தொகுப்பு

Posts Tagged ‘சிறார்கள்’

பேனா பிறந்த விதம்


நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா? இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஆரம்பத்தில் அவ்வாறு இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

`லத்தீன்’ மொழியில் `பென்னா‘ என்றால் `பறவையின் இறகு’ என்று பொருள். `பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் `பென்’ என்றும், தமிழில் `பேனா’ என்றும் மாறியது.

ஐந்தாம் நூற்றாண்டில் `இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18-ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780-ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார். 1809-ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி `நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.

ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு `நிப்’ செய்தார். `நிப்’பின் முனையில் `இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882-ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு `நிப்’பை கண்டுபிடித்தார்.

1859-ல் முதல்முறையாக `ஊற்றுப் பேனா’ (`பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883-ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

நன்றி:-தினத்தந்தி


தகவல் பெட்டி-03


v     அட்லாண்டிக் பெருங்கடல்தான், உலகில் அதிக உப்பு நிறைந்த பெருங்கடல் (உலகிலேயே உப்பு அதிகமுள்ள இடம் Dead Sea. இது சற்றுப் பெரிய ஏரி போல அலைகளற்று காணப்படும்!)

v     இங்கிலாந்து நாட்டில் அதன் அரசரோ, அரசியோ போகக்கூடாத இடம் House of Commons. இந்தியாவின் லோக்சபாவுக்கு இணையான இடம் அது.

v     தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ் பெர்க்கில்தான், உலகின் மிக ஆழமான சுரங்கம் உள்ளது.

v     கேலிபோர்னியாவில் உள்ள ‘டெத் வேலி’ (Death Valley) தான் உலகிலேயே மிகவும் வறண்ட பகுதி.

v     மிகப்பெரிய கால்வாயான பனாமா கால்வாயின் மொத்த நீளம் 64 கிலோ மீட்டர்.

v     பண்டைய ஏழு அதிசயங்களுள் ஒன்று ‘ஜீயஸ்’ (Zeus) கடவுளின் சிலை. கிரேக்கக் கடவுள்களில் மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்பட்டவர் இந்த ‘ஜீயஸ்’!

v     வடதுருவத்தை அடைந்த முதல் மனிதனின் பெயர் ராபர்ட் பியரி (Robert Peary).

v     அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அதற்குப் பெயர் கொடுத்தவர் அமெரிக்கோ வெஸ்புகி.

v     பெருங்கடல்களுள் சிறியது ஆர்டிக் பெருங்கடல்.

v     உலகின் மிகப் பரந்த தெரு, நியூயார்க்கில் உள்ள ‘பிராட்வே’.

v     இரான் நாட்டின் பழைய பெயர் ‘பெர்ஸியா’.

v     வெட்டுக்கிளியின் காதுகள், அவற்றின் கால்களில் இருக்கின்றன.

v     பேரரசர்அக்பரின்நினைவிடத்தின்பெயர்‘சிக்கந்த்ரா’ (Sikandra).

v     ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது காஞ்சிபுரம்.

v     எகிப்திய பிரமிடுகளில் பழங்கால ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது, குலூவின் பெரிய பிரமிடு (Great Pyramid of Khulu).

********************************************************************

நன்றி:- சு.வி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை – மு.அ. அபுல் அமீன் நாகூர்.


சின்னச் சின்ன சிட்டுக் குருவி

சிறகு விரித்து பறக்கும் குருவி

வண்ண வண்ண சாம்பல் நிறத்தில்
வனப்பாய் வானில் பறக்கும் குருவி!

கொட்டிக் கிடக்கும் தானியக் குவியலை
கூடி வந்து கூடி நின்று
தொட்டு தொட்டு கொத்தித் தின்று
கூடி பறந்து கூடு செல்லும்!

ஒன்றாய் வராமல் ஒன்றோடொன்று
சேர்ந்து வரும் சிட்டுக் குருவி
நன்றாய் செப்பும் பாடம் செவியுறுவீர்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

##############################################################


——————————————————————————————-

நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். அஞ்சலக அதிகாரி(ஓய்வு), செல்பேசி:-00919943469691

தலைவர்:- ‍பெற்றோர் ஆசிரியர் கழகம் நாகூர், கௌதிய்யா துவக்கப்பள்ளி நாகூர், கிராம கல்விக்குழு நாகப்பட்டினம்.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியர் சங்கம் நாகப்பட்டினம்,  ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

உறுப்பின‌ர்:‍‍‍‍‍‍- த‌மிழ்நாடு நுக‌ர்வோர் இய‌க்க‌ம்.

நன்றி:- தினமணி 13-02-2010

இவர்களின் படைப்புகளில் சில

பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

ஆஷூரா நாளில் ஆரம்பம்