களையும் இது அடைத்து விடும். கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண்ணைப் பொருத்தவரையில் தேவையிருந்தால் பகலில் வெளியில் செல்ல அனுமதியுண்டு. அத்தியாவசியமோ, நிர்ப்பந்த நிலையோ இருந்தாலேயன்றி இரவில் வெளியே செல்லக் கூடாது.

உஹதுப் போரில் ஷஹீதான நபித் தோழர்களின் மனைவியர் இத்தாஇருந்தனர். அவர்கள் நபியவர்களிடம் வந்து தாம் ஒன்றாக ஒருவர் வீட்டிற்தங்க அனுமதி கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் பகலில் ஒன்றுசேர்ந்து ஒருவர் வீட்டில் இருக்குமாறும், இரவில் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுமாறும் கூறினார்கள். (கிதாபுல் உம்மு 5ஃ251, முஸன்னப் அப்துர்ரஷ்ஷாக்)

“தலாக்” விடப்பட்ட பெண்ணுக்கு கணவன் உணவும், இருப்பிடமும் அளிக்கவேண்டும். மூன்றாம் “தலாக்” சொல்லப்பட்ட பெண்ணுக்கு உணவு அளிக்க வேண்டியதில்லை. இந்த நிலையில் இருக்கும் பெண் உழைப்புக்காகப் பகலில் வெளியில் செல்லவும் நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

இது குறித்து ஜாபிர்(ரலி) அவர்கள் கூறும் போது;

எனது மாமி மூன்றாம் தலாக்கூறப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஈத்தமரத்தில் ஈத்தம் பழங்களைப் பரிப்பதற்காகச் சென்றார்கள். அவர்களைச் சந்தித்த ஒரு நபித்தோழர் அவர்களைத் தடுத்தார். எனவே, இது குறித்து எனது மாமி நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது நீ உனது தோட்டத்திற்குச் சென்று ஈத்தம்பழம் பறி! அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நீ சிலபோது ஸதகாசெய்யலாம் அல்லது ஏதேனும் நல்லது செய்யலாம்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (முஸ்லிம், அபூதாவூத், நஸாஈ, இப்னுமாஜா)

இப்னுகுதாமா(ரலி) போன்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை வைத்துக் கணவனின் மரணத்திற்காக “இத்தா” இருக்கும் பெண் கூடத் தனது வாழ்வாதாரத் தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியமிருந்தால் செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

எனவே, “இத்தா” இருக்கும் பெண் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசியத் தேவைகளிருந்தால் தகுந்த முறையில் வெளியில் செல்வதில் தடையில்லை.

(3) தலாக்கிற்கான இத்தா:

கணவன், மனைவியைத் “தலாக்” சொன்னால் அந்த மனைவியின் நிலையைப் பொருத்து இத்தாவின் சட்டம் 3 விதங்களாக அமையும்.

அ. உடலுறவுக்கு முன்னர் தலாக்:

திருமண ஒப்பந்தம் முடிந்து “ஈஜாப்-கபூல்” சொல்லப்பட்ட பின்னர் உடல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் கணவன், மனைவியைத் தலாக் கூறினால் அந்தப் பெண் “இத்தா” இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அடுத்த நிமிடமே அவள் வேறொருவரை மணம் முடிக்கலாம்.

இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கையாளர் களான பெண்களை நீங்கள் மணம் முடித்து, அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால், நீங்கள் கணக்கிடக் கூடிய இத்தா” (எனும் காத்திருக்கும் காலம்) எதுவும் உங்களுக்காக அவர்கள் மீதில்லை. ஆகவே, அவர்களுக்கு வாழ்க்கை வசதிகளை வழங்கி, அவர்களை அழகிய முறையில் விட்டு விடுங்கள்!” (33:49)

இவ்வாறு “தலாக்” கூறும் போது அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக அமையும் விதத்தில் போலிக் குற்றங்கள் சுமத்தக் கூடாது. சிலர் பெற்றோரின் நிர்ப்பந்தத்திற்காக மணம் முடித்து, அன்று இரவே வீட்டை விட்டும் ஓடி விடுகின்றனர். பின்னர் தனது செயலை நியாயப்படுத்தப் பெண்ணுக்கு அது சரியில்லை, இது சரியில்லையென குற்றம் சுமத்துகின்றனர். இது தவறாகும் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி கூறுகின்றது.

அடுத்து, இவ்வாறு “தலாக்” கூறுவதால் அந்தப் பெண் பாதிக்கப்படுகின்றாள். எனவே மஹரின் அரைவாசியை அவளுக்குத் “தலாக்” விட்டவன் வழங்குவது கட்டாயமாகும். உதாரணமாக 1 இலட்சம் மஹர் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் 50 ஆயிரம் வழங்குவது கட்டாயம். 1 இலட்சத்தையும் வழங்குவது நல்லதாகும். இது குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.” (2:237)

நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். அந்தப் பெண் “ஒரு இளவரசி ஒட்டகம் மேய்க்கும் இடையனுக்குத் தன்னை அர்ப்பணிப்பாளா?” எனக் கேட்டு, நபி(ஸல்) அவர்களுடன் வாழப் பிடிக்காததைக் கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளுக்குரிய சில அன்பளிப்புக்களை வழங்கி அவளை அவள் வழியிலேயே விட்டார்கள். (பார்க்க: புகாரி 5254, 5255, 5256, 5257)

அந்தப் பெண் நபி(ஸல்) அவர்களை அவமதித்தாள். அடுத்து, அவளாக விவாக பந்தத்தை முறித்தாய் இருந்தும் கூட நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பு வழங்கியது அவதானிக்கத்தக்கதாகும்.

ஆ. தலாக் விடப்பட்ட மாதத்தீட்டு ஏற்படக்கூடிய பெண்களின் இத்தா:

இவர்களைப் பொருத்தவரை 3 மாதத் தீட்டுக்கள் ஏற்படும் வரை அல்லது 3 மாதத் தீட்டுக்கள் ஏற்பட்டுச் சுத்தமாகும் வரை “இத்தா” இருக்கவேண்டும்.

இது குறித்துப் பின்வருமாறு கூறுகின்றது;

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும்..” (2:228)

இ. மாதத்தீட்டு நின்ற அல்லது ஏற்படாத பெண்கள்:

இந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிறைக் கணக்கில் 3 மாதங்கள் “இத்தா” இருக்க வேண்டும்.

இது குறித்துப் பின்வரும் வசனம் பேசுகின்றது;

“உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயை விட்டும் நம்பிக்கையிழந்து (அவர்களின் இத்தா விடயத்தில்) நீங்கள் சந்தேகங்கொண்டால் அவர்களுக்கும் (இதுவரை) மாதவிடாய் ஏற்படாதவர்களுக்குமுரிய இத்தாக்காலம் மூன்று மாதங்களாகும்..” (65:4)

இந்த இத்தாவில் இருக்கும் பெண்களை வீட்டை விட்டும் வெளியேற்றவும் கூடாது. அவர்கள் தாமாக வெளியேறிச் சென்று விடவும் கூடாது.

நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவைக் கணக்கிடக் கூடிய (மாதவிடாய் இல்லாத) காலத்தில் விவாகரத்துச் செய்யுங்கள். மேலும், “இத்தாவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் இரட்சகனான அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக்கேடானதைச் செய்தாலேயன்றி, அவர்களை நீங்கள் அவர்களது வீடுகளை விட்டும் வெளியேற்ற வேண்டாம். அவர்கள் வெளியேறவும் வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவன் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றானோ, அவன் தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்டான். (சேர்ந்து வாழ) இதன் பின்னரும் அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.” (65:1)

“இத்தா” இருக்கும் பெண்கள் தமது கருவில் சிசு இருந்தால் அதை மறைக்கலாகாது..

தலாக் ரஜ்பீக்கான “இத்தா” இருக்கும் பெண்ணுக்கு கணவன் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும். அது அவனது பொருளாதார வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும். அவள் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பிரசவிக்கும் வரை அவளது செலவுகளை அவன் ஏற்றாக வேண்டும்.

நீங்கள் குடியிருக்கும் இடத்தில் உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களை குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் தமது சுமையைப் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவழியுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே (இது குறித்துப் பேசி) நல்ல முறையில் முடிவு செய்துகொள்ளுங்கள்! இதை நீங்கள் சிரமமாகக் கருதினால் அவளுக்காக மற்றொருத்தி (குழந்தைக்கு) பாலூட்டட்டும்.

வசதி உள்ளவர் தமது வசதிற்கு ஏற்பச் செலவிடட்டும். யாருக்கு வாழ்வாதாரம் அளவோடு வழங்கப்பட்டுள்ளதோ, அவர் அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ், தான் வழங்கியதற்கு மேல் எந்தவோர் ஆத்மாவையும் சிரமப்படுத்த மாட்டான். அல்லாஹ் கஷ்டத்தின் பின் இலகுவை விரைவில் ஏற்படுத்துவான்.” (65:6-7)

அவள் குழந்தையைப் பெற்று அந்தக் குழந்தைக்கு அவளே பாலூட்டுவதாகக் குழந்தையின் தந்தையும், தாயும் தீர்மானித்தால் பாலூட்டும் காலம் வரை அவன் – அவளுக்கு வாழ்வாதாரமும், ஊதியமும் அளிக்க வேண்டும். அத்துடன் குழந்தைக்குரிய தேவைகளையும் கணவன் நிறைவேற்ற வேண்டும். குழந்தையின் தந்தை இறந்தால் கூட அவரின் வாரிசாக இருப்பவர் இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும்.

இது குறித்துப் பின்வரும் வசனம் விரிவாகப் பேசுகின்றது;

பால்குடியை நிறைவு செய்ய விரும்புகின்ற (கண)வருக்காகத் (தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாகப் பாலூட்ட வேண்டும். (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்பட மாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்பட மாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்தி விடக் கருதினால் அவ்விருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்குச் செவிலித்தாய் மூலம் பாலூட்ட விரும்பி (பெற்ற தாய்க்குக்) கொடுக்க வேண்டியதை உரிய முறைப்படி கொடுத்து விட்டால் (அதிலும்) உங்கள் மீது குற்றம் கிடையாது. நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன் என்றும் அறிந்து கொள்ளுங்கள்!” (2:233)

குல்உவுக்கான இத்தா:

கணவன், மனைவியை விவாகரத்துச் செய்ய உரிமை இருப்பது போலவே, வேண்டாத கணவனை விட்டும் விலகிக்கொள்ள மனைவிக்கும் உரிமை உண்டு. ஒரு பெண் தன்னைக் கணவனிடமிருந்து விடுவித்துக்கொள்வதற்கு “குல்உ” என்று கூறப்படும். கணவனுடன் வாழப் பிடிக்காத மனைவி கணவரிடம் முறையிட்டு முறைப்படி திருமண ஒப்பந்தத்தை முறிப்பதற்கே “குல்உ” என்று கூறப்படும். இவ்வாறு விவாகபந்தத்தை முறிக்கும் போது பெண் தனது கணவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலன்றிக் “காழி” மூலமோ, தலைவர் மூலமோ விவாகபந்தம் முறிக்கப்பட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சில பெண்கள் இவ்வாறு விவாகபந்தத்தை முறித்துள்ளனர். பரீரா என்ற அடிமைப் பெண்ணை ஆயிஷா(ரலி) அவர்கள் வாங்கி விடுதலை செய்த போது அவர் தனது கருப்பரான அடிமைக் கணவரை விட்டும் பிரிந்தார். நபி(ஸல்) அவர்கள் சேர்ந்துவாழ ஆலோசனை கூறிய போது அப்பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளின் கணவர் அழுது அழுது இப்பெண்ணின் பின்னால் வந்தும் கூட அவள் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன. (பார்க்க: புகாரி 5281, 5282, 5283)

இவ்வாறே, ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் தாபித்(ரலி) அவர்களின் மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை கூறவில்லை. ஆனால் அவருடன் வாழ என்னால் முடியவில்லை!என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(அவர் மஹராகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுக்கின்றாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டாள். (பார்க்க: புகாரி 5274, 5275, 5276)

கணவன் – மனைவியைத் “தலாக்” சொன்னால் அவன் கொடுத்த மஹரில் எதையும் பெறமுடியாது. ஒரு பொற்குவியலைக் கொடுத்திருந்தாலும் பெறமுடியாது. ஆனால், மனைவி கணவனைப் பிரிவதென்றால் அவனிடமிருந்து பெற்ற மஹரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதேவேளை, “குல்உ” செய்த பெண் ஒரு மாதவிடாய்க் காலம் “இத்தா” இருந்தால் போதுமானதாகும். தாபித் பின் கைஸின் மனைவியிடம் நபி(ஸல்) அவர்கள் ஒரு “ஹைழ்” வரும் வரை “இத்தா” இருக்குமாறு கூறினார்கள். (நஸாஈ)

இந்த ஹதீஸின் அடிப்படையில் “குல்உ” செய்த பெண் ஒருமாதத் தீட்டு ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானது. இதேவேளை, இவள் மீண்டும் அந்தக் கணவனுடன் சேர்ந்துவாழ முடியாது.

இதே கருத்தைத்தான் உஸ்மான்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), அர்ருபைப் பின்து முஅவ்வித்(ரலி) போன்றோர் கொண்டுள்ளனர்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இந்த 4 ஸஹாபாக்களின் கூற்றுக்கு ஏனைய நபித்தோழர்களிடம் மாற்றுக்கருத்து இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறுகின்றார்கள். இமாம்களில் அஹ்மத் இப்னு ஹம்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹி, இப்னு தைமிய்யா போன்றோரும் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகின்றனர். எனவே, “குல்உ” செய்த பெண் ஒரு “ஹைல்” ஏற்படும் வரை “இத்தா” இருந்தால் போதுமானதாகும். (அல்லாஹு அஃலம்)

 

جَزَاكَ اللَّهُ خَيْرًا

நன்றி:- மௌலவி S.H.M. இஸ்மாயில்

நன்றி:- http://www.ottrumai.net/

 

பிரிவுகள்:இத்தா குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

கணவரை மகிழ்விப்பது எப்படி?


(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் muslim_wedding_handsவரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

• அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

• கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

இனிய குரலும் தேவையான கனிவும்

• உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம்.

• உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

நறுமணமும் அலங்கரிப்பும்

• உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)

• உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

• தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.

• வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

• தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)

• கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

• முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது: ‘எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?” நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ‘எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”. ( நஸயீ)

இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே

• திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)

• கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமளான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).

• உங்கள் கணவனுக்கு தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).

• உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்).

• உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்.

• தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை
என்னும் பட்சத்தில்).

அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது

• உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

• ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

• தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்

• இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.

• இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.

• உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.

• அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்

• நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்” என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

• உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் ‘ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”.உறுதுணையும் உதவியும்

• உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு ‘தோள்” கொடுங்கள்.

கட்டுப்படுதல்

• ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், ‘நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்” என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)

• ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவியை கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி)

• கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது.

• ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)

• முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

• நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

• கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

• வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

• அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

• ‘என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

பாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

• தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

• குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

• வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

• கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

• அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.

• உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

• மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் – போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)

• கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

பொறுமையும் பாதுகாப்பளித்தலும்

• கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.• வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம். (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்…)

• அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் …) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.

• உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

இறைவனுக்கு அடிபணிவதிலும், அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்

• உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

• இரவு தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.

• அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.

• இஸ்லாமிய பயான் கேஸட்டுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).

• சுப்ஹ{தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் (இறைநினைவு) ஈடுபடுங்கள்.

• பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.

• இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.

• உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

• உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.

• அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.

அழகிய வீட்டு பராமரிப்பு

• வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

• பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

• தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

• அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

• குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதை கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.

குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்

• கணவனுடைய பணத்தை அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

• வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

• குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.

நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி

• நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் ரளியல்லாஹூ  அன்ஹூ ம்
போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

• கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

• கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

• ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ  அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)

நன்றி:- nidur.info

அஹ்லுல் பைத்


* அஹ்லுல் பைத் என்றால் யார்?

இது நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தாரை குறிக்கும் ஒரு சொற்றொடராகும். இதில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் மனைவி மக்கள் அனைவரும் அடங்குவர்.

كل لا أسألكم عليه أجرا إلا لاماوث في لاقرب

என் சுற்றத்தார்களிடம் அன்பு வைக்க வேண்டும் என்பதை தவிர வேறெந்த கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை என்ற வசனம் இறங்கிய போது, யா ரசூலல்லாஹ்!! நாங்கள் அன்பு வைக்க கடமையாக்கப்பட்ட உங்களின் குடும்பத்தார்கள் யார்? என்று ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள், அலி, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه என்று பதிலளித்தார்கள்.

ஒரு முறை நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். அவர்களுடன் அலி رضي الله عنه, பாத்திமா رضي الله عنه, ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோர் இருந்தனர். அப்போது அவ்விருவரையும் தமது மடியில் வைத்துக்கொண்டு ஒரு போர்வையால் எல்லோரையும் போர்த்தி,
“நபியுடைய குடும்பத்தார்களே! உங்களை விட்டும் எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.” 33: 33

இந்த ஆயத்தை ஓதிய பிறகு இறைவா! இதோ இவர்கள் என்னுடைய அஹ்லுல் பைத்துகளாகும். ஆகவே இவர்களை பரிசுத்தபடுத்துவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

இதிலிருந்து நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தவர்களை அல்லாஹுதஆலா பரிசுத்தப்படுத்தியும், பாவம் என்பதே இன்னதென அறியாதபடியும் ஒரு குறைவும் இல்லாத படியும் செய்திருப்பது இந்த வசனங்களின் மூலம் நமக்கு தெளிவாகிறது

* அஹ்லுல் பைத்துகளின் மகத்துவம்

• ஃபாத்திமா رضي الله عنه அவர்கள் சுவனப் பெண்களின் தலைவியாகும்.
(புஹாரி, முஸ்லிம், திர்மிதி)
• ஹஸன், ஹுஸைன் رضي الله عنه அவர்கள் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும். (திர்மிதி, மிஷ்காத்)

* கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் உடல் அமைப்பை கொண்ட அருமை பேரர்கள்

ஸெய்யதுனா ஹஸன் رضي الله عنه அவர்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்களின் நெஞ்சிலிருந்து தலை வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். ஸெய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்கள் நெஞ்சிலிருந்து கால் வரைக்கும் ஒப்பானவர்களாக இருந்தார்கள். என்று இமாம் அலி رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, மிஷ்காத்)

* அஹ்லுல் பைத்துகளை பின்பற்ற வேண்டும்

“மனிதர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் எம்மிடம் மரணத்தூதுவர் வரும் நேரம் நெருங்கி விட்டது. நான் அவருக்கு விடையளிக்க போகிறேன். நான் உங்களிடையே பொறுப்பான இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டில் முதலாவது அல் குர்ஆன் அதில் நேர்வழியும் பேரொளியும் இருக்கிறது. ஆகவே அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது அஹ்லுல் பைத்துகள் என்ற என் குடும்பத்தார்களாகும். அவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வை முன் வைத்து உங்களுக்கு எச்சரிக்கை செய்துகொள்கிறேன்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
(முஸ்லிம், மிஷ்காத் 567)

கண்மணி நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் (செய்த) தாங்களுடைய ஹஜ்ஜின் போது அரஃபாவின் தினத்தில் தாங்களின் கஸ்வா என்ற ஒட்டகத்தில் அமர்ந்த வண்ணம் (ஒரு) பிரசங்கம் செய்தார்கள். (அந்தப் பிரசங்கத்தில்) மனிதர்களே! நீங்கள் எவைகளை பின்பற்றி நடந்தால் வழிதவற மாட்டீர்களோ அப்படிப்பட்டவைகளை உங்களுக்கு மத்தியில் விட்டுச் செல்கிறேன் அதாவது அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனையும் என்னுடைய அஹ்லுல்பைத் என்ற என்னுடைய பிச்சளங்களையும் விட்டுச் செல்கிறேன் என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று ஸைய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(திர்மிதி, முஸ்னத் அஹ்மத்,மிஷ்காத்)

ஸெய்யதுனா அபூதர் رضي الله عنه அவர்கள் கஃபாவின் வாயில் கதவை பிடித்தவர்களாக கூறினார்கள். “யார் என்னை தெரிந்துக்கொண்டாரோ அவருக்கு என்னைப்பற்றி தெரியும். என்னை தெரியாதவர்கள் நான் அபூதர் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். (என்னவெனில்) அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் உள்ள எனது அஹ்லுல் பைத்துகளுக்கு உதாரணமாகிறது நூஹு நபியின் கப்பலை போன்றதாகும். எவர் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் நாசமானார்” என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன்.
(மிஷ்காத் 573, ஹாகிம்: 2 – 343)

நட்சத்திரங்கள் விண்ணில் உள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. எனது அஹ்லுல் பைத்துகள் பூமியிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள். ஆகவே எனது அஹ்லுல் பைத்துகள் போய்விடுவார்களானால் பூமியிலுள்ளவர்களும் (அழிந்து) போய்விடுவர் என நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உங்களுக்கு நான் இரண்டு கலிபாக்களை விட்டு செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் திருவேதம். அது வானத்திற்கும் பூமிக்கும் மிடையே நன்கு தொடர்புடையாதயிருக்கும். அடுத்து என்னுடைய வழித தோன்றல்களான அஹ்லு பைத்துகள். அந்த இரண்டும் ஹவ்லுல் கவ்ஸரை வந்தடையும் வரை பிரிந்து விடாது.
(அஹ்மத்: 5 – 182)

என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தார்களுக்கு நல்லவரே உங்களில் நல்லவர்.

என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருப்பது அஹ்லு பைத்துகள்
கியாமத்து நாள் வரை சங்கிலித் தொடராக வந்து கொண்டிருப்பார்கள் நாம் அவர்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

* அஹ்லுல் பைத்துகளை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி

• முஃமீன்களே! உங்களுக்கு மத்தியில் நான் நபியாக அனுப்பப்பட்டு உங்களுக்கு எத்திவைக்க வேண்டியதை எத்தி வைத்ததற்காக எவ்வித பிரதி பலனையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் எனது குடும்பத்தார்களாகிய அஹ்லுல் பைதுகளிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும். என்பதனை தான் உங்களிடம் கேட்கிறேன். என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். ( சூரா: 23)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், எவர் அஹ்லுல் பைத்துகளாகிய உங்களை அல்லாஹ்வுக்காகவும், அவன் ரசூளுக்காகவும் பிரியம் வைக்க வில்லையோ அவருடைய இதயத்தில் ஈமான் நுழையாது.
(திர்மிதி, மிஷ்காத் 570)

• அல்லாஹ்வின் அன்பைப்பெற விரும்பினால் என்னை அன்பு வையுங்கள். எனது அன்பை பெற வேண்டுமானால் என் குடும்பத்தார்களை அன்பு வையுங்கள்.
(திர்மிதி, மிஷ்காத் 573)

• எவன் கைவசம் என் ஆத்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன், அஹ்லுல் பைத்துகளே! நம்மை எவராவது கோபப்படுத்திவிட்டால் அல்லாஹ் அவரை கண்டிப்பாக நரகில் நுழைத்து விடுவான்.
(முஸ்தத்ரக்: 3 – 150)

• உங்களின் குழந்தைகளுக்கு மூன்று விஷயங்களின் மீது ஒழுக்கம் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தார்கள் மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஷரீஃப் ஓதி வருதல் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
(தைலமி)

இப்போது கூறப்பட்ட நபிமொழிகளின் படி நாங்கள் அஹ்லுல் பைத்துகளிடம் அன்பாக நடந்துக்கொண்டால்தான் அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும் என்றும் அவர்களை பற்றிப்பிடித்து நடக்க வேண்டும் என்றும் அதாவது அவர்களின் சொல், செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடக்க வேண்டும். என்றும் உணர்த்துகிறது.

* தொழுகையில் அஹ்லுல் பைத்துகள் மீது ஸலவாத் சொல்லாவிட்டால்……….

“நாயகமே! நாங்கள் எங்களின் தொழுகையில் உங்கள் மீது ஸலவாத்து சொல்லும் போது எவ்வாறு சொல்ல வேண்டும்?” என்று ஸஹாபா பெருமக்கள் கேட்க, அதற்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் ஸலவாதே இப்ராஹிமாவை ஒதிகாட்டி தனது குடும்பத்தாரின் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 405 வது ஹதீஸ் விளக்கம்)

ஒருவர் நிரப்பமான கூலியை பெறவேண்டும் என்று விரும்பினால் அவர், “இறைவா! நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் மீதும், முஃமீன்களின் தாய்மார்களான அவர்களின் மனைவிமார்கள் மீதும், அவர்களின் பிச்சிளங்களின் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்துகளின் மீதும் ஸலவாத்து சொல்வாயாக. என்று கேட்க வேண்டும். (மிஷ்காத் 87) எனவே தொழுகையில் பெருமானார் மீது ஸலவாத்து சொல்லும்போது அவர்களின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்ல வேண்டும். என்று ஏவப்பட்டுள்ளோம். இந்த கருத்தை சுட்டிக்காட்டும் விதமாக, “ரசூலுல்லாஹ்வின் அஹ்லுல் பைத்துகளே! உங்களை நேசிப்பதே ஒவ்வொரு முஃமினுக்கும் இறைவன் கடமையாக்கி இருக்கிறான். என்று இறை வசனம் இறங்கி இருப்பதும் உங்கள் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் தொழுகையே இல்லை என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதும் தாங்களின் உயர்வுக்கு போதுமான ஆதாரமாகும்” என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார்கள்.

* அஹ்லு பைத்துகள் சிறந்த வஸீலாவாகும்.

“பெருமானாரின் பரிசுத்த குடும்பத்தினர் தான் நான் இறைவனை சென்றடைவதற்குரிய வஸீலாவாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் பொருட்டால் மறுமை நாளையில் எனது பட்டோலை வலது கரத்தில் கிடைக்க வேண்டுமென்று ஆதரவு வைக்கின்றேன்” என்று இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

குர்ஆனையும் ஹதீஸ்களையும் நன்றாக ஆய்ந்து தெளிந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமக்கு மறுமையில் வெற்றி கிடைப்பதற்கு தமது வணக்கத்தையோ தாம் இஸ்லாத்திற்கு செய்த பெரும் சேவைகளையோ வஸீலா என்று கூறவில்லை. மாறாக அஹ்லு பைத்துகள் தான் எனக்கு வஸீலா என்று கூறி இருக்கின்றார்கள். இதன் மூலம் வணக்கங்களை வஸீலாவாக்குவதை விட அஹ்லு பைத்துகளை வஸீலாவாக்குவது மிக்க மேலானது என்று உணர முடிகின்றது.

* பெருமானாரின் குடும்பம் மீது அன்பு

என் ஆத்மா எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். பெருமானாரின் சுற்றத்தார்களை நான் சேர்ந்திருப்பது எனது சுற்றத்தார்களை விட எனக்கு மிகவும் உகப்புக்குரியதாகும் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி)

*ஸாதாத்துமார்கள் என்றால் யாரை குறிக்கும்?

ஸெய்யித் என்பது முஸ்லிம்களிடம் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு கூறப்படும். அஸ்ஸய்யிதானி என்பது அலி رضي الله عنه அவர்களின் அருமைச் செல்வங்களான ஹஸன், ஹுஸைன் رضي الله عنه ஆகியோரை குறிக்கும்.

பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களின் வயிற்றிலிருந்து கியாம நாள் வரை வந்து கொண்டிருப்பவர்களே ஸாதாத்துகள் ஆவார்கள்.

* ஸாதாத்துமார்களின் சிறப்பு

ஸாதாத்துமார்கள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்த இரத்தத்தில் இருந்து உதித்தவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கென்று தனிப்பட்ட தகைமையும் கௌரவமும் இருக்கின்றது. என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது அல்ல. என்றாலும் குழப்பமும் குதர்க்கமும் நிறைந்த இக்கால கட்டத்தில் அவர்களின் மரியாதையை குலைப்பதற்காகவே ஒரு கூட்டம் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. எனவே ஸாதாத்துமார்களை பற்றி மாண்புகளை நாம் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பது மிக பெரிய கடமையாகும்.

* கியாமத்து நாள் வரை தொடர்ந்து வரும் சந்ததிகள்.

கியாமத் அண்மிக்கின்ற நேரத்தில் என் குடும்பத்தை சார்ந்த ஒருவர் நீதத்தை நிலை நாட்டி நேர்மையான ஆட்சி நடத்துவார்.
(மிஷ்காத்)

மஹ்தி அலைஹி ஸலாம் என் பிச்சிளத்தை சார்ந்தவர். ஃபாத்திமாவின் பிள்ளைகளிலிருந்து உதிப்பவர்.
(மிஷ்காத் – 470)

* பரிசுத்தமான பாரம்பரியம்

இவ்வுலகில் வாழ்கின்ற சாதாரண மனிதர்கள் எவரும் தமது பரம்பரைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து தமது பாரம்பரிய பட்டியலை பாதுக்காத்து வைத்திருப்பதில்லை. ஆகவே சிலருக்கு தன் தந்தையுடைய தந்தையின் பெயரே தெரியாது. ஆனால் இவ்வுலகின் பல திக்கிலும் பரவி இருக்கின்ற ஸாதாத்மார்கள் ஒவ்வொருவரும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் முதல் தாம் வரையுள்ள பாரம்பரியப்பட்டியலை ஆதாரத்துடன் அழகுற கூறுவதை காண முடியும். இதுவும் ஸாதாத்மார்களை இவ்வுலகில் வாழையடி வாழையாக வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கும் இடையில் எவ்வித கலப்படமும் இன்றி நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் பரிசுத்தமான உதிரத்தில் உதித்திக் கொண்டு இருப்பவர்கள் என்பதற்கும் நல்ல சான்றாகும்.

* அஹ்ரார்கள்

அஹ்ரார்கள் என்பதற்கு சுதந்திரமானவர்கள் என்பது அகராதி பொருள். அதாவது நரகத்தில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்கள் என்பதாகும். அவர்கள் நரகில் நுழைவதை விட்டும் சுதந்திரமானவர்களாக இருப்பதற்கு இரு காரணங்களை குறிப்பிடலாம். ஒன்று இவ்வுலகிலேயே இறைவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக இருப்பது. இரண்டாவது பெருமானாரின் புனிதமிகுந்த சதைத் துண்டிலிருந்து உற்பத்தியானவர்களாக இருப்பது.

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தார்களை சகல அசுத்தங்களிலிருந்தும் முற்றிலும் பரிசுத்தப்படுத்தி விட்டதாக வல்ல ரஹ்மான் திரு மறையில் குறிப்பிட்டு காட்டுகின்றான். அஹ்ஸாப் – 33

இறைவனால் இவ்வுலகிலேயே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் எப்படி நரகம் செல்ல முடியும்? மேலும் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட உதிரத்தை அருந்தியவரை பார்த்து நரகம் தீண்டாது என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் கூறியிருக்கையில், நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சதைத்துண்டாக இருக்கின்ற பாத்திமா நாயகி رضي الله عنه அவர்களையும் அவர்களின் சதைத்துண்டுகளான ஸாதாத்துமார்களையும் நரகம் எப்படி தீண்டும்?

* வள்ளல் நபி صلى الله عليه وسلم அவர்கள் வம்சத்தின் வளாமார் விஷேசம்

இவ்வுலகில் உதித்த வலிமார்களில் பெரும்பான்மையானவர்கள் அஹ்லு பைத்தை சார்ந்தவர்களாக இருப்பது இந்த வம்சத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக் காட்டாகும். இலட்சக்கணக்கான இதயங்களில் ஈமானிய தீபத்தை ஏற்றி நானிலம் போற்றும் நாதாக்களாக இருக்கின்ற கௌது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ரிபாய் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, ஷாதுலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, நாகூர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஏராளமான குதுபுமார்கள் அவர்களை தொடந்து வந்த மகான்களும் இப்புனிதம் நிறைந்த பாரம்பரியத்தில் பூத்த பெருமைக்குரிய மலர்களாகும்.

* ஸாதாத்துமார்களின் சேவை

ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸைய்யதுனா ஹுஸைன் رضي الله عنه அவர்களின் பேரப்பிள்ளைகளான அஹ்லு பைத்துகள் பஸராவிலிருந்து இடம் பெயர்ந்து உலகின் நாளா பகுதிக்கும் சென்று தீன் பனி புரிந்தார்கள். அவர்களில் ஒரு சிலர் வியாபார நோக்கோடும் பல பாகங்களுக்கும் சென்று அதனூடே தீன் பணியை நிலைநாட்டினார்கள். கவாரிஜிகள் போன்ற கொள்கை கெட்ட கூட்டத்தாருடன் போராடி இஸ்லாமிய நேரிய கொள்கையான ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை நிலைநாட்ட கடும் பாடுபட்டார்கள். மேலும் நீதியை, நேர்மையை நிலைநாட்டுவதற்காகவும் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். இதற்கு கர்பலா நிகழ்ச்சியோன்றே போதுமான ஆதாரமாகும். தங்களின் பாட்டனாரால் நட்டப்பட்ட இஸ்லாம் என்ற விருட்சத்தை பேணி பாதுகாத்து வளர்த்து வரும் விஷயத்தில் பேரர்களான அஹ்லுல் பைத்துகள் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார்கள். தற்போதும் இருந்து வருகிறார்கள்.

* ஸாதாத்துமார்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?

ஸாதாத்துமார்களிடம் இருந்து தென்படுகின்ற பாவங்கள் வெளிப்படையில் பாவங்களைப் போன்று தெரிந்தாலும் அந்தரங்கத்தில் பாவங்கள் அல்ல. மாறாக இறை நியதிபடி நடக்கின்ற காரியங்கள் என்று நினைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களை பாவங்களை விட்டும் நீக்கி மிகவும் பரிசுத்தபடுத்தி விட்டதாக அல்லாஹ் கூறியிருக்கிறான். (அஹ்ஸாப் 33) எனவே அவர்கள் நமது பொருட்களை எடுத்துக்கொண்டு தரமருத்தால் கூட அவர்களை பிடித்து சிறையில் தடுத்து வைப்பதோ, அல்லது நீதிபதியிடம் அழைத்துச் செல்வதோ கூடாது. என்னதான் இருந்தாலும் அவர்கள் நபியவர்களின் சதைத்துண்டு. என்பதை மறந்து விடக்கூடாது என்று முஹியத்தீன் இப்னு அரபி (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
(நூருல் அப்சார் 128)

* பெயர்களின் பொருள்கள்.

அவ்லாதுர் ரஸுல் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின்
பிள்ளைகள்.
கராபத்துர் ரஸுல் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சுற்றத்தார்கள்.
அஹ்லு பைத் என்றால் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் குடும்பத்தினர்கள்.
தங்கள்மார்கள் என்றால் கண்ணியத்துக்குரியவர்கள் என்றும்
மௌலானா என்றால் தலைவர் என்றும்
அஷ்ராப்கள் என்றால் சிறப்புக்குரியவர்கள் என்றும் பொருளாகும்.
இவை அனைத்துமே ஸாதாத்துமார்களை அழைக்கும் சிறப்பான பெயர்கள்.

* ஸதாத்துமார்களைப் பற்றி வஹ்ஹாபிகள்…

ஸாதாத்துமார்கள் என்று இப்போது யாரும் கிடையாது. எல்லோரும் கர்பலாவிலேயே ஷஹீதாகி விட்டார்கள். ஆகவே ஸாதாத்துமார்களுக்கு கண்ணியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று இன்றைய வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வரலாற்றுத் தெளிவின்மையும் ஒரு முக்கியமான காரணமாகும். ஏனெனில் அஹ்லுபைத்துகள் அனைவருமே கர்பலா போர்க்களத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள் என்று சில சரித்திர ஆசிரியர்கள் மிகைப்புக்காக கூறுவதை எதார்த்தமென்று எண்ணிக் கொண்டார்கள் போலும்.

உண்மை நிலை என்னவென்றால் ஸெய்யதுனா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் அருமை மகனார் இமாம் அலி ஸைனுல் ஆபிதீன் رضي الله عنه அவர்கள் ஷஹீதாக்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க கர்பலாப் போர் நடந்த நேரத்தில் கடும் நோயால் பீடிக்கப்பட்டு இருந்ததால் போரில் கலந்து கொள்ளவே இல்லை என்பது தான் சரித்திரம் தரும் உண்மையாகும். மேலும் ஹஸன் رضي الله عنه அவர்களின் பிள்ளைகள் 15 பேரில் உம்மு வலத் என்ற அவர்களின் மனைவிக்கு பிறந்த அப்துல்லாஹ், காஸிம், உமர் என்ற மூவர் மாத்திரமே ஷஹீதாக்கப்பட்டார்கள். ஆண்மக்கள் 8 பேரில் மேற்கூறப்பட்ட மூவர் நீங்கலாக உம்மு பிஷ்ர் என்ற மனைவிக்குப் பிறந்த ஸைத் ஹவ்லா என்ற மனைவிக்கு பிறந்த ஹஸன் அல்முஸன்னா, உம்மு வலத் என்ற மனைவிக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான், உம்மு இஹ்ஹாக் என்ற மனைவிக்குப் பிறந்த ஹுஸைனுல் அஷ்ரம், தல்ஹா ஆகிய ஐவரும் ஹஸன் رضي الله عنه அவர்களின் பெண் மக்களான உம்முல் ஹஸன், உம்மு ஹுஸைன், பாத்திமா, உம்மு ஸல்மா, ருகைய்யா ஆகிய எழுவரும் இன்னும் சில அஹ்லு பைத்துகளும் ஷஹீதாக்கப்பட வில்லை.

மாறாக கைது செய்யப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்கள். மேற்கூறப்பட்ட ஆண்மக்கள் ஐவரில் ஸைது, ஹஸன் அல் முதன்னா ஆகிய இருவருக்கும் உரிய பிச்சளங்கள் பிரபல்யமானவர்களாகும்.
(நூருல் அப்ஸார் பக்கம் -137)

* ஸெய்யதுனா இமாம் ஹஸன் رضي الله عنه அவர்களின் வழித்தோன்றல்கள்

1. அஸ்ஸய்யித் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
2. அஸ்ஸய்யித் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு)
3. அஸ்ஸய்யித் ஹஸன் அல் முதன்னா (ரலியல்லாஹு அன்ஹு)
4. அஸ்ஸய்யித் அப்துல்லாஹில் மஹ்ழு (ரலியல்லாஹு அன்ஹு)
5. அஸ்ஸய்யித் மூஸா அல் ஜவ்னி (ரலியல்லாஹு அன்ஹு)
6. அஸ்ஸய்யித் அப்துல்லாஹித் தாணி (ரலியல்லாஹு அன்ஹு)
7. அஸ்ஸய்யித் மூஸா ஸானி (ரலியல்லாஹு அன்ஹு)
8. அஸ்ஸய்யித் தாவூத் (ரலியல்லாஹு அன்ஹு)
9. அஸ்ஸய்யித் முஹம்மத் ஸாஹித் (ரலியல்லாஹு அன்ஹு)
10. அஸ்ஸய்யித் யஹ்யஸ் ஸாஹித் (ரலியல்லாஹு அன்ஹு)
11. அஸ்ஸய்யித் அப்துல்லாஹ் ஹந்தகூஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
12. அஸ்ஸய்யித் அபூ ஸாலிஹ் மூஸா ஜங்கி தோஸ்த் (ரலியல்லாஹு அன்ஹு)
13. ஷைகுனா குத்புல் அக்தாப் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல் ஜீலானி (ரலியல்லாஹு அன்ஹு)
14. அஸ்ஸய்யித் அப்துர் ரஸ்ஸாக் (ரலியல்லாஹு அன்ஹு)
15. அஸ்ஸய்யித் இமாமுத்தீன் ஸாலிஹ் நஸ்ர் (ரலியல்லாஹு அன்ஹு)
16. அஸ்ஸய்யித் அபூ நஸ்ர் முஹ்யித்தீன் (ரலியல்லாஹு அன்ஹு)
17. அஸ்ஸய்யித் முஹம்மது லுஹூர் அஹ்மத் (ரலியல்லாஹு அன்ஹு)
18. அஸ்ஸய்யித் ஹஸனுல் பக்தாதி (ரலியல்லாஹு அன்ஹு)
19. அஸ்ஸய்யித் முஹம்மதுல் பக்தாதி (ரலியல்லாஹு அன்ஹு)
20. அஸ்ஸய்யித் அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
21. அஸ்ஸய்யித் மூஸா (ரலியல்லாஹு அன்ஹு)
22. அஸ்ஸய்யித் ஹஸன் குத்ஸி (ரலியல்லாஹு அன்ஹு)
23. அஸ்ஸய்யித் ஷாஹுல் ஹமீதுந் நாஹூரி கஞ்ச ஸவாஇ காதிர் வலி ஆண்டகை (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

* ஸைய்யிதுனா இமாம் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வழித்தோன்றல்கள்

உலகப்பிரசித்தி பெற்ற அரபி அகராதியான முன்ஜிதில் ஹுஸைன் رضي الله عنه அவர்களின் வாரிசுகளைப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பதுடன் அவர்களில் ஒவ்வொருவருடைய வழித்தோன்றலுக்கும் உரிய பெயர்களையும் அதில் கூறப்பட்டுள்ளது.

1. ஸைய்யிதுனா அலீ (ரலியல்லாஹு அன்ஹு)
2. அவர்கள் மகன் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு)
3. அவர்கள் மகன் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு)
4. அவர்கள் மகன் முஹம்மதுல் பாகிர் (ரலியல்லாஹு அன்ஹு)
5. அவர்கள் மகன் ஜஃபர் ஸாதிக் (ரலியல்லாஹு அன்ஹு)
6. அவர்கள் மகன் மூஸல் காழிம் (ரலியல்லாஹு அன்ஹு)
7. அவர்கள் மகன் அலீ ரிழா (ரலியல்லாஹு அன்ஹு)
8. அவர்கள் மகன் முஹம்மத் ஜவாத் (ரலியல்லாஹு அன்ஹு)
9. அவர்கள் மகன் அலி ஹாதி (ரலியல்லாஹு அன்ஹு)
10. அவர்கள் மகன் ஹஸன் அஸ்கரி (ரலியல்லாஹு அன்ஹு)
11. அவர்கள் மகன் முஹம்மத் மஹ்தி (ரலியல்லாஹு அன்ஹு)

அஹ்லுபைத்துகள் அனைவரும் ஹிஜ்ரி 61ல் நடை பெற்ற கர்பலாவில் ஷஹீதாகி இருந்தார்களானால் இந்தப்பாரம்பரிய பட்டியல் எப்படி வந்திருக்க முடியும்? மேலும் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஹிஜ்ரி 33ல் ஷஃபான் மாதம் 5-ம் நாள் வியாழக்கிழமை அன்று மதீனாவில் பிறந்தார்கள். (அதாவது அவர்களின் பாட்டனாரும் நான்காவது கலீபாவுமான ஸையிதுனா அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வபாத்தாக ஈராண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டார்கள்) 57 ஆண்டுகள் வாழ்ந்து 11 ஆண் மக்களையும் 4 பெண் மக்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து ஹிஜ்ரி 94ல் முஹர்ரம் 12 –ம் நாள் இவ்வுலகை விட்டும் மறைந்து ஜன்னதுல் பகீஇல் தனது பெரிய தகப்பனார் இமாம் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது (நூருல் அப்ஸார் பக்கம் 115) சிந்தனைக்குரியதாகும். மேலும் இன்று உலகெங்கும் பரவி இருக்கின்ற ஹுஸைனி ஸாதாத்துமார்கள் அனைவரும் அலீ ஸைனுல் ஆபிதீன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலம் உண்டான பிச்சளங்களாகும். எனவே தான் அவர்களுக்கு அபுல் ஹுஸைனிய்யீன் (ஹுஸைன் ஸாதாத்துமார்களின் தந்தை) என்று பெயர் வந்தது என்று தபாகாதுஷ் ஷஃரானி பாகம் 01 பக்கம் 26, 31ல் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஹ்லுபைத்துகள் அனைவரும் கர்பலாக்களத்திலே ஷஹீதாகி இருந்தால் இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கொள்ளுப் பேரன் (பேரனின் மகன்) என்று எப்படி ஆகி இருக்க முடியும்? மேலும் அவர்கள் ஹிஜ்ரி 80ல் பிறந்து 150ல் மறைந்த இமாம் அபூ ஹனீபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஞானாசிரியராகத் திகழ்ந்தார்கள். என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையும் எப்படி வந்திருக்க முடியும்? (தபகாத் பாகம் 01 பக்கம் 32) மேலும் ஸாதாத்துமார்கள் எவரும் இப்போது இல்லை என்று வைத்துக் கொண்டால் எனது குடும்பத்தினர்களாகிய அஹ்லுபைத்துகள் இப்புவியிலுள்ளோருக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனது குடும்பத்தினர் போய் விட்டால் இந்தப் புவியும் அதிலுள்ளோரும் அழிந்து போய்விடுவார்கள். என்று நபியவர்கள் கூறியுள்ள கூற்றின் படி (மிஷ்காத் 573) இப்புவி எப்போதோ அழிந்திருக்க வேண்டும். மேலும் உங்களுக்குக் குர்ஆனையும் என் குடும்பத்தினரையும் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பற்றிப்பிடித்து நடக்கின்றவரை வழி தவறமாட்டீர்கள் என்று அவர்கள் கூறிய ஹதீஸும் பொய் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். நஊதுபில்லாஹ்!!

” நபியின் குடும்பத்தார்களே! உங்கள் மீது நான் அன்பு வைப்பதால் சிலர் என்னைப் பாவி என்கின்றனர். வேறு சிலர் காபிர் என்று கூட சொல்கின்றனர். ஆனால் எனக்கோ உங்களைத் தவிர வேறெவரும் உற்ற நண்பர்களும் இல்லை. (உங்களின்) சத்தியப் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையும் இல்லை ” என்று குமைத் என்ற பெரியார் தனது கவிதையில் குறிப்பிடுகிறார்கள். (லுக்கத்தூர் பக்கம் 102) மேலும் அஹ்லுபைத்துகள் பற்றியும் அவர்களின் மகத்துவம் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் நூருல் அப்ஸார் போன்ற கிரந்தங்களில் வந்துள்ளன.

ஆகவே நாம் யாவரும் ஸாதாத்துமார்களின் மகத்துவத்தை அறிந்து அவர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வோமாக! அவர்களின் பொருட்டால் ஈருலக வெற்றியையும் அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!!

———————————————————————–

விதியின் அமைப்பு ஓர் நினைவூட்டல் – அதிரை ஏ.எம்.ஃபாரூக்


நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.

அல்லாஹ்வின் கட்டளைகளை பேனிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !

அறிந்து கொள்க !

மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை  கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி

மற்றொரு அறிவிப்பில்

அல்லாஹ்வின் கட்டளைகளைப்  பேணிக்கொள் !

அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !

உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !

உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.

அறிந்து கொள்க !

உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.

உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.

அறிந்து கொள்க !

நிச்சயமாக உதவி பொருமையுடன் உள்ளது,

நிச்சயமாக மகிழ்ச்சி கஸ்டத்துடன் உள்ளது,

நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

இதைப் படிப்பவர்களில் அனேகர் இதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை ஏற்கனவே அறிந்தவர்களாக இருந்தாலும் அற்ப உலகின் இன்ப வாழ்வு சிலநேரம் விதியின் அமைப்பை மறக்கடிக்கச் செய்து வரம்பு கடக்கச் செய்து விடுவதால் இம்மடல் ஓர் நினைவூட்டல் மட்டுமே.

முந்தவும் செய்யாது…

மனிதன் உயிர் வாழும் கால அளவு அவனுடைய விதியில் எழுதப்பட்டதிலிருந்து வினாடிப் பொழுதுக் கூட முந்தவும் செய்யாது, பிந்தவும் செய்யாது என்பதை நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நடந்த பல அதிசயத்தக்க சம்பவங்களின் மூலமாக மெய்சிலிர்த்திருக்கின்றோம்.

அறவே ஆக்ஸிஜன் புக முடியாத 200அடி, 300அடி அதள பாதாளத்தின் கும்மிருட்டுக்குள்; சிறு குழந்தைகள் விழுந்து இரண்டு, மூன்று நாட்கள் வரை மயங்கிய நிலையில் கிடந்து வெளியில் கொண்டு வந்து உயிர் பிழைத்த அதிசயத்தைக் கண்டு மெய்சிலிர்த்திருக்கின்றோம்.

சமீபத்தில் ஏமன் நாட்டு விமானம் ஒன்று காமரோஸ் நாட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது கடலில் விழுந்து நொருங்கி அனைவரும் உயிரிழந்து சில சடலங்கள் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்த பொழுது அதனூடே 14 வயது சிறுமி பல மணிநேரம் மிதந்து உயிர் பிழைத்த அதிசயத்தைப் படித்து மெய்சிலிர்த்திருக்கின்றோம்.

ஒரே ஒரு இரவு இறந்த சடலத்துடன் பொழுது விடியும் வரை எவராலும் தணித்து உறங்கி எழ முடிவதில்லை. நேற்று வரை உயிருக்குயிராய் உற்ற துணையாய் இருந்தவர் இன்று செத்த சடலம்  அதுவும் பேயாக மாறிப் பிடித்து விடுவாரோ என்ற பீதியில் உறைந்து இவரும் சேர்ந்து இறந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

நடுக்கடலில் நள்ளிரவு நேரத்தில், சடலங்களுக்கு மத்தியில் கழுத்து எலும்பு முறிவுடனும், தீக்காயங்களுடனும் கை கால்களை அசைத்துக் கொண்டு பல மணி நேரம் அந்த சிறுமிப் போராடி இருக்கின்றார் என்றால் அது அந்த சிறுமியால் அதுவும் அந்த நிலையில் முடிகின்றக் காரியமா ?

முடியாது !

காரணம் !

கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்ததால் நிமிர்ந்து நீச்சலடிக்க முடியாது,

நிமிறாமல் படுத்த நிலையில் நீச்சலடித்தால் வாய் வழியே உப்பு நீர் உட்புகுந்து மூச்சுத் திணறி உடல் கடலுக்கடியில் தாமாக இழுத்துச் சென்று விடும்.

நீச்சலடிக்க முடிந்தாலும்

எத்தனை மணிநேரம் ?

எவ்வளவு தூரம் ?

எந்த திசை அறிந்து எங்கே செல்வது ?

மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை அச்சிறுமி மிதந்து கொண்டிருந்த இடத்தில் அலைகள் அடங்கிக் கொண்ட அதிசயம், அலைகள் அடித்திருந்தால் பிணங்களுடன் சேர்ந்து சிறுமியும் இழுத்துச் செல்லப்பட்டிருப்பார்.

மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும் வரை கடல்வாழ் உயிரிணங்கள் தடுக்கப்பட்ட அதிசயம், கடல்வாழ் உயிரிணங்கள் அங்கு வந்திருந்தால் இரத்த ஓட்டம் நின்று விட்ட செத்த சடலங்களை விட்டு விட்டு இரத்த ஓட்டமுள்ள சிறுமியை கொத்தி கடலுக்குள் இழுத்து சென்றிருக்கும்.

பாலுங் கிணற்றில் வீசப்பட்ட சிறுவர் யூசுப் நபியை வழிப்போக்கர்கள் அக்கிணற்றில் தண்ணீருக்காக வாளியை விடும்வரை பாதுகாத்து வைத்திருந்து வாளியை பற்றிப் பிடித்துக் கொண்டு மேலெழச் செய்த வல்லமை மிக்க இறைவனுக்கு (அல்குர்ஆன் 12:9 ) இதுப் பெரிய விஷயமல்ல மீட்புப் படையினரின் பார்வை அந்த சிறுமியின் மீதுப்படும்வரை அலைகளையும், மீன்களையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.

தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அந்த சிறுமி உலகில் உயிர் வாழும் கால அளவு மீதமிருந்ததால் அவளை மட்டும் காப்பாற்றி கரை சேர்ப்பது இறைவனின் பொறுப்பில் உள்ளது என்பதால் அதிசயமாய் உயிர் பிழைத்த சிறுமி என்ற தலைப்பிட்டு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.http://www.meelparvai.net/index.php?view=article&catid=115%3A2009-02-12-05-17-06&id=719%3A2009-07-15-10-24-17&option=com_content&Itemid=322

உயிரிணங்களைப் படைத்து அவைகள் வாழ்வதற்கு ஏற்றாற்போல் பிரபஞ்சத்தை வடிவமைத்த படைப்பாளன் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தையும், அனைத்து உயிரினங்களையும் அழித்து மீண்டும் எழுப்பும் சர்வ சக்தி படைத்தவன். என்பதை உறுதியாக நம்புகிறோம்.

பிந்தவும் செய்யாது…

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதீனாவிலிருந்து மக்காவிற்கு வருகை தந்திருந்த ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்கள் உமையா என்ற இறைமறுப்பாளரை சந்தித்து நீ விரைவில் கொல்லப்படவிருப்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்றுக்கூறினார். அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார் புகாரி 3632.

இதைக் கேட்டதும் இறைத்தூதர் அவர்களுடைய தூதுத்துவத்தை அதுவரை மறுத்து வந்த உமையா இறைத்தூதர் அவர்களுடைய முன்னறிவிப்பு நிகழ்ந்தே தீரும் என்று உறுதியாக நம்பினார்.

இனி மக்காவை விட்டு வெளியில் போக மாட்டேன் என்று தன் மனையிவிடம் சத்தியம் செய்துக் கூறி விட்டு மரணப் பிடியிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தினார்.

சிறிது நாட்களில் பத்ரு யுத்தம் முடிவானதும் இந்த யுத்தத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்று ஓடி ஒளியத் தொடங்கினார் ஆனால் விதி அவரை விடாமல் விரட்டியது. நபிகள் நாயகத்தின் முன்னறிப்பை நம்பி இன்னார் ஓடி ஒளிகிறார் என்றத் தகவல் அபூஜஹ்லுக்கு தெரியப்படுத்தியதும் அபூஜஹ்லே அவரை நேரடியாக சென்று சந்தித்து நரேந்திர மோடி ஸ்டைலில் பேசி யுத்தத்திற்கு தயார் படுத்தி விடுகிறார்.

மன்னரே நேரடியாக வந்து மதவெறியூட்டியதால் வேறுவழியின்றி ஒத்துக்கொண்டவர் மரண பாதுகாப்பு வளையத்தை யுத்தகளத்தில் போட்டுக் கொள்வதற்கான தீவிர ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து கொண்டார். தோல்வியைத் தழுவும் நிலை உருவானால் யுத்த களத்திலிருந்து விரைந்து தப்பித்து விடுவதற்காக பயிற்சி அளிக்கபட்ட விலை உயர்ந்த ஒட்டகம் ஒன்றையும் வாங்கிக் கொண்டார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார் நூல் புகாரி 3950.

யுத்தகளத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்ட பொழுதிலும் இவருடைய முன்னாள் அடிமை உறுதி மிக்க ஏகத்துவ வாதியாகிய பிலால்(ரலி) அவர்களின் பார்வையை இவர் மீது இறைவன் திருப்பி விட்டான். பிலால்(ரலி) அவர்களின் பார்வை உமையாவின் மீதுப் பட்டதை அறிந்த உமையாவின் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் குறுக்கிட்டு பிலால் (ரலி) அவர்கள் எறியும் ஈட்டியோ, அம்போ அவரைத் தாக்கி விடாமல் இருப்பதற்காக உமையாவைக் கட்டி அனைத்து கீழே தள்ளி மேலேப் படுத்து மறைத்துக்கொள்கிறார் இவரும் மரண பீதியில் தப்பித்தால் போதும் என்று ஆடாமல் அசையாமல் கிடக்க அவரது விலாப் புறத்தின் சிறிய இடைவெளியில் பிலால்(ரலி) அவர்கள் ஈட்டியை சொருகக் கதை முடிந்து விடுகிறது. அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப்(ரலி) அறிவித்தார். நூல் புகாரி 2301.

தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் அவர் கொல்லப்படவிருக்கும் செய்தியை இறைத்தூதர் வாயிலாக முன்கூட்டியே அறிந்து தனது வாழும் காலஅளவை நீட்டித்துக் கொள்வதற்காக அவர் செய்துகொண்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் விழலுக்கு இரைக்கும் நீராகியது.

மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி…

பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் துண்புருத்தலில் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மதீனத்து மக்களில் சிலர் பெருமானார்(ஸல்) அவர்களை சந்தித்து பாதுபாப்பு வழங்குவதாக வாக்குறுத்தி அளித்து மதீனாவிற்கு அழைத்தனர் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் உத்தரவு வந்ததும் மதீனா சென்றார்கள் மதீனா வாசிகள் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யாமல் பாதுகாப்பு வழங்கினார்கள் அதனாலேயே அன்சாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரை அவர்களுக்கு பெருமானார்(ஸல்) அவர்கள் சூட்டி அழைத்தனர்.

பெருமானார்(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பின் அவர்களது பேரர் ஹூசைன்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கூபா வாசிகளில் சிலர் அவர்களை சந்தித்து நாங்கள் முழு ஒத்துழைப்புத் தருகிறோம் யஜீதுடைய ஆட்சியை அகற்றவதற்காக படையெடுத்து வாருங்கள் என்று வாக்குறுதி அளித்து கூபாவிற்கு அழைத்தனர் அவர்களின் வாக்குறுதியைமட்டும் நம்பி குடும்பத்தார்களுடன் ஹூசைன்(ரலி) அவர்கள் படைநடத்தி கூபாவிற்குச் சென்றனர் ஆனால் வாக்குறுதி அளித்த கூபாவாசிகள் ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்துப் பின்வாங்கி விட்டனர் அதனால் கர்பாளாவில் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஷஹீதாக்கப்பட்டனர். அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அதைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது.


உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ. உம்மை எது வந்தடைந்து விட்டதோ

சிலர் தனது தி றமையினால் சாதித்து விட்டதாக பீற்றிக் கொள்வர்.

பலர் தனக்கு திறமை இருந்தும் சாதிக்க முடிய வில்லையே என்று ஏங்கித் தவிப்பர்.

இரண்டும் தவறு !

யாருடைய தனித் திறமையினாலும் எதையும் சாதிக்க முடியாது,

எண்ணங்கள் மட்டும் அலைபாயும்,

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்.

ஆயிரத்தில் ஒன்றுக் கூட எண்ணிய படி நிகழ்வதில்லை, நிகழாது.

ஏற்கனவே இறைவனால் எழுதி அனுப்பியது மட்டுமே நிகழ்ந்துள்ளது, நிகழும்.

கோடி கோடியாய் சொத்துக்களைக் குவித்து வைத்திருந்தும் அதை ஆள்வதற்கு ஒரே ஒரு வாரிசுக் கூட இல்லாமல் ஏங்கிக் கொண்டிருப்பவரின் பக்கதில் வாடகை குடியிருப்புகளில் பரம ஏழைகள் பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

நோயும் பாயுமாய் பல வருடங்கள் மல,ஜலத்துடன் மரணத்தைக் கூவி அழைத்தும் அவரது அழைப்பை ஏற்றுத் தழுவிக் கொள்ள மறுத்து, நோய் நொடி இல்லாமால் வாட்ட சாட்டமாக இருந்த பக்கத்து வீட்டு வாலிபனை வாரி சுருட்டிக் கொண்டு சென்று விடும் அகால மரணம்.

பல லட்சத்தை முடக்கி பல வருடங்கள் மருத்துவம், பொறியியல் என்றுப் படித்து விட்டு அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு நிகரான வருமானத்தை பாலர் பள்ளியில் கூட சென்றுப் பயிலாத பக்கத்து வீட்டுக்காரர் ப்ளாட்பாரக் கடை நடத்தி ஈட்டிடுவார்.

சமீபத்தில் பங்குசந்தைகளில் முதலீடுசெய்த ஏராளமான திறமைசாலிகளின் பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை அடைந்தது.

பல்லாயிரம் கோடிகளைக் கொண்டு ஏற்கனவே உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அம்பானி சகோதரர்களின் பொருளாதாரம் கடந்த பட்ஜெட்டில் மட்டும் தாமாக பலகோடிகளை அதிகரித்துக் கொண்டன.

வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்களின் வரலாற்றைப் புரட்டினால் வாழ்ந்தவர்கள் புத்திசாலிகளாகவும், வீழ்ந்தவர்கள் முட்டாள்களாகவும் இருந்ததாக அதிகபட்சம் வரலாற்றில் இருக்காது.

என்ன தான் எண்ணெயைத் தடவிக் கொண்டு மண்ணில் உருண்டுப் புரண்டாலும் ஒட்டுகிற மண்ணு தான் ஒட்டும் என்று (இறைவனால் எழுதப்பட்டதையே அடைந்து கொள்ள முடியும் எழுதப்பட்டதற்கு மேல் அதிகமாக எதையும் அடைந்து கொள்ள முடியாது என்பதை விளங்கும் விதமாக) இன்றுக் கூறுகின்றனர்.

இதையே 1400 வருடங்களுக்கு முன்பு ஏகஇறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் எளிய நடையில் மிக அழகாக உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல. உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல. என்று எடுத்துக் கூறினார்கள்.

உமது செழிப்பான காலங்களில்…

நம்முடைய வளமான காலங்களில் இறைவனுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டால் நம்முடைய நெருக்கடியான காலங்களில் இறைவன் நமக்கு துணைப் புரிவான்.

பெருமானார்(ஸல்) அவர்களுடைய வளமான காலங்களில் இறைவழியில் வாரி வழங்கினார்கள், இளமைக் காலத்தில் இறைவணக்கத்தில் மூழ்கித்திளைத்தார்கள், எளிமையையும், தன்னடக்கத்தையும் பேணினார்கள் அதனால் அவர்களின் நெருக்கடியான காலங்களாகிய பத்ரு, கைபர் போன்ற காலங்களில் அவர்களது பிரார்த்தனையை ஏற்று இறைவன் உதவிப் புரிந்தான், உஹதில் உயிரைக் காப்பாற்றினான், யூதப்பெண் உணவுக்கழைத்து இரைச்சியில் கலந்துகொடுத்த விஷத்தின் வீரியத்தை கட்டுப்படுத்தினான். உமது செழிப்பான காலங்களில் அல்லாஹ்வை அறிந்து கொள். அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !  உமது கஸ்ட்டமான காலத்தில் அவன் உம்மை அறிவான் உமக்கு உதவுவான்.

படைப்பாளன் அல்லாஹ் மனிதனைப் படைக்கும் பொழுதே அவன் உலகில் உயிர் வாழும் கால அளவு, அடைந்துகொள்ளும் பொருள்வளங்கள் போன்றவைகள் துல்லியமாக எழுதப்பட்டே உலகுக்கு அனுப்பப்படுகின்றான். உயிர் வாழும் கால அளவிலிருந்து அவனால் முந்தவும் முடிவதில்லை, பிந்தவும் முடிவதில்லை அதேப்போல் பொருள் வளங்களை அதிகரிக்கச் செய்யுவும் முடியவில்லை, அதுக் குறைவதை நிருத்தவும் முடிவதில்லை விதியில் எழுதப்பட்டுள்ளதை விட எண்ணியப் படி எதையும் அடைந்துக் கொள்ள முடியவதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களுடைய தோழர்களுடைய இதயத்தில் விதியின் அமைப்பை உறுதியாகப் பதிய வைத்தக் காரணத்தால் உயிருக்கு பயந்து எவருடைய அச்சுருத்தலுக்கும் அஞ்சாமல் சத்தியத்தில் நிலைத்து நின்றார்கள், இறைவனால் நமக்கு விதியாக்கப்பட்டதை நாம் அடைந்தே தீருவோம் அது நம்மை விட்டுத் தவறிச் செல்லாது என்ற உறுதியான நம்பிக்கையில் பொருளாதாரம் ஈட்டுவதில் ஹராம் – ஹலால் பேணினார்கள்.

சுரண்டலில் ஈடுபடவில்லை.

அரசப் பதவிக்காக தன்மானத்தை இழக்க வில்லை,

துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அஞ்சி தற்கொலைக்கு முயற்சிக்க வில்லை,

வறுமைக்கும், வரதட்சனைக்கும் பயந்து பெண் சிசுவை கருணை கொலை செய்ய முயற்சிக்க வில்லை,

படிப்பினைகள்.

நாமும் நம்முடைய வளமான காலங்களில் ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் போதே இறைதிருப்பியைப பெறும் விதம் நற்செயல்கள் புரிய வேண்டும்.

நல்லவற்றயே எண்ண வேண்டும்,

இறைவன் நமக்கு உதவிப் புரிவான்.

நாம் எண்ணியதற்கு மாறாக நடந்துவிட்டால் விதியின் அமைப்பை நினைத்து சகித்துக்கொள்ள வேண்டும்.

அதிருப்தி அடையும் காரியம் நிகழ்ந்து விட்டால்

அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்.

ஒவ்வொரு நிலையிலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனக்கூற வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – நூல் – ஹாகிம்

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

———————————————————————————————-
நன்றி:-அதிரை ஏ.எம்.ஃபாரூக்.
__________________________________________________________________