தொகுப்பு

Posts Tagged ‘கலாம்’

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!​ – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஆன்மாவின் உணவாக
ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
அழைத்திடுமுன் வழியாமே!

நூற்களும்தான் நண்பனாம்
நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
நண்பனாக வழங்கினாயே!

இம்மாதம் மறையோதி
இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
இனிப்பாகத் தந்தாயே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
தினந்தொழுத தராவிஹூமே!


நன்றி:–“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)

அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844

வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)

கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

பிரிவுகள்:நோன்பு குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


பல்லுக்குள் அகப்பட்ட நாக்கை

பக்குவமாய் சுழல்வதுபோல் வாழ்க்கை

நல்லவைக்கும் தீயவைக்கும் போட்டி

நளினமாய் புரிதலில் வெற்றி

வில்லுக்குள் நாணைப் பூட்டி

வீரிட்டு பாயும் அம்பாய்

”மல்லுக்கு” நிற்கும் ஆசையினை

மதியால் வென்றிடுத் தெம்பாய்

கல்லுக்குள் வாழும் தேரைக்கும்

கர்த்தனே உணவளித் தாலும்

நில்லா உலகினில் வாழ்ந்திட

நீதான் கடினமாய் உழைத்திடு

சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தம்

சேரா வாழ்வினில் வருத்தம்

வல்லவனாய் வளம்பெற்று வாழ்ந்தாலும்

வறியவரை வதைத்திட எண்ணாதே

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் ஆக்கங்களில் சில…..

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

தமிழாய் தமிழுக்காய்

விதைகள்

ஊனம்

தாய்

காத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்

வேடிக்கை மனிதர்கள்

அப்பா

கடலும்; படகும்

ரமளானே வருகவே…!!!

வண்டுதிர்க்கும் பூக்கள்

வாழ்க்கை

இணயதளம் ஓர் இனியதளம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


இணயதளம் ஓர் இனியதளம்
இணயற்ற பலன்களை ஈன்று தரும் தனிநிலம்
சொடுக்கினால் உலகம் கண்முன்னால்;
சொல்ல முடியும் உறுதியாக என்னால்..!

தடுக்கப்பட்டவைகள் சில உண்டு
தவிர்த்து விட்டால் மிக்க நன்று

ஆழ்கடலினுள்ளேச் சென்று எடுத்து வரும் முத்துபோல்
ஆழ்ந்து இவ்வலைக்குள் தோய்ந்து கற்கும் வித்தைகள்..ஆ..ஹா..

எண்ணிலடங்கா; ஏட்டிலடங்கா..! இந்த வலைப்
பின்னலுக்குள்ளே உலகத்தைக் காட்டிடும்
ஜன்னலை அமைத்த ஜாம்பவான்களுக்கு நன்றி

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இணயதளம் ஓர் இனியதளம்

ஏமாற்று உலகம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.


சமைத்து, துவைத்து சகல வேலைகளும் செய்து முடித்து
சற்றே ஓய்வெடுக்க நாடும் மனைவி;
உழைத்து, சலித்து களைத்து விட்டதால்
ஊர்ச் சுற்றி மனைவியோடு உல்லாசம் காண நாடும் கணவன்…!

எத்தனை எதிர்பார்ப்பு? ஏனிந்த எதிர் மாற்றம்
என்றுமே மாறா ஏமாற்றம்.…………………………….

இத்தரை மீதினில் இப்படித்தான் ஒட்டாதோ?
இதற்கு ஒரு தீர்வு கிட்டாதோ?

மறுமை வாழ்வில் மட்டுமே நினைத்தது கிட்டுமே
மாய இவ்வுலகில் நிறைவே கிடையாது

பொறுமை உனக்கு வேண்டும் மனிதா!
படைத்தவன் விதியை மாற்றுவது எளிதா??????????

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


இக்கரைக்கு அக்கரைப் பச்சை;
என்றும் அலைபாயுமே மனோயிச்சை

சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோஷத்துக்கு எதிரி கவலை

சுதந்திரத் தாய் நாட்டிலே
சுகம் உண்டு; செல்வம் இல்லை

இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?

எல்லார்க்கும் எல்லாமே கிடைத்து விட்டால்
இறைவனே இல்லை என்று

சொல்லி விடுவான் மனிதன்; அதனால்
சொற்ப வாழ்வே இப்படித்தான்

இல்லாரும் உள்ளோரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய நியதி

நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
இன்று மட்டுமே உண்மை;
இதனை அடைந்தால் நன்மை

உறவுகள் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்


ஆதாம் ஏவாள்
ஆரம்பித்த உறவுகள் 
சாத்தான் புகுந்து
சாய்த்தான்; அதனால் – பிரிவுகள்

அண்டை வீட்டோடும்
அண்டை நாட்டோடும்
சண்டை போட்டே
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்….

உறவு ஓர் அதிசய மரம்:
உள்ளன்பே அதன் உரம்;
உதவும் கரம் தான் உண்டு
அதனைத் தாங்கும் தண்டு;

அன்பு ஊற்று தான்
இன்பக் காற்று தரும் இலைகள்;
உறவுக்கு மறுபெயர் “கிளைகள்”
உட்காரட்டும் பாசப்பறவைகள்….

உணர்வு தான் ஆணி வேர்;
உணவு அதற்கு உளமார மன்னிக்கும் நற்குணமே
சட்டை பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டும் உறவுகள்;

சற்றே நிலை மாறினால்
சட்டை செய்யாது திசை மாறும் பறவைகள்
விலா எலும்பின்
விலாசம் காண

விவாக உறவுகள்
உயிர் காக்கும்
உண்மைத் தோழமை
உயிருள்ள வரை மறவா உறவு

தொப்புள் கொடியாய்த்
தொடரும் இரத்த உறவு
ஆயிரம் உறவுகளிருந்தாலும்
தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு

கற்ற கல்வி
உற்ற நண்பனாய் உதவும் உறவு
நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு

இவ்வுறவைப் பேண
இறுதிவரைப் போராடு
எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு நின்றுவிடும்;

எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லா நேரமும் அடியான் கொண்ட “உறவு”
எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்!!!!
எல்லா உறவுகளயும் பேணுவோம்

எல்லார்க்கும்  இறையோனுக்கும்
பகைவனான சாத்தானைப்
பகைத்திடுவோம்; அதனால்
கலகமே இல்லாத
உலகமேக் காணுவோம்……………………!!!!!!!!!!!!!

பாலைவன வாழ்க்கை – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.

ஏப்ரல் 22, 2010 1 மறுமொழி

பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்…

இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்…

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
“பொருளிலார்க்கு இவ்வுலகில்லை”

பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

“இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்; அவன்
சொல் செல்லாமல் போய்விடும்” என்றாள்
ஔவ்வையார் அன்றே……

மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே…
பாதாளம் வரை பாயும் பணமே

பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே

நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம்.

செல்பேசி:-00971-50-8351499

இவர்களின் படைப்புகளில் சில

ஏமாற்று உலகம்

இக்கரைக்கு அக்கரைப் பச்சை

உறவுகள்

பாலையான வாழ்க்கை

முரண்பாடுகளை முறியடிப்போம்

முரண்பாடுகளை முறியடிப்போம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்.


உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;

விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;

நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;

பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;

நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;

பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;

நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;

அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;

மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;

உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;

அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;

வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;

ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;

விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;

வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;

காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;

அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?

உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;

அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;

இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;

“உலக அமைதி”க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;

வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே– என்பதே யதார்த்தம்;

இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக “விவாகரத்து” பெருகுவதே அவமானம்;

அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;

காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;

தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை…………………..!!!!!