தொகுப்பு
மாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்! – ஜி.லட்சுமணன் #HealthTips
ஆன்டிபயாடிக் மாத்திரைகள் – பால் பொருள்கள்
பாக்டீரியா தொற்றுக்காக உட்கொள்ளும் பென்சிலின் (Penicillin) டெட்ராசைக்லின் (Tetracycline), சிப்ரோஃப்ளாக்ஸின் (Ciprofloxacin) போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளுடன், பால் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடக் கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்துவிடக்கூடியவை.
வலி நிவாரணி மருந்துகள் – குளிர்ப்பானங்கள்
தலைவலி, தசைபிடிப்பு, தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் இபுப்ரோஃபென் (Ibuprofen) மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.
நுரையீரல் பாதிப்பு தொடர்பான மருந்துகள் – காஃபின் பானங்கள்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Broncities) மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு தியோபைலின் (Theophylline), அல்புட்ரால் (Albuterol) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள ‘காஃபின்’ நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.
சிறுநீரகக் கோளாறு மருந்துகள் – வாழை, கீரை, தக்காளி, சோயா
சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் கேட்டோப்ரில் (Captopril), எனாலாப்ரில் (Enalapril), ராமிப்ரில் (Ramipril) போன்ற மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது. இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.
இதயநோய் தொடர்பான மருந்துகள் – மதுப்பழக்கம்
ஐசோசோபைடு டினிட்ரேட் ( Isosorbide dinitrate), நைட்ரோகிளிசரின் (Nitroglycerine) போன்ற மாத்திரைகளை, கார்டியாக் அரெஸ்ட், இதயத் துடிப்பில் பாதிப்பு போன்ற இதயநோய் பிரச்னைகளுக்காக கொடுக்கப்படுபவை. ‘ஆன்டி ஆர்த்திமிக் மருந்து’ என்னும் இந்த வகை மருந்துகளை மது அருந்திய பிறகு உட்கொண்டால், குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாகும். இந்த நிலை ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கலாம். இந்த மாத்திரைகள் மட்டுமல்ல எந்த மாத்திரையை உட்கொண்டாலும் மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளையும் சாப்பிட்டிருந்தாலும், மருந்தின் செயல்படும் தன்மையைக் குறைக்கும். எனவே, நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும் மருந்து – திராட்சைப்பழம்
கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் ஆட்ரோவாஸ்டேட்டின்,(Atorvastatin) ஃப்ளூவாஸ்டட்டின் (Fluvastatin) லோவஸ்டட்டின் (Lovastatin), சிம்வஸ்ட்டட்டின் (Simvastatin), ரோசுவஸ்டட்டின் (Rosuvastatin), ப்ராவஸ்டாட்டின் (Pravastatin) போன்ற மருந்துகளை உட்கொள்ளும்போது, அவற்றுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த மருந்துகளை உட்கொள்ளும்போதும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
தைராய்டு ஹார்மோன் சுரக்கும் மருந்துகள் – சோயா, நார்ச்சத்துகள்
தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் லிவோதைராக்ஸின் (Levothyroxine) போன்ற உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.
மனஅழுத்த மருந்துகள் – பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி, கொத்தமல்லி
`மோனோஅமைன் ஆக்சிடேஸ் தடுப்பான்கள்’ (Monoamine oxidase inhibitor) என்றழைக்கப்படும் டிரானில்சைப்ரோமின் (Tranylcypromine), பினில்ஸைன் (Phenelzine), நிலாமைடு (Nialamide) போன்ற மருந்துகளுடன் கொத்தமல்லி, பாலாடைக்கட்டி, மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணக் கூடாது.
ரத்தம் தொடர்பான நோய்கள் – பூண்டு, இஞ்சி, மசாலா
ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய்களுக்கு வார்ஃபாரின் (Warfarin) மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப் பொருள்கள் (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது.
அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்.
பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை…
* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.
* மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
நன்றி:- விகடன். & பொதுநல மருத்துவர் எம்.அருணாச்சலம்
- பருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா!
- பாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்
- புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்
- மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்
- மது உள்ளே.. மதி வெளியே..
- மருந்தும் மறக்கக்கூடாதவைகளும்
- மறந்துபோன மருத்துவ உணவுகள்
- மழலையில் மலரும் மொட்டுகள்
- மூட்டு வலி
- மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
- ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க
- ரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்
- வாய்ப் புண்
- வாழ வைக்கும் வைட்டமின்கள்
- வெந்நீர் மகத்துவம்(மருத்துவம்)
கூந்தலின் ஜீவன்! – சந்தியா செல்வி
குழாயில் தண்ணீர் வராதது, டீன் ஏஜ் பையன் சொன்ன பேச்சு கேட்காதது போல முடி கொட்டுவதும் நிரந்தரக் கவலையாகி விட்டது. ‘அந்தக் காலத்துலயெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி ரெண்டு மடங்கு முடி ஒரு சடைக்கு மட்டும் இருக்கும்‘ என்று வருந்துகிற பலரும் ‘ஏன் இப்படியாச்சு?’ என்று யோசிக்கிறோமா?
‘‘யோசிப்பது மட்டுமல்ல.. கொட்டுவதற் குத் தடை போடுவதும் அவசியம்‘‘ என்கிறார் ரம்யா’ஸ் பியூட்டி பார்லர் வைத்திருக்கிற சந்தியா செல்வி. அவர் தருகிற கூந்தல் டிப்ஸ்களைப் பார்க்கலாமா?
‘பொடுகு, பேன், செம்பட்டை, முடி உதிர்தல், வறண்ட கூந்தல்’ என்று ஒவ்வொன்றுக்குமான ஸ்பெஷலிஸ்ட் கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தகுந்த அழகுக் கலை நிபுணரின் அறிவுரையில் இவற்றை உபயோகிக்கலாம்தான். ஆனால், விளம்பரத்தில் மயங்கி மாற்றிக் கொண்டே இருந்தாலோ, உங்கள் கூந்தலுக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்து விட்டாலோ பிரச்னைதான். எனவே, தரமான ஷாம்புவுக்கு முதலில் மாறுங்கள்.
உணவில் தொடங்குகிறது கூந்தல் ஆரோக்கிய ரகசியம். கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள பொருட்கள் இவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோடுகூட, வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது பற்றிப் பார்க்கலாம்.
சாதாரணமானது, எண்ணெய்ப் பசை கொண்டது, வறண்டது, இரண்டும் கலந்தது என்று தலைமுடி நான்கு வகைப்படும்.
வேர்க்காலில் தொடங்கி அடிமுடிவரை பளபளவென்று ஆரோக்கியமாக இருப்பதுதான் சாதாரண கூந்தல். மற்றவர்கள் பொறாமைப்படும்படியான கூந்தல் கொண்ட நீங்கள் வாரம் ஒருமுறை அதற்கு எண்ணெய் மசாஜ் செய்யவேண்டும். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவு டன் ஒரு எலுமிச்சை பிழிந்து வேர்க்கால் தொடங்கி அடி முடி வரை தடவி அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்து வந்தாலே விளம்பரக் கூந்தலாய் மின்னும்.
தலைக்குக் குளித்த அன்று புஸ்புஸ்ஸென்று அழகாக இருக்கும். மறுநாளே ஒரு லிட்டர் எண்ணெயைத் தலையில் கவிழ்த்தியதுபோல பிசுக்பிசுக்காகிவிடும். இதுதான் எண்ணெய்ப்பசை கூந்தல்.
சீயக்காய் அரை கிலோ, புங்கங்காய் 100 கிராம், பச்சைப் பயறு 100 கிராம், வெந்தயம் கைப்பிடி அளவு, பச்சரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாக உபயோகித்து வந்தால் கூந்தல் அலை மாதிரி அசைந்தாடும்.
ஜீவனே இல்லாமல் வறண்டுபோய் வெடிப்பு வெடிப் பாக இருப்பதுதான் வறண்ட கூந்தல். இயல்பாகவே தலைப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பு குறைவாக இருக்கும் உங்களுக்கு. பராமரிக் காமலும் விட்டால் அவ்வளவுதான். நீங்கள் வாரம் ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். முந்தின நாள் இரவே வேர்க்கால் முதல் அடிமுடி வரை எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங் கள். அடிமுடியில் அதிக எண்ணெய் தடவுங்கள். மறுநாள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள் (முட்டையின் மஞ்சள் கரு உங்கள் கூந்தலுக்கு அற்புதமான மருந்து. கூந்தலை அலசிய பிறகும் முட்டை வாசனை வருவது பற்றிக் கவலை இல்லையெனில், மஞ்சள் கரு உபயோகிக்கலாம்.).
தலைப் பகுதியில் எண்ணெய்ப் பசையுடனும் கீழே செல்லச்செல்ல வறண்டும் இருப்பது இரண்டும் கலந்த கூந்தல். கூந்தலின் அடிப்பகுதிக்கு மட்டும் நிறைய எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையை நன்றாக அலசிய பிறகு, கடைசி மக் தண்ணீரில் ஒரு எலுமிச்சை அல்லது கொஞ்சம் வினிகர் சேர்த்து அந்தத் தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி விட்டு வெளியே வாருங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இதை மறக்காமல் செய்வதுதான் உங்களுக்கான பராமரிப்பு.
மசாஜ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா?
பஞ்சில் எண்ணெயை நனைத்து, கூந்தலை வகிர்ந்து தடவுங்கள். இதை தலை முழுக்கச் செய்யுங்கள்
விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டு தலை முழுக்கவும் வட்ட வட்டமாக கடிகாரச் சுற்றிலும், எதிர்த்திசையிலும் லேசாக அழுத்தம் கொடுத்தபடி தடவுங்கள்
கோதுங்கள்.
இரு கைகளாலும், தலை முழுக்க மென்மையாகக் குத்துங்கள்.
தலை முழுக்க எண்ணெய் தேய்த்த பிறகு, முறுக்கிக் கொண்டையாகப் போடுங்கள். மசாஜ் ஓவர்.
அட.. ரொம்ப சுலபமான வேலையாச்சே என்கிறீர்களா?
————————————————————–
நன்றி:-சந்தியா செல்வி
நன்றி:- அ.வி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!
———————————————————————————————-
குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.
———————————————————————————————————
—————————————————————————————-
—————————————————————————————————
—————————————————————————————————–
—————————————————————————————-
குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.
உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு
நன்றி:- சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன்
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை
அண்மைய பின்னூட்டங்கள்